புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்
தொகுப்பு அல்லாஹ்வின் அருளை வேண்டி நிற்கும் மிக அழகிய பெயர்கள் அல்லாஹ்விற்கே உரியன. ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். ஸூறதுல் அஃராப், வசனம்: 180. (அல்லாஹ்) அல்லாஹ் (அல்அவ்வலு)முதன்மையானவன்( அல் ஆகிரு)இறுதியானவன் (அல்-ளாஹிரு) வெளிரங்கமானவன் (அல் பாதினு) அந்தரங்கமானவன் (அல் அலிய்யு) உயர்வானவன் (அல் அஃலா) மிக உயர்வானவன் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்
தொகுப்பு
அல்லாஹ்வின் அருளை வேண்டி நிற்கும்
கலாநிதி/ ஸஈது இப்னு அலி இப்னி வஹ்ப் அல் கஹ்தானி மிக அழகிய பெயர்கள் அல்லாஹ்விற்கே உரியன. ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். ஸூறதுல் அஃராப், வசனம்: 180.
(அல்லாஹ்) அல்லாஹ் (அல்அவ்வலு)முதன்மையானவன்( அல் ஆகிரு)இறுதியானவன் (அல்-ளாஹிரு) வெளிரங்கமானவன் (அல் பாதினு) அந்தரங்கமானவன் (அல் அலிய்யு) உயர்வானவன் (அல் அஃலா) மிக உயர்வானவன் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)
முன்னுரை
(அல் முதஆல்) மிகவும் உயர்ந்தவன் (அல் அழீம்) மகத்தானவன் (அல் மஜீத்) கண்ணியமிக்கவன் (அல் கபீர்) மிகப்பெரியவன் (அஸ்ஸமீஃ) யாவற்றையும் கேட்பவன் (அல் பஸீர்) யாவற்றையும் பார்ப்பவன் (அல் அலீம்) நன்கறிந்தவன்
(அல் ஹபீர்) நன்கறிந்தவன் (அல்ஹமீத்) புகழுக்குரியவன் (அல் அஸீஸ்) யாவற்றையும் மிகைத்தவன் (அல் கதீர்) சர்வவல்லமையுடயவன் (அல் காதிர்) ஆற்றலுள்ளவன் (அல் முக்ததிர்) திறமைமிக்கவன் (அல் கவிய்) வலிமைமிக்கவன் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன, அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவியும் பாவமன்னிப்பும் கோருகிறோம். எமது மனதில் உதிக்கும் தீயவிடயங்களை விட்டும், எமது செயல்களில் பாவமானவற்றை விட்டும் பாதுகாவல் தேடுகிறோம். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவனை வழிகெடுப்பவன் எவருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச்செய்துவிடுகிறானோ அவனை நல்வழிப்படுத்துபவன் எவருமில்லை. உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையாக எதுவுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும் திருத்தூதருமாவார் என்றும் நான் சான்று பகர்கிறேன். நபியவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார், அவர்களின் தோழர்கள் மற்றும் மறுமை நாள்வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றி நடப்போர் மீதும் அல்லாஹ்வின் அருளும் அவனின் ஸலாமும் அதிகமாக உண்டாவதாக.
(அல்மதீன்) மிகவும் உறுதிமிக்கவன் (அல் கனிய்) தன்னிறைவானவன் (அல் ஹகீம்) ஞானமிக்கவன் (அல் ஹலீம்) சகிப்புத்தன்மைமிக்கவன் (அல் அபுவ்) மன்னிப்பவன் (அல் கபூர்) மிகப் பெரும் மன்னிப்பாளன் (அல் கப்பார்) மன்னிப்பை ஏற்பவன் இந் நூலானது எனது நூலான (அத்திக்ரு வத்துஆ வல் இலாஜ் பிர்ருகா மினல் கிதாபி வஸ்ஸுன்னா) (2) என்ற நூலின் சுருக்கமாகும். இப்பெரும் தொகுப்பிலிருந்து பயன்பெறுவதற்கு இலகுவாக, துஆக்களை மாத்திரம் வேறுபடுத்தி மேலும் பல துஆக்களையும், பயனுள்ள பல விடயங்களையும் இணைத்து இத்தொகுப்பை தொகுத்துள்ளேன். இத்தொகுப்பானது அல்லாஹ்வுக்காக மிகத்தூய்மையான முறையில் எழுதப்பட்டதாக அமைய வேண்டும் என அல்லாஹ்வின் உயர் திருநாமங்களையும் பண்புகளையும் முன்னிறுத்தி அவனிடம் பிரார்த்திக்கிறேன். இதனை ஏற்றுக்கொள்வதற்கு அவனே பொறுப்பாளனாகவும் வல்லமை படைத்தவனாகவும் உள்ளான். [2] இம்மூல நூல் அதன் ஹதீஸ்களெல்லாம் சரிபார்க்கப்பட்டு நான்கு பகுதிகளாக பிரசுரிக்கப்பட்டுள்ளது; முதலாம் மற்றும் இரண்டாம் தொகுதிகளில்( ஹிஸ்னுல் முஸ்லிம்) முஸ்லிமின் அரண் என்ற பகுதியும், மூன்றாம் தொகுதியில் (அத்துஆ) பிராரத்தனை என்ற பகுதியும், நான்காம் தொகுதியில் (அல் இலாஜூ பிர்ருகா) ஒதிப்பார்ப்பதன் மூலம் சிகிச்சை செய்தல் என்ற பகுதியும் உள்ளடங்கியுள்ளன.
(அத்தவ்வாப்) பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் (அர்ரகீப்) கூர்ந்து அவதானிப்பவன் (அஷ்ஷஹீத்) மிகப்பெரும் சாட்சியாளன் (அல் ஹபீழ்) பாதுகாப்பாளன் (அல்லதீப்) நுட்பமானவன் (அல் கரீப்) அருகிலுருப்பவன் (அல் முஜீப்) பதிலளிப்பவன் எமது நபியான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் மறுமை நாள்வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றி நடப்போர் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் அருள் வளமும் உண்டாவதாக.
(அல்வதூத்) இரக்கமுள்ளவன் (அஷ்ஷாகிர்) நன்றியுடையவன் (அஷ்ஷகூர்) மிக அதிகம் நன்றி பாராட்டுபவன் (அஸ்ஸய்யித்)அதிகாரமிக்க தலைவன் (அஸ்ஸமத்) எவ்விதத்தேவையுமில்லாதவன் (அல் காஹிர்) அடக்கியாள்பவன் (அல் கஹ்ஹார்) மிகப்பெரும் அதிகாரம் செலுத்துபவன் எழுதியவர் ஸஈதுப்னு அலி இப்னி வஹ்ப் அல் கஹ்தானி
(அல் ஜப்பார்)அடக்கியாள்பவன் (அல் ஹஸீப்) விசாரணை செய்து தீர்ப்பளிப்பவன் (அல் ஹாதி) நேர்வழி காட்டுபவன் (அல் ஹகம்) தீர்ப்பளிப்பவன் (அல் குத்தூஸ்) அனைத்துக் குறைகளைவிட்டும் மிகத்தூய்மையானவன் (அஸ்ஸலாம்) சாந்தியளிப்பவன் (அல் பர்ரு) பேருபகராம் செய்பவன் ஹி 1408 ம் வருடம் ஷஃபான் மாதத்தில் இந்நூல் எழுதி முடிக்கப்பட்டது.
துஆவின் சிறப்பு
(அல் வஹ்ஹாப்) பெருங் கொடையாளன் (அர்ரஹ்மான்) அளவற்ற அருளாளன் (அர்ரஹீம்) நிகரற்ற அன்புடையோன் (அல் கரீம்) சங்கை மிக்க தயாளன் (அல்அக்ரம்) மிக உயர்ந்த கொடையாளன் (அர்ரஊப்) மிகவும் இரக்கமுடையவன் (அல்பத்தாஹ்) அருள் வாயில்களை திறப்பவன்
(அர்ராஸிக்) வாழ்வாதாரத்தை அளிப்பவன் (அர்ரஸ்ஸாக்) வரையரையின்றி வாழ்வாதாரத்தை அளிப்பவன் (அல்ஹய்யு) நித்திய ஜீவன் (அல் கய்யூம்) நிர்வகிப்பவன் (அர்ரப்பு) இரட்சகன் (அல் மலிக்) தீர்ப்பு நாளின் அதிபதி (அல்மலீக்) அதிகாரம் படைத்த பேரரசன் இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : “இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.” (ஸூறது ஃஹாபிர், வசனம் : 60) மேலும் அல்லாஹ் கூறுகிறான் இன்னும், என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன்” (எனக் கூறுவீராக!). ஆக, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளி(த்து கீழ்ப்படிந்து நட)ப்பார்களாக! இன்னும், அவர்கள் என்னையே நம்பிக்கை கொள்வார்களாக! ஸூறதுல் பகரா, வசனம்: 186 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “துஆ என்பது வணக்கமாகும், உமது இரட்சகன் கூறியுள்ளான்: நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்தியுங்கள் நான் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பேன்” .(3) மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக உங்களின் இரட்சகன் நாணமுடையவனும், கொடை வள்ளலுமாவான். எனவே தன் அடியான் அவனின் இரண்டு கைகளையும் தன்னிடம் உயர்த்துகின்ற போது அதனை வெறுமையாக திருப்பிவிடுவதற்கு அவன் வெட்கப்படுகின்றான்" (4) மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “ ஒரு முஸ்லிம் பாவகாரியத்திற்காகவோ உறவுகளை துண்டிக்கும் வகையிலோ அன்றி, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்ற போது அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை வழங்குவான்: அவனின் பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது அப்பிரார்த்தனை மறுமையில் கூலி வழங்குவதற்காக சேமித்து வைக்கப்படும். அல்லது அவன் கேட்ட பிரார்த்தனைக்கு நிகரான தீங்கிலிருந்து அவனுக்குப் பாதுகாப்புக்கிடைக்கும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, நபித்தோழர்கள், ‘அவ்வாறாயின் நாம் அதிகம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம் அதிகமாக இறைஞ்சுங்கள்) அல்லாஹ் மிக அதிகமாக வழங்குபவன் என்று கூறினார்கள்”. (5) (3) அபூதாவுத் 2/78 ஹதீஸ் எண் 1481, திர்மிதி 5/211 ஹதீஸ் எண் 2959, இப்னு மாஜஃ 2/1258 ஹதீஸ் எண் 3828. இந்த ஹதீஸை அஷ்ஷேஹ் அல்பானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தனது ஸஹீஹ் அல் ஜாமிஇஸ் ஸகீரில் 3/150 லும், ஸஹீஹ் இப்னி மாஜஃவில் 2/324 லும் ஸஹீஹானது என தீர்ப்பளித்துள்ளார்கள். (4) இந்த ஹதீஸை அபூதாவுத் 2/78 ஹதீஸ் எண் 1488, திர்மிதி 5/557 ஹதீஸ் எண் 3556, இப்னு மாஜஃ 2/1271 ஹதீஸ் எண் 3865 லும் பதிவு செய்துள்ளனர். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரானது உறுதியானது என்று குறிப்பிட்டுள்ளதுடன் அஷ்ஷேய்ஹ் அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதி 3/179 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனக் குறிப்பிட்டுள்ளார். (5) இந்த ஹதீஸை திர்மிதி 5/566, 5/462 ஹதீஸ் எண் 3573, அஹ்மத் 3/18 ஹதீஸ் எண் 11150லும் பதிவு செய்துள்ளனர். அஷ்ஷேய்ஹ் அல்பானி அவர்கள் ஸஹீஹுல் ஜாமிஇஸ் ஸகீரில் 5/116 லும், ஸஹீஹ் ஸுனன் திர்மிதியில் 3/140 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் வாஹித்) தனித்தவன் (அல் அஹத்) ஒருவன் (அல் முதகப்பிர்) பெருமைக்குரியவன் (அல் காலிக்) படைப்பாளன் (அல் கல்லாக்) மிகச்சிறப்பான படைப்பாளன் (அல் பாரிஉ) இல்லாமையிலிருந்து உருவாக்குபவன் (அல் முஸவ்விர்) உருவமைப்பவன் துஆவின் ஓழுங்குகளும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்களும் (6) (6) துஆவின் இவ்வொழுங்குகள் குறித்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள் குறித்தும் ஆதாரங்களுடன் மூல நூலில் காண்க 3/927-975
(அல் முஃமின் )அச்சம்தீர்த்து அபயமளிப்பவன் (அல் முஹைமின்) பராமரித்து பரிபாளிப்பவன் (அல் முஹீத்) சூழ்ந்து அறிபவன் (அல் முகீத்) யாவருக்கும் வாழ்வதற்குரியவற்றை வழங்குபவன் (அல் வகீல்) காரியங்களைப் பொறுப்பேற்பவன் (அல் காபி) அனைத்துப்படைப்பினங்களுக்கும் போதுமானவன் (அல் வாஸிஃ) தாராளத்தன்மைமிக்கவன் 1-(இஹ்லாஸ்) அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் பிரார்த்தனையில் ஈடுபடல்
(அல் ஹக்) உண்மையாக வணங்கத்தக்கவன் (அல் ஜமீல்) மிக அழகானவன் (அர்ரபீக்) மிகவும் மென்மையானவன் (அல் ஹயீய்) நாணமுள்ளவன் (அஸ்ஸித்தீர்) குறைகளை மறைப்பவன் (அல் இலாஹ்) உண்மையான கடவுள் (அல் காபிழ்) வாழ்வாதரங்களை தன்வயப்படுத்துபவன் 2- அல்லாஹ்வை புகழ்ந்து பாராட்டி நபியவர்கள் மீது ஸலவாத் கூறி துஆவை ஆரம்பித்து அவ்வாறே (அல்லாஹ்வை புகழ்ந்து நபியவர்கள் மீது ஸலவாத் கூறி) துஆவை முடித்தல்.
(அல் பாஸித்) தாராளமாக வழங்குபவன் (அல் முஃதி) யதார்த்தமாக கொடுப்பவன் (அல் முகத்திமு) முற்படுத்துபவன் (அல் முஅஹ்ஹிரு) பிற்படுத்துபவன் (அல் முபீன்) தெளிவை வழங்குபவன் (அல் மன்னான்) அடியார்களின் நிலையறிந்து தாராளமாக வழங்குபவன் (அல் வலிய்யு) அதிகாரப்பொறுப்பாளன் 3-துஆவை மன உறுதியுடன் கேட்பதுடன் அதற்கு பதில் கிடைக்கும் என உறுதியான நம்பிக்கை கொள்ளல்
(அல் மவ்லா) எஜமான் (அன்னஸீர்) மிகவும் உதவிசெய்பவன் (அஷ்ஷாபீ) நோய்நிவாரணி அளிப்பவன் (மாலிகுல் முல்க்) அரசாட்சிக்குரியவன் (ஜாமிஉன்னாஸ்) மனிதர்களை ஒன்று சேர்ப்பவன் 4- அவசரப்படாது மன்றாடிக் கேட்டல்.
(நூருஸ்ஸமாவாதி வல்அர்ழி) வானங்களினதும் பூமியினதும் ஒளி (துல் ஜலாலி வல் இக்ராம்) மகத்துவமும் கண்ணியமும் மிக்கவன் (பதீஉஸ் ஸமாவாதி வல் அர்ழி) வானங்கள் மற்றும் பூமியினை எவ்வித முன்னுதாரணமுமின்றி படைத்தவன் 5- துஆவில் மனதை ஒருநிலைப்படுத்தல். [١] இத்திருநாமங்களை அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆதாரங்களுடன், ஆசிரியரின் நூலான (அல் குர்ஆன் அஸ்ஸூன்னா ஒளியில் அல்லாஹ்வின் திருநாமங்களுக்கான விளக்கவுரை ) எனும் நூலில் காண்க
6- செழிப்பான மற்றும் நெருக்கடியான (இன்பமான துன்பமான) எல்லா நிலைகளிலும் துஆக் கேட்டல்
7- அல்லாஹ்விடம் மாத்திரமே கேட்க வேண்டும்
8- தனக்கும் தனது செல்வம் மற்றும் உறவினர், பிள்ளைகள் ஆகியோருக்கு பாதகமாக துஆ கேட்கக் கூடாது
9-துஆவின் போது சப்தத்தை தாழ்த்தி அமைதியாகப் பிரார்த்தித்தல்
10-தனது பாவத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக பாவமன்னிப்புக் கோறுதல். மேலும் அல்லாஹ் தமக்களித்த அருட்கொடைகளை முழுமையாக ஏற்று அதற்காக நன்றி செலுத்துதல்
11- துஆவின் போது இலக்கிய நயத்துடன் அடுக்கு மொழியில் பிரார்த்திப்பதற்கு சிரத்தை எடுத்தல் கூடாது
12-துஆவின் போது மன்றாடி பணிவுடனும் ஆர்வத்துடனும் அச்சத்துடனும் பிரார்தித்தல்.
13- பிறரின் உரிமைகளில் அநியாயமாக அத்துமீறி நடந்திருந்தால் உரிமைகளை மீள செலுத்துவதுடன், பிறருக்கு அநியாயம் செய்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோரி, தவ்பா செய்து கொள்ளுதல்.
14-ஒரு விடயத்தை மூன்று தடவைகள் கேட்டல்
15- கிப்லாவை முன்னோக்குதல்
16- இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தித்தல்
17- முடிந்தால் துஆக் கேட்பதற்கு முன் வுழு செய்து கொள்ளல்
18- துஆக் கேட்பதில் எல்லை மீறாது இருத்தல்
19-பிறருக்காக பிரார்த்திக்கும் போது முதலில் தனக்காக பிரார்தித்துக்கொள்ளுதல் (7) [7] பிரார்த்தனையின் போது தனக்காக நபியவர்கள் முதலில் பிரார்த்தித்ததற்கான உறுதியான ஆதாரங்கள் வந்துள்ளது போல், அவர்கள் பிறருக்காக பிரார்தனை செய்த போது, அதாவது அனஸ் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), உம்மு இஸ்மாயீல் போன்றோருக்கும் மற்றவர்களுக்கும் பிரார்த்திக்கும் போது தமக்காக முதலில் பிரார்த்திக்கவில்லை என்ற உறுதியான ஆதாரங்களும் வந்துள்ளன. இச்சட்டப்பிரச்சினை தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரை நூலான ஷர்ஹூன் நவவி லிஸஹீஹ் முஸ்லிம் (15/144) என்ற நூலையும், ஸுனன் திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்பதுல் அஹ்வதியையும் (9/328) ஸஹீஹ் புஹாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியையும் (1/281) பார்க்கவும்.
20- அல்லாஹ்வின் திருநாமங்கள் மூலமும் அவனின் உயர்பண்புகள் மூலமும் வஸீலா தேடுதல் வேண்டும். (அதாவது அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் கூறிப் பிரார்த்தித்தல்) அல்லது பிரார்த்திப்பவர் தான் செய்த நல்லமலை முன்னிறுத்தி பிரார்த்தித்தல் அல்லது உயிர் வாழும் ஒரு நல்ல மனிதரிடம் தனக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்ளல்.
21-உணவு, பானம், உடை அனைத்தும் ஹலாலானதாக இருத்தல் வேண்டும்.
22- பிரார்த்தனையில் பாவகாரியங்களையோ, உறவுகளை துண்டித்து நடப்பதற்கான விடயங்களையோ கேட்கக் கூடாது.
23- பிரார்த்திப்பவர் நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றவராக இருத்தல் வேண்டும்.
24- எல்லா வகையான பாவகாரியங்களிலிருந்தும் விலகியிருத்தல்.
துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள் (8) : (8) இந் நேரங்கள், நிலைமைகள், இடங்கள் தொடர்பாக ஆதரங்களுடன் விரிவாக அறிந்து கொள்ள இப்புத்தகத்தின் மூல நூலில் பாகம் 3ல் 975- 1117 வரை பார்க்கவும்
1- லைலதுல் கத்ர் இரவில் கேட்கும் துஆ.
2- இரவின் இறுதிப்பகுதியில் கேட்கும் துஆ.
3- கடமையான ஐவேளைத் தொழுகைகளின் இறுதியில்.
4-அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்
5- ஒவ்வொரு இரவிலும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உண்டு, அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆ.
6- கடமையான தொழுகைகளுக்காக அதான் சொல்லப்படும் போது கேட்கும் துஆ.
7- மழை பொழியும் போது கேட்கும் துஆ.
8- அல்லாஹ்வுக்காக புனிதப் போரில் ஈடுபடுவதற்கு புறப்படும் நேரம் கேட்கும் துஆ.
9- வெள்ளிக்கிழமையில் உள்ள ஒரு நேரம், அதில் கேட்கும் துஆ.
ஜும்ஆ தினத்தில், அஸ்ர் தொழுகையின் பின்னுள்ள இறுதி நேரமே அந்நேரம் என்பது மிக ஏற்றமான கருத்தாகும் .( இது பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாகும்) சில வேளை குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய நேரமாகவும் இருக்கலாம் என்பது இன்னும் சிலரின் அபிப்பிராயமாகும்.
10- தூய்மையான எண்ணத்துடன் ஸம்ஸம் நீரைக் குடிக்கும்போது கேட்கும் துஆ.
11-ஸஜ்தாவின் போது கேட்கும் துஆ.
12-இரவில் தூங்கி எழும்பும் வேளையில் கேட்கும் துஆ, இது குறித்து ஹதீஸில் வந்துள்ள துஆவை ஒதுதல்.
13- வுழு செய்த நிலையில் தூங்கி, பின்னர் இரவில் விழிப்பேற்பட்டு அவ்வேளை கேட்கும் துஆ.
14-' லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினல் ளாலிமீன்'- என்று ஓதி விட்டு கேட்கும் துஆ (உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்கு உரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்)
15- ஒருவர் இறந்த வேளை அவருக்காக மக்கள் கேட்கும் துஆ.
16- தொழுகையின் கடைசி அத்தஹிய்யாதில் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்து ஓதியதற்குப் பின் கேட்கும் துஆ.
17- அல்லாஹ்வின் எந்த மகிமை மிக்க பெயரைக் கூறி அழைக்கும் போதும், கேட்கும் போதும் அவன் பதிலளிக்கவும், கொடுக்கவும் செய்கின்றானோ (அல் இஸ்முல் அஃழம்) அதைக் கூறிக் கேட்கும் துஆ. (9) அல்லாஹ்வின் (அல் இஸ்முல் அஃழம்) மகத்தான பெயரை, இப்புத்தகத்தில் ஹதீஸ் எண் 203 லும், ஹதீஸ் எண் 104 லும், ஹதீஸ் எண் 105 லும் காண்க.
18- ஓரு முஸ்லிம் தமது முஸ்லிமான சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் துஆ.
19- அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் கேட்கும் துஆ.
20- ரமழான் மாதத்தில் கேட்கும் துஆ.
21- மார்க்க அறிவு கற்பிக்கும் சபைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி இருக்கும் போது கேட்கும் துஆ
22-சோதனை ஏற்படும் போது 'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்', 'அல்லாஹு ம்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அக்லிப்லீ ஹைரம்மின்ஹா', (நிச்சயமாக நாங்கள் அல்லஹ்விற்கே சொந்தமானவர்கள். அவன் பக்கமே மீளுவோராக இருக்கிறோம். யா அல்லாஹ் எனக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்கு நற்கூலி வழங்குவாயாக! அதைவிடச் சிறந்ததைப் பகரமாகத் தந்திடுவாயாக) என்று ஓதி கேட்கும் துஆ
23- உள்ளம் அல்லாஹ்வின் பால் ஆகர்சிக்கப்பட்டு மனத்தூய்மை ஏற்படும் போது கேட்கும் துஆ
24- அநீதியிழைக்கப்பட்டவர் அநீதி இழைத்தவருக்கு எதிராக கேட்கும் துஆ.
25- தந்தை தனது மகனுக்குச் சார்பாக அல்லது பாதகமாக கேட்கும் துஆ.
26- பயணத்தின் போது பிரயாணி கேட்கும் துஆ.
27- நோன்பாளி நோன்பு துறக்கும் வரையில் கேட்கும் துஆ.
28- நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் துஆ.
29- நிர்கதிக்குள்ளானவர் கேட்கும் துஆ.
30- நீதியான அரசர் கேட்கும் துஆ.
31- தனது பெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும் துஆ.
32- வுளு செய்த பின்னர் ஹதீஸில் வந்துள்ள துஆவை ஓதி, அதன் பின்னர் கேட்கும் துஆ
33-ஹஜ்ஜில் சிறிய ஜம்ராவில் கல்லெறிந்ததன் பின் கேட்கும் துஆ.
34- -ஹஜ்ஜில் மத்திய ஜம்ராவில் கல்லெறிந்ததன் பின் கேட்கும் துஆ.
35- கஃபாவின் உள்ளே கேட்கும் துஆ. யார் கஃபாவின் ஹிஜ்ர் எனப்படும் அரைவட்ட சுவர்ப்பகுதிக்குள் தொழுதாலும் துஆக் கேட்டாலும் அது கஃபாவின் உள்ளே தொழுததாகவும், துஆக் கேட்டதாகவும் அமையும்.
36- ஸபா மலையின் மீதேறிக் கேட்கும் துஆ.
37- மர்வா மலையின் மீதேறிக் கேட்கும் துஆ.
38- ஹஜ்ஜில் “அல்மஷ்அருல் ஹராமில்” கேட்கப்படும் துஆ.
ஓர் இறை நம்பிக்கையாளன் எப்போதும் எங்கிருந்த போதும் தனது இரட்சகனிடம் பிரார்த்திக்கின்றவானாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “இன்னும், என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன்” (எனக் கூறுவீராக!). ஆக, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளி(த்து கீழ்ப்படிந்து நட)ப்பார்களாக! இன்னும், அவர்கள் என்னையே நம்பிக்கை கொள்வார்களாக!”. (ஸூறதுல் பகரா, வசனம்: 186) என்றாலும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் கூடுதலாக கருத்திற் கொள்ளப்படவேண்டும்.
புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே உரித்தாகட்டும். ஸலாத்தும் ஸலாமும் இறுதி நபி (ஸல்)அவர்களின் மீது உண்டாவதாக.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன் புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இரட்சகன் அல்லாஹ்விற்கே உரியது! (அவன்) பேரருளாளன் பேரன்பாளன் கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து! (அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர். ஸூறத்துல் பாத்திஹா, வசனங்கள் 1-7.
