இஸ்லாத்தினுள் நுழைய விரும்பும் ஒருவர் பின்வரும் வார்த்தையை அதன் பொருளை அறிந்து அதனை ஆழமாக விசுவாசித்து கூறினால்; போதுமானது: அஷ்ஹது அன் லாஇலாக இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் எவரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்), இவ்வாறு அவர் கூறுவதால் முஸ்லிமாக மாறிவிடுகிறார். அதன் பிறகு அல்லாஹ் அவரின் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இஸ்லாத்தின் ஏனைய சட்ட திட்டங்களை சிறிது சிறிதாக கற்றுக்கொள்ளவேண்டும்.
இஸ்லாத்தினுள் நுழைய விரும்பும் ஒருவர் பின்வரும் வார்த்தையை அதன் பொருளை அறிந்து அதனை ஆழமாக விசுவாசித்து கூறினால்; போதுமானது: அஷ்ஹது அன் லாஇலாக இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் எவரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்), இவ்வாறு அவர் கூறுவதால் முஸ்லிமாக மாறிவிடுகிறார். அதன் பிறகு அல்லாஹ் அவரின் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இஸ்லாத்தின் ஏனைய சட்ட திட்டங்களை சிறிது சிறிதாக கற்றுக்கொள்ளவேண்டும்.
மேலதிகத் தகவல்களைப்பெற:
மனித இயல்பு, பகுத்தறிவு, மற்றும் மகிழ்ச்சியினது மதமாகும்
இந்த வானங்களையும் பூமியையும் அதிலுள்ள பிரமாண்டமான படைப்புக்களையும் படைத்தவன் யார்? இப்பிரபஞ்சத்தின் மிகத்துல்லியமானதும் கட்சிதமானதுமான இந்த ஒழுங்கை அமைத்தவன் யார்?
மேலும் இம்மாபெரும் பிரபஞ்சமானது அதன் விதிகளுக்கமைவாக பல ஆண்டுகளாக மிகவும் துல்லியமாக கட்டுக்கோப்புடன் இயங்கி நிலைபெறுவதற்கு எவ்வாறு ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது?
இப்பிரபஞ்சம் தானாக உருவானதா? அல்லது ஏதுமில்லாத ஒன்றின் மூலம் உருவானதா? அல்லது தற்செயலாக வந்ததா?
உம்மைப் படைத்தவன் யார்?
உமது உடலினுள்ளும் ஏனைய உயிரினிங்களின் உடலினுள்ளும் காணப்படும் கூறுகளில்; இந்த நுணுக்கமான ஒழுங்கை –முறைமையை- அமைத்தவன் யார்?
ஒருவர் ஒரு வீட்டை காட்டி இந்த வீடு எவரும் கட்டாமல் உருவானது என்று கூறினால் அல்லது இல்லாமை இந்த வீட்டை உருவாக்கியது என்று கூறினால் யாரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அவ்வாறாயின் இந்த மாபெரும் பிரபஞ்சம் படைப்பாளன் ஒருவன் இல்லாமல் உருவானது என்று கூறுபவர்களை எப்படி நம்ப முடியும்? ஒரு பகுத்தறிவுள்ள ஒருவர்-புத்தியுள்ளவர்- பிரபஞ்சத்தின் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பானது தற்செயலாக வந்தது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து திட்டமிட்டு நிர்வகிக்கும் மகத்தான ஒரு இறைவன் உண்மையில் உள்ளான். அவன்தான் உயர்வும் மகத்துவமுமிக்க அல்லாஹ்.
அந்த இறைவன்தான் எமக்கு வழிகாட்ட தூதர்களை அனுப்பியதோடு அவர்களுக்கு இறைவேதங்களையும் அருளினான். அவ்வாறு இறக்கியருளப்பட்ட வேதங்களுள் இறுதியானது அல் குர்ஆன் ஆகும். அதனை அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் மீது இறக்கியருளினான். அல்லாஹ்வின் வேதங்கள் மற்றும் தூதர்களினூடாக :
அவனைப்பற்றியும், அவனின் பண்பகள் பற்றியும், அவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைப்பற்றியும் அவன் நமக்கு செய்யவேண்டிய கடமைப்பற்றியும் எமக்கு அறிவித்தான்.
