நூல்
நூல்
மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்
‘மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்’ என்ற ஷெய்க் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ்-ஸஅதி அவர்களின் நூல், உண்மையான மகிழ்ச்சியின் காரணங்களை ஆழமான ஈமான் பார்வையில் விளக்கி, ஈமான் மற்றும் நற்செயல்கள், அல்லாஹ்வை நினைவு கூருதல், திருப்தி, அல்லாஹ்வின் அருள்களைப் பற்றி சிந்தித்தல், நன்மை புரிதல், அல்லாஹ்வில் நம்பிக்கையிட்டு ஒப்படைத்தல், பொறுமை, விடயங்களை உரிய முறையில் மதிப்பிடல் ஆகியவற்றின் மூலம் வாசகரை நிம்மதிக்கு வழிகாட்டுகிறது. அழகிய நடையில் இயற்றப்பட்ட இது, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், நிம்மதியான, சமநிலையான, மகிழ்ச்சியான வாழ்வுக்கான ஒரு வழிக்கோளை உங்கள் முன்னிலைப்படுத்துகிறது.
மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்
இந்நூல் ஒரு முஸ்லிம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைக் கொள்கைகளான, அல்லாஹ்வை அறிந்துகொள்ளுதல், இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துகொள்ளுதல், மற்றும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அறிந்துகொள்ளுதல் ஆகியவற்றை விளக்குகிறது. மேலும், குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் ஈமானையும் நற்செயல்களையும் கட்டியெழுப்புவதில் இந்த அடிப்படைகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
وجوب العمل بالسنة وكفر من أنكرها
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை ஏற்றுநடப்பதன் அவசியம் மற்றும் அதை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகக் கொள்ளப்படல் தொகுப்பு: அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன். முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. நல்ல முடிவு பயபக்தியுடையோருக்குரியதாகும். சாந்தியும், சமாதானமும் அவனது அடியாரும், அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட தூதருமாகிய, எங்கள் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், தமது இரட்சகனின் வேதத்தையும், தமது நபி வழிமுறையையும் பின்வந்த…
அனைத்து முஸ்லிம் சமூகத்திற்குமான முக்கிய பாடங்கள்
அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் ‘அனைத்து முஸ்லிம் சமூகத்திற்குமான முக்கிய பாடங்கள்’ என்ற இந்நூல், பெரும் பயனளிக்கக் கூடிய ஒரு சுருக்கமான தொகுப்பாகும். இதனை இமாம் அவர்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கல்வி வழிகாட்டியாகத் தொகுத்துள்ளார்கள். இதில் தவ்ஹீத், ஈமான், இஸ்லாம் போன்ற மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் கடமைகள், சுத்தம் மற்றும் தொழுகையின் சட்டங்கள், இஸ்லாமிய ஒழுக்கங்கள், அத்துடன் இணைவைப்பு மற்றும் பாவங்களின் அபாயங்கள் பற்றிய தெளிவுரையும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சரியான அகீதாவையும் வணக்க வழிபாடுகளையும் கொண்டு சேர்க்கும் விதமாக,…
இஸ்லாமியக் கொள்கை பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
இந்நூல் ஈமானின் அடிப்படைகள் (ருக்குன்கள்) குறித்து விளக்குகிறது; அவை: அல்லாஹ்வை, அவனது மலக்குகளை, அவனால் இறக்கியருளப்பட்ட வேதங்களை, அவன் அனுப்பிய தூதர்களை, மறுமை நாளை, மேலும் இறை விதியை (நன்மையும் தீமையும் இறை விதியின் அடிப்படையிலேயே நிகழும் என்பதை) ஈமான் கொள்வதைக் கொண்டவையாகும். முஸ்லிம் ஒருவர் நம்பிக்கையாகக் கொள்ளவும் அதன் படி அமல்படுத்தவும் வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் முன்வைக்கிறது; மேலும் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் வழியாக அல்லாஹ்வுடன் உள்ள உறவை வலுப்படுத்திக் கொள்ளும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
பெண்களின் சுத்தம் (உதிரப்போக்கு) தொடர்பான சிறிய கையேடு