2- ((رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ)) (பொருள் :) "எமது இரட்சகனே! எங்களிடமிருந்து (எமது பணிகளை) ஏற்றுக்கொள்வாயாக, நிச்சயமாக நீயே யாவற்றையும் செவியுறுபவனும் அறிந்தவனுமாவாய்" ஸூறதுல் பகரா : 127
3- ((وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ)) பொருள் : (எங்கள் இரட்சகனே) எம்மை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவாய்" ஸூறதுல் பகரா : 128
4- ((رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)) ((பொருள் : எங்கள் இரட்சகனே எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தந்தருள்வாயாக மேலும் நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக)). ஸூறதுல் பகரா வசனம் : 201
5- ((سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ)) பொருள் : நாம் செவியேற்றோம் கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது (ஸூறதுல் பகரா : 285)
6- ((رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ)) பொருள் : எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!). எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! (ஸூறதுல் பகரா : 286)
8- ((رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ)) பொருள்: எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம். ஆகவே எங்கள் பாவங்களை மன்னித்து நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக ஸூறது ஆல இம்ரான் வசனம் :16
9- ((رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ)) பொருள்: என் இரட்சகனே உன்னிடமிருந்து எனக்கு ஒரு பரிசுத்தமான சந்ததியை தந்தருள்வாயாக, நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியுறுபவனாவாய்(இருக்கிறாய்) ஸூறது ஆல இம்ரான் : 38
10- ((رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ)) பொருள்: ‘‘எங்கள் இறைவனே! நீ இறக்கிய(வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' . ஸூறது ஆல இம்ரான் வசனம் : 53
11- ((ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ)) பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை பலப்படுத்தி, நிராகரிப்பாளர்களான இக்கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக ஸூறா ஆல இம்ரான் வசனம் : 147
12- ((رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ* பொருள்: எங்கள் இரட்சகனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ தூய்மையானவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ* பொருள் : எங்கள் இறைவா! நிச்சயமாக நீ எவரை நரக நெருப்பில் நுழைக்கிறாயோ அவரை திட்டமாக இழிவுபடுத்தி விட்டாய். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை. رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ* பொருள்: எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார் என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)” رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ)) பொருள்: எங்கள் இறைவா! இன்னும், உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! இன்னும், மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நிச்சயமாக நீ வாக்குறுதியை மீற மாட்டாய்’’ (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.) ஸூறது ஆல இம்ரான் வசனங்கள் (191-194)
13- ((رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ)) பொருள்: ‘‘எங்கள் இரட்சகனே நாம் நம்பிக்கை கொண்டுவிட்டோம், ஆகவே சாட்சியாளர்களுடன் எங்களையும் பதிவு செய்துகொள்வாயாக’’ . ஸூரா அல் மாஇதா : 83
14- ((رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ)) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' ஸூறதுல் அஃராப் வசனம் : 23
15- ((رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ)) பொருள்: "எங்கள் இரட்சகனே! அநியாயக்கார கூட்டத்தாருடன் எங்களை சேர்த்து விடாதே" ஸூறதுல் அஃராப் வசனம் : 47
16- اللَّهُمَّ யா அல்லாஹ்! ((أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ* பொருள்: நீதான் எங்கள் பாதுகாவலன். ஆகவே, நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! இன்னும், எங்களுக்கு கருணை புரி! மன்னிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.” وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ)) பொருள்: "இன்னும், இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை விதிப்பாயாக!" ஸூறதுல் அஃராப் வசனங்கள் 155-156
17- ((حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ)) பொருள்: "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், உண்மையாக வணங்கப்படத்தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறுயாறுமில்லை, அவன் மீதே நான் எனது பொறுப்புக்களை ஒப்படைத்து முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்" ஸூறத்துத் தவ்பா வசனம் : 129
18- எங்கள் இரட்சகனே அநியாயக்கார கூட்டத்தாரின் சோதனைக்கு எம்மை ஆளாக்கி விடாதே! وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ)) இன்னும், “நிராகரிக்கின்ற சமுதாயத்திடமிருந்து உன் கருணையினால் எங்களை பாதுகாத்துக்கொள்!” ஸூறா யூனுஸ் வசனங்கள் : 85-86
19- ((رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ)) பொருள்: "என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு உன்னிடம் நிச்சயமாக நான் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியாது விட்டால் நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவேன்" ஸூறா ஹூத் வசனம் : 47
20- ((اللَّهُم يا "யா அல்லாஹ்! ((فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ )) வானங்களையும் பூமியையும் படைத்தவனே, இம்மையிலும் மறுமையிலும் நீதான் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாக மரணிக்கச் செய்து நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக யூஸுப் வசனம் : 101 [10] (10) மேலதிக விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள இப்னுல் கைய்யுமின் அல் பவாஇத் என்ற புத்தகத்தில் 436-437 வரையிலான பகுதிகளை காண்க
21- ((رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ)) பொருள்: ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக!" ஸூறா இப்ராஹீம் வசனம் : 35
22. ((رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ)) பொருள்: என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! ஸூறா இப்ராஹீம் வசனம் : 40
23. ((رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ)) பொருள்: எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!'' ஸூறா இப்ராஹீம் வசனம் : 41
24. ((رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا)) பொருள் : ((எங்கள் இரட்சகனே ! உன்னிடமிருந்து எங்களுக்கு அருள்களை வழங்கி எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கித் தருவாயாக)) ஸூறதுல் கஹ்ஃப் வசனம் : 10
25- ((رَبِّ اشْرَحْ لِي صَدْرِي* பொருள்: என் இறைவா! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு; وَيَسِّرْ لِي أَمْرِي* பொருள்: என் காரியத்தை எனக்கு இலகுவாக்கு! وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي، يَفْقَهُوا قَوْلِي)) பொருள்: இன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு, அவர்கள் என் சொற்களை புரிந்துகொள்ளட்டும். ஸூறா தாஹா வசனங்கள் : 25-28
26- ((رَّبِّ زِدْنِي عِلْمًا)) பொருள்: ((என் இரட்சகனே !அறிவை எனக்கு அதிகப் படுத்தித்தருவாயாக!)) ஸூறா தாஹா வசனம் : 114
27- ((لا إِلَهَ إِلا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ)) பொருள் : 'உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்கு உரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்' ஸூறதுல் அன்பியா வசனம் : 87
28- ((رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ)) பொருள் : ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டு விடாதே! நீயோ வாரிசாகக் கூடியவர்களில் மிக்க மேலானவன்'' ஸூறதுல் அன்பியா வசனம் : 89
29. ((رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ * பொருள் : என் இறைவனே! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ)) பொருள் : இன்னும், என் இறைவா! அவர்கள் என்னிடம் (என் காரியங்களுக்குள்) வந்து கலந்துவிடுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். ஸூறதுல் முஃமினூன் வசனங்கள்: 97-98
30 - ((رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ)) பொருள் : எங்கள் இரட்சகனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொண்டோம். ஆகவே எம்மை மன்னித்து எங்களுக்கு அருள்புரிவாயாக! அருள்புரிவோரில் நீயே சிறந்தவன் " ஸூறதுல் முஃமினூன் வசனம்: 109
31. ((رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ)) பொருள் : ((எனது இரட்சகனே! (என்னை) நீ மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் மிகச் சிறந்தவனாவாய்)) முஃமினூன் : 118
32- ((رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا* பொருள்: எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ திருப்பி விடுவாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும், إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا )) பொருள்: நிச்சயமாக அது நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் மிக கெட்டது. (ஸூறதுல் புர்கான் வசனங்கள் : 65-66)
33- ((رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا)) பொருள்: எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக! (ஸூறதுல் புர்கான் வசனம் : 74)
34- ((رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ* பொருள்: என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக! وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الآخِرِينَ * பொருள்: இன்னும், பின்வருவோர்களில் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ)) இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் ஆக்கிவிடுவாயாக! ஸூறதுஷ்ஷுஅராஉ வசனங்கள் : 83-85
35. ((وَلا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ * பொருள்: (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே! يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ * பொருள்: செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில். إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيم)) பொருள்: எனினும், யார் (சந்தேகமில்லாத) பாதுகாப்பான (நம்பிக்கை உள்ள) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ அவரைத் தவிர . ஸூறதுஷ்ஷுஅராஉ வசனங்கள் 87-89
36- ((رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِين)) பொருள்: எனது இரட்சகனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் செய்த உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக்கொள்ளும் நல்லறத்தை செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் சேர்த்து விடுவாயாக. ஸூறதுன் நம்ல் வசனம்: 19
37- ((رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي)) பொருள்: என் இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்து கொண்டேன். ஆகவே என்னை மன்னித்தருள்வாயாக! (37) ஸூறதுல் கஸஸ் வசனம் : 16
38- ((رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ)) பொருள்: எனது இரட்சகனே! அநியாயக்கார கூட்டத்திலிருந்து என்னை காப்பாற்றுவாயாக! ஸூறதுல் கஸஸ் வசனம் : 21
39- ((عَسَى رَبِّي أَن يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ)) பொருள் : ((எனது இரட்சகன் என்னை நேரான பாதையில் செலுத்தப் போதுமானவன்)). ஸூறதுல் கஸஸ் வசனம் : 22
40 - ((رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ)) பொருள்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. (ஸூறதுல் கஸஸ் வசனம் : 24)
41- ((رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ)) பொருள்: ((எனது இரட்சகனே குழப்பம் விளைவிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக)). (ஸுறதுல் அன்கபூத் வசனம் : 30)
42- ((رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ)) பொருள்: ‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (ஸூறதுஸ்ஸாப்பாத் வசனம் : 100)
43 - ((رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ)) பொருள்: என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் சந்ததியை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நான் முற்றிலும் வழிப்படும் முஸ்லிம்களில் உள்ளவனாவேன்". (ஸூறதுல் அஹ்காப் வசனம் : 15)
44- ((رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإِيمَانِ وَلا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلاً لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ)) பொருள்: எங்கள் இறைவனே! எங்களையும் நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! மேலும் நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவனும் நிகரற்ற அன்புடையவனுமாவாய். (ஸூறதுல் ஹஷ்ர் வசனம் :10
45- ((رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ)) பொருள்: எங்கள் இரட்சகனே! உன் மீதே நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்து விட்டோம். மேலும் உன்னிடமே மீண்டு விட்டோம் உன்னிடமே மீழுதல் உள்ளது" (ஸூறதுல் மும்தஹினா வசனம் : 4)
47. ((رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ)) பொருள்: என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கைகொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கைகொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக. (ஸூறது நூஹ் வசனம் : 28)
48- ((رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)) பொருள்: எங்கள் இரட்சகனே எங்கள் ஒளியை எங்களுக்குப் பூரணப்படுத்துவாயாக! மேலும் எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ யாவற்றின் மீதும் பேராற்றளுடையவன்" (ஸூறதுத்தஹ்ரீம் வசனம் : 8)
49-((اللَّهُمَّ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ)) பொருள்: யா அல்லாஹ் உனது நாட்டப்படி எந்த சத்தியம் குறித்து கருத்து வேறுபாடு இருக்கிறதோ அதில் நேரான வழியைக் காட்டுவாயாக! நிச்சயமாக! நீ நாடியவர்களுக்கு நேரான வழியைக் காட்டக்கூடியவனாக இருக்கிறாய் (11) (11)ஸூறதுல் பகராவின் வசனம் 213 ஐ அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட ஒரு துஆ
50- ((اللَّهُمَّ آتِني الحِكْمَةَ الَّتي مَنْ أُوتِيهَا فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا)) பொருள்: "யா அல்லாஹ் யாருக்கு நீ அறிவு ஞானத்தைக் கொடுக்கிறாயோ அவர் அதிக பாக்கியத்தைப் பெற்றவராவார்.அவ்வாறான அறிவு ஞானத்தை எனக்கும் தந்தருள்வாயாக" (12) (12) ஸூறதுல் பகராவின்; வசனம் 269 ஐ அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட ஒரு துஆ
51- ((اللَّهُمَّ ثَبِّتْنِي بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ)) பொருள்: யா அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு என்னை நிலை பெறச்செய்வாயாக" (13) (13) ஸூறா இப்ராஹீம் வசனம் 27 ஐ அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட ஒரு துஆ
52- ((اللَّهُمَ حَبَّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ)) பொருள்: " யா அல்லாஹ் எங்களுக்கு ஈமானை நேசத்திற்குரியதாகவும், அதனை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாயும் ஆக்கித்தந்தருள்வாயாக! மேலும் இறை நிராகரிப்பையும், பாவம் செய்வதையும், மாறு செய்வதையும் வெறுப்பானதாக ஆக்கிவிடுவாயாக! மேலும் நேர்வழிபெற்றவர்களில் எங்களையும் ஆக்கிவிடுவாயாக" (14) (14) ஸுறா அல் ஹுஜுராத் வசனம் 07 ஐ அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட ஒரு துஆ
53- ((اللَّهُمَّ قِنِي شُحَّ نَفْسِي وَاجْعَلْنِي مِنَ الْمُفْلِحِينَ)) "யா அல்லாஹ் எனதுள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக! என்னை வெற்றியாளர்களில் ஒருவராக ஆக்கிவிடுவாயாக´(15) (15) ஸூறா அத்தகாபுன் வசனம் 16 ஐ அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட ஒரு துஆ
54-- ((اللهمّ آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة وقنا عذاب النار)) பொருள்: ((யா அல்லாஹ் எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நல்லதை தந்தருள்வாயாக! மேலும் நரக வேதனையைவிட்டு எம்மைப் பாதுகாப்பாயாக)) (16) (16) புஹாரி ஹதீஸ் எண் 4522, 6389 முஸ்லிம் ஹதீஸ் எண் 2690
55- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ)) பொருள்: யா அல்லாஹ்! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யா அல்லாஹ்! பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக! வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என் உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போன்று எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ்! சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (17) (17) புஹாரி ஹதீஸ் எண் 832 முஸ்லிம் ஹதீஸ் எண் 589
56- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، والْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ)) பொருள்: யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிபம், கஞ்சத்தனம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் கப்ரின் தண்டனை மற்றும் வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்" (18) (18) புஹாரி ஹதீஸ் எண் 2823 முஸ்லிம் ஹதீஸ் எண் 2706
57- ((اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ)) பொருள்: யாஅல்லாஹ்! தாங்கமுடியாத பாரிய கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும், தீயமுடிவுகளை விட்டும் எதிரிகளின் நகைப்பை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (19) (19) புஹாரி ஹதீஸ் எண் 6347 முஸ்லிம் ஹதீஸ் எண் (2707) முஸ்லிமின் வாசகமானது; "நபி (ஸல்) அவர்கள் தாங்க முடியாத பாரிய கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் எதிரிகளின் நகைப்பை விட்டும் பாதுகாப்புத் தேடக்கூடியவர்களாக இருந்தார்கள்" என்று அமைந்துள்ளது.
58- ((اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ)) பொருள்: யா அல்லாஹ்! என் கருமங்களின் பிடிகயிறாகிய எனது தீனை சீர்படுத்தி வைப்பாயாக. எனது வாழ்க்கைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை எனக்கு நீ சீர்படுத்தி வைப்பாயாக. எனது மீள்ச்சிக்குரிய இடமாகிய எனது மறுமையை சீர்படுத்தி வைப்பாயாக. நல்லவைகள் அனைத்திலும் அதிகமாகத் தேடிக் கொள்ளக்கூடியதாக எனது வாழ்க்கையை அமைத்து தருவாயாக. அனைத்து தீங்குகளிலிருந்தும் எனக்கு நிம்மதி தரக்கூடியதாக எனது மௌத்தை அமைத்து வைப்பாயாக.(20) (20) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 2720 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(59) ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى)) பொருள்: யாஅல்லாஹ்! நேர்வழியையும், உள்ளச்சத்தையும், பேணிப்பையும், போதுமென்ற மனதையும் தருமாறு நான் உன்னிடம் கேட்கிறேன் (21) (21) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 2721 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
61- ((اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ)) பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! சரியானதைச் செய்ய வைப்பாயாக! யாஅல்லாஹ் நேர்வழியையும் சரியானதைச் செய்யும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன் (23) (23) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 2725 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
62- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ)) பொருள்: யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும், நீ அருளிய ஆரோக்கியம்; (என்னைவிட்டு) மாறுவதை விட்டும், உனது எதிர்பாராத தண்டனையை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (24). (24) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 2739 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
63- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீங்கை விட்டும், நான் செய்யாதவற்றின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (25) (25) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 2716 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
64- ((اللَّهُمَّ أكْثِرْ مَالِي، وَوَلَدِي، وَبَارِكْ لِي فِيمَا أعْطَيْتَنِي)) (([وَأطِلْ حَيَاتِي عَلَى طَاعَتِكَ، وَأحْسِنْ عَمَلِي،] وَاغْفِرْ لِي)) பொருள்: ((யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக)) (26)(( எனது வாழ்வை உனக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் நீடித்து வைப்பாயாக, மேலும் எனது செயலை சிறந்த முறையில் செய்வதற்கு உதவி புரிவாயாக)) ((மேலும் என்னை மன்னித்தருள்வாயாக)) (27) (26) இந்த துஆவிற்கு ஆதாரமாக அமைவது, நபிபயவர்கள் அனஸ் ரழி அவர்களுக்காக ((யா அல்லாஹ் அவரின் செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் அவருக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக)) என்ற துஆவாகும். இந்த துஆவானது புஹாரியில் ஹதீஸ் எண் 1982 லும் முஸ்லிமில் ஹதீஸ் எண் 660 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (27) இமாம் புஹாரி அவர்கள் அல்அதபுல் முப்ரத் என்ற நூலில் ஹதீஸ் எண் 653 ல் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அஷ்ஷேய்ஹ் அல்பானி அவர்கள் தனது ஸில்ஸிலத்துல் அஹாதீஸிஸ்ஸஹீஹாவில் ஹதீஸ் எண் 2241 லும், ஸஹீஹ் அல்அதபுல் முப்ரதில் பக்கம் 244 லும் தீர்ப்பளித்துள்ளார். அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்ட துஆவிற்கு ஆதாரமாக அமைவது, நபியவர்களிடம் ஒருவர் மனிதர்களில் மிகச்சிறந்தவர் யார் என்று கேட்டதற்கு யாரின் ஆயுல் நீண்டதாக அமைந்து செயலும் சிறந்ததாக அமைகின்றதோ அவரே மனிதர்களில் சிறந்தவர் என்று நபியவர்கள் கூறிய கூற்றாகும்))இந்த ஹதீஸானது திர்மிதியில் ஹதீஸ் எண் 2329 லும் அஹ்மதில் 17716 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஷ்ஷேய்க் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அவரின் நூலான ஸஹீஹ் திர்மிதியில் 2/271 ம் பக்கத்தில் தீர்ப்பளித்துள்ளார்கள். நான், மதிப்பிற்குரிய எங்களின் பேரறிஞரான இப்னு பாஸ் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட விடயம் குறித்து துஆ கேட்பது நபி வழியாகுமா? என்றும் கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” எனப் பதிலளித்தார்கள்.
66- ((اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ)) பொருள்: ((யா அல்லாஹ்! நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் அளவு நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை)) (29) (29) அபூதாவூதில் ஹதீஸ் எண் 5090 லும் அஹ்மதில் 5/42 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஷ்ஷேய்க் அல்பானி அவர்கள் ஸஹீஹ் அபீதாவூதில் 3/250 லும் ஸஹீஹ் அல்அதபுல் முப்ரதில் 260ம் பக்கத்திலும் அறிஞர் இப்னு பாஸ் அவர்கள் அவரின் துஹ்பதுல் அக்யார் எனும் நூலில் (24)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
67- ((لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ)) பொருள்: உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்கு உரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன் (30) (30) இந்த துஆவானது திர்மிதியில் ஹதீஸ் எண் 3505 லும் ஹாகிமில் 1/505 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை இமாம் ஹாகிம் ஸஹீஹானது என்று குறிப்பிடுகிறார். இத்தீர்ப்பை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். அத்துடன் அல்பானி அவர்கள் தனது ஸஹீஹுத் திர்மியில் 3/168 ல் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். அதன் வாசகம் பின்வருமாறு (( நபி யூனுஸ் அலை அவர்கள் மீனின் வயிற்றில் இருந்த போது 'லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன் (அல் அன்பியா : 87) என்ற தஸ்பீஹை ஓதினார்கள், எந்த ஒரு முஸ்லிம் இதனை ஓதி பிரார்த்திக்கின்றாரோ அவரின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளிக்காமல் இருப்பதில்லை".
68- ((اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي)) பொருள் : ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையினதும் உனது அடிமைப் பெண்ணினதும் மகன், எனது முன்நெற்றி உன் கைவசமே உள்ளது, உனது தீர்ப்பே என்னில் செயல்படுகிறது, என் மீதான உன் தீர்ப்பு மிகவும் நீதியானது. உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாகவும், நெஞ்சத்தின் பிரகாசமாகவும், கவலையை நீக்கக்கூடியதாகவும் துன்பத்தை போக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக)) (31) (31) ஆதாரம் : அஹ்மத் 1/391, 452 ஹாகிம் 1/509. அல் ஹாபில் இப்னு ஹஜர் அவர்கள், தக்ரீஜூல் அத்கார் எனும் நூலில் இந்த ஹதீஸ் குறித்து ஹஸன் தரத்திலானது எனவும், அல்பானி அவர்கள் தக்ரீஜ் அல்கலிமித் தய்யிப் பக்கம் 73 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்திலானது எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
69- ((اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ)) பொருள் : யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக! (32) (32) முஸ்லிம் ஹதீஸ் எண் 2654
70- ((يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّت قَلْبِي عَلَى دِينِكَ)) பொருள் : ((உள்ளங்களை நிலைமாறச் செய்பவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்திவைப்பாயாக)) (33) (33) திர்மிதியில் ஹதீஸ் எண் 3522 லும் அஹ்மதில் 4/182 லும் ஹாகிமில் 1/525, 528 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று குறிப்பிடுகிறார். இத்தீர்ப்பை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். அல்பானி அவர்கள் ஸஹீஹூல் ஜாமிஇல் 6/309 லும், ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/171 இலும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்கள். ((இந்த துஆவை நபியவர்கள் மிக அதிகமாகக் கேட்கக் கூடியவர்களாக இருந்தார்கள்)) என உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
71- ((اللَّهُمَّ إنِّي أسْألُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ)) பொருள் : ((யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றத்தை உன்னிடம் கேட்கிறேன் )) (34) [34] திர்மிதியில் ஹதீஸ் எண் 3514 லும், புஹாரியின் அல் அதபுல் முப்ரதில் ஹதீஸ் எண் 726 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திர்மிதி பதிவு செய்த அறிவிப்பின் ஹதீஸ்வாசகம் ((நீங்கள் அல்லாஹ்விடம் இம்மையிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தைத் தருமாறு வேண்டுங்கள்)) என இடம்பெற்றுள்ளது. இன்னொரு வாசகத்தின் படி ((நீங்கள் அல்லாஹ்விடம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தருமாறு வேண்டுங்கள். ஏனெனில் ஒருவருக்கு (யகீன்) மன உறுதிக்குப் பின் வழங்கப்படும் விடயங்களில் மிகச்சிறந்த விடயம் ஆரோக்கியத்தைத் தவிர வேறொன்றுமில்லை)) என இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அல்பானி அவர்கள் தனது ஸஹீஹ் இப்னி மாஜஹ்வில் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஸஹீஹ் இப்னி மாஜஹ்வில் 3/180, 3/185, 3/170ல் காணலாம்) அத்துடன் இந்த ஹதீஸின் கருத்தை பலப்படுத்தக்கூடிய, பல நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பல ஹதீஸ்கள் உண்டு. அதனை அஹ்மத் ஷாகிர் அவர்களின் ஒழுங்குபடுத்துதலுடன் தொகுக்கப்பட்ட முஸ்னத் அஹ்மதில் 1/156-157 வரை காணவும்.
72- ((اللهمّ أحْسِنْ عَاقِبَتَنَا فِي الأُمُورِ كُلِّهَا، وَأجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الآخِرَةِ பொருள்: யாஅல்லாஹ்! எங்களுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்கிவைப்பயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!)) (35) 35) அஹ்மத் 4/181 லும், அத்தபரானி அவர்கள் தனது (அல் முஃஜமுல்) கபீரில் 2/33 ல் ஹதீஸ் எண் 1169 லும் மேலும் அத்துஆ என்ற நூலில் ஹதீஸ் எண் 1436 லும் இப்னு ஹிப்பான் அவர்கள் மவாரிதில் (ழம்ஆன்) ஹதீஸ் எண் 2424, 2425 லும் பதிவு செய்துள்ளனர். அல் ஹாபிழ் அல் ஹைஸமி தனது மஜ்மஉஸ்ஸவாஇத் என்ற நூலில் 10/178 ல், இமாம் அஹ்மதின் அறிவிப்பாளர்கள் யாவரும் நம்பகமானவர்கள் என்றும், தபரானியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஓர் அறிவிப்பாளர் தொடர் மாத்திரமே நம்பகமானது எனவும் இந்த ஹதீஸ் குறித்து குறிப்பிடுகிறார்.
73-((رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهاً مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي)) பொருள்: ((யாஅல்லாஹ்! எனக்கு (நற்காரியங்களை செய்வதற்கு) உதவி செய்வாயாக! எனக்கு எதிராக(நற்காரியங்களை தடுக்கின்றவர்களுக்கு) உதவி செய்யாதிருப்பாயாக! எனக்கு உதவிசெய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்குதவியாக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு இலகுபத்திடுவாயாக! அத்துமீறி அநீதி இழைப்பவருக்கு எதிராக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்துபவனாக உன்னை அதிகம் நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு அதிகம் வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக எல்லா விவகாரகங்களிலும் உன்பக்கம் சார்ந்திருப்பவனாக என்னை ஆக்குவாயாக! எனது இரட்சகனே! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக எனது பாவங்களை போக்கிடுவாயாக எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை உறுதிபெறச்செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் குரோதங்களையும் பிறர்மீதான வெறுப்புகளையும் அகற்றிடுவாயாக!)) (36) (36) புஹாரியின் அல் அதபுல் முப்ரதில் ஹதீஸ் எண் 664, 665 லும் அபூதாவூதில் ஹதீஸ் எண் 1510, 1511 லும் திர்மிதியில் ஹதீஸ் எண் 3551 லும் இப்னு மாஜஹ்வில் ஹதீஸ் எண் 3830 லும் அஹ்மதில் 1/127 லும் ஹாகிமில் 1/519 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் என தீர்ப்பளித்ததை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். மேலும் அல்பானி அவர்கள் ஸஹீஹ் அபீதாவூதில் 1/414 லும், ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/178 லும் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
74- ((اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ -صلى الله عليه وسلم- ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ -صلى الله عليه وسلم- ، وَأَنْتَ الْمُسْتَعَانُ، وَعَلَيْكَ الْبَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)) பொருள்: யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து நல்லவற்றையும் நாங்களும் உன்னிடம் கேட்கிறோம், மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நாமும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம். நீயே உதவி செய்பவனும் வழிகாட்டுபவனுமாவாய். அல்லாஹ் விதித்தவற்றிலிருந்து விலகவோ விதிக்காதவற்றை செய்ய சக்தி பெறவோ அவன் துணையின்றி முடியாது. (37) (37) திர்மிதியில் ஹதீஸ் எண் 3521 லும் இப்னுமாஜஹ் ஹதீஸ் எண் 3846 லும் இதே கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ் ((ஹஸன் கரீப்)) எனத் தீர்ப்பளித்துள்ளார். அல்பானி அவர்கள் ழஈப் அத்திர்மிதியில் 387 ம் பக்கத்தில் இந்த ஹதீஸ் பலவீனமானது எனத் தீர்ப்பளித்துள்ளார்
75- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي)) பொருள்: ((யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும், பார்வையின் தீங்கை விட்டும், நாவின் தீங்கைவிட்டும், உள்ளத்தின் தீங்கைவிட்டும், எனது மறையுறுப்பின் தீங்கைவிட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (38) (38) அபூதாவூதில் ஹதீஸ் எண் 1551 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 3492 லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 5470 லும் மற்றும் பலரும் இந்த ஹதீஸை பதிவுசெய்துள்ளனர். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/166 லும், ஸஹீஹ் நஸாஈயில் 3/1108 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
76- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (39) (39) அபூதாவூதில் ஹதீஸ் எண் 1554லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 5493 லும், அஹ்மதில் 3/192 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் நஸாஈயில் 3/1116 லும், ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/184 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
77- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ، وَالْأَعْمَالِ، وَالْأَهْوَاءِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், இச்சைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (40) (40) திர்மிதியில் ஹதீஸ் எண் 3591 லும், இப்னு ஹிப்பான் மவாரிதில் (ழம்ஆன்) ஹதீஸ் எண் 2422 லும், ஹாகிம் 1/532 லும், தபரானி (அஸ்ஸூனன்) அல்கபீரில் 19/19/36 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள்; ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/184 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
78- ((اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي)) பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பவன், பெரும் கொடையாளன், நீ மன்னிப்பை விரும்புகின்றாய், எனவே என்னை மன்னித்தருள்வாயாக (41) (41) திர்மிதியில் ஹதீஸ் எண் 3513 லும், நஸாஈயின் (அஸ்ஸுனன்) அல்குப்ராவில் ஹதீஸ் எண் 7712 லும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/170 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
79- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي، وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُنِي إِلَى حُبِّكَ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்யவும் தீமைகளை விட்டுவிடவும் ஏழைகளை நேசிக்கவும் நல்லருள்புரியுமாறும் மேலும் என்னை நீ மன்னித்து இரக்கம் காட்டுமாறும் கேட்கிறேன். நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நாடினால், அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்))(42) (42) அஹ்மத் 5/243 லும், திர்மிதி அவர்கள் ஹதீஸ் எண் 3235 லும் இவ்வாசகத்தை பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸை திர்மிதி பதிவு செய்து விட்டு, ஹஸன் தரத்திலானது எனக் குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸ் குறித்து, முஹம்மதுப்னு இஸ்மாயிலிடம் (புகாரி அவர்களிடம்) கேட்ட போது, இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் அமைந்துள்ளது எனக் கூறினார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஹதீஸின் இறுதியில், ((இது உண்மையானது; ஆகவே இதனைக் கற்றுக் கொள்ளுங்கள்)) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது. ஹாகிம் (1/521) அவர்களும் இதை அறிவித்துள்ளார்கள். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/318 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
80- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ: عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ [مَا اسْتَعَاذَ بِكَ] [مِنْهُ] عَبْدُكَ وَنَبِيُّكَ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا)) பொருள்: ((யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற நான் அறியாத அனைத்து நன்மையானவற்றையும் இவ்வுலகிலும் மறுமையிலும் தருமாறு உன்னிடம் வேண்டுகிறேன். மேலும்; நான் அறிந்துள்ள நான் அறியாது இருக்கின்ற அனைத்து தீமைகளிலிருந்தும் இவ்வுலகிலும் மறுமையிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் வேண்டிய நன்மையான விடயங்களை உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீங்குகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். யாஅல்லாஹ்! நான் சுவனத்தையும் அதன்பால் நெருக்கிவைக்கும் சொல்லையும் செயலையும் கேட்கிறேன். மேலும் நான் உன்னிடம் நரகிலிருந்தும் அதன்பால் நெருக்கி வைக்கும் சொல் செயல்களை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் எனக்கு நீ நிர்ணயித்துள்ள விதிகள் அனைத்தையும் நல்லதாக்கி தருமாறும் கேட்கிறேன்))(43) (43) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3846 லும், அஹ்மதில் 6/134 லும் ஹாகிமில் 1/521 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னி மாஜாவில் 2/327 ல் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
81- ((اللَّهُمَّ احْفَظنِي بالإِسْلاَمِ قائِماً، واحْفَظْنِي بالإِسْلاَمِ قاعِداً، واحْفَظنِي بالإِسْلاَمِ راقِداً، ولا تُشْمِتْ بِي عَدُوّاً ولا حاسِداً. اللَّهُمَّ إِنِّي أسْألُكَ مِنْ كُلِّ خَيْر خزائِنُهُ بِيَدِكَ، وأعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ)) பொருள்: யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் அமர்ந்திருக்கும் போதும் உறங்கும் போதும் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் நகைப்பிற்கு ஆட்படுத்தாதிருப்பாயாக! யாஅல்லாஹ்! உன் கைவசம் உள்ள பொக்கிஷங்களில் நல்லவை அனைத்தையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன் கைவசமுள்ள பொக்கிஷங்களில் தீயவை அனைத்தைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (44) (44) ஹாகிமில் 1/525 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் ஜாமிஇல் 2/398 லும், ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவில் 4/54 ஹதீஸ் எண் 1540 லும் ஹஸன் தரத்திலான ஹதீஸ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
82- ((اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُولُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، اللَّهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُوَّاتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا)) பொருள்: ((யாஅல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடியவைகளை எமக்குத் தருவாயாக! உன்னைப் பற்றிய அச்சத்தையும் உன்னுடைய சுவனத்தைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் தருவாயாக! உலக சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் யகீன் எனும் மன உறுதியையும் எமக்குத் தருவாயாக! யா அல்லாஹ்! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை உயிர் வாழ வைக்கும் காலம் வரையில் சிறந்த முறையில் உனக்கு வழிப்படுவதில் ஆக்கிவிடுவாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் கொடுத்திடுவாயாக! எங்களது பழிவாங்கலை எங்களுக்கு அநீதம் செய்தவர்களுக்கு எதிரானதாக ஆக்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தாதிருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் இலட்சியமாகவும் எங்கள் அறிவின் குறிக்கோளாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது கருணைகொள்ளாதவரை பொறுப்பாளாராய் சாட்டிவிடாதிருப்பாயாக! ))(45) (45) திர்மிதியில் ஹதீஸ் எண் 3502 லும், ஹாகிமில் பாகம் 1 பக்கம் 528 லும், இப்னுஸ் ஸூன்னி ஹதீஸ் எண் 446 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மியில் பாகம் 3 பக்கம் 168 லும், ஸஹீஹ் அல் ஜாமிஇல் பாகம் 1 பக்கம் 400 ஹஸன் தரத்திலான ஹதீஸ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
83- ((اللَّهُمَّ إنِّي أَعوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأعُوذُ بِكَ مِنْ أنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ القَبْرِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், மேலும் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், இன்னும் தள்ளாத வயதுவரை உயிர் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், உலகின் சோதனை, கப்ரின் வேதனை ஆகிய அனைத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் ))(46) (46) புஹாரி ஹதீஸ் எண் 2822
84- ((اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي، وَجِدِّي، وَخَطَئي، وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي)) பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும், அறியாமையால் விளைந்த என்னுடைய தவறுகளையும், என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும், என்னைப்பற்றி நீ நன்கறிந்த எனது தவறுகளையும் மன்னித்தருள்வாயாக! நான் வேடிக்கையாகவோ வேண்டுமென்றோ மனமுரண்டாகவோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் உள்ள அனைத்துப் பாவங்களை-விட்டும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். (47) (47) முத்தபகுன் அலைஹி (புஹாரி : ஹதீஸ் எண் 6398 முஸ்லிம் : ஹதீஸ் எண் 2719)
85- ((اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ. فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ)) பொருள்: யாஅல்லாஹ்! நானே எனக்கு மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன்; உன்னைத் தவிர எனது பாவங்களை மன்னிக்க வேறு யாருமில்லை. எனவே உன் பேரருளால் என்னை மன்னித்து கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீயே மிகப் பெரும் மன்னிப்பாளனாயும் கருணையாளனுமாய் உள்ளாய் (48) (48) முத்தபகுன் அலைஹி (புஹாரி ஹதீஸ் எண் 834 முஸ்லிம் ஹதீஸ் எண் 2705)
87- ((اللَّهُمَّ إنَّا نَسْألُكَ مُوجِباتِ رَحْمَتِكَ، وَعَزائِمَ مَغْفِرَتِكَ، والسَّلامَةَ مِنْ كُلِّ إثمٍ، والغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، والفَوْزَ بالجَنَّةِ، والنَّجاةَ مِنَ النَّارِ)) பொருள்: யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பை பெற்றும் தரும் உறுதியான விடயங்களையும் உன்னிடம் கேட்கின்றோம். மேலும் பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து நல்லறங்களின் பிரதி பலன்களையும் சுவனவெற்றியையும் நரக விடுதலையையும் உன்னிடம் கேட்கின்றோம் (50) (50) ஹாகிமில் 1/525லும், பைஹகியின் அத்தஅவாத் என்ற நூலில் ஹதீஸ் எண் 206 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். இமாம் நவவியின் அல் அஸ்கார் நூலில் (340) இந்த ஹதீஸை காண்க; இந்த நூலை ஆய்வு செய்த ஆய்வாளர் அப்துல் காதிர் அல் அர்னாஊத் அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
88. - ((اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ)) பொருள்: யா அல்லாஹ் முஃமினான ஆண்கள் பெண்களின் பாவங்களை மன்னிப்பாயாக (51) (51) இந்த துஆவிற்கு ஆதாரமாக அமைவது உபாதா (ரழி) அவர்களின் ஹதீஸாகும்; “நான் நபியவர்கள் கூறுவதை கேட்டேன் :((யார் முஃமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாவமன்னிப்புக் கோருகிறாரோ அவருக்கு அனைத்து முஃமினான ஆண் பெண் சார்பாக நன்மையொன்றை அல்லாஹ் எழுதி விடுகிறான்)) இந்த ஹதீஸானது தபரானியின் அஸ்ஸுனன் அல்கபீரில் 5/202 ல் ஹதீஸ் எண் 5092 லும் மற்றும் 3/334 ல் ஹதீஸ் எண் 2155 லும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இமாம் ஹைஸமி அவர்கள் மஜ்மஉஸ்ஸவாஇதில் 10/210 ல் இந்த ஹதீஸ் மிகஉறுதியான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அல்பானி அவர்கள் அவரது ஸஹீஹுல் ஜமிஇல் 5/242 ல் ஹதீஸ் எண் 5902 ல் பதிவு செய்து விட்டு இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது என்று தீர்ப்பளித்துள்ளார்
89- ((اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي)) பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக! என்னுடைய வதிவிடத்தை எனக்கு விசாலமானதாக ஆக்கத்தருவாயாக! எனக்களித்துள்ள வாழ்வாதாரங்களில் அபிவிருத்தி செய்வாயாக! (52) (52) அஹ்மதில் ஹதீஸ் எண் 16599 மற்றும் 23114, 23188 லும் திர்மிதியில் ஹதீஸ் எண் 3500 லும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்னத் அஹ்மத்தை நூல் ஆய்வு செய்தோர் 27/144, 38/197, 38/145 ம் பகுதிகளில் இந்த ஹதீஸ் ஹஸன் லிகைரிஹி என்ற தரத்திலமைந்த ஹதீஸ் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
90- ((اللَّهُمَّ إنِّي أَسْأَلُك مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ؛ فَإِنَّهُ لاَ يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ)) பொருள்: யாஅல்லாஹ்!; நிச்சயமாக நான் உன்னுடைய அருட்கொடையிலிருந்தும் உன்னுடைய கருணையிலிருந்தும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை நீ மாத்திரம்தான் சொந்தமாக வைத்துள்ளாய் (53) (53) தபரானி அவர்கள் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். ஹைஸமி அவர்கள் தனது நூலான மஜ்மஉஸ் ஸவாஇதில் 10/159 ல், இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அனைவரும், முஹம்மத் இப்னு ஸியாதை தவிர, ஸஹீஹ் புகாரியின் அறிவிப்பாளர்கள் ஆவார்கள். முஹம்மத் இப்னு ஸியாத் அவர்கள் ஒரு நம்பகமான அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அல்பானி அவர்கள் தனது ஸஹீஹ் ஜாமிஇல் 1/404 ல் ஹதீஸ் எண் 1278 ல் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
91- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَرَمِ، وَالتَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَمِّ، وَالْغَرَقِ، وَالْحَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا)) பொருள்: யாஅல்லாஹ்! தள்ளாத வயதை அடைவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, இடிபாடுகளுக்குள் சிக்கியோ, மிகப் பெரும் சோகத்தினாலோ, நீரில் மூழ்கியோ, தீயினால் எரிந்தோ இறப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் மரண நேரத்தில் ஷைத்தான் என்னை நிலை தடுமாறச் செய்வதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய பாதையில் (போர் செய்யும்போது) புறமுதுகு காட்டி ஓடி மரணிப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு இறப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (54) (54) இந்த ஹதீஸ் அபூதாவூதில் ஹதீஸ் எண் 1552 லும் நஸாஈயில் ஹதீஸ் எண் 5531 மற்றும் 5532 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என ஸஹீஹ் அந்நஸாஈயில் 3/1123 லும், ஸஹீஹ் ஸுனன் அபீ தாவூதில் 1/425 லும் தீர்ப்பளித்துள்ளார்.
92- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ؛ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ؛ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ)) பொருள்: யாஅல்லாஹ்! பட்டினியை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது நிம்மதியைக் கெடுக்கும் மிகக்கொடிய விடயமாகும். மேலும் மோசடி செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும். (55) (55) அபூதாவூத் ஹதீஸ் எண் 1547 லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 5483லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அந்நஸாஇயில் 3/1112 இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலமைந்துள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
93- ((اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنَ العَجْزِ، والكَسَلِ، والجُبْنِ، والبُخْلِ، والهَرَمِ، والقَسْوَةِ، والغَفْلَةِ، والعَيْلَةِ، والذِّلَّةِ، والمَسْكَنَةِ، وأعُوذُ بِكَ مِنَ الفَقْرِ، والكُفْرِ، والفُسُوقِ، والشِّقاقِ، والنِّفاقِ، والسُّمْعَةِ، والرِّياءِ، وأعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ، والبَكَمِ، والجُنُونِ، والجُذامِ، والبَرَصِ، وَسَيِّىءِ الأَسْقامِ)) பொருள்: யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், தள்ளாத வயது, கல்நெஞ்சம், அலட்சியம், கையறுநிலை, இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வறுமை, இறை நிராகரிப்பு, பாவச்செயல், பிளவை ஏற்படுத்துதல், நயவஞ்சகம், பிறர் புகழ்வதற்காக செயல் படல்; முகஸ்த்துதி- ஆகியவைகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். காதுகேளாமை, பேசமுடியாமை, பைத்தியம், தொழுநோய், வெண் குஷ்டம் மற்றும் பயங்கரமான நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், (56) (56) நஸாஈயில் ஹதீஸ் எண் 5493லும், ஹாகிமில் 1/530 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் அல்ஜாமிஇல் 1/406 லும், இர்வாஉல் கலீலில் ஹதீஸ் எண் 852 லும் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
94- ((اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ)) பொருள்: ((யா அல்லாஹ்! வறுமை, பற்றாக்குறை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும் பிறரின் அநீதிக்கு இலக்காவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் ))(57) (57) அபூதாவுதில் ஹதீஸ் எண் 1544 லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 5475 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அந்நஸாஈயில் 3/1111 லும், ஸஹீஹ் அல் ஜாமிஇல் 1/407 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். (அடைப்புக்குறிக்குள் இடம்பெற்றுள்ள வார்த்தையானது இப்னு ஹிப்பானின் மவாரிதுல் ழம்ஆனில் வந்துள்ள வார்த்தையாகும்) அல்பானி அவர்கள் ஸஹீஹ் மவாரிதில் ழம்ஆனில் 2/455 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
95- ((اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامَةِ؛ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ)) பொருள்: யா அல்லாஹ்! (நான்) நிரந்தரமாக வசிக்கும் இடத்தின் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் தங்கிச்செல்லும் நாடோடி அண்டை வீட்டார் நகர்ந்து விடுபவர்கள். (58) (58) புஹாரியின் அல் அதபுல் முப்ரதில் ஹதீஸ் எண் 117 லும், ஹாகிமில் 1/532 லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 5517 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை இமாம் தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் ஜாமிஇல் 1/408 லும், ஸஹீஹ் அந்நஸாஈயில் 3/1118 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
96- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، ومِنْ َدُعَاءٍ لاَ يُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، أَعُوذُ بِكَ مِنْ هُؤُلاَءِ الأَرْبَعِ)) பொருள்: யாஅல்லாஹ்! (உனக்குப்) பயப்படாத உள்ளம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, திருப்தி அடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய நான்கு விடயங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (59) (59) திர்மிதியில் ஹதீஸ் எண் 3482 லும் அபூதாவூதில் ஹதீஸ் எண் 1549 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் தனது ஸஹீஹ் அல்ஜாமிஇல் ஹதீஸ் எண் 1295 லும் ஸஹீஹ் அந்நஸாஈயில் 3/1113 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
97- ((اللَّهُمَّ إنّي أعُوذُ بِكَ مِنْ يَوْمِ السُّوءِ، وَمِنْ لَيْلَةِ السُّوءِ، وَمِنْ سَاعَةِ السُّوءِ، وَمِنْ صَاحِبِ السُّوءِ، وَمِنْ جَارِ السُّوءِ في دَارِ الْمُقامَةِ)) பொருள்: யாஅல்லாஹ்! தீய நாளைவிட்டும், தீய இரவை விட்டும், தீய நேரத்தை விட்டும், தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) நிரந்தரமாக வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (60) (60) தபரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் குறித்து ஹைஸமி அவர்கள் (மஜ்மஉஸ் ஸவாஇத்தில் 10/144 ல்) தபரானியில் இடம் பெறும் அறிவிப்பாளர் யாவரும் ஸஹீஹ் புஹாரியின் அறிவிப்பாளர்கள் எனக் குறிப்பிடுகிறார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் ஜாமிஇல் 1/411 ஹதீஸ் எண் 1290 ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
98- ((اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ)) (ثَلاَثَ مَرَّاتٍ) பொருள்: ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனத்தைக் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் ))(மூன்று முறை) (61) (61) திர்மிதியில் ஹதீஸ் எண் 2572 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3340 லும், அந்ஸாஈயில் ஹதீஸ் எண் 5536 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதி 2/319 லும், ஸஹீஹ் அந்நஸாஈயில் 3/1121 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். இந்த துஆவானது பின்வரும் ஹதீஸ் வாசகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது (( யார் அல்லாஹ்விடம் மூன்று முறை சுவனத்தைத் தருமாறு கேட்டால் அப்போது சுவனம் யா அல்லாஹ்! இவரை சுவனத்தில் நுழைத்து விடு என்று அல்லாஹ்விடம் கூறுகிறது. யார் நரகத்தை விட்டு மூன்று முறை பாதுகபாப்புத் தேடுகிறாரோ நரகம் யா அல்லாஹ் இவரை நரகத்திலிருந்து பாதுகாத்து விடு என்று அல்லாஹ்விடம் கூறுகிறது))
99- ((اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ)) பொருள் : "யாஅல்லாஹ் எனக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருவாயாக (62) (62) இந்த துஆவிற்கு ஆதாரமாக அமைவது புஹாரியிலும் முஸ்லிமிலும் இடம்பெற்றுள்ள, நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்காக கேட்ட துஆவாகும். இந்த ஹதீஸ் புஹாரியில் ஹதீஸ் எண் 143 லும், முஸ்லிமில் ஹதீஸ் எண் 2477 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
100- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நான் அறிந்த நிலையில் உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன் ))(63) {63} அஹ்மதில் 4/403 லும், இப்னு அபீ ஷைபாவில் 10/337 லும், தபரானியின் அல் முஃஜம் அல்அவ்ஸத்தில் 4/284 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீபில் 1/19 இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்துள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
101-((اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا)) பொருள்: ((யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றைக் கற்றுத் தருவாயாக! மேலும் என்னுடைய அறிவை அதிகப்படுத்திடுவாயாக ))(64) (64) திர்மிதியில் ஹதீஸ் எண் 3599 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 259 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னி மாஜஹ்வில் 1/47 இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
102-((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا)) பொருள்: "((யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் (ஹலாலான) தூய்மையான வாழ்வாதாரத்தையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்)) (65) (65) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 925 லும், நஸாஈயின் அமலுல் யவ்மி வல்லைலாவில் ஹதீஸ் எண் 102 லும், அஹ்மதில் 6/294 மற்றும் 305 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் 1/152 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
103- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ، الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நீ தனித்தவன், ஒருவன், எவ்விதத் தேவையுமற்றவன், எவரையும் பெறவுமில்லை, எவருக்கும் பிறக்கவும் இல்லை, உனக்கு யாரும் நிகரில்லை என்பதனை முன்னிறுத்தி கேட்கிறேன். யாஅல்லாஹ்! என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டுமென கோருகிறேன். நிச்சயமாக நீயே மிகப் பெரும் மன்னிப்பாளனும் கருணையாளனும் ஆவாய்)) (66) (66) நஸாஈயில் ஹதீஸ் எண் 1300 லும், (இங்கு குறிப்படப்பட்டுள்ள வாசகம் நஸாஈக்குரியது) நஸாஈ அவர்கள் அஸ்ஸுனன் அல் குப்ராவில் ஹதீஸ் எண் 7665 லும், அபூதாவூதில் ஹதீஸ் எண் 985 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸுனன் நஸாஈயில் 1/147 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
104- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ [وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ] الْمَنَّانُ [يَا] بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ [الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ])) பொருள்: ((யாஅல்லாஹ்! நிச்சயமாக சர்வ புகழும் உனக்கே உரியது, அதனை முன்னிறுத்தி உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, நீ தனித்தவன் இணையில்லாதவன் பெரும் கொடையாளன் வானங்களையும் பூமியையும் எவ்வித முன்மாதிரியுமின்றி படைத்தவனே! வல்லமை மிக்கவனே! கண்ணியத்திற்குரியவனே! நித்தியஜீவனே! என்றும் நிலைத்திருப்பவனே! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனத்தைக் கேட்கிறேன் மேலும் நரகைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பும் தேடுகிறேன் ))(67) (67) அபூதாவூதில் ஹதீஸ் எண் 1495 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3858 லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 1299 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 3544 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அந்நஸாஈயில் 1/279 லும், ஸஹீஹ் இப்னி மாஜாவில் 2/329 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
105- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الأَحَدُ، الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ، وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே அல்லாஹ்! உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை, நீ தனித்தவன், எவ்விதத் தேவையுமற்றவன், எவரையும் பெறவுமில்லை, எவருக்கும் பிறக்கவும் இல்லை, உனக்கு நிகராக யாருமில்லை என நான் சாட்சி கூறுவதன் மூலம் நான் உன்னிடம் (என் தேவைகளைக் நிறைவேற்றுமாறு) கேட்கிறேன்))(68) (68) அபூதாவூதில் ஹதீஸ் எண் 985 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 3475 லும், இப்னு மாஜஹ்வில் ஹதீஸ் எண் 3857 லும், அஹ்மதில் 5/360 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸுனன் அத்திர்மிதியில் 3/163 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
106- ((رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ)) பொருள்: ((எனது இரட்சகனே! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவமீட்சியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே பாவமீட்சியை ஏற்றுக்கொள்பவனாகவும் பெரும் மன்னிப்பாளனுமாய் உள்ளாய்)) (69) (69) அபூதாவூதில் ஹதீஸ் எண் 1518 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 3434 லும் (மேலே குறிப்பிடப்பட்ட இவ்வாசகம் திர்மிதிக்குரியது) நஸாஈ அவர்களின் அஸ்ஸூனன் அல் குப்ராவில் ஹதீஸ் எண் 10292 லும், இப்னு மாஜஹ்வில் 3814 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னி மாஜஹ்வில் 2/321 லும், ஸஹீஹ் அத்திர்மிதியில் 3/153 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
107- ((اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيمَاً لاَ يَنْفَدُ، وأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعْ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعَدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأْلُكَ لَذَّةَ النَّظَرِ إلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ، فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَ فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ)) பொருள்: ((யாஅல்லாஹ்! உன்னுடைய மறைவான ஞானம் மற்றும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றல் ஆகியவற்றின் மூலம் கேட்கிறேன், நான் வாழ்வது எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை வாழவைப்பாயாக! நான் இறப்பதுதான் எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! நான் வெளிப்படையிலும் மறைவிலும் உன்னை அஞ்சி நடக்க உன்னிடம் கேட்கிறேன், திருப்தியிலும் கோபத்திலும் உண்மையைப் பேச (எனக்கு உதவி செய்யுமாறு) உன்னிடம் கேட்கிறேன். மேலும் வறுமையிலும், செழிப்பிலும்; நடுநிலையோடு நடந்து கொள்வதை நான் உன்னிடம் கேட்கிறேன், மேலும் முடிவுறாத அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன், இடைநிறுத்தப்படாத கண்குளிச்சியைத் தருமாறும் உன்னிடம் கேட்கிறேன், உனது தீர்ப்புக்குப் பின்னால் விதியை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளும் நிலையை நான் கேட்கிறேன், மரணத்திற்குப் பின் இதமான சுவன வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் வழி கேட்டின் குழப்பத்திலும் தீயவிளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டு விடாது உன்னை சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதின் இன்பத்தையும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன். யாஅல்லாஹ்! ஈமானின் அலங்காரத்தால் எங்களை அலங்கரிப்பாயாக! எங்களை நேர்வழி பெற்றோராகவும் (பிறரை) நேர் வழிப்படுத்துவோராகவும் ஆக்குவாயாக)) (70) (70) நஸாஈயில் ஹதீஸ் எண் 1305 லும், அஹ்மதில் 4/264 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் நஸாஈயில் 1/280 மற்றும் 1/281 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
108- ((اللَّهُمَّ ارزُقني حُبَّكَ، وحُبَّ مَنْ يَنْفَعُني حُبُّهُ عندَك، اللَّهُمَّ مَا رَزَقْتَني مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ، اللَّهُمَ مَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغاً لِي فِيمَا تُحِبُّ)) பொருள்: ((யாஅல்லாஹ்! எனக்கு உன்னுடைய அன்பையும், யாரின் அன்பு உன்னிடம் எனக்குப் பயனளிக்குமோ அவரின் அன்பையும் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! நான் விரும்பியதில் நீ எனக்கு தந்துள்ளவற்றை நீ விரும்பும் செயல்களில் நான் ஈடுபட எனக்கு வலுவூட்டக் கூடியதாக அதனை ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ தடுத்துவிட்டாய், எனவே நீ விரும்பும் செயல்களில் ஈடுபடுவதற்கு அந்த இடைவெளியை வாய்ப்பாயாக எனக்கு ஆக்குவாயாக!)) (71) (71) திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸை எண் 3491 இல் பதிவு செய்து விட்டு, ஹஸன் தரத்திலான ஹதீஸ் எனத் தீர்ப்பளித்துள்ளார். அஷ்ஷேய்க் அப்துல் காதிர் அர்நாஊத் அவர்கள் ((திர்மிதி குறிப்பிட்டது போல் அந்த ஹதீஸின் தரம் ஹஸன்தான் எனக் குறிப்பிடுகிறார்)) இந்த விடயத்தை அவர் ஆய்வு செய்த ஜாமிஉல் உஸூல் என்ற நூலில் 4/341 காணலாம்.
109- ((اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا، اللَّهُمَّ نَقِّنِي مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ، اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ)) பொருள்: யாஅல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! யாஅல்லாஹ்! அழுக்கிலிருந்து வெள்ளைத் துணியைத் தூய்மைப்படுத்தப்படுவதைப் போல் என்னை இவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! ஆழம்கட்டி பனிக்கட்டி குளிர்ந்த நீர் ஆகியவைகளைக் கொண்டு என்னை தூய்மைப் படுத்துவாயாக! (72) (72) முஸ்லிமில் ஹதீஸ் எண் 476 லும், நஸாஈயில் ஹதீஸ் எண் 400 லும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
110- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَالْجُبْنِ، وَسُوءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! கஞ்சத்தனம், கோழைத்தனம், தள்ளாத வயது, மனக் குழப்பம், மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் ))(73) (73) இந்த துஆவிற்கு ஆதாரமாக நஸாஈயில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் எண் 5469 உள்ளது. அதன் வாசகம்: ((நபி ஸல்) அவர்கள் கஞ்சத்தனம், கோழைத்தனம், தள்ளாத வயது, மனக் குழப்பம், மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந்தார்கள் )) என்று உள்ளது. இந்த ஹதீஸை அபூதாவூத் அவர்கள் ஹதீஸ் எண் 1539 ல் பதிவு செய்துள்ளார். அர்னாஊத் அவர்கள் ஜாமிஉல் உஸூல் என்ற நூலுக்கான அவரின் ஹதீஸ் ஆய்வில் 4/363 ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திளானது என தீர்ப்பளித்துள்ளார்.
111- ((اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ، وَمِيكَائِيلَ، وَرَبَّ إِسْرَافِيلَ، أَعُوذُ بِكَ مِنَ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! ஜிப்ரீல் மற்றும் மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இரட்சகனே! நரக வெப்பத்திலிருந்தும் மண்ணரை வேதனையிலிருந்தும்; நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (74) (74) நஸாஈயில் ஹதீஸ் எண் 1344 லும், அஹ்மதில் 6/61 லும், பைஹகியின் அத்தஅவாத் என்ற நூலில் ஹதீஸ் எண் 109 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் நஸாஈயில் 3/1121 லும் , ஸில்ஸிலத்துல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவில் ஹதீஸ் எண் 1544 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
112- ((اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي)) பொருள்: ((யாஅல்லாஹ்! எனக்கு நேரான பாதையை மனதில் உதிக்கச் செய்வாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னை பாதுகாப்பாயாக)) (75) (75) திர்மிதியில் (5/519) ஹதீஸ் எண் 3483 லும், அஹ்மதில் (33/197) ஹதீஸ் எண் 19992 லும், ஹாகிமில் 1/510 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இங்கு குறிப்பிடப்பட்ட ஹதீஸ் வாசகம் திர்மிதிக்குரியது) ஹாகிம் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறியுள்ளார், அதற்கு தஹபி அவர்கள் உடன்பட்டுள்ளார்கள். அஹ்மதை நூலாய்வு செய்த அறிஞர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரானது புஹாரி முஸ்லிமின் நிபந்தனை அடிப்படையில் ஸஹீஹானது என அஹ்மதில் 33/197 இந்த ஹதீஸின் தரம் குறித்து தீர்ப்பளித்துள்ளனர். ஆனால் திர்மிதியின் வாசகம் குறித்து அல்பானி அவர்கள் அது பலவீனமானது (ழஈபானது) என ழஈபுத் திர்மிதியில் பக்கம் 397 இல் தீர்ப்பளித்துள்ளார்.
113- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَأَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன், மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)) (76) (76) இந்த ஹதீஸ் நஸாஈயின் அஸ்ஸுனன் அல் குப்ராவில் ஹதீஸ் எண் 7867 லும், இப்னு மாஜஹ்வில் ஹதீஸ் எண் 3843 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னி மாஜஹ்வில் 2/327 ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது என தீர்ப்பளித்துள்ளார். இந்த துஆவிற்கு ஆதாரமாக அமைந்தது பின்வரும் இப்னு மாஜாஹ்வில் இடம்பெற்ற, ((நீங்கள் அல்லாஹ்விடம் பயனுள்ள அறிவைக் கேளுங்கள் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாவல் தேடுங்கள்)) என்ற வாசகமாகும்.
114- ((اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ [السَّبْعِ] وَرَبَّ الْأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! வித்தையும் விதையையும் பிளப்பவனே! தவ்ராத் இன்ஜீல் ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை இறக்கியவனே! அனைத்துப் பொருட்களினதும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீயே அனைத்து படைப்பினங்களினதும் முன்நெற்றியைப்பிடித்து அதிகாரம் செலுத்தக் கூடியவன். யா அல்லாஹ்! நீயே ஆரம்பமானவன் உனக்கு முன்னர் எதுவுமில்லை, நீயே இறுதியானவன் உனக்கு பின்னர் எதுவுமில்லை, நீயே மேலானவன் உனக்குமேல் எதுவுமில்லை, நீயே இப்பிரபஞ்சத்தின் கீழுள்ளவற்றிற்கும் அதிகாரம் படைத்தவன் உனக்கு கீழ் எதுவுமில்லை, எங்களுடைய கடனை நிறைவேற்றிவைப்பாயாக! மேலும் வறுமையை விட்டும் எம்மை பாதுகாத்து தன் நிறைவானவர்களாக ஆக்கிவிடுவாயாக)) (77) (77) முஸ்லிமில் ஹதீஸ் எண் 2713 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹூரைரா (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
115- ((اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعَمِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ لَهَا، وَأَتِمِمْهَا عَلَيْنَا)) பொருள்: ((யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்திடுவாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை) சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக! இருள்களிலிருந்து எம்மை பாதுகாத்து ஒளியின் பால் எமக்கு வழிகாட்டுவாயாக! வெளிப்படையான, மறைமுகமான அனைத்து மானக் கேடான விஷயங்களை விட்டும் எங்களை நீ தூரப் படுத்திடுவாயாக! எங்கள் செவிப்புலன்களில், பார்வைகளில், உள்ளங்களில், மனைவியர்களில், வாரிசுகளில் அருள் வளத்தை ஏற்படுத்திடுவாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய். உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக, அதற்காக உன்னைப் புகழ்பவர்களாக உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப் படுத்துவாயாக)) (78) (78) அபூதாவூதில் ஹதீஸ் எண் 969 லும், ஹாகிமில் 1/265 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இவ்வாசகம் ஹாகிமிற்குரியது) ஹாகிம் அவர்கள், இந்த ஹதீஸானது, இமாம் முஸ்லிமின் நிபந்தனையின் அடிப்படையில் ஸஹீஹானது எனக் கூறியதை இமாம் அத் தஹபி 26/1 அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல்அதப் அல் முப்ரதில் ஹதீஸ் எண் 630 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
116- ((اللهمّ إني أسألك خير المسألة،وخير الدعاء، وخير النجاح، وخير العمل،وخير الثواب،وخير الحياة، وخير الممات، وثبّتني، وثقّل موازيني، وحقّق إيماني، وارفع درجاتي"، وَتَقَبَّلْ صَلاَتِي، وَاغْفِرْ خَطِيئَتِي، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ العُلاَ مِنَ الْجَنَّةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ، وَخَوَاتِمَهُ، وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ، وَظَاهِرَهُ، وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَا مِنَ الْجَنَّةِ آمِينْ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ مَا آتِي، وَخَيْرَ مَا أَفْعَلُ، وَخَيْرَ مَا أَعْمَلُ، وَخَيْرَ مَا بَطَنَ، وَخَيْرَ مَا ظَهَرَ، وَالدَّرَجَاتِ العُلَا مِنَ الْجَنَّةِ آمِينْ، اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ أنْ تَرْفَعَ ذِكْرِي، وَتَضَعَ وِزْرِي، وَتُصْلِحَ أمْرِي، وَتُطَهِّرَ قَلْبِي، وَتُحَصِّنَ فَرْجِي، وَتُنَوِّرَ قَلْبِي، وَتَغْفِرَ لِي ذَنْبِي، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَا مِنَ الْجَنَّةِ آمِينْ، اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ أنْ تُبَارِكَ فِي نَفْسِي، وَفِي سَمْعِي، وَفِي بَصَرِي، وَفِي رُوحِي، وَفِي خَلْقِي، وَفِي خُلُقِي، وَفِي أَهْلِي، وَفِي مَحْيَايَ، وَفِي مَمَاتِي، وَفِي عَمَلِي، فَتَقَبَّلْ حَسَنَاتِي، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ العُلَا مِنَ الْجَنَّةِ، آمِينْ)) பொருள் : ((யாஅல்லாஹ்! மிகச் சிறந்த வேண்டுதலை, மிகச்சிறந்த பிரார்த்தனையை மிகச்சிறந்த வெற்றியை உன்னிடம் நிச்சயமாக கேட்கிறேன். மேலும் மிகச்சிறந்த நற்செயலையும் மிகச்சிறந்த நற்கூலியையும் மிகச்சிறந்த வாழ்வையும் மிகச்சிறந்த மரணத்தையும் தருமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். என்னை நீ இம்மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக! (மறுமை நாளில்) என்னுடைய தராசைக் கனதியானதாக ஆக்குவாயாக! என்னுடைய ஈமானை பலப் படுத்துவாயாக! மேலும் என்னுடைய நற்பெயரை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என்னுடைய தவறுகளை மன்னிப்பாயாக! மேலும் நான் உன்னிடம் சுவர்க்கத்தின் அந்தஸ்துக்களில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கேட்கிறேன். யாஅல்லாஹ்! சிறந்த துவக்கங்களையும், நல்ல முடிவுகளையும், அனைத்து நல்லவைகளையும் அதன் ஆரம்பத்தையும் வெளிப்படையான அந்தரங்கமான நல்லறங்களையும் உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் சுவர்க்கத்தின் அந்தஸ்துக்களில் உயர்ந்த அந்தஸ்த்துகளையும் கேட்கிறேன். யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் செய்வதற்கு முனையும் விடயங்களில் மிகச்சிறந்ததையும் நான் ஈடுபடும் செயல்களில் மிகச்சிறந்ததையும் நான் ஆற்றும் கருமங்களில் மிகச்சிறந்ததையும் உன்னிடம் கேட்கிறேன். நல்லவற்றைச்செய்யவும் அந்தரங்கம் மற்றும் வெளிப்படையான அனைத்து நல்லவைகளையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.. ஏற்றுக் கொள்வாயாக! யாஅல்லாஹ்! எனது அந்தஸ்த்தை உயர்த்துமாறு வேண்டுகிறேன், என்னுடைய பாவத்தை மன்னிக்குமாறும் வேண்டுகிறேன், என்னுடைய விவகாரத்தை சீராக்குமாறும், என்னுடைய உள்ளத்தை தூய்மைப்படுத்துமாறும் வேண்டுகிறேன், மேலும் என்னுடைய மறையுறுப்பை (ஹராத்தை விட்டும்) காத்திடுமாறும் என்னுடைய உள்ளத்தை ஒளிமயமாக்குமாறும் என்னுடைய பாவங்களை மன்னிக்கு மாறும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், மேலும் சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன் யாஅல்லாஹ்! என்னுடைய உள்ளம், காது, பார்வை, உயிர், உடல், குணம், குடும்பம், வாழ்வு, மரணம், செயல் ஆகியவற்றில் நீ அபிவிருத்தி செய்யுமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் என்னுடைய நல்லறங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர் அந்தஸ்துகளைக் கேட்கிறேன் ஏற்றுக்கொள்வாயாக)) (79) (79) ஹாகிமில் 1/520 லும், பைஹகி அவர்களின் அத்தஅவாத் எனும் நூலில் ஹதீஸ் எண் 225 லும், தபரானி அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் 23/326 ல் ஹதீஸ் எண் 717 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிமில் உம்மு ஸலமா (ரழி) மூலமாக மர்பூஆக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஹதீஸ் குறித்து ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார்.
