அதிகம் தேடப்பட்டவை
يومي الأول في الإسلام
இஸ்லாத்தில் எனது முதல் நாள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். முன்னுரை அகில உலகத்தாருக்கும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அருளாக அனுப்பிய அல்லாவுக்கே புகழனைத்தும். அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படத்தகுதியான இறைவன் வேறு எவரும் இல்லை என்றும் அவனுக்கு இணைகிடையாது என்றும் சாட்சி கூறுகிறேன். அவன் முன்சென்றோரினதும் பின்வருவோரினதும் உண்மையான இறைவன். மேலும் தீர்க்கதரிசிகளினதும் இறைத்தூதர்களினதும் இறுதியானவரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்.அவர்களின் மீது இறுதி…
This PDF is generated automatically from the book's text; its layout may differ from the printed edition.
இஸ்லாத்தில் எனது முதல் நாள்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
முன்னுரை
அகில உலகத்தாருக்கும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அருளாக அனுப்பிய அல்லாவுக்கே புகழனைத்தும். அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படத்தகுதியான இறைவன் வேறு எவரும் இல்லை என்றும் அவனுக்கு இணைகிடையாது என்றும் சாட்சி கூறுகிறேன். அவன் முன்சென்றோரினதும் பின்வருவோரினதும் உண்மையான இறைவன். மேலும் தீர்க்கதரிசிகளினதும் இறைத்தூதர்களினதும் இறுதியானவரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்.அவர்களின் மீது இறுதி நாள்வரையில் அதிகமான ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக,
மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியைத்; தேடிக்கொண்டிருக்கின்றனர்.சிலர் செல்வத்தைத் திரட்டுவதில்தான் மகிழ்ச்சியிருக்கிறது என எண்ணிக்ககொண்டிருக்கின்றனர்.இன்னும் சிலர் பிரபல்யம், நன்மதிப்பு போன்றவற்றில் மகிழ்ச்சி இருப்பதாக தேடி அழைகின்றனர். வேறு சிலரோ உயர் பதவிகளை பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கின்றனர்.இவையல்லாத உலகியல்சார் தற்காலிக இன்பங்களில் தனது மகிழ்ச்சியை தேடி கொண்டிருக்கின்றனர். ஆனால் நடைமுறையில் இவைகள் அனைத்தும்; கிடைக்கப்பபெற்றாலும் அவர்கள் விரும்பும் உன்மை மகிழ்ச்சியை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தமாகும்.
உண்மையில் மனித குலத்தைப் படைத்தவனான அல்லாஹ் எங்களுக்கென் று தெரிவு செய்த உண்மை மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பதன் மூலமே அன்றி மகிழ்ச்சி என்பது சாத்தியமாகாத விடயமாகும். எனவே நாம் அம்மார்க்க்த்தைப்ப பின்பற்றி ஒழுகி அதன் போதனைகளுக்கு ஏற்ப வாழ்வொழுங்கை அமைத்துக்கொள்வதன் மூலமே இவ்வுலகில் மகிழ்ச்சியையும் இன்பமான வாழ்வையும் மறுமையில் நிரந்தர மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ள முடியும். இது குறித்து அல் குர்ஆன்
(எவர் நன்மை செய்தவறாக தனது முகத்தை அல்லாஹ்வுக்கு (முற்றிலும்) பணியச் செய்கின்றாரோ அவரது கூலி அவரது இரட்சகனிடம் உண்டு. அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.)
மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்
(ஆணோ அல்லது பெண்ணோ நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லரம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் அவர்களுக்கு வழங்குவோம்) .
-என் கண்ணியத்துக்குரிய சகோதரனே - இஸ்லாத்தில் நுழைவதன் மூலம் நீர்; நேர்வழி; ஒளி, மகிழ்ச்சி மற்றும் இன்பம் ஆகியவகைள் நிறைந்த பாதையில் உன்; கால்களை பதித்துவிட்டீர் எனவே நீர்; இஸ்லாத்தைத் தழுவிய அந்நாள் உம் வாழ்வில் வேறு எந்த நாளையும் போல இல்லை என்ற உறுதி உம்மில் குடிகொண்டிருக்க வேண்டும்;. ஏனெனில் இது உம்; ஆயுலின் புதுப் பிறப்பாகும்!
ஏனெனில் நீர்; இவ்வுலகில் உதித்த அம்முதல் நாள் உம்; தாயின் கருவரையின் இருளிலிருந்தும் அதன் குருகிய நெருக்கமான இடத்திலிருந்தும் இப்பூலககத்தின் ஒளி மற்றும் விசாலமான இடத்திற்கு புறப்பட்டு வந்தீர். அதே போல் இன்றைய தினம் இறைநிராகரிப்பு என்ற இருளிலிருந்து ஈமான் என்ற ஒளியின் பாலும் வழிகேடு என்ற குருகிய வட்டத்திலிருந்து விசாலமிக்க ஹிதாயத் என்ற நேரான சத்தியப் பாதையின் பாலும் புறப்பட்டு வந்துள்ளீர் (அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரஸ்தாபிக்கிறான்)
|(இறந்து விட்டிருந்த ஒருவனுக்கு நாம் உயிர் கொடுத்தோம்.பின்னர் அவனுக்கு ஓர் ஒளியை வழங்கினோம் அதன் உதவியால் அவன் மக்களிடையே நடமாடுகின்றான்.இப்படிப்பட்டவனும் இருளில் சிக்கி எவ்விதத்திலும் அவற்றிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனும் சமம் ஆவார்களா?)
எனவே நாம் உம்மை இஸ்லாம் எனும் விரிந்த சாம்ராஜ்யத்தை நோக்கி வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இச்சிறு புத்தகம்; உமக்கானது. இஸ்லாத்தை தழுவிய நீர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மிகமுக்கிய விடயங்களையும்;, மிகப்பெரும் அடிப்படைகளையும் உள்ளடக்கியுள்ளது.
நுழைவாயில்
இஸ்லாம் என்பது சத்திய மார்க்கமாகும்
இஸ்லாமிய மார்க்கம் என்பது மனித இனம் முழுவதற்கும் அல்லாஹ்வால் பரிந்துரைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சத்திய மார்க்கமாகும் அல்லாஹ்விடத்தில் இஸ்லாம் தவிர்ந்த வேறு எந்த மார்க்கமும் அங்கீகாரம் பெறமாட்டாது. இது குறித்து அல்லாஹ் தனது திருமறையில் பின்வறுமாறு குறிப்பிடுகிறான்.
(நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாமாகும்)
மேலும் அல்லாஹ்
எவர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி அதனை உறுதியாக கடைப்பிடித்து ஓழுகுகிறாரோ அவர் ஒளியும் தூய்மையும் நிறைந்த பாதையில் செல்கிறார்;. அதுவே மனிதனைப் படைத்து இந்த வாழ்வை அமைத்து கொடுத்த இறைவனை நோக்கி; நகர்த்தும்; நேரானதும், தெளிவானதுமான பாதையாகும்
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை மனிதனின் இவ்வுலக வாழ்வில் மனிதனின் நிலையை சீர்செய்து அவனது மனநிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமான வழிகாட்டல்களை கொண்டுவந்துள்ளது போன்று மரணித்தின் பின்னரான வாழ்வின் வெற்றிற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய வழிகாட்டல்களை தந்துள்ளது. மரணத்தின் பின் அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று வாழ்ந்தவரை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச்செய்து நித்திய பேரின்பத்தை அனுபவிக்கச்செய்வான்
ஆகவே ஒவ்வொரு மனிதனும் இஸ்லாம் எனும் சத்திய மார்க்கம் குறித்து தேடுவதும் அது குறித்து கற்றறிந்து.இம்மார்க்கத்தை ஏற்று இம்மார்க்கத்தினுள் நுழைந்து இம்மை மறுமை நலனை அடைந்து கொள்வதற்கு இம்மார்க்கத்தின் சட்டதிட்டங்களையும் போதனைகளையும் உறுதியாக பின்பற்றி ஒழுகுவது அவசியமாகும்
இஸ்லாத்தினுள் நுழைவது எவ்வாறு ?
ஒரு மனிதன் (அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்;லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ்' என்ற வார்த்தையை உண்மையாகவும்,மனஉறுதியுடனும் கூறி அது உள்ளடக்கியுள்ள விடயங்களை நன்கறிந்து கொள்வதுமாகும். ஒருவர் இந்த வார்;த்தையைக் கூறுவதன் மூலம் இஸ்லாத்தினுள் நுழைந்து விடுகிறான். பின்னர் இஸ்லாம் பற்றிய ஏனைய விடயங்களைக் கற்று அவரின் இயலுமைக்கேட்ப செயற்படவேண்டும்.அவரின் நற்கருமங்கள்; அதிகரிக்கும் போதெல்லாம் அவரின் ஈமானும் அதிகரிக்கிறது அதனால் அல்லாஹ்விடத்தில் அவருக்கான கூலி பிரமாண்டமானதாக அமைந்துவிடுகிறது.
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்ற இரு ஷஹாதா கலிமாவினதும் பொருள்
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்ற வார்த்தையை ஆழமாக விசுவாசித்தவானாகவும் உண்மைப்படுத்தியவனாகவும் கூறுவதன் மூலம் இஸ்லாத்தினுள் நீ நுழைந்தாய் ஆனால் அவ்விருவார்த்தையின் உண்மைப் பொருள் உனக்குத் தெரியுமா?