அவன் (அல்லாஹ்) படைப்புகளைப் படைத்து பரிபாலிப்பவன் என்றும், அவன் மரணம் தழுவாத நித்திய ஜீவன் என்றும், படைப்புகள் யாவும் அவனின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு கீழும், அதிகாரத்திற்கு உட்பட்டும் உள்ளன எனவும் அவன் எங்களுக்கு வழிகாட்டினான்.
அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாக அறிவு காணப்படுகிறது. எனவே அவன் எல்லா விடயங்கள் பற்றியும் சூழ்ந்தறிந்தவனாக உள்ளான். அவன் யாவற்றையும் செவியுறுபவன், பார்ப்பவன், வானம் மற்றும் பூமியில் எந்த ஒன்றும் அவனுக்கு மறைந்ததாக இல்லை என்று எமக்கு அவன் அறிவித்துத் தந்துள்ளான்.
அல்லாஹ் படைப்புகளை படைத்து இரட்சிக்கும் இறைவன், உயிருடன் இருப்பவன் நிலையானவன், நிர்வகிப்பவன் போன்ற தனித்துவப்பண்புகளைப் பெற்ற தன்னிகரற்றவன் என்றும் எமக்கு அறிவித்துள்ளான். அந்த வகையில் ஓவ்வொரு உயிரினங்களும் அவனிடமிருந்தே உயிரைப் பெருகின்றன. அவன் மூலமே ஒவ்வொரு உயிரினங்களும் நிலைத்து நிற்கின்றன. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் :அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் நிகழாது. (-அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது.) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (எல்லாக் காலத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் - பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான்.(பகரா :255).
இறைவனான அல்லாஹ் வானங்களுக்கு அப்பால் உள்ளான் என்றும், அவன் உலகினுள்ளே சங்கமிக்கவில்லை எனவும், உலகமும் அவனுள் சங்கமிக்கவில்லை என்றும் எமக்குக் கற்றுத் தந்துள்ளான்.
மேலும் எம்மையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்து நிர்வகிப்பவன் என்பதால் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பது கடமை என்பதை எமக்கு அறிவித்துத்தந்துள்ளான்.
படைப்பாளனுக்குரிய மகத்துவம், மகிமையைப் பரைசாற்றும் தனித்துவமானதும் நிறைவானதுமான பண்புகள் உண்டு. அவன் ஒரு போதும் தேவை அல்லது குறை போன்ற பண்புகளினால் வர்ணிக்கப்படுவதை விட்டும் தூய்மையானவன். அந்த வகையில் இஸ்லாத்தின் கடவுள் -இறைவன் என்பவன் மறதி எனும் பண்பிற்கு அப்பாட்பட்டவன், அவன் தூங்கமாட்டான் உணவு உண்ணவும் மாட்டான். அவனுக்கு மனைவி அல்லது சந்ததி என்பதும் கிடையாது. இவ்வாறான கடவுளின் தனித்துவத்திற்கு முரணாக இடம் பெற்ற செய்திகள் இறைத்தூதர்கள் கொண்டு வந்த உண்மையான இறைத்தூதிற்கு உட்பட்டது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலிப்பவனை –அல்லாஹ்வை- நீ நம்பிக்கை கொள்வதாக இருந்தால் --எப்போதாவது ஒரு தினம் உம்மை அவன் படைத்ததன் நோக்கத்தை பற்றி சீர்தூக்கி பார்த்திருக்கிறாயா? அல்லாஹ் எம்மிடம் எதனை விரும்புகிறான்? நமது இருப்பின் இலக்குதான் என்ன?
அல்லாஹ் எம்மைப்படைத்து விட்டு பின் எம்மைப் பொருட்படுத்தாது புறக்கணித்து விட்டிருக்க முடியுமா? அல்லது இந்த உயிரினங்கள் அனைத்தையும் எவ்வித நோக்கமோ இலக்கோ இல்லாது படைக்கப்பட்டிருக்க முடியுமா?
