ستون سؤالا في أحكام الحيض والنفاس
*
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
*
*
கேள்வி 1 :
பதில் 1 :
கேள்வி : 2
பதில் 2 :
கேள்வி :3
பதில் :3
கேள்வி :4
பதில் :
கேள்வி :5
பதில் : 5
கேள்வி : 6
பதில் : 6
கேள்வி :7
பதில் : 7
கேள்வி :8
பதில் : 8
கேள்வி :9
பதில் :9
கேள்வி :10
பதில் : 10
கேள்வி : 11:
பதில் :11
கேள்வி: 12 :
பதில் :12
கேள்வி: 13 :
பதில் :13
கேள்வி: 14 :
பதில் :14
கேள்வி: 15
பதில்: 15
கேள்வி : 16
பதில் : 16 :
கேள்வி : 17
பதில் : 17
கேள்வி : 18
பதில்: 18
கேள்வி : 19
பதில் 19
கேள்வி 20 :
பதில் :20
கேள்வி : 21
பதில் 21 :
கேள்வி 22:
பதில் 22
கேள்வி 23 :
பதில் : 23
கேள்வி : 24
பதில் 24
கேள்வி 25
பதில் 25
கேள்வி 26 :
பதில் 26 :
கேள்வி 27 :
பதில் 27 :
கேள்வி 28 :
பதில் 28 :
கேள்வி 29 :
பதில் 29 :
கேள்வி :30
பதில் 30 :
கேள்வி :31
பதில் 31 :
கேள்வி 32 :
பதில் 32 :
கேள்வி 33 :
பதில் : 33
கேள்வி 34 :
பதில் 34 :
கேள்வி 35 :
பதில் 35 :
கேள்வி 36 :
பதில் 36:
கேள்வி 37 :
பதில் 37 :
கேள்வி 38 :
பதில் 38 :
கேள்வி 39 :
கேள்வி 39 :
கேள்வி 40 :
பதில் 40 :
கேள்வி 41:
பதில் 41 :
கேள்வி 42 :
பதில் 42 :
கேள்வி 43 :
பதில் 43 :
கேள்வி 44 :
பதில் 44 :
கேள்வி 45:
கேள்வி 45 :
கேள்வி 46 :
கேள்வி 46 :
கேள்வி 47 :
பதில் 47 :
அபூபக்ர் (ரழி) அவர்களின் மனைவியான அஸ்மா பின்த் உமைஸிற்கு துல் ஹுலைபாவில் நிபாஸ் ஏற்பட்ட போது குளித்து சுத்தமாகி ஒரு துணியினால் கட்டிக்கொள்ளுமாறும், ஹஜ் செய்வதற்கான நிய்யத்தை வைத்துக்கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். மாதவிலக்கிற்குள்ளான பெண்ணும் தூய்மையடையும் வரையில் இஹ்ராமுடைய நிலையில் அதாவது ஹஜ்ஜுக்கான நிய்யத் வைத்த நிலையில் இருக்கிறாள். எனவே அவள் தூய்மையடைந்ததும்; குளித்து தவாப், ஸஃயு போன்ற கடமைகளை நிறைவேற்றுவாள்.
கேள்வி 48 :
பதில் 48 :
கேள்வி 49 :
பதில் 49 :
கேள்வி 50 :
பதில் 50 :
கேள்வி 51 :
பதில் 51
கேள்வி 52 :
பதில் 52 :
கேள்வி 53 :
பதில் 53
கேள்வி 54 :
பதில் 54:
கேள்வி 55:
பதில் 55 :
கேள்வி 56 :
பதில் 56 :
கேள்வி 57 :
பதில் 57 :
கேள்வி 58 :
பதில் 58 :
கேள்வி 59
பதில் 59 :
கேள்வி 60 :
பதில் 60
காரணம் நபி (ஸல்) அவர்கள் மாதவிடயாய் உள்ள பெண்கள் தவாப் செய்வதை தடுத்துள்ளார்க்ள். ஆகவே இந்த விடயத்தல் நிபாஸும் மாதவிடாய் போன்றதே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
(1) தொழுகை விரிப்பிற்கு இங்கு கிம்ரத் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸுஜூது செய்யும் போது முகம் மறைவதால் அதன் அர்த்தத்தைக் கொண்ட இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் சுத்தம் தொடர்பான அறுபது கேள்விகள்
*
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
முன்னுரை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களின் வழியை மறுமை நாள்வரை பின்பற்றி நடக்கும் அனைவர் மீதும் உண்டாவதாக!
முஸ்லிம் சகோதரியே!
வணக்க வழிபாடுகளில் மாதவிடாய் சட்டங்கள்-தீர்ப்புகள் தொடர்பாக அறிஞர்களிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்விகளைக் கருத்திற் கொண்டு, அவற்றிலும் அடிக்கடி அதிகமாக கேட்கப்படும் கேள்விகளை –சட்டப்பிரச்சினைகளை – ஒன்று திரட்டி அதற்கான பதில்களை விரிவாக அன்றி சுருக்கமாக தர முயல்கிறோம்.
முஸ்லிம் சகோதரியே!
இஸ்லாமிய ஷரீஆவில் தெளிவு பெறுவதன் முக்கியத்துவம் கருதியும், அல்லாஹ்வை அறிவார்ந்த ரீதியில் வணங்க வேண்டும் என்பதற்காகவும், எப்போதும் நீங்கள் பயன்பெறும் பொருட்டு உங்கள் கரங்களில் தவழ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான கேள்விகளைத் தேர்வு செய்து ஒன்று திரட்டி தந்துள்ளோம். அல்லாஹ் இப்பணியை பொருந்திக் கொள்வானாக!
குறிப்பு : இந்தப் புத்தகத்தை முதல் தடவையாக வாசிக்கும் ஒருவருக்கு சில கேள்விகள் பல தடவைகள் இடம்பெற்றிப்பதாக தோன்றலாம். ஆனால் ஆழமாக அக்கேள்விகள் குறித்து சிந்திப்பின் அதன் பதில்களில் மேலதிக பயன்கள் உள்ளடங்கியுள்ளது என்பதை கண்டு கொள்வர். இதன் காரணமாக அவ்வாறான கேள்விகளை பல தடவைகள் குறிப்பிட்டுள்ளோம் என்பதை கருத்திற் கொள்ளவும்.
இறுதியாக எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் அவர்களின் அனைத்து தோழர்களின் மீதும் அல்லாஹ்வின் ஸலாவத்தும் ஸலாமும் உண்டவதாக!.
தொழுகை மற்றும் நோன்புடன் தொடர்பான மாதவிடாய் பற்றிய சில சட்டங்கள்
பஜ்ர்ருக்குப் பின் ஒரு பெண் தூய்மையாகி விட்டால், அவள் அந்த நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருந்து அந்நாளில் நோன்பு நோற்க வேண்டுமா? அவ்வாறு நோன்பிருந்த அந்நாளை நோன்பு நோற்ற நாளாக கருதுவதா? அல்லது அந்த நாளை அவள் கழாச் செய்ய வேண்டுமா?
பதில் : பஜ்ர்உதயத்துக்குப் பின் ஒரு பெண் தூய்மையாகிவிட்டால் அந்நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது குறித்து அறிஞர்களிடத்தில் இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன :
முதலாவது நிலைப்பாடு : அந்நாளில் எஞ்சிய பகுதியில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருக்க வேண்டும். ஆனால் அது நோன்பாகக் கருதப்பட மாட்டாது. அந்நாளை கழாச்செய்வது கட்டாயமாகும். இதுவே இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களது மத்ஹபின் பிரபல்யமான கருத்தாகும்.
இரண்டாவது நிலைப்பாடு: அந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது கடைமையல்ல. அதாவது அந்நாளின் ஆரம்பத்தில் அவள் மாதவிடாய் நிலையில் இருந்தமை மற்றும் நோன்பு நோற்பதற்கு தகுதிபெற்றவர்களில் அவள் இல்லாதிருந்தமை இதற்காண காரணங்களாகும். மேலும் அந்த நாளில் நோன்பு நோற்பது நிறைவேறாது என்றிருப்பதால்; அதில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. அவள் இருக்கும் அக்காலப்பகுதியானது அவளுக்கு கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய உகந்த காலப்பகுதியுமல்ல. மாறாக மாதவிடாய் காலப்பகுதியில் அவள் பகலில் நோன்பு நோற்காது இருக்க வேண்டும் என்ற கட்டளையிருக்கும் வேளை அதில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது தடைசெய்யப்பட்ட விடயமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் நோன்பு என்பது பஜ்ர் உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களை தவிர்த்து இருப்பதன் மூலம் அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதைக் குறிக்கும்.
இதனடிப்படையில் நீங்கள் அவதானித்தது போன்று அந்நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது அவசியமென்ற கூற்றை விட இந்த இரண்டாவது கருத்தே மிகப்பொருத்தமான கருத்தாகும். அதே வேளை மேற்குறிப்பிடப்பட்ட இரு நிலைப்பாட்டிலும் அந்த நாளை மீண்டும் கழாச் செய்யவேண்டும் என்று குறிபபிடப்பட்டிருப்பது அவதானாத்திற்குரியது.
ஒரு பெண் மாதவிடாயிலிருந்து பஜ்ர் தொழுகைக்கு முன் சுத்தமாகி; பின் பஜ்ருக்குப் பின் குளித்து அத்தொழுகையை நிறைவேற்றி; நோன்பையும் நோற்றால் அந்த நோன்பு நிறைவேறுமா? அதனை மீண்டும் கழாச் செய்வது அவசியமா?
ரமழான் மாதத்தில் பஜ்ர் உதயத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னராயினும் ஒரு பெண் சுத்தமாகிவிட்டதை உறுதி கொண்டால் அன்றைய நோன்பை நோற்பது அவளின் மீது கடமையாகும். அவ்வாறு அவள் நோற்ற நோன்பு நிறைவேறும். அவள் சுத்தமாக இருக்கும் நிலையில் நோன்பு நோற்றதினால் அதனை கழாச்செய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதே போன்று பஜ்ர் உதயத்தின் பின் குளித்தாலும் அவளின் மீது எவ்விதக் குற்றமுமில்லை. இது ஒரு ஆணுக்கு கனவில் அல்லது குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டதினால் ஜனாபத் ஏற்படுதல் போன்ற நிலையை ஒத்ததாகும். இவ்வாறனவர் பஜ்ருக்கு முன் ஸஹர் உணவு உண்டு நோன்பு நோற்று, பஜ்ருக்குப் பின் குளித்தாலும் அவனின் நோன்பு நிறைவேறிவிடும்
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை உணர்த்த விரும்புகிறேன் . அதாவது சில பெண்கள் மாலையில் நோன்பு திறந்து இஷாத் தொழுகையை தொழ முன்னர் மாதவிடாய் ஏற்பட்டால் அந்நாள் நோன்பு நிறைவேறாது என்று கருதுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமோ அடிப்படையோ கிடையாது. மாறாக சூரியன் மறைந்த பிறகு ஒரு நிமிடத்திற்குள் மாதவிடாய் ஏற்பட்டாலும் அத்தினத்தில் நோற்ற நோன்பு பரிபூரணமாக நிறைவேறிவிடும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாற்பது நாற்களுக்கு முன் தூய்மையாகிவிட்ட பிரசவ இரத்தப் போக்குள்ள (நிபாஸ்) பெண் மீது நோன்பு,தொழுகை போன்றவை கடமையாகுமா?
ஆம் நிபாஸுடைய பெண் நாற்பது நாட்களுக்கு முன் தூய்மை அடைந்து விட்டால் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும், தொழுவதும் அவளின் மீது கடமையாகும். அத்துடன் தனது கணவுடன் உடலுறவு கொள்ளவும் முடியும். ஏனெனில் அவள் சுத்தமானவளாக இருப்பதால் நோன்பு நோற்றல் தொழுகையை நிறைவேற்றல் உடலுறவு கொள்ளுதல் போன்றவற்றை தடுக்கக் கூடிய எவ்விதக் காரணங்களும் கிடையாது.
ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் காலம் எட்டு நாட்கள் அல்லது ஏழு நாட்களாக இருந்து, பின்னர் ஓரிரு தடவைகள் அல்லது பல தடவைகளுக்கு அதிகமாக இரத்தப்போக்கு நீடித்தால் அதன் சட்ட நிலை யாது?
ஒரு பெண்ணின் மாதவிடாய் கால அளவு ஆறு நாட்கள் அல்லது ஏழு நாட்களாக இருந்து, பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதி நீண்டு சென்று எட்டு நாட்கள் அல்லது ஓன்பது நாட்கள் அல்லது பத்து நாட்கள் அல்லது பதினொரு நாட்கள் என்று நீண்டுவிட்டால் அவள் தூய்மையாகும் வரை அவள் தொழாது இருப்பாள். இதற்கான காரணம் மாதவிடாய்க்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கால எல்லையொன்றை விதிக்கவில்லை என்பதினாலாகும். அல்லாஹ் இது குறித்து குறிப்பிடுகையில் "அவர்கள் மாதவிடாய் குறித்து உம்மிடம் கேட்கின்றனர் அதற்கு நபியே அது உபாதை எனக் கூறுவீராக". (அல் பகரா : 222) இந்த உதிரப்போக்கு இருக்கும் போதெல்லாம் ஒரு பெண் அதிலிருந்து தூய்மையாகும் வரையில் மாதவிடாய் நிலையிலேயே இருக்கிறாள். பின் அவள் தூய்மையடைந்ததும் குளித்து தொழுகையை நிறைவேற்றுவாள். அத்துடன் இரண்டாவது மாதத்தில் முன்னைய மாதத்தை விடக் குறைவான காலப்பகுதியில் தூய்மையாகிவிட்டால் அப்பொழுது அவள் குளித்து கடமைகளை நிறைவேற்றுவாள். முந்தைய மாதத்தின் அளவிற்கு இல்லாவிட்டாலும் சரியே.
முக்கிய விடயம் என்னவென்றால் ஒரு பெண் மாதவிடாயில் இருக்கும் காலமெல்லாம் அவள் தொழமுடியாது. அவளின் மாதவிடாய் காலப்பகுதி முன்னைய மாதத்துடன் ஒத்துப்போனாலும் அல்லது அதிகமாகவோ அல்லது குறைவானதாகவோ இருந்தாலும் சரியே. அதாவது அவள் தூய்மையடைந்து விட்டால் அவளுக்கு தொழ வேண்டும்.
