أدعية جامعة
பொதுவான துஆக்கள்[1] இவை கருத்தாளமிக்க துஆக்கள் ஆகும், அவை குர்ஆன் கரீமில் குறிப்பிடப்பட்டுள்ளவையாகவோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் வந்தவையாகவோ இருக்கின்றன. இவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஓதுவதற்கு மார்க்க வழிகாட்டலாகும். அதேபோல், தவாஃப், ஸஈ, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களிலும் ஓதலாம், ஆனால் அவற்றுக்கே மட்டும் குறிப்பிட்டவையாக அல்ல.
பொதுவான துஆக்கள்[1] இவை கருத்தாளமிக்க துஆக்கள் ஆகும், அவை குர்ஆன் கரீமில் குறிப்பிடப்பட்டுள்ளவையாகவோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் வந்தவையாகவோ இருக்கின்றன. இவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஓதுவதற்கு மார்க்க வழிகாட்டலாகும். அதேபோல், தவாஃப், ஸஈ, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களிலும் ஓதலாம், ஆனால் அவற்றுக்கே மட்டும் குறிப்பிட்டவையாக அல்ல.
முதலாவதாக : அல் குர்ஆனில் உள்ள துஆக்கள்.
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ* எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன். وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ. எங்களை மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துக்கொள்.
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا. எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே!
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا. எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே!
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ. எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ. எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! இன்னும், உன்னிடமிருந்து (உனது) கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் மகா கொடைவள்ளல் ஆவாய்!
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!’’
رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ. என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்.
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ. எங்கள் இறைவா! நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டோம். இன்னும், இந்தத் தூதரை பின்பற்றினோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும் சாட்சியாளர்களாக) பதிவு செய்!’’ (என்று அவர்கள் பிரார்த்தித்தனர்).
ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ. எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ எங்கள் இறைவா! நிச்சயமாக நீ எவரை நரக நெருப்பில் நுழைக்கிறாயோ அவரை திட்டமாக இழிவுபடுத்தி விட்டாய். உதவியாளர்கள் யாரும் அநியாயக்காரர்களுக்கு இல்லை.
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ. எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார்* என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)”
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ. எங்கள் இறைவா! இன்னும், உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! இன்னும், மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நிச்சயமாக நீ வாக்குறுதியை மீற மாட்டாய்.
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ. எங்கள் இறைவா! எங்கள் ஆன்மாக்களுக்கு நாங்கள் தீங்கிழைத்தோம். நீ எங்களை மன்னிக்கவில்லையெனில்; நீ எங்களுக்கு கருணை புரியவில்லையெனில் நிச்சயமாக நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்.
رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ. எங்கள் இறைவா! அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே!
حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلَاّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ. எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி.
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ. எங்கள் இறைவா! அநியாயம் செய்கின்ற சமுதாயத்திற்கு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! (எங்கள் மீது அவர்களை சாட்டி விடாதே!) எங்களை நின் கருணையால் நம்பிக்கையற்ற சமுதாயத்திலிருந்து காப்பாற்றி விடு.
رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ. என் இறைவா! இவ்வூரை பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! மேலும், என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டும் தூரமாக்கி வை!
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ. என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!”
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ. “எங்கள் இறைவா! விசாரணை நடக்கின்ற நாளில் எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் மன்னிப்பளி!”
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا. எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! இன்னும், எங்கள் காரியத்தில் எங்களுக்கு நல்லறிவை(யும் நல் வழியையும்) ஏற்படுத்திக் கொடு!
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي، وَيَسِّرْ لِي أَمْرِي. என் இறைவா! எனக்கு என் நெஞ்சை விரிவாக்கு, என் காரியத்தை எளிதாக்கு.
رَّبِّ زِدْنِي عِلْمًا. என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!
لا إِلَهَ إِلا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ. நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.
رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ. என் இறைவா! என்னை (சந்ததி இன்றி) தனி ஒருத்தனாக விட்டுவிடாதே! நீதான் வாரிசுகளில் மிகச் சிறந்தவன்.
رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ. என் இறைவா! ஷைத்தான்கள் (என்னை) நெறிப்பதை விட்டும் (அவர்களின் குழப்பங்களை விட்டும்) உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இறைவா! அவர்கள் என்னிடம் வருவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ. எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு! இன்னும், எங்கள் மீது கருணை புரி! நீயோ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்.
رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ. என் இறைவா! (என்னை) மன்னிப்பாயாக, இன்னும், (என் மீது) கருணை புரிவாயாக! நீதான் கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்.
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا. إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا. எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது. நிச்சயமாக அது தங்குவதற்கும் வாழ்வதற்கும் மிக மோசமான இடமாகும்.
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا. எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களின் குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக!
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ. என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ எந்த நல்லதைக் கொண்டு திருப்தி அடைவாயோ அதை நான் செய்வதற்கும் எனக்கு நீ உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்து! இன்னும், உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي. என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு தீங்கு இழைத்துக் கொண்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ. என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னை காப்பாற்று!
عَسَى رَبِّي أَن يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ. என் இறைவன் நேரான பாதையில் என்னை நிச்சயமாக வழி நடத்துவான்.
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ. என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் நிச்சயமாக நான் தேவை உள்ளவன்.
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ. என் இறைவா! எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ. என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் எனக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்கிறேன்.
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ. எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீட்சி இருக்கிறது.
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإِيمَانِ وَلا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلاً لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ. எங்கள் இறைவா! எங்களையும் ஈமானில் எங்களை முந்திய எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.
رَبَّنَا لا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ. எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! இன்னும், எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கு! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்.