117- ((اللَّهُمَّ جَنِّبْنِي مُنْكَرَاتِ اَلْأَخْلَاقِ، وَالْأَهْوَاءِ، وَالْأَعْمَالِ، وَالْأَدْوَاءِ)) பொருள்: ((யாஅல்லாஹ்! துர்குணங்கள், மனோஇச்சைகள், தீச்செயல்கள், பயங்கரமான நோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காத்தருள்வாயாக)) (80) (80) ஹாகிமில் 1/523 லும், தபரானியின் அல் முஃஜம் அல்கபீரில் 19/19 ஹதீஸ் எண் 36 லும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸ் முஸ்லிமின் நிபந்தனையின் அடிப்படையில் ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் (1/532) அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ழிலாலுல் ஜன்னா என்ற நூலில் ஹதீஸ் எண் 13 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
118- ((اللَّهُمَ قَنِّعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لي فِيهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِي بِخَيْرٍ)) பொருள்: ((யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த வாழ்க்கை வசதிககளில் மனநிறைவை தந்து அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும் தவறிப்போன அனைத்து அருள்களுக்கும் அதைவிட சிறந்தவற்றை எனக்குத் பகரமாகத் தந்தருள்வாயாக!))(81) (81) ஹாகிமில் 1/532 லும், பைஹகி அவர்கள் அவரின் அல்ஆதாப் எனும் நூலில் ஹதீஸ் எண் 1084 லும், மேலும் அவரின் அத்தஅவாத் அல் கபீரில் 211 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த ஹதீஸ் குறித்துக் ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை, தஹபி (1/510) அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல் ஹாபில் இப்னு ஹஜர் அவர்கள் தனது அல்புதூஹாத் அர்ரப்பானிய்யா என்ற நூலில் 4/383ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
119- ((اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابَاً يَسِيرَاً)) பொருள்: ((யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் இலகுவாக விசாரிப்பாயகாக ! ))(82) 82) அஹ்மதில் 6/48 லும், ஹாகிமில் 1/255 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஹதீஸ் குறித்துக் ஹாகிம் அவர்கள் முஸ்லிமின் நிபந்தனையின் அடிப்படையில் ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி 1/255ல் அவர்கள் அங்கீகரித்துள்ளார். ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்கள் திரும்பி வந்த போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இலகுவான விசாரணை என்பது என்ன? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள்(( ஒருவரின் நன்மை தீமை ஏட்டைப் பார்த்து அல்லாஹ் அவரின் தவறுகளை பொருட்படுத்தாமல் விடுவதாகும். ஆஇஷாவே அந்நாளில் யார் துருவித்துருவி விசாரிக்கப்படுகிறாரோ அவர் நஷ்டமடைந்துவிட்டார். ஒரு முஃமினுக்கு ஏற்படுகின்ற அனைத்து துன்பங்களுக்கும் பரிகாரமாக அது உடலில் முள் தைத்தாலும் கூட அவனின் பாவங்களை மன்னித்து விடுகிறான் ))என்று கூறினார்கள். பேரறிஞர் அல்பானி அவர்கள் மிஷ்காதுல் மஸாபீஹில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் தரமானது என்று குறிப்பிடுகிறார்.
120- ((اللَّهُمَّ أعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ)) பொருள்: ((யா அல்லாஹ் உன்னை நினைவு கூறவும் உனக்கு நன்றி செலுத்தவும், உன்னை அழகிய முறையில் வணங்கவும் எமக்கு உதவி செய்வாயாக! ))(83) (83) அஹ்மதில் 2/299 லும், ஹாகிமில் 1/499 லும், அபூதாவூதில் ஹதீஸ் எண் 1524 லும் நஸாஈயின் அஸ்ஸுனன் அல் குப்ராவில் ஹதீஸ் எண் 9973 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸ் குறித்து ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் அதப் அல்முப்ரதில் ஹதீஸ் எண் 534 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
121- ((اللَّهُمّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لاَ يَرْتَدُّ، وَنَعِيمًا لاَ يَنْفَدُ، وَمُرَافَقَةَ مُحَمَّدٍ -صلى الله عليه وسلم- فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ)) பொருள்: ((யா அல்லாஹ் நிலைமாறா விசுவாசத்தையும், தீர்ந்து விடாத அருளையும், அதி உயர் சுவனத்தில் நபியவர்களுடன் சேர்ந்திருக்கவும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்))(84) (84) இப்னு ஹிப்பான் மவாரிதுல் ழம்ஆனில் 604 ம் பக்கத்தில் ஹதீஸ் எண் 2436 ல், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கூற்றாக இதனைப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஹதீஸானது வேறொரு அறிவிப்பாளர் தொடர் மூலம் அஹ்மதில் 1/386 400லும், நஸாஈயின் அமலுல் யவ்மி வல்லைலாவில் ஹதீஸ் எண் 869 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹாவில் 2301 ஹதீஸாக பதிவு செய்து, இது ஹஸன் தரத்திலான ஹதீஸ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
122- ((اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي، وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَخْطَأْتُ، وَمَا عَمَدْتُ، وَمَا عَلِمْتُ، وَمَا جَهِلْتُ)) பொருள்: யா அல்லாஹ்! என் உள்ளத்தின் தீங்கிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக! எனது காரியத்தில் மிகச் சிறந்ததில் எனக்கு உறுதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! நான் இரகசியமாகச் செய்தவைகளையும் வெளிப்படையாகச் செய்தவைகளையும் தவறுதலாக செய்தவைகளையும் வேண்றுமென்று செய்தவைகளையும் நான் அறிந்து செய்ததையும் நான் அறியாது செய்ததையும் மன்னித்தருள்வாயாக! (85) (85) நஸாஈ அவர்களின் அஸ்ஸுனன் அல் குப்ராவில் 6/246 ஹதீஸ் எண் 10830 லும், ஹாகிமில் 1/510 லும், அஹ்மதில் 4/444 லும், ஆய்வு செய்ப்பட்ட முஸ்னத் அஹ்மதில் 33/197 ஹதீஸ் எண் 19992 லும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸ் குறித்து ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இஸாபா என்ற நூலில் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது எனக் குறிப்பிடுகிறார். அல்பானி அவர்கள் ரியாழுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் ஆய்வில் 1495 ம் ஹதீஸுக்கான குறிப்பில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
123- ((اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الأعْدَاءِ)) பொருள்: (( யா அல்லாஹ் ! கடன் மிகைப்பதை விட்டும், எதிரிகள் மிகைப்பதை விட்டும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். ))(86) 86) நஸாஈயில் ஹதீஸ் எண் 5475 லும், அஹ்மதில் 2/173 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் நஸாஈயில் 3/1113 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
124- ((اللَّهُمَّ اغْفِرْ لِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي، أَعُوذُ بِاللَّهِ مِنْ ضِيقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ)) பொருள் : ((யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக மேலும் எனக்கு நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தைத் தந்தருள்ளவாயாக! எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக! மறுமை நாளின் நெருக்கடியான நிலையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்)) (87) (87) நஸாஈயில் ஹதீஸ் எண் 1617 லும், இப்னு மாஜஹ்வில் ஹதீஸ் எண் 1356லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸுனன் நஸாஈயில் 1/356 லும் ஸஹீஹ் இப்னி மாஜஹ்வில் 1/226 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
125- ((اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي، وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي، وَخُذْ مِنْهُ بِثَأْرِي)) பொருள்: ((யா அல்லாஹ் ! எனது செவிப்புலனையும் பார்வையையும் எவ்வித குறையுமற்றதாக ஆக்கிவைப்பாயாக! அவை இரண்டையும் இறக்கும் வரையில் ஆரோக்கியமானதாக வைத்திடுவாயாக! எனக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! மேலும் அநியாயம் இழைத்தவரை எனக்காக பழிவாங்குவாயாக! ))(88) (88) திர்மிதியில் ஹதீஸ் எண் 3681 லும், புஹாரியின் அல் அதப் அல்முப்ரதில் ஹதீஸ் எண் 650லும், ஹாகிமில் 1/523 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் இந்த ஹதீஸ் குறித்து ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் திர்மிதியில் 3/188 ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனக் தீர்ப்பளித்துள்ளார்.
126- ((اللَّهُمَّ إنِّي أسْألُكَ عِيشَةً نَقِيَّةً، ومِيتَةً سَوِيَّةً، ومَرَدّاً غَيْرَ مَخْزٍ ولا فاضِحٍ)) பொருள்: ((யா அல்லாஹ் ! தூய்மையான வாழ்வையும், சீரான மரணத்தையும், கேவலம், இழிவு அற்ற மீளுதலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்)) (89) (89) இந்த ஹதீஸானது பின்வரும் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது: முஸ்தத்ரக் அல்ஹாகிம் 1/541, ஸவாஇத் முஸ்னத் அல்பஸ்ஸார் 2/442 ஹதீஸ் இலக்கம் 2177, இமாம் தபரானி அவர்களின் அத்துஆ என்ற நூலில் ஹதீஸ் இலக்கம் 1435. இமாம் அல் ஹைஸமி இந்த ஹதீஸ் குறித்து அவரது மஜ்மஉஸ் ஸவாஇத் எனும் நூலில், தப்ரானி அவர்களின் அறிவிப்பாளர் தொடரானது சிறந்தது எனக் குறிப்பிடுகிறார்.
127- ((اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اللَّهُمَّ لاَ قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلاَ بَاسِطَ لِمَا قَبَضْتَ، وَلاَ هَادِيَ لِمَنْ أَضْلَلْتَ، وَلاَ مُضِلَّ لِمَنْ هَدَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلاَ مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ، وَرَحْمَتِكَ، وَفَضْلِكَ، وَرِزْقِكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لاَ يَحُولُ وَلاَ يَزُولُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ، وَالأَمْنَ يَوْمَ الْخَوْفِ، اللَّهُمَّ إِنِّي عَائِذٌ بِكَ مِنْ شَرِّ مَا أَعْطَيْتَنَا وَشَرِّ مَا مَنَعْتَنَا، اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الإِيمَانَ وَزِيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلاَ مَفْتُونِينَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يُكَذِّبُونَ رُسُلَكَ، وَيَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ، اللَّهُمَّ قَاتِلْ كَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ، إِلَهَ الْحَقِّ [آمِينْ])) பொருள்: ((யா அல்லாஹ் புகழனைத்தும் உனக்கே சொந்தமானது. யா அல்லாஹ்! நீ வாரி வழங்கியதை யாராலும் மட்டுப்பத்தி விட முடியாது. நீ மட்டுப்படுத்தியதை யாராலும் வாரி வழங்கமுடியாது. நீ வழிகெடுத்தியவரை நேர்வழி காட்டுபவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. நீ கொடுத்ததை தடுப்பவர் எவருமில்லை. நீ தடுத்ததை கொடுப்பவர் எவருமில்லை. நீ தூரமாக்கியதை சமீபமாக்குபவர் யாருமில்லை. நீ சமீபமாக்கியதைத் தூரமாக்குபவர் யாருமில்லை. யா அல்லாஹ் ! உன்னுடைய அருள்வளங்கள், உன்னுடைய கருணை, உன்னுடைய கிருபை, உன்னுடைய வாழ்வாதாரம் அனைத்திலிருந்தும் எங்களுக்கு வாரி வழங்கிடுவாயாக! யாஅல்லாஹ்! எவ்வித மாற்றமும் ஏற்படாத அழிந்து விடாத நிரந்தரமான சுவனத்தை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! பயங்ரம் நிறைந்த மறுமை நாளின் இன்பத்தையும் அச்சம் நிறைந்த நாளின் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். யாஅல்லாஹ்! நீ எங்களுக்குக் கொடுத்தவற்றின் தீங்கை விட்டும் எங்களுக்கு தடுத்தவைகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ் எங்களுக்கு ஈமானை நேசத்திற்குரியதாகவும் அதனை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாயும் ஆக்கித் தந்தருள்வாயாக! மேலும் இறை நிராகரிப்பையும் பாவம் செய்வதையும் மாறு செய்வதையும் வெறுப்பானதாக ஆக்கிவிடுவாயாக! மேலும் நேர்வழிபெற்றவர்களில் எங்களையும் ஆக்கிவிடுவாயாக! யாஅல்லாஹ்! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்து முஸ்லிம்களாகவே எங்களை மீண்டும் எழுப்புவாயாக! இழிவு மற்றும் சோதனைக்குற்பட்டோரில் அல்லாது நல்லோர்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! யாஅல்லாஹ்! உனது தூதரைப் பொய்ப்பிக்கும் உன் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கும் காஃபிர்களைக் அழித்து விடுவாயாக உனது தண்டனையையும் வேதனையையும் அவர்கள் மீது இறக்கி விடுவாயாக! யா அல்லாஹ்! வேதம் கொடுக்கப்பட்ட இறைநிராகரிப்பாளர்களை அழித்து விடுவாயாக! உண்மையான இறைவனே! எனது இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!)) (90) (90) மேற்குறிப்பிட்ட துஆவின் வாசகம் அஹ்மதில் 3/424 மற்றும் 24/246 ஹதீஸ் எண் 15492 லும், ஹாகிமில் 1/507-3/23-24 லும், புஹாரியின் அல் அதப் அல்முப்ரதில் ஹதீஸ் எண் 699 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் பிக்ஹுஸ் ஸீறா என்ற நூலின் ஹதீஸ் ஆய்வில் பக்கம் 284 லும், ஸஹீஹ் அல்அதப் அல்முப்ரதில் ஹதீஸ் எண் 538 பக்கம் 259 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
128- ((اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي)) பொருள்: ((யா அல்லாஹ்! என்னை மன்னித்து எனக்கு அருள் புரிந்து நேர்வழிகாட்டுவாயாக! மேலும் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்து வாழ்வாதாரத்தையும் தந்தருள்வாயாக)) (91) (91) முஸ்லிமில் ஹதீஸ் எண் 2696 மற்றும் 2697 லும்- முஸ்லிமின் வேறு அறிவிப்பில் ((இவை உனது இம்மை மறுமை விடயங்களை ஒன்றினைத்ததாக உள்ளது என்று வந்துள்ளது)) – மேலும் ஸுனன் அபீதாவூதில் ஹதீஸ் எண் 850 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூதாவூதில் வந்துள்ள அறிவிப்பில் நபியவர்களை சந்திக்க வந்த நாட்டுப்புற அரபி திரும்பி சென்ற போது நபியவர்கள் ((அவர் தமது கைகளை நன்மையால் நிரப்பிக்கொண்டார்)) என்று கூறினார்கள்.
(( என்குறைகளை மறைத்து (எனக்கு ஆறுதலைத் தந்திடுவாயாக) மேலும் எனது நிலையை உயர்த்திடுவாயாக!))(92) (92) இப்னு மாஜாவின் ஸுனனில் ஹதீஸ் எண் 898 லும், திர்மிதியின் ஸுனனில் ஹதீஸ் எண் 284 லும் இந்த ஹதீஸைக் காண்க. ஸஹீஹ் இப்னு மாஜாவில் பாகம் 1 பக்கம் 148 லும், ஸஹீஹ் திர்மிதியில் பாகம் 1 பக்கம் 90 லும் பார்கவும்.
129- ((اللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا، وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا، وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا، وَأرْضِنَا وَارْضَ عَنَّا)) பொருள்: ((யா அல்லாஹ் உனது அருட்கொடைகளை குறைக்காது எங்களுக்கு அதிகப்படுத்திடுவாயாக! எங்களை இழிவுபடுத்திடாது எம்மை கண்ணியப் படுத்துவாயாக! எங்களுக்கு உனது கொடைகளை தடுக்காது தாராளமாக வழங்கிடுவாயாக! எங்களை பெரும் சிறப்புக்குரியோராக தெரிவு செய்வாயாக எம்மை விடவும் எமது எதிரிகளை சிறப்புக்குரியோராக தெரிவு செய்யாமல் இருப்பாயாக! எம்மையும் உன்னைப் பொருந்திக் கொள்பவர்களாக்கி எம்மையும் நீ பொருந்திக் கொள்வாயாக)) (93) (93) திர்மிதியில் 5/326 ஹதீஸ் எண் 3173 லும், ஹாகிமில் 2/98 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனக் குறிப்பிடுகிறார். அஷ்ஷேய்க் அப்துல் காதிர் அல் அர்னாஊத் அவர்கள் ஜாமிஉல் உஸுலுக்கான அவரின் நூலாய்வில் 11/282 ஹதீஸ் எண் 8847ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
130- ((اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي)) பொருள் : யா அல்லாஹ் ! எனது தோற்றத்தை (உருவத்தை) அழகாக்கியுள்ளாய். ஆகவே எனது குணத்தையும் அழகு படுத்திடுவாயாக! (94) (94) அஹ்மதில் 6/68 மற்றும் 155 மேலும் 1/403 லும், இப்னு ஹிப்பானின் மவாரிதுல் ழம்ஆனில் ஹதீஸ் எண் 2423 லும், முஸ்னத் அத்தயாலிஸிய்யில் ஹதீஸ் எண் 374 லும், முஸ்னத் அபீயஃலா வில் ஹதீஸ் 5075 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இர்வாஉல் கலீல் 1/115 (74) ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துளள்ளார்.
131- ((اللَّهُمَّ ثَبِّتْنِي وَاجْعَلْنِي هَادِياً مَهْدِيَّاً)) பொருள் : யா அல்லாஹ் என்னை இம்மார்க்கத்தில் ஸ்திரப்படுத்துவாயாக! மேலும் நேர்வழிப் பெற்றவனாகவும் நேர்வழியைக் காட்டுபவனாகவும் ஆக்குவாயாக (95) (95) இந்த துஆவிற்கு ஆதாரமாக அமைவது நபி (ஸல்) அவர்கள் ஜரீர் (ரழி) அவர்களுக்கு கேட்ட பிரார்த்தனையாகும். இந்த ஹதீஸை புஹாரியில் ஹதீஸ் எண் 6333, 3020, 3036 களில் காணலாம்.
132- (( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبَاً سَلِيمَاً، وَلِسَانَاً صَادِقَاً، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أنْتَ عَلاَّمُ الْغُيُوبِ) பொருள் : ((யா அல்லாஹ் மார்க்க விடயத்தில் ஸ்திரத்தன்மையையும் நல்ல விடயங்களில் மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பை பெற்றும் தரும் உறுதியான விடயங்களையும் உன்னிடம் கேட்கின்றேன். உனது அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும் நல்ல முறையில் வணங்கிடவும் உன்னிடம் உதவி கேட்கிறேன். மேலும் சீரான உள்ளத்தையும் உண்மைபேசும் நாவையும் தந்தருளுமாறு கேட்கிறேன். நீ அறிந்தவற்றில் சிறந்ததை கேட்கிறேன். நீ அறிந்த தீயவைகளிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் கேட்கிறேன். நீ அறிய நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கோருகிறேன். நீயே மறைவான யாவற்றையும் மிக அறிந்தவானாய் உள்ளாய் )) (96). (96) அஹ்மதில் 28/338 ஹதீஸ் எண் 17114 மற்றும் 28/356 ஹதீஸ் எண் 17133 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 3407 லும் தபரானியின் அல் முஃஜம் அல்கபீரில் இதே வாசகத்தில் ஹதீஸ் எண் 7135, 7157, 7175, 7176, 7177, 7178, 7179, 7180லும், இப்னுஹிப்பான் அவரது ஸஹீஹில் 3/215 ல் ஹதீஸ் 935 லும் மற்றும 5/310 ஹதீஸ் எண் 1974 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷுஐப் அல்அர்நாஊத் அவர்கள் ஸஹீஹ் இப்னு ஹிப்னுஹிப்பானில் 5/312 ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் முஸ்னத் அஹ்மதை ஆய்வு செய்தோர் 28/338 ல் இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் தொடரையும் கருத்திற் கொண்டு இது ஹஸன் தரத்திலானது எனக் குறிப்பிட்டுள்ளனர். அல்பானி அவர்கள் ஸில்ஸிலதுல் அஹாதீஸ் ஸஹீஹாவில் ஏழாம் பாகத்தில் ஹதீஸ் எண் 3228லும், ஸஹீஹ் மவாரித் ழம்ஆனில் ஹதீஸ் எண் 2416 மற்றும் 2418 லும் இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இந்த ஹதீஸ் ஸஹீஹ் லிகைரிஹீ எனத் தீர்ப்பளித்துள்ளார்.
133- (( اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْفِرْدَوْسَ أَعْلَى الْجَنَّة)) பொருள்: ((யா அல்லாஹ் சுவனத்தில் மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜன்னத்துல் பிர்தவ்ஸை தருமாறு கேட்கிறேன்)) (97) (97) இந்த துஆவானது நபியவர்களின் பின்வரும் கூற்றிலிருந்து பெறப்பட்டதாகும் ((நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் பிர்தவ்ஸை கேளுங்கள். அது சுவர்க்கத்தின் நடுப்பகுதியில் உள்ள மிக உயர்ந்த சுவர்க்கமாகும். அதற்கு மேலால் அருளாளனான அல்லாஹ்வின் அர்ஷ் உள்ளது, அதிலிருந்து சுவர்க்கத்து நதிகள் ஊற்றெடுக்கின்றன. )) புஹாரி ஹதீஸ் எண் 2790 மற்றும் 7423.
134-((اللَّهُمَّ جَدِّدِ الإيْمَانَ فِي قَلْبِي)) பொருள்: ((யா அல்லாஹ் எனதுள்ளத்தில் ஈமானை புதிதானதாய் ஆக்கி புத்துயிர்ப்பளிப்பாயாக)) [98]. [98] இந்த துஆவானது பின்வரும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி) அவர்களின் ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாகும் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ((நிச்சயமாக உங்கள் ஆடை இத்துப்போவது போன்று உள்ளத்தில் இருக்கும் உங்கள் ஈமானும் இத்துப்போய்விடுகிறது. ஆகவே அல்லாஹ்விடம் உங்களின் ஈமானைப் புதுப்பித்துத் தருமாறு கேளுங்கள் என்று கூறினார்கள்)) இந்த ஹதீஸானது ஹாகிமில் 1/4 ல் பதிவு செய்யபப்ட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியதை இமாம் தஹபி ஏற்றுக்கொண்டுள்ளார். ஹைஸமி அவர்கள் தனது மஜ்மஉஸ்ஸவாஇதில் 1/52, இந்த ஹதீஸை தபரானி அவர்கள் அஸ்ஸுனன் அல்கபீரில் பதிவு செய்துள்ள அவ்வறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரத்திலுள்ளது என்று குறிப்பிடுகிறார். அல்பானி அவர்கள் ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் ஸஹீஹாவில் 4/113 ஹதீஸ் எண் 1585 ல் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
135- (( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ صَلَاةٍ لَا تَنْفَعُ)) பொருள்: (( யா அல்லாஹ்! பயனற்ற தொழுகையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் )) (99). (99) அபூதாவூதில் ஹதீஸ் எண் 1549 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸுனன் அபீதாவூதில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார் 1/424
136- ((اللَّهُمَّ إنِّي أّعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ، وَمِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ المَشِيبِ، وَمِنْ وَلَدٍ يَكُونُ عَليَّ رَبّاً، وَمِنْ مَالٍ يَكُونُ عَلَيَّ عَذَابَاً، وَمِنْ خَلِيْلٍ مَاكِرٍ عَيْنُهُ تَرَانِي، وَقَلْبُهُ يَرْعَانِي؛ إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا، وَإِذَا رَأَى سَيِّئَةً أَذَاعَهَا)) பொருள் : ((யா அல்லாஹ் தீய அண்டை விட்டாரை விட்டும், முதுமை வருமுன் முதுமையை ஏற்படுத்தும் துணையைவிட்டும், எனக்கெதிராய் அதிகாரம் செலுத்தும் தலைவனாக இருக்கும் பிள்ளையை விட்டும், தொல்லையாய் அமையும் செல்வத்தை விட்டும், என்னையே கண்கானித்து உற்று நோக்கிக் கொண்டிருக்கும், நன்மையான விடயம் ஒன்றை என்னில் கண்டால் மூடி மறைக்கும் தீய விடயமொன்றை கண்டால் அம்பலப்படுத்திடும் சூழ்சிக்கார நண்பனை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் )) (100) (100) தபரானி அவர்கள் அத்துஆவிலும் 3/1425 ஹதீஸ் எண் 1339 ல் பதிவுசெய்துள்ளார். அல்பானி அவர்கள் ஸில்ஸிலத்துல் அஹாதீஸ்ஸஹீஹாவில் 7/377 ஹதீஸ் எண் 3137 ல் இதன் அறிவிப்பாளர் தொடர் உறுதியானது என்றும் அதன் அறிவிப்பாளர்கள் யாவரும் தஹ்தீப் நூலில் குறிபப்டப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் ))
137- ((اللَّهُمَّ لاَ تُخْزِنِي يَوْمَ الْقِيَامَةِ)) பொருள்: (( யா அல்லாஹ்! மறுமைநாளில் என்னை இழிவு படுத்தாதிருப்பாயாக!)) (101) (101) முஸ்னத் அஹ்மதில் 29/596 ஹதீஸ் எண் 18056 இல் பதிவு செய்யபட்டுள்ளது. முஸ்னதின் ஹதீஸ்ஆய்வாளர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் இந்த ஹதீஸானது தபரானியின் அல் முஃஜம் அல்கபீரில் 3/20 ஹதீஸ் எண் 2524 ல் (( யாஅல்லாஹ் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்திடாதிருப்பாயாக! மேலும் பயங்கரமும் சிரமமும் நிறைந்த நாளில் என்னை இழிவுபடுத்திடாதிருப்பாயாக)) என வந்துள்ளது.
138- ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ)) பொருள் : ((யா அல்லாஹ் ! இவ்வுலகிலும் மறுமையிலும் ஈடேற்றத்தைத் தருமாறு உன்னிடம் நான் கேட்கிறேன் )) (102). (102) இப்னு மாஜஹ்வில் ஹதீஸ் எண் 3851 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜஹ்வில் 3/259 லும், ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் ஸஹீஹாவில் ஹதீஸ் எண் 1138 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
139- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَعَمَلٍ لاَ يُرْفَعُ، وَقَلَبٍ لاَ يَخْشَعُ، وَقَولٍ لاَ يُسْمَعُ)) பொருள்: ((யா அல்லாஹ் பயனற்ற அறிவைவிட்டும் (உன்னளவில்) உயர்தப்படாத செயலை விட்டும் அச்சப்படாத உள்ளத்தைவிட்டும் பதிலளிக்கப்படாத வார்த்தையை (மற்றும் கேட்கப்படாத பேச்சை) விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)) (103) (103) இப்னுஹிப்பானின் மவாரித் ழம்ஆனில் ஹதீஸ் எண் 2440ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் மவாரிதில் ழம்ஆனில் 2/454 ல் ஹதீஸ் எண் 2066 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
140- ((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْـهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ،وَغَلَبَةِ الرِّجَالِ)) பொருள்: (யா அல்லாஹ்! (வருங்காலத்தைப் பற்றிய) கவலை, (நடந்து முடிந்தவை பற்றிய) துக்கம், இயலாமை, சோம்பல், உலோபித்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் (அடக்குமுறை) ஆகிய அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்))(104) (104) புஹாரியில் ஹதீஸ் எண் 6363 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் (( நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்பவனாக இருந்தேன் அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் தங்கும் போதும் இந்த துஆவை அதிகம் ஓதுவதை செவிமடுப்பவனாக இருந்தேன் என்றார்கள் ))
141-((اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدَّجالِ))[105]. பொருள்: ((யா அல்லாஹ்! நரக வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் மண்ணறை வேதனையிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். வெளிப்படையான மற்றும் மறைமுகமான சோதனைகளிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)) (105) (105) முஸ்லிமில் ஹதீஸ் எண் 2867 ல் பதிவு செய்யபட்டுள்ளது. அதில் நீங்கள் நரக வேதனையை விட்டும் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் மேலும் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாவல் தேடிக் கௌளுங்கள் என்று வந்துள்ளது.
142-(( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ شَهَادَةً فِي سَبِيلِكَ)) பொருள்: யா அல்லாஹ் உனது பாதையில் வீரமரணம் அடைவதை உன்னிடம் கேட்கிறேன் (106) (106) முஸ்லிமில் ஹதீஸ் எண் 1909 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட துஆ பின்வரும் ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாகும்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ((உளத்தூய்மையுடன் உண்மையாக அல்லாஹ்வின் பாதையில் வீரமரணமடைவதை யார் அல்லாஹ்விடம் கேட்கிறாரோ அவர் படுக்கை விரிப்பில் மரணித்தாலும் ஷூஹதாக்களின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வார்)).
143- ((اللَّهُمَّ اغْفِرْ لِي، اللَّهُمَّ اجْعَلْنِي يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَدْخِلْنِي يَوْمَ الْقِيَامَةِ مُدْخَلاً كَرِيمًا)) பொருள்: ((யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக! உனது அதிகமான படைப்பினங்களில் அதிகமான மனிதர்களை விடவும் என்னை மேலானவனாக ஆக்கியருள்வாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னிப்பாயாக! மறுமை நாளில் கண்ணியமிக்க நுழைவாயிலினூடக என்னை நுழையவைப்பாயாக! (107)) (107) புஹாரியில் ஹதீஸ் எண் 4323 லும், முஸ்லிமில் ஹதீஸ் எண் 2498 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துஆவானது நபி (ஸல்) அவர்கள் உபைத் அபீஆமிருக்கும் அபூபுர்தா ரழி அவர்களுக்கும் கேட்ட துஆவிலிருந்து பெறப்பட்டதாகும்.