நிபாஸுடைய ஒரு பெண் நாற்பது நாட்கள் தொழாமலும் நோன்பு நோற்காமலும் இருக்க வேண்டுமா? அல்லது உதிரப்போக்கு நின்று விடுவதையா கருத்திற் கொள்ள வேண்டும்? நிபாஸுடைய நிலையிலிருந்து சுத்தமாகுவதற்குரிய குறைந்த காலம் என்ன?
நிபாஸுடைய பெண்களுக்கு குறிப்பிட்ட கால எல்லை கிடையாது. அவள் நிபாஸுடைய இரத்தத்தை கண்டுகொண்டு இருக்கும் காலப்பகுதியில் தொழுகை நோன்பு தனது கணவுடன் உடலுறவு கொள்ளுதல் போன்ற விடயங்கிலிருந்து ஒதுங்கியிருப்பாள்.
அவள் குறிப்பிட்ட நாற்பது நாட்களுக்கு முன்னர், அதாவது பத்து அல்லது ஐந்து நாட்கள் மாத்திரம் நிபாஸுடைய நிலையில் இருந்து தூய்மை அடைந்து விட்டாலும் அவள் தொழ வேண்டும், நோன்பு நோற்க வேண்டும். கணவனுடன் உடலுறவு கொள்ளவும் முடியும், அதில் குற்றமேதுமில்லை.
நிபாஸ் என்பது உடற்கூறுகளுடன் சம்பந்தமான உணரத்தக்க ஒரு விடயம். அதன் சட்டதிட்டங்கள் ஒரு பெண் நிபாஸ் நிலையில் இருப்பதும் அல்லது இல்லாதிருப்பதும் போன்ற விடயங்களுடன் தொடர்புடையது. எப்போது அவள் நிபாஸுடையவளாக இருக்கிறாளோ அதற்குரிய சட்ட ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும். அவள் தூய்மையடைந்து விட்டால் அந்த சட்டங்களிலிருந்து விடுபடுகிறாள்.
இருப்பினும் அறுபது நாட்களுக்கு மேல் ஒரு பெண்ணுக்கு இரத்தம் வெளியானால் அப்பொழுது அவள் இஸ்திஹாழா (தொடர் உதிரப் போக்கு) என்ற நிலைக்கு ஆளாகிறாள். இந்நிலையில் அவளின் வழமையான ஹய்ழுக்குரிய நாட்களில் மாத்திரம் தொழுகை நோன்பு போன்ற தடுக்கப்பட்ட விடயங்களை செய்யாது இருந்துவிட்டு பின்னர் குளித்து, தொழ வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு ரமழான் காலத்தின் பகலில் இலேசாக இரத்தம் துளிகள் வடிந்து, இதே நிலை ரமழான் மாதம் முழுவதுமாக தொடர்ந்து இருந்து, இதனைப் பொருட்படுத்தாது அவள் நோன்பு நோற்றாள். அவளின் நோன்பு நிறைவேறுமா?
அவளின் நோன்பு நிறைவேறும்; இவ்வாறு வடியும் இரத்தத் துளிகளினால் எந்த பாதிப்பும் கிடையாது. ஏனெனில் அவை உடற்கூறு சார்ந்த விடயமாகும். இது குறித்து அலி (ரழி) அவர்கள் குறிப்பிடுகையில் ஒரு பெண்ணுக்கு சொட்டு சொட்டாக இரத்தம் வடிவது மூக்கிலிருந்து வடியும் சளியைப் போன்றாகும். அது ஹைழாக கணக்கிடப்படுவதில்லை.
மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்லது பிரசவத்துக்குள்ளான பெண் பஜ்ருக்கு முன் தூய்மையடைந்து நோன்பு நோற்று, பஜ்ருக்கு பின் குளித்தால் அவளின் நோன்பின் நிலை யாது? அந்த நோன்பு நிறைவேறுமா? நிறைவேறாதா?
மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்லது பிரசவத்துக்குள்ளான பெண் பஜ்ருக்கு முன் தூய்மையடைந்து நோன்பு நோற்றதன் பின்; குளித்தால் அவளின் நோன்பு நிறைவேறும். அவள் நோன்பாளிகளுள் ஒருவளாவாள். இந்நிலை பெருந்தொடக்கை ஒத்த நிலையாகும். ஒருவர் பெருந்தொடக்கு நிலையில் பஜ்ருக்கு முன் எழுந்து நோன்பு நோற்றால் அவரின் நோன்பும் நிறைவேறும். இதற்கு ஆதாரமாக பின்வரும் திருவசனம் காணப்படுகிறது: ''இப்போது முதல் (நோன்பு ) கால இரவில் உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். இன்னும் பஜ்ர் நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு) என்ற கருப்பு நூலிளிருந்து தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள்". (அல் பகரா: 187) பஜ்ர் தெளிவாகும் வரையில் உடலுறவு கொள்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்திருப்பதானது, பஜ்ர் உதயத்தின் பின் குளித்தல் செயற்பாடு நிகழும் என்பதை காட்டுகிறது. இதனடிப்படையில் மாதவிடாய் மற்றும் பிரசவப் பெண்கள் பஜ்ருக்கு முன் சுத்தமாகினால் நோன்பு நோற்றதன் பின் குளிப்பது அனுமதிக்கப்பட்டதே. இதற்கு ஆதாரமாக ஆஇஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸும் அமைந்துள்ளது. 'நபி (ஸல்) அவர்கள் குடும்பவாழ்க்கையில் ஈடுபட்ட நிலையில் நோன்பு நோற்றவர்களாக அதிகாலையை அடைவார்கள். அதாவது ஸுப்ஹின் உதயத்தின் பின்னரே பெருந்தொடக்குக்காக நபி (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் வேளை மாதவிடாய் வருவதாக உணர்கிறாள். ஆனால் சூரியன் மறைய முன் அது வெளிவரவில்லை அல்லது வழமையான மாதவிடாய் வலியை உணர்கிறாள் என்றாள் அந்நாளிள் அவள் நோற்ற நோன்பின் நிலை யாது ? அதனை கழாச்செய்ய வேண்டுமா?
தூய்மையான நிலையில் நோன்பு நோற்ற ஒரு பெண் மாதவிடாய் நிலைக்கு மாறுவதை உணர்ந்து சூரியன் மறைய முன் அது வெளிவரவில்லை என்றிருந்தால், அல்லது அப்போது வழமையான மாதவிடாய் வலியை உணர்கிறாள் என்றிருந்தால், அந்நாளிள் அவள் நோற்ற நோன்பு நிறைவேறும். அந்த நோன்பு பர்ழான நோன்பாக இருந்தால் அதனை கழாச்செய்ய வேண்டியதில்லை. அந்நோன்பு நப்லான-(ஸுன்னத்தான) நோன்பாக இருந்தால் அவளுக்கு கூலி கிடைக்கும்.
ஒரு பெண் இரத்தத்தைக் கண்கிறாள். ஆனால் அது மாதவிடாய் இரத்தம் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் அந்நாளில் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?
அந்நாளில் நோற்க முடியும். அந்த நோன்பு நிறைவேறும். காரணம் மாதவிடாய் என்பது தெளிவாக தெரியும் வரையில் வெளியேறும் இரத்தம் மாதவிடாயில்லை என்பதே அடிப்படையாகும்.
சில சமயங்களில், ஒரு பெண்ணுக்கு இரத்தத்தின் சிறிய தடயத்தையோ அல்லது மிகக் குறைவான சில துளிகளையோ தனது ஆடையில் பட்டிருப்பதை ஒரு நாளின் சிலநேரங்களில் அவள் காண்பதாக வைத்துக்கொள்வோம். அல்லது அவளின் வழமையான மாதவிடாய் நேரத்தில் அது வந்திருக்காத நிலையில் இவ்வாறு காண்பதாக வைத்துக்கொள்வோம், அல்லது அவளின் வழமையாக மாதவிடாய் வராத நேரத்தில் காண்பதாக வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவள் நோன்பு இருப்பதற்கான தீர்ப்பு என்ன?
இதுபோன்ற கேள்விக்கான விடை ஏற்கனவே குறிப்பிடப்பட்டு விட்டது. என்றாலும் அந்த சிறு துளிகள் அவளின் வழமையான மாதவிடாய் காலப்பகுதியில் கண்டால் அது மாதவிடாயாக கருதப்படும்.எனவே அது மாதவிடாயாகும்.
மாதவிடாய் மற்றும், நிபாஸுடைய பெண்கள் ரமழான் மாதத்தில் சாப்பிடவும் குடிக்கவும் முடியுமா?
ஆம், அவர்களுக்கு உண்ணுவதற்கும் பருகுவதற்கும் அனுமதி உள்ளது. வீட்டில் சிறார்கள் எவராவது இருந்தால் இரகசியமாக இதனைச் செய்வதே பொருத்தமாகும். இல்லையெனில் இது அவர்களிடத்தில் பிரச்சினையைத் தோற்றுவிக்கும்.
மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்லது நிபாஸுடைய பெண் அஸர் நேரத்தில் தூய்மை அடைந்தாள், அஸருடன் லுஹரையும் தொழ வேண்டுமா? அல்லது அஸர் தொழுகையை மாத்திரம் நிறைவேற்றினால் போதுமாகுமா?
அஸர் தொழுகையை மாத்திரம் தொழுவதுதான் இந்த சட்டப்பிரச்சினையின் வலுவான முடிவாகும். அத்துடன் லுஹர் தொழுவதை வலியுறுத்தும் எந்த ஆதரமும் இல்லாமையும், பொறுப்பிலிருந்து விடுபடுதல் அடிப்படையாகும் என்ற சட்டவாக்க விதியும் இதற்கான காரணமாக அமைவதுடன் மேலும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : "சூரியன் மறைய முன் யார் அஸர்தொழுகையின் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார்". இந்த ஹதீஸில் லுஹரை அடைந்து கொண்டார் என்று அவர்கள் குறிப்பிடவில்லை. அத்துடன் லுஹர் தொழுகை அப்பெண்கள் மீது கடமையென்றிருந்தால் அதனை நபியவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள். மேலும் லுஹர் தொழுகைக்கான நேரம் வந்ததன் பின் அந்தப்பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அஸர் தொழுகையைத் தவிர லுஹரைத் தொழவேண்டும் என்ற கட்டாயமில்லை. அத்துடன் லுஹர் தொழுகையானது அஸருடன் சேர்த்துத் தொழும் தொழுகையாகும். இங்கே கேட்கப்பட்ட கேள்வியைப் பொருத்தவரை அஸர்தொழுகை ப்பற்றியதாகும்.
இவ்வடிப்படையில் அஸர் தொழுகையை மாத்திரம் தொழுவதே கட்டாயமாகும் என்பதே மிகச்சரியான கருத்தாகும். இதனைதான் ஸுன்னாவின் ஆதாரமும் கியாஸ் எனும் துணை ஆதாரமும் காட்டும் விடயமாகும். இதே நிலைதான் ஒரு பெண் இஷாவின் நேரம் கழிவதற்கு முன் தூய்மையடைந்தாலும் அவள் இஷாவை மாத்திரம் தொழவேண்டுமே தவிர மஃரிபை தொழ வேண்டிய அவசியமில்லை.
சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. இந்த விடயமானது பின்வரும் நிலைகளைக் கொண்டுள்ளது. ஒன்று சிசு உருவாகுவதற்கு முன் கருச்சிதைவு ஏற்படுதல்; அல்லது அதன் உருவாக்கத்திற்குப் பின் அல்லது அதற்கான அடையாளங்கள் தென்பட்டதன் பின் கருச்சிதைவு ஏற்படுதல். இவ்வாறு அவள் கருச்சிதைவு ஏற்பட்ட அந்நாளில் நோன்பு நோற்பதன் சட்டத்தையும், இரத்தப்போக்கு காணப்படும் நாட்களில் நோன்பு நோற்பதன் சட்டத்தையும் குறிப்பிடுக.
சிசு உருவாவதற்கு முன் வெளிவரும் இரத்தமானது அது பிரசவத்தின் விளைவாக வெளிப்படும் இரத்தமல்ல. அதனால் அவளுக்கு நோன்பு நோற்கவும் தொழவும் முடியும்.
அதே போல் கரு தோற்றத்தைப் பெற்ற நிலையில் இருந்தால் அது நிபாஸுடைய இரத்தமாகும். அதனால் அவளுக்கு தொழவோ நோன்பு நோற்கவோ முடியாது.
இந்த சட்டப்பிரச்சினைக்கு விதி அல்லது வரையரை என்னவென்றால், கருவானது தோற்றத்தைப் பெற்றால் அந்த இரத்தமானது நிஃபாஸ் என்றும், அக்கருவானது தோற்றத்தைப் பெறாவிட்டால் அந்த இரத்தம் நிஃபாஸ் அல்ல என்பதுமாகும். குறிப்பிட்ட இரத்தமானது பிரசவ இரத்தம் நிபாஸாக இருந்தால் நிபாஸுடைய பெண்களுக்கு தடைசெய்யப்பட்டடவை அனைத்தும் இவ்வாறான நிலையில் உள்ள கர்ப்பிணிக்கும் தடைசெய்யய்பட்டதாகும். அவ்வாறு இல்லையெனில் அவளுக்கு நோன்பு போன்ற வணக்கங்களை செய்வதில் எந்தத் தடையும் இல்லை.
ரமழான் நாட்களில் பகலில் ஒரு கர்ப்பிணிக்கு இரத்தம் வெளியாவது, அவளின் நோன்பில் தாக்கம் செலுத்துமா?
நோன்பு நோற்ற நிலையில் இருந்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவளின் நோன்பு முறிந்து விடும். இதற்கு பின்வரும் நபி (ஸல்) அவர்களின் கூற்று ஆதாரமாக அமைகிறது : "ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதும் நோன்பு நோற்பதும் கூடாதல்லவா?". இதனால் மாதவிடாயை நோன்பை முறித்துவிடும் விடயங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறோம். நிபாஸும் இவ்வாறுதான். அதாவது மாதவிடாய் மற்றும் நிபாஸ் பிள்ளைபேரின்போது வெளிப்படும் இரத்தம் நோன்பை முறிக்கக்கக் கூடியவைகளாகும்.