மார்க்க அறிஞர் ஷெய்க். முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்களின் 'பெண்கள் சுத்தம் தொடர்பான ஒரு கையேடு' எனும் இந்நூல், பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான உதிரப்போக்குகளான மாதவிடாய், மாதவிடாய்க்குப் பிறகு ஏற்படும் வெளியேற்றம், பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் வெளியேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஒரு கையேடாகும். இது, அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவை அடிப்படையாகக் கொண்டு, இது தொடர்பான அறிஞர்களின் கூற்றுக்களின் நுட்பமான புரிதலுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் உதிரப்போக்குகள் தொடர்பான சட்டதிட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு நிலைகளுக்குமிடையிலான நுட்பமான வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு பெண்…
இஸ்லாத்தின் உண்மை இறையியல் கோட்பாடும் அதற்கு எதிரானவைகளும்
தொகுப்பு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன் முகவுரை சர்வ புகழும் அழ்ழாஹ்வுக்கே உரித்தாகட்டும் ஸலாத்தும் ஸலாமும் இறுதித்தூதரான நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாவதாக
الإسلام - نبذة موجزة عن الإسلام (مشتملة على الأدلة)
இஸ்லாம் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம். இஸ்லாத்தின் அடிப்படைகள், போதனைகள், சிறப்பம்சங்களை அதன் பிரதான மூலாதாரங்களாகிய அல்குர்ஆன் ஸுன்னாவிலிருந்து தெளிவுபடுத்தக்கூடிய முக்கியமான ஒரு நூலாக இது உள்ளது. இந்நூல் பல மொழிகளைப் பேசும் பலதரப்பட்ட கால, சூழல்களில் வாழும் முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் அனைவரையும் இலக்காகக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். (இது அல்குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதியாகும்). 1. இஸ்லாம் தான் அனைத்து மக்களுக்குமான அல்லாஹ்வின் தூதாகும், இது அவனது தூதுத்துவங்களின் முத்திரையாக, நிரந்தரமான இறைத்தூதாக உள்ளது : இஸ்லாம் தான் அனைத்து மக்களுக்குமான…
المختصر المفيد للمسلم الجديد
புதிய முஸ்லிமுக்கான பயனுள்ள வழிகாட்டி ஆக்கம் முஹம்மத் அல் ஷஹ்ரி 2020-1441 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்). முன்னுரை
صفة الوضوء والصلاة (مرئي)
நான் வுழூச் செய்வது எவ்வாறு? இல ஆடியோ(ஓசை) 1 அதான் ஓசை 2
يومي الأول في الإسلام
இஸ்லாத்தில் எனது முதல் நாள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். முன்னுரை அகில உலகத்தாருக்கும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அருளாக அனுப்பிய அல்லாவுக்கே புகழனைத்தும். அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படத்தகுதியான இறைவன் வேறு எவரும் இல்லை என்றும் அவனுக்கு இணைகிடையாது என்றும் சாட்சி கூறுகிறேன். அவன் முன்சென்றோரினதும் பின்வருவோரினதும் உண்மையான இறைவன். மேலும் தீர்க்கதரிசிகளினதும் இறைத்தூதர்களினதும் இறுதியானவரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்.அவர்களின் மீது இறுதி…
الأذكار التي تقال صباحًا ومساءً
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்). காலை, மாலையில் ஓத வேண்டிய வேண்டிய திக்ருகள். "(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி…
مشروع منهاج زادك
இஸ்லாமிய அழைப்பு,வழிகாட்டல்,மற்றும் வெளிநாட்டவர் விழிப்புணர்வு மையம்-அர்ரவ்ழா இறைவா ! எனது மார்க்கத்தில் விளக்கத்தைத் தருவீராக! முதலாம் தரம் வெளியீட்டுரை-பதிப்புரை மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவியையும் ,தெளிவாகப் பேசும் திறனை வழங்குவதன் மூலம் அவனை கண்ணியப்படுத்தி அல்குர்ஆன் ஹதீஸ் மற்றும் தொழுகை மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக . ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள் மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
