ما لا يسع أطفال المسلمين جهله
திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
(முகத்திமத்து இப்னு அபீஸைத் அல்கைருவானி பக்கம்: (5))
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : திர்மிதி).
ஆதாரம் : அபூதாவூத்
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : திர்மிதி).
ஆதாரம் : அபூதாவூத்
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதாரம் : அபூதாவூத்
ஆதாரம் : அபூதாவூத்
(ஆதாரம் : அஹ்மத்)
(ஆதாரம் : ஸுனன் நூலாசிரியர்கள்).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
ஆதாரம் : அபு தாவூத், இப்னு மாஜா.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
இந்த ஹதீஸை அஹ்மத், திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
(ஆதாரம் : அஹ்லுஸ்ஸுனன்).
(ஆதாரம் : புஹாரி).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : புஹாரி).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார், மேலும் இதன் மூலம் இரு ஸஹீஹ்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் : புஹாரி).
(ஆதாரம் : அஹ்மத், திர்மிதி.).
ஆதாரம் : இப்னு மாஜா மற்றும் மாலிக் (முஅத்தாவில்).
இமாம்களான திர்மிதி மற்றும் அந்நஸாஈ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸை இப்னு மாஜஹ் பதிவு செய்துள்ளார்
(ஹாகிமும் ஏனையோரும் இதனை அறிவித்துள்ளனர்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
இந்த ஹதீஸை புஹாரி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : திர்மிதி, இந்த ஹதீஸ் குறித்து இமாம் திர்மிதி அவர்கள் ஹஸன் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.)
(ஆதாரம் : திர்மிதி).
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : புஹாரி).
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
ஆதாரம் : அபூதாவூத்
(ஆதாரம் : திர்மிதி).
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
(ஆதாரம் : திர்மிதி).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : திர்மிதி) .
(ஆதாரம் : முஸ்லிம்.)
இதனை திர்மிதீ, அபு தாவுத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : அபூதாவூத்).
(ஆதாரம் : புஹாரி).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
இதனை திர்மிதீ, அபு தாவுத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ஆதாரம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : அபூதாவூத்).
இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
திர்மிதி மற்றும் தாரமீ பதிவு செய்துள்ளார்கள்.
(ஆதாரம் : அபூதாவூத்).
(ஆதாரம் : புஹாரி).
இதனை திர்மிதீ, அபு தாவுத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
(ஆதாரம் : புஹாரி).
(ஆதாரம் : புஹாரி).
இச்செய்தியை திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
(ஆதாரம் : புஹாரி).
(ஆதாரம் : அஹ்மத்)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
இச்செய்தியை திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.
ஆதாரம் : அஹ்மத் மற்றும் இப்னு மாஜா.
இதனை இமாம்களான அபூதாவூத் மற்றும் இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் : புஹாரி).
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் : அபூதாவூத்).
இமாம் அல்-தபரானி மற்றும் இமாம் இப்னு அபீ ஷைபா ஆகியோரால் அறிவிக்கப்பட்டது
(ஆதாரம் : புஹாரி).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
இதனை இமாம்களான அபூதாவூத் மற்றும் இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதாரம் : திர்மிதி மற்றும் தாரமீ.
இதனை திர்மிதீ,அபு தாவுத் அஹ்மத் ஆகியோர் அறிவித்துள்ளனர்
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : அபூதாவூத்).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : அபூதாவூத்).
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாம்களான முஸ்லிம், அபு தாவூத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு அபூ தாவூத் உடையதாகும்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
இமாம்களான அபு தாவூத், அஹ்மத், அத் திர்மிதி ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது.
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : அஹ்மத்)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : திர்மிதி) .
ஆதாரம் அபூதாவுத் திர்மிதீ,
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : திர்மிதி) .
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
இச்செய்தியை திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் அல்-அல்ஹாகிம் மற்றும் இமாம் அல்-தபரானி ஆகியோரால் அறிவிக்கப்பட்டது
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
(ஆதாரம் : அஹ்மத்)
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
(ஆதாரம் : அஹ்மத்)
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : புஹாரி).
ஆதாரம் : திர்மிதி மற்றும் இப்னு மாஜா.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : அஹ்மத்)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
(ஆதாரம் : புஹாரி).
(ஆதாரம் : புஹாரி).
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : திர்மிதி) .
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதாரம் : திர்மிதி, இப்னு ஹிப்பான்.
(ஆதாரம் : புஹாரி).
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்
(ஆதாரம் : திர்மிதி) .
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
(ஆதாரம் : அபூதாவூத்).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
(ஆதாரம் : அபூதாவூத்).
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : புஹாரி.)
(ஆதாரம் : புஹாரி).
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
ஆதாரம் : அபு தாவூத், இப்னு மாஜா, மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : புஹாரி).
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
பயணத்திலிருந்து திரும்பி வந்தால் இந்த துஆவுடன் சேர்த்து பின்வரும் துஆவை ஓதவும் : 'ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, லிரப்பினா ஹாமிதூன்'. பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். (ஆதாரம் : முஸ்லிம்.)
ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா.
(ஆதாரம் : அஹ்மத், திர்மிதி.).
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
(ஆதாரம் : திர்மிதி) .
(ஆதாரம் : அபூதாவூத்).
(ஹாகிமும் ஏனையோரும் இதனை அறிவித்துள்ளனர்.)
(ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிஃ).
(ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி).
(ஆதாரம் : புஹாரி.)
ஆதாரம் : புஹாரி முஸ்லிம்.
ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா.
ஆதாரம் : முஅத்தா மாலிக்.
(ஆதாரம் : திர்மிதி) .
ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
பல்வகை அம்சங்களை உள்ளடக்கிய பகுதி :
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : முஸ்லிம்.)
(ஆதாரம் : அபூதாவூத்).
அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
முஸ்லிம் சிறார்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
முன்னுரை
அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன், புகழனைத்தும் அவனுக்கே உரியன.
அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் பற்றி முஸ்லிம் சிறார்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய பாடங்கள் பற்றியே இந்நூல் அலசுகிறது. இவற்றை பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே தமது பிள்ளைகளுக்கு கற்பித்துக்கொடுப்பது கடமையும் அவசியமுமாகும். இந்நூலானது (அகீதா) நம்பிக்கை, பிக்ஹ் (சட்டம்), ஸீரா (நபிகளின் வரலாறு), ஒழுக்கம், அல்குர்ஆன் விளக்கவுரை (தப்ஸீர்), ஹதீஸ், பண்பாடுகள் மற்றும் அஸ்கார் (சந்தர்ப்ப துஆக்கள்) ஆகிய தலைப்புகளினால் ஒருங்கிணைக்கப்பட்டு தொகுக்கப்பட்ட எளிதானதும் இலகுவானதுமான ஒரு பாடத்திட்டமாகும். இது சிறுவர்கள் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவருக்கும் ஏற்றது. முக்கியமாக புதிதாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டோருக்கும் மிகவும் பயன்மிக்கது. அத்துடன் வீடுகளிலும், முன்பள்ளிகளிலும் மற்றும் கற்பித்தல் நிறுவனங்களிலும் மனனமிடுவதற்கும் இஸ்லாம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கும் பொருத்தமான ஒரு நூலாகக் கொள்ள முடியும். இந்நூலை இஸ்லாமிய கலைகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியுள்ளேன். மிக இலகுவான முறையில் சிந்தித்து விளங்கி மனதில் பதியச் செய்வதற்கு ஏற்றவிதத்தில் கேள்வி-பதில் முறையில் தகவல்களை அமைத்துள்ளேன். கல்வியியலாளர்கள் மற்றும் பயிற்றுவிப்போர், மாணவர்களின் வயதுக்கு ஏற்றதை இதிலிருந்து தெரிவு செய்து கற்பிக்க முடியும்.
அல்லாஹ் இம்முயற்சியை பயனுள்ளதாக்கி இப்பணியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டி அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கிறேன்.
இதற்கான ஆதாரம்:
அல்லாஹ் கூறுகிறான் நம்பிக்கையாளர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மக்களும் கற்களும் ஆவார்கள். கடுமையானவர்களான மிகவும் வலிமைமிக்கவர்களான வானவர்கள் அவற்றின் மீது இருப்பார்கள். அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் எதை ஏவப்பட்டார்களோ அதையே செய்வார்கள். (ஸூறதுத் தஹ்ரீம்: 6)
- அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒருநாள் நான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் : "சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன்! அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக நிறைவேற்றுவாயாக!. அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக நிறைவேற்றுவாயாக! நீ அவனின் உதவியை உன் முன் காண்பாய். நீ உனக்குரிய தேவையைக் கேட்டால்; அல்லாஹ்விடமே கேட்டுப் பெற்றுக்கொள்வாயாக!, நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடுவாயாக. இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் அது உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் செய்திட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து எதையேனும் கொண்டு உனக்கு ஊறுவிளைவித்திட முயன்றாலும், அது அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் கெடுதலையும் செய்திட முடியாது. விதிகள் எழுதப்பட்ட எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. விதிகள் எழுதப்பட்ட ஏடுகளும் காய்ந்து விட்டன".
சிறார்களுக்கு (மார்க்கக்கல்வியை) கற்பிப்பதன் முக்கியத்துவம் :
இஸ்லாத்தின் இயல்புணர்வின் அடிப்படையில் ஒரு முழு மனிதனாகவும் ஈமானின் (நம்பிக்கையின்) அடிப்படையில் ஒரு ஏகத்துவதியாகவும் மாற வேண்டுமென்பதற்காக ஒரு முஸ்லிம் தனது பிள்ளைக்கு மார்க்கத்தில் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விடயங்களை கற்றுக்கொடுப்பது கடமையாகும்.
இது குறித்து இமாம் இப்னு அபீஸைத் அல்கைருவானி (ரஹ்) பின்வருமாறு குறிப்பிடுகிறார் : "சிறார்கள் ஏழுவயதை அடையும் போது தொழுமாறு கட்டளையிடுமாறும், பத்து வயதினை அடையும் போது தண்டிக்குமாறும், படுக்கைகளை விட்டும் அப்புறப்படுத்துமாறும், ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று அடியார்களுக்கு அல்லாஹ்வினால் விதியாக்கப்பட்ட மார்க்க சம்பந்தமான சொல் மற்றும் செயல் சார் விடயங்களை அவர்கள் பருவவயதை அடைய முன்னறே கற்றுக்கொடுப்பது கடமையும் அவசியமுமாகும். அவ்வாறு கற்றுக்கொடுக்கப்படும் போது அவர்கள் பருவயதினை அடையும் கட்டத்தில் அவர்களின் உள்ளத்தில் அவை ஆழமாக பதிந்து, உள்ளத்தில் அவ்விடயடங்கள் உறுதிபெறுவதுடன் அவர்களின் உறுப்புகளும் அவற்றை செய்வதற்கு வழக்கப்டுத்திக்கொள்கிறது.
பகுதி (1) இஸ்லாமிய நம்பிக்கைக் (இறையியல்) கோட்பாடு
இஸ்லாமியஅடிப்படைக் கொள்கைக் பற்றிய கல்வி :
இஸ்லாமிய (அகீதா) கொள்கை என்பது: அல்லாஹ் தஆலாவின் ருபூபிய்யாவையும், அவனது உலூஹிய்யாவையும், அவனது பெயர்கள் மற்றும் பண்புகளையும், அவனது மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், நன்மை தீமை அனைத்தும் அவனின் ஏற்பாட்டில்தான் என்ற விதியையும், உறுதிப்படுத்தப்பட்ட ஏனைய மறைவான விடயங்களையும், மார்க்கத்தின் அடிப்படைகளையும், இவ்விடயத்தில் சலபுஸ் ஸாலிஹீன்கள் ஏகோபித்து ஏற்றுக்கொண்டவைகளையும், மற்றும் இது தொடர்பான ஏனைய விடயங்களையும் விசுவாசித்து உறுதியாக நம்புவதாகும்.
கேள்வி 1: உனது இரட்சகன் யார்?
பதில் : என் இறைவன் அல்லாஹ். அவனே என்னையும், அகிலத்தார் அனைவரையும் தனது அருளினால் பரிபாலிப்பவன். அவனே என் வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர எனக்கு வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனே படைப்பாளன், அதிபதி, வாழ்வாதாரத்தை தருபவன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் திட்டமிடுபவனாவான்.
ஆதாரம் : அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! (அல்பாதிஹா : 2).
கே 2 : உனது மார்க்கம் என்ன? பதில் :
பதில் : இஸ்லாம் என்பது : ஏகத்துவப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வுக்கு முழுமையாக சரணடைதல், வழிபடுவதன்மூலம் அவனுக்கு கட்டுப்படுதல், இணைவைத்தல் மற்றும் இணைவைப்பாளர்களைவிட்டும் முழுமையாக விலகி இருப்பதுமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். (ஆலு இம்ரான் : 19).
கேள்வி: 3 உனது நபி யார்?
பதில்: முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அல்லாஹ் கூறுகிறான் : "முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்". (அல் பத்ஹ் : 29).
கேள்வி 4 : ஒரிறைக் கொள்கையின் வார்த்தையையும் (திருக்கலிமாவையும்). அதன் கருத்து யாது என்பதையும் குறிப்பிடுக?
ஓரிறைக்கொள்கையின் வார்த்தை (கலிமதுத் தவ்ஹீத் ) 'லாஇலாஹ இல்லல்லாஹ்; 'என்பதாகும் அதன் கருத்து உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வதைதவிர வேறு யாருமில்லை என்பதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஆக, “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் வேறுயாறுமில்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக! (முஹம்மத் : 19).
மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன். (அல் ஹஜ் : 62)
கேள்வி 5 : அல்லாஹ் எங்கிருக்கிறான் ?
பதில் : அல்லாஹ் வானத்தில் அர்ஷிற்கும் அனைத்து படைப்பினங்களுக்கு அப்பால் உள்ளான். அல்லாஹ் கூறுகிறான் : ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான். (தாஹா : 5).
மேலும் அல்லாஹ் கூறினான்: அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான். (அல் அன்ஆம் : 18).
கேள்வி 6 : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவார்கள் என்று சாட்சி கூறுவதன் கருத்து யாது?
பதில் : அதன் கருத்தாவது, அல்லாஹ் அவர்களை உலகத்தாருக்கு நன்மாராயம் கூறக்கூடியவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும் அனுப்பியுள்ளான் என்பதாகும்.
பின்வருவன அதில் கடமையாகும் :
1-அவர்களின் (நபியவர்களின்) கட்டளைகளை ஏற்று நடத்தல்.
2-அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துதல்.
3-அவர்களுக்கு மறுசெய்யாது இருத்தல்.
4-அவர்கள் மார்க்கமாக குறிப்பிட்டவற்றை கொண்டு மாத்திரமே அல்லாஹ்வை தூய்மையாக வணங்குதல். அதாவது அவர்களின் ஸுன்னாவை (வழிமுறையை) பின்பற்றி (பித்ஆவை) புதிதாக மார்க்கம் என்றபெயரில் உருவாக்கப்பட்டவற்றை விட்டும் விலகி நடத்தல்.
அல்லாஹ் கூறுகிறான் : எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். (அந்நிஸா : 80)
மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன மனோ இச்சைப்படி பேச மாட்டார். இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. 4﴾ (அந்நஜ்ம் : 3-4)
மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : உங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உண்டு. تقدم
கேள்வி 7 : அல்லாஹுதஆலா எம்மை எதற்காகப் படைத்துள்ளான்?
பதில் : இணையில்லாத அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிப்படுவதற்கே எம்மைப் படைத்தான். அவன் எம்மை வீணாகவோ, வேடிக்கை மற்றும் விளையாட்டுக்காகவோ படைக்கவில்லை; அல்லது எம்மை எவ்விதப் பொறுப்புமின்றி வீணாக விட்டுவிடுவதற்காகவும் அல்ல.
அல்லாஹ் கூறுகிறான் : ஜின்களையும் மனிதர்களையும் -என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அத்தாரியாத் :56)
கேள்வி 8 : இபாதத் (வணக்க வழிபாடு) என்றால் என்ன?
பதில் : இபாதத் (வணக்க வழிபாடு) என்பது வெளிப்படையான, மறைவான வார்த்தைகள் மற்றும் செயல்களில் அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமான ஒரு பொதுவான பெயராகும். (அதாவது இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமையும் மனிதனின் சொல், செயல் அனைத்தும் இறைவழிபாடேயாகும்.)
வெளிப்படையான இபாத்திற்கு, அல்லாஹ்வை நாவால் துதிசெய்தல், புகழ்தல், பெருமைப்படுத்தல், தொழுதல், ஹஜ் செய்தல் போன்றவை உதாரணங்களாகும்.
மறைவான இபாதத்திற்கு அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுதல், அவனைப் பயப்படுதல், அவனிடமே எதிர்பார்த்து ஆதரவு வைத்தல் போன்றவை உதாரணங்களாகும்.
கேள்வி 9 : எம்மீதான மிகப் பெரும் கடமை யாது?
பதில் : எம்மீதுள்ள மிகப்பெரும் கடமை தவ்ஹீத் ஆகும். அதாவது அல்லாஹ்வை -ஒருமைப்படுத்துவதாகும்- ஒருவன் என ஏற்று வாழ்வதாகும்.
அல்லாஹ் கூறினான் : வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்கவே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள் (அல் பய்யினா :5)
கேள்வி 10 : தவ்ஹீதின் வகைகள் என்ன ?
பதில்: தவ்ஹீத் மூன்று வகைப்படும் அவையான : 1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: அல்லாஹ்வே அனைத்தையும் படைத்து, வாழ்வாதாரமளித்து, சொந்தமாக்கி, வழிநடாத்துபவன் என்பதையும், அவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதையும் விசுவாசம் கொள்வதாகும்.
2-தவ்ஹீதுல் உலூஹிய்யா : வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அவனைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு எவரும் கிடையாது.
3- தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிஃபாத்: இது அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் உதாரணம் கூறாமலும், உவமைப்படுத்தாமலும், மறுக்காமலும், அமைப்பைக் கூறாமலும் ஈமான் கொள்வதாகும்.
தவ்ஹீதின் மூன்று வகைகளுக்குமான ஆதாரம் : அல்லாஹ் கூறுகிறான் (அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா! (மர்யம் : 65).
கேள்வி 11 : மிகப்பெரிய பாவம் எது?
பதில் - தூயோனாகிய அல்லாஹ்விற்கு இணைவைப்பது ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அதைத் தவிர மற்றதை அவன், தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணையை ஏற்படுத்துவாரோ அவர் திட்டமாக (அல்லாஹ்வின் மீது) பெரும் பாவத்தை இட்டுக் கட்டிவிட்டார். ( அந்நிஸா : 48)
கேள்வி 12 : ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
பதில் : ஷிர்க்: அல்லாஹ்வின் வணக்கத்தில், ருபூபிய்யத்தில் (படைத்தல், பரிபாலித்தல், நிர்வகித்தல்) அல்லது அவனது அழகிய திருநாமங்களிலும் உயரிய பண்புகளிலும், அவனுக்கு இணை அல்லது நிகரானவரை ஏற்படுத்துவதே ஷிர்க் ஆகும்
வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு திருப்புவதும் இணைகற்பித்தலாகும்.
ஷிர்கின் (இணைவைத்தலின்) வகைகள் :
- பெரியவகை இணைவைப்பு : பெரியவகை இணைவைப்புக்கு உதாரணம் அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்த்தித்தல், அல்லாஹ் அல்லாதவருக்கு ஸுஜூது செய்தல் மற்றும் அறுத்துப் பலியிடுதல் போன்றவைகளாகும்.
- சிறிய இணைவைப்பு : இது மார்க்கத்தை விட்டு வெளியேற்றாததாகும். இதற்கு உதாரணம் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்தலும், அல்லது ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொள்ள அல்லது ஒரு தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெற நாடி தாயத்துக் கட்டிக்கொள்வதும், சாதாரண முகஸ்துதியும் ஆகும். முகஸ்துதிக்கான உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்கிறார்கள் என்பதற்காக தொழுகையை அழகாக தொழுவதைக் குறிப்பிடலாம்.
கேள்வி 13 : உயர்தோனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது மறைவான விடயங்களை அறிவார்களா?
பதில் : இல்லை அல்லாஹ் மாத்திரமே மறைவானவற்றை அறிகிறான்
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.” (அந் நம்லு : 65).
கேள்வி 14: ஈமானின் அடிப்படைகள் யாவை?
பதில் : ஈமானின் அடிப்படைகள் ஆறு :
1. அல்லாஹ்வை ஈமான் கொள்ளல்.
2-மலக்குமார்களை நம்புதல்.
3-வேதங்களை நம்புதல்.
4-நபிமார்களை –தீர்கதரிசிகளை- நம்புதல்.
5- மறுமை நாளை நம்புதல்.
6-நன்மை தீமை இறைவிதியின் படியே நிகழும் என்பதை நம்புதல்.
இதற்கான ஆதாரமாக முஸ்லிமில் இடம்பெற்றுள்ள பிரபல்யமான ஜிப்ரீல் (அலை) அவர்களின் ஹதீஸ் உள்ளது. அதில் ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடம், "ஈமான் பற்றி அறிவித்துத் தாருங்கள் என கேட்டதற்கு, நபியவர்கள் நீங்கள் அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும் அவனின் வேதங்களையும் அவனின் தூதர்களையும் நம்பவேண்டும் மேலும் நன்மை தீமை இறைவிதியின் படியே நிகழும் என்பதையும் நம்ப வேண்டும்" எனக் கூறினார்கள்.
கேள்வி 15: ஈமானின் அடிப்படைகள் என்பதன் பொருள் என்ன?
பதில் : அல்லாஹ்வை நம்புதல். அது பின்வரும் விடயங்களை உள்ளடக்குகிறது : - அல்லாஹ் மாத்திரமே உன்னை படைத்து, உனக்கான வாழ்வாதாரத்தை தருபவன் என்பதையும், அவன் ஒருவன் மாத்திரமே படைப்பினங்களின் உரிமையாளன்; என்றும் அவைகளின் விவகாரங்களை திட்டமிடுபவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும். மேலும் அவன்தான் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன். அவனைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு யாருமில்லை. படைத்தல், ஆணையிடுதல், தீர்ப்பளித்தல் மற்றும் சட்டமியற்றுதல் போன்றன அவனுக்கே உரியன. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
அல்லாஹ் மகத்தானவன் பெரியவன், பரிபூரணமானவன் புகழனைத்தும் அவனுக்குரியவை என்றும், அவனுக்கு அழகிய திருநாமங்களும் உயர் பண்புகளும் உள்ளன என்றும், அவற்றில் அவனுக்கு நிகரான அவனுக்கு ஒப்பான எதுவும் கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
2- மலக்குகளை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) : மலக்குகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவர்களை அவன் ஒளியினால் படைத்தான். அவர்கள் அவனை வணங்கி வழிபடவும் அவனின் கட்டளைக்கு முற்றாக அடிபணிந்து நடக்கவுமே படைக்கப்பட்டுள்ளனர்.
அல்லாஹ் கூறுகிறான் : மாறாக, அவர்கள் அவனுடைய கண்ணியமான அடியார்கள் ஆவார்கள். அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். (எதிர்த்து பேச மாட்டார்கள்.) இன்னும், அவர்கள் அவனுடைய கட்டளையின்படியே செய்கிறார்கள். (அன்பியாஃ : 35).
மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் "வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர்."
அவர்களுள் ஜிப்ரீல் (அலை) பிரதானமானவர். அவரே வஹியெனும் இறைச்செய்தியை அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கு கொண்டுவருபவர். அல்லாஹ் கூறினான் : இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட வேதமாகும். நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார். நீர் (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதற்காக .உமது உள்ளத்தில் தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது), (அஷ்ஷுஅராஃ : 192- 195).
3- வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) : அல்லாஹ் தனது தூதர்களுக்கு இறக்கி அருளிய இறைச்செய்தி அடங்கிய நூல்களே வேதங்களாகும். அந்த வகையில்,
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல் குர் ஆன்,
நபி ஈஸா (அலை) மீது அருளப்பட்ட இன்ஜீல் வேதம்,
நபி மூஸா (அலை) மீது அருளப்பட்ட தவ்ராத் வேதம்,
நபி தாவூத் (அலை) மீது அருளப்பட்ட ஸபூர் வேதம்,
- இப்ராஹீம் மற்றும் மூஸா அலைஹிமஸ்ஸலாம் இருவருக்கும் வழங்கப்பட்ட ஏடுகள் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
4- இறைத்தூதர்களை நம்புதல் : இறைத்தூதர்கள் என்போர் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கற்றுகொடுப்பதற்காகவும், அவர்களுக்கு நன்மை மற்றும் சுவர்க்கம் குறித்து நன்மாராயம் கூறவும், தீமை மற்றும் நரகம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் அவனின் புறத்திலிருந்து அனுப்பிய உத்தம மனிதர்களைக் குறிக்கும்,
அவர்களுள் மிகவும் சிறப்புக்குரியோர் (உலுல் அஸ்ம்) திட உறுதிபூண்டோர் என்போர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :
நூஹ் அலைஹிஸ்ஸலாம்,
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,
மூஸா அலைஹிஸ்ஸலாம்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம்,
- முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
5- இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் (மறுமை நாளை நம்புதல்) : அதாவது மரணத்தின் பின்னுள்ள மண்ணறை வாழ்வு, மற்றும் மறுமை நாள், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபட்டு விசாரணை செய்யப்படும் நாள் போன்றவற்றை இது குறிக்கும். அந்நாளில் சுவர்க்கவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நரகவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நிரந்தரமாக தங்கிவிடுவர் என்பதை நம்புவதாகும்.
அல்லாஹ் கூறினான் : ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (ஆல இம்ரான் : 185).
6- நன்மை, தீமை இறைவிதியின் படியே நடக்கும் என்பதை ஈமான் கொள்ளுதல் :
விதி என்பது இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்தையும் முழுமையாக அல்லாஹ் நன்கறிவான் என்றும், பிரபஞ்ச நிகழ்வுகள் குறித்து லவ்ஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் பதிந்து வைத்துள்ளான் என்றும், அவன் இவ்வாறான ஒழுங்கு இருக்க வேண்டுமென நாடி அதனை உருவாக்கினான் என்றும் நம்புவதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம். (அல்கமர் : 17)
கழாகத்ர் எனும் நம்பிக்கையானது நான்கு படித்தரங்களை கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு :
முதலாவது : அல்லாஹ்வின் அறிவுபற்றியதாகும். அவற்றில் இப்பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகள் அதாவது அவை நிகழ்வதற்கு முன்னும் நிகழ்ந்த பின்னரும் அது குறித்த அவனின் முன்னறிவை குறிப்பிடலாம்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மறுமையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்ற) அறிவு இருக்கிறது. அவன்தான் மழையை இறக்குகிறான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகிறான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். (லுக்மான் : 34).
இரண்டாவது : இவற்றை அல்லாஹ் லவ்ஹுல் மஹ்பூலில் ஆரம்பத்தில் எழுதி விட்டான். அதாவது நடந்தவை நடக்கவிருப்பவை யாவும் அதில் எழுதப்பட்டுவிட்டன.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும், தரையிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிந்திருக்கின்றான். மரத்திலிருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையையும் அவன் அறியாமல் இல்லை. பசுமையான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிக்கப்பட்டிருக்கின்றன. (அல் அன்ஆம் : 59).
மூன்றாவது : எல்லா விடயங்களும் அவனின் நாட்டபடியே நிகழும். அவனிடமிருந்தும் படைப்பினங்களிடமிருந்தும் நிகழ்பவை யாவும் அவனின் நாட்டப்படியே நிகழ்கிறது. அடியானுக்கு தெரிவு உண்டு, அவனுக்கு நாட்டமும் உண்டு, விருப்பமும் உண்டு, ஆனால் இந்த நாட்டமும் இந்த விருப்பமும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் விருப்பத்திற்குப் பின்னரேயன்றி நிகழாது.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : உங்களில் (நேர் வழியில்) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்.) அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள். 29 (தக்வீர் : 28-29).
நான்காவது : அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ்வே படைத்தான் என்றும் அவற்றை அவன் படைக்கும் போது அவற்றின் தனித்தன்மைகளையும் குணங்களையும் அங்க அசைவுகளையும், அவற்றின் அனைத்து விடயங்ளையும் அவனே படைத்தான் என்பதையும் உறுதியாக நம்புதல் (ஈமான் கொள்ளுதல்).
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான். (அஸ்ஸாப்பாத் : 96).
கேள்வி 16 : அல்குர்ஆனின் வரைவிலக்கணம் யாது?
பதில் - அல்குர்ஆன் என்பது உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் பேச்சாகும் -வார்த்தையாகும்-, அது படைக்கப்பட்டதல்ல.
அல்லாஹ் கூறுகிறான் : "இணைவைப்பாளர்களில் எவராவது ஒருவர் உன்னிடம் புகழிடம் கோரினால் அவர் அல்லாஹ்வின் வார்த்தையை செவியேற்கும் வரையில் அவருக்கு புகழிடம் வழங்குங்கள்". تقدم
ஹதீஸில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: «படைப்பினங்களை விட அல்லாஹ்வுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றே ஏனைய வார்த்தைகளை விட அல்லாஹ்வின் வார்த்தைக்கு இருக்கும் சிறப்புமாகும்.»
கேள்வி 17 : அஸ்ஸுன்னா என்றால் என்ன?
பதில் : அஸ்ஸுன்னா என்பது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் அவர்களது குணாதிசயமும் உடல் கட்டமைப்பும் தொடர்பான விடயங்களுமாகும்.
கேள்வி 18 : பித்அத் என்றால் என்ன? அதனை நாம் ஏற்கலாமா?
பதில் : பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் காலத்தில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் மனிதர்கள் புதிதாக தோற்றுவித்த அனைத்தையும் குறிக்கும்.
நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளாது புறக்கணிப்பது கடமையாகும்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் : "(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்படும் எல்லா பித்அத்துக்களும் (நூதன அனுஷ்டானங்களும்) வழிகேடாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : எமது கட்டளைக்கு உட்படாத ஒரு செயலை யார் செய்கின்றாரோ, அது தட்டப்படும்.
இதற்கான உதாரணங்களாக வணக்கத்தில் குறிப்பிடப்பட்ட வற்றிற்கு மேலதிகமாக செய்தலை குறிப்பிடலாம். அதாவது வுழு செய்கின்ற போன்று நாளாவது முறை உறுப்புகளை கழுவுதல், அதே போன்று நபியவர்களின் பிறந்த தின விழாக் கொண்டாடுதல், இவற்றிற்கான வழிகாட்டல்கள் நபியவர்களிடமிருந்தோ அல்லது அவர்களது தோழர்களிடமிருந்தோ கிடைக்கவில்லை.
கேள்வி 19 : அல்வலாஉ (நேசம் வைத்தல்) வல்பராஉ (நீங்கிக்கொள்ளல்-விலகி நடத்தல்-) கோட்பாடு என்றால் என்ன?
பதில் : அல்வலாஉ (நேசம் வைத்தல்) என்பது முஃமின்களை -இறைவிசுவாசிகளை- நேசித்து அவர்களுக்கு உதவிபுரிதல் ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் : "நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர்". (அத்தௌபா : 71).
'அல்பராஉ' : என்பது (உபதேசம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதன் மூலம் நேர்வழியை தெளிவுபடுத்தியதன் பின்) இறை நிராகரிப்பாளர்களை அல்லாஹ்வுக்காக வெறுத்து தூரமாக விலகிக் கொள்ளலை குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் : இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கிற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கிற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” (அல்மும்தஹினா : 4).
கேள்வி 20 : இஸ்லாம் தவிர வேறு மார்க்கத்தை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா?
பதில் : இஸ்லாம் அல்லாத எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்
அல்லாஹ் கூறுகிறான் : இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார். (ஆல இம்ரான் : 85).
கேள்வி 21 : இறை நிராகரிப்பு (குப்ர்) சொல், செயல், நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நிகழும். உதாரணம் தருக?
பதில்: சொல் ரீதியான (குப்ர்) இறை நிராகரிப்பிற்கு உதாரணம், அல்லாஹ்வை அல்லது அவனின் தூதரை நிந்தித்தல் மற்றும் திட்டுதல்.
செயல் சார்ந்த (குப்ருக்கு) இறை நிராகரிப்பிற்கான உதாரணம் அல்குர்ஆனை அவமதித்தல் அல்லது அல்லாஹ்வைத் தவிர்த்து பிறருக்கு ஸுஜுது செய்தல் (வணக்கம் செலுத்துதல்).
நம்பிக்கை சார் (குப்ருக்கான) இறை நிராகரிப்பிற்கான உதாரணம், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானோர் உள்ளனர் அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக வேறு படைப்பாளன் உள்ளான் என நம்புதல்.
கோள்வி 22 : நிபாக் (நயவஞ்சகம்) என்றால் என்ன? அதன் வகைகள் யாது?
பதில்: 1. அந்நிபாகுல் அக்பர் (பெரிய நயவஞ்சகத்தனம்) என்பது உள்ளத்தில் (குப்ரை) இறைநிராகாரிப்பை மறைத்து வெளிப்படையில் இறைவிசுவாசத்தை வெளிக்காட்டுவதாகும்.
இவ்வகை (குப்ர்) நிராகரிப்பு இஸ்லாத்ததை விட்டும் முழுமையாக ஒரு மனிதனை வெளியேற்றிவிடுகிறது. இது பெரியவகை இறைநிராகரிப்பில் (அல்குப்ருல் அக்பர்) உள்ள ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். (நபியே!) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (அந்நிஸா : 145).
2- அந்நிபாகுல் அஸ்கர் : சிறிய நிபாக் இதற்கு உதாரணமாக பொய் கூறுதல், வாக்கிற்கு மாறு செய்தல் அமானித மோசடி (நம்பிக்கைத் துரோகம்) ஆகியவற்றைக் கூறலாம்.
இவ்வகை நிபாகானது இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடாது. இது பாவமாக கருதப்படும், இச்செயலை செய்வோர் தண்டனைக்கு உட்படுவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நயவஞ்கனின் அடையாளம் மூன்று : பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பினால் துரோகம் இழைப்பான்'.
கேள்வி 23 : நபிமார்களில் இறைதூதர்களில் இறுதியானவர் யார்?
பதில்: முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
அல்லாஹ் கூறுகிறான் : முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். (அல் அஹ்ஸாப் : 40)
நபி (ஸல்) கூறுகிறார்கள் : 'நான் நபிமார்களின் (முத்திரையாக) இறுதியானவராக உள்ளேன், எனக்குப்பிறகு எந்த நபியும் கிடையாது'.
கேள்வி 24 : முஃஜிஸா (அற்புதம்) என்றால் என்ன?
பதில் : முஃஜிஸா என்பது அல்லாஹ் நபிமார்களுக்கு தங்களின் உண்மைநிலையை உறுதிப்படுத்துவதற்காக வழங்கிய வழமைக்கு மாறான விடயங்கள் அனைத்தையும் குறிக்கும். இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும் :
நபி (ஸல்) அவர்களுக்காக சந்திரன் பிளந்தமை, அல்லாஹ் கூறினான் : மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. அவர்கள் ஓர் அத்தாட்சியைப் கண்டாலும் அதனைப் புறக்கணித்து இது தொடராக (வழமையாக) நிகழும் சூனியமே ! என்று கூறுகின்றனர். மேலும் அவர்கள் பொய்ப்பித்து தமது மனோ இச்சைகளைப்பின்பற்றுகின்றனர்.ஒவ்வொரு காரியமும் (அதற்குரிய நேரத்தில் ) நடைபெறக்கூடியதாகும். (அல்கமர் : 17)
மூஸா (அலை) அவர்களுக்கு கடல் பிளந்தமை, பிர்அவ்னும் அவனின் படையினரும் மூழ்கடிக்கப்பட்டமை. அல்லாஹ் கூறினான் : இன்னும், உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, உங்களைக் காப்பாற்றினோம். இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். (பகரா : 153).
கேள்வி 25 : ஸஹாபாக்கள் (நபித்தோழர்) என்போர் யார்? நாம் அவர்களை நேசிப்பது அவசியமா?
பதில் : நபி (ஸல்) அவர்களை ஈமான் கொண்ட நிலையில் சந்தித்து, புனித இஸ்லாத்தில் மரணித்தவரே ஸஹாபியாவார்.
நாம் அவர்களை நேசிக்க வேண்டும், அவர்களை பின்பற்றி நடக்க வேண்டும். அவர்கள்தான் நபிமார்களுக்குப் பிறகு மனிதர்களில் மிகவும் சிறப்புக்குரியோர் ஆவார்கள்.
அவர்களில் மிகவும் சிறந்தோர் நான்கு கலீபாக்களாவார்கள்:
அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு,
உமர் ரலியல்லாஹு அன்ஹு,
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு,
அலி ரழியல்லாஹு அன்ஹு ஆகியோராவர்.
நபித்தோழர்கள் அனைவரையும் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக்கொண்டோரையும்,அவர்களை நல்ல முறையில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் அவர்களுகம் அவனை பொருந்திக்கொண்டனர் அவன் அவர்களுக்கு சுவனச் சோலையை தயார்செய்து வைத்துள்ளான்.அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.. அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.(தவ்பா 100) பாவமீட்சி
கேள்வி 26 : உம்மஹாதுல் முஃமினீன் (இறைவிசுவாசிகளின் தாய்மார்கள்) என்போர் யார் ?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் ஆவர்.
அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பிக்கையாளர்களுக்கு தமது உயிர்களைவிட நபியே மிக்க மேலானவராவார். அவரது மனைவியர் அவர்களின் தாய்மார்களாவர்". (அல் அஹ்ஸாப் : 6).
கேள்வி 27 : நபியவர்களின் குடும்பத்தினருக்கு எம்மீதுள்ள கடமை என்ன?
பதில் : நாம் அவர்களை நேசிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களை யார் வெறுக்கிறார்களோ அவர்களை வெறுத்து நடக்க வேண்டும்; அவர்களை நேசிக்கும் விடயத்தில் எல்லை மீறாது நடந்து கொள்ள வேண்டும். நபியவர்களின் குடும்பத்தில் அவர்களின் மனைவியர், சந்ததிகள், பனூஹாஷிம் குடும்பத்தினர் பனுல்முத்தலிப் குடும்பத்தினரில் உள்ள இறைவிசுவாசிகள் அடங்குவர்.
அல்லாஹ் கூறினான் : அஹ்லுல் பைத் எனும் (நபியுடைய குடும்பத்தாராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ்'விருமபுகிறான். (அல்அஹ்ஸாப் : 33).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்."
கேள்வி 28 : முஸ்லிம் ஆட்சியாளர்களின் பால் எம்மீதுள்ள கடமை –பொறுப்பு- என்ன?
பதில்: அவர்களை மதித்து நடந்து கொள்வதும், பாவகாரியமல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பதும், அவர்களுக்காக பிரார்த்தனை புரிவதும், அவர்கள் நலன் நாடி இரகசியமாக அறிவுரை கூறுவதும், பகிரங்கமான இறைமறுப்பை (குஃப்ரை) நாம் கண்டாலே தவிர அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யாதிருப்பதும் எம்மீதுள்ள கடமையாகும்.
அல்லாஹ் கூறினான் : விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படியுங்கள், ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள், (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அந்நிஸா : 59).
கேள்வி 29 : (முஃமின்களின்) இறைவிசுவாசிகளின் வீடு தங்குமிடம் எது?
பதில் : இறைவிசுவாசிகளின் வீடு சுவர்க்கமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : "நிச்சயமாக அல்லாஹ் ஈமான் (நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான நல்லறங்கள் புரிவோரை சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்". (முஹம்மத் : 12).
கேள்வி 30 : காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்களின்) வீடு தங்குமிடம் எது?
பதில் :காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்களின்) வீடு தங்குமிடம் நரகமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : நரக நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்பகரா : 24).
கேள்வி 31: (அல் கவ்ப்) பயம் என்றால் என்ன? ஆதரவு வைப்பது என்பது யாது? அவற்றிற்கான ஆதாரங்களைக் குறிப்பிடுக.
பதில் : பயம் என்பது அல்லாஹ்வையும் அவனது தண்டனையும் பயப்படுவதைக் குறிக்கும்.
(அர்ரஜாஉ) ஆதரவு வைப்பது என்பது அல்லாஹ்வின் வெகுமதியையும் மன்னிப்பையும் மற்றும் கருணையையும் ஆசைப்படுவதைக் குறிக்கும்.
இதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் : யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களில் (அல்லாஹ்வுக்கு) மிக நெருக்கமானவர்களும் தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர்.அவனது அருளை ஆதரவு வைக்கின்றன்றனர்.மேலும் அவனது தண்டனையை அஞ்சுகின்றனர்.நிச்சயமாக உமது இரட்சகனின் தண்டனை அஞ்சப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. (இஸ்ராஃ : 57).
மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் : "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனும் நிகரற்ற அன்புடையோனுமாவேன், மேலும் எனது தண்டனை நோவினை தரக்கூடிய தண்டனையாகும் என்று எனது அடியார்களுக்கு நபியே நீர் அறிவிப்பீராக!". (அல்ஹிஜ்ர் : 49-50)
கேள்வி :32 : அல்லாஹ்வின் சில பெயர்களையும் பண்புகளையும் குறிப்பிடுக.
பதில் : அல்லாஹ், அர்ரப்பு (இரட்சகன்), அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அஸ்ஸமீஉ (யாவற்றையும் செவியுறுபவன்), அல்பஸீரு (யாவற்றையும் பார்ப்பவன்), அல் அலீம் (யாவற்றையும் நன்கறிபவன்), அர்ரஸ்ஸாக் (யாவற்றுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன்), அல் ஹய்யு (நித்திய ஜீவன்), அல் அழீம் (மகத்தானவன்), அல் ஹகீம் (ஞானமிக்கவன்), போன்ற திருநாமங்களும் உயர் பண்புகளும் அல்லாஹ்வுக்கு உண்டு.
கேள்வி 33: மேலே குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர்களை விவரிக்குக.
பதில் : அல்லாஹ் என்பதன் அர்த்தம் உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் என்பதாகும். அவன் தனித்தவன் அவனுக்கு இணையாளன் எவரும் கிடையாது.
அர்ரப்பு : (இரட்சகன்) என்பது படைத்து ஆட்சி செய்பவன், வாழ்வாதரத்தை வழங்கி, திட்டமிட்டு நிர்வகிக்கும் ஒருவன் என்பதைக் குறிக்கும்.
அஸ்ஸமீஉ : (நன்கு செவியுறுபவன்) அதாவது எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் செவியேற்கும் ஆற்றல் விரிந்து காணப்படுகிறது. ஆகையால் அவன் பல்வகையான வேறுபட்ட வித்தியாசமான அனைத்து சப்தங்களையும், ஓசைகளையும் கேட்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
அல்பஸீரு : (நன்கு பார்ப்பவன்) அதாவது, எல்லா விடயங்களையும் பார்ப்பவன். சிறிய பெரிய அனைத்து விடயங்களையும் நன்கு பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
அல் அலீம் : (நன்கறிபவன்) என்பது, அல்லாஹ் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் பற்றிய அனைத்தையும் முழுமையாக அறிந்தவன் என்பது பொருளாகும்.
அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்பது, அவனின் அருளானது -கருணை- அனைத்து படைப்பினங்கள் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளது –ஆகவே எல்லா அடியார்களும் படைப்பினங்களும் அவனின் அருளின் -கருணையின்- கீழ்தான் உள்ளனர்.
அர்ரஸ்ஸாக் (வாழ்வாதாரத்தை வழங்குபவன்) : அதாவது அவனது படைப்புகளான மனித இனம், ஜின் இனம் மிருகங்கள் போன்ற எல்லாப் படைப்புகளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் என்பது பொருளாகும்.
- அல் ஹய்யு (நித்திய ஜீவன்) என்பது : அனைத்துப் படைப்பினங்களும் மரணித்துவிடும் நிலையில் மரணிக்காது உயிர் வாழ்பவன்.
அல் அழீம் (மகத்தானவன்): பெயர்கள், பண்புகள், செயல்கள் ஆகிய அனைத்திலும் மகத்துவமும் பரீபூரண நிலையும் அவனுக்கு –அல்லாஹ்விற்கு- மாத்திரமே உரியது.
- அல்-ஹகீம்: என்பது தனது படைப்புகளை மிகத் துல்லியமாகவும், முழுமையாகவும், அழகுறவும் படைத்தவன். மேலும், அவனுடைய படைப்பிலும் கட்டளைகளிலும் பரிபூரணமான ஞானம் (ஹிக்மத்) நிறைந்துள்ளது. அது குறித்து அவனே மிகவும் அறிந்தவன் .
- அல்ஹிக்மா - (ஆழ்ந்த ஞானம்): என்பது விடயங்களை உரிய இடத்தில் அதற்குரிய தகுதி மற்றும் அந்தஸ்த்தில் வைப்பதாகும்.
கேள்வி 34 : முஸ்லிம் அறிஞர்களின் பால் எம்மீதுள்ள கடமை –பொறுப்பு- என்ன?
பதில் : நாம் அவர்களை நேசிக்க வேண்டும், அத்துடன் சட்டப் பிரச்சினைகள் மற்றும் புதிதாக தோன்றும் (இடர்கால) பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடம் சென்று உரிய மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் குறித்து நல்லதையே பேச வேண்டும். அவர்கள் பற்றி யார் மோசமாக பேசுகிறாரோ அவர்கள் நல்லோர் பாதையில் செல்வோர் அல்லர்.
அல்லாஹ் கூறுகின்றான் : உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு அறிவும் வழங்கப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்த்துக்களை உயர்த்துவான். மேலும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல் முஜாதலா: 11).
கேள்வி 35 : அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் யார்?
பதில் : அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னாவைப் பின்பற்றும், அல்லாஹ்வை பயந்து நடக்கும் இறையச்சமுள்ள முஃமின்கள் ஆவர். அல்லாஹ் கூறுகிறான் : "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடப்போராக இருப்பார்கள்". (யூனுஸ் : 62-63).
ஈமான் (இறைவிசுவாசம்) என்பது, சொல் செயல் விடயங்களை உள்ளடக்கியுள்ளதா?
ஆம், ஈமான் (இறைவிசுவாசம்) என்பது சொல், செயல் மற்றும் நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
- அது நாவால் மொழிந்து, உள்ளத்தால் - அதாவது இதயத்தால் - நம்பி, உடல் உறுப்புக்களால் செயலாற்றுவதாகும்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்.* வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.
கேள்வி 37 : ஈமான், அதிகரித்தல் குறைந்துவிடுதல் என்ற நிலையை கொண்டுள்ளதா?
பதில் : ஆம், ஈமான் வணக்கத்தின் மூலம் அதிகரிக்கிறது பாவத்தின் மூலம் குறைந்து விடுகிறது.
அல்லாஹ் கூறுகின்றான் : நம்பிக்கையாளர்கள் யாரெனில் அல்லாஹ்வைப் பற்றி ஞாபகமூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கும்.அவனது வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் மேலும் அவர்கள் தமது இரட்சகன் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள். (அல் அன்பால் :2)
கேள்வி 38: இஹ்ஸான் என்றால் என்ன?
பதில் : இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான்.
கேள்வி 39 : செயல்கள் எப்போது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதாக மாறுகிறது?
பதில் : நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகளும் அவசியமாகும்:
1- அல்லாஹ்வின் திருமுகம் நாடி தூய்மையான முறையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
2. நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
கேள்வி 40 : அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல் (அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிடுதல்) என்றால் என்ன?
பதில் : காரணகாரியங்களை மேற்கொண்டு நன்மையை அடைந்து கொள்ளவதிலும் தீங்கிலிருந்து தடுத்துக்கொள்வதிலும் அல்லாஹ்வின் மீது முழுமையாக சார்ந்து இருப்பதையே 'தவக்குல்' என்று கூறப்படும்.
அல்லாஹ் கூறுகிறான் : எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். (அத்தலாக் : 3).
(ஹஸ்புஹு) என்றால் போதுமானவன் என்பது பொருளாகும்.
கேள்வி 41 : 'அல் அம்ரு பில் மஃரூப் வன்னஹ்யு அனில் முன்கர்' (நன்மையை ஏவி தீமையை தடுத்தல்) என்றால் என்ன?
பதில் : 'அல் மஃரூப்'; என்பது அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு கீழ்பணிந்து நடக்கக் கூடிய அனைத்து நன்மையான காரியங்களையும் ஏவுதல் என்பது பொருளாகும், 'அல் முன்கர்' என்பது அல்லாஹ்வுக்கு முரணான பாவகாரியங்கள் அனைத்தை விட்டும் தடுப்பதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "மனிதர்களுக்காக தோற்றுவிக்க்கப்பட்ட சிறந்த சமூகமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஆல இம்ரான் : 85).