இரண்டாவதாக : ஹதீஸில் உள்ள துஆக்கள்:
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ الْقَبْر، ِ وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ. யா அல்லாஹ்! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ. யா அல்லாஹ்! மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقّيتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ. அல்லாஹும்ம அக்ஸில் கல்பீ பிமாஇத்தல்ஜி வல்பரத், வ நக்கி கல்பீ மினல் கதாயா கமா நக்கைத ஸவ்புல் அப்யழு மினத்தனஸ், வ பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல்மஃரிபி.
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ. யா அல்லாஹ்! சோம்பல், வயோதிபம், பாவம், கடன் சுமை ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ إِنِّي أَعُوذ بِك مِنَ الْعَجْز وَالْكَسَل، وَالْجُبْن وَالْهَرَم وَالْبُخْل، وَأَعُوذ بِك مِنْ عَذَاب الْقَبْر، وَمِنْ شَرّ فِتْنَة الْمَحْيَا وَالْمَمَات. யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிபம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, மேலும் வாழ்வு மற்றும் மரணத்தின் தீய சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهم إني أَعَوذُ بكَ مِنْ جَهْدِ الْبَلاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ. யாஅல்லாஹ்! தாங்கமுடியாத பாரிய கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும், தீயமுடிவுகளை விட்டும் எதிரிகளின் நகைப்பை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ أَصْلِحْ لِي دِينِي اَلَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ اَلَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي اَلَّتِي إِلَيْهَا مَعَادِي، وَاجْعَلِ اَلْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ اَلْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ. யா அல்லாஹ்! என் கருமங்களின் பிடிகயிறாகிய எனது தீனை சீர்படுத்தி வைப்பாயாக. எனது வாழ்க்கைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை எனக்கு நீ சீர்படுத்தி வைப்பாயாக. எனது மீட்சிக்குரிய இடமாகிய எனது மறுமையை சீர்படுத்தி வைப்பாயாக. நல்லவைகள் அனைத்திலும் அதிகமாகத் தேடிக் கொள்ள எனது வாழ்க்கையை அமைத்து தருவாயாக. அனைத்து தீங்குகளிலிருந்தும் எனக்கு நிம்மதி தரக்கூடியதாக எனது மௌத்தை அமைத்து வைப்பாயாக.
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى. யாஅல்லாஹ்! நேர்வழியையும், உள்ளச்சத்தையும், கற்பொழுக்கத்தையும், போதுமென்ற மனதையும் தருமாறு நான் உன்னிடம் கேட்கிறேன்.
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ. யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிபம், கப்ரின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا. யா அல்லாஹ், எனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி பயபக்த்தியை தந்தருள்வாயாக நீயே உள்ளத்தை தூய்மைப்படுத்துவோரில் மிகச்சிறந்தவனும் அதன் பொருப்பாளானும் உரிமையாளனுமாக உள்ளாய்,
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا. யாஅல்லாஹ்! பயனற்ற கல்வியை விட்டும் (உன்னை) பயப்படாத உள்ளத்தை விட்டும் திருப்தியடையாத மனதை விட்டும் ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
اللَّهمَّ اهْدِنِي وَسَدِّدْنِي. ((யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக அதில் உறுதியாக நிற்கச் செய்வாயாக!))
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِك، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفَجْأَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ. அல்லாஹ்வே! உன் அருள் இல்லாமற் போவதையும், நீ அளித்திருக்கும் உன் ஆரோக்கியம் அகன்று விடுவதையும், உன் திடீர் தண்டனையும், மற்றும் உன் சகல கோபங்களையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
اللَّهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ ومنْ شَرِّ مَا لَمْ أعْمَلْ. யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீங்கை விட்டும் நான் செய்யாதவற்றின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
لَا إِلهَ إِلَاّ اللَّهُ، الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلهَ إِلَاّ اللَّهُ، رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلهَ إِلَاّ اللَّهُ، رَبُّ السَّموَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ. ((அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன வேறு யாருமில்லை அவனே வானங்களுக்கும் பூமிக்கும் அதிபதி சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்))
اللَّهمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَاّ أَنْتَ. ((யா அல்லாஹ்! நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் அளவு நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை))
اللَّهمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِى بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوْ أَنْزَلْتَهُ في كِتَابِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِى عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ: أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي. ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையினதும் உனது அடிமைப் பெண்ணினதும் மகன், எனது முன்நெற்றி உன் கைவசமே உள்ளது, உனது தீர்ப்பே என்னில் செயல்படுகிறது, என் மீதான உன் தீர்ப்பு மிகவும் நீதியானது. உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாகவும், நெஞ்சத்தின் பிரகாசமாகவும், கவலையை நீக்கக்கூடியதாகவும் துன்பத்தை போக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக)).
اللَّهمَّ مُصَرِّف الْقُلُوب صَرِّفْ قُلُوبنَا عَلَى طَاعَتك. ((யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக!))
يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ. உள்ளங்களைப் புரட்டுபவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலை பெறச் செய்வாயாக!
اللَّهمَّ إني أسألُكَ العَافِيَةَ في الدنيا والآخِرةِ. யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றத்தை உன்னிடம் கேட்கிறேன்.
اللَّهمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِى الأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا، وَعَذَابِ الآخِرَةِ. யாஅல்லாஹ்! எங்களுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்கிவைப்பயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!
رَبِّ أَعِنِّي وَلا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي، وَلا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي، وَيَسِّرِ الْهُدَى إلِيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ. யாஅல்லாஹ்! எனக்கு (நற்காரியங்களை செய்வதற்கு) உதவி செய்வாயாக! எனக்கு எதிராக (நற்காரியங்களை தடுக்கின்றவர்களுக்கு) உதவி செய்யாதிருப்பாயாக! எனக்கு உதவியாக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக, நேர்வழியை எனக்கு இலகுபடுத்துவாயாக! அத்துமீறி அநீதி இழைப்பவருக்கு எதிராக எனக்கு உதவிசெய்வாயாக!
رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا، أَوَّاهًا مُنِيبًا. என் இறைவனே! உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை அதிகம் நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு அதிகம் வழிப்படுபவனாக, அடிபணிபவனாக, எல்லா விவகாரகங்களிலும் உன்பக்கம் சார்ந்திருப்பவனாக என்னை ஆக்குவாயாக!
رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي. என் இறைவனே! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக, எனது பாவங்களை போக்கிடுவாயாக, எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக, எனது ஆதாரங்களை உறுதிபெறச்செய்வாயாக, எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக, எனது நாவை பலப்படுத்துவாயாக, எனது உள்ளத்தின் குரோதங்களையும் பிறர்மீதான வெறுப்புகளையும் அகற்றிடுவாயாக.
اللَّهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي[2]. ((யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும், பார்வையின் தீங்கை விட்டும், நாவின் தீங்கைவிட்டும், உள்ளத்தின் தீங்கைவிட்டும், எனது மறையுறுப்பின் தீங்கைவிட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) (2) முஹம்மத் மஸ்ஹரி (ரஹ்) கூறுகிறார்: "எனது விந்தின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, நான் விபச்சாரத்திலும், தடைசெய்யப்பட்டவற்றைப் பார்ப்பதிலும் வீழாமல் இருக்க வேண்டும்." (ஆதாரம்: குவூத் அல்-முக்ததீ, ஜாமிஉத் திர்மிதி 2/860)
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ. யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (3) இறைச்சி சாப்பிடும் போது ஓதும் பிரபல்யமான துஆ. இப்னு ரஸ்லான் ரஹ் அவர்களின் ஸுனனுல் குப்ரா நூல் (7/411)
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ. யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், இச்சைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي. யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பவன் பெரும் கொடையாளன் நீ மன்னிப்பை விரும்புகின்றாய் எனவே என்னை மன்னித்தருள்வாயாக
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَات، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً في قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُني إِلَى حُبِّكَ. யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்யவும் தீமைகளை விட்டுவிடவும் ஏழைகளை நேசிக்கவும் நல்லருள்புரியுமாறும் மேலும் என்னை நீ மன்னித்து இரக்கம் காட்டுமாறும் கேட்கிறேன். நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நாடி அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ: عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ. யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற நான் அறியாத அனைத்து நன்மையானவற்றையும் இவ்வுலகிலும் மறுமையிலும் தருமாறு உன்னிடன் வேண்டுகிறேன். மேலும்; நான் அறிந்துள்ள நான் அறியாது இருக்கின்ற அனைத்து தீமைகளிலிருந்தும் இவ்வுலகிலும் மறுமையிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ. யாஅல்லாஹ்! உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் கேட்ட நன்மையான விடயங்களை உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிய தீங்குகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ اَلْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ مِنْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا. யாஅல்லாஹ்! நான் சுவனத்தையும் அதன்பால் நெருக்கிவைக்கும் சொல்லையும் செயலையும் கேட்கிறேன். மேலும் நான் உன்னிடம் நரகிலிருந்தும் அதன்பால் நெருக்கி வைக்கும் சொல் செயல்களை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் மேலும் எனக்கு நீ நிர்ணயித்துள்ள விதிகள் அனைத்தையும் நல்லதாக்கி தருமாறும் கேட்கிறேன்.
اللَّهمَّ احْفَظنِي بالإِسْلَامِ قائِماً، واحْفَظْنِي بالإِسْلَامِ قاعِداً، واحْفَظنِي بالإِسْلَامِ راقِداً، ولا تُشْمِتْ بِي عَدُوّاً ولا حاسِداً. யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் அமர்ந்திருக்கும் போதும் உறங்கும் போதும் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் நகைப்பிற்கு ஆட்படுத்தாதிருப்பாயாக!
اللَّهمَّ إِنِّي أسْألُكَ مِنْ كُلِّ خَيْر خزائِنُهُ بِيَدِكَ، وأعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرَ خَزَائِنُهُ بِيَدِكَ. யா அல்லாஹ்! நன்மையின் களஞ்சியங்கள் அனைத்தும் உன் கையில் உள்ளன, அவற்றிலிருந்து நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் தீமையின் களஞ்சியங்கள் அனைத்தும் உன் கையில் உள்ளன, அவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
اللَّهمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا. யாஅல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடியவைகளை எமக்குத் தருவாயாக உன்னைப் பற்றிய அச்சத்தையும் உன்னுடைய சுவனததைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் தருவாயாக! உலக சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் யகீன் எனும் மன உறுதியையும் எமக்குத் தருவாயாக!