من خلقني؟ ولماذا؟
என்னைப் படைத்தவன் யார்? எதற்காக என்னைப் படைத்தான் ? எல்லாம் படைப்பாளியின் இருப்பைக் குறிக்கிறது வானங்களையும் பூமியையும், அவற்றில் எம்மால் அறிந்துகொள்ளமுடியாத பெரிய உயிரினங்களையும் படைத்தவன் யார்? வானத்திலும் பூமியிலும் செயற்படும் மிகவும் நுணுக்கமானதும், துல்லியமானதுமான ஒழுங்கை அமைத்தவன் யார்? மனிதனைப் படைத்து அவனுக்கு செவிப்புலனையும், பார்வையையும், பகுத்தறிவையும் வழங்கி, அறிவு ஞானங்களை பெற்றுக்கொள்ளவும், உண்மைகளை புரிந்து கொள்ளவும் தகுதிமிக்கவனாக ஆக்கியவன் யார்? உங்கள் உடல் அமைப்புகளிலும், உயிரினங்களின் உடலிலும் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பை எப்படி விளக்குவீர்கள்?அதை உருவாக்கியவன் யார்? மேலும்…
الإسلام دين رسل الله
இஸ்லாம் இறைதூதர்களின் மார்க்கம் இஸ்லாம் என்பது இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனுமாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிவதும், நேசம் மற்றும் பயபக்தியினால் அவனுக்கு முழுமையாக கட்டுப்படுவதுமாகும். இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்வை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகும்.அதாவது அவன் மாத்திரமே சிருஷ்டிகர்த்தா என்றும் அவன் தவிரவுள்ளவை யாவும் சிருஷ்டிகள் என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபட மிகத்தகுதியானவன். அவனுக்கு நிகராக எந்த இணையும் கிடையாது என்பதை உண்மைப்படுத்தி அவன் மாத்திரமே உண்மையான இறைவன் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அவனுக்கு மிக அழகிய பெயர்களும் உயர் பண்புகளும் உண்டு.அவன் குறைகள்…
الإسلام دين رب العالمين
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஆரம்பிக்கிறேன்) இஸ்லாம் அகிலங்களின் இரட்சகனின் மார்க்கம் உமது இரட்சகன் (கடவுள்) யார்? இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரும் ஒரு வினாவும், மனித இனம் விடைதேடி அறிந்து கொள்ள வேண்டியதுமான மிகமுக்கியமான வினாவும் இதுவாகும்! எமது இரட்சகன் வானங்களையும், பூமியையும் படைத்து, வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து,அதன் மூலம், மரங்களையும் முளைக்கச் செய்து கனிகளை வெளிப்படுத்தி எமக்கும், நாம் உணவாகக் கொள்ளும் விலங்குகளுக்கும் உணவாகக் தந்தவன் ஆவான். அவனே எம்மையும், எமது மூதாதையர்களையும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவனாவான். அதில் இரவையும்…
مقدمة وغلاف المنتقى من موسوعة الأحاديث النبوية
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்) முன்னுரை புகழனைத்தும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டுமாக.ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் மறுiமை நாள் வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றிய அனைவர் மீதும் உண்ணடாவதாக. என்று கூறியதன் பின் : -வாசித்தல்;, சிந்தித்தல், ஆய்வுசெய்தல், கற்றல் மற்றும் செயல்படுதல் போன்ற விடயங்களில் அல்லாஹ்வின் வேதத்தின் பின் - ஒரு முஸ்லீம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய பகுதி அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவாகும். இது குறித்து நபி…
معلومات وأوصاف التطبيقات في المتاجر
கண்ணியமிக்க குர்ஆன் கலைக்களஞ்சியம் QuranEnc. பல மொழிகளில் புனித குர்ஆனின் பொருள்களின் நம்பகமான மொழிபெயர்ப்புகள். செயலி பற்றி அறிமுகம்: சர்வதேச மொழிகளில் புனித குர்ஆனின் பொருள்களையும், விளக்கங்களையும் இலவசமாக, நம்பகமாக, மேம்பட்டமுறையில் மொழிபெயர்த்து வழங்கும் இலத்திரனியல் மூலாதாரம். வெளிநாட்டவருக்கான அல்-ரப்வா அழைப்பு, வழிகாட்டுதல், மற்றும் சமூக விழிப்புணர்வு சங்கம், பல் மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்கு சேவை செய்யும் சங்கம் ஆகியவற்றின் மேலாண்மையில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது. செயலியின் சிறப்பம்சங்கள்: உயர் நம்பிக்கை: அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட…