கேள்வி 42 : அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ என்போர் யார்?
பதில்: சொல், செயல் மற்றும் நம்பிக்கை சார் விடயங்களில் நபியவர்களும், அவர்களின் தோழர்களும் எந்நிலைப்பாட்டை கொண்டிருந்தார்களோ அதே நிலைப்பாட்டை கொண்டோரே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ என்போர் ஆவர்.
- இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா என்ற சிறப்புப் பெயரால்; அழைக்கப்படுவது நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை பின்பற்றி பித்அத்தை விட்டு விட்டதினாலாகும்.
அல்ஜமாஆ என்பதன் மூலம் கருதப்படுவது, அவர்கள் சத்தியத்தில் ஒன்றுபட்டு அதில் தங்களுக்கு மத்தியில் பிரிந்து விடாதிருப்போர் என்பதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ((பனூ இஸ்ராயீல்கள் (72) எழுபத்திரண்டு கூட்டமாகப் பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் (73) எழுபத்தி மூன்று கூட்டமாகப் பிரிவர். இவற்றுள் ஒரேயொரு கூட்டத்தினர் தவிர மற்றையோர் அனைவரும் நரகிற்கு உரியவர்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டபோது, 'அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?' என நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது 'நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அந்த வழியில் இருப்பவர்கள்' என பதிலளித்தார்கள்))
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டக்) கலை:
ஃபிக்ஹ் (الفقه): என்பது நடைமுறை சார்ந்த ஷரீஅத் சட்டங்களைப் பற்றிய அறிவாகும். உதாரணமாக: தூய்மை (தஹாரத்), தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத் மற்றும் இதர நடைமுறை வணக்கங்கள் பற்றிய அறிவாகும்.
கேள்வி 1 : 'அத்தஹாரா' (சுத்தம்) என்பதை வரைவிலக்கணப்படுத்துக?
பதில் : 'அத்தஹாரா' என்பது தொடக்கை நீக்கி, அழுக்கை அகற்றுதல் என்பதாகும். அதாவது: தொழுகைக்குத் தடையாக இருப்பதை நீக்குவதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ""தொழுகையின் திறவுகோள் சுத்தமாகும்"."
அழுக்கை அகற்றி தூய்மைப்படுத்தல் என்பது ஒரு முஸ்லிம் தனது மேனியில் அல்லது ஆடையில் அல்லது தரையில் மற்றும் அவன்தொழுமிடத்தில் ஏற்பட்ட நஜிஸை –அழுக்கு அசுத்தம் போன்றவற்றை –அகற்றுவதாகும்.
தொடக்கிலிருந்து சுத்தமாகுதல் (தொடக்கை நீக்குதல்) என்பது பரிசுத்தமான நீரினால் வுழு செய்தல், மற்றும் குளித்தல். நீர் கிடைக்காவிட்டால் அல்லது நீரைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பின் தயம்மும் செய்வதன் மூலம் தொடக்கிலிருந்து விடுபடுவதைக் குறிக்கும் (தொடக்கு என்பது மனிதன் தனது உடலில் உணரக் கூடிய,உடலிருந்து வெளியாகக்கூடிய அசுத்தமானவைகளைக் குறிக்கும். இதிலிருந்து தூய்மை பெற குளித்தல் வுழு செய்தல் அல்லது தயம்மும் செய்தல் போன்ற விடயங்களை அசுத்தத்தின் நிலைக்கேற்ப மேற்கொள்ளுதல் வேண்டும்) (பெயர்பாளர்).
கேள்வி 2 : நஜிஸ் 'அழுக்கு' பட்ட இடத்தை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?
பதில் : அதனை சுத்தமாகும் வரை தண்ணீரால் கழுவவேண்டும். நாய் (வாய்விட்ட) நக்கிய பாத்திரங்களைப் பொருத்தவரை ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை கழுவும் போது மண்ணைப் பயன்படுத்தல் வேண்டும்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: «உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் (வாய்விட்டு) நக்கினால் அதனைச் சுத்தம் செய்ய ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை மண்ணைப் பயன்படுத்தல் வேண்டும்.»
கேள்வி : 3 : வுழுவின் சிறப்பு என்ன?
கேள்வி 4 : நீ எப்படி வுழு செய்கிறீர்? (நீ வுழு செய்யும் முறையை குறிப்பிடுக?)
பதில் : இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவ வேண்டும். மூன்று முறை வாய்கொப்பளித்தல், மூக்கினுள் நீர் செலுத்தி, சிந்தி விடுதல்.
வாய்க்கொப்பளித்தல் என்பது நீரை வாய்க்குள் செலுத்தி அதனை நன்கு அலசி வெளியேற்றல்,
இஷ்தின்ஷாக் என்பது வலது கையால் நீரை மூக்கினுள் செலுத்தி நன்கு உள்ளிழுப்பதைக் குறிக்கும்.
- அல் இஸ்தின்ஸார் என்பது மூக்கின் உள்ளே உற்செலுத்திய நீரை இடது கையால் வெளியேற்றுவதைக் குறிக்கும்.
பின்னர் முககத்தை மூன்று முறை கழுவுதல்.
பின்னர் இரு கைகளையும் இரு முழங்கை உட்பட மூன்று முறை கழுவுதல்
பிறகு உனது இரண்டு கைகளையும் முன் தலையிருந்து ஆரம்பித்து பிற்பகுதிவரை கொண்டு சென்று தலை முழுவதைiயும் மஸ்ஹு (நீரால் தடவுதல்) செய்வதோடு இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.
- பின்னர் கணுக்கால் உட்பட இரு கால்களையும் மூன்று முறை கழுவுதல்.
இதுதான் வுழு செய்வதன் முழுமையான முறையாகும். இது தொடர்பான ஹதீஸ்கள் புஹாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. அவைகளை உஸ்மான் (ரழி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) போன்றோரும் ஏனைய ஸஹாபாக்களும் அறிவித்துள்ளனர். மேலும் பின்வரும் செய்தி -நபி (ஸல்) அவர்களிடமிருந்து புஹாரி மற்றும் ஏனைய கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது: «நபி (ஸல்) வுழுவை ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் செய்வார்கள்» அதாவது நபி (ஸல்) வுழுவின் உறுப்புகளை ஒரு தடவை அல்லது இரு தடவைகள் கழுவுவார்கள் என்பதே இதன் கருத்தாகும்.
கேள்வி 5: வுழுவின் பர்ளுகள் என்றால் என்ன? அவற்றை சுருக்கமாக குறிப்பிடுக?
பதில் : வுழுவின் பர்ளுகள் என்பது : வுழுவின் போது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றை ஒரு முஸ்லிம் செய்யாது விட்டால் வுழு நிறைவேறாது என்றிருக்கும் காரியங்களைக் குறிக்கும். அவை பின்வருமாறு :
1- முகத்தைக் கழுவுவதில் வாய்கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்தல் போன்றவை அடங்கும்.
2- இரு கைகளையும் இரு முழங்கைகள் உட்படக் கழுவுதல்.
3- இரு காதுகள் உட்பட தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.
4- கரண்டை- கணுக்கால் - உட்பட இரு கால்களையும் கழுவுதல்.
5. உறுப்புகளை கழுவுவதில் ஒழுங்கை கடைப்பித்தல். அதாவது முகத்தைக் கழுவுதல், பின்னர் இரு கைகளையும் கழுவுதல், பின்னர் தலையை மஸ்ஹு செய்தல், பின்னர் இரு கால்களையும் கழுவுதல்.
அல்லாஹ் கூறினான் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள், இன்னும், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளினால்) தடவுங்கள். இன்னும் இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் கழுவுங்கள். (மாஇதா : 104)
6- தொடராகச் செய்தல், அதாவது வுழுவின்போது கழுவிய உறுப்பு காய முன் மற்றைய உறுப்பை கால இடை வெளியின்றி கழுவ வேண்டும். அதாவது வுழுவின் போது கழுவ வேண்டிய உறுப்புகளில் சிலதை ஒரு நேரத்திலும் எஞ்சியவற்றை இன்னொரு நேரத்திலும் கழுவுவதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அவ்வாறு செய்தால் ஒருவரின் வுழு நிறைவேறாது.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "ஒரு மனிதர் தொழுவதையும், அவரது பாதத்தின் மேற்பகுதியில் ஒரு திர்ஹம் அளவிலான ஒரு பகுதி நீர் படாமல் இருப்பதையும் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வுழூவையும் தொழுகையையும் மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்."
கேள்வி 6 : வுழுவின் ஸுன்னத்துக்கள் என்றால் என்ன? அவற்றை சுருக்கமாகக் குறிப்பிடுக?
பதில் : வுழூவின் ஸுன்னத்துகள் என்பது அவற்றை வுழூ செய்பவர் செய்தால் அதற்கு அதிக கூலியும் நன்மையும் கிடைக்கும். அவற்றை செய்யாது விட்டால் அவர் மீது எவ்விதக் குற்றமுமில்லை. அவரின் வுழூ நிறைவேறிவிடும்.
1- பிஸ்மில்லாஹ் கூறுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: ""(வுழு செய்யும் போது )அல்லாஹ்வின் பெயரைக் கூறாதவருக்கு வுழூ இல்லை"."
2. பல் துலக்குதல்.(மிஸ்வாக் செய்தல் ) பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "எனது சமூகத்திற்கு சிரமம் இல்லையெனில் ஒவ்வொரு வுழூவின் போதும் அவர்களுக்கு மிஸ்வாக் செய்யுமாறு ஏவியிருப்பேன்".
3- இருகைகளையும் மணிக்கட்டுவரை கழுவுதல்.
4- கை,கால் விரல்களை குடைந்து கழுவுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: «வுழூவை நிரப்பமாகச் செய்வீராக விரல்களுக்கு இடையில் (தண்ணீரைச் செலுத்தி) சுத்தம் செய்வீராக நீ நோன்பாளி அல்லாதவராக இருந்தால் நாசிக்கு நன்றாக நீர்செலுத்திக் கழுவுவீராக .
5- உறுப்புக்களை இரண்டு முறை அல்லது மூன்று முறை கழுவதல்.
6- வலது புறத்திலிருந்து ஆரம்பித்தல். உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்களுக்கு பாதணி அணிதல், தலைவாருதல், வுழூச் செய்தல் மற்றும் அனைத்து விடயங்களிலும் வலதை முற்படுத்துவது மிகவும் விருப்பத்திற்குரியதாகும்".
7-வுழு செய்த பின் பின்வரும் திக்ரை-துஆவை- ஓதுதல் : “அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன்; அவனுக்கு யாளனில்லை என்றும்;.மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனின் அடியாரும் துதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்.
8. வுழுவின் பின் இரண்டு ரக்அத்துக்களை தொழுதல் (வுழுவின் ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களை தொழுதல்) பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்
கேள்வி 7 : வுழூவை முறிக்கக் கூடியவை யாவை?
பதில் : 1- முன் பின் துவரத்தினால் சிறுநீர் அல்லது மலம் அல்லது காற்று வெளியாகுதல்.
2- (ஆழ்ந்த) தூக்கம் அல்லது பைத்தியம் அல்லது மயக்கம் ஏற்படுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: ""கண்கள் ஆசனவாயின் முடிச்சாகும். எனவே யாரேனும் தூங்கினால் அவர் வுழூ செய்யட்டும்.""
3- ஒட்டக இறைச்சி சாப்பிடுல். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) வுழூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள்.
4- முன் பின் துவாரங்களை கையால் திரையின்றி தொடுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "யாரேனும் தன் மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் வுழூ செய்யட்டும்".
கேள்வி 8 : தயம்மும் என்றால் என்ன?
பதில் : தயம்மும் என்பது நீர் இல்லாத போது அல்லது நீரைப்-பயன்படுத்துவது- உபயோகிப்பது சிரமமானது என்ற நிலையில் இருக்கும் போது மண்ணைப் பயண்படுத்துவதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறினான் : சுத்தம் செய்ய நீர் உங்களுக்கு கிடைக்காது விட்டால் சுத்தமான மண்ணை நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட கைகள் மூலம்) உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்கள் அனைத்தையும்) முற்றிலும் மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான். (அந்நிஸா : 43).
கேள்வி 9 : தயம்மும் செய்வதன் முறையைக் குறிப்பிடுக?
பதில்: இரு உள்ளங்கைகளையும் ஒரு தடவை மண்ணில் அழுத்தி, முகத்தையும் இரு முன்னங்கைகளையும் ஒரு முறை (மஸ்ஹு) தடவிக்கொள்வதாகும்.
நபி (ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறியதாவது : "« நீர் இவ்வாறு (தயம்மும்)செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும்» என்று கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது இரு கைகளையும் பூமியில் அடித்து, அதில் ஊதிவிட்டு, பின்னர் அவற்றால் தமது முகத்தையும், இரு கைகளையும் தடவிக் கொண்டார்கள்."
கேள்வி 10 : தயம்முமை முறிக்கும் காரியங்கள் எவை?
பதில் : 1- வுழுவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தயம்முமை முறிக்கும் காரியங்களாகும்.
2- அத்தோடு நீர் கிடைத்தாலும் தயம்மும் முறிந்து விடும்.
கேள்வி 11 : ஹுப், ஜவ்ரப் என்றால் என்ன ? வுழு செய்யும் பொழுது அவைகளின் மீது மஸ்ஹு செய்ய முடியுமா?
பதில் : - 'ஹுப்' என்பது: தோலினால் செய்யப்பட்ட பாதணிகளைக் குறிக்கும்.
- 'ஜவ்ரப்' என்பது காலில் அணிவதற்கு தோல் அல்லாதவற்றால் செய்யப்பட்ட காலுரையாகும்.
கால்களை கழுவுவதற்குப் பதிலாக இவ்விரண்டின் மீது மஸ்ஹு செய்வதை மார்க்கம் அனுமதித்துள்ளது.
இதற்கு - முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூ செய்தார்கள், மேலும் இரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்.
- மேலும் புஹாரி மற்றும் முஸ்லிமில்: அவர் வுழூச் செய்து, இரு காலுறைகள் மீதும் மஸ்ஹு செய்தார்.என இடம்பெற்றுள்ளது.
கேள்வி 12 : ஹுப்பின் மீது மஸ்ஹ் செய்வதனை மார்க்கம் அனுமதித்ததன் நோக்கம் யாது?
பதில் : குறிப்பாக மாரி, குளிர் காலங்களிலும் பயணத்தின் போதும் காலணிகள் காலுறைகள் போன்றவற்றை கலற்றுவது சிரமம் என்பதனால் இலகுபடுத்தி சிரமங்களை குறைப்பதுதான் ஹுப்பின் பிரதான நோக்கமாகும். அல்லாஹ் கூறினான் : "அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான் அவன் கஷ்டத்தை விரும்பவில்லை.." (பகரா : 153).
கேள்வி 13 : காலணிகள் மீது மஸ்ஹு செய்வதற்கான நிபந்தனைகள் யாது?
பதில் : 1- ஹுப்பை (காலணிகளை) வுழு செய்ததன் பின் அணிந்திருத்தல் வேண்டும்.
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:' «அதைவிட்டுவிடுங்கள்; (கால்கள் இரண்டும்) வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்». பின்னர் அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்.
2- ஹுப் (காலணி) தூய்மையானதாக இருத்தல் வேண்டும். அசுத்தமான பாதணி மீது மஸ்ஹு செய்வது அனுமதிக்கப் பட்டதல்ல.
3- ஹுப்பானது வுழுவின் போது காலில் கட்டாயம் கழுவப்பட வேண்டிய பகுதியை மறைத்து இருத்தல் வேண்டும்.
4- மஸ்ஹு செய்வது, அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் இருக்க வேண்டும். அதாவது ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாட்களுக்கும் ஆகும்.
அலீ ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் : "நபி (ஸல்) அவர்கள் பிரயாணிக்கு மூன்று நாட்களையும், ஊரிலிப்பவருக்கு ஒரு நாளையும் (பாதணியில் மஸ்ஹு செய்ய அனுமதிக்கப்பட்ட காலமாக) ஆக்கினார்கள்".
கேள்வி 14 : ஹுப்பின் மீது மஸ்ஹு செய்யும் முறை யாது?
பதில் : நனைந்த இரு கைவிரல்களையும் கால்விரல்களின் மீது வைத்து கெண்டைக்கால் வரை தடவுதல், மேலும் வலது காலை வலது கையினாலும் இடது காலை இடது கையினாலும் தடவுதல். மஸ்ஹு செய்யும் போது கை விரல்களை இடைவெளிவிட்டு அகற்றி வைப்பதுடன் பல தடவைகள் செய்வது அனுமதிக்கப்டட்டதல்ல.
கேள்வி 15 : ஹுப்பின் மீது மஸ்ஹ் செய்வதை முறிக்கும் காரியங்கள் எவை?
பதில் : 1- மஸ்ஹு செய்வதற்கான காலம் முடிவடைதல். இஸ்லாமிய ஷரீஆ வரையறுத்த மஸ்ஹுக்கான கால எல்லையான ஊர்வாசிக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாள் என்பது முடிவடைதல்.
2- காலணிகளை கழற்றுதல்: ஒருவர் மஸ்ஹு செய்ததன் பின் தனது (ஹுப்) காலணியின் ஒன்றை அல்லது இரண்டையும் கழற்றினால் அவரின் மஸ்ஹ் முறிந்து விடும்.
கேள்வி 16 : தொழுகையின் சிறப்பு யாது?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "உங்களில் ஒருவரின் வாசலில் ஓடும் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "அவரின் அழுக்குகளில் எதுவும் எஞ்சியிராது" என நபித் தோழர்கள் கூறினர். "இது ஐவேளைத் தொழுகைகளுக்கான உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- தரன்: அழுக்கு.
கேள்வி 17 : தொழுகை என்பதன் கருத்து யாது?
பதில்: தொழுகையென்பது குறிப்பிட்ட வார்த்தைகள், செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வை வணங்குவதாகும். இவ்வணக்கமானது தக்பீர் கூறி ஆரம்பிக்கப்பட்டு ஸலாமுடன் முடிவடையும்.
கேள்வி 18 : தொழுகையின் சட்ட நிலை யாது ?
பதில் : தொழுகை ஒவ்வொரு முஸ்லிமின்; மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. (அந்நிஸாஃ : 103).
கேள்வி 19 : தொழுகையை விடுவதன் சட்ட நிலை யாது?
பதில் : தொழுகையை விட்டுவிடுவது குப்ராகும் (இறைநிராகரிப்பாகும்). நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "எமக்கும் அவர்களுக்கும் (இறை மறுப்பாளர்களுக்கும்) இடையிலான ஒப்பந்தம் - உடன்படிக்கை – தொழுகையாகும். எனவே அதனை யார் விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்".
கேள்வி 20 : ஒரு நாளைக்கு முஸ்லிமின் மீது கடமையான தொழுகைகள் எத்தனை ? ஒவ்வொரு தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை யாது ?
பதில் : ஐந்து நேரத் தொழுகைகள் ஆகும்.
- ஸுப்ஹுத் தொழுகை: (2) இரண்டு ரக்அத்துக்கள்.
- ழுஹர் தொழுகை: நான்கு ரக்அத்கள்.
- அஸர் தொழுகை: நான்கு ரக்அத்கள்.
- மஃரிப் தொழுகை : (3) மூன்று ரக்அத்துக்கள்.
- இஷாத் தொழுகை : நான்கு ரக்அத்கள்.
கேள்வி 21 : தொழுகையின் நிபந்தனைகள் யாவை?
பதில் : 1- முஸ்லிமாக இருத்தல், காபிரின் செயல் செல்லுபடியாகாது; ஏனெனில் இணைவைப்பதனால் செயல்கள் பாழாகிவிடும்.
அல்லாஹ் கூறினான் : நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும் (ஸுமர் : 10).
2- புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல் பைத்தியகாரனின் தொழுகை நிறைவேறமாட்டாது.
3. நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து விளங்கும் பருவத்தை அடைந்திருத்தல். அதனடிப்படையில் பிரித்தறியும் பருவத்தை அடையாத சிறுவரின் தொழுகை நிறைவேற மாட்டாது.
இதற்கு ஆதாரமாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள் ""மூன்று பேரை விட்டும் பேனா உயர்த்தப்பட்டு விட்டது: தூங்குபவர் விழித்தெழும் வரை, சிறுபிள்ளை பருவமடையும் வரை, பைத்தியகாரன் புத்தி தெளியும் அல்லது சுயநினைவு பெறும் வரை.""
4- நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்)
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்".
5- தொழுகைக்குரிய நேரத்தை அடைந்திருத்தல். அல்லாஹ் கூறினான் : நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. (அந்நிஸாஃ : 103).
6- தொடக்கை விட்டும் நீங்கி சுத்தமாய் இருத்தல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: ' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'.
7- நஜிஸை விட்டும் சுத்தமாயிருத்தல். அல்லாஹ் கூறியுள்ளான் : இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக! (அல் முத்தஸ்ஸிர் : 4).
8- உடலில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்தல். அல்லாஹ் கூறினான் : ஆதமின் சந்ததிகளே! மஸ்ஜிதுகளுக்கு செல்லும்போது உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் (அல் அஃராப் : 54)
9- கிப்லாவை முன்னோக்குதல். அல்லாஹ் கூறினான் : (நபியே!) உம் முகத்தை ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் திருப்புவீராக. இன்னும், (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எங்கிருந்தபோதும் (தொழுகையின் போது )அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். (பகரா : 153).
கேள்வி 22 : தொழுகையின் ருகூன்கள் (பர்ளுகள் ) யாவை?
பதில் : தொழுகையின் (பர்ளுகள் ) 14 ஆகும். அவை பின்வருமாறு :
1- பர்ளான தொழுகையில் நின்று தொழ சக்தியுள்ளவர் நின்று தொழுதல். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்.
2- இஹ்ராம் தக்பீர், அதாவது அல்லாஹு அக்பர் எனக் கூறல். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்காக "நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்!"
3- சூறா அல் பாத்திஹாவை ஓதுதல். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்காக "ஸூரத்துல் பாத்திஹாவை ஓதாத ஒருவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது".
4- ருகூஊ செய்தல். (குணிதல்) அதாவது முதுகை வலைத்து நேராக தலையை முதுகு மட்டத்திற்கு சமமாக முன்னோக்கி வைத்தல்.
5- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு வருதல்.
6- இஃதிலாலில் நேராக நிற்றல். (ருகூவிற்குப்பின் நிலையாக நிற்றல்). இதற்கு ஆதாரமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள் : "பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக, பின்னர் நேர்த்தியாக நேராக நிற்கும் வரை எழுந்து வருவீராக."
7- ஸுஜூத் செய்தல்: ஸுஜூதின் போது நெற்றி மற்றும் மூக்கு இரு உள்ளங்கைகள் முட்டுக்கால்கள் இரு கால் விரல்களின் உட்பகுதிகள் போன்றவை தரையில் படும் நிலையில் இருத்தல் வேண்டும்.
8- ஸுஜூதிலிருந்து இருப்புக்கு வருதல்.
9- இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்காக "பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக!"
வலது காலை நட்டி இடது காலை விரித்து அதன் மீது அமர்வதோடு அதனை கிப்லாவை நோக்கி வைப்பதும் ஸுன்னாவாகும். உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: "இடது காலை விரித்து, வலது காலை நாட்டி வைப்பார்கள்."
10- அனைத்து செயல் சார்ந்த பர்ளுகளிலும் தாமதித்திருத்தல்.
11- இறுதி அத்தஹிய்யாத்து இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறினார்கள்: அத்தஹிய்யாத்து கடமையாக்கப்பட முன் தொழுகையில் நாங்கள் கூறுவோம்.
12-அதற்காக அமர்தல்.
13- ஸலாம் கூறுதல். அதாவது இரண்டு முறை 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: அவர் வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார்; இடது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார்.
- இங்கு விபரிக்கப்பட்ட பர்ளுகளை (ருகுன்களை) சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிரமமாகச் செய்தல். உதாரணத்திற்கு ஒருவர் ருகூஉ செய்வதற்கு முன் வேண்டுமென்றே ஸுஜுத் செய்தால் அவரின் தொழுகை வீணாகி விடும். மறந்து செய்தால் மீண்டும் எழுந்து ருகூ செய்து விட்டு பின்னர் ஸுஜூத் செய்தல் வேண்டும்.