அதாவது அல்லாஹ்வைத்தவிர உண்மையாக வணங்கத்தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை என சாட்சி கூறுவதின் பொருள்: கட்டுப்பட்டு நடப்பதற்கும் வணங்கி வழிபடவும் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவறும் கிடையாது என நம்பி ஏற்றுக்கொள்வதாகும். அவனே இந்த உலகத்தைப் படைத்து அதன் விவகாரங்களை சிறந்த முறையில் திட்டமிடுபவனுமாவான்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என சான்று பகர்தல் என்பதன் கருத்து : முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாரும் இறுதித்தூதருமாவார்கள் என்றும் அவர் மனித சமூகம் முழுவதற்கான தூதர் என்றும் அங்கீரித்து ஏற்றுக்கொள்வதாகும். இவ்வடிப்படையில் அவரின் கட்டளைகளுக்கு கட்டுப்படுவதும் அவர் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவதும்.அவர்கள் தடுத்து விளக்கியவற்றை தவிர்ந்து கொள்வதும் அவர்கள் மார்க்கமாக கூறியவற்றின் மூலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதுமாகும்.
இஸ்லாத்தின் மூலம் உங்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.
கண்ணியமான சகோதரரே! நீர்; புனித இஸ்லாத்தினுள் காலடி எடுத்து வைத்த அந்நாள் உமது வாழ்நாளில்; மிகச்சிறந்த நன்னாளாகும் (ஏனெனில் நீர்; ஒரு புதுப்பிரவியாக இவ்வுலகில் மாறிய நாளல்லவா? இது குறித்து எங்கள் தீர்க்கதரிசி முஹம்மத் ஸல்லல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
(புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஒருவரின் முற்பட்ட வாழ்வில் நிகழ்ந்த அனைத்து தீமைகளையும் இஸ்லாம் அழித்து விடுகிறது என்றார்கள்)
இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அதாவது, நீர் இஸ்லாத்தை தழுவ முன் உன்னால் நிகழ்ந்த இறைநிராகரிப்பு மற்றும் தீங்குகள் தவறுகள் பாவங்கள் அனைத்தையும் முழுமையாக இஸ்லாம் அழித்துவிடுகிறது.எனவே அல்லாஹ்வின் மன்னிப்பு உமக்கு கிடைத்துவிட்டது என்ற சுப செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆகவே உன்; தாய் உன்னை பெற்றெடுத்த நாள் போல் இன்றைய தினம் நீர் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தப்பட்டு, தூய்மையானவனாக மாறிவிட்டாய் இதன் மூலம் உமது வாழ்வில் ஒரு புது அத்தியாயம்; திறக்கப்பட்டுள்ளது. நன்மை நிறைந்த புது வாழ்க்கையைத் தொடங்கி, ஒளியும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த பாதையில் தற்போது பயணித்துக்கொண்டிருக்கிறீர்.
இஸ்லாம் எனும் அருள் கிடைக்கப்பெற்றதினால் மகிழ்ச்சியடைதல்
இஸ்லாத்தில் நுழைந்தபோது நீர் அடைந்த மகிழ்ச்சி உம்; வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். எனவே உமக்கு கிடைத்திருக்கும் நேர்வழி எனும் அருட்கொடையானது அருள்களிலெல்லாம் மிகவும் உன்னதமானதாகவும், அல்லாஹ் அடியார்களுக்கு அளித்துள்ள அருள்கள் அனைத்தையும் விட பிரமாண்டமானது. இன்னும் கூறப்போனால் காற்று, தண்ணீர், உணவு மற்றும் பானம்; பணம், பதவி, கௌரவம் ஆகியவற்றை விட மிகவும் உயரந்தது. பொதுவாக மனிதன் பெற்றிருக்கும் மிகப் பெரிய பாக்கியம், ஆகையினால் நாம் இதனை குறித்து எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்? அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமா)று குறிப்பிடுகிறான்.
எனவே உம் மீதான அல்லாஹ்வின் கருணையை உணர்ந்து கொள்வது அவசியம்.காரணம் பல மில்லியன் கணக்கான மனிதர்களுள் உம்மை அல்லாஹ் இஸ்லாத்தை வாழ்வு நெறியாக கொள்வதற்கு தெரிவு செய்துள்ளான். அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் ,
இந்த அளப்பெரும் அருளானது அதிகம் நன்றிசெலுத்துவதை வேண்டி நிற்கிறது. எனவே உம்மை அல்லாஹ் மிகச்சரியான மார்க்கத்திற்கு வழிகாட்டியமையால் அவனை அதிகம் புகழ்ந்து, அதிகம் நன்றி செலுத்தி; அவனை பாரட்டுவது உம்மீதுள்ள கடமையாகும்.
அவசியம் அறிய வேண்டிய சில அடிப்படைகள்
நீர் இஸ்லாம் மார்க்கத்தினுள் வந்துவிட்டால் கட்டாயம் கற்று அறிந்து கொள்ளவேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மரணத்தின் பின் சுவர்க்கமா நரகமா என ஒருவரின் நிரந்தர வாழ்வை தீர்மானிக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் கேட்கப்படும் மிக முக்கிய மூன்று கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்வது அவைகளுள் ஒன்றாகும்.அந்தக் கேள்விகள் பின்வருமாறு
உனது இரட்சகன் யார்?
உனது மார்க்கம் என்ன?
உனது நபி யார் ?
முதல் அடிப்படை : உனது இரட்சகன் யார் ?
அல்லாஹ்வே எனது இரட்சகன்
இந்தப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவைகளையும் மனிதனையும் படைத்தவனான அல்லாஹ்வையே ஒரு முஸ்லிம் தனது இரட்சகன் என நம்புகிறான்.
இம் மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றியும்,அதிலுள்ள பிரமாண்டமான விண்மீன்கள்; பற்றியும் கோடிக்கணக்கான கோள்கள்; மற்றும் நட்சத்திரங்கள் பற்றியும் நாம் வாழும் இந்த பூமியைப் பற்றியும், அதில் காணப்படுகின்ற சமவெளிகள், மலைகள், நிலங்கள், கடல்கள் மற்றும் ஆறுகள் குறித்தும,; கடல்களின்; ஆழத்தில காணப்படுகின்ற உயிரினங்ள்,பாலைவனங்கள் மற்றும் காடுகளிள் உள்ள உயிரினங்களின் அதிசயங்கள் பற்றி சற்று சிந்தித்தித்துப்பார்த்தால், நமது சிந்தனை நம்மை தவிர்க்க முடியாத முடிவுக்கு ;இட்டுச்செல்லும். அதுதான் ஒரு மகத்தான,அனைத்தையும் அறிந்த ஞானமுள்ள ஒரு படைப்பாளன் உள்ளான் என்பதாகும் அவனே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் உள்ளவற்றை எவ்வித முன்மாதிரியுமின்றி அமைத்தான். எனவே நாம் சிந்தித்துப் பார்த்தால், , படைப்பாளன் ஒருவன் இல்லாமல் இந்த உயிரினங்கள் இருக்க முடியாது, அவற்றின் விவகாரங்களை ஒழுங்கமைத்து, உள்ளத்தை பிரமிக்கும் வகையில் அவைகளை நுனுக்கமாக செய்தான் மேலும் இந்த விஷயத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் அறிவுடைய ஒவ்வொருவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளான்
(அதாவது இதன் கருத்து என்னவென்றால்) இந்த உயிரினங்கள் தானாக உருவாகவும்மில்லை மேலும் படைப்பாளன் இன்றி அவை தோற்றம் பெறவும் மில்லை. இவை அறிஞர்களிடத்தில் சாத்தியமில்லாத விடயங்ளாகும்
வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!
பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவாகவும் அதிலுள்ள அனைத்தையும் திட்டமிட்டு நிர்வகிப்பவனாகவும்,இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்குபவனாகவும் இருப்பதினால் அந்த இரட்சகன் மாத்திரமே வணங்கி வழிபடத் தகுதியான இறைவனாக உள்ளான். மேலும் அவனே அனைத்து மனிதர்களையும் இப்பூவுலகில் படைத்து அவர்களுக்கு தேவையானதை உண்டாக்கி வாழ்வதற்கான வழிகளை வழங்கினான்,அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
அல்அன்ஆம் : 102)
ஆகவே அனைத்து மனிதர்களும் அல்லாஹ்வை மாத்திரமே வணங்கவேண்டும் வணக்கத்தில் அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்கக் கூடாது இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
"மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்பிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்.(அவ்வாறு செய்வதனால் மட்டுமே)நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்".
மேலும் அல்லாஹ் கூறுகிறான்
அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதற்கான நபிமார்களின அழைப்பு
இந்த விடயத்தில் தெளிவு இருந்தபோதிலும், எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மீது கொண்ட தனது கருணையினாலும், அருளினாலும், நம்மை படைத்துவிட்டு, வாழ்க்கையில் நம்மைத்தத்தளிக்கவிடவில்லை மாறாக அவனைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ளவும் அவனைப்பற்றி அறிவித்துத் தரவும் எங்களுக்காக தூதர்களை அனுப்பி வேதங்களையும் இறக்கியருளினான். அல்லாஹ் கூறுகிறான்:
(நிச்சயமாக நாம் உம்மை சத்தியத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பி வைத்தோம்.எந்த ஒரு சமுதாயத்திலும் எச்சரிக்கை செய்பவர் வராமல் இருக்கவில்லை)
மனித குலத்தின் தந்தையான ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் கொண்டு அனைத்து நபிமார்களும் -அவர்களுள் நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா மற்றும் ஏனைய நபிமார்கள் உட்பட இறுதியாக எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் வரையில் அனைவரும் அல்லாஹ்வை ஈமான் (நம்பிக்கை) கொள்ளுமாறும் அவனை ஏகத்துவப்படுத்தி வணக்கத்தில் அவனை மாத்திரம் தனித்துவப்படுத்துமாறும் மனிதர்கள,; கல் மரம் நட்சத்திரங்கள் கோள்கள் ஆகியவற்றை தெய்வங்களாக ஏற்று வணங்குவதை கைவிடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு மிகப்பெறும் அடிப்படையில் ஒன்றுபட்டுள்ளனர். அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு கூறுகிறான் :
மேலும் அல்லாஹ்
அல்லாஹ்வின் சில பெயர்களும் பண்புகளும்.