நபியவர்களின் தொழுகை முறை
மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள், 'நபியவர்களின் தொழுகை முறை' என்ற இந்நூலில் நபி ﷺ அவர்களின் தொழுகை முறையை சுருக்கமாகத் தொகுத்துள்ளார்கள். ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு, எளிமையான நடையிலும் துல்லியமான வழிமுறையிலும் இது அமைந்துள்ளது. ஒரு முஸ்லிம் தனது தொழுகையில் வழிகாட்டியாகப் பயனடைவதற்காக, உளூவிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை தொழுகையின் கடமைகள், சுன்னத்துகள் மற்றும் அதன் தன்மைகளை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. ஆதாரத்தையும் விளக்கத்தையும் ஒருங்கே இணைத்து, மிகப்பெரும் வணக்கமான தொழுகையில் நபி ﷺ அவர்களை முழுமையாகப் பின்பற்றுவதற்கு இது அழைப்பு விடுக்கிறது.
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்
இந்த நூல் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய சட்டங்களை அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் விளக்குகிறது; ஹஜ் மற்றும் உம்ராவின் கடமைகள், இஹ்ராம் நிலையில் தடை செய்யப்பட்ட செயல்கள், மஸ்ஜிதுந்-நபவீயை ஜியாரத் செய்வதற்கான ஒழுக்க நெறிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த வழிபாட்டு சடங்குகளில் உள்ள பித்அத்திலிருந்து எச்சரிக்கிறது.
பிரயாண ஒழுங்குகளும் அதன் சட்டங்களும்
அகில உலகின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அவனது இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள், இறுதி நாள் வரை அவரைப் பின்பற்றும் நல்லடியார்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் உண்டாவதாக. அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்தன் பின்னால் இது பயணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும் பற்றிய ஒரு சுருக்கமான கையேடாகும். இதில் பயணிகளுக்கு தேவையான பல முக்கிய விடயங்களை விளக்க முயன்றுள்ளோம். இதை அவனின் திருமுகம் நாடி செய்த தூய பணியாகவும், முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் படியாகவும் ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். முதலாவது : பயணத்தின் ஒழுங்குகள்
உம்ரா செய்யும் முறையும், அதன் சட்டங்களும்
இப் பிரபஞ்சத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். அவனது தூதர் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் என்றென்றும் உண்டாகட்டும். அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்தன் பின்னால் இது உம்ரா செய்யும் முறை, அதன் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் பற்றி சுருக்கமாக குறிப்பிடும் ஒரு கையேடாகும். இதில் உம்ரா செய்பவருக்குத் தேவையான பெரும்பாலான விடயங்களை விளக்க முயன்றுள்ளோம். அல்லாஹ்வின் திருமுகம் நாடிய தூய பணியாகவும், முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாகவும் இதை அமைத்துத் தரவேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
சவூதி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மொத்த மார்க்கத் தீர்ப்புக்களிலிருந்தும் கேள்விகளும், விடைகளும் தேர்வு செய்யப்பட்டு, பொருத்தமான நிலைமைக்கு ஏற்ப சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக: பொதுத் தீர்ப்புகள் கேள்வி : வங்கியிலிருந்து கடன் வாங்கிய பணத்திலிருந்து எனது பெற்றோர் உம்ரா செய்யலாமா? பதில் : ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புபவர் அல்லது மற்றொருவருக்காக செய்ய விரும்புபவர், தமது ஹஜ் மற்றும் உம்ராவுக்காக ஹலாலான சம்பாத்தியத்தை தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் அல்லாஹ் மிக உயர்ந்தவன், தூய்மையானதைத் தவிர ஏற்றுக்கொள்வதில்லை.