கேள்வி 23 : தொழுகையின் வாஜிப்கள் எவை ?
பதில் : தொழுகையின் வாஜிப்கள் எட்டாகும். அவையாவன:
1- இஹ்ராம் தக்பீர் தவிர்ந்த ஏனைய தக்பீர்கள்.
2- இமாமும் தனித்து தொழுபவரும் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஃ' என்று கூறுதல்.
3- 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுதல்.
4- ருகூவில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' என்று கூறுதல்.
5- ஸுஜுதில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல்.
6- இரு ஸஜ்தாக்களுக்குமிடையில் ' ரப்பிஃபிர்லி ' என்று கூறுதல்.
7- முதலாவது அத்தஹிய்யாத்.
8- முதலாவது அத்தஹிய்யாத்திற்காக அமர்தல்.
கேள்வி 24 : தொழுகையின் ஸுன்னத்துகள் எவை ?
பதில் : அவை 11 ஆகும். அவைகள் பின்வருமாறு :
1-இஹ்ராம் தக்பீருக்குப்பின் ' ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா இலாஹ கய்ருக' எனக் கூறுவது. இது துஆ அல் இஸ்திப்தாஹ் என்றழைக்கப்படுகிறது. பொருள் ( யா அல்லாஹ் உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேர் மிக்கது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.).
2- இஸ்திஆதா கூறுதல் (அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்) என்று கூறுதல்.
3- பிஸ்மில்லாஹ் கூறுதல் ( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்).
4- ஆமின் கூறுதல்.
5- ஸூறா பாத்திஹாவை ஒதி முடிந்ததும் ஏதாவது ஒரு ஸூறாவை ஓதுதல்.
6- சப்தமாக ஒதித் தொழும் தொழுகையில் இமாம் சப்தமாக ஓதுதல்.
7- "ரப்பனா வலகல் ஹம்து" என்ற வார்த்தைக்குப்பின் "மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின ஷைஇன் பஃது" என்று கூறுதல்.
8- ருகூவில் ஒதும் தஸ்பீஹை ஒரு தடவைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
9- ஸுஜூதின் தஸ்பீஹை ஒரு முறைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
10- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்திருக்கும் போது கூறும் 'ரப்பிஃபிர்லி' என்ற துஆவை ஒரு தடவைக்கும் மேல் அதிகமாக கூறுதல்.
11. இறுதி அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வதும் அதனைத் தொடர்ந்து துஆ இறைஞ்சுவதும்.
செயல்ரீதியான ஸுன்னத்துக்கள் :
1- இஹ்ராம் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துதல்.
2- ருகூவிற்கு செல்லும் போதும்.
3- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு செல்லும் போதும் இரு கைகளையும் உயர்த்துதல்.
4- அதன் பின் இரு கைகளையும் கீழே விட்டுவிடுதல்.
5- வலது கையை இடது கையின் மீது வைத்தல்.
6- ஸுஜூத் செய்யும் இடத்தைப் பார்த்தல்
7- நின்ற நிலையில் இருக்கும் போது இரு கால்களுக்கு மிடையில் இடைவெளிவிடுதல்.
8- ருகூவில் இருக்கும் போது இரு முழங்கால்களையும் இரண்டு கைகளினால் விரல்களை விரித்த நிலையில் பிடித்தல். முதுகை நேராக வைத்து தலையை அதற்கு நேராக வைத்தல்.
9- ஸுஜூதின் போது தரையில் கட்டாயம் பட வேண்டிய உறுப்புகளை தரையில் படுமாறு வைத்தல்.
10- ஸுஜூத் செய்யும் போது (மேற் கைகளை (மேற்கை (Arm) என்பது தோள் பட்டைக்கும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்) விலாவை விட்டும் தூரமாக வைத்தல், வயிற்றை இரு தொடைகளை விட்டும் தூரப்படுத்துதல், தொடையை இரு கெண்டை கால்களை விட்டும் தூரப்படுத்தல், முட்டுக்கால்களை அகற்றி வைத்தல், பாதங்களை நிமிர்த்தி நட்டிவைத்தல், இரு கால் விரல்களின் உட்புறத்தை தரையில் பிரித்து வைத்தல், இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக விரிக்கப்படட்டதாகவும் விரல்களை சேர்த்தும் வைத்தல்.
11- இரு ஸஜ்தாக்கிடையிலான இருப்பிலும் முதல் அத்தஹிய்யாத் இருப்பிலும் இப்திராஷ் இருப்பு இருத்தல். இரண்டாவது அத்தஹிய்யாத்தில் தவர்ருக் இருப்பு இருத்தல். (குறிப்பு) இப்திராஷ் இருப்பு என்பது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைத்தல். தவர்ருக் இருப்பு என்பது தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைத்தல்). (மொழிபெயர்ப்பாளர்).
12- இரு ஸஜ்தாக்கிடையிலான இருப்பில் இரு தொடைகளின் மேல் இருகைகளையும் விரித்து கைவிரல்களை சேர்த்தும் வைத்தல். அவ்வாறே அத்தஹிய்யாத்திலும் வைக்க வேண்டும். என்றாலும் வலது கையின் சின்ன விரலையும் மோதிர விரலையும் மடித்து நடுவிரலை பெரும் விரலோடு சேர்த்து வட்டமாக்கி அல்லாஹ்வின் பெயர் கூறும்போது ஆள்காட்டி விரலால் சைக்கினை செய்தல் வேண்டும்.
13- (தொழுகையை முடிப்பதற்கு ஸலாம் கூறும் போது) முதலாவது ஸலாமில் தலையை வலப்பக்கமாகவும் இரண்டாவது ஸலாமில் இடப்பக்கமாகவும் திருப்புதல்.
கேள்வி 25 : தொழுகையை முறிப்பவை யாவை?
பதில் : 1- தொழுகையின் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை அல்லது -பர்ளுகளிள் ஏதாவது ஒன்றை விட்டு விடுதல்.
2- வேண்டுமென்றே தொழுகையில் பேசுதல் (கதைத்தல்).
3- சாப்பிடுதல் அல்லது குடித்தல்.
4- தொடரான அதிக அசைவுகள்.
5. வேண்டுமென்றே தொழுகையின் வாஜிப்களில் ஒன்றை விடுதல்.
கேள்வி 26 : ஒரு முஸ்லிம் எவ்வாறு தொழுகையை நிறைவேற்றுவான்?
பதில் : தொழும் முறை (ஒரு முஸ்லிம் பின்வரும் ஒழுங்கில் தொழுகையை நிறைவோற்றுவான்) :
1- கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை தனது முழு உடலினாலும் நேராக நின்று முன்னோக்க வேண்டும்.
2- பின்னர் தொழவிரும்பும் தொழுகையை நாவினால் மொழியாமல் மனதில் நினைக்க வேண்டும்.
3- பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி தக்பீர் கூறும்போது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்த வேண்டும்.
4- வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.
5- பிறகு பின்வரும் பிராத்தனைகளில் (துஆக்களில்) ஒன்றை ஆரம்பமாக ஓதவேண்டும். 'அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும்மக்ஸில்னீ மின் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத்' பொருள் : யாஅல்லாஹ்! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!.
அல்லது பின்வரும் துஆவை ஓத வேண்டும் : (ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக) என்பதாகும். பொருள் (உனக்கு தகுதியற்ற எல்லாக் குறைகளிலிருந்தும்) உன்னை நான் துதிக்கிறேன். உனது புகழைக்கொண்டு உன்னை போற்றியவனாகவே உள்ளேன். உனது பெயர் அருட்பேறு நிறைந்தாக உள்ளது. உன்னுடைய கண்ணியமும் மகத்துவமும் மேலோங்கிவிட்டது. உன்னையன்றி உண்மையாக வணங்கப்படுபவன் (வேறு எவறும், எதுவும்) இல்லை.
6- பின்னர் இஸ்திஆதா ஓதுவார் அதாவது : 'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்)
7- பிறகு பிஸ்மிலுடன் ஃபாத்திஹா ஸூராவை ஓதவேண்டும். அது பின்வருமாறு : பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால். புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! 2 (அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; 3 கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! 4 (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்துவாயாக ! (அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. (அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று. (அல் பாதிஹா :1-7)
பிறகு (ஆமீன்) என கூறுவார். ஆமீன் என்பதன் கருத்து (யாஅல்லாஹ் எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக) என்பதாகும்.
8- பிறகு அல் குர்ஆனில் அவருக்கு முடியுமான சில வசனங்களை ஓத வேண்டும். மேலும் ஸுப்ஹ் தொழுகையில் (சற்று) அதிகமாக ஓதுவார்.
9- பிறகு அவர் ருகூஃ செய்வார். அதாவது அல்லாஹ்வை மகிமைப்படுத்தும் முகமாக அவர் முதுகை வளைத்து குனிவார். இவ்வாறு ருகூ செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி தனது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்துவார். முதுகை வளைத்து தலையை நேராக முதுகின் மட்டத்திற்கு சமமாக வைப்பார். இரண்டு கைகளையும்- விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களின் மீது வைப்பார்.
10- ருகூவில் 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' (பொருள்: மகத்தான எனது இரட்சகனை நான் தூய்மைப்படுத்துகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறுவார். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ'. (பொருள் : யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னைப் புகழ்வதுடன் நீ தூய்மையானவன் என்றும் போற்றுகிறேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!.
11- 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' (பொருள் : தன்னைப் புகழ்பவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்து அங்கீகரித்தான்) என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழும்புவார். அந் நேரம் இரு கைகளையும் புயத்திற்கு நேராக உயர்த்தி 'ரப்பனா வலகல்ஹம்து' என்று கூறுவார். ஜமாஅத்தாக தொழும் மஃமூம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' என்று கூறாது அதற்குப் பதிலாக 'ரப்பனா வலகல் ஹம்து' (பொருள்: எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்று கூறுவார். குறிப்பு : தனித்துத் தொழுபவர் ருகூவிலிருந்து எழும்பும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' கூறுவதுடன் அதனைத் தொடர்ந்து 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூற வேண்டும்.
12- ருகூவிலிருந்து எழுந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின் ஷைஇன் பஃத்' என்று கூறுவார். (பொருள் : எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும் நிரம்புமளவிற்கும் மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு (உனக்கே புகழனைத்தும்)).
13- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலாவது ஸஜ்தா செய்வார். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜூது செய்வார். கைகளை விலாவோடு சேர்த்து வைக்கவோ முழங்கைகளை தரையில் படுமாறு வைக்கவோ கூடாது. அவரின் கைவிரல்கள் கிப்லா திசையை நோக்கியதாக வைக்க வேண்டும்.
14- 'ஸுஜூதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா' (பொருள்: மிக உயர்ந்தவனாகிய என் இரட்சகனை துதிசெய்கிறேன்) என்று மூன்று முறை கூறவேண்டும். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பன வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ' (பொருள் :யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னை புகழ்வதுடன் நீ தூய்மையானவன் எனவும் துதிக்கின்றேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!
15- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்துவார்
16- பின்னர் இரண்டு ஸஜ்தாவுக்கும் நடுவில் வலது காலை நட்டி இடது காலை மடித்து அதன் மீது அமர்வார். இரு கைகளையும் தொடைகள் மற்றும் முழங்கால்களின் மீது வைப்பார்.
17- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்து பின்வரும் துஆவை ஓதுவார் : 'ரப்பிஃபிர்லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ, வஜ்புர்னீ, வஆபினீ' (பொருள் : யா அல்லாஹ் ! என்னை மன்னித்து எனக்கு அருள்புரிந்து நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை தருவாயாக! என்குறைகளை மறைத்து எனக்கு ஆறுதலைத் தந்திடுவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக!).
18- பிறகு முதல் ஸஜ்தா செய்தது போன்று இரண்டாவது ஸஜ்தாவை அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் சொன்னது, செய்ததைப்போன்று மீண்டும் செய்வார். (இத்துனுடன் முதல் ரக்அத் முடிந்துவிடும்)
19- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எழுந்து, மீண்டும் நிலைக்கு வருவார். இரண்டாவது ரக்அத்தை முதல் ரக்அத்தைப் போன்றே தொழுவார். எனினும் இதில் ஃபாத்திஹா ஸூராவுக்கு முன்னுள்ள துஆஉல் இஸ்திப்தாஹ் பிராத்தனையை மீண்டும் ஓதமாட்டார்.
20- இரண்டாவது ரக்அத் முடிந்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்தது போன்று அமர்வார்.
21- இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின்வரும் பிரார்த்தனையை ஓதுவார் : 'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹந் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'. (அதனைத் தொடர்ந்து பின்வரும் ஸலவாத்தை ஓதுவார்) 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத் - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். (இதன் பிறகு பின்வரும் துஆவை ஓதுவார்). அஊது பில்லாஹி மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி வமின் பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்' . (பொருள் : காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சான்று பகர்கிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் சான்று பகர்கிறேன். யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள் மீதும் அருள் புரிந்தது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்; மீதும் அருள்புரிவாயாக. யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும்,செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும செழிப்பையும் பொழிவாயாக !நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையில் இருந்தும் நரகத்தின் வேதனையில் இருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்). இதன் பிறகு இம்மை மறுமைக்குரிய நலன்களில் தான் விரும்பியதை தனது இரட்சகனிடம் வேண்டிப் பிரார்த்திப்பார்.
22- பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறுவார்;. பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே கூறுவார் (இத்துடன் இரண்டு ரக்அத் தொழுகை முடிவடைகிறது.)
23- மூன்று அல்லது நான்கு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகைகளைத் தொழும்போது முதலாவது அத்தஹியாத்தில் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ' என்ற வார்த்தை வரை ஒதி நிறுத்திக்கொள்வார்;
24- பிறகு அல்லாஹு அக்பர் எனக் கூறி நிலைக்கு வர வேண்டும். அப்போது இரு கைகளையும் தோள் புயத்திற்கு நேராக உயர்த்த வேண்டும்.
25- எஞ்சிய ரக்அத்துக்களை இரண்டாம் ரக்அத்தை தொழுத முறையில் தொழ வேண்டும். அதில் ஸூறதுல் பாத்திஹாவை மாத்திரம் ஓதிக் கொள்வார்.
26- பிறகு 'தவர்ருக்' முறையில் அமர்வார். அதாவது வலது காலை நட்டி வைத்து, இடது காலை வலது காலுக்கு கீழ் வெளிப்படுத்தி தமது இருப்பிடத்தை (பித்தட்டை) தரையில் வைத்து அமர்ந்து கொள்வதே 'தவர்ருக்' முறையாகும். பின்னர் தனது இரு கைகளையும் முதலாவது அத்தஹிய்யாத்தில் தொடையின் மீது வைத்த முறையில் வைக்க வேண்டும்.
27- இந்த இருப்பில் அத்தஹிய்யாத் முழுவதையும் (துஆக்களுடன்) ஓதுவார்.
28- பிறகு வலது புறம் (முகத்தைத் திருப்பி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூறுவார்.
கேள்வி : 27: தொழுகையில் ஸலாம் கொடுத்ததின் பின் ஓதுபவை:
பதில்- 'அஸ்தஃபிருல்லாஹ்' என்று மூன்று முறை கூறுவார்.
'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல்இக்ராம்'. (பொருள்: இறைவா! நீயே சாந்தியுடைவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ மகத்துவமிக்கவனாய் உள்ளாய்.)
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத்தூயவன்) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும்,
அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியன) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும்,
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு
(100) நூறாவதை பூரணப்படுத்துவதற்கு பின்வரும் திக்ரை ஓதுவார்: 'லாஇலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவன் தனித்தவன்; அவனுக்கு எந்த இணையாளருமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்).
மேலும், ஸுறதுல் இக்லாஸ் முஅவ்விதாத் (ஸூறதுல் பலக் ஸூறதுன் நாஸ்) ஆகிய ஸூறாக்களை ஸுப்ஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளின் பின் மூன்று தடவைகளும், ஏனைய தொழுகைகளின் பின் ஒரு தடவையும் ஓதுவார்.
மேலும், ஆயதுல் குர்ஸியை ஒரு தடவை ஓதுவார். 'அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம், லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம், லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி, மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல, வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' (பகரா 2:255). (பொருள் :(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்?(படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன்)
கேள்வி 28: ராதிபத்தான சுன்னத் தொழுகைகள் (ஐவேளை தொழுகைகளின் முன் பின் ஸுன்னத்துக்கள்) எவை? அதன் சிறப்பு என்ன?
பதில் - ஸுப்ஹுக்கு முன்னர் (2) இரண்டு ரக்அத்துக்கள்
ழுஹருக்கு முன்னர் (4) நான்கு ரக்அத்துக்கள்.
ழுஹருக்குப் பின்னர் (2) நான்கு ரக்அத்துக்கள்.
மஃரிபுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்
இஷாவுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்
இதன் சிறப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 'யார் தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் (12) பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் அமைப்பான்'.
கேள்வி 29 : கிழமை நாட்களில் மிகவும் சிறந்த நாள் எது?
பதில் - ஜும்ஆத் தினமாகும் ( வெள்ளிக்கிழமையாகும்) நபி (ஸல்) கூறினார்கள் : 'உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதப்படும். அந்நாளில் மக்கள் அதிர்ச்சிக்குள்ளவாகுவர்,.எனவே அந்நாளில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் உங்களது ஸலவாத்கள் எனக்கு காண்பிக்கப்படுகிறது'. அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மரணித்து உங்களின் எலும்பெல்லாம் மண்ணில் உக்கிப்போன நிலையில் எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி காண்பிக்கப்படுகிறது?! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 'நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்'.
கேள்வி 30: ஜும்ஆ தொழுகையின் சட்ட நிலை யாது?
பதில் - பருவ வயதை அடைந்த புத்திசாலியான ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம் ஆண்களுக்கும் கட்டாயக் கடமையாகும் (பர்ளு அய்ன்)
கேள்வி 31: ஜுமுஆ தொழுகையின் ரக்அத்துக்கள் எத்தனை?
பதில்: ஜுமுஆத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டதாகும். அதில் இமாம் சப்தமிட்டு ஓதுவார். தொழுவதற்கு முன் இரண்டு குத்பாக்கள்- உரைகள்- உண்டு.
கேள்வி 32: ஜுமுஆத் தொழுகைக்கு சமூகம் தராது இருப்பது கூடுமா?
பதில் - ஷரீஆ ரீதியான நியாயமான காரணங்களுக்காகவேயன்றி எவ்விதத்திலும் ஜுமுஆத் தொழுகைக்கு சமூகம் தராது இருப்பது கூடாது. இது பற்றி நபி (ஸல்) பின்வருமாறு எச்சரிக்கை செய்துள்ளார்கள் : "யார் ஒருவர் அலட்சியமாக மூன்று ஜுமுஆக்களை விட்டு விடுகிறாறோ அல்லாஹ் அவரின் உள்ளத்திற்கு திரையிட்டு விடுவான்".
கேள்வி 33 : ஜும்ஆத் தினத்தில் செய்யக் கூடிய சில சுன்னத்தான விடயங்களைக் குறிப்பிடுக.
பதில் - 1- குளித்தல். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்காக 'பருவவயதை அடைந்த ஒவ்வொருவரும் ஜும்ஆ தினத்தில் குளிப்பது கடமையாகும்.'
2- வாசனை பூசுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: 'ஜும்ஆ தினத்தில் குளிப்பதும், தமது குடும்பத்தாரிடம் உள்ள வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொள்வதும் முஸ்லிம்கள் மீதான கடமையாகும்.'
3- இருப்பதில் மிக நல்ல ஆடைகளை அணிதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: «உங்களில் ஒருவருக்கு வசதி இருந்தால், தனது வேலைக்கான இரண்டு ஆடைகளைத் தவிர, ஜும்ஆவிற்காக வேறு இரண்டு ஆடைகளை எடுத்துக் கொள்வதில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை»
4- பள்ளிக்கு ஆரம்ப நேரத்தில் செல்லுதல்.
7- பள்ளிக்கு நடந்து செல்லுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "யார் வெள்ளிக்கிழமை அன்று தானும் குளித்து (தன் மனைவியையும்) குளிக்கச் செய்து, முன்கூட்டியே (பள்ளிவாசலுக்கு) விரைந்து சென்று, (இமாமுக்கு) நெருக்கமாக அமர்ந்து, (இமாமின் உரையை) குத்பாவை செவிதாழ்த்தி மௌனமாக கேட்கிறாரோ, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்று, (இரவில்) நின்று வணங்கியதற்கான நற்கூலி அவருக்குக் கிடைக்கும்."
6. நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூறுதல். இது குறித்து நபி ஸல் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். "'வெள்ளிக்கிழமையில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் அது வானவர்கள் சாட்சியாக இருக்கும் நாளாகும். மேலும், எவரேனும் என் மீது ஸலவாத் சொன்னால், அவர் அதனைச் சொல்லி முடிக்கும் வரை அவரது ஸலவாத் எனக்குக் காண்பிக்கப்படுகிறது'."
6- ஸுறதுல் கஹ்பை ஓதுதல். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "வெள்ளிக்கிழமை அன்று ஸுறதுல் கஹ்பை ஓதுபவருக்கு, இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கு இடையில் ஓர் ஒளி பிரகாசிக்கும்."
8- துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்தை தேடுவதில் ஈடுபாடு காட்டல். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றிக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அதில் ஒரு நேரம் இருக்கிறது. எந்தவொரு முஸ்லிமான அடியானும் அந்த நேரத்தில் நின்று தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் ஏதேனுமொன்றைக் கேட்டால் அதனை அவனுக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை.
கேள்வி 34 : ஜமாஅத் தொழுகையின் (கூட்டுத் தொழுகையின்) சிறப்பு என்ன?
பதில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : "ஜமாஅத்தாக -கூட்டாகத்- தொழுவது தனித்துத் தொழுவதை விட (27) இருபத்தேழு மடங்கு மேலானதாகும்".
கேள்வி :35 : உள்ளச்சமாக தொழுவது என்றால் என்ன?
பதில்: தொழுகையில் உள்ளத்தின் ஈடுபாட்டையும் உடலுறுப்புக்கள் அதில் அடக்கமாக இருப்பதையும் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் : மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (முஃமினூன் : 1, 2).
கேள்வி :36 : ஸகாத் என்றால் என்ன?
பதில் : ஸகாத் என்பது குறிப்பிட்ட செல்வத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்ட நேரத்தில்-காலத்தில்- நிறைவேற்றும் ஒரு கட்டாயக் கடமையாகும்.
இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் வசதியுள்ளோரிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கப்படும் கட்டாய தர்மமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : ஸகாத்தை கொடுங்கள் (அல்பகரா : 43).
கேள்வி 37 : விரும்பத்தக்க தர்மம் என்றால் என்ன?
பதில் : ஸகாத் தவிர்ந்த ஏனைய தர்மங்கள். அதாவது நல்ல காரியங்களுக்காக எந்த வேளையிலும் ஏதாவது ஒன்றை தர்மமாகக் கொடுத்தல்
அல்லாஹ் கூறுகிறான் : (இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்) (அல் பகரா : 195).
கேள்வி 38 : நோன்பை வரைவிலக்கணப்படுத்துக.
பதில் : நோன்பு நோற்றல் என்ற நிய்யத்துடன் பஜ்ர் உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகும். அது இரு வகைப்படும் :
1. கடமையான நோன்பு : ரமழான் மாத நோன்பு இதற்கான உதாரணமாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிகை கொண்டோரோ நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்கள் முன்பிருந்தோ மீது விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. (அல்பகரா: 183)
2. ஸுன்னத்தான நோன்பு : வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு நோற்றல், அடுத்ததாக மாதாந்தம் மூன்று தினங்கள் நோன்பு நோற்பதாகும். அதில் மிகச்சிறப்புக்குரியது ஒவ்வொரு அரபு மாதத்திலும்; அய்யாமுல் பீழ் நாட்களான (13,14,15) ஆகிய தினங்களில் நோன்பு நோற்றல் போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.
கேள்வி 39 : ரமழான் மாத நோன்பின் சிறப்பு என்ன?
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் யார் நோன்பு நோற்கிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்".
கேள்வி 40 : ரமழான் அல்லாத காலங்களில் நோற்கும் சுன்னத்தான நோன்பின் சிறப்பு என்ன?