அல்லாஹ்விற்கு உயர்ப்பண்புகளும அழகிய திருநாமங்களும் உண்டு.அவற்றை நாம் தெரிந்து கொள்ளும்போது அல்லாஹ்வைப்பற்றிய அறிவை அதிகரித்துக்கொள்வதோடு அவனின் மீதுள்ள அன்பையும் பயத்தையும்அவனின் கருணையின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகரித்துக் கொள்கிறோம். அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
அவனின் பண்புகளைக் காட்டும் அவனின் பெயர்கள் அதிகமாக உள்ளன. ஆகவே அல்லாஹ்வின் பெயர்களளுள் சில பின்வருமாறு.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
(உங்களின் வணக்கத்திற்குறிய இறைவன் ஒருவனே, அவனைத் தவிர உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் வேறு யாருமில்லை. அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.)
எனவே அவன் மகா கருணையாளன் அவனின் கருணை எல்லாவற்றிலும் வியாபித்து அனைத்து உயிரினங்களையும் சூழ்ந்திருக்கிறது மேலும் இந்த உலகில் அவனது கருணை அவனின் படைப்புகளான விலங்குகள் மற்றும் மனிதர்கள், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள், அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
(எனது அருள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளது)
அவனே அவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை அளிக்கிறான் மேலும் அவர்களுக்கான ஆரோக்கியத்தையும்,உணவையும்,குழந்தைகளையும் அவை அல்லாதவற்றையும் வழங்குகிறான்.ஆனால் மறுமையில் அவனின் அருள் தனது அடியார்களில்; உண்மை விசுவாசிகளுக்கும் அவனின் தீர்க்தரிசிகளையும் தூதர்களையும் பின்பற்றியோருக்கும் மாத்திரமே கிடைக்கும்.அவர்களுக்கே நிரந்த மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் முழுமையான அருள் உண்டு.
படைப்பாளன் (சிருஷ்டிகர்த்தா) அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்
(அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தவன்)
வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ளவற்றையும் படைத்தவன் அவனே, அணு முதல் விண்மீன் வரையும், அதைவிட விசாலமானவற்றையும் அவனே படைத்தான். அவனுடைய படைப்பில் நுட்பமும், வல்லமையும், சீர்மையும் உள்ளன. எனவே. அவனுடைய படைப்பில் எந்தக் குறையையும், கோளாரையும் காணமாட்டீர்.
(அல் கபூர்)அதிகம் மன்னிப்பவன்: அல்லாஹ் உண்மையான நிலையில் பாவமீட்சிக் கோரி தவ்பா செயதவனின் பாவத்தை அவன் ஆரம்பத்தில் செய்த கருமங்கள் எவ்வாறாக அமைந்தாலும் மன்னிப்பளிப்பவன்.தனது தயாளத்தன்மையின் காரணமாக இணைவைத்தல் தவிர்ந்த அனைத்துப் பாவங்களளையும் தவ்பா செய்வதின் மூலம் சில வேளை மன்னிப்பான் -மேலும் தவ்பா (பாவமீட்சி) பாவமன்னிப்புக் கோருதல் இறைவிசுவாசம் நல்லறம் படைப்புகளுக்கு உபரகாரம் செய்தல் ஆகிய விடயங்கள் மூலம் அனைத்து மனிதர்களும் இறைமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளை திறந்து வைத்துள்ளான்.அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறன்
( எவர் பாமன்னிப்புப் கோரி,நம்பிக்கை கொண்டு,நல்லறமும் புரிந்து,பின்பு நேர் வழி நடக்கிறாரோ அவரை நான் மன்னிப்பவனாக இருக்கிறேன்)
(தாஹா : 82)
(அர்ரஸ்ஸாக்) வாழ்வாதாரத்தை வழங்குபவன்: அல்லாஹ்வின் கையில்தான் எல்லாவற்றினதும் அதிகராம் உள்ளது. அவன் நிறைவானவன் அவனின் கருணையின் வெளிப்பாடு அவன் மகா கொடையாளன். அதனால் இந்தப்பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அதற்கு உணவளிக்கும் -வாழ்வாதாரத்தை – வழங்கும் பொறுப்பு அவனின் மீதே உள்ளது. அல்லாஹ் இது குறித்து பின்வரும் வசனங்களில் பிரஸ்தாபிக்கிறான் .
(அஸ்ஸலாம்) எவ்விதக் குறைகளுமற்ற முற்றிலும் பூரணமானவன், அமைதி அளிப்பவன் அதாவது 'அஸ்ஸலாம் என்பவன், எல்லா குறைகளை விட்டும் தூய்மையானவன். அவன் குறைபாடுகளே இல்லை என்ற அளவு முழுமையானவன்.அவனுக்கே பூரணத்துவத்தினதும்;, கண்ணியத்தினதும் அழகினதுன் பண்புகள் உரியன. எனவே அவன் தனது அடியார்கள் வார்த்தையினாலு;ம் செயலினாலும் ஸலாம் எனும் உயரிய பண்பை பரப்புவதை விரும்புபவன். அல்லாஹ் தனது திருமறையில் இப்பண்பை பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
(அவன்தான்; அல்லாஹ் (உண்மையாக) வணங்கப்படத்தகுதியானவன்.அவனையன்றி வணங்கப்படத்தகுதியானவன் வேறுயாருமில்லை.அவனே ஆட்சியாளன்,மிகவும் தூய்மையானவன்;,சாந்தியளிப்பவன்.)
அல் அலீம் ( யாவற்றையும் அறிந்தவன்) ஆகவே அல்லாஹு தஆலா யாவற்றையும் கேட்பவன்,பார்ப்பவன்,அறிபவன்;.அவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்துள்ளது.பகிரங்கமானவற்றையும்,இரகசியமானவற்றையும்,உள்ளங்களில் மறைந்திருக்கக்கூடியவற்றையும் அறிகிறான் மேலும் இறந்த காலத்தில் நடந்தவற்றையும்,நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவற்றையும்,எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றையும் நன்கறிகிறான் எனவே அவன்தான் அடியார்களின் செயற்பாடுகளை அவதானிப்பவன் ஆகையால் அவனுக்கு கட்டுப்பட்டு நடப்போரின் வணக்கமும்;மாறுசெய்வோரின் பாவமும்,பலவீனர்களின் தேவையும்,பிரார்த்தனை புரிவோரின் ஓசையும் அவனுக்கு மறைந்து போகாது.அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்
(நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்)
அவன் மிகப்பரிச்சுத்தமானவன் உலகத்தாரின் இரட்சகன் அவனின் அனைத்து படைப்பையும் மிக அழகுற அமைத்தான் இவ்வுலகில் உள்ள முழுமையும் அழகும் அவனின் பரிபூரணத்தன்மையின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
இரண்டாவது அடிப்படை : உனது மார்க்கம் என்ன?
எனது மார்க்கம் இஸ்லாமாகும்.
இஸ்லாம் என்பது : ஏகத்துவப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வுக்கு முழுமையாக சரணடைதல். வணக்கத்தின் மூலம் அவனுக்கு கட்டுப்படுவது,இணைவைத்தலை விட்டும் முழுமையாக விலகி இருப்பதுமாகும்.
ஆகவே முஸ்லிம்; என்பவன் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றவர் மேலும் அல்லாஹ்வின் இருப்பையும் ஏகத்துவத்தையும் விசுவாசித்து,அவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு ,அவன் தடுத்தவற்றை விட்டு விலகி முழுமையாக தனது விவகாரத்தை ஒப்படைத்தவன்.
மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்
இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பம்சங்கள் : (தனித்துவங்கள்)
இஸ்லாம் நீதியின் மார்க்கமாகும் : இஸ்லாம் நெருக்கமானவர் தூரமானவர் எதிரி மற்றும் நண்பர் அல்லாஹ்வை ஏற்ற முஃமின் அல்லாஹ்வை ஏற்காத காபிர் அனைவருடனும் நீதியை கடைப்பிடித்து ஒழுகுமாறு கட்டளை பிரப்பிக்கிறது. அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
(நிச்சயமாக அல்லாஹ் நீதியைக் கடைப்பிடித்தொழுகுமாறு கட்டளைப் பிரப்பிக்கிறான்)
அல்லாஹ் நீதியானவன் அவன் எவருக்கும் அநியாயம் செய்வதில்லை.மறுமை நாள் குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறான்.
இஸ்லாம் கருணையின் மார்க்கமாகும். அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
(நபியே: நிச்சயமாக உம்மை உலகத்தாருக்கு அருளாக வே அனுப்பியுள்ளோம் )
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :
ஆதாரம் : அபூதாவூத்
இஸ்லாம் அன்பும் ஐக்கியம், பிணைப்பும் மிக்க மார்க்கமாகும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸாம் அவர்கள் கூறுகிறார்கள்
ஆதாரம் : புஹாரி
இஸ்லாம் இலகுவின் மார்க்கமாகும்: ஆக இஸ்லாமிய மார்க்க போதனைகளில் இலகு தன்மையும்,சிரமத்தை நீக்குதல் போன்றவையும் காணப்படுகின்றன. இஸ்லாமிய மார்க்க போதனைகளை பார்த்த அனைவரும் இதனை அறிந்திருப்பர். அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்.
(அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான்.அவன் உங்களுக்கு சிரமத்தை விரும்பவில்லை) அல் பகரா : 185)
மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்
( அல்லாஹ் உங்களுக்கு எவ்விதச் சிரமத்தையும் ஏற்படுபடுத்த விரும்பவில்லை)
மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்
இஸ்லாம் அறிவின் மார்க்கமாகும் : அல் குர்ஆன் இறங்கிய முதல் வசனமே இது குறித்தே பேசுகிறது
இஸ்லாம் முஸ்லிமான ஆண் பெண் இருபாலாரையும் கல்விகற்குமாறும் அறிவை அதிகரித்துக் கொள்ளுமாறும் தூண்டுகிறது. அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்
"'இறைவா எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக' என்று நபியே நீர் கூறுவீராக".)