உண்மை இதுதான். மகத்தான சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ் எம்மைப் படைத்திருப்பதன் நோக்கத்தை குறித்து எமக்கு அறியத்தந்துள்ளான். அந்த நோக்கம் என்ன? அதுதான் அவனை மாத்திரம் கடவுளாக ஏற்று வணங்கி வழிபடுவது! அவன் எம்மிடம் எதை விரும்புகிறான்? அவனை மாத்திரம் வணங்குவதற்கு தகுதியானவனாக ஏற்றுக்கொள்வதை விரும்புகிறான். அதுமாத்திரமின்றி அவனை எப்படி வணங்க வேண்டும் என்பதையும், அவனின் ஏவல்களை ஏற்றும் தடுத்தவற்றை தவிர்ந்தும் நடப்பதற்கும், அவனின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்கான வழிமுறை குறித்தும்; அவனின் தண்டனை குறித்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் வழிகள் பற்றிய எல்லா விடயங்கள் தொடர்பாகவும் தனது தூதர்கள் மூலம் எமக்கு அறிவித்துத் தந்துள்ளான். மேலும் மரணித்ததின் பின்னரான எமது இறுதி முடிவு குறித்தும் அவன் எமக்கு அறிவித்துத்துத் தந்துள்ளான்.
இவற்றுடன், இவ்வுலக வாழ்வு வெறுமனே ஒரு சோதனை –பரீட்சை- என்பதையும் உண்மையான – முழு நிறைவான வாழ்வு மரணத்தின் பின்னரான மறுமையில் உள்ளது என்பதையும் எமக்கு அறிவித்துத்துந்துள்ளான்.
மேலும் யார் அல்லாஹ்வை அவனின் கட்டளை பிரகாரம் வணங்கி அவன் தடுத்தவற்றிலிருந்து முற்றாக விலகி நடக்கிறாரோ அவருக்கு இவ்வுலகில் நல்வாழ்வும், மறுமையில் நித்திய பேரின்பமும் உண்டு. யார் அவனுக்கு மாறு செய்து அவனைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு உலகில் துன்பமும் மறுமையில் நித்திய தண்டனையும் உண்டு என எமக்கு அல்லாஹ் அறியத்தந்துள்ளான்.
இன்று பெரும்பான்மை மனிதர்கள் வணங்கும் கடவுள்களை அவதானிப்பவர், ஒருவன் மனிதனை வணங்குவதையும், இன்னொருவன் சிலையை வணங்குவதையும், இன்னொருவன் கிரகத்தை –கோளை- வணங்குவதையும் கண்டுகொள்வான்;. பகுத்தறிவும் சிந்தனைத் தெளிவும் உள்ள ஒருவனைப் பொறுத்தவரை நிறைவான பண்புகளைப் பெற்ற அகிலங்களின் அதிபதியான இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. அவனைப் போன்ற உயிரினத்தை, அல்லது அவனை விட தரம்குறைந்த ஓன்றை எப்படி அவனால் வணங்க முடியும்? ஆகவே கடவுள் என்பது மனிதனாகவோ, சிலையாகவோ, மரமாகவோ, மிருகமாகவோ இருக்க முடியாதல்லவா! சிந்திப்போம் நேர்வழி பெறுவோம்.
இன்று மக்கள் வழிபடும் - இஸ்லாம் தவிர்ந்த - அனைத்து மதங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் அல்லது இறைமார்க்கமாக இருந்து பின்னர் மனித கரங்களால் சிதைக்கப்பட்ட மதங்கள் என்பதால் அவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவதில்லை. இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது ஒரு போதும் மாற்றத்திற்கு உட்படாத அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ்வின் மார்க்கமாகும். இந்த மதத்தின் வேத நூல் புனித குர்ஆன், இது அல்லாஹ் இறக்கியருளியதைப் போன்றே பாதுகாக்கப்படுவதோடு, இறுதித்தூதருக்கு இறக்கியருளப்பட்ட அதே மொழியில் இன்று வரையில் முஸ்லிம்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரையும் நம்பி ஏற்றுக்கொள்வது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். அவர்கள் அனைவரும் மனிதர்கள். அவர்களை அல்லாஹ் அத்தாட்சிகள் மற்றும் அற்புதங்களினால் பலப்படுத்தியதோடு, இணையே இல்லாத அவனை மாத்திரம் வணங்கி வழிப்படுவதன் பால் மக்களை அழைப்பதற்காக அவர்களை ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தூதர்களாக அனுப்பி வைத்தான்.