ரமழானில் பகல் நேரத்தில் ஒரு கர்ப்பிணியிடமிருந்து வெளிப்படும் இரத்தமானது சாதாரண நிலையில் உள்ள பெண்ணின் மாதவிடாயை ஒத்ததாக இருந்தால் கர்ப்பிணியின் நோன்பில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லாது விட்டால் அது எந்தத்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டாது.
மாதவிடாயானது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவள் கருவுற்றது முதல் மாதாவிடாய் தொடராக ஏற்பட முடியும். அதாவது ஒவ்வொரு மாதமும் அவளின் வழமையான நேரத்தில் மாதவிடாய் ஏற்படுதல். இவ்வாறு மாதாந்தம் அவளின் வழமையான நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் அது மாதவிடாயகும் என்பதே மிகச்சரியான கருத்தாகும். அந்நேரத்தில் அவள் மாதவிடாய் சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
கர்ப்பிணியைப் பொருத்தவரை அவளின் இரத்தம் நின்று, வழமையான மாதவிடாய் இல்லாத நிலையில் அவள் இரத்தத்தைக் கண்டால் அவளின் நோன்பில் அது தாக்கம் செலுத்தாது .
ஒரு பெண் அவளின் வழமையான மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் சுத்தமற்ற நிலையிலும் அடுத்த நாள் சுத்தமான நிலைமையிலும் இருந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்?
அவ்வாறு குறிப்பிட்ட நேரம் அசுத்த நிலையிலிருந்து தூய்மை ஏற்படுவது அவளின் வழமையான மாதவிடாய் காலத்தில் நிகழ்ந்தால் அது மாதவிடாயாகக் கொள்ளப்படுமே தவிர மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததாகக் கருதப்படமாட்டாது என்பதே சரியான நிலைப்பாடாகும். இதனடிப்படையில் அவள் மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்களை தவிர்ந்து நடக்க வேண்டும்.
சில அறிஞர்கள் : ஒரு பெண் ஒரு தினம் சுத்தமற்ற நிலையிலும் இன்னொரு தினம் சுத்தமான நிலையிலும் காணப்பட்டால் அசுத்தமான நிலை மாதவிடாயாகவும் தூய்மையான நிலை மாதவிடாய் அற்ற சுத்தமான நிலையையும் குறிக்கும். இந்நிலை பதினைந்து நட்கள் வரைக்குமாகும். இந்நிலையானது பதினைந்து நாட்கள் தாண்டிச் சென்றால்; அது இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) நிலையாகக் கருதப்படும். இது இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் மத்ஹபின் பிரபல்யமான –ஏற்றுக்கொள்ளப்பட்ட- கருத்தாகும்
தூய்மையடைவதற்குற்கு முன், மாதவிடாயின் கடைசி நாட்களில், இரத்தத்தின் அடையாளம் ஏதும் இல்லாதிருந்து, வெள்ளைப்படுதலும் இல்லாதிருந்தால் அவள் அந்த நாள் நோன்பிருக்க வேண்டுமா? அல்லது அவள் என்ன செய்ய வேண்டும்?
வழமையில் பெண்களின் மாதவிடாய் காலப்பகுதி முடிந்ததும் அவர்களின் சில பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்படுவதில்லை. அவ்வாறான நிலையில் உள்ளோர் நோன்பு நோற்க முடியும். அவ்வாறு வெள்ளைப்படுதல் வழமையில் ஏற்படும் நிலை இருந்தால் அவள் அதனைக் காணும் வரை அவளுக்கு நோன்பு நோற்க முடியாது.
மாதவிடாய் மற்றும் நிபாஸுடைய நிலையிலுள்ள பெண்கள் அவள் ஒரு மாணவியாகவோ அல்லது ஆசிரியையாகவோ இருந்து அவசியமான சந்தர்ப்பங்களில் அல் குர்ஆனை மனனம் செய்தல் மற்றும் பார்த்து ஓதுதல் போன்றவற்றின் தீர்ப்பு என்ன?
மாதவிடாய் மற்றும் நிபாஸுடைய நிலையிலுள்ள பெண்கள் ஆசிரியையாக இருந்தால், கற்றலில் ஈடுபடும் ஓரு மாணவி என்ற அடிப்படையில் இரவிலும் பகலிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஓத வேண்டும் என்ற நிலை இருப்பின் அல்குர்ஆனை தேவைக்காக மாத்திரம் ஓத முடியும். அதில் தவறு எதுவும் கிடையாது.
ஆனால் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கிலும், வணக்கவழிபாடுகளில் ஈடுபடுதல் என்ற அடிப்படையிலும் இக்காலப்பகுதியில் ஓதுவதைப் பொருத்தவரை அவ்வாறு செய்யாதிருப்பது மிகவும் சிறப்பான விடயமாகும். காரணம் அதிகமான இஸ்லாமியசட்ட அறிஞர்கள் மாதவிடாய் பெண்கள் அல்குர்ஆன் ஓதுவதை அனுமதிக்கவில்லை.
மாதவிடாய் ஏற்பட்ட பெண் அவள் தூய்மையானதும் தனது ஆடையில் அசுத்தமோ அல்லது இரத்தமோ படாத நிலையில் அதனை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமா?
அவளது ஆடையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. காரணம் மாதவிடாய் மேனியை அசுத்தப்படுத்திடாது. மாறாக அதன் இரத்தம் எதில் பட்டுவிடுகிறதோ அது அசுத்தமாகிவிடுகிறது. இதனால் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் ஆடைகளில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதனைத் துவைத்துக் கழுவி அந்த ஆடைகளை அணிந்து தொழுமாறு பெண்களுக்கு கட்டளையிட்டார்கள்.
ஒரு பெண் ரமழான் மாதத்தில் அவள் நிபாஸுடையவளாக இருந்ததினால் ஏழு நாட்கள் நோன்பு நோற்காதிருந்து அடுத்த வருடம் இரண்டாம் ரமழான் வந்தும் அதனை கழாச் செய்யவில்லை. இரண்டாம் ரமழானின் போது அவள் குழந்தைக்கு பாலுட்டுபவளாக இருந்ததினால் ஏழு நாட்கள் நோன்பு நோற்காது இருந்து அவளுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அதனையும் அவள் கழாச் செய்யவில்லை. இந்நிலையில் மூன்றாம் வருட நோன்பும் நெருங்கிவிட்டது இந்நிலையில் அவள் என்ன செய்யவேண்டும் என்பதை அறியத்தருமாறு வேண்டுகிறேன், அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி நல்குவானாக!
நீங்கள் குறிப்பிட்டது போல் குறித்த பெண் நோய்வாய்ப்பட்டிருந்து அவற்றை கழாச்செய்வதற்கு முடியவில்லையென்றிருந்தால் அவளுக்கு முடியுமானபோது அதனை கழாச்செய்து கொள்ள அனுமதியுள்ளது. அதாவது இரண்டாம் ரமழான் வந்தாலும் நியாயமான காரணங்கள் இருப்பதால் அவற்றை கழாச்செய்ய முடியும்.
ஆனால் எந்தக் நியாயமான காரணமுமின்றி, சாட்டுக்கள் கூறி அலட்சியமாக நோன்பு நோற்காது இருந்திருந்தால் அதனை இரண்டாம் ரமழான் வரை கழாச்செய்யாது இருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. இது குறித்து ஆஇஷா (ரழி) குறிப்பிடுகையில் எனக்கு விடுபட்ட நோன்புகள் இருக்கும். அவற்றை ஷஃபான் மாதத்தில்தான் கழாச்செய்வேன் என்கிறார்கள்.
இதன்படி இந்தப்பெண் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் இவள் காரணங்கள் ஏதுமின்றி நோன்பை விட்டிருந்தால் அவள் பாவியாவாள். அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா இறைஞ்சுவதுடன் அவளின் பொறுப்பில் உள்ள நோன்புகளை நோற்பதற்கு முயற்சிக்க வேண்டும். மேலும் நியாயமான காரணங்களுக்காக நோன்பை விட்டிருந்தால் அதனை கழாச் செய்வதற்கு ஒருவருடமல்ல இரண்டு வருடங்கள் தாமதமானாலும் அவளின் மீது எவ்விதக்குற்றமுமில்லை.
சில பெண்கள் இரண்டாம் ரமழான் வந்தும் முன்னைய ரமழானில் விட்ட நோன்புகளை நோற்காது இருக்கிறார்கள். இவ்வாறானோர் என்ன செய்ய வேண்டும் ? இவர்கள் மீதுள்ள கடமை என்ன?
இவ்வாறானோர் தங்களது செயலுக்காக அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) கோர வேண்டும். எவ்விதக் காரணங்களுமின்றி இரண்டாம் ரமழான் வரும் வரையில் கழாச்செய்யாது பிற்படுத்துவது கூடாது. இதற்கு ஆதாரமாக ஆஇஷா (ரழி) அவர்களின் ஹதீஸ் காணப்படுகிறது. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். எனக்கு விடுபட்ட நோன்புகள் இருக்கும். அவற்றை ஷஃபான் மாதத்தில்தான் கழாச்செய்வேன் என்கிறார்கள்.
இந்த ஹதீஸானது விட்ட நோன்புகளை இரண்டாம் ரமழான் வரும்வரையில் பிற்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. என்றாலும் அவள் பிற்படுத்தியமைக்காக தவ்பா (பாவமன்னிப்புக்) கோருவதும் இரண்டாம் ரமழான் முடிந்ததும் அவற்றைக் கழாச்செய்வதும் அவளின் மீதுள்ள கடமையாகும்.
உதாராணத்திற்கு , ஒரு பெண்; லுஹர் நேரத் தொழுகையை நிறைவேற்றாத நிலையில் லுஹர் நேரம் ஒரு மணியளவில் அவளுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் அவள் தூய்மையடைந்ததன் பின் அந்த லுஹர் நேரத் தொழுகையை கழாச்செய்ய வேண்டுமா?
இது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு உண்டு. அவர்களில் சிலர்: குறித்த பெண் எல்லை மீறி நடக்காததினாலும் தொழுகையை அதன் இறுதி நேரம் வரையில் பிற்படுத்தி தொழுவதற்கான அனுமதி உண்டு என்பதினாலும் அதனை கழாச்செய்வது அவசியமில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் சில அறிஞர்கள் நபியவர்களின் பொதுவான கூற்றின் பிரகாரம் அந்தத் தொழுகையை கழாச்செய்வது கட்டாயமாகும். என்கின்றனர். அந்தக் கூற்று பின்வருமாறு : யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை முழுமையாக அடைந்து கொண்டவராவார்'.
பேணுதலின் அடிப்படையில், கழாச் செய்ய வேண்டியது ஒரு நேரத் தொழுகையாக இருப்பதினாலும் அதனைக் கழாச்செய்வதில் சிரம் ஏற்படப்போவதில்லை என்பதினாலும் அதனை கழாச்செய்வதே பொருத்தமாகும்.
ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் இரத்தம் வெளிவருவதைகக் கண்டால் அவள் நோன்பு நோற்பதையும் தொழுகையையும் அதற்காக நிறுத்திவிட வேண்டுமா? அல்லது அவள் என்ன செய்ய வேண்டும்.?
ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் பிரசவ வலியுடன் இரத்தம் வெளிவருவதைக் கண்டால் அது நிபாஸாக கருதப்படும். அதற்காக அவள் தொழுகை மற்றும் நோன்பை விட்டுவிட வேண்டும். பிரசவ வலி இன்றி இரத்தம் வந்தால் அது மாதவிடாய் இரத்தமாகவோ அல்லது நிபாஸுடைய இரத்தமாகவோ கருதப்படமாட்டாது. ஆகவே அவளுக்கு தொழுகை மற்றும் நோன்பை நிறைவேற்றுவதற்கு தடையேதுமில்லை.
மக்களுடன் நோன்பு நோற்பதற்காக மாதவிடாய் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்வது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன?
மருத்துவர்கள் மூலம் உறுதிப்படுத்த தகவல்களின் அடிப்படையில் மாதவிடாய் தடுப்பு மாத்திரைகள் பெண்ணுக்கு தீங்கு விளைவிப்பதினால் அதனை உட்கொள்வதை நான் வன்மையாக எச்சரிக்கிறேன். பெண்களே! மாதவிடாய் என்பது அல்லாஹ் பெண்களுக்கென விதித்த ஒரு விடயம். அதனை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும் நோன்பை நிறைவேற்றுவதற்கு தடைககள் ஏதுமில்லாதிருந்தால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு தடைகள் இருந்தால் அல்லாஹ் விதித்ததை ஏற்று நோன்பு நோற்காதிருங்கள்.
நிபாஸுடைய ஒரு பெண் இரண்டு மாதங்களின் பின் தூய்மையடைந்த நிலையில், சிறிய சில இரத்தத்துளிகளை காண்கிறாள். இவ்வாறான நிலையில் உள்ள ஒரு பெண் தொழாது நோன்பை விட வேண்டுமா? அல்லது அவள் என்ன செய்ய வேண்டும்?