கற்றோருக்கு உயர் அந்தஸ்து உண்டு அல்லாஹ் இது குறித்து பின்ருமாறு கூறுகிறான்
"உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்".)
இஸ்லாமிய மார்க்கம் உலகலாவியது
இஸ்லாம் ஒரு சர்வதேச மார்க்காமகும் அது குறிப்பிட்;ட பிரதேசத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கோ உரியதல்ல. மேலும் அரபுகளுக்கு மாத்திரமானதல்ல. மாறாக அனைத்து மனிதர்களுக்குமுரிய மார்க்கமாகும். அல்லாஹ் தனது திருமறை அல்குர்ஆனில் நபியவர்களை நேரடியாக விழித்து இவ்வாறு கூறுகிறான்
(நபியே நீர் கூறுவீராக. மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன (உண்மையாக) வணங்கப்படத்தகுதியானவன் அவனைத் தவிர வேறுயாருமில்லை.அவனே உயிர்ப்பிக்கிறான் மேலும் மரணிக்கச்செய்கிறான்.ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும் எழுத்தறிவற்ற உம்மி நபியான அவனது தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.அவரும் அல்லாஹ்வையும் அவனது வார்த்தையையும் நம்பிக்கை கொள்கிறார்.நீங்கள் நேர் வழி பெறும் பொறுட்டு அவரையே பின்பற்றுங்கள்)
அதே போல் இந்த மார்க்கம் கடந்த காலத்திற்குறியதல்ல, மாறாக இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக அனுப்பட்டது முதல் மறுமை நாள் வரை இறைவனின் உண்மையான மார்க்கமாகும். அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
(யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகிறாரோ அது அவரிடமிருந்து அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களுள் உள்ளவனாவான்?).
இஸ்லாமிய மார்க்கத்தின் முழுமை
இஸ்லாம் என்பது எல்லாத்துறைகளிலும் அதாவது அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் போன்ற வற்றிலும் அவை அல்லாத துரைகளிலும் முஸ்லிமான தனிமனிதனுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் உம்மாவுக்கும் வழிகாட்டும் ஒரு வாழ்க்கை முறையாகும்.
இஸ்லாம் என்பது அகீதாவும் (நம்பிக்கையும், சட்டதிட்டங்களுமாகும்) ஆகவே அது மிகச்சரியான (உண்iமையான) நம்பிக்கை கோட்பாடுகளையும், மகத்தான வணக்கவழிபாடுகளையும், நுனுக்கமான சமூக நடைமுறைகளயும்,அழகிய பண்பாடுகளையும், சீரான நடத்தையையும் உள்ளடக்கியுள்ளது.
இஸ்லாமிய போதனைகளும் அதன் சட்டதிட்டங்களும் மனிதன் தனது இரட்சகனுடனான தொடர்பையும், தனது ஆன்மாவுடனான தொடர்பையும்,பிற மனிதர்களுடனான தொடர்பையையும் இவை மட்டுமல்லாது ஏனைய அனைத்து உயிரினங்களுடனான தொடர்பையும் சீரமைத்து ஓழுங்கு படுத்தியுள்ளது.
இஸ்லாமிய போதனைகள் ஆன்மாவை யும் உடலையும் சீர்படுத்த்துவது தொடர்பான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
மொத்தமாகக் கூறப்போனால் இஸ்லாம் மனிதர்களின் இம்மை மறுமை நன்மைகளையும் அவர்களின் நலன்களையும், மகிழ்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது எனலாம்.;
இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைகள் ( ஈமானின் அடிப்படைகள்)
இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாட்டின் அடிப்படைகள் என்பது ஆறு விடயங்களை விசுவாசித்து உறுதியாக நம்புவதை குறிக்கிறது. அந்த ஆறு விடயங்களை (அர்கானுல் ஈமான்) என்ற பெயரால் அழைப்பர். அவையாவன :
1- அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளல் : அதாவது அல்லாஹ்வின் இருப்புக்குறித்தும் அவன் மாத்திரமே இந்தப்பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ளவைகள் அனைத்தையும் படைத்தவன் அதன் சொந்தக்காரன் அதனை திட்டமிட்டு வழிநடாத்துபவன் என்று விசுவாசம் கொள்ளுதல்.மேலும் அவன் மாத்திரமே வணங்கி வழி படத்தகுதியானவன் அவனுக்கு இணையானவன் யாருமில்லை எனவும் நம்புதல்.மேலும் அவன் கண்ணியமும் அழகும் நிறைந்த பண்புகளைப் பெற்றவன் அனைத்து குறைகளைவிட்டும் மிகத்தூய்மையானவனும் பரிபூரனமானவனும் என்றும் அவனைப் போன்ற எதுவும் இல்லை என்றும் விசுவாசிப்பதைக் குறிக்கும்.
மலக்குமார்களை ஈமான் கொள்ளுதல் (நம்புதல்) : அதாவது அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்று எனவும் அவர்கள் அவனை வணங்குவதற்காகவும் அவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கவும்,அவர்களுக்கு ஒப்படைக்கபட்ட பணிகளை –நடைமுறைப்படுத்துவதற்காகவும் படைக்கப்பட்டவர்கள்.அவர்கள் இருப்புக்குறித்து சுருக்கமான முறையில் ஏற்றுக்கொள்வது போல் அவர்களுள் பெயர்கள் மற்றும் பண்புகள் பதவிகள் பற்றி அறிவித்துத் தந்திருப்பவை பற்றி விரிவாகவும் ஈமான் கொள்ளல் வேண்டும்.உதாரணத்திற்கு நபிமார்கள் ரஸூல்மார்களுக்கு வஹியை கொண்டு செல்ல ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், தாவரங்கள் மழை போன்றவற்றிற்கு பொறுப்புச்சாட்டப்பட்ட மீகாயீல்,மேலும் இஸ்ராபீல் அவர்கள் ஸூர் ஊதுவதற்கு பொறுப்புசாட்டப்படவர்,மனிதர்களின் உயிர்களை கைப்பபற்றும் மலக்கு.மற்றும் நரகத்தின் காவலாளி மாலிக் போன்றோரைக் குறிப்பிட முடியும்.
வேதங்களை ஈமான் கொள்ளல் (நம்புதல்): அதாவது மனிதர்களுக்கு அருளாகவும், இம்மை மறுமை சுகத்தை அடைந்து கொள்வதற்கான அவர்களுக்கான நேர்வழியாகவும் தனது தூதர்களுக்கு அல்லாஹ் இறக்கியருளிய வேதங்களாகும். எனவே அவற்றை சுருக்கமான முறையில் ஈமான் விசுவாசம் கொள்வதுடன் வஹ்யின் மூலமாக பெயர்குறிப்பிடப்பட்டு நாம் அறிந்தவற்றை விரிவாகவும் ஈமான் கொள்ள வேண்டும் உதராணத்திற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட இன்ஜீல்,மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட தவ்ராத் (தோரா) தாவூத் அலைஹிஸ்ஸாம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட ஸபூர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட ஸுஹுபுகள் -ஏடுகள்- போன்றவற்றை விரிவாக ஈமான் கொள்ள வேண்டிய வேதங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
4- இறைத்தூதர்களை ஈமான் கொள்ளல்(நம்புதல்); இறைதூதர்கள்; மனிதர்களே. அவர்களுக்கு வஹி மூலம் அல்லாஹ் வழிகாட்டல்களை அறிவித்துக் கொடுத்து மனிதர்களுக்கு மார்க்கத்தை எத்திவைப்பதற்காக அவர்களை தூதர்களாக அனுப்பிவைத்தான். இவர்களில் நபி நூஹ் அலைஹிஸ்ஸாம் அவர்கள் முதலாமவராகவும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதியானவராகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் மார்க்கத்தைப்பின்பற்றி ஒழுகுவதிலும் நற்குணத்திலும் பரிபூரணமானவர்களாக காணப்பட்;டனர்;. மக்களை அல்லாஹ்வை வணக்கத்தில் ஒருமைப்படுத்துவதன் பாலும்,அல்லாஹ் வுக்கு இணைகற்பிப்பதையும் அவனைத்தவிரவுள்ளவைகளை வணங்குகவதை விட்டுவிலகி இருக்குமாறும், நன்மையான விடயங்களை செய்யுமாறும்; தீமைகளை விட்டு விலகி இருக்குமாறும் அழைப்பு விடுப்பது இவர்களின் முக்கிய இலக்காக காணப்பட்டது.