அந்த நபிமார்களில் இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருக்கிறார்கள். முன்னைய தூதர்களின் சட்டதிட்டங்களை மாற்றி இறுதி இறை சட்டதிட்டங்களுடன் அவரை அல்லாஹ் அனுப்பி வைத்ததோடு, மிகப்பெரும் அத்தாட்சிகள் மூலம் அவரைப் பலப்படுத்தினான். அவற்றுள் மிகவும் உன்னதமானது புனித அல்குர்ஆன் ஆகும், அது அகிலங்களின் இரட்டசகனின் வார்த்தையாகும். மனித குலம் அறிந்த மிகப்பெரும் உன்னத நூல். அதன் உள்ளடக்கம், வார்த்தை, வடிவம் அமைப்பு முறை, சட்டதிட்டங்கள் -தீர்ப்புகள்- யாவும் அற்புதமானவை. இம்மை மறுமை மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும் சத்தியத்தித்திற்கான நேர்வழி –வழிகாட்டல் அதில் உள்ளது. இது அறபு மொழியில் இறக்கியருளப்பட்டுள்ளது.
இந்த குர்ஆன் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்வின் வார்த்தை, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் பகுத்தறிவு மற்றும் அறிவியல் சான்றுகள் நிறையவே காணப்படுகின்றன.
மலக்குமார்களையும் இறுதி நாளையும் ஈமான் கொள்வது இஸ்லாத்தின் மிகப்பிரதான அடிப்படைகளுள் உள்ளவைகளாகும். இதனடிப்படையில் மறுமையில் மனிதர்கள் மண்ணறைகளிலிருந்து தங்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணைக்காக மீளெழுப்படுவார்கள். எனவே யார் அல்லாஹ்வை உண்மையான இறைவானாக ஏற்று நற்காரியங்களை செய்கிறாறோ அவர் முஃமினாவார் அவருக்கு சுவர்க்கத்தில் நிரந்தரப் பேரின்பம் உண்டு. யார் அல்லாஹ்வை ஏற்காது புறக்கணித்து தீமைகைளை செய்கிறாரோ அவருக்கு நரகில் மிகப்பெரும் தண்டனை உண்டு. மேலும் அல்லாஹ் விதித்துள்ள நன்மை மற்றும் தீமை குறித்து ஈமான் கொள்வதும் இஸ்லாமிய அடிப்படைகளுள் ஒன்றாகும்.
இவ்வுலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அவரவர்; செய்த நன்மை அல்லது தீமைக்கான வெகுமதியை -கூலியை- பெறாது கடந்து சென்று விட முடியாது என்பதை நாம் அறிவோம். அவ்வாறு நன்மை தீமைக்கான வெகுமதி இல்லையென்றால் அநியாயக்காரர்களுக்குரிய தண்டனையும் நல்லோருக்கான வெகுமதியும் கிடைக்காமல் போகுமல்லவா?
இஸ்லாமிய மார்க்கம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாகும். அது மனித இயல்புணர்வுடனும், பகுத்தறிவுடனும் ஒத்துப் போகும் ஒரு மார்க்கமுமாகும். அதே வேளை சீரான உள்ளமும் அதனை ஏற்றுக் கொள்ளும். அத்துடன் மகத்தான சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்வினால் மனிதர்களுக்கு மார்க்கமாக வழங்கப்பட்டது. அத்துடன் இம்மார்க்கமானது அனைத்து மக்களுக்கும் இம்மை மறுமையில் நன்மை மற்றும் சந்தோஷத்தைப் பெற்றுத்தரும் மார்க்கமாகும். இது குறித்த இனத்தவருக்கோ அல்லது குறித்த நிறத்தினருக்கான ஒரு மார்க்கமல்ல. இம்மார்க்கத்தை ஏற்றோர் அனைவரும் சமமானவர்கள். இஸ்லாத்தில் மனிதர்கள் தங்களது நற்செயல்களின் அளவுகோளின் அடிப்படையிலேயே வேறுபடுத்தப்படுவர்.