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "எந்த ஒரு அடியான் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறானோ அவனது முகத்தை நரகிலிருந்து எழுவது வருடங்கள் அல்லாஹ் தூரப்படுத்துகிறான்".
ஹதீஸில் இடம்பெற்ற ((ஸப்ஈன கரீபன்)) என்பதன் கருத்து எழுவது வருடங்கள் என்பதாகும்.
கேள்வி 41 : நோன்பை முறிக்கும் காரியங்கள் எவை?
பதில் : 1- வேண்டுமென்றே உண்ணுதல் பருகுதல்.
2- வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்.
கேள்வி 42 : நோன்பின் ஸுன்னத்துக்கள் எவை?
பதில் : 1- நோன்பு துறப்பதை அவசரப்படுத்துதல்.
2- ஸஹர் செய்தல், அதனைப் பிற்படுத்துதல்.
3. நல்ல காரியங்கள் மற்றும் வணக்கங்களை அதிகரித்துக் கொள்ளல்.
4- ஒருவர்; ஏசினால் அவரைப் பார்த்து நான் ஒரு நோன்பாளி என்று கூறுதல்.
5- நோன்பு துறக்கும் நேரத்தில் துஆ ஓதுதல்.
6- கணிந்த பேரீத்தம் பழம் அல்லது காய்ந்த பேரீத்தம் பழத்தினால் நோன்பு துறத்தல். அது கிடைக்காது விட்டால் தண்ணீரால் நோன்பு துறத்தல்.
கேள்வி 43: ஹஜ் என்றால் என்ன ?
பதில் : ஹஜ் என்பது புனித ஆலயமான கஃபாவுக்கு குறிப்பிட்ட காலத்தில் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான். (ஆல இம்ரான் 97)
கேள்வி 44: ஹஜ்ஜின் ருகுன்கள் யாவை?
பதில் - 1- இஹ்ராம் (ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தல்).
2- அரபாவில் தரித்தல்.
3- தவாபுல் இபாழா செய்தல் (ஹஜ்ஜின் கடமையான தவாப்).
3- ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்.
கேள்வி 45 : ஹஜ்ஜின் சிறப்பு என்ன ?
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : "உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று (பாவமற்றவராக) அவர் திரும்புவார்".
இந்த ஹதீஸில் இடம்பெற்ற "அன்று பிறந்த பாலகன்" என்ற வாசகத்தின் கருத்து எவ்விதப்பாவமுமின்றி –புனிதராக –என்பதாகும்.
கேள்வி 46 : உம்ரா என்றால் என்ன ?
பதில் : உம்ரா என்பது புனித ஆலயமான கஃபாவுக்கு எந்த நேரத்திலும் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதைக் குறிக்கும்.
கேள்வி 47: உம்ராவின் ருகுன்கள் -கடமைகள்- யாவை?
பதில் - 1- இஹ்ராம் (ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தல்).
2- கஃபாவை தவாப் செய்தல்.
3- ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்.
கேள்வி 48: அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல்; என்றால் என்ன?
பதில் : இஸ்லாத்தை பரப்புதல், இஸ்லாத்தையும்; முஸ்லிம்களையும் பாதுகாத்தல், அல்லது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளுடன் போராடுதல் போன்ற செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படும் அதீத முயற்சிகள் மற்றும் உழைப்புகளில் ஈடுபவதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் : இன்னும், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். (அத்தௌபா : 41).
**********
நபி (ஸல்) அவர்களின் வரலாற்றுப் பிரிவு
நபியவர்களின் வாழ்க்கை வரலாறு :
நபியவர்களின் வாழ்க்கை வரலாறு: என்பது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு முதல் மரணம் வரையிலான வாழ்க்கையை அறிவதாகும்.
கேள்வி 1: எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வம்சம்,பரம்பரை என்ன?
பதில் : எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வின் மகனாவார்,அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனவார், அப்துல் முத்தலிப் அவர்கள் ஹாஷிமின் மகனாவார். ஹாஷிம் அவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர். குறைஷிகள் அரபிகளாவர். அரபிகள் இப்ராஹீம் நபியின் மகனான இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்தோராவர். அவர்களின் மீதும் எங்கள் நபி மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
கேள்வி 2- நபி (ஸல்) அவர்களின் தாயின் பெயர் என்ன?
பதில் : ஆமினா பின்த் வஹ்ப்.
கேள்வி 3: நபியவர்களின் தந்தை எப்போது மரணித்தார்கள்?
பதில் : நபியவர்கள் தாயின் கருவரையில் இருக்கும்போது மதீனாவில் அவர்களின் தந்தை மரணித்துவிட்டார்.
கேள்வி 4: நபி ﷺ அவர்கள் எப்போது பிறந்தார்கள்?
பதில்- யானை வருடம் ரபீஉனில் அவ்வல் மாதம் திங்கட் கிழமை.
கேள்வி 5 : நபியவர்கள் எந்த ஊரில் பிறந்தார்கள்?
பதில் : மக்காவில் பிறந்தார்கள்.
கேள்வி 6 : நபியவர்களுக்கு பாலூட்டி அரவனைத்த, செவிலித் தாய்மார்கள் யார்?
பதில் : - நபியவர்களின் தந்தையின் அடிமை பெண்ணான உம்மு அய்மன்.
- நபியவர்களின் பெரிய தந்தையான அபூலஹபின் அடிமை ஸுவைபா.
- ஹலிமதுத் ஸஃதியா.
கேள்வி 7: நபியவர்களின் தாயார் எப்போது மரணித்தார்கள்?
பதில்- நபியவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது அவர்களின் தாயார் மரணமடைந்தார்கள். பின்னர் நபியவர்களை அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
கேள்வி 8 :அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு நபியவர்களை பொறுப்பேற்றவர் யார்;?
பதில்: நபியவர்கள் எட்டு வயதாக இருக்கும் போது அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் நபியவர்களை அவர்களின் சிறிய தந்தையான அபூதாலிப் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
கேள்வி 9: நபியவர்கள் தனது சிறிய தந்தையுடன் ஷாமுக்கு -சிரியாவுக்குப்- பயணம் சென்றது எப்போது?
பதில்: நபிவர்களின் (12) பன்னிரண்டாவது வயதில் தனது சிறிய தந்தையுடன் ஷாமுக்கு -சிரியாவுக்குச்- சென்றார்கள்.
கேள்வி 10 : நபியவர்களின் இரண்டாவது பயணம் எப்போது?
பதில் : கதீஜா (ரழி) அவர்களின் வியாபாரப்பொருட்களை விற்பனை செய்யவே இரண்டாவது தடவையாக சிரியாவுக்குச் சென்றார்கள். நபியவர்கள் அப்பயணத்திலிருந்து திரும்பி வந்ததும் அன்னை கதீஜா (ரழி) அவர்களை திருமணம் செய்துகொண்டார்கள். அப்போது அவர்களின் வயது இருபத்தைந்தாகும்.
கேள்வி 11 : குறைஷிகள் கஃபாவை எப்போது புணர்நிர்மானம் செய்தார்கள்?
பதில் - நபியவர்களின் (35) முப்பத்தைந்தாவது வயதில் குறைஷிகள் கஃபாவை புணர்நிர்மானம் செய்தார்கள்.
இக்கட்டுமானப் பணியின் போது ஹஜருல் அஸ்வத் கல்லை உரிய இடத்தில் யார் வைப்பது என்ற சர்ச்சை ஏற்பட்டபோது குறைஷிகள் நபியவர்களை மத்தியஸ்தராக நியமித்தனர். நபியவர்கள் அக்கல்லை ஒரு பிடவையில் வைத்து அப்பிடவையின் ஒரப் பகுதியை ஒவ்வொரு கோத்திரத் தலைவர்களும் பிடிக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள் நான்கு கோத்திரத்தினராக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹஜருல் அஸ்வத் கல் வைக்கப்படும் இடத்திற்கு உயர்த்தியபோது நபியவர்கள் தனது கையால் அதனை எடுத்து வைத்தார்கள்.
கேள்வி :12 : நபியவர்கள் எத்தனையாம் வயதில் தூதராக அனுப்பப்பட்டார்கள்? அவர்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள்?
பதில் : நபியவர்கள் இறைதூதராக அனுப்பப்பட்டபோது அவர்களுக்கு வயது நாற்பதாகும், அவர்கள் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் நன்மாராயம் கூறக்கூடியவர்களாகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும் அனுப்பப்பட்டார்கள்.
கேள்வி 13 : நபியவர்களுக்கு எதன் மூலம் ஆரம்பத்தில் இறைச்செய்தி (வஹி) கிடைத்தது ?
பதில்- தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவின் மூலம் கிடைத்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது காலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.
கேள்வி 14: இறைச்செய்தி கிடைப்பதற்கு முன் நபியவர்களின் நிலை எவ்வாறு இருந்தது? முதலாவது தடவை அவர்களுக்கு இறைச்செய்தி –வஹி- எப்போது இறங்கியது?
பதில் : நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதற்குத் தேவையான கட்டுச்சாதனங்களை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்.
நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு வஹி -இறைச்செய்தி- இறங்கியது.
கேள்வி 15 : நபியவர்களுக்கு முதலில் இறங்கிய அல்குர்ஆன் வசனங்கள் எவை?ஸுறா அலக்கின் முதல் ஐந்து வசனங்கள்
பதில் : பின்வரும் வசனம் : நபியோ! யாவற்றையும் படைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான் 2. ஓதுவீராக! உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான். அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான். மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான். تقدم
கேள்வி 16 : இறைத்தூதை -இஸ்லாத்தை- முதன் முதலில் ஏற்றுக் கொண்டோர் யார்?
பதில் : - ஆண்களில் : அபூபக்ர் அஸ்ஸித்தீக்.
- பெண்களில்: கதீஜா பின்த் குவைலித்.
- சிறுவர்களில்: அலி இப்னு அபீதாலிப் ஆவர்.
- உரிமையிடப்பட்டவர்களில்: ஸைத் இப்னு ஹாரிஸா.
- மேலும் அடிமைகளில்: பிலால் அல் ஹபஷி ரழியல்லாஹு அன்ஹும்.
கேள்வி 17: இஸ்லாத்திற்கான பிரச்சாரம் ஆரம்பத்தில் எவ்வாறு காணப்பட்டது?
பதில் : மூன்று வருடங்கள் பிரச்சார நடவடிக்கை இரகசியமாக இருந்தது. பின்னர் பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு இறை கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கேள்வி 18: பகிரங்க பிரச்சாரத்தின் பின் நபியவர்களின் நிலையும் அவர்களை ஏற்றுக்கொண்டோரின் நிலையும் எவ்வாறு இருந்தது?
பதில் : இணைவைப்பாளர்கள் நபியவர்களையும்; முஸ்லிம்களையும்; மிகவும் துன்புறுத்தினர். அதனால் நபியவர்கள் அபீஸீனியா மன்னனான நஜாஷியிடம் ஹிஜ்ரத் செல்ல முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
இணைவைப்பாளர்களான முஷ்ரிகுகள் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்தி கொலை செய்வதற்கு ஒன்றுபட்ட வேளை அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான். தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நபியவர்கள் தனது சிறிய தந்தையை அணுகினார்கள்.
கேள்வி 19 :நபித்துவத்தின் பத்தாம் வருடத்தில் மரணித்தோர் யாவர்?
பதில் : இவ்வருடத்தில் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபும் அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்களும் மரணித்தார்கள்.
கேள்வி 20 : இஸ்ராஃ மிஃராஜ் விண்னுலகப் பயணம் எப்போது நிகழ்ந்தது?
பதில்- நபியவர்களின் ஐம்பதாவது வயதில் இடம் பெற்றது. அந்நிகழ்வின் போது ஐவேளைத் தொழுகை அவர்களின் மீது கடமையாக்கப்பட்டது.
அல் இஸ்ராஉ என்பது மக்காவில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு சென்றதைக் குறிக்கும்.
அல் மிஃராஜ் என்பது அல்மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகத்திற்கும் அங்கு ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரையிலும் சென்றதைக் குறிக்கும்.
கேள்வி 21 : மக்காவிற்கு வெளியே உள்ளவர்களை நபியவர்கள் எப்படி இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள்?
பதில் : நபியவர்கள் தாஇப் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார்கள். அது மாத்திரமின்றி பருவகாலங்களிலும் மக்கள் ஒன்று கூடுமிடங்களிலும் தன்னை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள் இவ்வேளை மதீனாவைச் சேர்ந்த அன்ஸாரிகளில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏற்றுக்கொண்டு (ஈமான் கொண்டு) அவர்களுக்கு உதவி செய்வதாக சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.
கேள்வி 22: மக்காவில் நபியவர்கள் எத்தனை வருடங்கள் தங்கியிருந்து பிரச்சாரம் செய்தார்கள்?
பதில் : (13) பதின்மூன்று வருடங்கள் இருந்தார்கள்.
கேள்வி 23: நபியவர்கள் எங்கு ஹிஜ்ரத் சென்றார்கள்?
பதில் : மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
கேள்வி 24 : மதீனாவில் நபியவர்கள் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள்?
பதில் : பத்து வருடங்கள்
கேள்வி 25 : மதீனாவில் விதியாக்கப்பட்ட மார்க்கக்கடமைகள் எவை?
பதில் : ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத், அதான் மற்றும் இஸ்லாத்தின் ஏனைய சட்டதிட்டங்கள் விதியாக்கப்பட்டன.
கேள்வி 26 : நபியவர்கள் கலந்து கொண்ட மிகவும் முக்கியமான யுத்தங்கள் எவை?
பதில்: - பத்ர் யுத்தம்: ஹிஜ்ரி இரண்டாம் வருடம்.
- உஹுத் யுத்தம்: ஹிஜ்ரி மூன்றாம் வருடம்.
- அஹ்ஸாப் போர்: ஹிஜ்ரி ஐந்தாம் வருடம்.
- மக்காவை வெற்றிக்கொள்வதற்கான போர். ஹிஜ்ரி எட்டாம் வருடம்..
கேள்வி 27 : அல் குர்ஆனில் இறுதியாக இறங்கிய வசனம் எது?
பதில் : பின்வரும் வசனம் : அல்லாஹ்விடம் மீட்டப்படும் நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல் பகரா : 281)
கேள்வி 28: நபி (ஸல்) அவர்கள் எப்போது மரணித்தார்கள்? அப்போது அவர்களுக்கு வயது எத்தனை?
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி (11) பதினொராவது வருடம் ரபீஉனில் அவ்வல் மாதம் மரணித்தார்கள். அப்போது அவர்களின் வயது (63) அறுபத்து மூன்றாகும்.
கேள்வி 29: நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் பெயர்களைக் குறிப்பிடுக.
பதில் : 1- கதீஜா பின்த் குவைலிது (ரழியல்லாஹு அன்ஹா).
2- சவ்தா பின்த் ஸம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா).
3-ஆயிஷா பின்த் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹா).
4- ஹஃப்ஸா பின்த் உமர் (ரழியல்லாஹு அன்ஹா).
5- ஸைனப் பின்த் குஸைமா (ரழியல்லாஹு அன்ஹா).
6- உம்மு ஸலமா ஹின்த் பின்த் அபீ உமைய்யா (ரழியல்லாஹு அன்ஹா).
7- உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபீஸுப்யான் (ரழியல்லாஹு அன்ஹா).
8- ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹா).
9- மய்மூனா பின்த் அல்ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹா).
10- ஸஃபிய்யா பின்த் ஹுயைய் (ரழியல்லாஹு அன்ஹா).
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா
கேள்வி 30 : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிள்ளைகள் யார்?
பதில் : ஆண் குழந்தைகள் மூவர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :
அல் காஸிம், நபியவர்கள் இவரின் பெயரைக் கொண்டே புனைப்பெயர் சூட்டி அழைக்கப்பட்டார்கள் .(அபுல் காஸிம்).
அப்துல்லாஹ்.
இப்ராஹீம்.
பெண்பிள்ளைகளில் :
பாத்திமா.
ருகைய்யா.
உம்மு குல்ஸூம்.
ஸைனப் ஆகியோர்களாவர்.
இப்ராஹீமைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் கதீஜா (ரழி) அவர்களின் மூலம் கிடைத்த பிள்ளைகளாகும். இப்ராஹீம் மாத்திரம் மாரியா அல்கிப்திய்யா அவர்களுக்கு பிறந்தவராவார். மேலும் பாத்திமா (ரழி) அவர்களைத் தவிர எல்லாப் பிள்ளைகளும் நபியவர்களுக்கு முன்னரே மரணித்துவிட்டார்கள். பாத்திமா (ரழி) அவர்கள் நபியவர்கள் மரணித்து 6 ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.
கேள்வி 31: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இயற்கைத் தோற்றம் குறித்த சில பண்புகளைக் குறிப்பிடுக :
பதில்: நபி (ஸல்) அவர்கள் அதிகம் குட்டையாகவோ அதிகம் உயரம் கொண்டவராகவோ இருக்கவில்லை, மாறாக அவர்கள் நடுத்தர உயரமுடையவராகவும், சிவப்பு நிற சாயல் கொண்ட வெள்ளை நிற மேனியை உடையவராகவும் இருந்தார். அத்துடன் அடர்ந்த தாடியும், அகலமான இருகண்களும், பெரிய வாயையும் உடையவராகவும் காணப்பட்டார்கள். அவர்களின் முடி மிகவும் கருமையானதாக இருந்தது, அத்துடன் அழகான அகன்ற இரு புயங்களையும் நறுமணம் கொண்டவராகவும் காணப்பட்டார். இவை அல்லாத அவர்களின் அழகான தோற்றம் குறித்த பல விடயங்கள் உள்ளன.
32- கேள்வி : நபி (ஸல்) தனது சமூகத்தை எதில் விட்டுவிட்டுச் சென்றார்கள்?
பதில் : நபி (ஸல்) தனது சமூகத்தை மிகவும் தெளிவான ஒரு பாதையில் விட்டுவிட்டுச் சென்றார்கள். அதன் இரவோ பகல் போன்று பிரகாசமாக உள்ளது. அதனை மனமுரண்டாக புறக்கணித்து நடந்தவன் தவிர வேறு எவரும் நெறிதவரி வழிதவறமாட்டான். எந்த ஒரு நன்மையான நல்ல காரியமாக இருந்தாலும் அதனை காட்டித்தராமலோ, எந்த ஒரு தீமையான காரியமாக இருந்தாலும் அது குறித்து எச்சரிக்கை செய்யாமலோ இந்த சமூகத்தை அவர்கள் விட்டுச்செல்லவில்லை.
*******
தப்ஸீர் (அல் குர்ஆன் விளக்கவுரை) பகுதி
தப்ஸீர் (அல் குர்ஆன் விளக்கவுரை) :
தஃப்ஸீர் (التفسير): என்பது (அகீதா) , கொள்கைகள், வணக்கவழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், நற்பண்புகள், ஹலால் மற்றும் ஹராம், ஏவல் மற்றும் விலக்கல் போன்றவற்றில் வழிகாட்டுதலை உள்ளடக்கிய கண்ணியமிக்க அல்குர்ஆன் வசனங்களின் கருத்துக்களை அறியும் அறிவாகும்.
குறிப்பு: இப்பகுதி வசனங்களை மனனம் செய்வதற்கும் அவற்றின் பொருளை விளங்குவதற்கும் உரியதாகும்.
கேள்வி 1 : ஸூறதுல் பாத்திஹாவை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் பாத்திஹாவும் அதன் விளக்கவுரையும் :
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! 2 (அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; 3 கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! 4 (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. (அது) நீ யார் மீது அருள்புரிந்தாயோ அவர்ளின் வழி. (அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று. (அல் பாதிஹா : 1 - 7).
விளக்கவுரை (தப்ஸீர்) :
ஸூறதுல் பாதிஹா மூலம் அல்குர்ஆன் ஆரம்பிக்கப்பட்டதால் அல் பாத்திஹா-திறவுகோள்- என்றபெயரால் இவ்வத்தியாயம் அழைக்கப்படுகிறது.
1. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) அல்லாஹ்விடம் உதவிதேடியவனாகவும், அவனது பெயரைக் கூறுவதன் மூலம் அருள்வளத்தை எதிர்பார்த்தவனாகவும் அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கிறேன்.
- ﴿அல்லாஹ்﴾ அதாவது: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன், இப்பெயர் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது அவனைத் தவிர வேறு எவரும் இப்பெயர் மூலம் அழைக்கப்படமாட்டார்கள்.
- ﴿அர்ரஹ்மான்﴾ என்பது: விசாலமிக்க அருளுக்குச் சொந்தக்காரன், அவனது அருள் அனைத்து படைப்பினங்கள் மீதும் வியாபித்துள்ளது.
- அர்ரஹீம் அதாவது: இறைவிசுவாசிகளுக்கு பிரத்தியேகமாக அன்பு காட்டுபவன்.
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! அதாவது: அனைத்து விதமான புகழ்களும் பரிபூரண நிலையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது என்பதாகும்.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் இதன் கருத்தாவது எல்லாவற்றிலும் வியாபித்துக் காணப்படுகின்ற விசாலாமான பரந்த அருளுக்குச் சொந்தக்காரன்; மேலும் இறைவிசுவாசிகளான முஃமின்களுக்கு விசேடமாக அருள்பாலிப்பவன்.
4. கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! 4: இங்கு கூலி கொடுக்கப்படும் நாள் என்பது மறுமை நாளாகும்.
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். இதன் கருத்தாவது : உன்னை மாத்திரமே வணங்குகிறோம் உன்னிடம் மாத்திரமே உதவியும் தேடுகிறோம் என்பதாகும்.
எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. இது இஸ்லாம் மற்றும் ஸஹீஹான நபிவழியின் பால் நேர்வழி பெறுவதைக் குறிக்கும்.
(அது) நீ யார் மீது அருள்புரிந்தாயோ அவர்ளின் வழி. (அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று. அதாவது: நபிமார்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நல்லடியார்கள் சென்ற பாதையாகும், மாறாக யூத, கிறிஸ்தவர்கள் சென்ற பாதைகள் அல்ல.
இவ்வத்தியாயத்தை ஓதி முடித்ததும் (ஆமீன்) என்று கூறுவது நபிவழியாகும் ஆமீன் என்பதன் பொருள் இறைவா! எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக என்பதாகும்.
கேள்வி: ஸூறா ஸல்ஸலாவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?
பதில் : ஸூறா ஸல்ஸலாவும் அதன் விளக்கவுரையும் :
பூமி மிகப்பலமாக அதிர்வுக்குள்ளாக்கப்படும்போது இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை வெளிப்படுத்தும் போது, மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறும்போது 3 அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும். உம் இறைவனே அதற்கு (இவ்வாறு) கூறுமாறு கட்டளையிட்டுள்ளான் அந்நாளில் மனிதர்கள் தம் செயல்களைப் பார்ப்பதற்காக கூட்டங் கூட்டங்களாகப் சிதறுண்டு புறப்பட்டுச் செல்வர். யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். (அஸ்ஸல்ஸலாஹ் : 1-8).
விளக்கவுரை (தப்ஸீர்) :
1. ﴿إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا1﴾: பூமி மிகப்பலமாக அதிர்வுக்குள்ளாக்கப்படும்போது மறுமை நாள் நிகழும் சந்தர்ப்பத்தில் பூமி பலமாக உலுக்கப்படும் போது
2. இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை வெளிப்படுத்தும் போது, இதன் கருத்து :அது தன்னுள் இருக்கும் இறந்தவர்களையும் ஏனையவற்றையும் வெளியேற்றிவிடும்.
3. இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.இதன் கருத்து : மனிதன் தடுமாற்றமடைந்தவனாகக் கேட்பான்: “ஏன் இந்த பூமி ஆட்டம் காணுகிறது?”
4. அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.இதன் கருத்து : அந்த மாபெரும் நாளில் பூமியானது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும்.
அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று. ஏனெனில் அல்லாஹ் அதற்கு அவற்றை அறிவித்துக்கொடுத்து அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.
அந்நாளில் மனிதர்கள் தம் செயல்களைப் பார்ப்பதற்காக கூட்டங் கூட்டங்களாகப் சிதறுண்டு புறப்பட்டுச் செல்வர். (இதன் கருத்து : பூமி உலுக்கப்படும் அந்த மாபெரும் நாளில் மக்கள் விசாரணை நிலையத்திலிருந்து உலகில் தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக குழு குழுவாக வெளியேறி வருவார்கள்.
ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். அதாவது :யார் சிறிய எறும்பு அளவு நற்செயல் புரிந்திருப்பாரோ அதனை அவர் தனக்கு முன்னால் காண்பார்.
8. யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.8 யார் ஒருவர் அணுவளவேனும் தீய காரியத்தை செய்திருப்பினும் அதனை தன் முன்னால் கண்டுகொள்வார்.
கேள்வி 3 : ஸூறதுல் ஆதியாத்தை ஓதீ அதன் விளக்கத்தை குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் ஆதியாத்தும் அதன் விளக்கமும் :
அதி வேகமாக முச்சுத் தினர ஓடுபவைகள் மீது சத்தியமாக இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, 2 இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, 3 அவை அதில் புழுதியைக் கிளப்பி அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான். நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான். நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் தீவிரமாக உள்ளான் 8 புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? 10 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான். 11﴾ (அல் -ஆதியாத் 1-11).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(வல் ஆதியாத்தி ழப்ஹன் ) அதி வேகமாக முச்சுத் தினர ஓடுபவைகள் மீது சத்தியமாக ,இதன் கருத்தாவது, வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
(பல் மூரியாத்தி கத்ஹன்):" "இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, இதன் கருத்தாவது, தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
பல் முகீராத்தி ஸுப்ஹன்). இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
பஅஸர்ன பிஹி நக்அன்)அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின. அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்பின.
(பவஸத்ன பிஹிஜம்அன் )அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக, வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன.
(இன்னல் இன்ஸான லிரப்பிஹி லகனூத் )நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான். நிச்சயமாக மனிதன் தன் இறைவன் தன்னிடமிருந்து விரும்பும் நன்மையை தடுத்துக்கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான்.
(வஇன்னஹு அலா தாலிக லஷஹீத்) இன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான். அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது.
8. நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் மிகத்தீவரமாக உள்ளான். (கருத்து) நிச்சயமாக அவன் செல்வத்தின் மீதுள்ள மோகத்தினால் அதில் கஞ்சத்தனம் செய்கிறான்.
அபலா யஃலமு மாபில் குபூர் )புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? (கருத்துரை))இவ்வுலக வாழ்க்கையில் மயங்கிய இந்த மனிதன், அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்பி, பூமியிலிருந்து அவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் வெளியேற்றும் போது விஷயம் அவன் எண்ணியது போல் இருக்காது என்பதை அறியவில்லையா?
"10. இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? கருத்து) உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும் தெளிவாக்கப்படும்.
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்11. (கருத்து)நிச்சயமாக அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். தன் அடியார்களின் விடயம் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அதற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
கேள்வி: ஸூறா காரிஆவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?
பதில்: ஸூறதுல் காரிஆவும் அதன் விளக்கவுரையும் :
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).1 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? 2 (நபியே!) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?3 அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் இருப்பார்கள். 4 இன்னும், (அந்நாளில்) மலைகள் சிதறி சிகை நீக்கப்பட்ட கம்களி மயிர்கள் போல் ஆகிவிடும்.5 எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- 6 ஆக, அவர் திருப்தியான வாழ்க்கை வாழ்வார் 7 ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் பாரமற்று இலேசாகி விட்டனவோ, 8 அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான் 9. (நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 10 (அது) கடுமையான வெப்பம் நிறைந்த நெருப்பாகும். 11 திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
விளக்கவுரை (தப்ஸீர்) :
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).1 கருத்துரை)மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி நிகழும்) நேரம்
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? 2 கருத்துரை)மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?
(நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? கருத்துரை)-தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும்.
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் இருப்பார்கள். 4 கருத்துரை)மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்.
இன்னும், (அந்நாளில்) மலைகள் சிதறி சிகை நீக்கப்பட்ட கம்களி மயிர்கள் போல் ஆகிவிடும்.5. கருத்துரை)மலைகள் அவற்றின் மெதுவான நகர்வு மற்றும் இயக்கத்தில் கடையப்பட்ட கம்பளி போன்று மென்மையானதாக ஆகிவிடும்.
ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ, கருத்துரை)யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.
அவர் திருப்தியான வாழ்க்கை வாழ்வார் கருத்துரை)அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார்.
ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் பாரமற்று இலேசாகி விட்டனவோ, கருத்துரை)யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.
அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான். கருத்துரை)மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்.
"(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? -கருத்துரை)தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
"(அது) கடுமையான வெப்பமான நெருப்பாகும்நெருப்பாகும்.(11) கருத்துரை)அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும்.
கேள்வி 5 : ஸூறதுத் தகாஸுரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுத் தகாஸுரும் அதன் விளக்கவுரையும் :
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது(1) நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.(2) அவ்வாறன்று (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 3. பின்னர் அவ்வாறன்று, விரைவில்(இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள் .4 அவ்வாறன்று மிக நன்றாக நீங்கள் அறிவீர்களாயின் (உங்களை அது பராக்கியிருக்காது). 5 நிச்சயமாக நீங்கள் நரகத்தை காண்பீர்கள் 6 பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள் 7 பின்னர் அந்நாளில் அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.. (ஸூறதுத் தகாஸுர் 1-8).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(அல்ஹாகுமுத் தகாஸுர் )செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது(1) என்பதன் கருத்து : -மனிதர்களே!- செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் பராக்காக்கி விட்டது.
ஹத்தா ஸுர்துமுல் மகாபிர் (நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.(2) என்பதன் கருத்து நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை இந்நிலை நீடிக்கும்
கல்லா ஸவ்ஃப தஅ்லமூன் 3(அவ்வாறன்று (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்)என்பதன் கருத்து அவற்றைக் கொண்டு பெருமையடிப்பது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதை விட்டும் உங்களைத் திருப்பிவிடக் கூடாது. அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.
ஸும்ம கல்லா ஸவ்ஃப தஅ்லமூன்(பின்னர் அவ்வாறன்று, விரைவில்(இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.என்பதன் கருத்து பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.
கல்லா லவ் தஅ்லமூன இல்மல் யகீன் 5 (அவ்வாறன்று மிக நன்றாக நீங்கள் அறிவீர்களாயின் (உங்களை அது பராக்கியிருக்காது)என்பதன் கருத்து: உண்மையில் , உங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி திட்டமாக உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் பெருமையடிப்பதில் ஈடுபடமாட்டீர்கள்.
லதரவ்வுன்னல் ஜஹீம் 6 (நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.என்பதன் கருத்து நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை நேரில் காண்பீர்கள்.
ஸும்ம லதரவ்வுன்னஹா ஐனல் யகீன்7. (பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.)என்பதன் கருத்து பின்னர் அதனை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் காண்பீர்கள்.
(ஸும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇத்தின் அனின் நஈம்)பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.என்பதன் கருத்து: அந்த நாளில் அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த ஆரோக்கியம், செல்வம், இன்னபிற அருட்கொடைகளைக் குறித்து உங்களிடம் கேள்வி கேட்பான்.
கேள்வி 6 : ஸூறதுல் அஸ்ரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் அஸ்ரும் அதன் விளக்கவுரையும் :
காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான் 2 எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (ஏனையோர் நஷ்டமடைந்தோராவார்) 3 (ஸுறா அல்-அஸ்ர் -1-3)
விளக்கவுரை (தப்ஸீர்) :
வல் அஸ்ர் :என்பதன் கருத்து அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்கின்றான்.
இன்னல் இன்ஸான லபி குஸ்ர் 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.2என்பதன் கருத்து அதாவது மனிதர்கள் யாவரும் ஏதோ ஒரு குறையிலும் நஷ்டத்திலும் உள்ளனர்.
3.இல்லல்லதீன ஆமனு வஅமிலுஸ்ஸாலிஹாதி வதவாஸவ்பில் ஹக்கி வதவாஸவ்பிஸ்ஸப்ரி )எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர.(ஏனையோர் நஷ்டமடைந்தோராவார்)என்பதன் கருத்து எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்து, சத்தியத்தின் பால் அழைப்பு விடுத்து, அதில் பொறுமையாக இருந்தார்களோ, அவர்களே நஷ்டத்திலிருந்து தப்பியவர்களாவார்கள்.
கேள்வி : ஸூறதுல் ஹுமஸாவை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் ஹுமஸாவும் அதன் விளக்கவுரையும் :
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.1 அவன் செல்வத்தைத் திரட்டி எண்ணிக்கொண்டிருக்கிறான்., 2 நிச்சயமாக, தன் செல்வம் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.3 அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.4 (நபியே!) “ஹூதமா” என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 5 அதுதான் மூட்டி விடப்பட்டஅல்லாஹ்வின் நெருப்பாகும். 6 இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது 7 நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.) நீண்ட கம்பங்களில் அவர்கள் கட்டப்படுவார்கள்). 9﴾ (ஹுமஸா : 1-9).
விளக்கவுரை (தப்ஸீர்) :
வைலுல் லிகுல்லி ஹுமஸதின் லுமஸஹ் (குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.1) இதன்கருத்து: மக்களைப் பற்றி அதிகம் புறம்பேசி குறைகூறித் திரிபவர்களுக்கு கடும் வேதனையும் கேடும்தான் உண்டாகும்.
அல்லதீ ஜமஅ மாலன் வஅத்ததஹ் (அவன் செல்வத்தைத் திரட்டி எண்ணிக்கொண்டிருக்கிறான்., 2) இதன்கருத்து: அவனின் முழு ஈடுபாடும் - நோக்கும்_அவனது செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறுஈடுபாடுஅவனுக்கு இல்லை.
3. யஹ்ஸபு அன்ன மாலஹூ அக்லதஹ் நிச்சயமாக, தன் செல்வம் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.3.இதன்கருத்து: தான் சேகரித்த செல்வங்கள் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ முடியும் என்றும் அவன் எண்ணுகிறான்.
(கல்லா லயுன்பதன்ன ஃபில் ஹுதமஹ்")அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்.இதன்கருத்து: இந்த மடையன் எண்ணுவது போலல்ல விடயம். தன்னில் வீசப்படும் அனைத்தையும் தனது கடுமையான சக்தியின் காரணமாக நசுக்கி உடைத்து விடும் நரக நெருப்பில் அவன் நிச்சயம் வீசப்படுவான்.
வமா அத்ராக மல் ஹுதமஹ்)(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?இதன்கருத்து: -தூதரே!- தன்னில் எறியப்படும் அனைத்தையும் நசுக்கிவிடும் நரக நெருப்பு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
நாருல்லாஹில் மூகதஹ்.3 (அதுதான் அல்லாஹ்வுடைய எரிக்கப்பட்ட நெருப்பாகும்.)இதன்கருத்து: நிச்சயமாக அது எரியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அல்லதீ தத்தலிஉ அலல் அஃப்இதஹ்)இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது.(இதன்கருத்து: அது மனிதனின் உடலிலிருந்து இதயம் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும்.
இன்னஹா அலைஹிம் முஅ்ஸதஹ்)நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)இதன்கருத்து: நிச்சயமாக அது அதில் வேதனை செய்யப்படுபவர்களின் மீது மூடப்பட்டிருக்கும்.
ஃபீ அமதிம் முமத்ததஹ் )நீண்ட கம்பங்களில் அவர்கள் கட்டப்படுவார்கள்). 9 அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவைகள் நீளமான கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும்.
கேள்வி 8 : ஸூறதுல் பீலை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில்: ஸூறதுல் பீலும் அதற்கான தப்ஸீர் விளக்கமும் :
யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?1 அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா? 2 இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான் 3 அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன 4. அதனால். மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான். 5 (அல்பீல் : 1-5).
விளக்கவுரை (தப்ஸீர்) :
அலம் தர கைஃப ஃபஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல் (யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?1) இதன் கருத்து: -தூதரே!- அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அலம் யஜ்அல் கைதஹும் ஃபீ தழ்ளீல்(அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா? இதன் கருத்து: கஃபாவை இடிப்பதற்கான அவர்களின் தீய சூழ்ச்சியை(சதித்திட்டத்தை) அல்லாஹ் தோல்வியடையச் செய்தான். அதனால் கஃபாவை விட்டும் மக்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. அதில் எதனையும் அவர்களால் தொடக்கூட முடியவில்லை.
வஅர்ஸல அலைஹிம் தய்ரன் அபாபீல் (இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான் 3இதன் கருத்து: அவர்கள் மீது அல்லாஹ் பறவைகளை அனுப்பினான். அவை கூட்டங் கூட்டமாக அவர்களை நோக்கி வந்தன.
(தர்மீஹிம் பிஹிஜாரதிம் மின் ஸிஜ்ஜீல்)அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.(4)3இதன் கருத்து: சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
ஃபஜஅலஹும் கஅஸ்ஃபிம் மஃகூல்(அதனால். மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான். 5 அல்லாஹ் அவர்களை விலங்குகள் தின்று மிதித்துவிட்ட வைக்கோலைப் போன்று ஆக்கிவிட்டான்.
கேள்வி 9 : ஸூறதுல் குறைஷை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில்: ஸூறதுல் குறைஷும் அதற்கான தப்ஸீர் விளக்கமும் :
குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- இஅதனால். ந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும் 3 அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான். (குரைஷ் : 1 - 4)
விளக்கவுரை (தப்ஸீர்) :
லீஈலாஃபி குறைஷ் (குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, இதன் கருத்தாவது, குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொண்டிருந்ததேயாகும்.
ஈலாஃபிஹிம் ரிஹ்லதஷ் ஷிதாஇ வஸ்ஸைஃப் (மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-) இதன் கருத்து: அவர்கள் அச்சமின்றி யமனை நோக்கிச் செல்லும் குளிர்காலப் பயணத்தையும் ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும் கோடைகாலப் பயணத்தையும்.
இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும். ஆகவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு இந்தப் பயணத்தை இலகுபடுத்திக் கொடுத்தான். அவனுக்கு இணையாக அவர்கள் யாரையும் ஆக்க வேண்டாம்.
அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான். அறபுகளின் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, அவன்தான் அவர்களுக்குப் பசிக்கு உணவளித்தான்; மேலும் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
கேள்வி 10 : ஸூறதுல் மாஊனை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் மாஊனும் அதன் விளக்கமும் :
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா? ஆக, அத்தகையோனே அநாதைகளை (ஈவிரக்கமின்றி) விரட்டுகிறான். . 2 அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.3 இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான் 4 அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.5 அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள் 6 இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள். (ஸூறதுல் மாஊன் 1-7) (கைமாறாகப் பரிமாறப்படும் சிறு பொருட்கள்).
விளக்கவுரை (தப்ஸீர்) :
அரஅய்தல்லதீ யுகத்திபு பித்தீன் ((நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?) இதன் கருத்து மறுமை நாளில் கூலி கொடுக்கப்படுவதை மறுப்பவனை உமக்குத் தெரியுமா?
(ஃபதாலிகல்லதீ யதுஉல் யதீம்)ஆக, அத்தகையோனே அநாதைகளை (ஈவிரக்கமின்றி) விரட்டுகிறான். இதன் கருத்து : அவன்தான் அநாதைகளின் தேவைகளை நிறைவேற்றாமல் கடுமையான முறையில் அவர்களைத் தள்ளிவிடுபவன்.
(வலா யஹுத்து அலா தஆமில் மிஸ்கீன்)அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.இதன் கருத்து : அவன் தன்னையோ, மற்றவர்களையோ ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.
ஃபவைலுல் லில்முஸல்லீன்)இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்4 தொழுகையாளிகளுக்கு அழிவும் வேதனையும் உண்டாகும்.
٥. அஅல்லதீன ஹும் அன் ஸலாத்திஹிம் ஸாஹூன்)வர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.5 அவர்கள் தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருக்கிறார்கள். அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.
அல்லதீன ஹும் யுராஊன்)அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.5 அவர்கள் தங்களின் தொழுகையையும் செயல்பாடுகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காகவே செய்கிறார்கள். அல்லாஹ்வுக்காக மட்டும் அமல்களை செய்வதில்லை.
வயம்னஊனல் மாஊன்)இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.7 உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள்.
கேள்வி 11 : ஸூறதுல் கவ்ஸரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் கவ்ஸரும் அதன் விளக்கவுரையும் :
இன்னா அஃதய்னா கல்கவ்ஸர் 1((நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (எண்ணற்ற நன்மைகளை) உமக்குக் கொடுத்திருக்கின்றோம். இதன் கருத்து : ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக! 2 நிச்சயமாக உம் பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன் 3﴾ (அல் கவ்ஸர்: 1-3)
விளக்கவுரை (தப்ஸீர்) :
(இன்னா அஃதய்னாகல் கவ்ஸர்)1(நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (எண்ணற்ற நன்மைகளை) உமக்குக் கொடுத்திருக்கின்றோம். இதன் கருத்து: -தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று.
(ஃபஸல்லி லிரப்பிக வன்ஹர்)2ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!இதன் கருத்து: இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக.
இன்ன ஷானிஅக ஹுவல் அப்தர்)நிச்சயமாக உம் பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன் 3இதன் கருத்து: நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான்.
கேள்வி 12 : ஸூறதுல் காபிரூனை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் காபிரூனும் அதன் விளக்கமும்:
(நபியே!) நீர் கூறுவீராக: நிராகரிப்போரே!1 நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன் 2. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. இன்னும்,நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன் 4 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.5 உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும். நிராகரிப்பாளர்கள்
விளக்கவுரை (தப்ஸீர்) :
குல் யா அய்யுஹல் காஃபிரூன்1((நபியே!) நீர் கூறுவீராக: நிராகரிப்போரே!(இதன் கருத்து: -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!”
லா அஃபுது மா தஃபுதூன்நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.2 இதன் கருத்து: நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்.
வலா அன்தும் ஆபிதூன மா அஃபுத்)இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.(இதன் கருத்து: நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.
வலா அனா ஆபிதும் மா அஃபத்தும்) 4இன்னும், நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவனாக இல்லை.இதன் கருத்து நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல.
வலா அன்தும் ஆபிதூன மா அஃபுத்) 5இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.இதன் கருத்து நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.
லகும் தீனுகும் வலிய தீன்) 6உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.இதன் கருத்து உங்களுக்கு நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மார்க்கம். எனக்கு அல்லாஹ் என்மீது இறக்கிய மார்க்கம்.
கேள்வி 10 :ஸூறதுன்னஸ்ரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுன்னஸ்ரும் அதன் விளக்கவுரையும் :
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, 1 அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,, 2 ஆக, உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! இன்னும், அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக, தவ்பாவை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.3 (அந்நஸ்ர்: 1-3)
விளக்கவுரை (தப்ஸீர்) :
இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்ஃபத்ஹ் ((நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, 1)இதன் கருத்து: -தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது.
வரஅய்தன்னாஸ யத்குலூன ஃபீ தீனில்லாஹி அஃப்வாஜா2( இன்னும், மக்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்த்தால்,இதன் கருத்து: இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது.
ஃபஸப்பிஹ் பிஹம்தி ரப்பிக வஸ்தஃபிர்ஹு, இன்னஹூ கான தவ்வாபா)3 உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! இன்னும், அவனிடம் மன்னிப்புக் கோருவீராக,நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக, தவ்பாவை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.3இதன் கருத்து: அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதையும், உமது தவணை முடிவடைந்து உமது இறைவனை நீர் சந்திக்கும் காலம் நெருங்கிவிட்டதற்கான அடையாளம் என்பதையும் அறிந்துகொள்வீராக. எனவே, உதவி மற்றும் வெற்றி எனும் அருள் கிடைத்தமைக்கு நன்றி செலுத்தும் முகமாக உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்வீராக. மேலும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்று அவர்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
கேள்வி 14 :ஸூறதுல் மஸதை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் மஸதும் அதன் விளக்கவுரையும் :
அபூலஹபின் இரு கைகளும் நாசமடையட்டும் அவனும் அழியட்டும்,1 அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.) மறுமையில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான். 3 இன்னும், (விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும்(_அந்நரகில் நுழைவாள்).. 4 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு ஒன்று இருக்கும்;(அதனால் அவளும் அழிவாள்). (அல்மஸத் : 1-5).
விளக்கவுரை (தப்ஸீர்) :
தப்பத் யதா அபீ லஹபிவ் வதப்ப1(அபூலஹபின் இரு கைகளும் நாசமடையட்டும் அவனும் அழியட்டும்)இதன் கருத்து: நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான அபூலஹப் பின் அப்துல் முத்தலிபின் நஷ்டமான செயலினால் அவனது இரு கரங்களும் அழிந்துவிட்டன. ஏனெனில் அவன் நபி (ஸல்) அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது.
மா அக்னா அன்ஹு மாலுஹூ வமா கஸப்)2அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)இதன் கருத்து: அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவனின் செல்வம் அவனை விட்டும் வேதனையைத் தடுக்கவுமில்லை. இறையருளையும் அவனுக்குப் பெற்றத்தரவில்லை.
ஸயஸ்லா நாரன் தாத லஹப் )3மறுமையில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான். 3.இதன் கருத்து: அவன் மறுமை நாளில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில்பிரவேசிப்பான். அதன் வெப்பத்தை அனுபவிப்பான்.
இன்னும், (விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும்(_அந்நரகில் நுழைவாள்)).இதன் கருத்து: நபி (ஸல்) அவர்கள் செல்லும் பாதையில் முட்களைப் போட்டுத் தொல்லையளித்துக் கொண்டிருந்த அவனது மனைவியான உம்மு ஜமீல் அதில் நுழைவாள்.
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு ஒன்று இருக்கும்;(அதனால் அவளும் அழிவாள்.இதன் கருத்து: அவளது கழுத்தில் மிகவும் இருக்கமாக திரிக்கப்பட்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். அவள் அதன் மூலம் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவாள்.
கேள்வி 15 : ஸூறதுல் இக்லாஸை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் இக்லாஸும்; அதன் விளக்கவுரையும் :
1(நபியே!) நீர் கூறுவீராக: அவன்_ “அல்லாஹ்” ஒருவனே!1 அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்) 2 (அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)3 இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை. (ஸூறத்துல் இஹ்லாஸ்: 1-4
விளக்கவுரை (தப்ஸீர்) :
குல் ஹுவல்லாஹு அஹத் )1(நபியே!) நீர் கூறுவீராக: அவன்_ “அல்லாஹ்” ஒருவனே!1 -நபியே!- நீர் கூறுவீராக: அவன் அல்லாஹ், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.
அல்லாஹுஸ் ஸமத் 2. அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்).இதன் கருத்து: அதாவது படைப்புகளின் தேவைகள் அவனை நோக்கியே இருக்கிறது.
லம் யலித் வலம் யூலத்3(அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)இதன் கருத்து: எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை.
வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்4. இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை. இதன் கருத்து: அவனின் படைப்பில் அவனுக்கு ஒப்பாக எதுவும் எவருமில்லை.
கேள்வி 16: ஸூறதுல் பலகை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுல் பலகும் அதன் விளக்கவுரையும் :
(நபியே!) நீர் கூறுவீராக: வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.1 அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் 2. இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும், இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). 5﴾ (அல்பலக் : 1-5)
விளக்கவுரை (தப்ஸீர்) :
குல் அஊது பி ரப்பில் ஃபலக் 1(நபியே!) நீர் கூறுவீராக: வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.1இதன் கருத்து: -தூதரே!- நீர் கூறுவீராக: நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
மின் ஷர்ரி மா கலக் 1(அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.இதன் கருத்து: தீங்கு விளைவிக்கும் படைப்புகளின் தீங்குகளிலிருந்தும்.
வமின் ஷர்ரி காஸிகின் இதா வகப்3. இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும் இதன் கருத்து: இரவில் வெளிப்படும் உயிரினங்கள், கொள்ளையர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
வமின் ஷர்ரின்னஃப்பாஸாத்தி ஃபில் உகத்4. இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,இதன் கருத்து: முடிச்சுகளில் மந்திரித்து ஓதும் சூனியக்கார பெண்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).இதன் கருத்து: மக்களுடன் வெறுப்புக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள அருள்கள் அழிந்து விட வேண்டும் என பொறாமை கொள்ளும் பொறாமைக்காரனின் கெடுதியை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
கேள்வி 17 : ஸூறதுன்னாஸை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
பதில் : ஸூறதுன்னாஸும் விளக்கவுரையும் :
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன். 2 (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.3 வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவனும் , (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனுமாகிய ஷைத்தானின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான் 5 (இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர். ஸுறத்துன்னாஸ் :(1-6)
விளக்கவுரை (தப்ஸீர்) :
குல் அஊது பி ரப்பின்னாஸ்(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.இதன் கருத்து: -நபியே!- நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இரட்சகனிடம் பாதுகாப்பும் அடைக்கலமும் தேடுகிறேன்.
