தரிசிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும், சட்டங்களும் பற்றிய சுருக்கம்
தரிசிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும், சட்டங்களும் பற்றிய சுருக்கம்
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
தரிசிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும், சட்டங்களும் பற்றிய சுருக்கம்
ஆதாரம் : புஹாரி 1189, முஸ்லிம் 827. இந்த வார்த்தை முஸ்லிமுக்குரியது.
ஆதாரம் : புஹாரி 1190, முஸ்லிம் 1394.
ஆதாரம் : புஹாரி 1195, முஸ்லிம் 1390.
அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாவதாக.
அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்தன் பின்னால்
மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்க வருவோருக்கான ஒழுங்குகளும், சட்டங்களும் பற்றி சுருக்கமாக பேசும் புத்தகமே இது. மஸ்ஜிதுன் நபவியைத் தரிசிக்க வருபவர்களுக்கு தேவையான முக்கியமான தெளிவுகளை இதில் சுருக்கமாக விளக்கியுள்ளோம்.
இப்பணியை அல்லாஹ்வின் திருமுகம் நாடி செய்த பணியாகவும், அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் இதனால் பயனடைய வேண்டுமெனவும் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.
பலமொழிகளில் இஸ்லாத்திற்கு சேவை செய்யும் சங்கத்தின் கல்விக் குழு.
மஸ்ஜிதுன் நபவியைத்
நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை தரிசிப்பது ஆகுமான செயலாகும். இதற்கென குறிப்பிட்ட நேரமோ, காலமோ கிடையாது. இத்தரிசிப்பானது ஹஜ்ஜின் போது செய்ய வேண்டிய கடமையும் கிடையாது. ஹஜ் செய்யும் ஆண்களும், பெண்களும் நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ, பகீஃ மையவாடியையோ தரிசிப்பது கட்டாயக் கடமை கிடையாது.
நபி (ஸல்) அவர்களது கப்ரை தரிசிப்பதற்காக வேண்டி புனிதப் பயணம் மேற்கொள்ளவது கூடாது. புனிதப் பயணம் என்பது வணக்க வழிபாடுகளை செய்வதற்கே தவிர கப்ருகளை தரிசிப்பதற்காக அல்ல. அவ்வாறு மூன்று பள்ளிகளுக்கு மாத்திரம்தான் செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது.
மதீனாவிற்கு வெளியில் வசிப்போரும் மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதற்காக புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டுமே தவிர கப்ருகளை தரிசிப்பதற்காக புறப்படக் கூடாது. முதல் நோக்கமான பள்ளிவாயிலை தரிசிப்பது நிறைவேறிய பின் கப்ருகளை தரிசிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை. அவை பள்ளிவாயிலை தரிசித்தல் என்பதனுள் உள்ளடங்கிவிடும்.
பெண்கள் நபியவர்களின் மண்ணறையையோ அல்லது பிறரது மண்ணறையையோ தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் நபியவர்கள் கப்ருகளை தரிசிக்கும் பெண்களை சபித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து புலம்பல், அலங்காரம் போன்ற ஷரீஆக்கு முரணான செயல்கள் நிகழக்கூடும். ஆனால், அவர்கள் நபியவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லுவதைக் கூடுதலாகச் செய்வது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அவர்கள் எங்கு இருந்தாலும் அது நபியவர்களை வந்தடையும்; நபியவர்கள் கூறியதாவது: பெண்கள் ஏனைய கப்ருகள் உட்பட நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் தரிசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்கள் கப்ருகளை தரிசிக்கும் பெண்களை சபித்துள்ளார்கள். அவர்கள் கப்ருக்கு அருகாமையில் சென்று ஒப்பாரி வைத்து அழுவதும், அலங்காரங்களை வெளிப்படுத்துவதும், மார்க்கத்திற்கு முரணான சில செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதுமே இதற்குக் காரணமாகும். ஆயினும் மஸ்ஜிதுன் நபவிக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுவது அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து ஸலவாத்துக் கூறினாலும் அது நபியவர்களிடம் சென்றடையும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது கப்ரை கொண்டாட்ட இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது" மேலும் நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இந்தப் பூமியில் உலாவரும் மலக்குகள் உள்ளனர், அவர்கள் எனது உம்மத்திடமிருந்து ஸலாமை எனக்கு எத்திவைக்கின்றனர்".