பொதுவான துஆக்கள்[1]
இவை கருத்தாளமிக்க துஆக்கள் ஆகும், அவை குர்ஆன் கரீமில் குறிப்பிடப்பட்டுள்ளவையாகவோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் வந்தவையாகவோ இருக்கின்றன. இவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஓதுவதற்கு மார்க்க வழிகாட்டலாகும். அதேபோல், தவாஃப், ஸஈ, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களிலும் ஓதலாம், ஆனால் அவற்றுக்கே மட்டும் குறிப்பிட்டவையாக அல்ல. முதலாவதாக : அல் குர்ஆனில் உள்ள துஆக்கள். رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ* எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன். وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ…
நான் ஒரு முஸ்லிம்
இஸ்லாத்தின் கருத்து, யார் முஸ்லிம், எவ்வாறு உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும் என்பனவற்றை இந்த கட்டுரை விளக்குகிறது. மேலும், இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள், சில உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் நற்பண்புகள், பெண்களின் நிலை, உறவினர்கள், அயலவர்கள் மற்றும் சமுதாயத்தின் உரிமைகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. இஸ்லாம் ஒவ்வொரு நற்குணத்தையும் ஊக்குவிக்கிறது, மேலும் ஒவ்வொரு தீய குணத்தையும் தடுக்கிறது என்பதை விளக்குகிறது.
அல்குர்ஆன் ஓர் அறிமுகம்
அல்குர்ஆன் ஓர் அறிமுகம் எனும் நூல், ‘இது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வுடைய வார்த்தை; தன்னிகரற்ற ஓர் அற்புதம்; வணக்கங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்தும் வாழ்க்கை யாப்பு; இது நன்மைக்கு வழிகாட்டி தீமையிலிருந்து விலக்குகிறது.’ என அல்குர்ஆனை வரைவிலக்கணப்படுத்துகின்றது. இந்நூல், அல்லாஹ் திரிபுபடுத்தலிலிருந்து இதனைப் பாதுகாத்துள்ளமையையும், அதன் கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்காக அரபி மொழியைக் கற்பதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்ற அதேவேளை. இம்மையிலும் மறுமையிலும் சுபிட்சத்தை அடைவதற்கான ஒரு வழிகாட்டியாக இது வழங்கும் பங்களிப்பையும்…
இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
“இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" எனும் இந்நூல், நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரை, வளர்ப்பு முதல் அவர்களின் பாக்கியம் நிறைந்த திருமணம், வஹியின் ஆரம்பம், இறுதித் தூதுத்துவத்தின் துவக்கம் வரையிலான வாழ்க்கையை ஆய்வு செய்கிறது. மேலும், அவர்களின் நபித்துவத்திற்கான அத்தாட்சிகளையும், வாய்மைக்கான சான்றுகளையும் தெளிவுபடுத்துவதோடு, அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவையும், மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அதன் பங்களிப்பையும் விளக்குகிறது. அத்துடன், அவர்களின் எதிரிகளின் நிலைப்பாடுகளையும், அவர்களே வழங்கிய சாட்சியங்களையும் தெளிவுபடுத்துவதுடன், அவர்களை…
உம்ரா செய்முறை மற்றும் அதன் சட்டங்கள்.