மலிகின்னாஸ்(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்இதன் கருத்து: அவன் நாடியவிதத்தில் அவர்களின் விவகாரங்களை கையாள்கிறான். அவனைத் தவிர அவர்களுக்கு வேறு அரசன் யாருமில்லை.
இலாஹின்னாஸ்(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவ:இதன் கருத்து: அவர்களின் உண்மையான வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர அவர்களுக்கு உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை.
மின் ஷர்ரில் வச்வாஸில் கன்னாஸ் 4வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவனும் , (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனுமாகிய ஷைத்தானின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).இதன் கருத்து மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் ஷைத்தானின் தீங்கை விட்டும்.
அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின்னாஸ்5அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்இதன் கருத்து:. அவன் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர்.6 இதன் கருத்து: இவ்வாறு தீய எண்ணங்களை ஏற்படுத்துவோர் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.
**********
ஹதீஸ் (நபிமொழிகள்) பகுதி
ஹதீஸ் கலை:
ஹதீஸ் என்பது நபி ﷺ அவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் சொல், செயல், அங்கீகாரம் அல்லது அவர்களின் உடலமைப்பு மற்றும்குணம் சார்ந்த பண்பு தொடர்பான விவரமாகும்
நபிமொழி -1
கேள்வி 1 : (இன்னமல் அஃமாலு பின்னிய்யாத் ) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் குறிப்பிடுக?
பதில் : அமீருல் முஃமினீன் அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும் என்றிருந்தால். அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- எல்லா அமல்களுக்கும் நிய்யத் - அவசியமாகும். தொழுகை நோன்பு ஹஜ் மற்றும் ஏனைய எல்லா வணக்களுக்கும் நிய்யத் என்பது அவசியமாகும்.
2- அல்லாஹ்வுக்காக நிய்யத் வைப்பதில் மனத்தூய்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
நபிமொழி -2
கேள்வி :2 ( மன் அஹதஸ பீ அம்ரரினா ஹாதா) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் குறிப்பிடுக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உம்மு அப்தில்லாஹ் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் : 'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவருடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- மார்க்கத்தில் நூதன அனுஷ்டானங்கள் - புதுமைகள் -உருவாக்கப்படுவதை தடை செய்தல்.
2- மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்கள் யாவும் ஏற்றுக்கொள்ளபடாது, அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
நபிமொழி -3
கேள்வி :3 (பைனமா நஹ்னு ஜுலூஸுன் இன்த ரஸுலில்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் குறிப்பிடுக.
பதில் : அன்உமரப்பனல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கால உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : பைனமா நஹ்னு ஜுலூஸுன் இண்ட ரஸூலில்லாஹி ﷺ தாத யவ்மின், இத் தலஅ அலைனா ரஜுலுன் ஷதீது பயாதில் லிபாஸி, ஷதீது ஸவாதிஷ் ஷஅ்ரி, லா யுரா அலைஹி அஸருஸ் ஸஃபரி, வலா யஅ்ரிஃபுஹு மின்னா அஹத். ஹத்தா ஜலஸ இலன்னபிய்யி ﷺ, ஃபஅஸ்னத ருக்பதஹு இலா ருக்பதைஹி, வவளஅ கஃப்பைஹி அலா ஃபகிதைஹி, வகால: “யா முஹம்மது! அக்பிர்னீ அனில் இஸ்லாம்.” ஃபகால லஹு: “அல்இஸ்லாமு: அன் தஷ்ஹத அன் லா இலாஹ இல்லல்லாஹு, வஅன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹி, வதுகீமஸ்ஸலாத், வதுஃத்திஸ்ஸகாத், வதஸூம ரமளான், வதஹுஜ்ஜல் பைத இனிஸ்ததஅ்த இலைய்ஹி ஸபீலா.” கால: “ஸதக்த.” ஃபஅஜிப்னா லஹு யஸ்அலுஹு வயுஸத்திகுஹு. கால: “அக்பிர்னீ அனில் ஈமான்.” கால: “அன் துஃமின பில்லாஹி, வமலாஇகதிஹி, வகுதுபிஹி, வருஸுலிஹி, வல்யவ்மில் ஆகிரி, வதுஃமின பில்கதரி கைரிஹி வஷர்ரிஹி.” கால: “ஸதக்த.” கால: “ஃபஅக்பிர்னீ அனில் இஹ்ஸான்.” கால: “அன் தஅ்புதல்லாஹ கஅன்னக தராஹு, ஃபஇல்லம் தகுன் தராஹு, ஃபஇன்னஹு யராக்க.” கால: “ஃபஅக்பிர்னீ அனிஸ்ஸாஅஹ்.” கால: “மல்மஸ்ஊலு அஃலமு மினஸ்ஸாஇல்.” கால: “ஃபஅக்பிர்னீ அன் அமாராதிஹா.” கால: “அன் தலிதல் அமது ரப்பதஹா, வஅன் தரல் ஹுஃபாதல் உராதல் ஆலத ரிஆஷ்ஷாஇ, யததாவலூன ஃபில்புன்யான்.”ஸும்மன்தலக ஃபலபிஸ மல்லிய்யன்.ஸும்ம கால: “யா உமர்! அதத்ரீ மனிஸ்ஸாஇல்?”கல்து: “அல்லாஹு வரஸூலுஹு அஃலம்.”கால: “ஃபஇன்னஹு ஜிப்ரீல், அதாகும் யுஅல்லிமுகும் தீனகும்.” கருத்து : ஒரு நாள் நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த, மிகவும் கருப்பான தலைமுடியையுடைய ஒரு மனிதர் எங்கள் முன் வந்து நின்றார். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் சென்று, தனது முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு சேர்த்து, தனது இரு கைகளையும் தன் தொடைகள் மீது வைத்து அமர்ந்தார். பின்னர், 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு அவர்கள், 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும்' என்றார்கள். இதற்கு அவர், 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்' என்றார். அவர் கேள்வி கேட்பதும் அதனை அவரே உண்மைப்படுத்துவதும் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர், 'ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும், அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், மேலும் நன்மையும் தீமையும் இறை விதியின்படியே நடக்கின்றன என்று நம்புவதுமாகும்' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர், 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்' என்றார். அதனைத் தொடர்ந்து அவர், 'இஹ்ஸான் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்' எனச் சொன்னார்கள். பின்னர் அவர், 'எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு, 'இந்தக் கேள்வியைக் கேட்கப்படுபவர், கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். பின்னர் அவர், 'அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு, 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்' என்றார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு, 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். 'அவர் ஜிப்ரீல் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1-இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவைகளாவன :
"உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்".
தொழுகையைக் கடைப்பிடிப்பிடித்தல் (நிலைநாட்டுதல்),
ஸகாத்தை தகுதியானோருக்கு கொடுத்தல்
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றல்,
புனித ஹஜ் கடமையை இறைஆலயத்திற்குச் சென்று நிறைவேற்றுதல்.
2- ஈமானின் அடிப்படை அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவை 6 ஆகும்.
அல்லாஹ்வை நம்புவதல்.
அவனுடைய மலக்குகளாகிய வானவர்களை நம்புதல்.
அவனுடைய வேதங்களை நம்புதல்.
அவனுடைய தூதர்களை நம்புதல்.
இறுதி நாளை நம்புதல்.
நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என்று நம்புதல்.
3 இஹ்ஸானின் ருக்ன் பற்றி குறிப்பிடப்பட்டிருத்தல் அதன் ருக்ன் ஒன்றாகும் . அதாவது, அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
4- மறுமை நாள் ஏற்படும் நேரம் குறித்து அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.
நபிமொழி -4
கேள்வி 4 : (அக்மலுல் முஃமினீன ஈமானன்) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- நற்குணத்தைக் கடைபிடிக்குமாறு தூண்டுதல்.
2- ஈமானின் பரிபூரணத்துவம் நிறைவான நற்குணத்தில் உள்ளது.
3- ஈமான் (நற்குணத்தால்) அதிகரிக்கும். (துர்குணங்களால்) குறைந்து விடும்.
நபிமொழி -5
கேள்வி 5 (மன் ஹலப பிகய்ரில்லாஹ்) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : 'யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அவனை நிராகரித்து விட்டார். அல்லது அவனுக்கு இணைவைத்துவிட்டார்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- அல்லாஹ்வைத் தவிர வேறு எவற்றிலும் சத்தியம் செய்வது கூடாது.
2- அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது சிறிய வகை ஷிர்க்காகும்.
நபிமொழி -6
கேள்வி 6 : (லா யுஃமினு அஹதுகும் ஹத்தா அகூன அஹப்ப இலைஹி) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் மிகவும் நேசத்துக்குரியராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
-அனைத்து மனிதர்களையும் விடவும் நபி (ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயமாகும் - வாஜிபாகும்.
-இவ்வாறு நேசம் கொள்வது ஈமானின் பரிபூரணதன்மைக்கான அடையாளமாகும்.
நபிமொழி -7
கேள்வி 7: (லா யுஃமினு அஹதுகும் ஹத்தா யுஹிப்ப லி அகீஹி.) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
- நல்லவிடயங்கள் அனைத்திலும் ஒரு முஃமின் தனக்கு விரும்புபவற்றை பிற முஃமின்களுக்கும் விரும்புவது அவசியமாகும்.
அவ்வாறு விரும்புவது ஈமானின் பரிபூரணதன்மைக்கான அடையாளமாகும்.
நபிமொழி -8
கேள்வி 8 : (வல்லதீ நப்ஸீ பியதிஹி) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எனது ஆன்மா எவனின் கைவசம் உள்ளதோ அவனின் மீது ஆணையாக! ஸூறதுல் இஹ்லாஸ் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு நிகரானது'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- இந்த ஹதீஸ் ஸூறதுல் இக்லாஸின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
2- இந்த ஸூறாவை ஓதுவது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு நிகரானதாகும்.
நபிமொழி -9
கேள்வி 9 : (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) என்ற வார்த்தை சுவர்கத்தின் பொக்கிசங்களின் ஒன்றாகும்'. [இதன் கருத்து : அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது. (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது)]
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- "லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" என்ற வார்த்தையின் சிறப்பு அது சுவர்கத்தின் பொக்கிசங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளமை.
2. ஒரு அடியான் எவ்வளவுதான் ஆற்றல் பலம் ஆகியவற்றை பெற்றிருப்பினும் அதில் நம்பிக்கை கொள்வதை விட்டு விலகி முற்றிலும் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கை கொள்ளல்.
நபிமொழி -10
கேள்வி 10 : (அலா வஇன்ன பில் ஜஸதி முழ்கதன்) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அன்நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு, அது சீராகிவிட்டால் உடல் அனைத்தும் சீராகிவிடும், அது கெட்டுவிட்டால் உடல் அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் உள்ளமாகும்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- உள்ளம் சீர்பெறுவதில்தான் மனிதனின் அகமும் புறமும் சீர்பெறுவது தங்கியுள்ளது.
2- மனிதனின் சீர்திருத்தம் உள்ளத்தை சீர்செய்வதில் தங்கியுள்ளதால் அதில் கூடுதல் கவனம் செலுத்துதல்.
ஹதீஸ் - 11
கேள்வி 11 : (மன் கான ஆகிரு கலாமிஹீ மினத்துன்யா லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'எவரது இறுதி வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹ் என்று உள்ளதோ அவர் சுவர்க்கம் நுழைவார்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையின் சிறப்பு மற்றும் இவ்வார்த்தையின் மூலம் ஒரு அடியான் சுவர்க்கம் செல்வான் என்பதும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
2- இவ்வுலகை விட்டும் பிரியும் தருவாயில் "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற வார்த்தையைக் கூறுவதன் சிறப்பு இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஹதீஸ் - 12
கேள்வி 12 : (லைஸல் முஃமினு பித்தஃஆன் வலல் லஃஆன் ,, ) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'ஒரு உண்மை முஃமின் மற்றவர்களை குறைகூறபவனாகவோ சபிப்பவனாகவே மாணக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்கமாட்டான்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
- அசிங்கமான பயணற்ற அனைத்து பேச்சுகள் மற்றும் வார்த்தைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருத்தல்.
2- இத்தீய விடயங்களை தவிர்ந்து நடப்பது ஒரு முஃமின் தனது நாவை பேணி நடப்பதன் பண்பாக கொள்ளப்படுகிறது.
ஹதீஸ் - 13
கேள்வி 13 : (மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்இ,, ) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஒரு முஸ்லிம் தனக்கு அவசியமல்லாதவற்றை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- உலக மற்றும் மார்க்க விவகாரகங்களில் தனக்கு அவசியமற்ற பிறர் விவகாரங்களை விட்டுவிடுதல்.
2- அவசியமல்லாதவற்றை விட்டுவிடுவது ஒரு சிறந்த முஸ்லிமுக்குரிய நிறைவான பண்பாகும்.
ஹதீஸ் - 14
கேள்வி 14 : (மன் கரஅ ஹர்பன் மின் கிதாபில்லாஹ்) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'அல்லாஹ்வின் அருள் மறையான அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும். "அலிஃப், லாம், மீம்" என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். எனினும் அலிஃப் என்பது ஒரு எழுத்து, லாம் என்பது ஒரு எழுத்து ,மீம் என்பது ஒரு எழுத்து ஆகும்'.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு பற்றி இந்த ஹதீஸ் எடுத்துரைக்கிறது.
2. நீர் ஓதும் ஒவ்வொரு எழுத்திற்கும் உமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
**********
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் பற்றிய பகுதி
ஒழுக்கவியல்
இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்: இவை இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள புகழத்தக்க நடத்தைகள், செயல்கள் மற்றும் பண்புகளின் தொகுப்பாகும். இவை அல்லாஹ்விடம் பேண வேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் அவனது படைப்பினங்களிடம் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளும் ஒழுக்க முறை :
கேள்வி 1 : அல்லாஹ்வுடன் ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது எவ்வாறு?
பதில் : 1- அல்லாஹ்வை உரிய முறையில் கண்ணியப்படுத்தல். அல்லாஹ் கூறினான் : (இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன். (ஸுமர் : 10).
2- இணையில்லாத அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிப்படுதல். அல்லாஹ் குறிப்பிடுகிறான்: கலப்பற்ற மனத்தூய்மை கொண்டவர்களாகவும்அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்தவர்களாகவும் சத்தியம் சார்ந்து நின்றவர்களாகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழுமாறே அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் அதுவே சீரான மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98 : 5).
3- அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அவனுக்குக்கட்டுபட்டு நடத்தல். அல்லாஹ் கூறினான் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் ஆவர்.
4- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதை விட்டுவிடுதல். அல்லாஹ் குறிப்பிடுகிறான்: இன்னும், எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, அவனுடைய சட்டங்களை மீறுவாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதில் (அவர்) நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவருக்கு உண்டு. (அந்நிஸா : 14).
5 – எம்மீது சொரிந்துள்ள கருணை மற்றும் கணக்கிடமுடியாத அவனின் அருள்களுக்காக அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்துதல். அல்லாஹ் கூறினான் : மேலும், நீங்கள் அவனையே (அல்லாஹ்வையே)வணங்குபவர்களாக இருந்தால்.அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்! (அன்நஹ்ல் : 97)
6- அவனின் விதிகளை பொறுமையாக ஏற்று வாழ்தல். அல்லாஹ் குறிப்பிடுகிறான்: இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்அன்பால் 38)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் பேண வேண்டிய ஒழுக்கமுறை :
கேள்வி 2 : நபி (ஸல்) அவர்களுடன் ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது எவ்வாறு ?
பதில் : 1- நபியவர்களை பின்பற்றுவதும் அவர்களை முன்மாதியாரியாக கொள்வதும். அல்லாஹ் கூறினான் : (உங்களில்) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அஹ்ஸாப் :21)
2- அவர்களின் கட்டளைகளை ஏற்று கட்டுப்பட்டு நடத்தல்.
3- அவர்களுக்கு மாறுசெய்யாது இருத்தல். அல்லாஹ் கூறினான் : யார் இத்தூதருக்கு கட்டுப்பட்டுவிட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டுவிட்டார் .எவர் புறக்கணிக்கின்றார்களோ அவர்களை கண்காணிப்பராக உம்மை நாம் அனுப்பவில்லை (அந்நிஸா : 80)
4- அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்தல். அல்லாஹ் கூறினான் : அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை . இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. (அந்நஜ்ம் : 3-4).
5- அவர்களின் ஸுன்னாவுக்கு (வழிமுறைக்கு) அதிகமாக மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்காது இருத்தல். இது குறித்து நபி ஸல் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். 'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்'.
6- எமது உயிர் மற்றும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமாக அவர்களை நேசித்தல். இது குறித்து நபி ஸல் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். 'தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் மிகவும் நேசத்துக்குரியராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது'.
7- அவர்களை கண்ணியப்படுத்துவதுடன், அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி அவற்றின் பால் அழைத்து உதவியாக இருத்தல். அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவும் அவனுக்கு நீங்கள் உதவிசெய்வதற்காகவும்,இன்னும் நீங்கள் அவனை கண்ணியப்படுத்துவதற்காகவும்( நாம் தூதரை அனுப்பினோம் ) (அல் பத்ஹ் : 9).
பெற்றோர்களுடன் நடந்து கொள்ளும் ஒழுக்க முறை :
கேள்வி 3 : எவ்வாறு பெற்றோர்களுடன்; ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது?
பதில் :1- பாவ காரியங்கள் தவிர்ந்த நல்ல காரியங்களில் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளல்.
2- பெற்றோருக்கு பணிவிடை செய்தல்.
3- பெற்றோருக்கு உதவுதல்.
4- பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுதல்.
5. பெற்றோருக்காக பிரார்த்தனை செய்தல்.
6- அவர்களுடன் உறவாடும் போது நல்ல முறையில் உறவாடுதல். மிகச்சாதாரன வார்த்தையாக கருதப்படுகின்ற 'சீ' என்ற வார்த்தையைக் கூட அவர்களுக்கு பாவிப்பதை தவிர்ந்து கொள்ளுதல்.
7- பெற்றோருடன் புன்சிரிப்போடு இருப்பதுடன் முகம் சுழித்து கடுகடுப்பாக இருக்கக் கூடாது.
8- பெற்றோரின் சப்தத்தைவிட எனது சப்தத்தை உயர்த்திப் பேசமாட்டேன், அவர்களின் பேச்சை காது தாழ்த்திக் கேட்பேன், அவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்யாது நடந்து கொள்வேன். அத்துடன் ஒரு போதும் அவர்களின் பெயர் கூறி அவர்களை அழைக்கமாட்டேன், அவர்களை எனது தந்தையே, எனது தாயே என இங்கிதமாக அன்பாக அழைப்பேன்.
9- எனது பெற்றோர் அறையில் இருக்கும் போது அனுமதிபெற்றே உள்ளே செல்வேன்.
10- பெற்றோரின் கையையும் தலையையும் முத்தமிடுதல்.
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) உமதிரட்சகன்_அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் (இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள) “சீ” என்று (கூட) நீ சொல்ல வேண்டாம்; (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம்; அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல் இஸ்ராஉ 23-24).
- ஒரு ஹதீஸில், ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாத் செய்வதற்கு அனுமதி கேட்டார், அதற்கு: "‘உனக்குப் பெற்றோர் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம்’ என்று கூறினார். அதற்கு நபியவர்கள், ‘அப்படியானால், அவர்கள் இருவருக்கும் பணிவிடை செய்வதில் அறப்போர் செய்வாயாக!’ என்று கூறினார்கள்."
இரத்த உறவுகளுடன் பேண வேண்டிய ஓழுக்க முறைகள் :
கேள்வி 4 : இரத்த உறவுகளுடன் நடந்து கொள்வது எவ்வாறு?
பதில் :1- தனது நெருங்கிய உறவுகளான சகோதரன் சகோதரி, தந்தையின் சகோதர சகோதரிகள், தாயின் சகோதர சகோதரிகள் மற்றும் ஏனைய உறவுகளை சந்திக்கச் செல்லுதல்.
2- பேச்சிலும் செயலிலும் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உதவி உபகாரம் புரிதல்.
3- அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல் என்பதில் அவர்களுடன் நவீன தொடர்புசாதனங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, அவர்களின் நிலமைகள் குறித்து விசாரிப்பதும் உள்ளடங்கும்.
அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளை துண்டித்திடவும் முணைவீர்களா? முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் ஆவர்.
- பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகும்: ''உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்''.
இறை நேசத்திற்காக சகோதரர்களுடன் உறவு கொள்வதின் ஒழுக்கங்கள் :
கேள்வி 5 : எனது இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் நான் நடந்து கொள்வது எவ்வாறு?
பதில் : 1- நான் (அவர்களில்) நல்லோர்களை நேசித்து அவர்ககளுடன் தோழமை கொள்வேன்.
2- அவர்களில் தீயவர்களுடன் தோழமை கொள்வதை விட்டு விலகி நடப்பேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: “முஃமினைத் தவிர வேறு எவரையும் நெருங்கிய நண்பனாகக் கொள்ளாதே; இறையச்சமுள்ளவரைத் தவிர வேறு எவரும் உனது உணவை உண்ண வேண்டாம்.”
3- எனது சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவதுடன் அவர்களை கைலாகு கொடுத்து வரவேற்பேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன."
4- அவர்கள் நோயுற்றிருந்தால் அவர்களை சுகம் விசாரித்து அவர்களின் சுகத்திற்காக பிரார்த்தனை செய்வேன்.
5- தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் எனப்பதில் கூறுவேன். (அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கப்பிரார்திப்பேன்)
6- ஒரு சகோதர முஸ்லிம் அவரை சந்திக்க வருமாறு என்னை அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று அதற்கு பதிலளிப்பேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
7. அவருக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: .“தன் சகோதரனுக்கு, சரியான வழி அதுவல்ல என்பதைத் தெரிந்துகொண்டிருந்தும், ஒரு விஷயத்தைப் பற்றி (தவறான) ஆலோசனை வழங்குபவன் அவனுக்கு துரோகம் செய்துவிட்டான்.”
8- அவர் அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு உதவி செய்வதுடன் அந்த அநீதியிலிருந்து அவரைப் பாதுகாப்பேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உனது சகோதரன், அநீதமிழைக்கும் நிலையிலும், அநீதமிழைக்கப்பட்ட நிலையிலும் அவனுக்கு நீ உதவு." அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வுடைய தூதரே! 'அவன் அநீதமிழைக்கப்பட்டிருந்தால் அவனுக்கு நான் உதவலாம். ஆனால், அவன் அநீதமிழைக்கும் ஒருவனாக இருந்தால், எவ்வாறு உதவுவது?' என்று கேட்டபோது, "அநியாயம் செய்வதை விட்டும் அவனைத் தடுத்துவிடு. அதுதான் அவனுக்கு நீ செய்யும் உதவியாகும்." என்று கூறினார்கள்.
9. எனக்கு விரும்புவதை எனது சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவேன். ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
10- எனது உதவி தேவைப்பட்டால் அவருக்கு உதவுவேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ""ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு உதவி புரிபவனாக அல்லாஹ் இருக்கிறான்.""
11- எனது சொல்லாலோ செயலாலோ அவரை காயப்படுத்த மாட்டேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: “எவருடைய நாவாலும் கையாலும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே உண்மையான முஸ்லிம்.”
12. அவரின் இரகசியங்களைப் பாதுகாப்பேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ""ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டுத் திரும்பிப் பார்த்தால், அது அமானிதமாகும்.""
13- அவரை ஏசவோ அவர் பற்றி புறம் பேசவோ தரக்குறைவாக கருதவோ பொறாமைக்கொள்ளவோ மாட்டேன். அது போல் அவரின் குறைகளை துருவி ஆய்வுசெய்து அவருக்கு துரோகம் இழைக்கவும் மாட்டேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான்; அவனை கைவிட மாட்டான்; அவனை இழிவாகக் கருத மாட்டான். ஒரு மனிதன் தீயவனாக இருப்பதற்கு, தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே போதுமானதாகும்.”
அண்டைவீட்டாருடன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் :
கேள்வி 6 : அண்டைவீட்டாருடன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் யாவை ?