மஸ்ஜிதுன் நபவியில் நுழையும்போது வலது காலை முன்வைத்து, اللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ என ஏனைய பள்ளிவாயில்களுக்கு நுழையும் துஆவை ஓத வேண்டும்.
இப் பள்ளியினுள் நுழைவதற்கு என பிரத்தியேகமான எவ்வித துஆக்களும் கிடையாது.
பின்னர் பள்ளிக் காணிக்கையாக இரண்டு ரக்அத்துக்களை தொழ வேண்டும்.
தொழுவதற்கு தடைசெய்யப்பட்ட நேரம் அல்லாத வேறு நேரமாக இருந்தால் விரும்பிய அளவு சுன்னத்தான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழுதுகொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
முடியுமானால் நபி (ஸல்) அவர்களின் மிம்பருக்கும் அவரின் அறைக்கும் இடையில் உள்ள "ரவ்ழா" எனும் இடத்தில் தொழுவது விரும்பத்தக்கது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்"
"ரவ்ழா" வில் தொழ முடியாமல் போனால் பள்ளிவாயிலின் எப்பகுதியில் வேண்டுமானாலும் தொழுதுகொள்ள முடியும். ஆனால் கூட்டுத் தொழுகையின் போது, இமாமைத் தொடர்ந்துள்ள முன் வரிசையில் நிற்க வேண்டும்.
நபியவர்களதும், அவரது இரு தோழர்களதும் கப்ருகளை தரிசிக்க விரும்பினால்:
நபியவர்களது கப்ரை முன்னோக்கி, ஒழுக்கத்துடனும், சப்தத்தை தாழ்த்தியும், அவருக்கு பின்வருமாறு ஸலாம் கூறிக்கொள்ளலாம். "اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُْولَ اللَّه وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ" பொருள்: அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டுமாக! இது தவிர, "أَشْهَدُ أَنَّكَ رَسُوْلُ اللَّهِ حَقّاً، وَأَنَّكَ قَدْ بَلّغْتَ الرِّسَالَةَ، وَأَدّيْتَ الْأمَانَةَ، وَجَاهَدْتَ فِيْ اللََِّه حَقَّ جِهَادِهِ، وَنَصَحْتَ الْأُمَّةَ، فَجَزَاكَ اللَّهُ عَنْ أُمَّتِكَ أَفْضَلَ مَا جَزَى نَبِيّاً عَنْ أُمَّتِهِ" எனவும் கூறிக்கொள்ளலாம். பொருள்: "நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் உண்மையான தூதராக இருக்கிறீர்கள் என்பதற்கும், நீங்கள் அல்லாஹ்வின் தூதை முழுமையாக எடுத்து வைத்தீர்கள் என்பதற்கும், நம்பிக்கையைச் சிறப்பாக நிறைவேற்றினீர்கள் என்பதற்கும், அல்லாஹ்வுக்காகப் பொருத்தமான முறையில் ஜிஹாத் செய்தீர்கள் என்பதற்கும், உம்மத்துக்குப் பணிவுடன் உபதேசம் கூறினீர்கள் என்பதற்கும், நான் சாட்சி தருகிறேன். அதற்காக, உங்கள் உம்மத்துக்காக, அல்லாஹ் ஒருவர் நபிக்குத் தன் உம்மத்தின் பணி குறித்து கொடுத்த அனைத்து சிறந்த நற்கொடைகளிலும் சிறந்த நற்கொடை உங்களுக்குக் கொடுக்கட்டும்! " நபியவர்களின் கப்ரில் ஓதுவதற்கு என்று தனித்துவமான எவ்வித துஆக்களும் கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிறகு சற்று வலது புறம் நகர்ந்து, அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும்.