اللَّهمَّ مَتِّعْنَا بأسْمَاعِنا، وَأَبْصَارِنَا، وقُوَّتِنَا مَا أحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوارثَ مِنَّا، وَاجْعَلْ ثَأرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا. யாஅல்லாஹ்! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை உயிர் வாழ வைக்கும் காலம் வரையில் சிறந்த முறையில் உனக்கு வழிப்படுவதில் ஆக்கிவிடுவாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் கொடுத்திடுவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தாதிருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் இலட்சியமாகவும் எங்கள் அறிவின் குறிக்கோளாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது கருணைகொள்ளாதவரை பொருப்பாளாராய் சாட்டிவிடாதிருப்பாயாக! "எங்கள் பிற உறுப்புக்கள் பலவீனமடைந்த பின்னரும் எங்கள் செவிகளின் மற்றும் பார்வைகளின் சக்தியை மரண காலம் வரை எமக்கு வழங்குவாயாக!" என்பதே இதன் பொருளாகும். (மபாதீஹ் ஷர்ஹ் மிஷ்காத்துல் மஸாபீஹ் 3/248)
اللَّهمَّ إني أَعوذ بك من الجُبْنِ، وأعُوذُ بك من البُخْلِ، وأَعوذُ بك أنْ أُرَدَّ إِلى أرذَلِ العُمر، وأعوذُ بك من فِتْنَةِ الدّنيا وعَذَابِ القَبْرِ. யாஅல்லாஹ்! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இன்னும் தள்ளாத வயதுவரை உயிர் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உலகின் சோதனை, கப்ரின் வேதனை ஆகிய அனைத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهمَّ اِغْفِرْ لِي جِدِّي، وَهَزْلِي، وَخَطَئِي، وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي. யா அல்லாஹ்! என்னுடைய பிழைகளையும், எனது அறியாமையையும், எனது மிதமிஞ்சிய கருமங்களையும், மற்றும் என்னை விடவும் நீ அறிந்திருக்கும் எனது ஏனைய தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக. அல்லாஹ்வே! எனது தீவிர மற்றும் மந்த நிலையையும், மேலும் எனது எண்ணத்தின்படி நடந்த எனது தவறுகளையும் மேலும் என்னிடமிருக்கும் மற்றெல்லா தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக.
اللَّهمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي. யா அல்லாஹ்! எனக்கு மன்னிப்பளித்து, கருணை புரிந்து, நேர்வழிகாட்டி ஆரோக்கியத்தை வழங்கி வாழ்வாதாரத்தையும் தந்தருள்வாயாக.)
اللَّهمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَاّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. யாஅல்லாஹ்! நானே எனக்கு மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர எனது பாவங்களை மன்னிக்க வேறு யாருமில்லை. எனவே உனது பெரு மன்னிப்பால் என்னை மன்னித்து கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீயே மிகப் பெரும் மன்னிப்பாளனாயும் கருணையாளனுமாய் உள்ளாய்!
اللَّهمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَليْك تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ. யாஅல்லாஹ்! நான் உனக்கே அடிபணிந்துள்ளேன், உன்னையே விசுவாசித்துள்ளேன்; உன் மீதே எனது பொறுப்புக்கள் யாவற்றையும் ஒப்படைத்துள்ளேன், உன்பக்கமே மீண்டுள்ளேன், உனக்காகவே போராடுகிறேன்.
اللَّهمَّ إني أعُوذُ بعزَّتِكَ؛ لا إلهَ إلَاّ أَنْتَ أنْ تُضلَّني، أَنْتَ الحَيُّ الَّذِي لَا تَمُوتُ، وَالجِنُّ والإنْسُ يَمُوتُونَ. யாஅல்லாஹ்! உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் நான் வழிதவறிச் சென்றுவிடாதிருக்க நிச்சயமாக நான் உன்னிடமே பாதுகாவல் தேடுகிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை. நீயே மரணிக்காத நித்திய ஜீவனாவாய் இருக்கின்றாய், மனித, ஜின் இனத்தினர் மரணித்துவிடுபவர்களாய் இருக்கின்றனர்.
اللَّهمَّ إنِّي أسْألُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، والسَّلامَةَ مِنْ كُلِّ إثْمٍ، والغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، والفَوْزَ بالجَنَّةِ، والنَّجَاةَ مِنَ النَّارِ. யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பை பெற்றும் தரும் உறுதியான விடயங்களையும் உன்னிடம் கேட்கின்றேன். மேலும் பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து நல்லறங்களின் பிரதி பலன்களையும் சுவனவெற்றியையும் நரகை விடுதலையையும் உன்னிடம் கேட்கின்றேன். அதாவது "உனது இரக்கம் எனக்கு கிடைக்கக் காரணமாக அமைவது செயல்கள், வார்த்தைகள் மற்றும் பண்புகள் ஆகும்" என்பது இதன் அர்த்தமாகும். மஃபாதீஹ் ஃபீ ஷர்ஹ் அல்-மஸாபீஹ் (2/ 304) "அஸாஇம்" என்பது "அஸீமா" என்பதன் பன்மை, இது மனிதன் உறுதியாக நினைக்கும் குணமாகும். அதாவது இதயத்தின் நோக்கம் மற்றும் அதில் உறுதியான முயற்சி என்பதற்கு கூறப்படும். அதாவது உன் மன்னிப்பை எனக்கு பெறுவதற்கான குணங்களை நான் கேட்கிறேன் என்பது இதன் அர்த்தமாகும்.(அல்மஃபாதீஹ் ஃபீ ஷர்ஹில் மஸாபீஹ் 2/304)
اللَّهمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِي رِزْقِي. யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக! என்னுடைய வதிவிடத்தை எனக்கு விசாலமானதாக ஆக்கத்தருவாயாக! எனக்கு வழங்கியுள்ள வாழ்வாதாரங்களில் அபிவிருத்தி செய்வாயாக!
اللَّهمَّ إنِّي أسْألُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فإِنَّهُ لا يَمْلِكُها إلَاّ أنْتَ. யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னுடைய அருட்கொடையிலிருந்தும் உன்னுடைய கருணையிலிருந்தும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை நீ மாத்திரம்தான் சொந்தமாக வைத்துள்ளாய்.