அல்குர்ஆன் வலியுறுத்திக் குறிப்பிடும் விடயங்களில் அல்லாஹ்வை ரப்பாகவும் (படைத்து பரிபக்குவப் படுத்துபவனாகவும்), கடவுளாகவும் ஏற்றுக் கொள்வதோடு, இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மதை தூதராகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது ஒரு மனிதனைப் பொருத்தவைரை மிகவும் அவசியமான ஒரு விடயமாகும். அதில் தெரிவேதும் கிடையாது. இதற்குரிய விசாரணையும் வெகுமதியும் மறுமையில் உண்டு. ஆகவே யார் அல்லாஹ்வை உண்மையான முறையில் விசுவாசித்து வாழ்கிறாரோ அவருக்கு மகத்தான வெற்றியுண்டு. யார் அவனை மறுத்து வாழ்கிறரோ அவனுக்கு மிகப்பெரும் கைசேதமும் நஷ்டமும் உண்டு.
இஸ்லாம் என்பது இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனுமாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிவதும், நேசம் மற்றும் பயபக்தியினால் அவனுக்கு முழுமையாக கட்டுப்படுவதுமாகும். இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்வை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகும்.அதாவது அவன் மாத்திரமே சிருஷ்டிகர்த்தா என்றும் அவன் தவிரவுள்ளவை யாவும் சிருஷ்டிகள் என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபட மிகத்தகுதியானவன். அவனுக்கு நிகராக எந்த இணையும் கிடையாது என்பதை உண்மைப்படுத்தி அவன் மாத்திரமே உண்மையான இறைவன் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அவனுக்கு மிக அழகிய பெயர்களும் உயர் பண்புகளும் உண்டு.அவன் குறைகள் அனைத்திற்கும் அப்பாட்பட்டவன்.அவன்…
எல்லாம் படைப்பாளியின் இருப்பைக் குறிக்கிறது வானங்களையும் பூமியையும், அவற்றில் எம்மால் அறிந்துகொள்ளமுடியாத பெரிய உயிரினங்களையும் படைத்தவன் யார்? வானத்திலும் பூமியிலும் செயற்படும் மிகவும் நுணுக்கமானதும், துல்லியமானதுமான ஒழுங்கை அமைத்தவன் யார்? மனிதனைப் படைத்து அவனுக்கு செவிப்புலனையும், பார்வையையும், பகுத்தறிவையும் வழங்கி, அறிவு ஞானங்களை பெற்றுக்கொள்ளவும், உண்மைகளை புரிந்து கொள்ளவும் தகுதிமிக்கவனாக ஆக்கியவன் யார்? உங்கள் உடல் அமைப்புகளிலும், உயிரினங்களின் உடலிலும் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பை எப்படி விளக்குவீர்கள்?அதை உருவாக்கியவன் யார்? மேலும் இம்மாபெரும் பிரபஞ்சமானது அதன் விதிகளுக்கமைவாக பல…
இறைவனின் இருப்பு, அவனின் படைப்பு பற்றிய சந்தேகங்களுக்கான தெளிவை இக்கையேடு ஆராய முற்படுகிறது. பரிபூரண ஞானமிக்க ஒரு படைப்பாளன் இருப்பதை சிந்தனைப்பூர்வமாக இது நிரூபிக்கிறது. அல்லாஹ்வை மட்டும் வணங்குவதே வாழ்வின் நோக்கம் எனவும், இஸ்லாம் மட்டுமே எவ்வித மனிதக் கையூடல்கள் இன்றி பாதுகாப்பட்ட மார்க்கம் எனவும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ﷺ அவர்களை நம்பிக்கை கொண்டு, அவரின் போதனைகளைப் பின்பற்றுமாறும், ஓரிறைக் கொள்கைக்கு எதிராக நடக்கக் கூடாது எனவும், மரணத்திற்குப் பிறகு இவ்வுலகில் நடந்துகொண்டது பற்றி விசாரணையும், அவற்றுக்கான வெகுமதிகளும் கிடைக்கும் எனவும் இது தெளிவுபடுத்துகிறது.