பிறகு சற்று வலது புறம் நகர்ந்து, உமர் (ரழி) அவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும். இப்னு உமர் (ரஹ்) அவர்கள் நபியவர்களுக்கும், அவரின் இரு தோழர்களுக்கும் சுருக்கமாகவே ஸலாம் கூறுபவர்களாக இருந்துள்ளார்கள். "اَلسَّلاّمُ عَلَيْكَ يَا رَسُوْلُ اللَّه، اَلسَّلاَمُ عَلَيْكَ يَا أَبَا بَكَّر، اَلسَّلاَمُ عَلَيْكَ يَا أَبْتَاهُ" பொருள்: "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அபூபக்கரே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். எனது தந்தையே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்".
நபியவர்களதும், அவரின் இரு தோழர்களதும் கப்ருகளுக்கு அருகாமையில் நீண்ட நேரம் நின்று கொண்டு பிரார்த்தனை செய்வது கூடாது. இதனை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வெறுத்துள்ளார்கள். "இது முன்னோர்கள் செய்யாத புதுமையான செயல். இந்த உம்மத்தின் இறுதிப் பகுதியைச் சீர்படுத்துவது, அதன் ஆரம்பப் பகுதியைச் சீர்படுத்துவதில் உள்ளது" எனக் கூறியுள்ளார்கள்.
சிலர் செய்வது போல் நபியவர்களின் கப்ருக்கு அருகில் நின்று குரலை உயர்த்தி சப்தமிடுவதும், நீண்ட நேரம் நிற்பதும், பிரார்த்தனை புரிவதும் அனுமதிக்கப்படாத செயல்களாகும்; அல்லாஹ் கூறுகின்றான்: "முஃமினகளே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்." "நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு." (ஹுஜுராத் : 2 - 3). நபியவர்களின் கப்ருக்கு அருகில் நீண்ட நேரம் நிற்பதும், பலமுறை மீண்டும் மீண்டும் ஸலாம் கூறுவதும் சனநெரிசலை உண்டுபண்ணுவதோடு, சப்தங்கள் அதிகமாகி, அவரது கப்ருக்கு அருகில் சப்தமாக பேசுவதற்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் மேற்சொன்ன அல்குர்ஆன் வசனங்களுக்கு முரணான செயற்பாடுகளாகவே உள்ளன. நபியவர்கள் உயிருடன் இருந்தாலும், மரணித்தாலும் அவர் எப்போதும் மதிப்பிற்குரியவர். எனவே ஒரு இறைவிசுவாசி இஸ்லாத்திற்கு விரோதமான செயற்பாடுகளை நபியவர்களின் கப்ருக்கு அருகில் செய்வது கூடாது.
நபியவர்களின் கப்ரை தரிசிக்க வரும் சிலர் அவரின் கப்ரை முன்னோக்கி, இரு கைகளையும் உயர்த்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். இது நபியவர்களின் தோழர்களோ, அவர்களைப் பின்துயர்ந்து வந்தவர்களோ, முன்சென்ற இஸ்லாமிய அறிஞர்களோ கடைபிடிக்காத, காட்டித் தராத செயற்பாடாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்.
இவ்வாறே சிலர் நபியவர்களுக்கு ஸலாம் சொல்லும் போது வலக்கையை இடக்கையின் மேல் வைத்து, அதை மார்புக்கு மேலால் அல்லது கீழால் வைத்து தொழுகையில் இருப்பது போன்ற நிலையில் ஸலாம் கூறுகின்றனர். இவ்வாறு ஸலாம் கூறுவதும் கூடாது. ஏனெனில் இது, அடியார்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய பணிவு, தாழ்வுநிலை, வணக்கம் என்ற நிலைகளுக்கு ஒப்பான செயற்பாடு ஆகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் "ஃபத்ஹுல் பாரி" எனும் நூலில் அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.
அல்லாஹ்வின் நெருக்கத்தையும், நபியவர்களின் நெருக்கத்தையும் பெற வேண்டும் என்பதற்காக நபியவர்களது அறையின் சுவரைத் தடவி, அதை வலம் வருவதும், அவரிடம் தனது தேவைகளைக் கேட்பதும், நோய்நொடிகளை குணமாக்குமாறு மன்றாடுவதும் கூடாது. இவை அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளாகும்.