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا. யா அல்லாஹ்! உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, இடிபாடுகளுக்குள் சிக்கியோ, நீரில் மூழ்கியோ, தீயினால் எரிந்தோ இறப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் மரண நேரத்தில் ஷைத்தான் என்னை நிலை தடுமாறச் செய்வதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய பாதையில் (போர் செய்யும்போது) புறமுதுகு காட்டி ஓடி மரணிப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு இறப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ إِني أَعوذ بك من الجُوع، فإِنه بِئْسَ الضْجيعُ، وأعوذ بك من الخِيانة، فإِنها بِئْسَتِ البِطانةُ. யாஅல்லாஹ்! பட்டினியை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது நிம்மதியைக் கெடுக்கும் மிகக்கொடிய விடயமாகும். மேலும் மோசடி செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும்.
اللَّهمَّ إني أعُوذُ بِكَ مِنَ العَجْزِ، والْكَسَلِ، والجُبْنِ، والْبُخْلِ، والْهَرَمِ، والقَسْوَةِ، والغَفْلَةِ، والعَيْلَةِ، والذِّلَّةِ، والْمَسْكَنَةِ، وأعُوذُ بِكَ مِنَ الفَقْرِ، وَالكُفْرِ، والفُسُوقِ، والشِّقَاقَ، والنِّفَاقِ، والسُّمْعَةِ، والرِّياءِ، وأعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ، والبَكَمِ، والْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الأَسْقَامِ. யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், தள்ளாத வயது, கல்நெஞ்சம், அலட்சியம், கையறுநிலை, இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வறுமை, இறை நிராகரிப்பு, பாவச்செயல், பிளவை ஏற்படுத்துதல், நயவஞ்சகம், பிறர் புகழ்வதற்காக செயல் படல்; முகஸ்த்துதி ஆகியவைகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். காதுகேளாமை, பேசமுடியாமை, பைத்தியம், தொழுநோய், வெண் குஷ்டம் மற்றும் பயங்கரமான நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். "ஆஇலா" என்பது வறுமையை குறிக்கும். அல்முஅல்லிம் பிஃபவாஇதி முஸ்லிம் (1/279)
اللَّهمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ. யா அல்லாஹ்! வறுமை, பற்றாக்குறை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும் பிறரின் அநீதிக்கு இலக்காவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.
اللَّهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جارِ السوءِ في دَارِ المُقامَةِ؛ فإنَّ جارَ البادِيَةِ يَتَحَوَّلُ. யா அல்லாஹ்! (நான்) நிரந்தரமாக வசிக்கும் இடத்தின் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் தங்கிச்செல்லும் நாடோடி அண்டை வீட்டார் நகர்ந்து விடுபவர்கள்.
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمن نَفْسٍ لَا تَشْبَعُ، وَمن دُعَاءٍ لَا يُسْمَعُ، وَمن عِلْمٍ لَا يَنْفَعُ، اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ هُؤُلَاءِ الأَرْبَعِ. யாஅல்லாஹ்! பயப்படாத உள்ளம், திருப்தி அடையாத மனம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, பயனளிக்காத கல்வி ஆகிய நான்கு விடயங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهم إني إعوذُ بك من يومِ السوءِ، ومنْ ليلةِ السوءِ، ومنْ ساعة السوءِ، ومنْ صاحبِ السوءِ، ومنْ جارِ السوءِ في دارِ المُقامة. யாஅல்லாஹ்! தீய நாளைவிட்டும், தீய இரவை விட்டும், தீய நேரத்தை விட்டும், தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) நிரந்தரமாக வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَسْتَجِيرُ بِكَ مِنَ النَّارِ. யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனத்தைக் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ فَقِّهني فِي الدِّينِ. யாஅல்லாஹ் எனக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருவாயாக.
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ. ((யாஅல்லாஹ்! நான் அறிந்த நிலையில் உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன் ))
اللَّهمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا. அல்லாஹ்வே! நீ எனக்கு எதனைக் கற்றுத் தந்தாயோ அதன் பயனை எனக்குத் தந்தருள். மேலும் எனக்குப் பயன் தரும் விடயத்தைக் கற்றுத் தந்து, இன்னும் எனக்குப் பயன்தரும் அறிவையும் தந்தருள்வாயாக.
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا. ((யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் (ஹலாலான) தூய்மையான வாழ்வாதாரத்தையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்))
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّه بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. யாஅல்லாஹ்! நிச்சயமாக நீ தனித்தவன், ஒருவன், (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் உன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!), எவறையும் பெறவுமில்லை, எவறுக்கும் பிறக்கவும் இல்லை, உனக்கு யாரும் நிகரில்லை என்பதனை முன்னிறுத்தி கேட்கிறேன், யாஅல்லாஹ்! என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டுமென கோருகிறேன் நிச்சயமாக நீயே மிகப் பெரும் மன்னிப்பாளனாயும் கருணையாளனுமாய் உள்ளாய்.
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ الْمَنَّانُ يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وأَعُوذُ بِكَ مِنَ النَّارِ. ((யாஅல்லாஹ்! நிச்சயமாக சர்வ புகழும் உனக்கே உரியது, உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, நீ தனித்தவன், உனக்கு எந்த இணையாளனுமில்லை, பெரும் கொடையாளன், வானங்களையும் பூமியையும் எவ்வித முன்மாதிரியின்றி படைத்தவனே! வல்லமை மிக்கவனே! கண்ணியத்திற்குரியவனே! நித்தியஜீவனே! என்றும் நிலைத்திருப்பவனே! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனத்தைக் கேட்கிறேன் மேலும் நரகைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பும் தேடுகிறேன் ))
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّه، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، اَلْأَحَدُ، اَلصَّمَدُ، اَلَّذِي لَمْ يَلِدْ، وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே அல்லாஹ், உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னை மாத்திரம் தவிர வேறு யாருமில்லை, நீ ஒருவன், (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் உன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!), எவறையும் பெறவுமில்லை, எவறுக்கும் பிறக்கவும் இல்லை, உனக்கு நிகராக யாருமில்லை என நான் சாட்சி கூறுவதன் மூலம் உன்னிடம் (என் தேவைகளை நிறைவேற்றுமாறு) கேட்கிறேன்.