பெண்களின் மாத விடாய் மற்றும் நிபாஸ் (பிரசவத்தின் பின் வெளியேறும் இரத்தம்) தொடர்பான பிரச்சினைகள் கடல்போன்று எல்லையற்றவை. கருத்தடை மாத்திரைகள், மாதவிடாய் தடுப்பு மாத்திரைகள் போன்றவற்றை உபயோகிப்பது இதற்கான காரணங்களுள் சிலவாகும். இது போன்ற பிரச்சினைகளை மக்கள் இதற்கு முன் அறிந்திருக்கவுமில்லை. பெண்கள் தொடர்பான இந்தப் பிரச்சினைகள் நபியவர்கள் காலம் தொட்டும், ஏன் பெண்கள் இவ்வுலகில் தோன்றியது முதல் தொடர்ந்து இருந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மையான விடயமாகும். இருப்பினும், ஒரு நபர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவைகள் குழப்பமடையும் வகையில் அதிகமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
என்றாலும் ஒரு பொதுவான விதி உண்டு: அதாவது ஒரு பெண் தூய்மையாகி, மாதவிடாய் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு அவள் தூய்மையடைந்ததை உறுதியாக கண்டு -( இங்கு நான் தூய்மையாகுதல் என்பதன் மூலம் நாடுவது மாதவிடாய் காலத்தில் வெள்ளை நீர் வெளியேற்றத்தின் பின்னுள்ள தூய்மை என்ற விடயத்தைக் கருத்திற் கொள்ளவும்:) – அதன் பின் ஏற்படும் பழுப்பு நிறம் -கலங்கள் நிறம்- , மஞ்சள், அல்லது சில புள்ளிகள், அல்லது ஈரம், ஆகியவை அனைத்தும் மாதவிடாய் அல்ல. எனவே அதன் காரணமாக அவை தொழுதல், நோன்பு நோற்றல், ஒரு மனிதன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் பேன்றவற்றை தடுக்கமாட்டாது, மாத விடாய் அல்லாத நாட்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும், ஒரு வகை மண்ணிர இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்ள் கருதுவதில்லை என உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புஹாரி. அபூதாவூதில் சுத்தமாகியதன் பின் என்ற வாசகம் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது அதன் அறிவிப்பாளர் தொடரும் ஸஹீஹாகும்-
இதன் படி ஒரு பெண் உறுதியாக சுத்தம் ஏற்பட்டதை உணர்ந்ததன் பின் ஏற்படும் எந்த விடயமும் அவளை பாதிக்கமாட்டாது. ஆகையால் அவளுக்கு தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் குடும்பவாழ்க்கையில் ஈடுபடுவதற்கும் அனுமதியுண்டு. என்றாலும் இந்த விவகாரத்தில் சுத்தம் அடைந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை அவசரப்படாது இருப்பது அவசியமாகும். ஏனெனில் சில பெண்கள் இரத்தம் வராது நின்று விட்டால் முழுமையாக தூய்மையடைவதைக் காண முன்னர் உடனே குளிப்பதற்கு ஆயத்தமாகி விடுகின்றனர். இது தவறான நடைமுறையாகும். இதனால்தான் ஸஹாபா பெண்களில் சிலர் ஆயிஷா (ரழி) அவர்களிடம் இரத்தம் தோய்ந்த பஞ்சை அனுப்பி தூய்மை அடைதலை உறுதிப்படுத்திக்கொள்பவர்களாக இருந்தனர். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் வெள்ளை நீர் வெளிப்படுவததை காணும்வரையில் அவசரப்படாதீர்கள் என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.
சில பெண்களுக்கு மாதவிடாய் தொடர்ந்திருக்கும் வேளை சிலபோது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நின்று விட்டு மீண்டும் தொடர்ந்திருக்கும். இந்நிலையில் நோன்பு தொழுகை மற்றும் ஏனைய வணக்களில் ஈடுபடுவதன் சட்டம் என்ன?
இந்த விடயம் குறித்து அறிஞர்களிடத்தில் பல அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பின்வரும் இரண்டு நிலைப்படுகள் முக்கியமானவை : ஒன்று : ஒரு பெண்ணுக்கு வழமையான மாதவிடாய் நாட்கள் உண்டு. அந்நாட்களில் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு முடிந்து விட்டால் அவள் குளித்து சுத்தமாகி தொழுதல் நோன்பு நோற்றல் போன்ற கடமைகளை நிறைவேற்றுவாள். வழமையான மாதவிடாய் நாட்டகளின் பின் இரண்டு அல்லது மூன்று நாட்களுள் மாதவிடாய் மீண்டும் வந்தால் அது மாதவிடயாக கருதப்படமாட்டாது. அதாவது இவர்களின் கருத்துப்படி ஒரு பெண் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவதற்கான குறைந்த கால அளவு (13) பதிமூன்று நாட்களாகும். அதன் பின் இவ்வாறான நிலை ஏற்படின் அது மாதவிடாயாக கருதப்படமாட்டாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் மிகப்பிரபல்யமான நிலைப்பாடாக உள்ளது.
இரண்டாவது :சில அறிஞர்கள் எப்போது ஒரு பெண் இரத்தத்தை காண்கிறாளோ அது மாதவிடாயாகவும் எப்போது அதிலிருந்து தூய்மையடைகிறாளோ அது அவளின் சுத்தமான நிலை என்றும் கருதுகிறார்கள். அதாவது குறித்த பெண் தனது இரண்டு மாதாவிடாய் காலப்பகுதிக்கு இடையில் 13 நாட்கள் இடைவெளி இல்லாவிட்டாலும் சரியே!
ரமழான் காலங்களில் பெண்களைப் பொருத்தவரை வீட்டில் தொழுவது சிறந்ததா? அல்லது பள்ளியில் தொழுவது சிறந்ததா? குறிப்பாக பள்ளியில் உபதேச உரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் பெண்கள் பள்ளியில் தொழுவதா அல்லது வீட்டில் தொழுவதா? அதாவது பள்ளிவாயல்களில் தொழும் பெண்களுக்கான உங்கள் வழிகாட்டல் என்ன?
நபியவர்களின் பொதுவான வழிகாட்டலின் அடிப்படையில் அவள் வீட்டில் தொழுவதே மிகவும் வரவேற்கத்தக்கது. நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள் : பெண்களுக்கு அவர்களின் வீடே மிகவும் சிறந்தது' காரணம் பெண்கள் வெளியே செல்வதில் அதிகமான சந்தர்ப்பங்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. அந்த வகையில் அவள் பள்ளிக்குத் தொழுகைக்காக செல்வதைவிட வீட்டில் இருப்பதே சிறந்தது. உபதேசங்கள் வழிகாட்டல் உரைகளைப் பொருத்தவரை ஒளி நாடாக்கள் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு.
பள்ளியில் தொழும் பெண்கள் பள்ளிக்கு செல்லும் போது அலங்காரமின்றி வாசனை பூசாது பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே எனது வழிகாட்டலாகும்.
நோன்பு நோற்ற பெண் ரமழானில் பகலில் உணவை ருசி பார்ப்பதன் சட்டம் என்ன?
தேவையேற்படும் போது நோன்பாளி இவ்வாறு ருசி பார்ப்பதில் தவறேதும் கிடையாது. என்றாலும் உள்ளே விழுங்கிவிடாது ருசி பார்த்ததை துப்பிவிடவேண்டும்.
கருவுற்று ஆரம்ப நிலையில் உள்ள பெண் விபத்துக்குள்ளாகிறாள். கடுமையான இரத்தக்கசிவினால் அவளின் கரு வெளிவந்து விடுகிறது. இவ்வாறான நிலையில் நோன்பு நோற்ற பெண் நோன்பை விடுவதற்கு அனுமதி உள்ளதா? அல்லது அந்த நோன்பை தொடர வேண்டுமா? அல்லது நோன்பை விடுவதால் அவளுக்கு பாவம் கிடைக்குமா?
கருவுற்ற ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படமாட்டாது. இமாம் அஹ்மத் (ரஹ்) குறிப்பிடுவது போன்று ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதை அவளின் மாதவிடாய் நின்றதன் மூலமே தெரிந்து கொள்கிறோம். அத்துடன் சில அறிஞர்கள் குறிப்பிடுவது போன்று மாதவிடாயை ஏற்படுத்தியமைக்கான காரணம் அல்லாஹ் ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கரு முட்டை தனது தாயிடம் ஊட்டச்சத்தை –உணவை பெற்றுக்கொள்ளும் உயர் நோக்கத்திற்காகவேயாகும்;. ஆகவே கரு வளர்ச்சிடையடைவதால் மாதவிடாய் நின்றுவிடுகிறது.
என்றாலும் சில பெண்களுக்கு அவள் கருவுருவதற்கு முன் இருந்தது போன்று வழமையான மாதவிடாய் தொடர்ந்தும் ஏற்பட சில வேளை வாய்ப்புண்டு. அந்த நிலையை அவளின் வழமையான மாதவிடயாக கருதப்படும். அந்நிலையானது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இருந்தாலும் அவள் கருவுற்றிருப்பதன் காரணமாக அக்கருவில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது. ஆகவே அவள் சாதாராண நிலையில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் சட்டங்களை பேணி நடப்பாள்.
சுருக்கமாக குறிப்பிடுவதாயின் ஒரு கர்ப்பிணித்தாயிடமிருந்து வெளிவரும் இரத்தமானது இருவகைப்படும் :
ஒன்று :மாதவிடாய் என்ற சட்டத்திற்கு உட்படுபவை. அதாவது கருவுருவதற்கு முன்னிருந்தது பேன்றே கருவுற்ற பின்னரும் வழமையாக வரும் மாதவிடாயை இது குறிக்கிறது. எனவே அது மாதவிடாயாக கருதப்படும்.
இரண்டாவது : ஒரு கர்ப்பிணிக்கு விபத்தின் காரணமாகவோ, அல்லது ஒரு பாரமான பொருளை தூக்குவதனாளோ, அல்லது விழுவதினாளோ திடீரென வரும் இரத்தமானது மாதவிடாயாக மாட்டாது. அது ஏதோ ஒரு இரத்த நாலத்திலிருந்து வெளிப்படும் சாதாரண இரத்தமாகவே கருதப்படும். இதன்படி இவை எந்த வகையிலும் ஒரு கர்ப்பிணியின் தொழுகைகைக்கோ நோன்பிற்கோ தடையாக அமையாது.காரணம் அவளது நிலை நன்கு சுத்தமான ஓரு பெண்ணின் நிலையாகும்.
ஆனால், விபத்தின் காரணமாக வயிற்றில் உள்ள கரு வெளியேவந்தால், அது குறித்து அறிஞர்கள் பின்வரும் நிலைப்பாட்டைக் குறிப்பிடுகிறார்கள்: அவ்வாறு வெளியே வந்த கருவானது தெளிவான மனிதத் தோற்றம் கொண்டதாக இருந்தால், அது வெளியேறியதன் பிறகு வரக்கூடிய அவளுடைய இரத்தம் நிஃபாஸுடைய இரத்தமாக (பேறு இரத்தமாக)கருதப்படும், என்கின்றனர். அந்த சமயத்தில் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிடுவதோடு, அவள் தூய்மையாகும் வரை அவளுடைய கணவன் உடலுறவுகொள்வதைவிட்டும் விலகி இருக்க வேண்டும்.
அதே வேளை அவளிடமிருந்து வெளியாகிய கரு மனித உருவைக் கொண்டிராவிட்டால், அவளின் இரத்த வெளியேற்றம் நிஃபாஸ் (பேறு இரத்தமாக) இரத்தமாக கருதப்படமாட்டாது. மாறாக அது சிதைந்த இரத்தமாக (அதாவது மாதவிடாய் இரத்தமாகவோ நிபாஸ் இரத்தமாகவோ அல்லாது) கருதப்படுவதோடு, அது அவளுக்கு தொழுகை, நோன்பு அல்லது வேறு வணக்கவழிபாடுகளை செய்வதற்கு தடையாக அமையாது.
ஒரு கரு தோற்றத்தைப்பெருவதற்கான மிகக் குறைந்த காலம் (81) என்பத்து ஒரு நாட்கள் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனார். இதற்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : உண்மையே பேசியவரும் உண்மை படுத்தப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள் : 'நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாற்கள் இந்திரியத் துளியாகவும், அதே போன்று (40 நாற்பது நாட்கள்) கருக்கட்டியாகவும். பிறகு, அதே போன்ற காலத்தில் சதைக் கட்டியாகவும் மாற்றம் பெருகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்பி அந்த ஆன்மாவின் வாழ்வதாரத்தையும் அதன் ஆயுளையும் செயலையும் (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, பாக்கியசாலியா என்ற நான்கு விடயங்களை எழுதுமாறு அந்த வானவருக்கு கட்டளையிடப்படுகிறது'. மேலும் சில அறிஞர்கள் ஒரு கருவுக்கு உருவம் கொடுக்கப்படுவது பெரும்பாலும் (90) தொன்னூறு நாட்களுக்கு முன் நிகழ மாட்டாது என்கின்றனர்.
நான் ஒரு வருடத்திற்கு முன்பு மூன்றாவது மாதத்தில் கருச்சிதைவு அடைந்த ஒரு பெண்ணாவேன், நான் தூய்மையாகும் வரை தொழவில்லை. நான் அந்நேரத்தில் தொழுதிருக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். தொழாமல் இருந்த நாட்களின் எண்ணிக்கை குறிப்பாகத் தெரியாததால் நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு பெண்ணுக்கு மூன்று மாதத்தின் பின் கருச்சிதைவு ஏற்பட்டால் அவள் தொழுவதுகூடாது என்பதே அறிஞர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். காரணம் ஒரு பெண் மனித உருவம் தெளிவாகத் தெரியும் முதிர் கருவை வெளியேற்றினால் அவளிடம் வெளிவரும் இரத்தம் நிபாஸுடைய இரத்தமாகும். அதனால் தொழுவது கூடாது.
மேலும் ஒரு கருவின் தோற்றம் 81 நாட்கள் பூரணமடைந்ததன் பின்னரே தெளிவாகத் தெரிய முடியும். இது மூன்று மாதங்களை விடவும் குறைந்த காலப்பகுதியாகும். மூன்று மாதத்திற்குள்தான் கரு வெளியேறிவிட்டால் அதனால் ஏற்படும் இரத்தம் சிதைந்த இரத்தமாகும். இதற்காக அவள் தொழுகையை விடமாட்டாள் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அதே போன்று கேள்விகேட்ட அந்தப்பெண் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது அந்தக் கருவானது 81 நாட்களுக்கு முன் வெளியே வந்தால், அவள் தொழுகையை கழாச்செய்யவேண்டும். அதே போன்று விடுபட்ட தொழுகைக்குரிய நாட்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறியாது இருந்தால் விடுபட்ட தொழுகைகளை கணக்கிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, எத்தனை தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பது அவளது ஞாபகத்தில் இருக்கிறதோ அவற்றை கழாச்செய்வாள்.