ஆகவே மனிதர்களில் தூதர்களாக அல்லாஹ் அனுப்பியோரை நாம் ஈமான் கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்தவைகளை உண்மைப்படுத்தி அவர்கள் ஏவியவற்றை பின்பற்றி நடப்பதை அடியார்களுக்கு கடமையாக்கினான். அவர்களுள் அல்லாஹ்வால் பெயர்குறிப்பிடப்பட்டு தமது சமூகத்துடனான நிகழ்வுகள் குறித்து அல்லாஹ் அறிவித்துத் தந்தவற்றை நாம் தெரிந்திருக்கிறோம் உதாரணத்திற்கு : இத்ரீஸ்,நூஹ்,இப்ராஹீம்,மூஸா,ஈஸா,ஹூத்,ஸாலிஹ்,ஷுஐப் போன்றோர் பெயர்குறிப்பிடப்பட்ட இறைதூதர்கள்.அதே போல் மேலும் பல தூதர்கள் உள்ளனர் அவர்களின் பெயர்கள் குறித்து அல்லாஹ் எதையும் அறிவித்துத் தரவில்லை இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
5- மறுமை நாளை ஈமான் கொள்ளல் (நம்புதல்) : மனிதர்கள் இவ்வுலகில் செய்த வினைகள் குறித்து விசாரிக்கவும் கூலிவழங்கவும் அல்லாஹ் மனிதர்களை மீளவும் எழுப்பும் நாளே மறுமை நாள் ஆகும். அந்நாளில் மனிதர்கள் இரு பிரிவினராக காணப்படுபடுவர். ஒரு பிரிவினர் இறைவிசுவாசிகள் அவர்கள் சுவர்க்கத்தில் நிரந்தரமாக தங்கிவிடுவர். மற்றய பிரிவினர் இறைநிராகரிப்பாளர்கள் அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்கிவிடுவர். என்றாலும் இறைவனை விசுவாசித்த ஒரு முஃமினாக இருந்து பாவங்களை செய்தவனாக இருந்தால் அல்லாஹ் அவனை மன்னித்து சுவர்க்கத்திற்கு அனுப்புவான் இல்லையேல் அவனின் பாவத்திற்குரிய தண்டணையை குறிப்பிட்ட காலம் அனுபவித்ததன் பின் அல்லாஹ் சுவர்க்க்தில் நுழையச்செய்வான்.
6-நன்மை தீமை இறைவிதியின் படியே நடக்கிறது என ஈமான் கொள்ளுதல். (நம்புதல்) : ஒரு முஸ்லிம்; நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை ஈமான் கொள்ள வேண்டும்.மேலும் படைப்பினங்களின் விதிகளை அவன் எழுதிவைத்துள்ளான்.அதாவது அவன் அதனை விரும்பி அதனை உருவாக்கினான் எனவே இப்பிரபஞ்சத்தில் அவனின் அறிவுக்கும்; அவன் எழுதிவைத்தவற்றிற்கும் அவனின் சித்தத்திற்கும் அவனின் உருவாக்கத்திற்கும் அப்பால் எதுவும் நிகழமாட்டாது.அவ்விதியானது நன்மையானதாக இருப்பின் அது அல்லாஹ்வின் கருணையாகும்.அவை அல்லாது இருப்பின் அது அவனின் சோதனையாகவும் தண்டணையாகவும் இருக்கலாம். அதில் அவனின் நுட்பமும் நீதியும் காணப்படும் அதன் முழுமை பற்றி அதன் ஆழ அகலம் பற்றி மற்றும் பிரமாண்டம் குறித்து மனிதர்கள் எவரும் அறியமாட்டார்கள்.ஒரு அடியான் இறைவிதியின் அடிப்படையில் நன்மை தீமை நிகழ்கிறது என்பது குறித்து ஈமான் கொண்டுவிட்டால் அவனின் உள்ளம் நிம்மதி அடைந்து அவனின் ஆன்மா அமைதியடைகிறது.இதனால் அவ்வடியான் அல்லாஹ்வின் கையில் மாத்திரமே அனைத்தும் உள்ளது என்பதனால் விவகாரங்கள் அனைத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறான்.ஏனெனில் அல்லாஹ் நாடியதே நடக்கிறது அவன் நாடாதது எதுவும் நடைபெறாது.
இஸ்லாத்தின் பிரதான தூண்கள்
இஸ்லாத்தின் தூண்கள் என்பவை இஸ்லாம் எனும் கட்டிடத்தின் அடித்தளமாகும் அவை ஐந்து தூண்கள் அவற்றை நிறைவேற்றுவது முஸ்லிமின் கடமையாகும்.
1- உண்மையாக வணங்கத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல் : அதாவது அல்லாஹ் மாத்திரம்தான்; உண்மையான இறைவன் அவனுக்கு நிகரான எந்த துணையும் கிடையாது என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இறைச்செய்திகளை எத்தி வைக்கும் தூதர் என்றும் உள்ளத்தால் ஏற்று நாவால் மொழிந்து சாட்சி கூறுவதாகும்.
2-தொழுகையை நிலைநிறுத்துதல்; அதாவது ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் முகமாக ஒரு நாளில் ஐவேளைத் தொழுகையை தொழ வேண்டும். அத்தொழுகைக்கு (கியாம்) எழுந்து நிற்றல் (ருகூஉ)குணிதல் (ஸுஜூத்) தலையை நிலத்தில் வைத்து சாஸ்டங்கம் செய்தல் போன்ற நிலைகள் உள்ளன. மேலும் அவற்றை நிறைவேற்ற குறித்த நேரங்களும் உண்டு.அவை பின்வருமாறு பஜ்ர் தொழுகை (வைகரைத் தொழுகை) லுஹர் தொழுகை, அஸ்ர் தொழுகை, மஃரிப் தொழுகை, இஷாத் தொழுகை போன்றவைகளாகும். இவைகள் கட்டாயமான தொழுகைகளாகும் இவையல்லாத உபரியான தொழுகைகளும் உண்டு.
3-ஸகாத்தை கொடுத்தல் : செல்வம் படைத்த ஒரு முஸ்லிம் அவனின் செல்வத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தெகையை அதனைப்பெற்றுக்கொள்வதற்கு தகுதியான ஏழை எளியவர்களுக்கும்; ஸகாத் பெறத் தகுதியானோர் என குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் வழங்குவதாகும்.
4-ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல் : உண்ணுதல் பருகுதல் குடும்பவாழ்க்கையில்(உடலுறவில்) ஈடுபடுதல் போன்ற நோன்பை முறிக்கும் செயல்களை தவிர்த்து ரமழான் மாதத்தில் காலை உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு இருத்தல்
5- அல்லாஹ்வின் புனித ஆலயத்தை தரிசித்து ஹஜ் செய்தல் : அதாவது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதற்காக மக்காவை நோக்கி ஒரு முஸ்லிம் செல்லுதலைக் குறிக்கிறது. இக்கடமையை செய்வற்கு வசதிபடைத்தவர் வாழ் நாளில்; ஒரு தடவையாது நிறைவேற்ற வேண்டும்
இஸ்லாத்தில் வணக்கம்
அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்று அவன் பொருந்தி விரும்பக் கூடிய சொல்ரீதியான செயல்கள் ரீதியிலான வெளிப்படையான மறைமுகமான அனைத்து விடயங்களின் மூலமும் அவனை நெருங்குவதை இபாதத் என்ற சொல் குறிக்கிறது.
சொல்ரீதியான இபாதத்திற்கான உதாரணங்காளாக அல்குர்ஆன் ஓதுதல் துஆ இறைஞ்சுதல்,அல்லாஹ்வை திக்ர் செய்தல் பயனுள்ள அறிவைக் கற்றுக் கொடுத்தல் பிறருக்கு உபதேசம் செய்தல்; போன்றைவை மற்றும் இவைபோன்றவற்றையும் குறிப்பிடலாம்
செயல்ரீதியான இபாதத்துக்கள் என்பவற்றுக்குள் சுத்தம் தொழுகை ஹஜ் செய்தல் மனிதர்களின் தேவைக்காக பாடுபடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்
(அழ்ழாஹிரா )வெளிப்படையான செயல்கள் என்பது : வெளிப்படையில் பார்க்கக் கூடிய கேட்கக் கூடிய (அமல்களான) செயல்களான தொழுகை, ஹஜ் செய்தல், அல்குர்ஆன் ஓதுதல், அல்லாஹ்வின் பால் மக்களை அழைத்தல,; உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்றவற்றைக் குறிக்கும்
பாதினா என்பது : உள்ளம் சார்ந்த செயல்களாகும். அதாவது அல்லாஹ்வை விரும்புதல் அவனில் ஆதரவு வைத்தல் அவனைப்பயப்படுதல் அவனுக்கு பணிதல் அவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தல்; போன்றன இதில் அடங்குகின்றன.
இஸ்லாத்தில் வணக்கத்தின் முக்கியத்துவம்.
அல்லாஹ்வை வணங்குவதற்கே மனிதர்களைப் அவன் படைத்ததன் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான் :
மனிதர்களின் ஆன்மாக்களிலும் அவர்களது வாழ்விலும் அடைந்து கொள்ள கூடிய அதிகமான நலன்களையும்; அளப்பரிய உன்னத நோக்கங்களையும் கருத்திற்கொண்டே வணக்கங்கள் மார்க்கமாக்கப்பட்டுள்ளன. மனித ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி தூய்மையாக்கி,மனிதபரிபூரணத்தின் உயர்நிலைக்கு உயர்த்திச்செல்வது அதன் சிறப்பம்சமாகும்.
மனித உடலுக்கு உணவு மற்றும் பானம் தேவைப்படுவது போல் மனிதனுக்கு வழிபாட்டிற்கான மிகப்பெரிய தேவை உள்ளது.அவ்வாறுதான் உள்ளமும்,ஆன்மாவும் அல்லாஹ்வை வணங்குவதின் பால் முன்னோக்கிச் செல்லும் தேவை காணப்படுகிறது. இறைவனை நினைவு கூர்ந்து வழிபடுவதால் மாத்திரமே தவிர ஆன்மா அமைதியடைவதில்லை. எல்லாம் வல்ல இறைவனை நெருங்கி அவனுடன் தொடர்பு கொள்வதன் மூலமே தவிர இதயம் மகிழ்ச்சியடைவதில்லை, உள்ளம் விரிவடைவதில்லை.ஆகவே உண்மை வணக்கவாளிகள் மாத்திரமே மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சிக்குரியவர்கள். உள்ளம் விரிவடைந்தவர்கள். ஆகையால் யார் மகிழ்ச்சி கிடைக்கவேண்டுமென விரும்புகிறாரோ அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதை பற்றிப்பிடித்துக் கொள்ளட்டும்.