ربِّ اغْفِر لي وتُب عَليَّ، إنك أَنت التَّوَّابُ الغَفورُ. எனது இரட்சகனே! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவமீட்சியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே பாவமீட்சியை ஏற்றுக்கொள்பவனாகவும் பெரும் மன்னிப்பாளனுமாய் உள்ளாய்.
اللَّهمَّ بِعِلْمِكَ الْغَيْب، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي. யாஅல்லாஹ்! உன்னுடைய மறைவான ஞானம் மற்றும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றல் ஆகியவற்றின் மூலம் கேட்கிறேன், நான் வாழ்வது எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை வாழவைப்பாயாக! நான் இறப்பதுதான் எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக!
اللَّهمَّ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَاءَ بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ. ((யாஅல்லாஹ்! வெளிப்படையிலும் மறைவிலும் உன்னை அஞ்சி நடக்க உன்னிடம் கேட்கிறேன், திருப்தியிலும் கோபத்திலும் உண்மையைப் பேச (எனக்கு உதவி செய்யுமாறு) உன்னிடம் கேட்கிறேன். மேலும் வறுமையிலும் செழிப்பிலும் நடுநிலையோடு நடந்து கொள்வதை நான் உன்னிடம் கேட்கிறேன், மேலும் முடிவுறாத அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன், இடைநிறுத்தப்படாத கண் குளிச்சியைத் தருமாறும் உன்னிடம் கேட்கிறேன், உனது தீர்ப்புக்குப் பின்னால் விதியை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளும் நிலையை நான் கேட்கிறேன், மரணத்திற்குப் பின் இதமான சுவன வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் வழி கேட்டின் குழப்பத்திலும் தீயவிளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டு விடாது உன்னை சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதின் இன்பத்தையும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன்.))
اللَّهمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ. யா அல்லாஹ்! எங்களை ஈமானின் அலங்காரத்தால் அலங்கரித்தருள்வாயாக! மேலும் எங்களை நேர்வழியைக் காட்டுபவர்களாகவும் நேர்வழிப்பெற்றவர்களாகவும் ஆக்கிவிடுவாயாக!
اللَّهمَّ ارْزُقْنِي حُبَّكَ، وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ யாஅல்லாஹ்! எனக்கு உன்னுடைய அன்பையும், யாரின் அன்பு உன்னிடம் எனக்குப் பயனளிக்குமோ அவரின் அன்பையும் எனக்குத் தந்தருள்வாயாக!
اللَّهمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ எனக்கு தந்துள்ளாய், எனவே நீ விரும்பும் செயல்களில் நான் ஈடுபட எனக்கு வலுவூட்டக் கூடியதாக அதனை ஆக்குவாயாக!
اللَّهمَّ وَمَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِي فِيمَا تُحِبُّ. யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ தடுத்துவிட்டாய், எனவே நீ விரும்பும் செயல்களில் ஈடுபடுவதற்கு அந்த இடைவெளியை வாய்ப்பாயாக எனக்கு ஆக்குவாயாக!
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَالْبُخْلِ، وَسُوءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ. யாஅல்லாஹ்! கோழைத்தனம், கஞ்சத்தனம், தள்ளாத வயது, மனக் குழப்பம், கப்ரின் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ، وَرَبَّ إِسْرَافِيلَ، أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ. யாஅல்லாஹ்! ஜிப்ரீல் மற்றும் மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இரட்சகனே! நரக வெப்பத்திலிருந்தும் மண்ணரை வேதனை யிலிருந்தும்; நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
اللَّهمَّ أَلْهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي. யாஅல்லாஹ்! எனக்கு நேரான பாதையை மனதில் உதிக்கச் செய்வாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னை பாதுகாப்பாயாக!
اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَأَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ. ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன், மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்))
اللَّهمَّ رَبَّ السَّمَوَاتِ السبع، وَرَبَّ الْأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ، وَأَغْنِنَا مِنْ الْفَقْرِ. ((யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! வித்தையும் விதையையும் பிளப்பவனே! தவ்ராத் இன்ஜீல் ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை இறக்கியவனே! அனைத்துப் பொருட்களினதும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், நீயே அனைத்து படைப்பினங்களினதும் முன்நெற்றியைப்பிடித்து அதிகாரம் செலுத்தக் கூடியவன், யா அல்லாஹ்! நீயே ஆரம்பமானவன் உனக்கு முன்னர் எதுவுமில்லை, நீயே இறுதியானவன் உனக்கு பின்னர் எதுவுமில்லை, நீயே மேலானவன் உனக்குமேல் எதுவுமில்லை, நீயே இப்பிரபஞ்சத்தின் கீழுள்ளவற்றிற்கும் அதிகாரம் படைத்தவன் உனக்கு கீழ் எதுவுமில்லை, எங்களுடைய கடனை நிறைவேற்றிவைப்பாயாக! மேலும் வறுமையை விட்டும் எம்மை பாதுகாத்து தன் நிறைவானவர்களாக ஆக்கிவிடுவாயாக)) அதாவது: தானியத்தைப் பிளந்து அதிலிருந்து கதிர்களை வெளிப்படுத்துகிறான், விதையைப் பிளந்து அதிலிருந்து பேரீச்சமரத்தை வெளிப்படுத்துகிறான். அல்முஃப்ஹிம் லிமா அஷ்கல மின் தல்ஹீஸி கிதாபி முஸ்லிம் (7/41)
اللَّهمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتّ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنْ الظُّلُمَاتِ إلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ وَالْفِتَنَ، مَا ظَهَرَ مِنْهَا، وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا إنَّك أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعَمِك، مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ لهَا، وَأَتِممْها عَلَيْنَا. ((யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்திடுவாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை) சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக! இருள்களிலிருந்து எம்மை பாதுகாத்து ஒளியின் பால் எமக்கு வழிகாட்டுவாயாக! வெளிப்படையான மறைமுகமான அனைத்து மானக்கேடான விஷயங்களையும் சோதனைகளையும் விட்டும் எங்களை நீ தூரப்படுத்திடுவாயாக! எங்கள் செவிப்புலன்களில் பார்வைகளில் உள்ளங்களில் மனைவியர்களில் வாரிசுகளில்; அருள் வளத்தை ஏற்படுத்திடுவாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய். உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக அதற்காக உன்னை புகழ்பவர்களாக உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப் படுத்துவாயாக))
اللَّهمَّ إنّي أسْألُكَ خَيرَ المسْأَلَةِ، وخَيْرَ الدُّعَاءِ، وخَيْرَ النَّجَاح، وخَيْرَ العَمَلِ، وخَيْرَ الثَّوابِ، وخَيْرَ الْحَيَاةِ، وخَيْرَ الْمَمَاتِ، وثَبِّتْنِي، وثَقِّلْ مَوَازِينِي، وحَقِّقْ إيْمانِي، وَارْفَعْ دَرَجاتِي، وَتَقَبَّلْ صَلَاتِي، وَاغْفِرْ خَطِيئَتِي، وَأَسْأَلُكَ الدَّرجَاتِ العُلَا مِنَ الْجَنَّةِ. ((யாஅல்லாஹ்! மிகச் சிறந்த வேண்டுதலை மிகச்சிறந்த பிரார்த்தனையை மிகச்சிறந்த வெற்றியை உன்னிடம் நிச்சயமாக கேட்கிறேன். மேலும் மிகச்சிறந்த நற்செயலையும் மிகச்சிறந்த நற்கூலியையும் மிகச்சிறந்த வாழ்வையும் மிகச்சிறந்த மரணத்தையும் தருமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். என்னை நீ இம்மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக! (மறுமை நாளில்) என்னுடைய தராசைக் கனதியானதாக ஆக்குவாயாக! என்னுடைய ஈமானை பலப்படுத்துவாயாக! மேலும் என்னுடைய நற்பெயரை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக்கொள்வாயாக! என்னுடைய தவறுகளை மன்னிப்பாயாக! மேலும் நான் உன்னிடம் சுவர்க்கத்தின் அந்தஸ்துக்களில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கேட்கிறேன்.))
اللَّهمَّ إنّي أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ، وخَوَاتِمَهُ، وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ، وَظَاهِرَهُ، وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَا مِنَ الْجَنَّةِ. ((யாஅல்லாஹ்! சிறந்த துவக்கங்களையும், நல்ல முடிவுகளையும், அனைத்து நல்லவைகளையும் அதன் ஆரம்பத்தையும் வெளிப்படையான அந்தரங்கமான நல்லறங்களையும் உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் சுவர்க்கத்தின் அந்தஸ்த்துக்களில் உயர்ந்த அந்தஸ்த்தையும் கேட்கிறேன்.))
اللَّهمّ إِنّي أَسْأَلُكَ خَيْرَ مَا آتِي، وَخَيْرَ مَا أَفْعَلُ، وَخَيْرَ مَا أعْمَلُ، وَخَيْرَ مَا بَطَنَ، وَخَيْرَ مَا ظَهَرَ، وَالدَّرَجَاتِ الْعُلَا مِنَ الْجَنَّةِ. யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் செய்வதற்கு முனையும் விடயங்களில் மிகச்சிறந்ததையும் நான் ஈடுபடும் செயல்களில் மிகச்சிறந்ததையும் நான் ஆற்றும் கருமங்களில் மிகச்சிறந்ததையும் உன்னிடம் கேட்கிறேன். நல்லவற்றைச்செய்யவும் அந்தரங்கம் மற்றும் வெளிப்படையான அனைத்து நல்லவைகளையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.
اللَّهمَّ إنّي أَسْأَلُكَ أَنْ تَرْفَعَ ذِكْرِي، وَتَضَعَ وِزْرِي، وَتُصْلِحَ أَمْرِي، وَتُطَهِّرَ قَلْبي، وَتُحَصِّنَ فَرْجِي، وَتُنَوِّرَ قَلْبِي، وَتَغْفِرَ لِي ذَنْبِي، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَا مِنَ الْجَنَّةِ. யாஅல்லாஹ்! எனது அந்தஸ்த்தை உயர்த்துமாறு வேண்டுகிறேன், என்னுடைய பாவத்தை மன்னிக்குமாறும் வேண்டுகிறேன், என்னுடைய விவகாரத்தை சீராக்குமாறும் என்னுடைய உள்ளத்தை தூய்மைப்படுத்துமாறும் வேண்டுகிறேன் மேலும் என்னுடைய மறையுறுப்பை (ஹராத்தை விட்டும்) காத்திடுமாறும் என்னுடைய உள்ளத்தை ஒளிமயமாக்குமாறும் என்னுடைய பாவங்களை மன்னிக்குமாறும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன் மேலும் சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.