ஒரு பெண் கேட்கின்றாள் : தனக்கு நோன்பு கடமையான காலத்திலிருந்து ரமழானில் நோன்பு நோற்கிறாள் இருப்பினும் மாதவிடாய் காலத்தில் விடுபட்ட நோன்புகளை கழாச் செய்யவில்லை. இவ்வாறு விட்ட நோன்புகளின் எண்ணிக்கையை சரியாக அறியாததினால் தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டலை எதிர்பார்க்கின்றாள்.
முஃமினான பெண்கள்; கடமையான நோன்புகளை அறியாமையினால் அல்லது அலட்சியம் காரணமாக கழாச்செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இது ஒரு சோதனையாகும். ஒரு விடயம் பற்றி அறியாது இருப்பவர்; அது குறித்து கேட்டு தெளிவு பெறுவதே அதற்குரிய தீர்வாகும். அல்லாஹ்வை பயப்படுவதும், அவன் தன்னை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இருப்பதும், அவனின் தண்டனைக்கு பயந்து வாழ்வதும் அல்லாஹ்வின் திருப்தியை பெருவதற்குரிய விடயங்களில் விரைந்து செயற்படுவதும்தான் அலட்சியத்திற்கான அருமருந்தாக காணப்படுகிறது.
ஆகவே இந்தப் பெண்ணைப் பொருத்தவரை அவள் செய்த குற்றத்திற்காக அல்லாஹ்விடம் மீண்டு பவாமீட்சி கோருவதுடன், அதிகம் இஸ்திஃபார் செய்தல் வேண்டும். அத்துடன் விட்ட நோன்புகளின் எண்ணிக்கையை முடியுமான அளவு கணக்கிட்டு அதனைக் கழாச்செய்வதால் அவளின் மீதுள்ள கடமை நீங்கிவிடுகிறது. மேலும் அவளின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நாம் அவளுக்காக பிராரத்திக்கிறோம்.
ஒரு பெண்ணுக்கு தொழுகைக்கான நேரம் நுழைந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அதன் சட்டம் என்ன? அந்தத் தொழுகையை கழாச்செய்ய வேண்டுமா? அதே போல் தொழுகையின் நேரம் முடிவதற்கு முன் சுத்தமடைந்தால் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
இந்தக் கேள்விக்கான பதில் பின்வருமாறு : முதலாவது : தொழுகையின் நேரம் வந்த பின் நிறைவேற்ற வேண்டிய தொழுகையை நிறைவேற்றாமல் இருக்கும் போது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமாகியதும் அந்தத் தொழுகையை கழாச்செய்வது கடமையாகும். இதற்கான ஆதாரமாக நபியவர்களின் கூற்று அமைகிறது: "யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை முழுமையாக அடைந்து கொண்டவராவார்". அதாவது ஒரு பெண் ஒரு ரக்அத் தொழும் அளவிற்கான நேரத்தை அடைந்து அதற்கு முன் மாதவிடாய் ஏற்பட்டு அந்தத் தொழுகையை நிறைவேற்றாது இருந்தால் அவள் சுத்தமாகியதும் அதனை கழாச்செய்வது கட்டாயமாகும்.
இரண்டாவது :தொழுகையின் நேரம் முடிவடைவதற்கு முன் சுத்தமாகிவிட்டால் அந்தத் தொழுகையை நிறைவேற்றுவது அவசியம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் ஒரு ரக்அத் தொழுமளவிற்குரிய நேரம் இருக்கையில்; ஒருவர் சுத்தமாகிவிட்டால் அவள் சுபஹ் தொழுகையை கழாவாக நிறைவேற்றுவது அவசியமாகும். அதே போல் சூரியன் மறைவதற்கு முன் ஒரு ரக்கஅத் நிறைவேற்றுமளவிற்கு நேரம் இருக்கும் போது சுத்தமாகிவிட்டால் அவள் அஸர் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும். நள்ளிரவிற்கு முன் ஒரு ரக்அத் நிறைவேற்றுமளவிற்கு நேரம் இருக்கும் போது சுத்தமாகிவிட்டால் அவள் இஷாத் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும். அதே போல் நள்ளிரவிற்குப் பின் சுத்தமாகிவிட்டால் அவள் இஷாத் தொழுவது கடமையல்ல. மாறாக அவள் சுபஹ் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். இது குறித்து அல்லாஹ் "நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் தொழுகையை முறைப்படி நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது". (அந்நிஸா:103) அதாவது தொழுகை என்ற கட்டாயக் கடமை வரையறுக்கப்பட்ட நேரத்துடன் தொடர்பானதாகும். எனவே ஒருவர் தொழுகையை அதற்குரிய நேரத்திலல்லாது நிறைவேற்றுவதோ, தொழுகையின் நேரத்திற்கு முன் நிறைவேற்றுவதோ கூடாது
நான் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டால் இந்நிலையில் நான் என்ன செய்யவேண்டும்? நான் மாதவிடாய் கால தொழுகைகளை கழாச் செய்ய வேண்டுமா?
தொழுகை நேரம் நுழைந்ததன் பிறகு மாதவிடாய் ஏற்பட்டால் - அதாவது சூரியன் நடு உச்சியைவிட்டு விலகி அரை மணி நேரத்திற்குப் பிறகு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் மாதவிடாய் இருந்து தூய்மையடைந்த பிறகு, மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் அவள் தூய்மையான நிலையில் நிறைவேற்றிக்கொண்டிருந்த அந்தத் தொழுகையை கழாச்செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்கான ஆதாரமாக பின்வரும் அல்லாஹ்வின் கூற்று அமையப் பெற்றுள்ளது : இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நிசயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரங்குறிப்பிடப்பட்ட கடமையாக உள்ளது" (அந்நிஸா :103).
மாதவிடாய் நேரத்தில் விடுபட்ட தொழுகையை நிறைவேற்றத் தேவையில்லை என்பதற்கு பின்வரும் நபி (ஸல்) அவர்களின் கூற்று ஆதாரமாக அமைகிறது : ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதும் நோன்பு நோற்பதும் கூடாதல்லவா?'. மாதவிடாய் காலப்பகுதியில் தவறிப்போன தொழுகையை கழாச்செய்யத்தேவையில்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
ஆனால் ஒரு பெண்; தூய்மையாகி குறிப்பிட்ட தொழுகைக்குரிய நேரம் ஒரு ரக்அத் அதைவிட அதிகமான ரக்அத்துக்களை நிறைவேற்றுமளவிற்கு இருந்தால் அவள் தூய்மைடைந்த நேரத்திற்குரிய தொழுகையை நிறைவேற்றவேண்டும். இதற்கு ஆதாரமாக பின்வரும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது : சூரியன் மறைய முன் யார் அஸர்தொழுகையின் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாறோ அவர் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார்'. ஒரு பெண் அஸர் நேரத்தில் அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் தூய்மையடைந்து விட்டால் அதாவது சூரியன் மறைவதற்கும் அல்லது உதிப்பதற்கும் ஒரு ரக்அத் தொழுமளவிற்கான காலப்பகுதியில் அவள் தூய்மையடைந்து விட்டால் இவ்வாறான நிலையில் அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் அவள் தொழ வேண்டும்.
எனக்கு (63) அறுபத்தி மூன்று வயதில் ஒரு தாய் இருக்கிறாள் அவளுக்கு பத்தொன்பது வருடமாக குழந்தை பிறக்கவில்லை, தற்போது மூன்று வருடகாலமாக இரத்தப்போக்கு காணப்படுகிறது. அது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்படும் ஒரு நோயாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவள் நோன்பை எதிர்கொண்டிருப்பதால், அவளுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள்;? அவள் இந்நிலையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? தெளிவு படுத்தவும்.
இரத்தப்போக்குள்ள இவ்வாறான பெண்களின் சட்டம் என்னவென்றால் இரத்தப்போக்கு ஏற்பட முன் வழமையாக ஏற்படும் மாதவிடாய் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தொழுவதையும் நோன்பு நோற்பதையும் விட்டு விடவேண்டும். அதாவது அவளின் வழமையான மாதவிடாயானது ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஆறு நாட்கள் என வைத்துக்கொண்டால், அவள் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஆறுநாட்களிலும் தொழாமலும் நோன்பு நோற்காமலும் இருப்பாள். அந்த ஆறு நாட்களும் முடிந்து விட்டால் குளித்து சுத்தமாகி தொழுகை மற்றும் நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றுவாள்.
இவ்வாறானோர் தொழும் முறை : பர்ழான தொழுகைக்குரிய நேரம் வந்து விட்டால்; தனது அந்தரங்க உறுப்பை முழுமையாக கழுவிவிட்டு துணியால் கட்டிவிட்டு வுழு செய்ய வேண்டும். அதே போல் பர்ழான தொழுகை அல்லாத நேரங்ளில் தொழும் நப்லான தொழுகைகளுக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.
அத்துடன் இந்நிலையில் உள்ளோர் சிரமத்தைத் தவிர்க்குமுகமாக லுஹருடன் அஸரை, அல்லது மஃரிபுடன் இஷாவையும் சேர்த்து தொழ முடியும். இவ்வாறு சேர்த்துத் தொழும்போது லுஹருக்கும் அஸருக்கும் ஒரு தடவையும். மஃரிப் மற்றும் இஷாத்தொழுகைக்கு ஒரு தடவையும் சுபஹ் தொழுகைக்கு ஒரு தடவையும் இவ்வாறு மூன்று தடவைகள் மாத்திரமே தயாராக வேண்டும். ஐந்து நேரம் தயாரவதற்குப் பதிலாக மூன்று தடவைகள் மாத்திரமே தயாராக வேண்டும்.
இந்த விடயத்தை மீண்டும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன் . அதாவது நீ தூய்மையடைவதற்கு விரும்பினால் உனது அந்தரங்க உறுப்பை கழுவி இரத்தக்ககசிவு வெளியேறுவதை கட்டுப்படுத்துமுகமாக துணித்துண்டு அல்லது அது போன்ற ஒன்றால் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வுழு செய்து லுஹ்ரையும் அஸ்ரையும் நான்கு ரக்அத்அகளாகவும், மஃரிபை மூன்று ரக்அத்அகளாகவும்; இஷாவை நான்கு ரக்அத்அகளாகவும், சுப்ஹை இரண்டு ரக்அத்அகளாகவும், தொழ வேண்டும். சில பொதுமக்கள் கருதுவது போன்று சுருக்கித் தொழக் கூடாது. மேலும் லுஹ்ரையும் அஸ்ரையும் முற்படுத்தி அல்லது பிற்படுத்தி சேர்த்து தொழுவதற்கும், மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி சேர்த்து தொழுவதற்கும் அனுமதி உண்டு. அதே போல் அந்த வுழுவின் மூலம் நப்லான தொழுகைகளும் நிறைவேற்றலாம்.
மாதவிலக்குள்ள ஒரு பெண் மஸ்ஜிதுல் ஹராமினுள் -பள்ளியினுள் -உரைகளையும்,பிரசங்கங்களையும் செவிமடுப்பதற்காக தங்கியிருப்பதன் சட்டம் என்ன?
மாதவிலக்குள்ள ஒரு பெண் மஸ்ஜிதுல் ஹராமிலோ வேறு பள்ளிகளிளோ தங்கியிருப்பது கூடாது. ஆனால் பள்ளியினூடாக கடந்து செல்வதற்கும் அங்கே ஏதும் தேவைகள் இருந்தால் அதற்காக செல்லவுமே அனுமதியுள்ளது. இதற்கு பின்வரும் ஆஇஷா (ரழி) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஆஇஷா (ரழி) அவர்களிடம் தொழும் விரிப்பை(1) எடுத்து வருமாறு பணித்தார்கள். அதற்கு ஆஇஷா (ரழி) அவர்கள் 'அது பள்ளியினுள் உள்ளது நானோ மாதவிலக்குள்ளவளாக இருக்கிறேனே எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் 'மாதவிடாய் உமது கரங்களில் கிடையாதே' எனக் கூறினார்கள். மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் பள்ளியினுள் மாதவிடாய் இரத்தம் படாதவாறு பாதுகாப்பாக கடந்து செல்வதில் தவறு கிடையாது.
ஆனால் பள்ளியினுள் அமர்ந்திருப்பதிருப்பதற்காக செல்வது கூடாது.
இதற்கான ஆதாரம் பின்வருமாறு: நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காக பெண்களை தொழும் திடலுக்கு (திருமணம் முடித்த பெண்களையும், கன்னிப் பெண்களையும், மாதவிடாய்ப் பெண்களையும்) செல்லுமாறு பணித்ததோடு, மாதவிடாய்ப் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஓதுங்கி இருக்குமாறும் கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் பிரசங்கம், பாடங்கள் மற்றும் உரைகளை கேட்பதற்காக பள்ளியினுள் தங்கியிருக்க கூடாது அனுமதிக்கப்படவும் கூடாது.
*
தொழுகையுடன் தொடர்பான மாதவிடாய் பற்றிய சில சட்டங்கள்:
ஒரு பெண்ணிடமிருந்து வெளியாகும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்திலான திரவம் பற்றி என்ன கூறுகிறீர்கள்? அது சுத்தமானதா? அசுத்தமானதா? அது தொடர்ந்து வந்தால் கட்டாயம் வுழு செய்ய வேண்டுமா? அது தொடராக அல்லாது விட்டு விட்டு வந்தால் அதன் சட்டம் என்ன? குறிப்பாக பெரும்பாலான கற்ற பெண்கள் இதனை இயற்கையாகப்படக்கூடிய ஈரம் என்று கருதுவதால் வுழு செய்வது அவசியமில்லை என்று கூறுகின்றனர்.
ஒரு பெண்ணிடமிருந்து வெளியாகும் திரவமானது சிறுநீர்பையில் அல்லாது, கருப்பையிலிருந்து வெளிவருவது மாத்திரமே சுத்தமானதாகும். அவ்வாறு கருப்பையிலிருந்து வெளிவரும் திரவமானது சுத்தமானதாக இருந்தாலும் அவளின் வுழுவை அது முறித்துவிடும். ஆகவே வுழுவை முறிக்கக்கூடியவை அசுத்தமாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகக் கொள்ளப்பட மாட்டாது. ஆசனவாயிலிருந்து வெளிப்படும் காற்றானது சுத்தம் என்றோ அசுத்தமானது என்றோ கூற முடியாது அவ்வாறிருந்தும்; அது வெளியானால் வுழுவை முறித்து விடும்.