இஸ்லாத்தில் இபாதத்தின் வியாபகம்
இஸ்லாத்தில் இபாதத் (வணக்கவழிபாடு) என்பது அல்லாஹ்விரும்புகின்ற அல்லாஹ்வை நெருங்குவதற்காக செய்கின்ற நல்லறங்கள் அனைத்தையும் உள்ளடக்குகிறது. மேலும் இபாதத்தானது
வணக்கரீதியிலான கிரியைகளான தொழுகை ஸகாத், நோன்பு, ஹஜ், அல்குர்ஆன் ஓதுதல் துஆ (பிரார்த்தனை செய்தல்) அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர் செய்தல்) போன்றைவற்றையும்
நன்னடத்தைகளான பெற்றோருக்கு உபகராம் செய்தல்,உறவுகளை சேர்ந்து நடத்தல்,மனைவி பிள்ளைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் கொடுக்கள் வாங்களில் சிறந்த முறையில் நடந்து கொள்ளுதல்,செயல்களை கட்சிதமாகவும் சிறந்தமுறையிலும் நிறைவேற்றுதல்,அண்டை வீட்டாருக்கு உபகராம் செய்தல், ஏழைகளுக்கு உதவுதல், மிருகங்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் போன்றவற்றையும் உள்ளடக்குகிறது.
அதே போன்று இபாதத் என்பதில் உண்மை பேசுதல்,அமானிதத்தை நிறைவேற்றுதல்,உடன்படிக்கையை நிறைவேற்றல்,புன்முறுவள் பூத்தல்,நல்ல வார்த்தை வெட்கம் இது போன்ற நற்குணங்களும் உள்ளடங்குகின்றன.
ஒரு முஸ்லிம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை வணங்குபவனாக உள்ளான் அவன் அல்லாஹ்வை பள்ளிவாயிலிலும்,வீட்டிலும்,வேலையில் ஈடுபடும்போதும்; எல்லா இடத்திலும் வணங்குபவனாக உள்ளான் எனவே அவனின் வாழ்வு முழுதும் அல்லாஹ்வுக்குரியதாக மாறிவிடுகிறது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
மூன்றாவது அடிப்படை : உனது நபி யார்? என்பதாகும்.
எனது (நபி) தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார் அவர் மீது சாந்தியையும் அருளையும அல்லாஹ் பொழிவானாக
எமது நபி முஹம்மத் ஆவார்கள்;. அவர்களின் பரம்பரை முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அப்தில் முத்தலிப் இப்னு ஹாஷிம் என்பதாகும் அவர்களின் பரம்பரை நபி இப்ராஹிமின் மகன் நபி இஸ்மாயீல் அவர்களின பரம்பரையோடு சென்று முடிவடைகிறது. எமது நபி மீது ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
அல்லாஹ் நபியவர்களை தமது நாற்பதாவது வயதில் மக்காவில் இறைத்தூதராக அனுப்பி வைத்து அவர்களுக்கு அல்குர்ஆனை அருளினான் அதனைத் தொடர்ந்து நபியவர்கள் எகத்துவம்; மற்றும் இஸ்லாமி;ய மார்க்த்தை நோக்கி மனிதர்களை அழைத்தார்கள்.அவ்வேளை அவர்களின் சமூகம் அவர்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கி. நோவினைகளுக்கு உட்படுத்தியதோடு அவர்களின் தோழர்களை வேதனை செய்து அவர்களின் பலரை கொலையும் செய்தது. பின்னர் அவர்கள் யஸ்ரிப் என்ற நகரத்திற்கு (பின்னர் அந்நகரத்தின் பெயர் அல்மதீனா அல் நபவிய்யா என்பதாக மாற்றம் பெற்றது) பதின்மூன்று வருடங்களின் பின் ஹிஜ்ரத் செய்தார்கள்.அங்கே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும் முஸ்லிம் சமுகத்தையும் உருவாக்கினார்கள். இவ்வாறு பத்துவருடங்களில் மக்களுக்கு வழிகாட்டி அவர்களை வழி நடாத்தி பிரச்சாரம் செய்து மார்க்கத்தை கற்றுக்கொடுத்தார்கள். இஸ்லாமிய ஷரீஆ முழுமை பெரும் வரையில் இப்பிரச்சாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டார்கள் இப்பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாம் முழுமைபெற்று மார்க்கமும் முழுமையடைந்தது. அல்லாஹ்வின் திருவசனமும் இறங்கியது.
(இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டேன்.எனது அருட்கொடைகளையும் உங்கள் மீது பூரணப்படுத்திவிட்டேன்.மேலும் நான் உங்களுக்கு இஸ்லாத்தையே மார்க்கமாகவும் பொருந்திக்கொண்டேன்)
மக்கள் இம்மார்க்கத்தில் தன்னார்வத்துடனும் சுய விருப்பத்துடனும்; நுழைவதை பார்த்து மிக மகிழ்ச்சியுற்று இருக்கும் நிலையில் நபியவர்கள்; மரணமானார்கள். அல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகிறான்
காருண்ய நபி :
எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காருண்ய நபியாவார். அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் அவர்களின் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நிலைகளிலும் இணைபிரியாத ஒரு பண்பாக –கருணை- காருண்யம் என்ற பண்பு காணப்பட்டது. இப்பண்பு குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
"உலகத்தாருக்கு அருளாகவே அன்றி உம்மை அனுப்பவில்லை".
அவர்களின் கருணையின் வெளிப்பாடுகளில் ஒன்றாக மக்களை நல்வழிப்படுத்துவதில் அவர்களுக்கிருந்த அதீத ஆர்வமும்,இறை நிராகரிப்பு மடமை வழிகேடு ஆகிய இருள்களிலிருந்து மனிதர்களை காப்பாற்றி ஈமான,அறிவு, நேர்வழி ஆகியவற்றை நோக்கி மக்களை வழிப்படுத்தியமை குறிப்பிட முடியும். அத்துடன் தனது சமூகம் ஈமான் கொள்ளாத போது கவலை யால் தம்மை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள் என்பதும் அவர்களின்; கருணையின் ஒர் அங்கமாக காணப்படுகிறது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு விவரிக்கிறான்.
(நபியே இச்செய்தியை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அவர்களுடைய புறக்கணிப்புக்காக கவலையால் உம்மை மாய்த்துக்கொள்வீர் போலும்) (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)
அல் கஹ்ப் : 6)
அதுபோலவே, அவர்களுடைய கருணையின் வெளிப்பாடுகள் விசுவாசிகள் மீதான அவர்களின் அக்கறையிலும், இரக்கத்திலும் காணக்கூடியதாக உள்ளது. அல்லாஹ் கூறுகிறான்
அத்தவ்பா (128)
மார்க்கத்தை இலகுபடுத்தி தனது சமூகத்திற்கு சிரமமானவற்றையும்,செய்வதற்கு முடியாதவைகளையும் பொறுப்புச்சாட்டாது இருந்தமை அவர் தனது சமூகம் மீது கொண்டிருந்த ஆர்வத்தை காட்டுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : (இலகுபடுத்துங்கள் சிரமப்படுத்தாதீர்கள் ஆர்வமூட்டுங்கள் வெறுப்பூட்டாதீர்கள்); என்றர்கள். ஆதாரம் புஹாரி
நபியவர்களின் உள்ளம் கருணையால் நிரம்பியிருந்தது.ஆகையால் அவர்கள் மனைவியருடனும் சிறுவர்களுடன் மிகவும் அன்பாக இருந்தார்கள். அவர்களின் தோழர்களில் ஒருவரான அனஸ்(ரழி) அவர்கள் இவ்வறு கூறுகிறார்( நபியர்களை விட தனது குடும்பத்தினருடன் மிகவும் பாசத்துடன் இருக்கும் எவரையும் நான் கண்டதில்லை)ஆதாரம் முஸ்லிம்
நபியவர்களின் அவர்களின் (காருண்யம்) கருணை மனிதர்களுடன் மாத்திரம் சுருங்கியிருக்கவில்லை. மாறாக அவர்களின் கருணை மிருகங்களையும் உள்ளடக்கியிருந்தது. எனவே அம்மிருகங்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறும், அவைகளுக்கு எவ்வித நோவினை செய்வதை விட்டும் அவர்கள் எச்சரித்தார்கள் மேலும் ஒரு விபச்சாரியான பெண்மணி தாகித்திருந்த ஒரு நாய்க்கு நீர்புகட்டியதன் காரணமாக அவளின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து அவளை சுவர்க்கம் நுழையச் செய்தான் என்றும் ஒரு பெண் தனது பூனைக்கு உணவளிக்காது அது மரணிக்குவரையில் அடைத்து வைத்ததன் காரணமாக நரகம் நுழைந்தாள் என்றும் தமது தோழர்களுக்கு நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபியவர்களின் தூதுத்துவம் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது.