மதீனாவிற்கு வருகை தருபவர் குபா பள்ளிவாயலை தரிசித்து, அதில் தொழுவதும் ஸுன்னத்தான ஒன்றாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் வாகனத்திலும், நடந்தும் சென்று, அதில் இரண்டு ரக்அத்துக்களை தொழுவார்கள். ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: யார் தனது வீட்டில் சுத்தம் செய்துகொண்டு, பின்பு குபா பள்ளிவாசலுக்குச் சென்று, அதில் தொழுவாரோ, அவருக்கு உம்ரா செய்ததற்கேற்ப நன்மை கிடைக்கும்." ஆதாரம் : இப்னுமாஜா 1168.
மதீனாவில் உள்ள பகீஃ மையவாடியை தரிசிப்பது ஆண்களுக்கு ஸுன்னத்தாகும். அது உயிர்த்தியாகம் செய்த நபித்தோழர்களும், ஹம்ஸா (ரழி) அவர்களும் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். நபி (ஸல்) அவர்கள் இம் மையவாடியை தரிசித்து, அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக துஆ செய்வார்கள். நபியவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு கப்ருகளை தரிசிப்பதைத் தடை செய்திருந்தேன், இப்போது அவற்றை தரிசியுங்கள். ஏனெனில் அவை உங்களுக்கு மறுமையை ஞாபகமூட்டும். ஆதாரம் : திர்மிதி 1054, அபூதாவுத் 3235.
இம் மையவாடியை தரிசிக்கும் போது மற்ற மையவாடிகளில் ஓதும் துஆவை கூறிக்கொள்ள வேண்டும். َاَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ المُؤْمِنِيْنَ وَالمُسْلِمِيْنَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُوْنَ وَيَرْحَمُ اللَّهُ المُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالمُسْتَأْخِرِيْنَ، نَسْأّلُ اللَّهَ لَنَا وَلَكُمُ العَافِيَة பொருள்: (இவ்வில்லங்களின் சொந்தக்காரர்களான இறைவிசுவாசிகளே! முஸ்லிம்களே! உங்கள் மீது ஸலாம் எனும் அமைதி உண்டகட்டுமாக! அல்லாஹ் நாடும்போது நாமும் உங்களிடம் வந்து சேரக் கூடியவர்களே! எம்மில் முன்னர் மரணித்தவர்களுக்கும் பின்பு மரணிக்க இருப்பவர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. எங்களுக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் ஈடேற்றம் கிடைக்க வேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம்!).
மையவாடிகளைத் தரிசிப்பதன் நோக்கம் மறுமையை நினைவுகூர்வதும், மரணித்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்வதும், நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதுமாகும். இதுவே அனுமதிக்கப்பட்ட தரிசிப்பாகும்.
இவற்றைத் தவிர்த்து, அவர்களிடம் துஆ கேட்பதும், அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் மன்றாடுவதும், அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களின் பொருட்டால் தமது தேவைகளைக் கேட்பதும் வழிகேடாகும். இது அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராத வழிமுறையாகும். இதனை முன்சென்ற எந்த நல்லடியார்களும் செய்யவில்லை. அதிலும் குறிப்பாக அவர்களிடம் தேவைகளை நிறைவேற்றித் தருமாறும், நோய்களை குணப்படுத்துமாறும் கேட்பது பெரிய இணைவைப்பாகும்.
வாசகர்களே! நபியவர்களின் கப்ரை தரிசிப்பது தொடர்பாக வந்துள்ள சில இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறோம். அவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள் :
01. "யார் ஹஜ் செய்து என்னை தரிசிக்க வில்லையோ அவர் என்னை வெறுத்துவிட்டார்".
02. "எனது மரணத்திற்குப் பின் யாராவது என்னை தரிசித்தால், அது என்னை உயிரோடு சந்தித்ததற்கு சமமாகும்".
03. "ஒரே வருடத்தில் என்னையும், என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களையும் யார் சந்திக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் நிச்சயிக்கப்படும் என்பதை அல்லாஹ்வின் மீது உறுதியிட்டு கூறுகிறேன்".
04. "என் கப்ரை தரிசிப்பவருக்கு என் ஷஃபாஅத் கிடைக்கும்".