இதன் படி அந்தத் திரவமானது ஒரு பெண் வுழுவுடன் இருக்கும் நிலையில் வெளியானால், அவளின் வுழுவை அது முறித்து விடும் அவள் மீண்டும் வுழுவை செய்துகொள்ள வேண்டும்.
எனினும் அந்தத் திரவமானது தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தால் அவளின் வுழு முறிந்து விடாது. என்றாலும் தொழுகையின் நேரம் வந்துவிட்டால் அந்தத் தொழுகைக்காக வுழு செய்து அதில் பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைகளை அவளுக்கு தொழ முடியும். அத்துடன் அல் குர்ஆன் ஓதுதல் மற்றும் அவளுக்கு ஆகுமான வணக்க வழிபாடுகளுடன் தொடர்பான விடயங்களை செய்வதற்கு அனுமதியுண்டு. தொடராக சிறுநீர்வெளியாகும் ஓருவரும், தொடராக திரவம் வெளிப்படும் ஒரு பெண்ணும் சுத்தம் தொடர்பான விடயத்தில் சமமானவர்கள் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல் வுழு முறிதல் என்ற அடிப்படையில் சிறு நீர் வெளியாவது தொடராக இல்லாதிருந்தால் அது வுழுவை முறித்துவிடும். அதாவது தொடராக சிறு நீர் வெளிவந்தால் அவரின் வுழு முறியமாட்டாது. என்றாலும் ஒரு பெண் தொழுகை நேரம் வந்த பிறகே தொழுவதற்காக வுழு செய்து கொள்ள வேண்டும். அவ்வேளை அந்தத் திரவம் எங்கும் படாதவாறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேணடும்.
ஆனால் தொடராக இல்லாது விட்டு விட்டு அந்தத் திரவம் வெளியாவதைப் பொருத்தவரை திரவம் வராத அந்த நேரத்திற்கு தொழுகையை பிற்படுத்தி தொழுதல் வேண்டும். தொழுகையின் நேரம் கழிந்து விடும் எனப் பயந்தால் வுழுசெய்து கொண்டு, அந்தத் திரவம் எங்கும் படாதவாறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொண்டு தொழுதல் வேண்டும்.
இவ்வாறு வெளிவரும் திரவத்தைப்பொருத்தவரை குறைவாக வருதல் அதிகம் வருதல் என்ற வித்தியாசம் கிடையாது. ஏனெனில் துவாரத்தின் மூலம் வெளிவருவதால் அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் வுழுவை முறித்து விடும். ஆனால் இதற்கு மாற்றமாக உடலில் ஏனைய பகுதிகளிலிந்து வெளிவரும் இரத்தம் வாந்தி போன்றன குறைவாக வந்தாலும் கூடுதலாக வந்தாலும் வுழுவை முறித்து விட மாட்டாது.
ஆனால் சில பெண்கள் இவ்வாறு வெளிவரும் திரவமானது வுழுவை முறிக்காது என நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதற்கான எந்த அடிப்படையையும் அறியமுடியவில்லை. ஆனால் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் திரவம் வெளியாவதால் வுழு முறியாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு இமாம் அவர்கள் கூறினாலும் அதற்கான ஆதாரத்தை அல் குர்ஆனிலிருந்தோ ஸுன்னாவிலிருந்தோ ஸஹாபக்களின் கூற்றிலிருந்தோ முன்வைக்க வில்லை. அவ்வாறு ஆதாரம் இருந்தால் அது ஆதாரமாக அமைந்து விடும்.
எனவே பெண்ணைப் பொருத்தவரை அல்லாஹ்வை பயந்து நடந்து கௌ்வதுடன் சுத்தத்தில் ஆர்வம் கொள்ள வேண்டும். ஏனெனில் சுத்தமில்லாமல் நூறு (100) ரக்அத்துக்கள் தொழுதாலும் ஏற்றுக் கொள்ளகப்படமாட்டாது. அசுத்தத்துடன் தொழுவது அல்லாஹ்வின் திருவசனங்களை கேலி செய்யும் விடயம் என்பதினால் அவ்வாறு தொழுபவரை காபிர் எனவும் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொடராக திரவம் வெளிவரும் ஒரு பெண் பர்ழான ஒரு தொழுகைக்கு வுழு செய்தால், அந்த வுழுவின் மூலம் அடுத்த பர்ழான தொழுகை வரும்வரையில் அவள் விரும்பிய படி நப்லான தொழுகைகளை தொழவும் மற்றும் அல்குர்ஆன் ஓதவும் முடியுமா?
பர்ழ் தொழுகைக்காக ஆரம்ப நேரத்தில் வுழுசெய்தால் அடுத்த தொழுகைக்கான நேரம் வரும் வரையில் (விடுபட்ட) பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைகளை தொழுவதற்கும், அல்குர்ஆன் ஓதுவதற்கும் முடியும்.
தொடராக திரவம் வெளிவரும் ஒரு பெண் சுபஹ் தொழுகைக்காக எடுத்த வுழுவின் மூலம் லுஹா தொழுதால் நிறைவேறுமா?
ழுஹாத் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட தொழுகை என்பதால் நிறைவேற மாட்டாது. அதற்குரிய நேரம் வந்தபின் அதற்காக வுழு செய்வது கட்டாயமாகும். இது முஸ்தஹாழாவை (தொடர் உதிரப்போக்குள்ளவள்) ஒத்த விடயமாகும். நபி (ஸல்) அவர்கள் முஸ்தஹாழாவுக்கு (தொடர் உதிரப்போக்குள்ளவளுக்கு) ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
லுஹ்ர் தொழுகையின் நேரம்: சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து அஸ்ர் நேரம் வரையிலாகும்
அஸ்ர் தொழுகையின் நேரம் : ழுஹ்ர் நேரம் முடிந்து சூரியன் பொன்னிறமாகும் வரையிலாகும். அஸ்ருடைய நேரம் சூரியன் மறையும் வரை நீடிக்கும் இது அஸருடைய நிர்ப்பந்த நேரம் என கூறப்படுகிறது.
மஃக்ரிப் தொழுகையின் நேரம்:சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறையும் வரையிலாகும்.
இஷாத் தொழுகையின் நேரம்: செம்மேகம் மறைந்ததிலிருந்து நள்ளிரவு வரையிலாகும்.
தொடராக திரவம் வெளிவரும் ஒரு பெண் இஷா தொழுகைக்காக செய்த வுழுவின் மூலம் நள்ளிரவு கடந்து கியாமுல்லைல் -இரவுத் தொழுகை- தொழுதால் அவளின் தொழுகை நிறைவேறுமா?
நிறைவேறமாட்டாது. நள்ளிரவு கடந்துவிட்டால் மீண்டும் வுழுவை புதுப்பித்துக்கொள்வது கடமையாகும். என்றாலும் வுழுவை மீண்டும் புதிதாக செய்யவேண்டும் என்று கட்டாயம் கிடையாது என்ற கருத்தும் காணப்படுகிறது. அதுவே சரியான கருத்தாகும்.
இஷாத் தொழுகையின் இறுதி நேரம் என்ன? அதனை அறிந்து கொள்வது எப்படி?
இஷாவின் கடைசி நேரம் நள்ளிராவாகும். இதனை சூரியன் மறைவதற்கும் பஜ்ர் உதயமாவதற்கும் இடையிலான நேரத்தை இரண்டாக வகுத்தால்; இதனை அறிந்துகொள்ள முடியும். அதன் முதல் அரைப்பகுதி இஷா முடிவுரும் நேராமாகும். அதன் எஞ்சிய அரைப்பகுதி பர்ழான தொழுகைக்குரிய நேரமல்ல. மாறாக அது பஜ்ருக்கும் இஷாவிற்குமிடையிலான இடைநிலையான பகுதியாகும்.
திரவம் விட்டு விட்டு வெளியேறும் ஒரு பெண் வுழு செய்து தொழுவதற்கு முன் மீண்டும் திரவம் வெளிவந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்?
திரவம் தொடராக இல்லாது விட்டு விட்டு வெளியேறும் ஒரு பெண் அது நிற்கும் நேரம் வரையில் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு இதில் தெளிவான நிலை ஒன்று இல்லையென்றிருந்தால் அதாவது சில நேரம் வருவதும் சில நேரம் வராதிருப்பதுமாக இருந்தால் அவள் உரிய தொழுகை வந்த பின் வுழு செய்வாள் அவளின் மீது எந்தக் குற்றமும் கிடையாது.
அந்தத் திரவமானது மேனியில் அல்லது ஆடையில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?
அது தூய்மையானதாக இருந்தால் கழுவத் தேவையில்லை. ஆனால் சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேறும் அசுத்தமான திரவமாக இருந்தால் அதனை கழுவுவது கட்டாயமாகும்.
அந்தத் திரவம் வெளிவந்தமைக்காக வுழுசெய்யும் போது கழுவ வேண்டிய வுழுவுடைய உறுப்புக்களை மாத்திரம் கழுவினால் போதுமாகுமா?
சிறுநீர்ப்பையில் அல்லாமல் கருப்பையிலிருந்து வெளிவரும் சுத்தமான திரவமாக இருந்தால் வுழுவின் உறுப்புக்களை மாத்திரம் கழுவிக்கொண்டால் போதுமாகும்.
பெண் நபித் தோழியர்கள் தமது மார்க்க விவகாரம் தொடர்பாக மார்க்த்தீர்ப்புகளை கேட்பதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருந்தும்; ஒரு பெண்ணிடமிருந்து வெளிவரும் திரவம் குறித்த ஓரு ஹதீஸேனும் வராமைக்கான காரணம் என்ன?
இந்தத் திரவமானது எல்லாப்பெண்களுக்கும் வருவதில்லை என்பதே இதற்கான பதிலாகும்.
திரவம் வெளியேறுவது குறித்த சட்டதிட்டங்கள் பற்றிய அறியாயாமையினால் வுழு செய்யாது இருக்கும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
அவ்வாறான பெண்கள் அல்லாஹ்விடம் தவ்பா கேட்பதோடு, இதற்கான விளக்கத்தை மார்க்க அறிஞர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்தத் திரவம் வெளியானால் வுழு செய்த்தேவையில்லை என்ற கருத்தை நீங்கள் கூறியதாக கூறுகிறார்களே இது குறித்த உங்கள் நிலைப்பாடு யாது?
இந்தக் கருத்தை நான் கூறியதாக கூறினால் அதில் உண்மை கிடையாது. அதாவது வெளிவரும் திரவமானது சுத்தமானது என்ற எனது கூற்றினால் அது வுழுவை முறிக்காது என அவர்கள் விளங்கியிருக்க முடியும் என்பதே வெளிப்படையான விடயமாகும்.
மாதவிடாய்க்கு ஒரு நாளைக்கு அல்லது பல நாட்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணிடமிருந்து பழுப்பு நிற வெளியேற்றம் ஏற்படலாம், அந்த வெளியேற்றமானது ஒரு மெல்லிய கருப்பு நிறத்திலான நூல் அல்லது பழுப்பு நிறத்திலோ அல்லது அது போன்ற வடிவங்களில் இருக்கலாம். இதன் சட்டம் என்ன?, இது மாதவிடாய் நின்றதன் பின்னரும் இருந்தால் இதன் சட்டம் யாது?
இது மாதவிடாயின் ஆரம்ப அறிகுறிகளாக இருந்தால் அது மாதவிடாயாகும். இது பொதுவாக மாதவிடாய் பெண்களுக்கு வரும் வலிகள் மற்றும் வயிற்று வலிகள் போன்றவற்றால் அறிந்து கொள்ள முடியும்.
மாதவிடாய்க்குப் பிறகு காணப்படும் பழுப்புநிறமானது அது நீங்கும் வரையில் தாமதிக்க வேண்டும். காரணம் மாதவிடாயுடன் சேர்ந்த பழுப்பு நிறமானது ஆஇஷா (ரழி) அவர்களின் கருத்துப்படி மாதவிடாயாகவே கருதப்படும். இது குறித்து குறிப்பிடுகையில் "வெள்ளை நீர் வெளிப்படுவதை காணும்வரையில்; அவசரப்படாதீர்கள்" என்றார்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
*
ஹஜ் மற்றும் உம்ராவுடன் தொடர்பான மாதவிடாய் பற்றிய சில சட்டங்கள்
இஹ்ராம் அணிந்ததன் பின் தொழும் இரண்டு ரக்அத்துக்களை மாதவிலக்குள்ள ஒரு பெண் எப்படித் தொழுவாள்? மேலும் அல் குர்ஆன் வசனங்களை மாதவிலக்குள்ள ஒரு பெண் இரகசியமாக கூறுவதற்கு அனுமதி உள்ளதா ? இல்லையா? சற்று விளக்குவீர்களாக.
முதலாவது விடயம் : இஹ்ராமுக்கென தனியான தொழுகை எதுவும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது தொடர்பான வழிகாட்டல் நபியவர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கவில்லை. அதாவது ஹஜ் அல்லது உம்ராவுக்கு நிய்யத் வைத்து இஹ்ராம் ஆடையை அணிந்த பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழுமாறு சொல்லாலோ செயலாலோ அங்கீகாரத்தாலோ தனது சமூதாயத்தினருக்கு நபியவர்கள் மார்க்கமாக எதனையும் குறிப்பிடவில்லை.
இரண்டாவது விடயம் : ஹஜ் அல்லது உம்ராவுக்கான நிய்யத் அதாவது இஹ்ராம் கட்டுவதற்கு முன் மாதவிலக்கிற்குள்ளான இப்பெண்ணுக்கு மாதவிடயாக இருக்கும் நிலையிலும் இஹ்ராம் கட்ட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இஹ்ராத்துடன் இருக்கும் மாதவிலக்குள்ள ஒரு பெண்ணுக்கு அல் குர்ஆனை ஓத முடியுமா ? ஆம், மாதவிலக்குள்ள பெண் தேவை மற்றும் நலன்களைக் கருத்திற்கொண்டு ஓதுவதற்கு அவளால் முடியும். ஆனால் எவ்விதத் தேவையின்றி ஒதுவது கூடாது. அவள் அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் வணக்கவழிபாட்டுக்காக ஓதாமல் தவிர்த்துக்கொள்வதே மிகவும் பொருத்தமாகும்.