முன்னைய தீர்க்கதரிசிகளும் தூதுவர்களும் குறிப்பிட்ட அவர்களின் சமூகத்தினருக்கே தூதுவர்களாக அனுப்பப்பட்டனர்.ஆனால் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூது எல்லா காலத்திற்கும் இடத்திற்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதாக உள்ளது
இது குறித்து அல்லாஹ் கூறும்போது
(நபியே) மனிதர்கள் அனைவருக்கும் நன்மாரயம் கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நாம் உம்மை அனுப்பவில்லை)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்
மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதராவேன் என்று (நபியே) நீர் கூறுவீராக!.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
(முன்னைய சமூகத்தில் நபிமார்கள் அவர்களது குறித்த சமூகத்திற்கே அனுப்பப்படக் கூடியவர்களாக இருந்தனர்.ஆனால் நான் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான தூதராக அனுப்பப்பட்டுள்ளேன் )
ஆதாரம் : புஹாரி (828)
ஆகவே நபியவர்கள் தூதுவராக அனுப்பப்பட்டது முதல் மறுமை நாள் வரையில் ஒவ்வொரு மனிதரும் அவர்களை பின்பற்றி அவர்கள் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தி அவர்களின் மார்க்கத்தை ஏற்று நடப்பதும் கடமையாகும். அல்லாஹ் நபியவர்களின் மூலமாக இறைத்தூதுக்கு முற்றுப்புள்ளிவைத்தான் அதன் படி அவர்களுக்கு கட்டுபப்ட்டு நடப்பதை கடமையாக்கினான். எனவே யார் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர் இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருப்பதோடு மறுமையில் சுவர்க்கத்தினுள் நுழைந்து விடுவார். யார் அவர்களுக்கு கட்டுபடாது மாறு செய்வாரோ இவ்வுலகில் துன்பத்திற்கு உள்ளாவார் மறுமையில் நரகினுள் புகுவார். அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
(எனது நேர்வழியை யார் பின்பற்றுகிறாரோ அவர் வழிதவறவும் மாட்டார்,துர்ப்பாக்கியமடையவும் மாட்டார்(123)
வீட்டில் தமது குடும்பத்தாருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
ஒருவரின் வீடுதான் அவரது சிறந்த குணத்தையும், முழுiயான பண்பாட்டையும் மற்றும் நல்ல சகவாழ்வையும் எடுத்துககாட்டும் இடமாகும். ஒருவர் தனது மனைவி, குழந்தைகள் அல்லது வேலைக்காரருடன் இருக்கும்போது, அவர் பாசாங்கு இல்லாமல் இயல்பாக செயல்படுகிறார்.இதன் காரணமாக ஒருவர் தனது குடும்த்தினருடன் வீட்டில் இருக்கும் போதே அவரின் நன்னடத்தை தெளிவாகத் தெரிகிறது
இஸ்லாமிய சமூகத்தின் தூதராகவும் தலைவராகவும் ஆசானாகவும் இருந்த நபியவர்களின் வீட்டில் அவர்களின் செயல் நிலை குறித்து சிந்தித்துப்பார்த்தால் பண்பாடும் நல்லொழுக்கமுமிக்க ஒரு மனிதர் தனது வீட்டில் தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் எவ்வாறு நடந்துகொள்வாரோ அவ்வாறான ஒருவருக்குரிய மிகச்சிறந்த முன்மாதிரிகளுடன் நபியவர்கள்; இருந்ததை கண்டுகொள்ளமுடிகிறது
நபியவர்களின் மனைவியான ஆயிஷா( ரழி) அவர்களிடம் நபியவர்கள் வீட்டில் செய்து கொண்டிருக்கும் வேலை குறித்து கேட்கப்பட்டது? அதற்கு அவர்கள்
இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் குடும்பத்தினருக்கும், மனைவியருக்கும் மனிதர்களிலேயே மிக நல்லவராக காணப்பட்டார்கள் அத்துடன் அவர்களுடன் நல்லமுறையில் உறவாடுவதிலும், மென்மையாக நடந்துகொள்வதிலும், அவர்களின் உள மற்றும் உணர்வு ரீதியான ஆசைகளை அறிந்து அவைகளை நிறைவேற்றுவதில் சிறந்த முன்மாதிரியை சமூகத்திற்கு வழங்கினாகள்;. அத்துடம் அவர்களை மகிழ்வித்து சந்தோசத்தை ஏற்படுத்தும் பொருத்தமான வாய்ப்புகளை நல்லமுறையில் பயண்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.
(ஒரு நாள் பள்ளிவாயிலில் ஹபஷிகள் விளையாடிக்கொண்டிருக்கையில் எனது வீட்டின் கதவருகே நபியவர்கள் இருந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன் அப்போது நபியவர்கள் அவர்களின் மேலங்கியினால் என்னை மறைத்துக் கொண்டு அவர்கள் விளையாடுவதை பர்ப்பீராக என்று கூறினார்கள்)
இந்த ஹதீஸை புஹாரி, முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது பெண்பிள்ளைகளை அதிம் நேசிப்பவராகவும் அவர்களை கண்ணிப்படுத்துபவராகவும் இருந்தார்கள்.அவர்களின் மகள் பாத்திமா அவர்களிடம் வந்தால் எழுந்து சென்று முத்தமிட்டு வரவேற்று தமது இருக்கையில் மகள் பாத்திமாவை அமரவைப்பார்கள்.மேலும் அவர்களின் குறைநிறைகளை கண்டறிவதற்காக சந்திக்கச் செல்பவர்களாகவும் இருந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு செய்த உபதேங்களின் ஒனறாக பின்வரும் கூற்று காணப்படுகிறது.
(பெண்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்)
இந்த ஹதீஸை புஹாரி, முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நற்குணங்கள் சில.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணமும், நன்நடத்தையும் மிக்கவராக இருந்தார்கள்; அவர்கள் நற்குணம் குறித்து அல்லாஹ் பின்வமாறு விவரிக்கிறான்
(அல்கலம் வசனம்; 4)
அவர்கள் ஒழுக்கத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அந்நிலையை அவர்கள் தவிர வேறு யாரும் அடையவில்லை. அதாவது அவர்கள் எல்லாக் குறைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள்; அத்துடன் அனைத்து நற்குணங்களிலும் முழுமைத்துவத்தை அடைந்தவர்கள் அவர்களின் பண்பாடு அல்குர்ஆனாக இருந்தது. அவர்கள் அல் குர்ஆனின் பண்பாட்டை கடைப்பிடித்து ஒழுகியதுடன் மக்களையும் அதன் படி நெறிப்படுத்தினார்கள் அவரகளின் நற்குணஙக்ளில் சில பின்வருமாறு :
நபியவர்கள் மனிதர்களில் மிகவும் சகிப்புத்தன்மைமிக்கவர்களாகவும் நீதியானவர்களாகவும் சுயகௌரவமுடையவர்களாவும் தயாள குணம் படைத்த வாரிவழங்கும் வள்ளலாகவும் இருந்தார்கள்;.
மேலும் மனிதர்களில் மிகவும் வெட்க சுபாவம் நிறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்
மேலும் அவர்கள்; பணிவுமிக்கவர்களாகவும். எவரின் அழைப்பையும் ஏற்று அவரின் அழைப்பில் கலந்து கொள்பவர்களாகவும் அன்பளிப்புகள் சிறியதாயினும்; அதனை ஏற்பவர்களாகவும் அதற்கு நன்றி பாரா ட்டுபவர்களாகவும் திகழ்ந்தார்கள்
மேலும் அவர்கள் நோயாளிகளை சுகம் விசாரிப்பவர்களாகவும், மரண நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களாகவும்,ஏழைகளுடன் ஒன்றாக அமர்ந்து இருப்பவர்களாகவும் எளியவர்களுடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுபவர்களாகவும்,பண்பாடும் நன்னடத்தையுடையோரை மதித்து நடப்பவர்களாகவும்.மரியாதைக்குரியவர்களோடு நட்புடன் நடப்பவர்களாகவும் இருந்தார்கள்.
எவராவது அவர்களிடம்; தேவை நாடி வந்தால் அவரின் தேவையை நிறைவேற்றிக்கொடுப்பதற்காக அவருடன் செல்வார்கள்.மேலும் அவர்கள் கடுகடுப்பானவர்களாகவும் கடின உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்கவில்லை. மேலும் குற்றசெயலுக்கு அதே போன்ற ஒரு குற்றச் செயல் மூலம் குறித்தவரை தண்டிக்காது அவரை மன்னித்து விட்டு அக்குற்றத்தை மறைத்துவிடுவார்கள்;, என்றாலும் அல்லாஹ்வின் புனிதக் கட்டளைகள் மீறப்படும்போது அவ்வேளையில் தமக்காக அல்லாது அல்லாஹ்வுக்காக கோபப்படுவார்கள்.
அவர்களின் நற்குணத்தின் ஒன்றாக யாரையாவது சந்தித்தால் அவருக்கு முதலில் ஸலாம் கூறுவார்கள் மேலும் தனது தோழர்களில் யாரையாவது சந்தித்தால் முதலில் கைலாகு செய்பவர்களாக இருந்தார்கள்.
மேலும் அவர்கள் தம்முடன்; அமர்ந்து கொண்டிருப்பவருடன் முழுமையாக ஈடுபத்திக்கொள்வார்கள். அதாவது நபியவர்கள் தனது முகத்தை அவரின் பக்கம் திருப்பி அவரின் பேச்சை செவிதாழ்த்தி கேட்பவர்களாகவும் குறித்த நபருக்கு வழிகாட்டல்களை அழகிய முறையில் வழங்குபவர்களாகவும் இருந்தார்கள்.
மேலும் அவர்கள் மனிதர்களில் மிகவும் இரக்கமுள்ளவர்களாகவும் சிறப்புக்குறியவர்களாகவும் மக்களுக்காக மிகவும் பயன்மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.
நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகவும் இருந்தார்கள் .ஆனால் உண்மையை தவிர வேறொன்றையும் கூறமாட்டார்கள்.அதிகம் புண்முருவல் பூத்த முகத்துடன் காணப்படுபவர்களாகவும், வெடிச்சிரிப்பு சிரிக்காது சாதாரனமாக சிரிப்பவர்களாகவும் இருந்தார்கள். தமது மனைவியருடன் நடையில் போட்டிபோடக்கூடியவர்களாகவும் அவர்களுடன் கொஞ்சி விளையாடுபவர்களாகவும் இருந்தார்கள்.
அவர்களுக்கு கிடைத்ததை சாப்பிடுவார்கள்.மேலும் அவர்களுக்கு கிடைத்ததை மறுக்கவும் மாட்டார்கள் எந்த உணவையும் குறைகூறவுமாட்டார்கள்;.இறைச்சி கிடைத்தால் அதனை சாப்பிடுவார்கள்.கோதுமை ரொட்டியோ அல்லது பார்லியோ அல்லது இனிப்புப்பண்டமோ அல்லது தேனோ கிடைத்தால் அதனையும் சாப்பிடுவார்கள் அத்துடன் ரொட்டி இல்லாது பால் மாத்திரம் கிடைத்தால் அதனையே போதுமாக்கிக்கொள்வார்கள். தர்பூசணியோ(வத்தைப் பழம்), அல்லது பேரீத்தம்பழமோ கிடைத்தால் அதனையே சாப்பிடுவார்கள்.