இவ்வாறான, இவை போன்ற ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஹாபிழ் அல்-உகைலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இது போன்ற ஹதீஸ்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை". ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், தனது "தல்ஹீஸ்" எனும் நூலில், "- இது போன்ற பல ஹதீஸ்களைக் குறிப்பிட்டு - இவை அனைத்தும் பலஹீனமானவைகளாகும்" எனக் குறிப்பிடுகிறார்கள். ஹஜ், உம்ரா கடமைகளிலும் மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்க வேண்டுமென்று கட்டாயமாக்கப்படவில்லை. அவற்றின் சுன்னத்துக்களிலும் இது இடம்பெறவில்லை. ஹஜ் உம்ராவை நிறைவேற்றுவதற்கு முன்னரோ, நிறைவேற்றிய பிறகோ மஸ்ஜிதுன் நபவியை அவசியம் தரிசிக்க வேண்டுமென்ற எவ்வித கட்டாயக் கடமையும் கிடையாது. இதை தரிசிப்பது பொதுவான விரும்பத்தக்க செயலாகும். ஹஜ் உம்ரா செய்பவர் இதை தரிசிக்காமல் போய்விட்டால் அவருக்கு எவ்வித பாவமும் கிடைக்கப்போவதில்லை. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வணக்கங்களாகும். ஹஜ், உம்ராவின் சுன்னத்துக்களில், கடமைகளில் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை இவ்வணக்கங்களுக்கு முன்போ, பின்னோ தரிசித்தாக வேண்டுமென சட்டங்கள் இடம்பெறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை தரிசிப்பது எப்போதும் ஸுன்னத்தான ஒன்றாகும். அதனை ஹஜ், உம்ரா செய்யும் ஒருவர் தரிசிக்காவிட்டாலும் அவருக்கு பாவமேதுமில்லை. ஹஜ், உம்ரா மற்றும் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை தரிசிப்பது தனித்தனி வணக்க வழிபாடுகளாகும். எனவே ஹஜ் அல்லது உம்ரா செய்தவர் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை அவசியம் தரிசித்தாக வேண்டும் என்பது கிடையாது. அதேபோல் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை தரிசித்தவர் அவசியம் ஹஜ் அல்லது உம்ரா செய்ய வேண்டும் என்பது கிடையாது. ஒரே பயணத்தில் ஹஜ், உம்ரா மற்றும் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை தரிசிப்பது ஒன்றாக இணைத்தால் அதில் குறை ஒன்றுமில்லை.
மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில தவறுகள்
நபி (ஸல்) அவர்களின் கப்ரை பார்வையிடும்போது அதன் சுவர்களையும், அங்குள்ள இரும்புக் கம்பிகளையும் தடவுதல், பரக்கத் கிடைக்கும் என எண்ணி அதன் ஜன்னல்களில் நூல்களை கட்டுதல்.
பரக்கத் என்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதர் (ஸல்) மார்க்கமாக குறிப்பிட்டவற்றில் தேட வேண்டுமே தவிர, பித்அத் எனப்படும் மார்க்கம் என்றபெயரில் புதிதாக உருவாக்கப்பட்டவற்றில் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிக சிரமங்களுடன் மதீனாவில் உள்ள உஹத் மலையின் குகைகளுக்கு செல்லல், மக்காவில் உள்ள ஹிராக் குகை ஸவ்ர் குகைக்கு செல்லல், அங்கு நேர்ச்சைக்காக துணிகளையும், நூல்களையும் கட்டுதல், அங்கு அல்லாஹ் அனுமதிக்காத துஆக்களைச் செய்தல்.
இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதிக்காத பித்அத்களாகும்.
மதீனாவில் நபியவர்களின் ஒட்டகம் அமர்ந்த இடம், உஸ்மான் (ரழி) அவர்களின் கிணறு என நபி (ஸல்) அவர்களது வாழ்வின் சில தடயங்கள் எனக் கூறப்படும் இடங்களைத் தரிசித்தல், அவ்விடங்களில் இருந்து புனிதம் பெறுவதற்காக மண்ணை எடுத்தல்.