ஒரு பெண் ஹஜ்ஜுக்காக பிரயாணம் மேற்கொண்டாள். அவள் பயணத்தை ஆரம்பித்து ஐந்து நாளில் அவளுக்கு மாத விலக்கு ஏற்பட்டது. மாதவிலக்கிலிருந்து தூய்மையடையாத நிலையில் அவள் மீகாத்தை அடைந்து, குளித்து விட்டு–ஹஜ்ஜுக்கான நிய்யத்தை வைத்துக்கொண்டு- மக்காவுக்கு சென்று, ஹரத்திற்குள் செல்லாது அதற்கு வெளியே தங்கிவிடுகிறாள். ஹஜ்ஜுக்கான கிரியைகளையோ அல்லது உம்ராவையோ நிறைவேற்றாது, பின்னர் இரண்டு நாட்கள் மினாவில் தங்கிவிடுகிறாள். அதன் பின் மாதவிலக்கிலிருந்து சுத்தமாகிவிடுகிறாள் அதன் பின் குளித்து தூய்மையான நிலையில் உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றுகிறாள். பின் அவள் தவாபுல் இபாழாவை நிறைவேற்றும் போது மீண்டும் தூய்மையற்ற நிலை ஏற்பட்டது. வெட்கத்தின் காரணமாக இது குறித்து தனது பொறுப்பாளாரிடம் கூறாது, ஹஜ்ஜின் கிரியைகளை முழுமையாக நிறைவேற்றிய பின் தனது நாட்டிற்கு வந்ததும் இது பற்றி தனது பொறுப்பாளரிடம் கூறினாள். இது குறித்த சட்டம் என்ன என்பதை குறிப்பிடுவீர்களாக.?
தவாபுல் இபாழாவின் போது ஏற்பட்ட இரத்தமானது மாதவிலக்குக்குரிய இரத்தமென அதன் இயல்பின் அடிப்படையிலும் அதன் வலிகள் மூலமும் தெரிந்து கொண்டால் அவள் செய்த தவாபுல் இபாழா நிறைவேற மாட்டாது. ஆகையால் தவாபுல் இபாழாவை நிறைவேற்றுவதற்காக அவள் மீண்டும் மக்காவுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும். அதாவது மீகாத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தவாப் மற்றும் ஸஃயும் செய்து உம்ராவை நிறைவேற்றி முடியையை வெட்டி குறைத்ததன் பின் தவாபுல் இபாழாவை நிறைவேற்ற வேண்டும்.
தவாபுல் இபாழாவை நிறைவேற்றும் போது ஏற்பட்ட இரத்தமானது மாதவிலக்குக்குரிய இரத்தமல்லாது, சன நெரிசல் மற்றும் பயம் இது போன்றவைகளின் விளைவால் ஏற்பட்ட சாதாரண இரத்தமாக இருந்தால் தவாபுக்கு வுழு நிபந்தனையாகக் கொள்ளப்படமாட்டாது என்ற நிலைப்பாட்டை உடைய அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் அந்த தவாப் நிறைவேறிவிடும்.
முதலாவது பிரச்சினையின் அடிப்படையில் அவளின் சொந்த ஊரானது மிகத் தொலைவில் இருந்தால் அவளுக்கு மீண்டும் மக்காவுக்கு வருவது இயலாத காரியம் என்பதால் அவளின் ஹஜ் நிறைவேறிவிடும். காரணம் அவள் செய்தவிடயங்களுக்கு அப்பால் அதிகமாக செய்வதற்கு அவளுக்கு இயல வில்லை என்பதினாலாகும்.
ஒரு பெண் உம்ரா செய்வதற்கு மக்காவிற்கு வந்தாள். அவள் மக்காவை வந்தடைந்ததும் அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. அவளுக்கு துணையாக வந்தவர் உடனடியாக நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மக்காவில் அவளுடன் இருப்பதற்கு யாருமில்லை என்றிருந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்?
இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் அவள் திரும்பிச் செல்வாள். ஆனால் அவள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருப்பதால் தூய்மையடைந்தும் சஊதியில் உள்ளவராக இருந்தால் மீண்டும் மக்கா வந்து உம்ராவுடைய கடமையை செய்ய வேண்டும். காரணம் அவள் சஊதியில உள்ளவளாக இருப்பதால் மீண்டு வருவது இலகுவானது, கஷ்டப்பட வேண்டிய தேவையோ, கடவுச்சீட்டு பெற வேண்டும் என்பதோ கிடையாது என்பதினாலாகும்.
ஆனால் அவள் வெளிநாட்டைச் சேர்ந்தவளாக இருந்தால் அவளுக்கு மீண்டும் வருவது சிரமமாகும். எனவே அவள் அதே பிரயாணத்தில் மாதவிடாய் இரத்தம் எங்கும் படாதவாறு பாதுகாப்பான முறையில் மறைத்துக்கொண்டு தவாபும் ஸஃயும் செய்வதோடு இறுதியாக முடியை குறைப்பதன் மூலம் உம்ராவை நிறைவேற்றுவாள். இந்நிலையில் அவளின் தவாப் நிர்ப்பந்த நிலையில் செய்ததாக கருதப்படும். தடைசெய்யப்பட்டவற்றை நிர்ப்பந்தம் ஆகுமாக்கி விடும் என்பது ஒரு சட்டவாக்க விதியாகும்.
ஹஜ் நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் நிலை யாது? அவளின் ஹஜ் நிறைவேறுமா ?
இந்தக் கேள்வியைப் பொருத்தவரை குறித்த பெண்ணுக்கு எப்போது மாதவிலக்கு எற்பட்டது என்பதை தெரிந்து கொள்ளாதவரை பதில் கூற முடியாது. ஏனெனில் ஹஜ்ஜின் சில செயற்பாடுகளை மாதவிடாய் தடுக்கமாட்டாது, சில செயற்பாடுகளை தடுத்துவிடும். அந்த வகையில் தவாபை தவிர ஹஜ்ஜின் ஏனையை எல்லா கிரியைகளையும் மாதவிலக்கு இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியும்.
நான் கடந்த ஆண்டு கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றினேன். அவ்வேளை தவாஃப் அல்-இபாழா மற்றும் (தவாபுல் வதாஃ) பிரியாவிடை தவாஃப் தவிர ஹஜ்ஜின் அனைத்து சடங்குகளையும்,கிரியைகளையும் நிறைவேற்றினேன். அவற்றை செய்யாது விட்விடுவதற்கு சட்பூர்வமான -ஷரீஆ ரீதியான காரணம் தடையாக அமைந்தது. எனது வீடு மதீனாவில் உள்ளதால் எபபோதாவது ஒரு நாள் தவாஃப் அல்-இபாழா மற்றும் பிரியாவிடை தவாஃப் (அல் வதாஃ ) நிறைவேற்ற முடியும் என்று நினைத்து திரும்பி வந்துவிட்டேன். மார்க்க விடயங்கள் பற்றிய எனது அறியாமையால், நான் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுவித்து, இஹ்ராமின் போது தடைசெய்யப்பட்ட அனைத்தையும் செய்தேன். மீண்டும் அடுத்த ஆண்டு மக்கா சென்று விடுபட்ட தவாபுகளை நிறைவேற்றுவது குறித்து நான் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் அவ்வாறு நீ தவாப் செய்வதால் அது நிறைவேறாது என்றும் உனது ஹஜ் வீணாகிவிட்டது. அதனை நீ எதிர் வரும் வருடம் ஒரு மாடு அல்லது ஒட்டகத்தை குற்றப்பரிகாரமாக கொடுத்து மீண்டும் செய்ய வேண்டும் என்று எனக்குக் கூறினார். இவ்வாறு அவர் கூறியது சரிதானா? அல்லது வேறு தீர்வு உள்ளதா? அது என்ன? எனது ஹஜ் வீணாகிவிட்டதா? நான் அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா? இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.!
இது போதிய அறிவில்லாமல் மார்க்த்தீர்ப்பு வழங்குவதால் ஏற்படும் மிகப்பெரும் பிரச்சினையாகும். உங்களைப் பொருத்தவரை இப்போதே மக்காவிற்குச் சென்று தவாபுல் இபாழாவை மாத்திரம் செய்தால் போதுமாகும்.
தவாபுல் வதாஃவைப் பொருத்தவரை மக்காவிலிருந்து வெளியேறும் போது உமக்கு மாதவிடாய் ஏற்பட்டடிருந்தால் உமக்கு தவாபுல் வதாஃ செய்வது கட்டாயமானது அல்ல. இதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் உள்ளது. ' நபி (ஸல்) அவர்கள், மக்கள் ஹஜ்ஜிலிருந்து நாட்டுக்குச் செல்ல நாடினால் இறுதியாக தவாபுல் வதாவை செய்யுமாறு கட்டையிட்டார்கள். என்றாலும் மாதவிடாயுள்ள பெண்ணுக்கு இதில் சலுகை வழங்கினார்கள். இன்னோர் அறிவிப்பில் அவர்களின் செயல்களில் இறுதியாக தவாப் (அல் வதாஃ ) இருக்க வேண்டும் என்று வந்துள்ளது. மேலும் இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸும் அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்களிடம் ஸபிய்யா அவர்கள் தவாபுல் இபாழாவை செய்ததாக அறிவித்தார் அதற்கு நபி (ஸல்) அவ்வாறாயின் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினார்கள். இந்த செய்தியானது மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு தவாபுல் வதாஃவை மாதவிடாய் நிலையில் நிறைவேற்றுவது அவசியம் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.
தவாபுல் இபாழாவைப் பொருத்தவரை அதை செய்வது கட்டாயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஹஜ்ஜின் எல்லாக் கிரிகையிலிருந்தும் அறியாமையின் காரணமாக தஹல்லுலானால் -கிரியையிலிருந்து வெளியேரினால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது அறியாமையின் காரணமாக இஹ்ராமில் தடுக்கப்பட்ட காரியமொன்றை செய்தால் அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை. (தஹல்லுல் என்பது ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவுக்கு நிய்யத் வைத்த பின் தடைசெய்யப்பட்டவற்றை ஆகுமாக்கிக் கொள்ளும் நிலையைக் குறிக்கும்.) இதற்கு ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் உள்ளது: "எங்கள் இரட்சகனே! நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மை குற்றம் பிடித்து விடாதே!'' (அல் பகரா :286). இதற்கு அல்லாஹ் : நான் செய்துவிட்டேன் என்று கூறுகிறான். மேலும் அல்லாஹ ''நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றமில்லை.எனினும் உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது உங்கள் மீது குற்றமாகும்". (அல் அஹ்ஸாப் : 5). இஹ்ராம் கட்டிய ஒருவருக்கு அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டுள்ள விடயங்களுள் ஏதாவது ஒன்றை அறியாமையினாலோ, மறதியாகவோ, அல்லது நிர்ப்பந்தத்தினாலோ செய்தால் அவரின் மீது எவ்விதக் குற்றமுமில்லை. மேலும் தடைசெய்யப்பட்ட இந்த விடயங்களை செய்வதற்கு காரணங்களாக அமைந்த அறியாமை மறதி மற்றும் நிர்ப்பந்தம் ஆகியவை நீங்கி விடும்போது தடைசெய்யப்பட்ட விடயங்களை விட்டுவிடுவது அவசியமாகும்.
பிரசவத்திற்குப் பிறகான இரத்தப்போக்கு உள்ள பெண்ணுக்கு, தர்வியா தினமன்று (துல் ஹிஜ்ஜா மாதத்தின் எட்டாம் நாள்) நிபாஸ் ஆரம்பிக்கிறது. அவள் தவாப் மற்றும் ஸஃயை தவிர ஹஜ்ஜின் ருகுன்களை முழுமையாக நிறைவேற்றுகிறாள் என்றாலும் அவள் பத்து நாற்களுக்குப் பின் தான் முதற்கட்ட தூய்மையடைந்ததை அவதானிக்கிறாள். இந்நிலையில் அவள் குளித்து தூய்மையாகி ஹஜ்ஜுடைய எஞ்சிய கட்டாயக் கடமையான ஹஜ்ஜுடைய தவாபை நிறைவேற்ற முடியுமா?
அவள் முழுமையாக தூய்மையடைந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரையில் தவாப் செய்வது கூடாது. அந்தப் பெண் தான் சுத்தமாகியதன் ஆரம்ப நிலையை கண்டதாக கூறுவதிலிருந்து அவள் முழுமையான சுத்த நிலையை அடையவில்லை என்பது புரிகிறது. ஆகையால் அவள் எப்போது பூரணமாக சுத்தமாகி விடுகிறாளோ அப்போது குளித்து சுத்தமாகி தவாப் மற்றும் ஸஃயை நிறைவேற்றுவாள்.
அவள் சுத்தமாகி குளித்ததும் தவாப் செய்யமுன் ஸஃஈ செய்தாலும் எவ்விதக் குற்றமும் கிடையாது. இதற்கு அனுமதி உள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடம் தவாப் செய்ய முன் ஸஃயு செய்தவர் குறித்து வினவப்பட்டபோது அதில் தவறேதும் கிடையாது என்று பதிலளித்தார்கள்.
ஒரு பெண் ஸைல் என்ற இடத்தில் அவள் மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் ஹஜ்ஜுக்கான நிய்யத்தை வைத்துக்கொண்டு- மக்காவுக்கு வந்தடைந்து, பின் தேவையின் நிமித்தம் ஜித்தாவுக்கு சென்றாள். அவ்வேளை அவளுக்கு தூய்மை ஏற்படுகிறது. அப்போது அவள் குளித்து சுத்தமாகி தன்னை தயார்படுத்திக் கொண்டு மீண்டும் மக்கா வந்து ஹஜ்ஜின் கிரியைகளை முழுமையாக நிறைவேற்றுகிறாள். இவளின் ஹஜ் நிறைவேறுமா? அவள் ஏதாவது செய்வது அவசியமா?