தமக்குக் கிடைத்ததை அணிந்துகொள்வார்கள்.சில வேளை மேலங்கியை அணிவார்கள் சில போது கம்பளி ஆடை அணிவார்கள. அதாவது அனுமதிக்கப்பட்ட எந்த ஆடை கிடைத்தாலும் அதனை அணிவார்கள்.
நபியவர்கள் தமக்கு கிடைததவற்றின் மீது சவாரி செய்வார்கள். சவாரி செய்யும் வாகனம் குதிரையாகவோ அல்லது ஒட்டகமாகவோ கோவேறு கழுதையாகவோ வீட்டுக்ழுதையாகவோ இருந்ததுண்டு அல்லது அவர்கள் காலால் நடந்து செல்பவர்களாகவும் இருந்தார்கள்.
மேலும் அவர்கள் தனது நேரத்தை அல்லாஹ்வுக்குரிய விடயத்தில் அல்லது தன்னையும் தனது குடும்பத்தையும் சீர்செய்யும் அவசியமான செயற்பாடுகளில் கழிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
குறிப்பிடப்பட்ட நட்பண்புகளுடன் ஏனைய நற்குணங்களையும் பெற்றவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் இருந்தார்கள்.
முடிவுரை
இஸ்லாம் ஒரு மகத்தான மார்க்கமாகும். அது இம்மார்க்கத்தின் போதனைகளை கடைப்பிடித்து நடக்கும் முஸ்லிமுக்கு மனஆறுதலையும்,நல்ல வாழ்வையும், உலகில் நல்ல நிலயையும்,மறுமையில் நித்திய பேரின்பத்தையும், நிரந்தர மகிழ்ச்சியையும் பெற்றுக்கெடுக்கிறது. அதேபோன்று இஸ்லாமிய போதனைகளை கடைப்பிடித்து வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு முன்னேற்றத்தையும், தூய்மையும், சமூக ஒற்றுமையையும்,பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் பெற்றுத் தருகிறது.
உன்னதமான இவ்வருளுக்கு உரித்தான இஸ்லாத்தை ஏற்றிருப்பவரே உம்மை நான் வாழ்த்துகிறேன். எனவே நீர் இதன் நம்பிக்கை கோட்பாட்டையும், சட்டதிட்டங்களையும் போதனைகளையும், சட்டங்களையும்,பண்பாடுகளையும் ஒழுக்கங்கங்களையும், கற்றுக்கொள்வீராக. இவற்றை நீ கடைப்பிடித்து ஓழுகுவதுடன் முடியுமான வரையில் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் பின்பற்றி நடப்பீராக. அவ்வாறு செய்கின்ற போது அவனை எப்படி ஒரு ஸாலிஹான மனிதனாக இஸ்லாம் ஆக்குகிறது என்பதையும் அவன் தன்னில் மகிழ்ச்சியாக இருப்பதுடன், அவனைச் சுற்றியுள்ள பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் இந்த முஸ்லிமுடன் பழகும் ஒவ்வொருவரிடமும் இஸ்லாம் எவ்வகையான தாக்கத்தை செலுத்தியிருக்கிறது என்பதையும் அவரால் கண்டு கொள்ள முடியும்
இந்த சிறு புத்தகமானது உமது இந்த மார்க்கத்தின் சட்டங்களை கற்றுக்கொள்வதற்கான பாதையின் தொடக்கமாகும். இதனைத் தொடர்ந்து நீர் பயனுள்ள அறிவையும் நல்ல காரியங்களையும் அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்வதுடன் .உமது ஆன்மாவைப் தூய்மைப்படுத்தி, மனதை சீர்திருத்தும் விடயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும். மேலும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை அதிகரித்து, அறிந்த விடயங்களைக் கொண்டு செயல்படுவதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.எனவே அல்குர்ஆனை கற்று, ஒதுதல் மற்றும் அதன் வசனங்களைக் சிந்தித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவீராக. மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவர்களின் வழிமுறைப்பற்றியும் அறிந்து கொள்வீராக! ஏனெனில் இவ்வுலகில் முன்மாதிரியாகக் கொண்டு நீர் பின்பற்றி நடப்பதற்கு தகுதியான நபியவர்கள் எதையெல்லாம் மார்க்கம் என்று கட்டளைப்பிற்ப்பித்தார்களோ அவற்றை பின்பற்றி நடப்பீராக. அத்துடன் இந்நபியல்லாத மிகப்பெரும் அந்தஸ்தும் புகழுக்குமுரியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் கருத்துக்கள் அல்குர்ஆனுக்கும் நபியின் வழிமுறைக்கும் பொருத்தமானதாக இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளமுடியும். அவை தவிரவுள்ள அனைத்தும் நிராகரிக்கப்படும். எனவே மார்க்கத்தில் தர்க்கம் புரிவதையும் முரண்பட்டுக்கொள்வதையும் உமது சகோதர முஸ்லிம்களுடன் சர்ச்பை;படுவதை தவிர்ந்து கொள்வீராக.
எங்களை அல்லாஹ் பொருந்திக்கொண்ட நிலையில் அவனை சந்திக்குவரையில் இந்த மார்க்கத்தின் மீது உறுதியையும் நல்வாய்ப்பையும் உமக்கும் எமக்கும் நல்க வேண்டி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம். அகிலத்தின் இரட்சகனான அல்லாவுக்கே புகழனைத்தும். ஸலாத்தும் ஸலாமும் எங்கள் நபியான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார் மற்றும் அனைத்து தோழர்கள் மற்றும் மறுமைவரையில் அவர்களைப் பின்பற்றியோர் மீதும் உண்டாவதாக.
Related books
All books- அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம்.63 மொழிகள்
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம்.
இஸ்லாம் இஸ்லாத்தின் அடிப்படைகள், போதனைகள், சிறப்பம்சங்களை அதன் பிரதான மூலாதாரங்களாகிய அல்குர்ஆன் ஸுன்னாவிலிருந்து தெளிவுபடுத்தக்கூடிய முக்கியமான ஒரு நூலாக இது உள்ளது. இந்நூல் பல மொழிகளைப் பேசும் பலதரப்பட்ட கால, சூழல்களில் வாழும் முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் அனைவரையும் இலக்காகக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். (இது அல்குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதியாகும்). 1. இஸ்லாம் தான் அனைத்து மக்களுக்குமான அல்லாஹ்வின் தூதாகும், இது அவனது தூதுத்துவங்களின் முத்திரையாக, நிரந்தரமான இறைத்தூதாக உள்ளது : இஸ்லாம் தான் அனைத்து மக்களுக்குமான அல்லாஹ்வின் தூதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும்,…
- இஸ்லாம் இறைதூதர்களின் மார்க்கம்81 மொழிகள்
இஸ்லாம் இறைதூதர்களின் மார்க்கம்
இஸ்லாம் என்பது இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனுமாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிவதும், நேசம் மற்றும் பயபக்தியினால் அவனுக்கு முழுமையாக கட்டுப்படுவதுமாகும். இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்வை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகும்.அதாவது அவன் மாத்திரமே சிருஷ்டிகர்த்தா என்றும் அவன் தவிரவுள்ளவை யாவும் சிருஷ்டிகள் என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபட மிகத்தகுதியானவன். அவனுக்கு நிகராக எந்த இணையும் கிடையாது என்பதை உண்மைப்படுத்தி அவன் மாத்திரமே உண்மையான இறைவன் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அவனுக்கு மிக அழகிய பெயர்களும் உயர் பண்புகளும் உண்டு.அவன் குறைகள் அனைத்திற்கும் அப்பாட்பட்டவன்.அவன்…
- இஸ்லாம் அகிலங்களின் இரட்சகனின் மார்க்கம்80 மொழிகள்
இஸ்லாம் அகிலங்களின் இரட்சகனின் மார்க்கம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஆரம்பிக்கிறேன்) உமது இரட்சகன் (கடவுள்) யார்? இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரும் ஒரு வினாவும், மனித இனம் விடைதேடி அறிந்து கொள்ள வேண்டியதுமான மிகமுக்கியமான வினாவும் இதுவாகும்! எமது இரட்சகன் வானங்களையும், பூமியையும் படைத்து, வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து,அதன் மூலம், மரங்களையும் முளைக்கச் செய்து கனிகளை வெளிப்படுத்தி எமக்கும், நாம் உணவாகக் கொள்ளும் விலங்குகளுக்கும் உணவாகக் தந்தவன் ஆவான். அவனே எம்மையும், எமது மூதாதையர்களையும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவனாவான். அதில் இரவையும் பகலையும் படைத்து இரவை உறக்கத்திற்கும்…
- இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்65 மொழிகள்
இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
“இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" எனும் இந்நூல், நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரை, வளர்ப்பு முதல் அவர்களின் பாக்கியம் நிறைந்த திருமணம், வஹியின் ஆரம்பம், இறுதித் தூதுத்துவத்தின் துவக்கம் வரையிலான வாழ்க்கையை ஆய்வு செய்கிறது. மேலும், அவர்களின் நபித்துவத்திற்கான அத்தாட்சிகளையும், வாய்மைக்கான சான்றுகளையும் தெளிவுபடுத்துவதோடு, அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவையும், மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அதன் பங்களிப்பையும் விளக்குகிறது. அத்துடன், அவர்களின் எதிரிகளின் நிலைப்பாடுகளையும், அவர்களே வழங்கிய சாட்சியங்களையும் தெளிவுபடுத்துவதுடன், அவர்களை…