144- ((اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّمَا قْضَيْتَ، إِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ)) பொருள்: ((யா அல்லாஹ்! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து என்னையும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குத் தந்திருப்பவற்றில் அபிருத்தி அளிப்பாயாக! நீ விதியாக்கியவைகளில் உள்ள கெடுதியை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார் எங்கள் இறைவா! நீ தூய்மையானவனுமாகவும் கணணியமிககவனுமாய் உள்ளாய் (108)) (108) முஸ்னத் அஹ்மதில் 3/249 ல் ஹதீஸ் எண் 1723 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்னதை நூலாய்வு செய்தோர் 3/249 ல் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தெடர் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளனர். இந்த அறிவிப்பானது வித்ர் தொழுகையுடன் வரையறுத்து வராது பொதுவான அறிவிப்பாக வந்துள்ளது. இதனை அறிவித்துள்ள ஸஹாபி அனஸ் (ரழி ) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் ((நபியவர்கள் எங்களுக்கு இந்த துஆவை கற்றுத்தந்தார்கள்)).
145-(( رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ)) பொருள்: ((எனது இரட்சகனே! மறுமை நாளில் எனது தவறுகளை மன்னித்தருள்வாயாக!)) (109) (109) முஸ்லிமில் ஹதீஸ் எண் 214 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களிடம் ஸஹாபி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் என்பவர் ஜாஹிலிய்யாக் காலத்தில் உறவுகளை சேர்ந்து நடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்ததால், இந்நல்லறங்கள் அவருக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ((அவை எந்தப்பயனையும் அளிக்காது ஏனெனில் அவரின் வாழ்நாளில் ஒரு நாளாவது எனது இரட்சகனே மறுமை நாளில் எனது தவறுகளை மன்னித்தருள்வாயாக என்று அவர் கூறவில்லை என்று பதிலளித்தார்கள். ))
146-((أسْتَغْفِرُ اللهَ العَظِيمَ الَّذِي لاَ إلَهَ إلاَّ هُوَ، الحَيُّ القَيُّومُ، وَأتُوبُ إلَيهِ)) பொருள்: ((என்றும் நிலைத்திருப்பவனும், நித்திய ஜீவனுமாகிய, உண்மையாக வணங்கப்படத்தகுதியான மகத்தான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடமே மீளுகிறேன்)) (110) (110) திர்மிதி ஹதீஸ் எண் 3577 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஸஹீஹ் திர்மிதி 3/469 ல் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார். ((இதனை யார் ஓதுகிறாரோ அவர் போர்முனையிலிருந்து விரண்டோடினாலும் அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்))
147- ((اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَذْهِبْ غَيْظَ قَلْبِي، وَأَعِذْنِـي مِنْ مُضِلاتِ الْفِتَنِ)) பொருள்: ((யா அல்லாஹ் எனது பாவங்களை மன்னித்து எனது உள்ளத்தின் கோபத்தை நீக்கிவிடுவாயாக! மேலும் சோதனைகளில் அழிவிற்குடுத்துபவற்றிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! ))(111) [111] இந்த துஆ நபியவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு கேட்ட துஆவிலிருந்து பெறப்பட்பட்டுள்ளது. நபியவர்கள் அவருக்காக பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் ((யா அல்லாஹ் அவரி (ஆயிஷாவி)ன் பாவங்களை மன்னித்து அவரது உள்ளத்தின் கோபத்தை நீக்கிவிடுவாயாக! மேலும் சோதனைகளில் அழிவிற்கு உட்படுத்துபவற்றிலிருந்து அவரை பாதுகாப்பாயாக! )) இப்னு அஸாகிர் அவர்கள் இதனை ((அல் அர்பஊன பீ மனாகிப் உம்மஹாதில் முஃமினீன்)) என்ற நூலில் பக்கம் 85 ல் ஆயிஷா (ரழி) அவர்களின் மூலம் பதிவு செய்து செய்து விட்டு, ((இது ஸஹீஹ் ஹஸன் தரத்திலான ஹதீஸ், பகிய்யத்துப்னுல் வலீத் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது)) என கூறுகிறார். மேலும் இதனை இப்னுஸ்ஸூன்னி அவர்கள் அமலுல் யவ்மி வல்லைலா என்ற நூலில் 457 இலக்கத்தில் பதிவுசெய்துள்ளார். அவரின் நூலின் வேறொரு பிரதியில் ((மின் முழில்லாதில் பிதன்)) என்பதற்குப் பதிலாக ((வஅஜிர்னி மினஷ்ஷைத்தான்)) (சைத்தானை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக) என இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் தரம் தொடர்பான ஆய்வை அல்பானி அவர்களின் ழஈபாவில் ஹதீஸ் எண் 4207 இல் காணவும். இந்த ஹதீஸை பலப்படுத்தும் வகையில் இக்கருத்தை பிரதிபலிக்கும் ஹதீஸ் ஒன்று உம்மு ஸலமா (ரழி) அவர்களின் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு உள்ளது : ((முஹம்மத் நபியின் ரப்பாகிய அல்லாஹ்வே! எனது பாவங்களை மன்னித்துவிடு! எனது உள்ளத்தின் கோபத்தை நீக்கிவிடு! நாம் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் வழிகெடுக்கும் குழப்பங்களை விட்டும் என்னைக் காத்துவிடு)) இவரின் ஹதீஸானது அஹ்மதில் ஹதீஸ் எண்26576 2/44 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹைதமி அவர்கள் அவரின் நூலான மஜ்உஸ்ஸவாஇதில் 10/27 ஹஸன் தரத்திலாளானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதே ஹதீஸ் தபரானியின் முஃஜம் அல்கபீரில் 23/338 ஹதீஸ் எண் 785 இடம்பெற்றுள்ளது. அதில் ((மா அஹ்யய்தனா என்ற வாசகம் இடம்பெறவில்லை))இன்னும் இந்த ஹதீஸ் உம்மு ஹானிஃ (ரழி) அவர்கள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது ஹதீஸானது அல் ஹராஇதியின் இஃதிலாலுல் குலூப் எனும் நூலில் ஹதீஸ் எண் 52 லும், மஸாவிஉல் அக்லாக் எனும் நூலில் ஹதீஸ் எண் 323 இடம்பெற்றுள்ளது.
148- (( اللَّهُمَّ أَحْيِـنـِــي عَلَى سُنَّةِ نَبِيِّكَ صلى الله عليه وسلم وَتَوَفَّنِي عَلَى مِلَّتِهِ، وأَعِذْنِــي مِنْ مُضِلاَّتِ الْفِتَنِ)) பொருள்: ((யா அல்லாஹ் என்னை உனது நபியின் வழிமுறையில் உயிர் வாழச் செய்வாயாக! அவரின் மார்க்கத்தில் மரணிக்கச் செய்வாயாக! மேலும் சோதனைகளில் அழிவிற்குடுத்துபவற்றிலிருந்து என்னை பாதுகாப்பாயாக)) (112) (112) பைஹகியின் அஸ்ஸுனன் அல் குப்ராவில் 5/95 ல் இப்னு உமர் (ரழி) அவர்களின் பிரார்த்தனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு முலக்கின் அவர்கள் அவரின் நூலான அல்பத்ருல் முனீரில் 6/309 இந்த துஆ குறித்து இதன் அறிவிப்பாளர் தொடர் உறுதியானது என அழ்ழியா என்ற நூலை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுகிறார். இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் எவரும் யாஅல்லாஹ் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் எனப்பிரார்த்திக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சோதனைக்குள் ஆற்படாமல் இல்லை. ஏனெனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் ((உங்களின் செல்வங்களும் பிள்ளைகளும் சோதனையே-அத்தஆஃபுன் 15 )) எனவே உங்களில் எவரும் பாதுகாப்பு தேடுபாவராக இருந்தால் சோதனைகளில் அழிவிற்குடுத்துபவற்றிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! என்று கேட்கட்டும். இந்த தகவலை இப்னு ஜரீர் அத்தபரி அவர்கள் தனது தப்ஸீரில் 13/475 ல் 15912 இலக்கத்தில் குறிப்பிடுகிறார். இந்த செய்தியை இப்னு பத்தால் அவர்கள் அவரின் ஸஹீஹுல் புஹாரிக்கான விரிவுரையில் 4/13 ல் குறிப்பிட்டுள்ளார்.
149- ((اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، [فِي الْعَالَمِينَ] إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ)) பொருள்: ((யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிந்தது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள்புரிவாயாக. யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீது உன் அருள்வளத்தையும் செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல், முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும் செழிப்பையும் பொழிவாயாக! நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன்)) (113) (113) புஹாரியில் ஹதீஸ் எண் 3370லும், முஸ்லிமில் 405 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வ புகழும் அகிலமனைத்தினதும் இரட்சகனான அல்லாஹ்விற்கே உரியது. அவனின் கண்ணியத்திற்கும் மாண்புமிகு அவனது அதிகாரத்திற்கும் தக்க வகையில் அவனைப் புகழ்கின்றேன். எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் மறுமை வரையில் அவர்களைப் சிறந்த முறையில் பின்பற்றி வாழ்ந்தோர் மீதும் உனது ஸலாத்தையும் ஸலாமையும் பொழிவாயாக.
ஓதிப்பார்த்தல் மூலம் சிகிச்சை செய்தல்
அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஊடாக
அல்லாஹ்வின் அருளை வேண்டி நிற்கும்
கலாநிதி/ ஸஈதுப்னு அலி இப்னி வஹ்ப் அல் கஹ்தானி
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)
முகவுரை : குர்ஆன் ஸுன்னா மூலம் சிகிச்சை பெறுவதின் அவசியம்
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன, அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவியும் பாவமன்னிப்பும் கோருகிறோம். எமது உள்ளங்கள் மற்றும் செயற்களின் தீங்குகளிலிருந்து அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை, யாரை அல்லாஹ் வழிதவறச் செய்துவிடுகிறானோ அவரை நல்வழிப்படுத்துபவர் யாருமில்லை. உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளனுமில்லை, முஹம்மது அவனது அடியாரும் தூதருமாவார், அவருக்கு, அவருடைய குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும், நன்மையுடன் அவர்களை பின்பற்றியவர்களுக்கும், மறுமை நாள்வரை, அதிகமான சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். இதற்குப் பிறகு:
குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஓதல்களால் சிகிச்சை பெறுவது பயனுள்ள சிகிச்சை, முழுமையான நிவாரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் عزوجل கூறினான் : “இது (-இந்த குர்ஆன் அதை) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்கள் எந்த மொழி உடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு) நேர்வழியும் நிவாரணமும் ஆகும்.” ஸூறா புஸ்ஸிலத், வசனம் : 44. மேலும் அல்லாஹ் கூறுகிறான் : “மேலும், நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் எது இருக்குமோ, அதையே குர்ஆனில் நாம் இறக்குகிறோம். இன்னும், அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது.” (ஸூறதுல் இஸ்ரா : 82) இங்கு, மின் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது இனத்தைக் குறிக்கவாகும். ஏனெனில், முன்னர் குறிப்பிடப்பட்ட வசனத்தில் உள்ளதுபோல, குர்ஆன் முழுவதும் அருமருந்தாகும், மேலும், அல்லாஹ் கூறினான்: “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றை குணப்படுத்தும் மருந்தும் நேர்வழியும், (குறிப்பாக இந்த வேதத்தை பின்பற்றி நடக்கின்ற) நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் (அருளும்) வந்துவிட்டன. ஸூறா யூனுஸ், வசனம்: 57. (1) இப்னு கய்யிம் அவர்களின் 'ஆரோக்கியத்தை நாடி கேட்பவருக்கான போதுமான பதில்' நூலில் பக்கம் 20 ல் காண்க.
குர்ஆன் அனைத்து உள்ளம் மற்றும் உடல் நோய்களுக்கும், இம்மை மற்றும் மறுமை நோய்களுக்கும் முழுமையான நிவாரணமாகும். ஆனால் அனைவரும் குர்ஆனின் மூலம் நிவாரணம் பெறுவதற்கு தகுதியானவர்களாகவும், அதற்கேற்ப வழிகாட்டப்படுப வர்களாகவும் இருப்பதில்லை. நோயாளி குர்ஆனை நம்பிக்கையுடனும், முழுமையான ஏற்றுக் கொள்ளலுடனும், உறுதியான நம்பிக்கையுடனும், அதன் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து அதனை நிவாரணமாக எடுத்துக்கொண்டால், எந்த நோயும் அதற்கு எதிராக நிலைக்க முடியாது. எவ்வாறு இந்த நோய்கள், மலைகளை உடைத்துவிடக்கூடிய, பூமியை துண்டாக்கிவிடக்கூடிய, பூமியின் மற்றும் வானத்தின் இறைவனின் வார்த்தைகளுக்கு எதிராக நிலைக்க முடியும்? உள்ளம் மற்றும் உடல் நோய்களில் எதுவாக இருந்தாலும், அல்லாஹ் தனது வேதத்தில் விளக்கத்தை வழங்கியவர்களுக்கு, அதில் அவற்றின் நிவாரணம், காரணம், அவற்றிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றின் வழிகாட்டல் உள்ளது. அல்லாஹ் தஆலா குர்ஆனில் உள்ளம் மற்றும் உடல் நோய்களையும், உள்ளம் மற்றும் உடலின் வைத்தியத்தையும் குறிப்பிடுகின்றான்.
உள நோய்கள் இரண்டு வகைப்படும்: சந்தேகமும் குழப்பமும் கொண்ட நோய், மற்றும் இச்சையும் தவறான வழியும் கொண்ட நோய். அல்லாஹ் உள நோய்களை விரிவாக விவரிக்கிறான், அவற்றின் காரணங்களையும், அவற்றின் நிவாரணங்களையும் குறிப்பிடுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்: “(அவர்கள் கேட்கும் அத்தாட்சியை விட) இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு போதாதா? இது அவர்கள் மீது ஓதி காண்பிக்கப்படுகிறதே! நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன.” ஸுறதுல் அன்கபூத் வசனம் : 51 அல்லாமா இப்னு அல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்குர்ஆன் மூலம் குணமடையாதவர் குணமடைய மாட்டார். யாருக்கு அல்குர்ஆன் போதுமாக இல்லையோ, அவரை அல்லாஹ் பாதுகாக்கமாட்டான்". (3). (2) இப்னு கய்யிம் எழுதிய ஸாதுல் மஆத் 4/6 மற்றும் 4/352 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (3) ஸாதுல் மஆத் 4/352.
உடலின் நோய்கள் என்று வரும்போது, குர்ஆன் அதன் அடிப்படைகள், மையங்கள் மற்றும் விதிகளை விளக்குகிறது. அதாவது, உடலின் மருத்துவத்தின் அனைத்து அடிப்படைகளும் குர்ஆனில் உள்ளன. அவை மூன்று: ஆரோக்கியத்தை பேணுதல், தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்த்தல், தீங்கு விளைவிக்கும் கெட்ட பொருட்களை வெளியேற்றுதல். இதன் மூலம் இந்த வகைகளின் மற்ற அனைத்து தனித்தனியான விடயங்களையும் அறியலாம். (4) (4) ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 352 மற்றும் பாகம் 4 பக்கம் 6.
ஓர் அடியான் குர்ஆனை நன்கு பயன்படுத்தி சிகிச்சை செய்தால், அதனால் உடனடி நிவாரணத்தில் அதிசயமான தாக்கத்தை காணலாம்.
இமாம் இப்னு அல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : மக்காவில் நான் ஒரு காலத்தில் நோயுற்று இருந்தபோது, அங்கு மருத்துவரோ, மருந்தோ கிடைக்கவில்லை. எனவே நான் எனது உடல்நலத்தை புனித ஃபாத்திஹா ஓதுவதன் மூலம் சிகிச்சை செய்தேன். அதனால் அதிசயமான பலனை கண்டேன்: நான் ஒரு முறை புனித ஸம்ஸம் நீரை எடுத்துக் கொண்டு அதில் பலமுறை ஃபாத்திஹா ஓதினேன், பின்னர் அதை அருந்தினேன். இதனால் முழுமையான குணமடைந்தேன். பின்னர் பல்வேறு வலிகளுக்கு இதையே செய்து வந்தேன், இதனால் மிகுந்த பயன் அடைந்தேன். எனவே இதனை வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைத்தேன், அவர்களில் பலர் விரைவில் குணமடைந்தனர். (5) ஸாதுல் மஅாத் பாகம் 4 பக்கம் 178 ல் பார்க்கவும், மேலும் அல் ஜவாப் அல் காஃபி பக்கம் 21 ல் பார்க்கவும்.
அதேபோல ஆதாரபூர்வமான நபிமொழிகளின் மூலம் செய்யப்படும் ருக்யா சிகிச்சை மிகவும் பயனுள்ள மருந்தாகும். தடைக்காரணிகள் எதுவும் இன்றி, துஆக்கள் செய்யப்படும் போது, அவை தீமைகளைத் தடுக்கவும், வேண்டியதைப் பெறவும் மிகவும் பயனுள்ள காரணங்களாகும். அவை மிகவும் பயனுள்ள மருந்தாகும், குறிப்பாக அதில் தொடர்ந்து பிரார்த்திப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது துன்பத்தின் எதிரியாகும், அதை எதிர்த்து சிகிச்சை அளிக்கிறது, அதை வராமல் தடுக்கிறது அல்லது அது வந்தால் அதைத் தணிக்கிறது; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஏற்பட்டுள்ள சோதனைகளை நீக்கவும், ஏற்படாதவற்றை விட்டும் காக்கவும் துஆ பயனளிக்கும். எனவே, அடியார்களே! துஆவைப் பற்றிக்கொள்ளுங்கள். (7) மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “விதியை மாற்றுவது பிரார்த்தனை மட்டுமே, ஆயுளை அதிகரிப்பது உபகாரம் புரிதலே." (8) ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது: அதாவது, நோய்நிவாரணம் பெறுவதற்கும், ஓதிப்பார்ப்பதற்கும் பயன்படும் வசனங்கள், திக்ருகள், துஆக்கள், பாதுகாப்புக்கோரி ஓதப்படும் பிரார்த்தனைகள் இவை உண்மையாகவே பயனுள்ளவையும் நோய்நிவாரணமளிக்கக் கூடியவையும் ஆகும். ஆனால் அதற்கு செய்பவரின் ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அவரது பலமும், தாக்க சக்தியும் அவசியமாகும். நோய்நிவாரணம் ஏற்படாதபோது, அது செய்பவரின் செயல்திறன் குறைவாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரின் ஏற்றுக்கொள்ளும் திறன் இல்லாமலோ அல்லது அவருக்குள் உள்ள ஒரு வலுவான தடையினால் மருந்து பயனளிக்க முடியாததாலோ இருக்கலாம்; ஏனெனில் ஓதிப்பார்ப்பதன் மூலம் சிகிச்சை செய்வது இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்: (6) பார்க்க : அல்ஜவாப் அல்காஃபி, பக்கம் 22-25. (7) திர்மிதியில் ஹதீஸ் எண் 3548 லும், ஹாகிமில் பாகம் 1 பக்கம் 670 லும், அஹ்மதில் ஹதீஸ் எண் 22044 லும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் ஸஹீஹ் அல் ஜாமிஇல் பாகம் 3 பக்கம் 151 ஹதீஸ் எண் 3403 லும் பார்க்க. (8) ஹாகிமில் 1/670 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 2139 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவில் 1/76 ஹதீஸ் எண் 154 ல் இந்த ஹதீஸை ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
முதலாவது: நோயாளியின் தரப்பிலிருந்து, அதாவது, மனபலத்துடனும், அல்லாஹ்வை உண்மையாகவே நெருங்கியும், குர்ஆன் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமும் கருணையும் ஆகும் என்ற உறுதியான நம்பிக்கையுடனும், உள்ளமும் நாவும் ஒரே நிலையில் நின்று ஓதப்படும் ஸஹீஹான துஆக்களுடனும் இருக்க வேண்டும்; ஏனெனில் இது ஒரு வகையான போராட்டமாகும். எனவே போராளி தனது எதிரியை இரண்டு விடயங்களின் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும்:
ஆயுதம் சரியானதாகவும், நல்லதாகவும் இருக்கவேண்டும். கை பலமாக இருக்கவேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும், ஆயுதம் பெரிய அளவு பயன்தரமாட்டாது. இரண்டுமே இல்லாமல் இருந்தால் எவ்வாறிருக்கும்? அப்போது உள்ளம் தவ்ஹீத் (ஏகத்துவம்), தவக்குள் (நம்பிக்கை), தக்வா (இறையச்சம்), அல்லாஹ்வை நோக்கிய சிந்தனை ஆகியவையின்றி கெட்டுவிடும், அவனை பாதுகாப்பதற்கு எந்த ஆயுதமும் கிடையாது.
இரண்டாவது: குர்ஆன் மற்றும் ஸுன்னா மூலம் சிகிச்சையளிப்பவரின் தரப்பிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட இரு அம்சங்களும் இருப்பது அவசியமாகும். இதனாலதான் இப்னு தீன் ரஹிமஹுல்லாஹ் தஆலா அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ((அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பிற துஆக்களைக் கொண்டு ஓதிப்பார்த்தல் என்பது ஆன்மீக வைத்தியமாகும். இது நல்லவர்களின் நாவிலிருந்து ஓதப்பட்டால் அல்லாஹ்வின் அனுமதியால் நிவாரணம் கிடைக்கும்))[10]. (9) பாருங்கள்: ஸாதுல் மஆத் 4 / 68, அல் ஜவாப் அல் காஃபி பக்கம் 21. (10) இப்னு ஹஜரின் பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 196.
மூன்று நிபந்தனைகள் -வரையறைகள்- பூர்த்தியாகும் போது ஓதிப்பார்த்தல் அனுமதிக்கப்படலாம் என மார்க்க அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்:
முதலாவது நிபந்தனை: அல்லாஹ்வின் பேச்சு, அல்லது அவனது பெயர்கள் மற்றும் பண்புகள், அல்லது அவனது தூதர் (ஸல்) அவர்களின் பேச்சு ஆகியவற்றைக் கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டாவது நிபந்தனை : அரபு மொழியிலோ அல்லது அதன் பொருள் அறியப்படும் பிற மொழியிலோ இருக்க வேண்டும்.
மூன்றாவது நிபந்தனை: ஓதிப்பார்த்தல் சுயமாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது; மாறாக, அது அல்லாஹ்வின் வல்லமையால் மட்டுமே [நடந்தே தீரும்], மேலும் ஓதிப்பார்த்தல் என்பது காரணிகளில் ஒன்று மாத்திரமே என்றும் நம்புதல். (11) பத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 195 லும், அலாமா பின் பாஸ் (ரஹ்) அவர்களின் பத்வாக்கள் பாகம் 2 பக்கம் 384 லும் பார்க்கவும்.
இந்த அதிமுக்கியத்துவத்தின் காரணமாக, எனது நூலான ((அத்திக்ரு வத்துஆ வல் இலாஜ் பிர்ருகா மினல் கிதாபி வஸ்ஸுன்னா)) என்ற நூலிலிருந்து ஓதல்கள் பகுதியை சுருக்கமாக இந்த நூலில் தொகுத்துள்ளேன். மேலும் பல -இன்ஷா அல்லாஹ்— பயன்தரும் விடயங்களையும் இணைத்துள்ளேன். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மூலமும், உயர்பண்புகளின் மூலமும், அவனின் திருமுகம் நாடி தூய்மையான முறையில் (செய்யப்பட்டதாக) இந்நூலை ஆக்க வேண்டுமெனவும், இதன் மூலம் எனக்கு நற்பயன் கிடைக்கவும், இதனை வாசிப்போர், இதனை அச்சிடுவோர், இதனை வெளியிடுவதற்கு காரணமாக இருப்போர் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நற்பயன் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் மிகத்தூயவன் அவன் இவ்விடயத்திற்கு பொறுப்பாளனாகவும் ஆற்றல் படைத்தவனாகவும் உள்ளான். நபி முஹம்மதின் மீது, அவரின் குடும்பத்தாரின் மீது, அவரின் தோழர்களின் மீது, மற்றும் நன்மையுடன் அவர்களை பின்பற்றியவர்களின் மீது, இறுதி நாள்வரை அல்லாஹ்வின் சமாதானமும் ஆசீர்வாதமும் நிலவட்டும்.
அல்லாஹ்வின் அருளை வேண்டி நிற்கும்
கலாநிதி/ ஸஈதுப்னு அலி இப்னி வஹ்ப் அல் கஹ்தானி
ஹி 1414-6-18 அன்று எழுதப்பட்டது
1. சூனியத்திற்கான சிகிச்சை
சூனியத்திற்கான தெய்வீக சிகிச்சை இரண்டு வகைப்படும்:
பிரிவு ஒன்று: சூனியம் செய்யப்படும் முன்னர் அதன் ஆபத்திலிருந்து பாதுகாப்புப் பெறும் வழி:
1- அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுதல், அனைத்து ஹராமான செயல்களையும் தவிர்த்தல், மேலும், அனைத்து தீய செயல்களிலிருந்தும் தவ்பா செய்தல்.
2. அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுதல். அதாவது, ஒவ்வொரு நாளும் அதிலிருந்து ஒரு பகுதியை ஓதுவதற்காக ஒதுக்கி வைத்தல்.
3- துஆக்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஆதாரபூர்வமான திக்ர்களால் பாதுகாப்பு தேடுதல், அதில் முக்கியமானதாக «பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் ஃபில்அர்தி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ்ஸமீஉல்அலீம்» என்ற திக்ரை காலையிலும் மாலையிலும் மூன்று தடவைகள் ஓதுதல்(12), ஆயதுல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தூங்கும் போதும், காலையிலும் மாலையிலும் ஓதுதல்(13), மேலும் பின்வருவனவற்றையும் ஓதுதல்: குல் ஹுவல்லாஹு அஹத் சூறாவையும் முஅவ்விததைன் ஸூராக்களையும் காலையிலும் மாலையிலும், உறங்கும் முன்னும் மூன்று தடவைகள் ஓதுதல். மேலும், 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, லஹூல்முல்கு, வலஹூல்ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்' என தினமும் நூறு தடவைகள் கூறுதல்(14), காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய திக்ருகளை, தொழுகைகளுக்குப் பின்னர் ஓத வேண்டிய திக்ருகளை, உறங்கும் போதும், விழித்த பின்னரும் ஓத வேண்டிய திக்ருகளை, வீட்டிற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஓத வேண்டிய திக்ருகளை, வாகனத்தில் ஏறுவதற்கும், பள்ளிவாசலுக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஓத வேண்டிய திக்ருகளை, கழிப்பறைக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஓத வேண்டிய திக்ருகளை, நோயாளியைப் பார்த்தால் ஓத வேண்டிய திக்ருகளை, மற்றும் இதர திக்ருகளை தொடர்ந்து ஓதுதல். நான் ((ஹிஸ்னுல் முஸ்லிம்)) இல் பலவற்றை அவற்றின் சூழ்நிலைகள், நிகழ்வுகள், இடங்கள் மற்றும் காலங்களின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளேன். இவற்றை தொடர்ந்து கடைப்பிடிப்பது, அல்லாஹ்வின் அனுமதியால், சூனியம், கண்ணோட்டம் மற்றும் ஜின்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். மேலும், இவை இவ்வாறான பாதிப்புகள் மற்றும் பிற சோதனைகள் ஏற்பட்ட பின்னரும் ஓதமுடியுமான மிகச் சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாகும்.(15) (12) திர்மிதியில் ஹதீஸ் எண் 3388 லும், அபூதாவூதில் ஹதீஸ் எண் 5088 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3869 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் பாகம் 2 பக்கம் 332 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். (13) ஹாகிமில் பாகம் 1 பக்கம் 562 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளதை தஹபி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீபில் பாகம் 1 பக்கம் 273 ஹதீஸ் எண் 658 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். (14) புகாரியில் பாகம் 4 பக்கம் 95 ஹதீஸ் எண் 3293 லும் முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 2071 ஹதீஸ் எண் 2691 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. [15] பாருங்கள்: ஸாதுல் மஆத், 4 / 126, மற்றும் மஜ்மூஉ ஃபதாவா அல்-அல்லாமா இப்னு பாஸ், 3 / 277. மேலும் இந்த நூலின் கண் நோய் சிகிச்சையின் மூன்றாம் பகுதியில், பொறாமைக்காரன் மற்றும் சூனியக்காரனின் தீங்குகளைத் தடுக்க உதவும் பத்து காரணங்களைப் பாருங்கள்.
4. காலையில் வெறும் வயிற்றில் ஏழு அஜ்வா பேரீத்தம் பழங்களை உண்ணுதல், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒருவர் காலையில் ஏழு அஜ்வா பேரீத்தம் பழங்களை உண்டால், அந்த நாளில் அவருக்கு விஷமும் சூனியமும் தீங்கு செய்யாது" (16). மதீனாவின் பேரீத்தம் பழங்களில், இரு ஹர்ராக்களுக்கும் (கருங்கற்களால் ஆன இரு இடங்கள்) இடையில் உள்ளவை சிறந்தவை என முஸ்லிம் அறிவிக்கும் ஹதீஸில் உள்ளது. எங்கள் அறிஞர் அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் ஹதீஸின் அடிப்படையில், மதீனாவின் அனைத்து பேரீத்தம் பழங்களிலும் இந்த சிறப்பு உள்ளது எனக் கருதுகின்றார்கள்: “அதன் கருங்கற்களால் ஆன இரு இடங்களுக்கு இடையில் உள்ள ஏழு பேரீச்சம்பழங்களை காலை உணவாகக் கொண்டால் (17)... ஹதீஸ் (18). (16) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 247 ஹதீஸ் எண் 5445 லும், முஸ்லிமில் பாகம் 3 பக்கம் 1618 ஹதீஸ் எண் 2047 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது [17] லாபதாஹா: லாபதா என்ற சொல்லின் இருமை, இது ஹர்ரா எனப்படும், இது கருப்பு நிறத்தில் எரிந்த கற்கள் கொண்ட நிலம், இங்கு இதனால் குறிக்கப்படுவது: மதீனாவைச் சுற்றியிருக்கும் இரண்டு ஹர்ராக்கள், பார்க்க: மனாவிக்குரிய ஃபைதுல் கதீர் நூல் 2/ 514. (18) முஸ்லிமில் பாகம் 3 பக்கம் 1618, ஹதீஸ் எண் 2047 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும், மதீனாவின் ஈச்சப்பழம் அல்லாமல், வேறு இடங்களில் உள்ள இவ்வாறான ஈச்சப்பழங்களைச் சாப்பிட்டாலும் இந்த சிறப்பை எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்.
இரண்டாம் பகுதி: சூனியம் ஏற்பட்ட பின் அதற்கான சிகிச்சை முறைகள். அவை பலவகைப்படும் :
முதல் வகை: மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறைகளால் சூனியம் வைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து, அதனை வெளியே எடுத்து அழித்தல். இது சூனியம் செய்யப்பட்டவருக்கு மிகப்பயனுள்ள சிகிச்சை முறையாகும். (19) (19) பார்க்க: ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 124, புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 132 ஹதீஸ் எண் 5765 லும், முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1917 ஹதீஸ் எண் 2189 லும், இப்னு பாஸ் ஃபத்வா தொகுப்பு பாகம் 3 பக்கம் 228 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது : மார்க்க அடிப்படையில் மந்திரித்தல், பின்வருபவை அவ்வாறானவையாகும் [20] : [20] பார்க்க : 'பத்ஹுல் ஹக்கில் முபீன் பீ இலாஜிஸ் ஸர்இ வஸ்ஸிஹ்ரி வல் ஐன்' பக்கம் 138.