இவளின் ஹஜ் நிறைவேறும். இவள் எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை.
நான் உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்காக சென்றேன். மீகாத்தை கடந்து செல்லும் போது நான் மாதவிடாய்காரியாக இருந்ததினால் நான் உம்ராவுக்கான நிய்யத்தை வைக்கவில்லை. மக்காவில் நான் தூய்மையடையும் வரையில் அங்கே தங்கியிருந்தேன். தூய்மையாகியதும் குளித்துவிட்டு நான் உம்ராவுக்காக நிய்யத்து வைத்தேன். இவ்வாறு நான் செய்தது சரியா? நான் என்ன செய்ய வேண்டும்? என் மீதுள்ள கடமை என்ன?
இந்த செயல் ஆகுமானதல்ல.(அனுமதிக்கப்பட்டது அல்ல) உம்ராச் செய்ய நாடி வரும் ஒரு பெண் அவள் மாதவிடாய்காரியாக இருந்தாலும் உம்ரா அல்லது ஹஜ்ஜுக்கு நிய்யத் வைக்காது மீகாத்தை கடந்து செல்வது அனுமதிக்கபட்ட்டதல்ல. அவள் மாதவிடாய்காரியாக இருக்கும் நிலையில் உம்ரா அல்லது ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தால் அவளின் நிய்யத் நிறைவேறுவதுடன் அவளின் கிரிகைகளும் நிறைவேறிவிடும். இதற்குரிய ஆதாரமாக அபூபக்ர் (ரழி) அவர்களின் மனைவியான அஸ்மாஉ பின்த் உமைஸ் அவர்களின் பின்வரும் ஹதீஸ் உள்ளது. அஸ்மாஉ பின்த் உமைஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : ஹஜ்ஜதுல் வதாஃ -விடைபெரும் இறுதி ஹஜ்ஜை- நபியவர்கள் நிறைவேற்றும் நோக்கில் துல் ஹுலைபாவில் தங்கியிருக்கும் வேளையில் நான் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தேன். இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அறிய ஒருவரை நான் அவர்களிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபியவர்கள் எனக்கு குளிக்குமாறும் ஒரு துணியால் அந்தரங்க உறுப்பைக் கட்டிக் கொள்ளுமாறும் ஹஜ்ஜுக்காக (நிய்யத்) நாடிக்கொள்ளுமாறும் கூறினார்கள். ஆகவே இதிலிருந்து, நிபாஸ் (பிரசவ இரத்தம்) போன்றுதான் மாதவிடாயும் என்பதை அறிய முடிகிறது
எனவே ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்காக மீகாத்தை கடந்து செல்லும் மாதவிலக்குள்ள ஒரு பெண்ணுக்கு குளித்து, ஒரு துணியால் அந்தரங்க உறுப்பைக் கட்டிக் கொண்டு உம்ரா அல்லது ஹஜ்ஜுக்கான (நிய்யத்) நாடிக்கொள்ளுமாறும் கூறுகிறோம். அல் இஸ்திஸ்பார் என்பது: ஒரு பெண் அவளின் அந்தரங்க உறுப்பை ஒரு துணியால் இறுக்கமாக கட்டிக்கொள்வதைக் குறிக்கும். பின் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்கு (நிய்யத்) நாடிக்கொள்வதாகும். என்றாலும் அவள் (நிய்யத்) நாடிக் கொண்டு மக்காவை சென்றடைந்தாலும் தூய்மையடையும் வரையில் கஃபாவிற்கு செல்லவோ தவாப் செய்யவோ மாட்டாள். இந்த விடயத்தையே உம்ராவின் போது ஆஇஷா (ரழி) அவர்கள் மாதவிலக்குக்கு உள்ளான போது நபி (ஸல்) அவர்கள் ஆஇஷாவே நீ தூய்மையடையும் வரை கஃபாவை வலம் வருவதை தவிர்த்து ஹாஜிகள் செய்கின்ற அனைத்தையம் செய்து கொள் என்று கூறினார்கள். ( இது புஹாரி மற்றும் முஸ்லிமின் அறிவிப்பாகும்) மேலும் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவரகள் தான் தூய்மையடைந்ததும் கஃபாவை தவாப் செய்ததாகவும் (வலம் வந்ததாகவும்) ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் ஸஃயு செய்ததாகவும் குறிப்பிட்ட செய்தி ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெற்றுள்ளது. எனவே ஒரு மாதவிலக்குக்குள்ளான ஒரு பெண் ஹஜ் அல்லது உம்ராவுக்கு நிய்யத் வைத்தால், அல்லது தவாப் செய்வதற்கு முன் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தூய்மையடைந்து குளிக்கும் வரையில் தவாபோ ஸஃயோ செய்ய மாட்டாள் என்பதையே இது அறிவிக்கின்றது.
ஆனால் சுத்தமான நிலையில் தவாப் செய்து, அதன் பின் மாதவிலக்கு ஏற்பட்டால் அவள் மாதவிடாய் இருக்கும் நிலையில் தொடரந்தும் ஸஃயை செய்து தலை முடியின் சிலதை கத்தரிப்பதன் மூலம் தனது உம்ராக் கடமையை நிறைவு செய்துகொள்வாள். காரணம் ஸபா மர்வாக்கிடையில் ஸஃயு செய்வதற்கு தூய்மை (வுழு)வுடன் இருப்பது நிபந்தனையாக குறிப்பிடப்படவில்லை. எனவே அவளின் உம்ரா நிறைவேறிவிடும்.
நான் எனது மனைவியுடன் 'யன்புவிலிருந்து' உம்ராவுக்கு சென்றேன். நாம் ஜித்தாவை சென்றடைந்ததும் என் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக நான் மாத்திரம் உம்ராவை நிறைவேற்றினேன். எனது மனைவியின் நிலை யாது என்பதை தெளிவுபடுத்துவீர்களாக?.
உமது மனைவியைப்பொருத்தவரை அவள் தூய்மையடையும் வரை அங்கே தங்கியிருந்து பின்னர் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். இதற்கு ஆதாரமாக ஸபிய்யா (ரழி) அவர்களின் செய்தி காணப்படுகிறது. ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது அவர் எங்கள் பயணத்தை தடுத்துவிட்டாரா எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள் அவள் தவாபுல் இபாழாவை நிறைவேற்றி விட்டாள் என்று கூறியதும் 'அப்படியாயின் புறப்படட்டும்' என்றார்கள். அவர் எங்கள் பயணத்தை தடுத்துவிட்டாரா?' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றானது தவாபுல் இபாழாவிற்கு முன் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தூய்மையடைந்து தவாபுல் இபாழாவை செய்வது கடமை என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
தவாபுல் உம்ராவும் தவாபுல் இபாழாவைப் போன்று உம்ராவின் ஒரு ருக்னாக உள்ளது. எனவே உம்ரா செய்யும் ஒரு பெண் தவாப் செய்வதற்கு முன் மாதவிலக்குக்கு உள்ளானால் அவள் தூய்மையடையும் வரை தாமதித்து பின்னர் தவாபை நிறைவேற்ற வேண்டும்.
ஸஃயு செய்யும் பகுதி ஹரத்திற்குட்பட்ட (மஸ்ஜித்துக்குட்பட்ட) தா? மாதவிலக்குக்குள்ளான பெண் அதனை நெருங்க முடியுமா? ஸஃயு செய்யும் பகுதியினூடாக ஹரத்தினுள் (மஸ்ஜிதினுள்) நுழைந்தவர் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழவேண்டுமா?
ஸஈ செய்யும் இடமானது பள்ளிக்குட்பட்ட பகுதியல்ல என்பதே சரியான நிலைப்பாடாகும். இதனால்தான் அவற்றை பிரிக்குமாறு ஒரு சுவரை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றாலும் அது சிறிய –குறகிய- சுவர். இது மக்களுக்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஸஈ செய்யும் பகுதியானது பள்ளிக்குட்பட்டதாக இருந்து, ஒரு பெண் தவாபுக்கும் ஸஈ செய்வதற்கும் இடையில் மாதவிலக்குக்கு உட்பட்டால் அவள் ஸஈ செய்வதை தவிர்க்க வேண்டி ஏற்படும்.
ஸஈ செய்யும் இடமானது பள்ளிக்குட்பட்ட பகுதியல்ல என்பதினால் ஒரு பெண் தவாப் செய்து ஸஈ செய்வதற்கு முன் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஸஈ செய்ய வேண்டும் என்பது எனது மார்க்கத்தீர்ப்பாகும்.
தஹிய்யதுல் மஸ்ஜிதைப் பொருத்தவரை ஒருவர் தவாபை முடித்து ஸஈயை செய்து விட்டு மீண்டும் பள்ளிக்குள் வந்தால் அவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவார். அதே வேளை அவர் தஹிய்யதுல் மஸ்ஜிதை தொழாதிருந்தாலும் அவரின் மீது எவ்விதக் குற்றமுமில்லை. இந்த இடத்தில் தொழுவது சிறப்பிற்குரியது என்ற காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரண்டு ரக்அத்துக்களை தொழுவது மிகவும் சிறப்புக்குரியதே!
நான் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காகச் சென்றேன். அப்போது எனக்கு மாதவிடாய் எற்பட்டது. என்றாலும் அதனை யாரிடமும் கூறவில்லை. ஹரத்தினுள் நுழைந்து தொழுது தவாபையும் ஸஈயையும் நிறைவேற்றினேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?, மாதவிடாயானது நிபாஸிட்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அல்லது பிரசவப் பேறு ஏற்பட்டால் அவள் மக்காவிலும் சரி, அவளின் சொந்த ஊரிலும் சரி அல்லது எந்த இடத்தில் இருந்தாலும் அவள் தொழுவது ஆகுமனதல்ல. பெண்கள் குறித்து நபியவர்கள் 'அவள் மாதவிலக்குக்கு உட்பட்டால் அவள் தொழுவதும் நோன்பு நோற்பதும கூடாதல்லவா?' எனக் கூறியுள்ளார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண் தொழுவதும், நோன்பு நோற்பதும் அனுமதிக்கப்பட்டதல்ல என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.
இதன் படி இந்தக் காரியத்தை செய்த பெண் தன்னிடம் ஏற்பட்ட தவறுக்காக அல்லாஹ்விடம் பாவமீட்சி கோரி இஸ்திஃபார் பாவமன்னிப்பும் கோர வேண்டும்.
மாதவிடாயின் போது அவள் செய்த தவாப் நிறைவேற மாட்டாது. ஆனால் ஸஈ நிறைவேறிவிடும். ஹஜ்ஜின் போது தவாபை விட ஸஈயை முற்படுத்தி செய்வது அனுமதிக்கப்பட்டதாகும், என்பதே உறுதியான கூற்றாகும். இதன் படி அவள் தவாபுல் இபாழாவை மீண்டும் செய்ய வேண்டும். காரணம் ஹஜ்ஜின் ருகுன்களில் ஒன்றாக தவாபுல் இபாழா காணப்படுகிறது. இரண்டாம் தஹல்லுள் இதன் மூலமே நிகழ்கிறது.
இதன் படி அந்தப் பெண் திருமணமானவளாக இருந்தால் தவாப் செய்யும் வரையில தாம்பத்தியில் ஈடுபடக் கூடாது. அதே போன்று திருமணமாகாத ஒருவளாக இருந்தால் தவாப் செய்யும் வரையில் திருமன ஒப்பந்தத்தை நடாத்தக் கூடாது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
ஹஜ் செய்யும் ஒரு பெண்ணுக்கு அறபா நாளில் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்?
அறபா நாளில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஹஜ்ஜை தொடர்வாள். ஏனையோர் செய்யும் விடயங்களை அவளும் செய்வாள் ஆனாலும் அவள் தூய்மையடையும் வரையில் தவாப் செய்யமாட்டாள்.
ஒரு பெண் ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு தவாபுல் இபாழாவை நிறைவேற்ற முன் அவளுக்கு மாத விடாய் ஏற்படுகிறது. அவளும் கணவனும் ஒரு குழுவுடன் சேர்ந்து ஹஜ்ஜை நிறைவேற்ற வந்துள்ளனர். இந்நிலையில் அவள் என்ன செய்ய வேண்டும்? ஆனாலும் இங்கிருந்து சென்று விட்டால் வரவும் முடியாத நிலை உள்ளது.
அவளுக்கு மீண்டும் வரமுடியாதிருந்தால் அந்தப்பெண் மாதவிடாய் எங்கும் படாதாவறு முன்னேற்பாடுகளை செய்து கொண்டு நிர்பந்த நிலையில் செய்யயும் தவாபை செய்வாள். அவள் மீது எந்தக் குற்றமுமில்லை. அத்துடன் ஹஜ்ஜின் எஞ்சிய செயல்களை செய்து முடிப்பாள்.
நிபாஸுடைய பெண்கள் (பிரசவப் பெண்கள்) நாற்பது நாட்களுக்கு முன் தூய்மையடைந்தால் அவளின் ஹஜ் நிறைவேறுமா? அவள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு நிய்யத் வைத்த நிலையில் நாற்பது நாற்களுக்குள் தூய்மையை காணாது விட்டால் அவள் என்ன செய்வது?
நிபாஸுக்கான குறைந்த கால எல்லை ஒன்று கிடையாது என்ற அடிப்படையில் நாற்பது நாற்களுக்கு முன் பிரசவப் பெண்கள் தூய்மையடைந்து விட்டால் அவள் குளித்து தொழுவதுடன் தவாப் உட்பட தூய்மையடைந்த ஏனைய பெண்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்தையும் செய்வாள்.
ஆனால் அவள் தூய்மையை காணாது இருந்தாலும் அவளின் ஹஜ் சரியானதாகும். என்றாலும் தூய்மையடையும் வரையில் தவாப்செய்வதை தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
*
Related books
All books
أحكام الجنائز
من أحكام الصيام
أحكام الهدي والأضاحي والتذكية
تلخيص كتاب الأضحية والذكاة15 மொழிகள்تلخيص كتاب الأضحية والذكاة
كتيب نافع لفضيلة الشيخ محمد بن صالح العثيمين - رحمه الله - يبين أحكام الأضحية والذكاة باختصار في ضوء الكتاب والسنة.