اللَّهمَّ إنّي أَسْأَلُكَ أَنْ تُبارِكَ فِي نَفْسِي، وَفِي سَمْعِي، وَفِي بَصَرِي، وَفِي رُوحِي، وَفِي خَلْقِي، وَفِي خُلُقِي، وَفِي أهْلِي، وَفِي مَحْيَايَ، وَفِي مَمَاتِي، وَفِي عَمَلِي، فَتَقَبَّلْ حَسَنَاتِي، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَا مِنَ الْجَنَّةِ. யா அல்லாஹ்! என்னுடைய உள்ளம், காது, பார்வை, உயிர், உடல், குணம், குடும்பம், வாழ்வு, மரணம், செயல் ஆகியவற்றில் நீ அபிவிருத்தி செய்யுமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் என்னுடைய நல்லறங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர் அந்தஸ்துகளைக் கேட்கிறேன்.
اللَّهمَّ، جَنِّبْنِي مُنْكَرَاتِ الأَخْلاقِ، وَالأَعْمَالِ، وَالأَهْوَاءِ، وَالأدْوَاءِ. யாஅல்லாஹ்! துர்குணங்கள், தீச்செயல்கள், மனோஇச்சைகள், பயங்கரமான நோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காத்தருள்வாயாக.
اللَّهمَّ قَنِّعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لِي فِيهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِي بِخَيْرٍ. யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த வாழ்க்கை வசதிகளில் மனநிறைவை தந்து அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும் தவறிப்போன அனைத்து அருள்களுக்கும் அதைவிட சிறந்தவற்றை எனக்குத் பகரமாகத் தந்தருள்வாயாக!
اللَّهمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا. யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் இலகுவாக விசாரிப்பாயகாக !
اللَّهمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ. யா அல்லாஹ்! உன்னை நினைவு கூறவும் உனக்கு நன்றி செலுத்தவும் அழகிய முறையில் வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!
اللَّهم إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ، وَنَعِيمًا لَا يَنْفَدُ، وَمُرَافَقَةَ نَبِيِّكَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ. யா அல்லாஹ் நிலைமாறா விசுவாசத்தையும், தீர்ந்து விடாத அருளையும், அதி உயர் சுவனத்தில் உன் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கவும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
اللَّهمَّ قِنِي شَرَّ نَفْسِي، وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي، اللَّهمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَخْطَأْتُ، وَمَا عَمَدْتُ، وَمَا عَلِمْتُ، وَمَا جَهِلْتُ. யா அல்லாஹ்! என் உள்ளத்தின் தீங்கிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக! எனது காரியத்தில் மிகச் சிறந்ததில் எனக்கு உறுதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! நான் இரகசியமாகச் செய்தவைகளையும் வெளிப்படையாகச் செய்தவைகளையும் தவறுதலாக செய்தவைகளையும் வேண்டுமென்று செய்தவைகளையும் நான் அறிந்து செய்ததையும் நான் அறியாது செய்ததையும் மன்னித்தருள்வாயாக!
اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. யா அல்லாஹ்! கடன் மிகைப்பதை விட்டும், எதிரிகள் மிகைப்பதை விட்டும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
اللَّهمَّ اغْفِرْ لِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي، أَعُوذُ بِاللَّه مِنْ ضِيقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ. ((யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக மேலும் எனக்கு நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தைத் தந்தருள்ளவாயாக! எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக! மறுமை நாளின் நெருக்கடியான நிலையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்))
اللَّهمَّ مَتِّعْنِي بِسَمْعِي، وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي، وَخُذْ مِنْهُ بِثَأْرِي. ((யா அல்லாஹ் ! எனது செவிப்புலனையும் பார்வையையும் எவ்வித குறையற்றதாக ஆக்கிவைப்பாயாக! அவை இரண்டையும் இறக்கும் வரையில் ஆரோக்கியமானதாக வைத்திடுவாயாக! எனக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக மேலும் அநியாயம் இழைத்தவரை எனக்காக பழிவாங்குவாயாக! ))
اللَّهمَّ إنِي أَسْأَلُكَ عِيشَةً نَقِيَّةً، ومِيتَةً سَوِيّةً، ومَردّاً غَيْرَ مُخْزٍ، ولَا فَاضِحٍ. யா அல்லாஹ்! தூய்மையான வாழ்வையும், சீரான மரணத்தையும், கேவலம் இழிவு அற்ற மீளுதலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
اللَّهمَّ أَحْسَنْتَ خَلْقِي، فَأَحْسِنْ خُلُقِي. யா அல்லாஹ் ! எனது தோற்றத்தை (உருவத்தை) அழகாக்கியுள்ளாய் ஆகவே எனது குணத்தையும் அழகுபடுத்திடுவாயாக!
اللَّهمِ اَغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالمُؤْمِنَاتِ. யா அல்லாஹ் முஃமினான ஆண்கள் பெண்களின் பாவங்களை மன்னிப்பாயாக
اللَّهمَّ ثَبِّتني وَاجْعَلْني هَادِيًا مَهْدِيًّا. யா அல்லாஹ் என்னை இம்மார்க்கத்தில் ஸ்திரப்படுத்துவாயாக! மேலும் நேர்வழிப்பெற்றவனாகவும் நேர்வழியைக் காட்டுபவனாகவும் ஆக்குவாயாக.
اللَّهمَّ آتِنِي الْحِكْمَةَ الّتِي مَنْ أُوتِيهَا فَقَدْ أُوتِيَ خَيْراً كَثِيراً. இறைவா யாருக்கு நீ அறிவு ஞானத்தைக் கொடுக்கிறாயோ அவர் அதிக பாக்கியத்தைப் பெற்றவராவார். அவ்வாறான அறிவு ஞானத்தை எனக்கும் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே மிக அறிந்தவன், ஸலாதும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உண்டாவதாக.