முதலில்: ((ஏழு பச்சை இலந்தை இலைகளை இரண்டு கற்கள் போன்றவற்றிற்கு இடையில் வைத்து இடித்து, பின்னர் அவற்றில் குளிக்கத் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அதில் இவ்வாறு ஓத வேண்டும் :
அஊது பில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்" (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்). {اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْض وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ} பொருள்: அல்லாஹ், அவனன்றி வணக்கத்திற்குரிய எவரும் இல்லை; அவன் எப்போதும் உயிரோடிருப்பவன், நிலைத்திருப்பவன். அவனைத் தூக்கமும் உறக்கமும் எட்டாது. ஆகாயங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி யார் அவனிடம் பரிந்துரைக்க முடியும்? அவர்களுக்கு முன்னால் உள்ளதையும், அவர்களுக்கு பின்னால் உள்ளதையும் அவன் அறிவான். அவன் விரும்பிய அளவிற்கு தவிர, அவன் அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ அறிய முடியாது. அவனுடைய குர்ஸி ஆகாயங்களையும் பூமியையும் சூழ்ந்துள்ளது. அவற்றை காப்பது அவனுக்கு சிரமமல்ல; அவன் உயர்ந்தவன்; மகத்தானவன். (பகரா :255).
{وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ பொருள்: “ உமது தடியை எறிவீராக! என்று நாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம், அது அவர்கள் பொய்யாகச் செய்கிறவற்றை விழுங்கியது.” (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ பொருள்: ஆக, உண்மை (உறுதியாக) நிகழ்ந்தது. அவர்கள் செய்து கொண்டிருந்த (சூனியமான)து பொய்ப்பித்து விட்டது (-செயலற்றதாக ஆகிவிட்டது). (118) அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள். (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ பொருள்: சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர். (120) قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ பொருள்: “அகிலத்தார்களின் இறைவனை (நாங்களும்) நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள். (121) رَبِّ مُوسَىٰ وَهَارُونَ} பொருள்: ‘‘(அதாவது) மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை’’ ஸூறதுல் அஃராப் வசனங்கள் 117-122
{وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ பொருள்: இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “(சூனியத்தை) கற்றறிந்த (திறமையான) எல்லா சூனியக்காரர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (79) فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰ أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ பொருள்: ஆக, சூனியக்காரர்கள் வந்தபோது, அவர்களை நோக்கி மூஸா கூறினார்: “நீங்கள் (சூனியம் செய்வதற்காக) எதை எறியக்கூடியவர்களாக இருக்கிறீர்களோ அதை (மைதானத்தில்) எறியுங்கள்!” (80) فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ பொருள்: ஆக, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) மூஸா கூறினார்: “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை விரைவில் அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர் செய்ய மாட்டான்.” (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ} பொருள்: இன்னும், “அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிரூபிப்பான், (அதை) குற்றவாளிகள் வெறுத்தாலும் சரியே!” (ஸுறா யூனுஸ் வசனங்கள் :79-82)
{قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ பொருள்: (அவர்கள் மூஸாவை நோக்கி) “மூஸாவே! நீ எறிவாயா அல்லது நாங்கள் முதலில் எறிவோமா?” என்று கூறினர். (65) قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ (மூஸா) கூறினார்: “மாறாக, (முதலாவதாக) நீங்கள் எறியுங்கள்.” ஆக, அ(வர்கள் எறிந்த அ)ப்போது அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் நிச்சயமாக அவை ஓடுவதாக அவருக்கு தோற்றமளிக்கப்பட்டது. (66) فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ பொருள்: ஆக, மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார். (67) قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ பொருள்: நாம் கூறினோம்: “பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் மிகைத்தவர் (வெற்றிபெறுபவர்) ஆவீர். (68) وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ பொருள்: இன்னும், உமது கையில் உள்ளதை நீர் எறிவீராக! அது அவர்கள் செய்ததை (எல்லாம்) விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் ஒரு சூனியக்காரனின் சூழ்ச்சிதான். இன்னும், சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் (அவன் என்னதான் தந்திரம் செய்தாலும்) வெற்றிபெற மாட்டான். (69) فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَىٰ} பொருள்: ஆக, (இதை கண்ணுற்ற) சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர். ஹாரூன் இன்னும், மூஸாவுடைய இறைவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள். ஸூறா தாஹா வசனங்கள் : 65-70
بسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகின்றேன்) {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (1) பொருள்: (நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே! لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) பொருள்: நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3) பொருள்: இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ (4) பொருள்: இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை. وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) பொருள்: இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ} பொருள்: உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.
بسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகின்றேன்) {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) (நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான். اللَّهُ الصَّمَدُ (2) பொருள்: அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்). لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) பொருள்: (அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ}. பொரு: இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.
بسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகின்றேன்) {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1 பொருள்: (நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், مِن شَرِّ مَا خَلَقَ (2) பொருள்: அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும். وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) பொருள்: இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும், وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) பொருள்: இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும், وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ}. பொருள்: பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
بسم الله الرحمن الرحيم பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகின்றேன்) {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) பொருள்: (நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். مَلِكِ النَّاسِ (2) பொருள்: அவன் மனிதர்களின் அரசனாகிய, (2) إِلَٰهِ النَّاسِ (3) (3) பொருள்: மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனாகிய (இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்). مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) பொருள்: பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) பொருள்: அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான். مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ} பொருள்: (ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.)
மேலே குறிப்பிட்ட வசனங்களை தண்ணீரில் ஓதிய பின் மூன்று மிடர்கள் அருந்தி விட்டு எஞ்சிய நீரைக் கொண்டு குளிக்க வேண்டும். இதன்மூலம் அல்லாஹ் நாடினால் நோய் நீங்கி குணம் கிடைக்கும். இதனை முதல் தடவை பயன்படுத்தி பலன் கிடைக்காது விட்டால் நோய் குணமாகும் வரையில் பல தடவைகள் இவ்வாறு செய்வதில் எவ்விதப்பிரச்சினையும் கிடையாது. இம்முறையைப் பின்பற்றி அதிகமானோர் சிகிச்சை செய்து பரீட்சித்துள்ளனர். இதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு நல்ல பயனை அளித்துள்ளான். இது தனது மனைவியோடு குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கு முடியாமல் இருப்பவர்களுக்கு ஒரு அரு மருந்தாகும். (21) [21] பார்க்க : இப்னு பாஸ் அவர்களின் பதாவா, பாகம் 3 பக்கம் 279, பத்ஹுல் மஜீத், பக்கம் 346, வஹீத் அப்துல்ஸலாம் அவர்களின் அஸ்ஸாரிமுல் பத்தார் பித் தஸத்தீ லிஸ்ஸஹரதி வல்அஷ்ரார், பக்கம் 109-117 இவற்றை பார்க்கவும். அங்கு, அல்லாஹ் நாடினால் பயன் தரும், நீண்ட ஓதல் உள்ளது. அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் முசன்னப், பாகம் 11 பக்கம் 13, இப்னு ஹஜர் அவர்களின் பத்ஹுல் பாரி, பாகம் 10 பக்கம் 233 இவற்றையும் பார்க்கவும்.
இரண்டாவது: ஸூரத்துல் பாதிஹா, ஆயத்துல் குர்ஸீ, ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு வசனங்கள், ஸூரத்துல் இக்லாஸ் மற்றும் முஅவ்விததைன் ஆகியவற்றை மூன்று தடவைகள் அல்லது அதற்கு மேல் ஓதவும், அதனை ஊதி, வலியுள்ள இடத்தில் வலது கையால் தடவவும். (22) (24) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1728 ஹதீஸ் எண் 2202 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவதாக: இஸ்திஆதாக்கள், ருக்யா மற்றும் பொது துஆக்கள்: (22) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல்பாரியில் பாகம் 9 பக்கம் 62 ஹதீஸ் எண் 5016லும், முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1723 ஹதீஸ் எண் 2192லும், புஹாரியின் விரிவுரையான பத்ஹுல்பாரியில் பாகம் 10 பக்கம் 208லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1- أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ العَرْشِ العَظِيمِ أَنْ يَشْفِيَكَ என்று ஏழு முறை ஓதவேண்டும்.[23]. பொருள்: மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம், உம்மைக் குணப்படுத்துமாறு கேட்கின்றேன். (23) அபூதாவூதில் பாகம் 3 பக்கம் 187 ஹதீஸ் எண் 3106, திர்மிதியில் பாகம் 2 பக்கம் 410 ஹதீஸ் எண் 2083 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் ஜாமிஇல் 5/180 மற்றும் 322 லும், ஸஹீஹ் ஸுனன் அபீதாவூதில் பாகம் 2 பக்கம் 276 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
2- நோயாளி தனது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு, ((أَعُوذُ بِالله وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ)) என்று ஏழு தடவைகள் கூற வேண்டும். [24] பொருள்: அல்லாஹ்வையும், அவனது ஆற்றலையும் கொண்டு, நான் அனுபவித்துக்கொண்டிருக்கும், பயப்படும் தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (27) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1728 ஹதீஸ் எண் 2709 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. «اللَّهُمَّ رَبَّ النَّاسِ،أَذْهِبِ الْبَأْسَ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا»[25]. பொருள்: யா அல்லாஹ்! நோயை நீக்கிக் குணப்படுத்துவாயாக! நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்தலைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. நோயை எஞ்சாத அளவு குணப்படுத்திவிடு. (68) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 206 ஹதீஸ் எண் 5745 லும், முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1724 ஹதீஸ் எண் 2194 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4- «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ» பொருள்: ((அல்லாஹ்வின் (குணமளிக்கும்) முழுமையான வார்த்தைகளைக் கொண்டு அனைத்து ஷைத்தானிடமிருந்தும், விஷஜந்துக்களிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் பொறாமைக்கண்ணிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.)) (26) (26) புகாரியின் விரிவுரையான பத்ஹுல்பாரியில் பாகம் 6 பக்கம் 408 ஹதீஸ் எண் 3371 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6- «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ: مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ» பொருள்: ((அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவனது கோபத்திலிருந்தும், அவனது தண்டனையிலிருந்தும், அவனது அடியார்களின் தீங்கிலிருந்தும், ஷைத்தான்களின் ஊசலாட்டங்களிருந்தும், ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் )) (28) (28) அபூ தாவூதில் ஹதீஸ் எண் 3893 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 3528 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதியில் 3/171 ல் இந்த ஹதீஸை ஹஸனானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
7- «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ، مِنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَأَ، وَذَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ» பொருள்: ((நல்லவரோ கெட்டவரோ எவரும் கடந்து செல்ல முடியாத அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்து, வெளிப்படுத்தி பரவச் செய்த அனைத்துப் படைப்பினத்தின் தீங்கிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றின் தீங்கிலிருந்தும், அதில் மேலேறிச் செல்கின்றவற்றின் தீங்கிலிருந்தும் (பாதுகாவல் தேடுகிறேன்) மேலும் பூமியிலே அவன் படைத்துள்ளவைகள் மற்றும் அதிலிருந்து வெளிப்படுகின்றவற்றின் தீங்கிலிருந்தும் (பாதுகாவல் தேடுகிறேன்) மேலும் இரவு - பகலின் குழப்பங்களின் தீங்கிலிருந்தும் (பாதுகாவல் தேடுகிறேன்!) மேலும் இரவில் நன்மையுடன் வரக்கூடியவை தவிர மற்றும் எல்லா தீங்கிலிருந்தும்! அருள்மிக்கோனே! உன்னிடம் (பாதுகாவல் தேடுகிறேன்)) (29). (29) அஹ்மதில் பாகம் 3 பக்கம் 119 ஹதீஸ் எண் 15461 ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் மூலமும், இப்னு ஸுன்னி, ஹதீஸ் எண் 637 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மஜ்மஉஸ் ஸவாயித், பாகம் 10 பக்கம் 127 பார்க்கவும். அல்பானி அவர்கள் ஸில்ஸிலத்துல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவில் பாகம் 7 பக்கம் 196 ல் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்.
8- «اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْـحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ ...» பொருள்: ((யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! வித்தையும் விதையையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கியவனே! அனைத்துப் பொருட்களினதும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், நீயே அனைத்து படைப்பினங்களினதும் முன்நெற்றியைப் பிடித்து அதிகாரம் செலுத்தக் கூடியவன், நீயே ஆரம்பமானவன் உனக்கு முன்னர் எதுவுமில்லை, நீயே இறுதியானவன் உனக்கு பின்னர் எதுவுமில்லை, நீயே மேலானவன் உனக்குமேல் எதுவுமில்லை, நீயே இப்பிரபஞ்சத்தின் கீழுள்ளவற்றிற்கும் அதிகாரம் படைத்தவன் உனக்கு கீழ் எதுவுமில்லை...)) (30) (30) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 2084 ஹதீஸ் எண் 2713 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9- « بِسْمِ اللَّهِ أرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسمِ اللَّهِ أَرقِيكَ» பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன் (31) (31) முஸ்லிமில் அபூ ஸஈத் (ரழி) அவர்கள் ஊடாக பாகம் 4 பக்கம் 1718 ஹதீஸ் எண் 2186ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
10- «بِسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَمِنْ شَرِّ كُلِّ ذِي عَيْنٍ» பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன், ஒவ்வொரு நோயிலிருந்தும் உமக்கு குணம் அளிக்கப்படுவதாக, பொறாமை கொண்டவரின் தீமையிலிருந்தும், ஒவ்வொரு கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு பாதுகாப்பு கிடைக்கப்படுவதாக. [32] (32) முஸ்லிமில் ஆஇஷா (ரழி) அவர்கள் ஊடாக, பாகம் 4 பக்கம் 1718, ஹதீஸ் எண் 2185ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
11- «بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ حَسَدِ حَاسِدٍ، وَمِنْ كُلِّ ذِي عَيْنٍ اللَّهُ يَشْفِيكَ» பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொண்டவரின் பொறாமையிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு கண்களிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. [33] உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக, ஸுனன் இப்னு மாஜா, ஹதீஸ் எண் 3527 இல் உள்ளது. அல்-அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் ஸஹீஹ் என உறுதிப்படுத்தியுள்ளார், 2 / 268.
மேற்குறிப்பிட்ட இந்த திக்ர்களும் துஆக்களும் ஓதிப்பார்த்தலும் சூனியத்தினால், கண் திருஷ்டியினால், ஜின்களின் தாக்கத்தினால், மற்றும் அனைத்து நோய்களினாலும் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையாக அமைகின்றன; ஏனெனில் இவை அல்லாஹ்வின் அனுமதியால் பயனளிக்கும், பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் தரும் ஓதிப்பார்த்தல்களாகும்.
மூன்றாவது வகை: சூனியத்தின் தாக்கம் தென்பட்ட இடத்தில் அல்லது உறுப்பில் - சாத்தியமானால் - ஹிஜாமா மூலம் இரத்தத்தை வெளியேற்றுதல். அது சாத்தியமில்லையெனில், முன்னர் குறிப்பிடப்பட்ட சிகிச்சைகள் அல்லாஹ்வின் புகழுக்கு உரியவனாகிய அவனின் உதவியால் போதுமானதாக இருக்கும். [34] பார்க்க: ஸாதுல் மஆத், 4 / 125, சூனியம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் சிகிச்சைகளில் பலவகைகள் உள்ளன, அவற்றைச் செய்து பார்த்து பயனுள்ளதாக இருந்தால் அதில் தவறில்லை. பார்க்க: முஸன்னப் இப்னு அபீ ஷைபா, 7 / 386- 387, மற்றும் ஃபத்ஹுல் பாரி, 10 / 233- 234, முஸன்னப் அப்துர் ரஸாக், 11 / 13, மற்றும் ஸாரிமுல் பதார், பக் 194- 200, மற்றும் 'அல்-ஸிஹ்ர்: ஹகீகதுஹு வஹுக்முஹு' டாக்டர் முஸ்ஃபிர் அல்-தமீனி, பக் 64- 66.
நான்காவது: இயற்கை மருந்துகள். சில பயனுள்ள இயற்கை மருந்துகளை அலகுர்ஆனும், தூய்மையான நபிமொழிகளும் சுட்டிக்காட்டுகின்றன. மனிதன் அவற்றை உறுதியுடன், உண்மையுடன், இறைவனை நாடி, பயன் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கின்றது என்ற நம்பிக்கையுடன் எடுத்துக்கொண்டால், அல்லாஹ் அவற்றின் மூலம் நன்மை அளிக்கின்றான். மேலும், மூலிகைகள் மருந்துகள் போன்றவையும் உள்ளன. அவை அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். அவற்றில் ஹராம் இல்லாதவரை, அவற்றைப் பயன்படுத்த ஷரீஆ அனுமதிக்கின்றது.(35) [35] ஃபத்ஹுல் ஹக்கில் முபீன் பீ இலாஜிஸ் ஸர்இ வஸ்ஸிஹ்ரி வல் ஐன் பக்கம் 139 ஐப் பார்க்கவும். (46) இந்த நூலில் சூனிய சிகிச்சையின் இரண்டாவது வகையில் கூறியதை பார்க்கவும்.
அல்லாஹ்வின் உதவியால் பயனளிக்கும் இயற்கை சிகிச்சைகளில் சில: தேன்(36), கருஞ்சீரகம்(37), ஸம்ஸம் நீர்(38), மழைநீர்; அல்லாஹ் கூறுகின்றான்: “பரகத் செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய மழை) நீரை வானத்தில் இருந்து இறக்கினோம்.” (ஸூறது காப் : 9) (36) பாருங்கள்: ஃபத்ஹுல் ஹக்கில்-முபீன், பக்கம் 140. தேனின் மூலம் சிகிச்சை செய்வது பற்றி இந்நூலில் பின்னர் வரும். [37] ஃபத்ஹுல் ஹக்கில் முபீன் பக்கம் 141 பார்க்கவும், கருஞ்சீரகம் மூலம் சிகிச்சை செய்வது பற்றி இந்நூலில் பின்னர் வரும். [38] பத்ஹுல் ஹக்கில் முபீன், பக்கம் 144 பார்க்கவும், ஸம்ஸம் நீர் மூலம் சிகிச்சை செய்வது பற்றி இந்நூலில் பின்னர் வரும்.
மற்றும் ஆலிவ் எண்ணெய்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஆலிவ் எண்ணெயை உண்ணுங்கள், அதனைக் கொண்டு எண்ணெய் தேய்த்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மரத்திலிருந்து வந்துள்ளது''. (39). இது மிகச் சிறந்த எண்ணெயாகும் என்பது, அனுபவத்திலும், பயன்பாட்டிலும், ஆய்வுகளிலும் உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, , இயற்கை மருந்துகளில் சில : குளியல், சுத்தம் பேணல், மணம் பூசிக்கொள்ளல். (41) (39) அஹ்மத் பாகம் 3 பக்கம் 497 ஹதீஸ் எண் 16055 லும், திர்மிதியில் ஹதீஸ் எண் 1851 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3319 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதியில் பாகம் 2 பக்கம் 166 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். [40] பார்க்க : 'ஃபத்ஹுல் ஹக்கில் முபீன் பீ இலாஜிஸ் ஸர்இ வஸ்ஸிஹ்ரி வல் ஐன்’ பக்கம் : 142 (41) முன் குறிப்பிடப்பட்ட ஆதார நூல், பக்கம் 145 ஐப் பார்க்கவும்
2- கண் திருஷ்டிக்கு சிகிச்சை
கண் திருஷ்டியினால் ஏற்படும் பாதிப்பின் சிகிச்சையின் வகைகள் :
பிரிவு ஒன்று: பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர். இது பலவகைப்படும்:
1. 'பாதுகாப்பு எடுத்துக்கொள்ளல்' - நபியவர்கள் கற்றுத்தந்த திக்ர்கள், துஆக்கள் மற்றும் பாதுகாப்புத்தேடும் துஆக்கள் மூலம், பாதுகாப்பு தேவைப்படும் ஒருவருக்காக இவற்றை ஓதுவது, சூனியத்திற்கான சிகிச்சையில், முதல் பகுதியில் இது விளக்கப்பட்டது. (42) [42] சூனியத்திற்கான சிகிச்சை முறைகள் குறித்து இந்நூலில் முன்பு கூறியவற்றை பாருங்கள்.
2- தன்னிடமுள்ளவற்றில் அல்லது தனது செல்வத்தில், அல்லது தன் பிள்ளையில், அல்லது தன் சகோதரரிடத்தில், அல்லது இதரவற்றில் வியப்பை ஆழ்த்தக்கூடிய எதையேனும் கண்டால் கண்பட்டுவிடும் என அஞ்சுபவர் 'பரகத்' வேண்டி துஆ செய்ய வேண்டும், அதாவது: ((மாஷா அல்லாஹ் லா குவ்வத இல்லா பில்லாஹ், அல்லாஹும்மா பாரிக் அலைஹி)) என கூற வேண்டும்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ((உங்களில் ஒருவர் தன் சகோதரரிடத்தில் வியப்பை ஆழ்த்தக்கூடிய எதையேனும் கண்டால் அதற்கு 'பரகத்' வேண்டி துஆ கேட்கவும்)) (43) (43) முவத்தா மாலிக் 2/938, இப்னு மாஜா 2/1160 ஹதீஸ் எண் 3509, அஹ்மத் 4/447 ஹதீஸ் எண் 15700. இந்த ஹதீஸை அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் 2/265 ல் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் ஸாதுல் மஆத் 4/170, அல் சாரிம் அல் பதார் ஃபீத் தஸ்தீ லிஸ்ஸஹரதி வல்அஷ்ரார், ஷெய்க் வஹீத் அப்துல் ஸலாம், பக்கம் 229-252 லும் பார்க்கவும்.
3- கண் பட்டுவிடும் என்ற பயம் உள்ளவரின் அழகை மறைத்தல். (44) (44) பகவியின் ஷரஹுஸ் ஸுன்னா பாகம் 13 பக்கம் 116 லும், ஸாதுல் மஆதில் பாகம் 4 பக்கம் 173 லும் பார்க்கவும்.
பிரிவு இரண்டு : கண் திருஷ்டி ஏற்பட்ட பிறகு. இது பலவகைப்படும்:
1. கண் பட்டவர் அறியப்பட்டால், அவரிடம் வுழூ செய்யுமாறு கூறப்பட வேண்டும், பின்னர் கண் பட்டவரால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து குளிக்க வேண்டும். (45) (45) அபூதாவூத் பாகம் 4 பக்கம் 9 ஹதீஸ் எண் 5056 ல் பார்க்கவும். அல்பானி அவர்களால் ஸில்ஸிலதுல் அஹாதீஸில் ஸஹீஹா, பாகம் 6 பக்கம் 61 ல் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸாதுல்அல்மஆத் பாகம் 4 பக்கம் 163 ல் பார்க்கவும். முகம்மது பின் ஷாயிஃ அவர்களின் 'அல்விகாயா வல் இலாஜ் மினல் கிதாபி வஸ்ஸுன்னா' நூலில் பக்கம் 144-147 ஐப் பார்க்க.
2- பின்வருவனவற்றை அதிகமதிகம் ஓதல்: குல் ஹுவல்லாஹு அஹத் முஅவ்விதாத் ஸுறாக்கள், ஸூரத்துல் பாத்திஹா, ஆயதுல் குர்ஸி, ஸூரத்துல் பகராவின் இறுதி வசனங்கள், மேலும் துஆக்கள் ஆகியவற்றை ஓதுவதுடன், ஊதி, வலது கையால் பாதிக்கப்பட்ட இடத்தைத் தடவவேண்டும். சூனியத்திற்கான இரண்டாவது வகை சிகிச்சையின் (ஜீம்) பிரிவில் 1-11 வரையிலான வசனங்களைப் பார்க்கவும்.(46) (57) இந்த நூலில் கூறப்பட்டுள்ள, சூனியத்திற்கான இரண்டாவது சிகிச்சை முறையை பார்க்கவும்.
3. ((தண்ணீரில் ஓதி அதில் ஊதிவிட்டு, நோயாளி அதிலிருந்து குடிக்க வேண்டும், எஞ்சியதை அவரின் மீது ஊற்ற வேண்டும், அல்லது எண்ணெயில் ஓதி அதனை உடலில் தடவ வேண்டும்)) மேலும், ஸம்ஸம் நீரில் ஓதுவது சாத்தியமானால் அது சிறந்ததாகும், அல்லது மழைநீரில் ஓதவேண்டும். (47) ஸுனன் அபீதாவூதில் பாகம் 4 பக்கம் 10 ஹதீஸ் எண் 3885 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் இதை ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களுக்கு செய்தார்கள். அல்பானி அவர்கள் ழஈஃப் அபீதாவூதில் ஹதீஸ் எண் 836 ல் இந்த ஹதீஸ் ழஈஃப் எனத் தீர்ப்பளித்துள்ளார். (48) அஹ்மதில் பாகம் 3 பக்கம் 497 ஹதீஸ் எண் 16055 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸில்ஸிலத்துல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவில் பாகம் 1 பக்கம் 108 ஹதீஸ் எண் 379 ல் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். [49] இந்நூலில், முன்னர் சூனிய சிகிச்சையின் நான்காவது வகையில் கூறியதைப் பார்க்கவும். (52) இந்த நூலில் சூனியத்திற்கான சிகிச்சை முறையின் இரண்டாவது வகையை பார்க்கவும்.
4- நோயாளிக்காக குர்ஆனின் சில வசனங்களை எழுதி, பின்னர் அதை கழுவி அந்த நீரை அருந்த வைப்பதில் பிரச்சனை இல்லை. இதில், சூறா பாதிஹா, ஆயத்துல் குர்ஸி, மற்றும் பகரா ஸூராவின் கடைசி இரண்டு வசனங்கள் உட்பட, குல் ஹுவல்லாஹு அஹத், முஅவ்விததைன் சூறாக்கள், மற்றும் துஆக்கள், சூனிய சிகிச்சையின் இரண்டாவது வகையில், 2 ஆம், 3 ஆம் பந்திகளில் உள்ளபடி ருக்யா போன்றவற்றையும் ஓதலாம். எண் 1-11 வரை. (52) (51) இப்னுல் கைய்யுமின் ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 170 லும், இப்னு தைமிய்யாவின் ஃபதாவா பாகம் 19 பக்கம் 64 லும் பார்க்கவும் [50] இந்நூலில், முன்னர், சூனிய சிகிச்சையின் நான்காவது வகையில் கூறியதைப் பார்க்கவும்.
பிரிவு மூன்று: பொறாமைக்காரனின் கண் திருஷ்டியைத் தடுக்க உதவும் காரணங்களைச் செய்வது, அவை பின்வருமாறு:
1- அவனுடைய தீமையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்.
2. அல்லாஹ்வுக்கு அஞ்சுதல் மற்றும் அவனது ஏவல், விலக்கல்களைப் பேணிக் கொள்ளல். “நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள், அவன் உன்னைப் பாதுகாப்பான்” [53]. (53) திர்மிதியில் ஹதீஸ் எண் 2516 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதியில் பாகம் 2 பக்கம் 309 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்.
3. பொறாமைப்படுபவரின் மீது பொறுமை காத்தல், அவரை மன்னித்தல், அவருடன் சண்டையிடாமலும், அவரை குற்றம் சாட்டாமலும், அவரால் துன்புறுத்தப் படுவதை மனதில் வைத்துக்கொள்ளாமலும் இருத்தல்.
4. அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைப்பது, யார் அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைக்கிறானோ அவனே அவருக்கு போதுமானவன்.
5. பொறாமைக்காரனைப் பற்றி அஞ்சாமல், அவனைப் பற்றிய சிந்தனையால் இதயத்தை நிரப்பாமல் இருப்பது மிகவும் பயனுள்ள மருந்தாகும்.
6. அல்லாஹ்வை நாடிச் செல்லல், அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன், அவனது திருப்தியை நாடுதல்.
7. பாவங்களிலிருந்து தவ்பா செய்வது; ஏனெனில் அவை மனிதனின் எதிரிகளை அவனுக்கு எதிராக வலுப்படுத்துகின்றன. “சோதனைகளில் எது உங்களுக்கு ஏற்பட்டதோ அது உங்கள் கரங்கள் செய்தவற்றினால்தான் (ஏற்பட்டது). இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்து விடுகிறான்.” (3) ஸூறத்துஷ் ஷூறா வசனம் :30
8. முடியுமான அளவு தர்மம் செய்து, நல்உபகாரம் புரிதல். ஏனெனில் அதற்கு துன்பங்களை, கண் திருஷ்டியை, பொறாமைக்காரரின் தீமையைத் தடுக்க அற்புதமான தாக்கம் உண்டு.
9- பொறாமைக்காரன், அநியாயக்காரன், தீங்கிழைப்பவன் ஆகியோரின் தீமையை நன்மை செய்வதன் மூலம் அணைக்க வேண்டும். உனக்கு எதிராக அவன் தீங்கு, தீமை, அநியாயம், பொறாமை ஆகியவற்றில் அதிகரிக்கும்போது, அவனுக்கு உபகாரம் செய்வதையும், அறிவுரை கூறுவதையும், அவனைப் பற்றிப் பரிதாபப்பாடுவதையும் அதிகப்படுத்து. இதற்கு அல்லாஹ்வின் அருளால் பெரும் பாக்கியம் பெற்றவர்களே தகுதி பெறுவார்கள்.
10- ஓரிறைக் கொள்கையைத் தூய்மைப்படுத்தி, அதனைப் பரிபூரணமாக வல்லமைமிக்க ஞானமிக்க அல்லாஹ்வுக்கே அர்ப்பணிப்பதாகும். அவனுடைய அனுமதியின்றி எதுவும் தீங்கிழைக்கவோ, நன்மை செய்யவோ முடியாது. அவனே இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பவன். இவ்வகை காரணங்களின் மையமாக இருப்பது அவனே. ஓரிறைக் கொள்கை என்பது அல்லாஹ்வின் மிகப்பெரிய கோட்டை, அதில் நுழைந்தவர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள்.
இவை பொறாமைக்காரன், கண் திருஷ்டி வைப்பவர், மற்றும் சூனியக்காரனின் தீங்குகளை விலகச் செய்யும் பத்து காரணங்களாகும். (54) இப்னுல் கைய்யுமின் 'பதாயிஅல் பவாஇத்' 2/238-245 பார்க்கவும்.