‘உம்ரா செய்முறை மற்றும் அதன் சட்டங்கள்’ என்ற இந்நூல், உம்ரா செய்யும் முறை, அதன் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை எளிமையான நடையில் விளக்குகிறது. இந்நூல், வழிபாடு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளைக் குறிப்பிடுவதில் இருந்து தொடங்கி, உம்ராவின் கிரியைகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துகிறது. பின்னர், இஹ்ராம், தவாஃப், ஸஃயி மற்றும் தலைமுடியை மழித்தல் அல்லது குறைத்தல் அதல் சட்டங்களையும் அதன் முறைகளையும் படிப்படியாக விளக்குகிறது. இத்துடன், இஹ்ராம் நிலையில் தடை செய்யப்பட்ட செயல்களையும், செய்ய வேண்டிய கிரியைகளின் சுருக்கத்தையும் வரிசைப்படுத்திக் குறிப்பிடுகிறது. இதன் மூலம், நபி…
அதானுடைய (பாங்கு) சொற்களின் விளக்கம் :
அதான் சொற்கள் விளக்க நூல், அதானின் வார்த்தைகளை அலசி, அவற்றை ஈமானிய விளக்கத்தோடு எடுத்துரைக்கிறது; நம்பிக்கை மற்றும் கல்வி ஒழுக்கவியல் சார் அம்சங்களையும் தெளிவுபடுத்துகிறது. அதான் என்பது வெறும் தொழுகைக்கான அழைப்பு மட்டும் அல்ல; மாறாக அது நாள்தோறும் ஏகத்துவ நம்பிக்கை (தவ்ஹீத்) மற்றும் வெற்றிக்கான அழைப்பாகும். அதான் வார்த்தைகளை ஒவ்வொன்றாக முன்வைத்து, அவற்றின் கருத்துக்களை விரிவாக விளக்கி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துதல், தவ்ஹீத், தூதுச்செய்தி முதலியவற்றிலிருந்து தொடங்கி, தொழுகைக்கும் வெற்றிக்குமான அழைப்பு மற்றும் முடிவில் தக்பீர் மற்றும் தவ்ஹீத் வரை விளக்குகிறது . உள்ளங்களை உருக்கும் பாணியில்,…
உம்ரா செய்யும் முறை
இச்சிறு நூல் உம்ரா செய்யும் முறையை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்குகிறது. உம்ரா செய்யும் ஒருவர் மிகவும் இலகுவாகவும், பயபக்தியுடனும் உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். அத்தோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள உம்ராவில் ஓத வேண்டிய துஆக்களும் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹஜ்ஜின் கிரியைகள்
இந்த சிறு கையேடு, எட்டாம் நாள் இஹ்ராம் கட்டுவதில் தொடங்கி, அரஃபா நாளின் கிரியைகள், பெருநாள் அன்று செய்யும் கிரியைகள், ஜம்ராக்களில் கல்லெறிதல், தவாஃபுல் இஃபாழா மற்றும் தவாஃபுல் வதாஃ வரையிலான ஹஜ்ஜின் கிரியைகளைச் சுருக்கமாக விளக்குகிறது.
அதானுடைய (பாங்கு) சொற்களின் சுருக்கமான விளக்கம்
'அதான் சொற்கள் விளக்க நூலின் சுருக்கம்' என்பது, 'அதான் சொற்கள் விளக்க நூல்' என்பதன் சுருக்கமாகும். இந்நூல், அதானின் வார்த்தைகளை ஈமானிய விளக்கத்தோடு எடுத்துரைத்து, அதன் நம்பிக்கை மற்றும் கல்வி ஒழுக்கவியல் சார் அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது. மேலும், அதான் வார்த்தைகளை ஒவ்வொன்றாக முன்வைத்து, அல்லாஹ்வை கண்ணியப்படுத்தல், தவ்ஹீத், தூதுச்செய்தி முதலியவற்றிலிருந்து தொடங்கி, தொழுகைக்கும் வெற்றிக்குமான அழைப்பு மற்றும் முடிவில் தக்பீர் மற்றும் தவ்ஹீத் வரை அவற்றின் கருத்துக்களை உள்ளங்களை உருக்கும் பாணியில் விரிவாக விளக்குகிறது.