பகீஃ மையவாடி, உஹத் போரின் வீரத் தியாகிகளது மையவாடி ஆகியவற்றைத் தரிசிக்கும் போது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்போரிடம் பிரார்த்தித்தல், அவர்களின் நெருக்கத்தைப் பெறுவதற்காகவும், அவர்களின் பரக்கத்தைப் பெறுவதற்காகவும் அவற்றில் நாணயங்களை எறிதல்.
இவை அனைத்தும் மிகப் பெரிய தவறுகள். இவை ஒருவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் பெரிய இணைவைப்பில் உள்ளடங்குபவை என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தேவைகளைக் கேட்டல், பிரார்த்தனை புரிதல், அறுத்துப் பலியிடல், நேர்ச்சை வைத்தல் ஆகிய வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டியவை. அவை ஏனையோருக்கு செய்யும் பட்சத்தில் அல்லாஹ்வுக்கு இணைவைத்த குற்றத்தை ஒருவர் செய்கிறார். அல்லாஹ் கூறுகிறான், "அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்." (அல்பய்யினா :05).
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன், எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்களின் அனைத்து தோழர்களுக்கும், இறுதி நாள் வரை அவரை சரியாக பின்பற்றும் அனைத்து மக்களுக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாகட்டும்!
Related books
All books
மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகளும் ஒழுங்குகளும், நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது தொடர்பான சட்டங்களும்.52 மொழிகள்மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகளும் ஒழுங்குகளும், நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது தொடர்பான சட்டங்களும்.
மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகள், அதைத் ஜியாரத் செய்யும் ஒழுக்கங்கள், அத்துடன் நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளைத் தரிசிக்கும் ஒழுக்கங்கள் ஆகியவற்றை விளக்கி, ஜியாரத்தின் போது கண்ணியம், தூய்மை ஆகியவற்றைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும், பித்அத்தான செயல்களிலிருந்து விலகி இருப்பதையும் வலியுறுத்துகிறது இந்த நூல்.
உம்ரா செய்யும் முறையும், அதன் சட்டங்களும்65 மொழிகள்உம்ரா செய்யும் முறையும், அதன் சட்டங்களும்
இப் பிரபஞ்சத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். அவனது தூதர் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் என்றென்றும் உண்டாகட்டும். அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்தன் பின்னால் இது உம்ரா செய்யும் முறை, அதன் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் பற்றி சுருக்கமாக குறிப்பிடும் ஒரு கையேடாகும். இதில் உம்ரா செய்பவருக்குத் தேவையான பெரும்பாலான விடயங்களை விளக்க முயன்றுள்ளோம். அல்லாஹ்வின் திருமுகம் நாடிய தூய பணியாகவும், முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாகவும் இதை அமைத்துத் தரவேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்54 மொழிகள்அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்
இந்த நூல் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய சட்டங்களை அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் விளக்குகிறது; ஹஜ் மற்றும் உம்ராவின் கடமைகள், இஹ்ராம் நிலையில் தடை செய்யப்பட்ட செயல்கள், மஸ்ஜிதுந்-நபவீயை ஜியாரத் செய்வதற்கான ஒழுக்க நெறிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த வழிபாட்டு சடங்குகளில் உள்ள பித்அத்திலிருந்து எச்சரிக்கிறது.
ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்25 மொழிகள்ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
சவூதி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மொத்த மார்க்கத் தீர்ப்புக்களிலிருந்தும் கேள்விகளும், விடைகளும் தேர்வு செய்யப்பட்டு, பொருத்தமான நிலைமைக்கு ஏற்ப சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக: பொதுத் தீர்ப்புகள் கேள்வி : வங்கியிலிருந்து கடன் வாங்கிய பணத்திலிருந்து எனது பெற்றோர் உம்ரா செய்யலாமா? பதில் : ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புபவர் அல்லது மற்றொருவருக்காக செய்ய விரும்புபவர், தமது ஹஜ் மற்றும் உம்ராவுக்காக ஹலாலான சம்பாத்தியத்தை தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் அல்லாஹ் மிக உயர்ந்தவன், தூய்மையானதைத் தவிர ஏற்றுக்கொள்வதில்லை.