3- ஜின்கள் மனிதர்களில் நுழைவதற்கான சிகிச்சை:
ஜின்னின் பாதிப்புக்குட்பட்டவரின் சிகிச்சை இரண்டு வகைப்படும்:
பிரிவு ஒன்று: பாதிக்கப்படுவதற்கு முன்:
அனைத்து கடமைகளையும், ஏவல்களையும் கடைப்பிடித்து, அனைத்து தடைசெய்யப்பட்டவற்றையும் விட்டு விலகி, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தவ்பா செய்து, அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ருகள், துஆக்கள், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு ஓதல்கள் ஆகியவற்றையும் ஓதி பாதுகாப்பைப் பெறுதல்.
பிரிவு இரண்டு: ஜின்னின் நுழைவுக்குப் பின் செய்யப்படும் சிகிச்சை:
முஸ்லிம் ஒருவர் தனது உள்ளமும் நாவும் ஒன்றிணைந்து ஓதுவதன் மூலம், மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஓதிப் பார்ப்பதன் மூலம் செய்தல். மேலும் ஓதப்படுபவற்றில் சிறந்தவை, ஸூரதுல் ஃபாதிஹா, ஆயதுல் குர்ஸீ, மற்றும் ஸூரா அல்பகராவின் கடைசி இரண்டு வசனங்கள் உட்பட, குல் ஹுவல்லாஹு அஹத், மேலும் குல் அஊது பிரப்பில் பலக், மேலும் குல் அஊது பிரப்பின் நாஸ் ஆகிய சூறாக்களையும் ஓதி, பாதிக்கப்பட்டவர் மீது ஊதவேண்டும். அவ்வாறு மூன்று தடவைகள் அல்லது அதற்கு மேல் மீண்டும் செய்யவும். மேலும், பிற குர்ஆன் வசனங்களையும் ஓதலாம்; ஏனெனில் குர்ஆன் முழுவதுமே உள்ளத்தில் உள்ளவற்றுக்கு நிவாரணியாகவும், ஆரோக்கியமாகவும், வழிகாட்டலாகவும், ஈமான் கொண்டவர்களுக்கு கருணையாகவும் உள்ளது. (56) மேலும், சூனியத்திற்கான இரண்டாவது வகையான சிகிச்சையின் 2 ஆம் 3 ஆம் பிரிவுகளில் உள்ள ஓதல்களையும் ஓதலாம். (57) இந்த சிகிச்சையில் இரண்டு விடயங்கள் அவசியம்: (55) அபூதாவூத் பாகம் 4 பக்கம் 13-14 ஹதீஸ் எண் 3896 லும் அஹ்மத் பாகம் 5 பக்கம் 210 ஹதீஸ் எண் 21835 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் ஸஹீஹாவில் ஹதீஸ் எண் 2028 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். (56) இமாம் அஹ்மதின் முஸ்னத் தொகுப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட பதிப்பான, அல்ஃபத்ஹுர் ரப்பானியில் பாகம் 17 பக்கம் 183 பார்க்கவும்
முதலாவது வகை சிகிச்சை: ஜின்னின் பாதிப்புக்கு உட்பட்டவர் தன்னம்பிக்கையுடன் தூய்மையான மனதுடனும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கிச் செல்வதுடன், உள்ளமும் நாவும் ஒரே நிலையில் நின்று பாதுகாப்புக் கோரி, ஸஹீஹான துஆக்களை ஓத வேண்டும்.
இரண்டாவது : மருத்துவரின் தரப்பிலிருந்து செய்யப்படும் சிகிச்சை. அதுவும் அவ்வாறே இருக்க வேண்டும். ஏனெனில் ஆயுதம் பயனளிக்க பயன்படுத்துபவரின் திறமையும் அவசியம். [58] ஷெய்க் வஹீத் அப்துல் ஸலாம் அவர்களின் 'அஸ்ஸாரிமுல் பதார்' நூலில் பக்கம் 109-117 இல் விரிவான பயனுள்ள ருக்யாவைப் பார்க்கவும், மேலும் 'ஸாதுல் மஅாத்' பாகம் 4 பக்கம் 66-69 இல் பார்க்கவும், “ஜின்கள் மனிதர்களில் நுழைவது பற்றிய உண்மையை விளக்குதல், மற்றும் அதை மறுப்பவர்களுக்கு பதிலளித்தல்” என்ற, அல்லாமா அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் நூலில் பக்கம் 14 இல் பார்க்கவும், இப்னு தைமிய்யா அவர்களின் ஃபதாவா பாகம் 19 பக்கம் 9-65 மற்றும் பாகம் 24 பக்கம் 276 இல் பார்க்கவும், 'அல்விகாயது வல் இலாஜ் மினல் கிதாப் வஸ்ஸுன்னா' என்ற, முஹம்மது பின் ஷாயிஃ அவர்களின் நூலில் பக்கம் 66-69 இல் பார்க்கவும், 'கைபிய்யது தர்தில் ஜின் மினல் பைத்' என்ற முஹம்மது பின் ஷாயிஃ அவர்களின் நூலில் பக்கம் 59 இல் பார்க்கவும், அஷ்கர் அவர்களின் 'ஆலமுல் ஜின் வஷ்ஷயாதீன்' நூலில் பக்கம் 130 இல் பார்க்கவும்.
மற்றும் பாதிக்கப்பட்டவரின் காதில் அதான் கூறப்பட்டால் அதுவும் நன்று; ஏனெனில் ஷைத்தான் அதிலிருந்து விரண்டோடுகிறான். (59) பக்கம் 112ல் பத்ஹுல் ஹக்கில் முபீன் நூலில் ஜின்னின் தாக்கம், சூனியம் மற்றும் கண் திருஷ்டி ஆகியவற்றின் சிகிச்சை பற்றிய விளக்கம் உள்ளது, புஹாரி ஹதீஸ் எண் 574 லும் பார்க்கவும்
4. உளநோய்களுக்கான சிகிச்சை முறைகள் :
[60] இதற்கான விளக்கங்களை ‘ஸாத் அல் மஆத்' நூலில் உள்ள, உள்ளம் விரிவடையும் காரணங்கள் 2/23-28 என்ற பகுதியிலும், 'வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய உதவும் வழிமுறைகள்' என்ற, அறிஞர் அப்துர் ரஹ்மான் பின் நாசிர் அல் ஸிஃதி (ரஹ்) அவர்களின் நூலிலும் காண்க.
மனநோய்களுக்கும், உளநெருக்கடிக்குமான மிகச் சிறந்த சிகிச்சை முறைகள் [60], சுருக்கமாக வருமாறு:
1. நேர்வழி மற்றும் ஓரிறைக் கொள்கை. அதாவது, எவ்வாறு வழிகேடும், இணைவைப்பும் உளநெருக்கடியின் மிகப்பெரிய காரணிகளாக உள்ளனவோ, (அவ்வாறே மேற்கூறியவை மனவிசாலத்தின் காரணிகளாகும்.)
2- நற்செயல்களைப் பேணிவரும் அடியானின் உள்ளத்தில் அல்லாஹ் அனுப்பிவைக்கும் உண்மையான ஈமானியப் பிரகாசம்.
3- பயனுள்ள அறிவு, அடியாரின் அறிவு எவ்வளவு விரிவடைகிறதோ அவ்வளவு அவனது உள்ளமும் பூரிப்படைந்து விரிவடையும்.
4- இறைவனிடம் திரும்புதல், அவனை மனதார நேசித்தல், அவனை நெருங்கி, அவனது வணக்க வழிபாடுகளில் மகிழ்ச்சி அடைவது.
5. எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வது, உள்ளத்தை விரிவடையச் செய்யும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் உள்ளம் நிம்மதியடையும், கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கும்.
6- படைப்பினங்களுக்கு பலவகையான நல் உபகாரங்களைச் செய்வதும், அவர்களுக்கு இயன்ற அளவு நன்மை செய்வதும். நற்குணமும், உபகாரம் செய்யும் மனமும் கொண்ட மனிதன் மிகவும் விசாலமான உள்ளம் கொண்டவனாகவும், நலமான மனம் உள்ளவனாகவும், மகிழ்ச்சியான இதயம் கொண்டவனாகவும் இருப்பான்.
7- வீரம், ஏனெனில் துணிவுடையவர் மனதளவில் நிம்மதியுடனும், விசாலமான உள்ளத்துடனும் இருப்பார்.
8- இதயத்தில் உள்ள குற்றங்களான காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பொறாமை, பகைமை, சண்டை, வஞ்சகம், அத்துமீறல் போன்றவற்றை நீக்குதல் அவசியமாகும். இவை இதயத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, துன்பத்தை ஏற்படுத்துகின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'மிகச் சிறந்த மனிதர் யார்?' என்று கேட்கப்பட்டபோது, அவர்கள்: ((ஈடேற்றமான உள்ளம் கொண்டவன், நாவினால் உண்மை பேசுபவன்)) என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், நாவினால் உண்மை பேசுபவரை நாம் அறிவோம். ஈடேற்றமான உள்ளம் கொண்டவன் என்றால் யார்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ((அவன்தான், இறையச்சம் கொண்டம், தூய்மையானவன். அவனிடம் பாவமோ, அநியாயமோ, கபடமோ, பொறாமையோ இருக்கமாட்டாது)) என்று கூறினார்கள். (61) இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தகல் என்பதன் அர்த்தம், ஒரு பொருளை நாசப்படுத்தும் அளவு அதில் உள்ள குறை என்பதாகும். (62) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 4216 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் பாகம் 2 பக்கம் 411 இல் இதனை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
9. தேவையற்ற பார்வை, பேச்சு, கேட்குதல், கலந்துரையாடல், உணவு, தூக்கம் ஆகியவற்றை விட்டு விடுதல்; ஏனெனில் அவற்றை விட்டுவிடுதல் மன விசாலம், உள நிம்மதி என்பன ஏற்படவும், கவலை மற்றும் துயரங்கள் நீங்கவும் ஒரு காரணியாகும்.
10. ஏதாவது பணியிலோ, அல்லது பயனுள்ள அறிவைக் கற்பதிலோ ஈடுபடுதல்; ஏனெனில் அவை, பதற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளை விட்டும் உள்ளத்தைத் திசைதிருப்புகின்றன.
11. அன்றைய நாளில் செய்யவேண்டிய செயல்களில் கவனம் செலுத்துவதும், எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதையும், கடந்த காலத்தை நினைத்துக் கவலைப்படுவதையும் தவிர்ப்பதும். ஓர் அடியான் தன் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும் பயனளிக்கக்கூடியவற்றில் முயற்சி செய்வதுடன், தன் நோக்கத்தை நிறைவேற்றுமாறு இறைவனை வேண்டி, அவனிடம் உதவி தேட வேண்டும். அது கவலை மற்றும் துக்கத்திலிருந்து ஆறுதல் தரக்கூடியதாக இருக்கும்.
12- உங்களை விட கீழானவர்களை நோக்கிப் பாருங்கள்; ஆரோக்கியத்திலும், அவற்றோடு தொடர்பானவற்றிலும், வாழ்வாதாரத்திலும் அதனோடு தொடர்பானவற்றிலும் உங்களை விட மேலானவர்களை நோக்கிப் பார்க்காதீர்கள்:
13- கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட, சரிசெய்துகொள்ள முடியாத துன்பங்களை மறந்து விடுதல் அவற்றைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கக் கூடாது.
14 - ஓர் அடியானுக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அதனைத் தணிக்க அவன் முயற்சி செய்ய வேண்டும். அதாவது, அவ்விடயம் போய் அடைய வாய்ப்புள்ள மிக மோசமான வாய்ப்புக்களைக் கணிப்பிட்டு, தன்னால் முடிந்தவரை அவரைத் தவிர்க்க முயற்சிக்கவேண்டும்.
15. உள்ளம் வலிமையாக இருந்தால், தீய எண்ணங்களால் ஏற்படும் கற்பனைகளால் மனம் கலங்காமலும், சஞ்சலப்படாமலும் கோபம் அடையாமலும் இருத்தல். விருப்பத்திற்குரியவை தப்பிச் சென்று விடும் என்றோ, வெறுப்பானவை நிகழ்ந்துவிடும் என்றோ பயந்துகொண்டு இருக்கக் கூடாது. மாறாக, பயனுள்ள காரணிகளில் ஈடுபடுவதுடன், மேற்கொண்டு, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அவனிடம் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் கேட்கவேண்டும்.
16- உள்ளத்தால் அல்லாஹ்வைச் சார்ந்து இருந்து, அவனிடம் தவக்குல் வைத்தல், மேலும், அவனைப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்; ஏனெனில் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டிவிட்டவரை வீண் கற்பனைகள் பாதிக்காது. (65) அபூதாவூதில் பாகம் 4 பக்கம் 324 ஹதீஸ் எண் 5090 லும், அஹ்மதில் பாகம் 5 பக்கம் 42 ஹதீஸ் எண் 0430 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் ஜாமிஇல் ஹதீஸ் எண் 3388 லும் ஸஹீஹ் ஸுனன் அபீதாவூதில் பாகம் 3 பக்கம் 251 லும் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
17- அறிவுள்ளவன், அவனது உண்மையான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியுமாக இருப்பதை அறிந்திருப்பான். மேலும் அது மிகவும் குறுகியதாக இருப்பதால், கவலைகள் மற்றும் துன்பங்களுடன் அதை மேலும் குறைக்க மாட்டான். ஏனெனில் அவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எதிரானவையாகும்.
18- அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அவன் தன்னிடம் உள்ள, உலக ரீதியான மற்றும் மார்க்க ரீதியான ஏனைய அருட்கொடைகளுடன், தனக்கு நேர்ந்த துன்பத்தை ஒப்பிடுவான். இவ்வாறு ஒப்பிடும்போது அவனுக்கு கிடைத்துள்ள நன்மைகள் அதிகம் என்பது அவனுக்குத் தெளிவாகும். அதேபோல அவன் அஞ்சக் கூடிய தீங்குகளையும், அவற்றிலிருந்து தப்புவதற்கான பல வாய்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, பல வலுவான வாய்ப்புகளை, ஒரு குறைவான வாய்ப்பு மிகைத்து விடாமல் தடுத்துக்கொள்வான். இதனால் அவனது கவலை மற்றும் பயம் நீங்குகின்றன.
19. மக்கள் தரும் துன்பம், குறிப்பாக அவர்களது தீய வார்த்தைகள், அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக அது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருப்பார். எனவே அவற்றைப் பற்றி சிந்திக்கவோ, அலட்டிக்கொள்ளவோ மாட்டார். அப்போது அவை அவரைப் பாதிக்கவும் மாட்டாது.
20. அவன் தனது சிந்தனைகளைத் தன்னுடைய ஈருலகுக்கும் பயன்படுமாறு அமைத்துக்கொள்வார்.
21. அடியான், தாம் செய்த நன்மைகளுக்காகவும், உபகாரங்களுக்காகவும் நன்றியை அல்லாஹ்விடமன்றி வேறெவரிடத்திலும் எதிர்பார்க்கக் கூடாது. இது அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான ஊடாடலாகும் என்பதை அவன் உணர வேண்டும். அப்போது, தம்மால் உதவிசெய்யப்பட்டவர் நன்றி செலுத்துவேண்டும் என எதிர்பார்க்கமாட்டார். “நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை.” ஸூரா அல்இன்ஸான் வசனம் : 9
22- பயனுள்ள விடயங்களை கண்முன்னே வைத்து, அவற்றை அடைவதற்காக செயல்படுதல், மறுபுறம், தீங்கு விளைவிக்கும் விடயங்களை நோக்காமலும், அவற்றில் மனதையும் சிந்தனையையும் ஈடுபடுத்தாலும் இருக்கவேண்டும்.
23. வேலைகளை உடனடியாக முடித்துவிட்டு, எதிர்காலத்தில் ஓய்வாக இருத்தல். அப்போதுதான், அடுத்துவரும் பணிகளை பலமான சிந்தனையுடனும், செயல்திறனுடனும் நிறைவேற்றலாம்.
24. பயனுள்ள செயல்களிலும் பயனுள்ள அறிவிலும் மிக முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், குறிப்பாக எதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கின்றதோ அதை முற்படுத்தவேண்டும். அதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடி, பின்னர் ஆலோசனை செய்யவேண்டும். நன்மை இருப்பது உறுதியாகத் தெரிய வந்தால், மனவுறுதிகொண்டு, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
25. அல்லாஹ்வின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான அருட்கொடைகளைப் பற்றிப் பேசுதல்; அவற்றை அறிந்து, அவை பற்றிப் பேசுவதன் மூலம் அல்லாஹ் கவலை மற்றும் துயரத்தை நீக்குகிறான், அடியாரை நன்றி செலுத்தத் தூண்டுகிறான்.
26- மனைவி, உறவினர், கொடுக்கல் வாங்கல் செய்பவர் மற்றும் உங்களோடு ஏதாவது தொடர்புள்ளவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களிடம் ஏதாவது குறைகளைக் கண்டால், அவர்களது நலவுகளை அறிந்து அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தல். அவ்வாறு கவனிப்பதன் மூலமே, நட்பு நீடிக்கும். மனம் ஆறுதலடையும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஒரு முஃமினான கணவர் ஒரு முஃமினான மனைவியை வெறுக்கமாட்டார். அவரில் -மனைவியிடத்தில்- வெறுக்கத்தக்க ஒரு குணத்தைக் கண்டால் அவளிடம் உள்ள நல்ல குணத்தில் திருப்தியடையவார்' (63). (63) முஸ்லிமில் பாகம் 2 பக்கம் 1091 ஹதீஸ் எண் 1469 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
27- அனைத்து விடயங்களிலும் நன்மை வேண்டி துஆ கேட்டல், அதில் மிக முக்கியமானது: ((اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي اَلَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي, وَأَصْلِحْ لِي دُنْيَايَ اَلَّتِي فِيهَا مَعَاشِي, وَأَصْلِحْ لِي آخِرَتِي اَلَّتِي إِلَيْهَا مَعَادِي, وَاجْعَلِ اَلْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ, وَاجْعَلِ اَلْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ)) பொருள்: “யா அல்லாஹ்! என் கருமங்களின் பிடிகயிறாகிய எனது தீனை சீர்படுத்தி வைப்பாயாக. எனது வாழ்க்கைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை எனக்கு நீ சீர்படுத்தி வைப்பாயாக. எனது மீள்ச்சிக்குரிய இடமாகிய எனது மறுமையை சீர்படுத்தி வைப்பாயாக. நல்லவைகள் அனைத்திலும் அதிகமாகத் தேடிக் கொள்ள எனது வாழ்க்கையை அமைத்து தருவாயாக. அனைத்து தீங்குகளிலிருந்தும் எனக்கு நிம்மதி தரக்கூடியதாக எனது மௌத்தை அமைத்து வைப்பாயாக.(64) அதுபோல : ((اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ» பொருள்: ((யா அல்லாஹ்! நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் அளவு நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை)) (65) (64) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 2087 ஹதீஸ் எண் 2720 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. (89) அபூதாவூதில் பாகம் 4 பக்கம் 324 ஹதீஸ் எண் 5092 லும், அஹ்மதில் பாகம் 5 பக்கம் 42 ஹதீஸ் எண் 20430 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இர்வாஉல் ஃகலீல் பாகம் 3 பக்கம் 357 ல் ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார். அர்னாவுத் அவர்கள் முஸ்னத் பாகம் 34 பக்கம் 75 இல் தமது ஆய்வில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
28- அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தல் ; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யுங்கள்; ஏனெனில் ஜிஹாத் -அறப்போராட்டம்- சுவனத்தின் வாயில்களில் ஒன்றாகும், அதனால் அல்லாஹ் கவலை மற்றும் துயரத்திலிருந்து மீட்பான். (66) அஹ்மதில் பாகம் 5 பக்கம் 314, 316, 319, 326, 330 ஹதீஸ் எண்கள் 21624, 22680, 22732 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹாகிமில் பாகம் 2 பக்கம் 75 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். மேலும் அல்பானி அவர்கள் ஸில்ஸிலத்துல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவில் பாகம் 2 பக்கம் 274 ல் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழிமுறைகள் மற்றும் காரணிகள் ஆன்மாவின் நோய்களுக்கு பயனுள்ள சிகிச்சையாகும். ஆழமாக சிந்தித்து, உண்மையுடனும் நேர்மையுடனும் செயல்படுத்துபவர்களுக்கு, அவை மனஅழுத்தத்திற்கான மிகச் சிறந்த சிகிச்சையாகும். சில அறிஞர்கள் இதனைப் பயன்படுத்தி பல ஆன்மா நோய்களுக்கு சிகிச்சை செய்துள்ளனர். அதனால் அல்லாஹ் மிகப் பெரிய பயனை வழங்கியுள்ளான். (67) பார்க்க : அல் வஸாஇலுள் முஃபீதா, ஐந்தாம் பதிப்பு, பக்கம் : 06
5- காயங்களையும் புண்களையும் சிகிச்சை செய்வது
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், மனிதனுக்கு ஒரு நோயோ அல்லது வடுவோ காயமோ ஏற்பட்டால், தங்களின் சுட்டுவிரலை நிலத்தில் வைத்து, அதனை உயர்த்தி, ((بِسمِ اللهِ، تُرْبَةُ أرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى بِهِ سَقِيمُنَا، بإذْنِ رَبِّنَا)) என்று கூறுவார்கள். (68) பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு, எங்கள் நிலத்தின் மண், எங்களில் சிலரின் உமிழ்நீரினால், எங்கள் இரட்சகரின் அனுமதியால், எங்கள் நோயாளி அதனால் குணமடைவான், (25) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 206 ஹதீஸ் எண் 5750 லும், முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1721 ஹதீஸ் எண் 2191 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
[83] திருப்பொருத்தத்திற்கு மாறானது சுக்த் மற்றும் ஸகத் எனப்படுகிறது. ஸகிதா என்றால் கோபம், கோபப்பட்டான் என்று அர்த்தமாகும்.
அந்த ஹதீஸின் அர்த்தமாவது: நபியவர்கள் தங்களின் எச்சிலில் சிலதை தங்களின் சுட்டுவிரலில் எடுத்து அதனை மண்னின் மீது வைத்து, அதில் சிறிய அளவு மண் ஒட்டியபோது, அதை காயமுற்ற இடத்திலோ அல்லது நோயுற்ற இடத்திலோ தடவி, அந்நேரத்தில் இந்த வார்த்தைகளை கூறுவார்கள். (69) இமாம் நவவியின் ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரை பாகம் 14 பக்கம் 184 லும், இப்னு ஹஜரின் பத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 208 லும் பார்க்கவும். மேலும் ஹதீஸின் முழுமையான விளக்கத்திற்காக ஸாதுல் மஆதின் பாகம் 4 பக்கம் 186-187 ல் பார்க்கவும். (84) அதாவது: முஸ்லிம் மனிதன் மீது
6- சோதனையின் நிவாரணம்
“நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் (எழுதப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, . நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.” ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் (இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்) . இன்னும், அகம்பாவக்காரர்கள், தற்பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (ஸூரத்துல் ஹதீத் : 22-23)
2. “எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.” (ஸூறதுத் தஃகாபுன் வசனம் :11)
3. ((எந்த அடியானுக்காவது, ஒரு சோதனை ஏற்பட்டு, அவன், “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள், மேலும் நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம். யா அல்லாஹ்! இச்சோதனையில் எனக்கு நற்கூலி வழங்குவாயாக! மேலும் இதற்குப் பகரமாக இதனை விடவும் சிறந்ததை தந்தருள்வாயாக!” என்று கூறினால், அல்லாஹ் தஆலா அவனுக்கு அச்சோதனையில் நற்கூலி வழங்குவான், மேலும் அதைவிடச் சிறந்ததை அவனுக்கு பகரமாகத் தருவான்.)) (70) (70) முஸ்லிமில் பாகம் 2 பக்கம் 633 ஹதீஸ் எண் 918 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
4- ((அடியானின் குழந்தை இறந்துவிட்டால், அல்லாஹ் தனது மலக்குகளிடம்: 'என் அடியானின் குழந்தையை நீங்கள் எடுத்துக்கொண்டீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் : 'ஆம்' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'அவனது இதயத்தின் கனியை நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'ஆம்' என்று கூறுவார்கள். பின்னர் அல்லாஹ், 'என் அடியான் என்ன கூறினான்?' என்று கேட்பான். அதற்கு அவர்கள், 'அவன் உன்னைப் புகழ்ந்து, இஸ்திர்ஜா (71) கூறினான்'. என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'என் அடியானுக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டி, அதற்கு 'பைதுல் ஹம்த்' (புகழுக்குரிய வீடு) என்று பெயரிடுங்கள்.” என்று கூறுவான்.)) (72) [71] அதாவது, அல்ஹம்து லில்லாஹ், இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன் என்று கூறினான். (72) திர்மிதியில் ஹதீஸ் எண் 1021ல் பதிவு செய்யப் பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதியில் பாகம் 1 பக்கம் 298 ல் ஹஸன் தரத்திலானது எனக் கூறியுள்ளார்.
5- ((அல்லாஹ் கூறுகின்றான்: 'என் முஃமின் அடியாரின் உலகில் உள்ள அன்பினரை நான் எடுத்துக் கொண்ட பின், அவன் அதனை (தியாகமாக) ஏற்றுக் கொண்டால், அவனுக்கு எனது கூலி சுவர்க்கம் தவிர வேறில்லை.' (73) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 11 பக்கம் 242 ஹதீஸ் எண் 6424 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது மகனை இழந்த மனிதருக்கு, ''நீ சுவர்க்கத்தின் எந்தவொரு கதவிலும் சென்றாலும், அப்பிள்ளை உன்னைக் காத்திருப்பதைக் காண விரும்பமாட்டாயா?' என்று கேட்டார்கள். (74). (74) அஹ்மதில் ஹதீஸ் எண் 15595 லும், நஸாஈயில் பாகம் 4 பக்கம் 23 இல் ஜனாஇஸ் பகுதியில், 'முஸீபத் நேரத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 1870 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் எனக் கூறப்பட்டுள்ளது. இப்னு ஹிப்பான் அவர்கள் பாகம் 8 பக்கம் 209 லும், அல்பானி அவர்கள் ஸஹீஹ் தர்கீப் வத் தர்ஹீபில் ஹதீஸ் எண் 2007 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார். மேலும், ஃபத்ஹுல் பாரியில் பாகம் 11 பக்கம் 243 ல் பார்க்கவும்.
7- உயர்ந்தோனாகிய அல்லாஹ் தஆலா கூறுகிறான்: 'நான் என் அடியாரின் இரண்டு கண்களையும் பறித்து அவனை சோதித்தும், அவன் பொறுமையுடன் [மற்றும் நன்மை எண்ணி] அதை ஏற்றுக்கொண்டால், அவனுக்கு அவற்றுக்குப் பதிலாக சுவனத்தை வழங்குவேன்' (75) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 116 ஹதீஸ் எண் 5653 லும், சுனன் திர்மிதியில் ஹதீஸ் எண் 2400 லும், மேலும் சஹீஹ் திர்மிதி பாகம் 2 பக்கம் 286 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது
8- “ஒரு முஸ்லிமுக்கு நோய் உட்பட, ஏற்படும் எந்தத் துன்பங்களாக இருப்பினும், மரம் அதன் இலைகளை உதிர்த்துவிடுவது போல, அவற்றின் மூலம் அவனின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்,." (76). (76) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 120 ஹதீஸ் எண் 5648 லும், முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1991 ல் ஹதீஸ் எண் 2571லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9- “ஒரு முஸ்லிமை ஒரு முள்ளோ அல்லது அதற்கு மேற்பட்ட எதாவதொன்றோ தைத்துவிட்டாலும், அதற்காக அவனுக்கு ஒரு அந்தஸ்து எழுதி வைக்கப்படும், மேலும் அவனின் ஒரு பாவம் அதனால் அழிக்கப்படும்.” (77) (77) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1991 ஹதீஸ் எண் 2572 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
10- “ஒரு விசுவாசிக்கு ஏற்படும் வலி(78), களைப்பு(79), உடல்நலம் குன்றுதல், துக்கம், மற்றும் அவனைக் கவலைக்குள்ளாக்கும் (80) மனக்கவலை ஆகிய எதுவாயினும், அவனது பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அல்லாஹ் அதை ஆக்காமல் இருக்கமாட்டான். (81) [78] வஸப்: நிலையான வலி. அல்லாஹ்வின் வசனமும் அதில் ஒன்றாகும்: (وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ) அதாவது, “அவர்களுக்கு நிலையான தண்டனை உள்ளது. முஸ்லிம் கிரந்தத்திற்கான நவவியின் விளக்கத்தைப் பார்க்கவும், 16 / 130. (79) நஸப் : களைப்பு (80) ”யுஹும்முஹூ" அதாவது: அதாவது அவருக்கு கவலையளிக்கிறது. ஸஹீஹ் முஸ்லிமின் நவவியின் விளக்கவுரையைப் பார்க்கவும், பாகம் 16 பக்கம் 130. (81) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1993 ஹதீஸ் எண் 2573 பதிவு செய்யப்பட்டுள்ளது
11- “சோதனையின் அளவுக்கு ஏற்பவே கூலியின் அளவும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்கு, (இறைப்) பொருத்தம் கிடைக்கும். கோபித்தவருக்கு, (இறைக்) கோபம் கிடைக்கும்.” (85) திர்மிதியில் ஹதீஸ் எண் 2698 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 4023 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷேக் அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதியில் பாகம் 2 பக்கம் 286 லும் இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரத்திலானது எனக் கூறியுள்ளார்.
12- அடியானின்(84) மீது சோதனை தொடர்ந்தே இருக்கும், ஒரு கட்டத்தில், பாவங்களே அற்றவனாக பூமியின் மீது நடந்து கொண்டிருப்பான்.(85) (82) திர்மிதியில் ஹதீஸ் எண் 2396 லும், இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 4031 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதியில் பாகம் 2 பக்கம் 286 லும் இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரத்திலானது எனக் கூறியுள்ளார்
7- துன்பம் மற்றும் கவலைகளை கையாள்வது
1- எந்த ஒரு அடியாருக்கும் துன்பம் அல்லது கவலை ஏற்பட்டு, அவர் பின்வருமாறு கூறினால்: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ،سَمَّيْتَ بِهِ نَفْسَكَ،أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، பொருள்: ((யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை, உனது அடிமையினதும் உனது அடிமைப் பெண்ணினதும் மகன், எனது முன்நெற்றி உன் கைவசமே உள்ளது, உனது தீர்ப்பே என்னில் செயல்படுகிறது, என் மீதான உன் தீர்ப்பு மிகவும் நீதியானது. உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாகவும், நெஞ்சத்தின் பிரகாசமாகவும், கவலையை நீக்கக்கூடியதாகவும் துன்பத்தை போக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!) இவ்வாறு கூறினால் அல்லாஹ் அவனது கவலையையும் துன்பத்தையும் நீக்கி, அவனுக்கு அதற்குப் பதிலாக மகிழ்ச்சியை வழங்குவான்)) (86) (86) அஹ்மதில் பாகம் 1 பக்கம் 391 ஹதீஸ் எண் 3712 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹுத் தர்கீபி வத்தர்ஹீப் ஹதீஸ் எண் 182 ல் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
2. «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ» பொருள்: (யா அல்லாஹ்! (வருங்காலத்தைப் பற்றிய) கவலை, நடந்து முடிந்தவை பற்றிய) துக்கம், இயலாமை, சோம்பல், உலோபித்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் (அடக்குமுறை) ஆகிய அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்))(87) (87) புஹாரியில் பாகம் 7 பக்கம் 158 ஹதீஸ் எண் 2893 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இந்த துஆவை மிக அதிகமாக ஒதக்கூடியவர்களாக இருந்தார்கள். மேலும் புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 11 பக்கம் 173 பார்க்கவும்.
8 - கடுந்துயரத்திற்கு மருந்து
1. «لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ» பொருள்: ((அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன வேறு யாருமில்லை அவனே வானங்களுக்கும் பூமிக்கும் அதிபதி சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்)) (88) (88) புஹாரியில் பாகம் 7 பக்கம் 154 ஹதீஸ் எண் 6346, முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 2092 ஹதீஸ் எண் 2730 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது
2.
«اللهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» பொருள்: ((யா அல்லாஹ்! நான் உனது கருணையையே எதிர்பார்க்கிறேன், கண் இமைக்கும் அளவு நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்கு நீ சீர்படுத்துவாயாக! உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை)) (89)
3. «لا إِلَهَ إِلا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ» பொருள்: உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்கு உரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" (90) (90) திர்மிதியில் பாகம் 5 பக்கம் 529 ஹதீஸ் எண் 3505 லும், ஹாகிமில் பாகம் 1 பக்கம் 505 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கூறியதை தஹபி அவர்கள் அங்கீகரித்துள்ளார். அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதியில் பாகம் 3 பக்கம் 168 லும் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
4- ((اللَّهُ اللَّهُ رَبِّي، لاَ أُشْرِكُ بِهِ شَيْئَاً )) பொருள்: ((அல்லாஹ்! அல்லாஹ்வே என் இரட்சகன், அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன்)) (91) (91) அபூதாவூதில் பாகம் 2 பக்கம் 87 ஹதீஸ் எண் 1525 பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் 2/335 லும், ஸஹீஹுத் திர்மிதியில் 4/196 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
9. நோயாளி சுயமாக சிகிச்சையளித்தல்
“உடலில் வலியுள்ள பகுதியின் மீது உனது கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு, 'அஊது பில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வஉஹாதிரு' (அல்லாஹ்வையும் அவனது ஆற்றலையும் கொண்டு, நான் அனுபவிப்பவற்றினதும், பயப்படுபவற்றினதும் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.) என்று ஏழு தடவைகள் கூற வேண்டும்.” (92) (92) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1728 ஹதீஸ் எண் 2202 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
10- நோயாளியை நலம் விசாரிக்கும்போது அவருக்கு செய்யும் சிகிச்சை
ஒரு முஸ்லிம், மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியை நலம் விசாரிக்கச் சென்று அவரிடம், 'அஸ்அலுல்லாஹல் அலீம் ரப்பல் அர்ஷில் அளீமி அன் யஷ்பியக' (மகத்தான அல்லாஹ்விடம், மகத்தான சிம்மாசனத்தின் ரப்பிடம் உம்மைக் குணப்படுத்துமாறு கேட்கின்றேன்) என்று ஏழு முறை கூறினால் அந்த நோயை விட்டும் அல்லாஹ் அவருக்கு ஆரோக்கியம் அளிக்காமல் இருப்பதில்லை. (93) திர்மிதியில் ஹதீஸ் எண் 2083 லும், அபூதாவூதில் ஹதீஸ் எண் 3893 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதியில் பாகம் 2 பக்கம் 210 லும், ஸஹீஹ் அல் ஜாமிஇல் பாகம் 5 பக்கம் 180 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
11 - தூக்கத்தில் ஏற்படும் கவலை மற்றும் திடுக்கம் நீங்க ஓதவேண்டிய துஆ
«أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ: مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»[ பொருள்: ((அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவனது கோபத்திலிருந்தும், அவனது தண்டனையிலிருந்தும், அவனது அடியார்களின் தீங்கிலிருந்தும், ஷைத்தான்களின் ஊசலாட்டங்களிருந்தும், ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (94) (94) அபூ தாவூதில் பாகம் 4 பக்கம் 12 ஹதீஸ் எண் 3893 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 171 ல் இந்த ஹதீஸ் ஹஸன் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
12- காய்ச்சலுக்கான வைத்தியம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “காய்ச்சல் நரக நெருப்பின் சுவாலையிலிருந்து உண்டானதாகும். ஆகையால் தண்ணீரைக் கொண்டு அதனைக் குளிர விடுங்கள்"[95]. (95) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 174 ஹதீஸ் எண் 3264 லும், முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1733 ஹதீஸ் எண் 2210 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
13- கடித்தல் மற்றும் தீண்டுதலுக்கான சிகிச்சை
1- ஸூரதுல் ஃபாதிஹாவை ஓதியவுடன், நாக்கில் உள்ள எச்சிலையும் சேர்த்து, தீண்டப்பட்ட இடத்தில் உமிழ வேண்டும்[96]. (96) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 208, கிதாபுத்திப், நபி (ஸல்) அவர்களின் ருக்யா பற்றிய பாடம்.
2- அதனை தண்ணீர் மற்றும் உப்பினால் துடைத்து, பின்வருவனவற்றை ஓதவேண்டும்: சூரதுல் காபிரூன் இரு முஅவ்விததைன் சூறாக்களும் (பலக், நாஸ்) (97) (97) தபரானி அவர்கள் அல்முஃஜமுஸ் ஸகீரில் 2/830 ல் பதிவு செய்துள்ளார்கள். ஹைஸமி அவர்கள் மஜ்மஉஸ் ஸவாஇத்தில் 5/111 இல் இந்த ஹதீஸின் இஸ்நாத் ஹஸன் தரத்தில் அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார். அல்பானி அவர்கள் ஸில்ஸிலா அஹாதீஸ் ஸஹீஹாவில் ஹதீஸ் எண் 548 இல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
14- கோபத்திற்கான சிகிச்சை
கோபத்திற்கான சிகிச்சை இரு முறைகளில் உள்ளது :
முதலாம் வழி : பாதுகாப்பு
அதாவது, கோபம் ஏற்படுவதற்கான காரணிகளை விட்டும் விலகியிருத்தல். பெருமை, தற்பெருமை, அகம்பாவம், இகழுக்குரிய பேராசை, பொருத்தமற்ற நகைச்சுவை, கேளிக்கை போன்றவை அவ்வாறான சில காரணங்களாகும்.
இரண்டாவது வழி: கோபம் ஏற்பட்டால் செய்யவேண்டிய சிகிச்சை
அது நான்கு வகைகளில் உள்ளடங்கும் :
அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்.
வுழூ.
கோபம் கொண்டவர் தாம் இருந்த நிலையை மாற்றுதல்: அதாவது, உட்காருதல், படுத்துக்கொள்ளுதல், வெளியேறுதல், அல்லது பேசுவதைத் தவிர்த்தல், போன்றவை.
கோபத்தை அடக்குவதில் உள்ள நன்மைகள் மற்றும் கோபத்தின் முடிவில் ஏற்படும் தோல்வி குறித்து வந்துள்ளவற்றை மனதில் நிறுத்துதல். (98) (98) நாவின் விபரீதங்கள் பற்றிய இவ்விவரங்களை அதன் சரியான ஆதாரங்களுடன், ஆசிரியரின், "நாவின் விபரீதம்" (பக்கம் 110-112), மற்றும் "அல்லாஹ்வின் வழியில் அழைப்பதற்கான ஞானம்," (பக்கம் 64-66) ஆகிய நூற்களில் காண்க.
15. கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுவது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது." இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறினார்கள்: ‘‘அஸ்ஸாம்: மரணம், கருஞ்சீரகம்: ஷூனீஸ்’’ (99) கருஞ்சீரகம் மிகவும் பலனளிக்கக்கூடியது. ((அது அனைத்து நோய்களுக்கும் நிவாரணமாகும்)) என்ற நபியவர்களின் வார்த்தை, பின்வரும் இறைவசனம் போன்றதாகும்: "அது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் (அழித்து, நாசமாக்கி) சின்னாபின்னமாக்கி விடும்." (ஸூறதுல் அஹ்காப் வசனம் :25) அதாவது, அழிக்கப்பட முடியுமான, அவ்வாறனவைக்கு நிகரான அனைத்தையும் அது அழிக்கும். (100) (99) புஹாரியின் விரிவுரை பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 143 ஹதீஸ் எண் 5688 லும், முஸ்லிமில் ஹதீஸ் எண் 2215 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது [100] ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 297 ல் காணவும், மேலும் முவப்பகுதீன் அப்துல்லதீஃப் அல் பக்தாதி அவர்களின், 'அத்திப் மினல் கிதாப் வஸ்ஸுன்னா' என்ற நூலில் பக்கம் 88 ல் காண்க.
16- தேனைக் கொண்டு சிகிச்சை செய்தல்
1- அல்லாஹ் தேனைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்: “அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நோய் நிவாரணம் உண்டு. சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது.” (ஸூறதுன் நஹ்ல் வசனம்: 69)
2- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
“மூன்று வழிகளில் நோய் நிவாரணம் உள்ளது: ஹிஜாமா செய்வதன் மூலம், தேனை அருந்துவதன் மூலம், அல்லது நெருப்பினால் சூடு வைத்தல் மூலம். எனினும், நான் என் உம்மத்தினருக்கு சூடு வைத்தல் முறையைத் தடை செய்கிறேன்.” (101) (101) புஹாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் பாகம் 10 பக்கம் 137 ஹதீஸ் எண் 5681 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேனின் நன்மைகள் குறித்து: ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 50-62 மற்றும் அல்-முவஃபக் அல்-தீன் அப்துல் லதீஃப் அல்-பக்தாதியின் 'அல்-திபு மினல் கிதாப் வஸ்ஸுன்னா' நூலில் பக்கம் 129-136 இல் காணலாம்.
17- ஸம்ஸம் நீரால் சிகிச்சை செய்தல்
1- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸம்ஸம் நீர் பற்றி இவ்வாறு கூறினார்கள் : ((இது நிச்சயமாக பாக்கியம் மிக்கது. இது உணவாகவும் [மற்றும் நோய்க்கு மருந்தாகவும்] உள்ளது)) (102). (102) முஸ்லிமில் பாகம் 4 பக்கம் 1922 ஹதீஸ் எண் 2473 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடைப்புக்குள் உள்ளவை பஸ்ஸாரில் பாகம் 2 பக்கம் 86, பைஹகியின் அஸ்ஸுனனில் பாகம் 5 பக்கம் 147, தபரானியின் முஃஜமுல் அவ்ஸதில் பாகம் 3 பக்கம் 247 லும் காணப்படுகின்றன. இதன் இஸ்னாத் ஸஹீஹ் ஆகும். மேலும் பார்க்க: மஜ்மஉழ் ஸவாஐஇத், பாகம் 3 பக்கம் 286
நபியவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''ஸம்ஸம் நீர் எதற்காக அருந்தப்படுகிறதோ அது நிறைவேறும்.'' (103). (103) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3062 லும் மற்றும் ஏனைய ஹதீஸ் தொகுப்புகளிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் இப்னு மாஜாவில் பாகம் 2 பக்கம் 183 லும், இர்வாஉல் ஃகலீல் பாகம் 4 பக்கம் 320 லும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸம்ஸம் நீரை [நீர்ப்பைகளிலும்[104] மற்றும் தோல்பைகளிலும்] எடுத்துச் செல்வார்கள், மேலும் அதை நோயாளிகளின் மீது ஊற்றியும் அவர்களுக்கு பருகவும் கொடுப்பார்கள்" [105]. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : ((நானும் மற்றவர்களும் ஸம்ஸம் நீரின் மூலம் பல அதிசயமான நோய்நிவாரணங்களை அனுபவித்துள்ளோம், பல்வேறு நோய்களிலிருந்து இதன் மூலம் குணமடைந்துள்ளேன், அல்லாஹ்வின் உதவியால் குணமடைந்தேன்[106][107]. [104] இஃதாவத்: நீர்ப்பை முக்தாருஸ்ஸிஹாஹ்: பாகம் 1 பக்கம் 11. (105) திர்மிதியில் பாகம் 1 பக்கம் 180 ஹதீஸ் எண் 963 லும், பைஹகியில் பாகம் 5 பக்கம் 202 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் அத்திர்மிதியில் பாகம் 1 பக்கம் 284 லும், ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா பாகம் 2 பக்கம் 572 ஹதீஸ் எண் 883 லும், ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 392 லும் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார். (106) ஹிஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள்: «பரிஅத்» எனக் கூறுகின்றனர். ஆதாரம்: நிஹாயா ஃபி ஃகரீபில் ஹதீஸ், பாகம் 1 பக்கம் 111. (இங்கு குறிப்பிட்ட அரபு சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு குறிக்கப்படுகின்றது.) (107) ஸாதுல் மஆத் பாகம் 4 பக்கம் 393,178.
18. உள நோய்களுக்கு நிவாரணம்
உள்ளங்கள் மூன்று வகைப்படும் :
1- பரிசுத்த உள்ளம்: மறுமை நாளில் (பயனடைவது) பரிசுத்த உள்ளத்துடன் தன் இறைவனாகிய அல்லாஹ்விடம் வருபவர்தான், அல்லாஹ் கூறுகின்றான்: “செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்.” எனினும், யார் (சந்தேகமில்லாத) ஈடேற்றமான, பரிசுத்தமான (நம்பிக்கை உள்ள) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ, அவரைத் தவிர (ஸூறதுஷ்ஷுஅராஉ வசனங்கள் : 88-89)
பரிசுத்த உள்ளம் என்பது, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் தடைசெய்யப்பட்டவற்றுக்கும் மாறான எந்தவொரு ஆசையிலிருந்தும், அவனது செய்திகளுடன் முரண்படும் எந்தவொரு சந்தேகத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்ட உள்ளமாகும். அது அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அடிமையாகாமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரையும் தீர்ப்பளிக்க அனுமதிக்காமல் பாதுகாக்கப்பட்டதாகும்.
மொத்தத்தில், பரிசுத்தமான உள்ளம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எந்தவிதமான பங்கும் இல்லாதது; மாறாக, விருப்பம், நேசம், நம்பிக்கை, மீளுதல், பணிவு, அச்சம், நம்பிக்கை ஆகிய அனைத்திலும் அவனது அடிமைத்தனம் அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது; அவனது செயல்கள் அல்லாஹ்வுக்கே அர்ப்பணிக்கப்பட்டவை. அவன் நேசித்தால், அல்லாஹ்வுக்காக நேசிப்பான்; அவன் வெறுத்தால், அல்லாஹ்வுக்காகவே வெறுப்பான்; அவன் கொடுத்தால், அல்லாஹ்வுக்காகவே கொடுப்பான்; அவன் தடுத்தால், அல்லாஹ்வுக்காகவே தடுக்கிறான். அவனது அனைத்து எண்ணங்களும், நேசமும், நோக்கமும், உடலும், செயல்களும், உறக்கமும், விழிப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்கும். அவனுடன் உரையாடுவது, மற்ற எவரோடு உரையாடுவதையும் விட அவனுக்கு இனிமையானது. அவனது சிந்தனைகள் அனைத்துமே, இறைதிருப்தி மற்றும் நேசத்தை மையமாகக் கொண்டே அமைகின்றன. (108) அல்லாஹ் நமக்கு இவ்வகையான உள்ளத்தை அருள்வானாக. (108) இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்களின் இகாஸதுல் லஹ்பான் மின் மஸாஇத் அஷ்ஷைத்தான் என்ற நூலில் பக்கம் 1/7 மற்றும் 73 ஐக் காண்க.
2. இறந்த உள்ளம்: இது முதல் வகைக்கு எதிரானது. இது தனது இறைவனை அறியாததும், அவனது கட்டளையின்படி அவனை வணங்காததும், அவன் விரும்பும் மற்றும் திருப்தி அடையும் செயல்களை செய்யாததும் ஆகும். மாறாக, இது தனது ஆசைகளிலும் இன்பங்களிலும் மூழ்கியிருக்கும், அவற்றில் அவனது இறைவனின் கோபமும் சினமும் இருந்தாலும் சரியே. இது அல்லாஹ்வைத் தவிர பிறவற்றுக்கு அன்பு, பயம், நம்பிக்கை, திருப்தி, கோபம், மதிப்பு, பணிவு ஆகியவற்றில் அடிமையாக இருக்கும். அவன் வெறுத்தால், மனோ இச்சைக்காகவே வெறுப்பான், நேசித்தால் மனோ இச்சைக்காகவே நேசிப்பான், கொடுத்தால் மனோ இச்சைக்காகவே கொடுப்பான், மறுத்தாலும் மனோ இச்சைக்காகவே மறுப்பான். மனோ இச்சை அவனது தலைவனாகவும், ஆசையே அவனது வழிகாட்டியாகவும், அறியாமை அவனது ஓட்டுநராகவும், கவனக்குறைவு அவனது வாகனமாகவும் இருக்கும். (109) நாங்கள் இந்த உள்ளத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். (109) இகாஸதுல் லஹ்ஃபான் மின் மஸாயிதிஷ் சைதான் நூலைப் பார்க்கவும், 1ம் பாகம் பக்கம் 9
3- நோயுற்ற உள்ளம்: இது ஒரு உயிருள்ள உள்ளமாகும், ஆனால் அதில் ஒரு நோய் உள்ளது. இதற்கு இரண்டு மூலங்கள் உள்ளன, அவை மாறி மாறி அதற்கு உதவுகின்றன. இதில் எது மேலோங்குகிறதோ அதற்கே அது சார்ந்திருக்கும். அதில் உள்ள அல்லாஹ்வின் மீதான அன்பும், அவனை நம்புவதும், அவனுக்காக உளத்தூய்மையாக இருப்பதும், அவனை நம்பி வாழ்வதும் அதை உயிர்வாழ வைக்கின்றன. அதேபோல் அதில் இச்சைகள் மீது உள்ள நேசமும், அவற்றைப் பெறுவதில் உள்ள பேராசையும், பொறாமையும், பெருமையும், தற்பெருமையும், அதிகாரம் கொண்டு பூமியில் மேலோங்கி, குழப்பம் விளைவிக்கும் விருப்பமும், நயவஞ்சகமும், கபடமும், சிக்கனமும், கஞ்சத்தனமும் அதன் அழிவின் காரணிகளாகும். (110) அல்லாஹ்விடம் இந்த உள்ளத்திலிருந்து பாதுகாப்பு வேண்டுகிறோம். (110) விரிவாக அறிந்து கொள்ள, இகாஸதுல் லஹ்ஃபான் பாகம் 1 பக்கம் 9 ஐப் பார்க்கவும்.
உள்ளத்தின் அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் சங்கையான அல்குர்ஆனில் உள்ளடங்கியுள்ளது.
அல்லாஹுத் தஆலா கூறுகிறான் : “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றை குணப்படுத்தும் மருந்தும் நேர்வழியும், (குறிப்பாக இந்த வேதத்தை பின்பற்றி நடக்கின்ற) நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் (அருளும்) வந்துவிட்டன.” ஸூறா யூனுஸ், வசனம்: 57. மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “மேலும், நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் எது இருக்குமோ, அதை குர்ஆனில் நாம் இறக்குகிறோம். இன்னும், அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது.” (ஸூறதுல் இஸ்ரா : 82)
உள நோய்கள் இரு வகைப்படும்:
உடனடி துன்பம் தராத ஒரு வகை. அது அறியாமை, சந்தேகங்கள், ஐயங்கள் ஆகிய நோய்களாகும். இதுவே இரண்டில் மிகுந்த துன்பத்தை தரக்கூடியது, ஆனால் உள்ளம் கெட்டுப் போய் இருப்பதால் அவர்களால் அதனை உணரமுடியாது.
மற்றொரு வகை: உடனடியாக வலியூட்டும் நோய்: அதாவது, கவலை, மனக்கசப்பு, துக்கம், கோபம் போன்றவை. இந்நோய் அதன் காரணிகளை நீக்குவதன் மூலமும், இயற்கை மருந்துகளின் மூலமும் நீங்கக்கூடியதாகும்.(111) (111) இஃகாஸதுல் லஹ்ஃபான் பாகம் 1 பக்கம் 44 ல் பார்க்கவும்
உள்ளத்தின் சிகிச்சை நான்கு விடயங்களைக் கொண்டு நடைபெறும் :
முதலாவது - திருக்குர்ஆனைக் கொண்டு சிகிச்சை செய்தல். ஏனெனில் அது உள்ளங்களில் தோன்றக்கூடிய சந்தேகத்திற்கும், அதில் உள்ள இணைவைப்பு, நிராகரிப்பு, சந்தேகங்கள், இச்சைகள் ஆகியவற்றின் நோய்களுக்கும் நிவாரணமாகவும், உண்மையை அறிந்து அதன்படி நடப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு உடனடி மற்றும் எதிர்காலப் பலன்களை அளிக்கும் கருணையாகவும் அமைந்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : “எவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, அவர் மக்களுக்கு மத்தியில் நடமாடுவதற்கு ஓர் ஒளியையும் அவருக்கு நாம் ஏற்படுத்தினோமோ அவர், யார் இருள்களில் இருந்து கொண்டு அவற்றிலிருந்து வெளியேறாமல் இருக்கிறாரோ அவரைப் போன்று ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அலங்கரிக்கப்பட்டன.” (ஸூறதுல் அன்ஆம் வசனம்122)
இரண்டாவது விடயம்: உள்ளத்திற்கு மூன்று விடயங்கள் தேவைப்படுகின்றது:
1. அதன் பலத்தை பாதுகாக்கும் ஒன்று. அது, ஈமான், நற்செயல்கள், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல் என்பனவாகும்.
2- தீங்குகளை விட்டும் பாதுகாத்தல். அது, அனைத்து பாவங்களையும், குற்றங்களையும் தவிர்ப்பதாகும்.
3. நோவினை தரும் அனைத்து விடயங்களையும் நீக்குதல். அது, தவ்பா மற்றும் பாவமன்னிப்பு கேட்பதன் மூலம் ஆகும்.
மூன்றாம் விடயம் : உள்ளத்தை மனோ இச்சை ஆக்கிரமிப்பதால் ஏற்படும் நோய்க்கு மருத்துவம் செய்தல் :
இதற்கு இரண்டு சிகிச்சைகள் உள்ளன: அதனை விசாரணைக்கு உட்படுத்தல் மற்றும் அதற்கு மாறு செய்தல். அதனை விசாரணைக்கு உட்படுத்தல் இரு வகைப்படும்:
முதலாவது வகை : செயலுக்கு முன், இதற்கு நான்கு நிலைகள் உள்ளன:
1- இந்த செயல் சக்திக்கு உட்பட்டதா?
2- இந்த செயலை செய்யாமல் இருப்பதை விட செய்வது சிறந்ததா?
3- இந்த செயல் அல்லாஹ்வின் திருமுகம் நாடி செய்யப்படுகிறதா?
4. இந்த செயல் உதவியுடன் செய்யப்படுகிறதா? இதற்கு உதவியாளர்கள் உண்டா? உதவியாளர்கள் தேவைப்பட்டால் அவர்கள் உதவுவார்களா? இவற்றுக்கு பதில் இருக்கின்றது என்றால் முன்னோக்கிச் செல்வான். அவ்வாறு இல்லையெனில், அவன் எப்போதும் அதற்காக முன்னோக்கிச் செல்லமாட்டான்.
இரண்டாவது வகை : செயலுக்குப் பின். இது மூன்று வகைப்படும் :
1. அல்லாஹ்வின் உரிமைகளான வணக்க வழிபாடுகளை ஒழுங்காக நிறைவேற்றாமல், கவனயீனமாக இருந்தமைக்காக தனது உள்ளத்தை விசாரணைக்கு உட்படுத்தல். அல்லாஹ்வின் சில உரிமைகளாவன: உளத்தூய்மை, நலவை நாடுதல், பின்பற்றுதல், இறைவன் தன்னைப் பார்ப்பதை உணர்தல், அல்லாஹ் தன் மீது புரிந்துள்ள உபகாரத்தைப் புரிதல். இவை அனைத்துக்கும் பின்னர் தான் பொடுபோக்காக இருப்பதை உணர்தல்.
2. செய்வதை விட, விடுவதுதான் நல்லதாக இருந்தும், தான் செய்துவிட்ட செயல்கள் தொடர்பாகத் தன்னை விசாரணைக்கு உட்படுத்தல்.
3. தான் செய்யாத, அனுமதிக்கப்பட, வழமை சார்ந்த செயல்கள் பற்றி சுய விசாரணை செய்தல். அதில் அவன் அல்லாஹ்வையும் மறுமையையும் நோக்கமாகக் கொண்டிருந்தானா? அப்படி இருந்தால், அவன் வெற்றி பெறுவான். அல்லது உலகத்தை நோக்கமாகக் கொண்டு இருந்தானா? அப்படி இருந்தால் அவன் நட்டவாளியாக இருப்பான்.
இவை அனைத்தினதும் சுருக்கமாவது: முதலில் அவன் கடமைகளைப் பற்றி தன்னை சுயபரிசோதனை செய்து, அவை குறைவாக இருந்தால் அவற்றை பூரணப்படுத்தவேண்டும். பின்னர் தடைசெய்யப் பட்டவற்றைப் பற்றித் தன்னை சுயபரிசோதனை செய்து, அவற்றில் ஏதாவது செய்திருந்தால், தவ்பா மற்றும் பாவமன்னிப்பின் மூலம் அதைச் சரிசெய்யவேண்டும். பின்னர் அவனது உறுப்புகள் செய்த செயல்களைப் பற்றி தன்னை சுயபரிசோதனை செய்யவேண்டும். பின்னர் பராமுகத்தைப் பற்றி தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். (112) (112) இகாஸதுல்லஹ்ஃபான் பாகம் 1 பக்கம் 136 ல் பார்க்கவும்
நான்காவது: ஷைத்தானின் ஆதிக்கத்தினால் உள்ளத்திற்கு ஏற்படும் நோய்க்கான சிகிச்சை:
ஷைத்தான் மனிதனின் எதிரி. அவனிடமிருந்து விடுபடுவது அல்லாஹ் காட்டியுள்ள பாதுகாப்பு தேடுதலின் மூலம் தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆன்மாவின் தீமையிலிருந்தும், ஷைத்தானின் தீமையிலிருந்தும் பாதுகாப்பு தேடுவதையும் ஒரு சேர, அபூபக்ர் (ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்: ((قُلْ اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، “பொருள்: ((யாஅல்லாஹ்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்தினதும் இரட்சகனே! அவற்றிற்கு (உண்மையான) சொந்தக்காரனே! உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கு மற்றும் அவனது சதிவலைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் எனக்கு நானே தீங்கிழைத்துக் கொள்வதை விட்டும், அல்லது இன்னொரு முஸ்லிமுக்கு தீங்கு செய்வதை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.” இதனை நீ காலையில், மாலையில், மற்றும் படுக்கையில் செல்லும் போது கூறுங்கள்.)(113) (113) திர்மிதியில் ஹதீஸ் எண் 3392 லும், அபூ தாவூதில் ஹதீஸ் எண் 5058 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் ஸஹீஹ் திர்மிதியில் 3/142 ல் இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
பாதுகாப்புத் தேடல், நம்பிக்கை, மற்றும் உளத்தூய்மை ஆகியவை ஷைத்தானின் ஆதிக்கத்தைத் தடுக்கின்றன (114). (114) இஃகாஸத்துல்லஹ்ஃபான், பாகம் 1, பக்கம் 145-162 ஐப் பார்க்கவும்
ஸலாத்தும் ஸலாமும் எங்கள் நபியும், அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும், மறுமை நாள்வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றி நடப்போர் மீதும் உண்டாவதாக.
Related books
All books
புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்11 மொழிகள்புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்
இந்த சிறிய நூலானது, புனித குர்ஆன் மற்றும் நபிவழியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பயனுள்ள, முழுமையான துஆக்களை உள்ளடக்கிய ஒரு சுருக்கமான கையேடாகும். இவற்றை மனனம் செய்வதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் இலகுவாக இருக்கும் பொருட்டு நூலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இக்கையேட்டில், நேர்வழி, பாவமன்னிப்பு, கருணை, வாழ்வாதாரம், மார்க்கம் மற்றும் உலக விடயங்கள் சீராக அமைவதற்கான துஆக்களும் மற்றும் பல பிரார்த்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்54 மொழிகள்அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்
இந்த நூல் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய சட்டங்களை அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் விளக்குகிறது; ஹஜ் மற்றும் உம்ராவின் கடமைகள், இஹ்ராம் நிலையில் தடை செய்யப்பட்ட செயல்கள், மஸ்ஜிதுந்-நபவீயை ஜியாரத் செய்வதற்கான ஒழுக்க நெறிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த வழிபாட்டு சடங்குகளில் உள்ள பித்அத்திலிருந்து எச்சரிக்கிறது.
அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்57 மொழிகள்அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்
இந்நூலானது, பல்வேறு நேரங்களிலும் சூழ்நிலைகளிலும் ஓதுவதற்கு இலகுவாக இருக்கும் பொருட்டு, புனித குர்ஆன் மற்றும் நபிவழியிலிருந்து தொகுக்கப்பட்ட அத்கார்களை உள்ளடக்கியதாகும். மேலும் இந்நூலில், உறக்கத்திலிருந்து விழிப்பது, உளூச் செய்வது, தொழுகை மற்றும் பயணம் தொடர்பான துஆக்களும் மற்றும் பல பிரார்த்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒரு முஸ்லிம் தன்னை அரணமைத்துக் கொள்ளவும், அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருப்பதற்கும் இது உதவுகிறது.
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை ஏற்றுநடப்பதன் அவசியம் மற்றும் அதை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகக் கொள்ளப்படல்23 மொழிகள்நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை ஏற்றுநடப்பதன் அவசியம் மற்றும் அதை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகக் கொள்ளப்படல்
தொகுப்பு: அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன். முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. நல்ல முடிவு பயபக்தியுடையோருக்குரியதாகும். சாந்தியும், சமாதானமும் அவனது அடியாரும், அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட தூதருமாகிய, எங்கள் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், தமது இரட்சகனின் வேதத்தையும், தமது நபி வழிமுறையையும் பின்வந்த சமூகத்தினருக்கு மிக்க அமானிதத்துடனும், திறம்படவும், சொற்களையும், அர்த்தங்களையும் சரியாகப் பாதுகாத்த வண்ணமும்…