பதில் :1- சொல்லாலும் செயலாலும் அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்வேன். எனது உதவி அவருக்கு தேவைப்பட்டால் அவருக்கு உதவிசெய்வேன்.
2. பெருநாள் மற்றும் திருமணம் அல்லது இது போன்ற மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் அவர்களை வாழ்த்துவேன்.
3- அவர் சுகயீனமுற்றிருந்தால் நோய்விசாரிக்கச் செல்வேன். துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆர்தல் கூறுவேன்.
4- நான் சமைத்த உணவில் எனக்கு முடியுமானதை அவருக்கு வழங்குவேன்.
5- சொல்லாலோ, செயலாலோ அவர் அசௌகரியப்டும் விதத்தில் நடந்து கொள்ளமாட்டேன்.
6- மிக சப்தமாக பேசி அவரை தொந்தரவு செய்யமாட்டேன், அத்துடன் அவரின் குறைகளை துருவித்துருவி தேட மாட்டேன், அவரின் விடயத்தில் சகிப்புடன் நடந்து கொள்வேன்.
அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்; பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்; (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொணடவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங்கொண்டவனாக, பெருமையாளனாக இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான். (அந்நிஸா : 36).
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் "“அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!”"
ஹதீஸில் பதிவுசெய்யப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நபி மொழி இதற்கு ஆதாரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ""யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது அயலவர்களை நோவினை செய்ய வேண்டாம்"."
விருந்தோம்பலின் ஒழுங்குகள் :
கேள்வி 7 : விருந்தோம்பல் மற்றும் விருந்தாளியின் ஒழுக்கங்கள் யாவை?
பதில் : 1- யார் என்னை விருந்துக்காக அழைக்கிறாரோ அவரின் அழைப்புக்கு பதிலளிப்பேன்.
2- நான் ஒருவரை சந்திக்க செல்வதாயின் அவரிடம் அனுமதி கேட்பதுடன் அதற்கான நேரத்தையும் கேட்பேன்.
3- வீட்டினுள் நுழைய முன் அனுமதி கேட்பேன்.
4- சந்திப்பதற்கான அனுமதி கிடைத்தால் தாமதிக்கமாட்டேன்.
5- ஒருவரின் வீட்டிட்க்கு விருந்தினராக சென்றால் எனது பார்வையைத் தாழ்த்திக் கொள்வேன்.
6- எனது வீட்டிற்கு வரும் விருந்தாளியை இன்முகத்துடன் மிக அழகிய முறையில் மிகச்சிறந்த வரவேற்பு வாசகங்களைப் பயன்படுத்தி வரவேற்பேன்.
7- விருந்தாளியை மிகவும் அழகான இடத்தில் அமரவைப்பேன்.
8. உணவு மற்றும் பானம் போன்றவற்றை வழங்கி விருந்தாளியை நல்ல முறையில் கவனிப்பேன்.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத (பிறருடைய) வீடுகளில் நீங்கள் (அனுமதியின்றி) நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை (உள்ளே செல்லாதீர்கள்). இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும், நீங்கள் நல்லறிவு பெறவேண்டும் என்பதற்காக. (அந்நூர் : 27).
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: “அனுமதி கோருவதற்கான விதிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பது, (வீட்டினுள் இருப்பவற்றை) பார்வையிடுவதைத் தடுப்பதற்காகத்தான்.”
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொள்கிறாரோ அவர் விருந்தினரை நல்லமுறையில் உபசரிக்கட்டும்."
நோயின் போது பேண வேண்டிய ஓழுங்குகள் :
கேள்வி 8 : நோயின் போதும் நோயாளர்களை சுகம் விசாரிக்கச் செல்லும் போதும் நடந்து கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள் யாவை?
பதில் : 1- நான் எனது உடம்பில் வலியை உணரும் வேளை அவ்விடத்தில் எனது வலது கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு ,((அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரி மா அஜிது வஉஹாதிரு)) என்ற துஆவை ஏழு (7) தடவைகள் ஓதுவேன். பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அவனது வல்லமையையும் முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீங்கிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) அஞ்சுகின்ற தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
2- அல்லாஹ் விதித்ததை திருப்தியோடு ஏற்று அதில் பொறுமையுடன் நடந்து கொள்வேன். உம்முல் அலா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது இவ்வாறு கூறினார்கள் : «உம்முல் அலாவே! உனக்கு சுபசோபனம் உண்டாவதாக,; ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயின் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை, நெருப்பு தங்கம் மற்றும் வெள்ளியின் மாசுகளை நீக்குவது போல, நீக்கி விடுகிறான்.»
3- எனது சகோதரன் நோயாளியாக இருந்தால் அவரை சுகம் விசாரிப்பதற்காக விரைந்து சென்று அவருக்காகப் பிரார்த்திப்பேன். (நேயாளியான எனது சகோதரருக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால்) அவரிடம் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கமாட்டேன்.
4- நோயாளியின் வேண்டுதல் இன்றி அவர் சுகம் பெற ஓதி ஊதுவேன் - ஓதிப்பார்ப்பேன்.
5- நோயாளிக்கு பொறுமையை கைகொள்ளுமாறும் பிரார்த்தனை செய்யுமாறும் அவரின் சக்திக்கு ஏற்ப தொழுது சுத்தமாக இருக்குமாறும் அவருக்கு உபதேசம் செய்வேன்.
6. நோயாளிக்காக துஆ கேட்டல் : அஸ்அலுல்லாஹல் அழீம் ரப்பல் அர'ஷில் அழீம் அன் யஷ்பியக«பிரமாண்டமான (அர்ஷ்) சிம்மாசனத்தின் அதிபதியான, மகத்துவமும் மாட்சிமையும் மிக்க அல்லாஹ்விடம் உனது நோயைக் குணப்படுத்துமாறு நான் வேண்டுகிறேன்» என்று ஏழு முறை ஓதவேண்டும்.
கல்வி கற்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் :
கேள்வி 9 : கல்வி கற்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் யாவை?
பதில் : 1- அல்லாஹ்வுக்காக கற்கிறேன் என்ற தூய எண்ணம் (மனத்தூய்மை) இருத்தல் வேண்டும். பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: "யார் அறிஞர்களிடம் பெருமையடித்துக் கொள்வதற்காகவோ, அறிவீனர்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ, மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவோ கல்வியைக் கற்கின்றாரோ, அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான்."
2- நான் கற்ற அறிவைக்கொண்டு செயற்படுவேன். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ""மறுமை நாளில் ஒரு அடியானிடம் நான்கு விடயங்கள் குறித்து விசாரிக்கப்படாத வரையில் அவனின் இரு பாதங்களும் நகரமாட்டாது: -அவற்றில் ஒன்று- அவனின் அறிவு குறித்தும், அதனை எவ்வாறு செயலாற்றினான் என்பது பற்றியுமாகும்.""
3- எனக்குக் கற்றுத்தந்த ஆசானை மதித்து நடப்பதுடன் அவர் இருக்கும் போதும் இல்லாத போதும் அவரை கண்ணியப்படுத்துவேன்.
4- அவருக்கு முன்னால் ஒழுக்கமாக உட்காருவேன்.
5- ஆசிரியர் கற்றுத் தரும்போது காது தாழ்த்திக் கேட்பேன், அவர் பாடத்தை கற்பிக்கும் வேளை இடையில் அவருக்கு குறுக்கீடு செய்யமாட்டேன்.
6. ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் போது ஒழுக்கமாக நடந்து கொள்வேன்.
7- அவரின் பெயரை கூறி அழைக்க மாட்டேன். - பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: «நிச்சயமாக வயோதிப முஸ்லிமை கண்ணியப்படுத்துவதும், குர்ஆனை சுமந்தவனை கண்ணியப்படுத்துவதும்அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதைச் சார்ந்ததாகும் .»
சபையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க முறைகள் :
கேள்வி :10 : சபையில் கடைப்பபிடிக்கவேண்டிய ஒழுக்க முறைகள் யாது?
பதில் : 1- சபையோருக்கு (அவையில் உள்ளோருக்கு) ஸலாம் கூறுவேன்.
2- சபையில் அமர்வதற்கு எங்கு இடம் கிடைக்கிறதோ அந்த இடத்தில் அமர்ந்து கொள்வேன். எவரையும் அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பமாட்டேன். அல்லது இருவருக்கு மத்தியில் உட்கார நாடினால் அவர்கள் இருவரிடமும் அனுமதியில்லாது உட்கார மாட்டேன்.
3- மற்றவர்களும் அமர வேண்டும் என்பதற்காக நான் உட்காரும்போது மற்றவர்களுக்கும் இடம்விட்டு உட்காருவேன்.
4- சபையில் நடைபெறும் உரையின் போது குறுக்கிட்டு பேச மாட்டேன்.
5- சபையிலிருந்து வெளியேற முன் அனுமதி பெற்று, சபையினருக்கு ஸலாம் கூறுவேன்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : «ஒருவரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, அவ்விடத்தில் மற்றொருவர் அமருவதை அவர்கள் (நபியவர்கள்)தடைசெய்தார்கள். மாறாக, இடம்கொடுத்து விசாலமாக அமருங்கள்.»
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது "உங்களில் ஒருவர் ஒரு சபையைச் சென்றடைந்தால் ஸலாம் கூறட்டும்; அவர் (அங்கிருந்து) எழுந்து செல்ல நாடினாலும் ஸலாம் சொல்லட்டும்; ஏனெனில், முதலாவது (கூறும் ஸலாம்) இரண்டாவது (கூறும் ஸலாமை) விட மிக தகுதியானதல்ல (இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸலாம் கூறுவது முக்கியமானது).”
6. சபையின் முடிவில் பின்வரும் கப்பாரதுல் மஜ்லிஸ் துஆவை ஓதுவேன்: "ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த, அஸ்தஃபிருக வஅதூபு இலைக". பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீளுகிறேன்.
தூங்குவதின் ஓழுங்குகள் :
கேள்வி 11 : தூங்குவதின் ஒழுங்குகள் யாவை?
பதில்: 1- நேரகாலத்தோடு தூங்குவேன். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஷா தொழுகைக்கு முன் தூங்குவதையும், அதற்குப் பின் பேசுவதையும் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபர்ஸா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்."
2- வுழுச் செய்து சுத்தமான நிலையில் உறங்குவேன்.
3- நான் வயிற்றின் மீது (குப்புறப்படுத்து) உறங்க மாட்டேன்.
4- எனது வலப்புறமாக சாய்ந்து உறங்குவேன், வலது கையை வலது கண்ணத்தின் மீது வைத்து உறங்குவேன்.
5- எனது விரிப்பை உதறிக் கொள்வேன்.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீ படுக்கைக்கு வந்தால், தொழுகைக்காக வுழு செய்வது போன்று வுழு செய்து கொள், பின் உனது வலப்பக்கமாக சாய்ந்து கொள்வீராக.'
- அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குப்புறப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டுக் கூறினார்கள்: ""நிச்சயமாக இந்தப் படுக்கும் முறையை அல்லாஹ் நேசிப்பதில்லை"."
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது, தனது ஆடையின் உட்புறத்தால் படுக்கையை உதறிக்கொள்ளட்டும்! ஏனெனில், அவருக்குப் பின்னால் அப்படுக்கையில் என்ன வந்திருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார்."
6- தூங்கும் போது ஓதப்படும் துஆக்கள் மற்றும் திக்ருகளான ஆயதுல் குர்ஸியை ஒரு தடவையும், குல் ஸூறாக்களான ஸூறதுல் இக்லாஸையும் முஅவ்விததான் என்றழைக்கப்படும் ஸூறதுல் பலக் மற்றும் ஸூறதுன்னாஸ் ஆகிய ஸூறாக்களையும் மும்மூன்று தடவைகள் ஓதுவதுடன், பின்வரும் திக்ரையும் ஓதுவேன் : ((பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா)) பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன்.
7- ஸுப்ஹ் தொழுகைக்காக துயிலெழுவேன்.
8- தூக்கத்திலிருந்து எழுந்ததும் பின்வரும் திக்ரை ஓதுவேன் : (அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஷூர்) பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்பெற்று எழச்செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். மேலும் அவனிடமே (நமது) மீளுதல் உள்ளது.
உண்ணுதல் பருகுதலின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் :
கேள்வி 12 :உண்ணுதல் பருகுதலின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்கு முறைகள் யாது?
பதில் : 1- உண்ணும் போதும் பருகும்போதும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கான ஊட்ட சக்தி கிடைக்கவேண்டும் என்று (நிய்யத்) மனதால் நினைத்துக் கொள்வேன்.
2- உண்ணுவதற்கு முன்பாக இரு கைகளையும் கழுவிக்கொள்வேன்
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது - அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்ததாக முஃமின்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : (நீங்கள்)உணவு உண்ணவும் பருகவும் நாடினால் தனது இரு கைகளையும் கழுவட்டும்; பின்னர் உண்ணட்டும், பருகட்டும்.
3- 'பிஸ்மில்லாஹ்' என்று (அல்லாஹ்வின் திருநாமம்) கூறி எனது வலது கையால் உண்ண ஆரம்பிப்பேன். கூட்டாக சாப்பிடும் போது தட்டில் எனக்கு அருகாமையில் உள்ளதை சாப்பிடுவேன். தட்டின் நடுப்பகுதியிலிருந்தோ அல்லது எனக்கு எதிரில் உள்ளவரின் இடத்திலிருந்து எடுத்து சாப்பிட மாட்டேன்.
- பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு".
4. பிஸ்மில் கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு" என்று கூறிக்கொள்வேன். (இதன் பொருள் : ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு (உணவு உட்கொள்கிறேன்)).
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முஃமின்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் : «உங்களில் ஒருவர் உணவு உண்ணும்போது "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி சாப்பிடுகிறேன்என்று கூறவும், ஆரம்பத்தில் இவ்வாறு சொல்ல மறந்துவிட்டால் "பிஸ்மில்லாஹி பீ(f) அவ்வலிஹி வஆகிரிஹி" என்று கூறவும்.» (( இதன் பொருள் ) ஆரம்பத்திற்கும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (நான் சாப்பிடுகிறேன்)).
5- இருக்கும் உணவை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வேன், உணவை குறைகூற மாட்டேன். விரும்பினால் உண்ணுவேன் விரும்பாது விட்டால் குறைகூறாது விட்டுவிடுவேன்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது- அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸில் அவர்கள் கூறினார்கள் : «நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறைகூறியதில்லை, அதனை விரும்பினால் சாப்பிடுவார்கள், இல்லாவிட்டால் அதனை விட்டுவிடுவார்கள்.»
6- அதிகம் சாப்பிடாது எனக்கு போதுமான உணவின் சிறு கவளங்களை மாத்திரம் சாப்பிடுவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "மனிதன் நிரப்புவற்றில் வயிற்றை விட மோசமான எந்தப் பையையும் நிரப்புவதில்லை . மனிதனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவில் சில கவளங்களே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும், மூன்றில் ஒரு பகுதியை பானத்திற்கும், மூன்றில் ஒரு பகுதியை சுவாசிக்கவும் ஆக்கிக் கொள்ளட்டும்."
7- சூடான உணவு அல்லது பாணம் ஆகியவற்றில் சூட்டைத் தனிப்பதற்காக அதில் ஊதமாட்டேன். அதன் சூடு ஆறும் வரை விட்டுவிடுவேன்.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள்."
8- உணவு உட்கொள்ளும் போது எனது குடும்பத்தினர் அல்லது விருந்தாளியுடன் சேர்ந்து உண்ணுவேன்.
- ஒரு ஹதீஸில், ஒரு மனிதன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'அல்லாஹ்வுடைய தூதரே! நாங்கள் சாப்பிடுகின்றோம். ஆனால், வயிறுநிரம்புவதில்லை.' என்று கூறினான். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: "நீங்கள் பிரிந்து சாப்பிடுகின்றீர்கள் போலும், ஒன்றிணைந்து சாப்பிடுங்கள். அதில் அல்லாஹ் தஆலாவுடைய பெயரையும் கூறிக்கொள்ளுங்கள். அப்போது அதில் உங்களுக்கு பரக்கத் செய்யப்படும்."
9- என்னை விட வயதில் மூத்தோர் சாப்பிடுவதற்காக என்னுடன் அமர்ந்திருந்தால் அவர்கள் சாப்பிட முன் ஆரம்பிக்கமாட்டேன்.
10. ஏதாவது ஒரு பானத்தை அருந்தும்போது பிஸ்மில் கூறி அமர்ந்த நிலையில், ஒரே மூச்சில் பருகாது மூன்று முறை மூச்சை நிறுத்தி நிறுத்தி அருந்துவேன். மேலும், பாத்திரத்தில் மூச்சு விடமாட்டேன்.
- பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: ((உங்களில் ஒருவர் குடிக்கும் போது, பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம்.))
- மேலும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸின்படி, "நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு பருகுவதைத் தடுத்தார்கள்."
- பின்வரும் ஹதீஸும் அதற்கு ஆதாரமாகும்: "நபியவர்கள் பருகும் போது மூன்று தடவை மூச்சு விடுவார்கள்"
11. சாப்பிட்டு அல்லது குடித்து முடிந்ததும் அல்லாஹ்வைப் புகழ்வேன். அதாவது அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவேன்.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "உணவு சாப்பிட்டதுவும்,அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்".
ஆடை அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் :
கேள்வி 13 : ஆடை ஒழுக்கங்கள் எவை?
பதில்: 1- எனது ஆடையை அணியும் போது அல்லாஹ்வை புகழ்ந்து வலப்பக்கத்திலிருந்து அணிவேன்.
- அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஆடை அணியும்போதும், வுழூ செய்யும்போதும் உங்கள் வலப்பக்கங்களிலிருந்தே ஆரம்பியுங்கள்."
2- கரண்டைக்குகீழால் நீழும் வகையில் எனது ஆடையை அணிய மாட்டேன்.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ''கரண்டைக்காலுக்கு கீழ் செல்லும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும்''. கரண்டைக் கால் என்பது: பாதத்தின் இரு புறங்களிலும் தள்ளிக்காணப்படும் இரண்டு எலும்புகளுமாகும்.
3- பெண் குழந்தைகளின் ஆடைகளை ஆண்குழந்தைகளுக்கோ ஆண்குழந்தைகளின் ஆடைகளை பெண்குழந்தைகளுக்கோ அணிவிக்கலாகாது.
- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்: பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்
4- எனது ஆடைகள் பிறமதத்தினருக்குரிய குறிப்பான ஆடைகள் அல்லது நாகரீம் என்ற பெயரில் புதுப்புது ஆடைகளை அணியும் நாகரீமற்றவர்களின் ஆடைகள் போன்றவைகளுக்கு ஒப்பாக ஆடைகள் அணியலாகாது.
- பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்
5- ஆடைகளை களையும் போது "பிஸ்மில்லாஹ்" கூறி களைவேன்.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: «ஆதமுடைய மக்களின் அவ்ரத்துகளுக்கும் ஜின்களுக்கும் இடையிலான திரை, உங்களில் ஒருவர் தனது ஆடையைக் கழற்றும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறுவதாகும்.»
6- காலணியை அணியும் போது முதலில் வலதையும் களையும் போது இடது காலணியையும் முற்படுத்துவேன்.
- உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்களுக்கு பாதணி அணிதல், தலைவாருதல், வுழூச் செய்தல் மற்றும் அனைத்து விடயங்களிலும் வலதை முற்படுத்துவது மிகவும் விருப்பத்திற்குரியதாகும்".
வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் :
கேள்வி14 : வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?
பதில்: 1. பிஸ்மில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்று வாகனத்தில் ஏறும் போது கூறி அதில் அமர்ந்ததும் பின்வருமாறு கூறுவேன், (ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்) பொருள் : இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். இன்னும், நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம் (அஸ்ஸுஃக்ருப் : 13-14).
2- நான் ஓரு முஸ்லிமை கடந்து சென்றால் அவருக்கு ஸலாம் கூறுவேன்.
பாதையில் கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்கு முறைகள் :
கேள்வி15 : பாதையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?
பதில் : 1- பாதையில் நடக்கும் போது அதிவேகமாக நடக்காது பணிவோடு, நடையில் நடு நிலைபேணுவேன். அல்லாஹ் கூறினான் : இன்னும், பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக உன்னால் பூமியை பிழந்து செல்ல முடியாது உயரத்தால் மலையை அடையவும் முடியாது (அல்இஸ்ராஃ : 37).
2- பாதையில் செல்லும் போது சந்திக்கின்ற சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவேன்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்: "(தேவையுடையோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், மேலும் நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் சொல்வதுமாகும்"
3- பாதையில் செல்லும் போது எனது பார்வையை தாழ்த்திக் கொள்வேன், எவருக்கும் தொந்தரவாக இடைஞ்சலாக நடந்து கொள்ள மாட்டேன்.
4- பாதையில் செல்லும் போது நன்மையை ஏவி தீமையை தடுத்தல் எனும் பணியை மேற்கொள்வேன். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ' பாதைக்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்'. என்று கூறிய போது அவர்கள்: 'பாதைக்குரிய உரிமை என்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு: 'பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல், தொல்லை தராமலிருத்தல், ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல்' என்று பதில் கூறினார்கள்.
5- தொந்தரவும் இடைஞ்சலும் தரக்ககூடியவற்றை பாதையிலிருந்து அப்புறப்படுத்துவேன்.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: 'தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்.'
வீட்டினுள் நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் கடைப்பிக்க வேண்டிய ஒழுங்குகள் :
கேள்வி 16 : வீட்டினுள் நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?
பதில்: 1- வீட்டிலிருந்து வெளியேறும் போது இடது காலை முன்வைத்து வெளியேறுவேன், அப்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்வேன் : (பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய). இதன் பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்), என் காரியங்களை அல்லாஹ்வின் மீது முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ எனக்குக் கிடையாது, யா அல்லாஹ்! நான் வழி தவறிச் செல்வதில் இருந்தும், அல்லது (பிறரால்) நான் வழிகெடுக்கப்படுவதிலிருந்தும், நான் தவறுசெய்வதை விட்டும் அல்லது (பிறரால்) நான் தவறுக்கு உட்படுத்தப்படுவதைவிட்டும், நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும்; அல்லது (பிறரால்) நான் அநீதி இழைக்கப்படுவதை விட்டும், நான் அறிவீனமாக நடந்துகொள்வதைவிட்டும் அல்லது (பிறர்) என்மீது அறிவீனமாக நடந்துகொள்வதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
2- வீட்டினுள் நுழையும் வலது காலை வைத்து நுழைவேன் அவ்வேளை பின்வரும் திக்ரை ஓதுவேன் : (பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலா ரப்பினா தவக்கல்னா). பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம்.மேலும் எங்கள் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம்.
3- வீட்டினுள் நுழைய முன் மிஸ்வாக் செய்துகொள்வேன், பின் குடும்பத்தாருக்கு ஸலாம் கூறுவேன்.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "«வீட்டுக்குள் நுழைந்தால் மிஸ்வாக்கைக் கொண்டு ஆரம்பிப்பார்கள்»"
இயற்கை தேவைகளை (மலசல) நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் :
கேள்வி 17 : இயற்கை தேவைகளை நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் யாவை ?
பதில் : 1- கழிவறையினுள் நுழையும் போது இடது காலை முன்வைத்து நுழைவேன்.
கழிவறையினுள் நுழைய முன் பின்வரும் துஆவை ஓதுவேன் : (பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்) பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (நான் நுழைகிறேன்) யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
3. அல்லாஹ்வின் திருநாமம் உள்ள பொருட்களை கழிவறையின் உள்ளே எடுத்துச் செல்ல மாட்டேன்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது தமது மோதிரத்தைக் கழற்றி வைப்பவர்களாக இருந்தார்கள்.
4- (மலசலம் கழிக்கும் போது) இயற்கைத் தேவையை நிறைவேற்றும் போது என்னை மறைத்துக் கொள்வேன்.
- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்: "“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றும்போது மறைவிடமாக ஆக்கிக்கொள்வதற்கு ஒரு மேடான பகுதி அல்லது பேரீச்ச மரத் தோப்பு ஆகியவையே மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்தன.”"
5- கழிவறையில் யாருடனும் கதைக்க மாட்டேன்.
6- கழிவறையில் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ உட்காரமாட்டேன்.
இதற்கு ஆதாரமாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள் «மலசலம் கழிக்கும் போது கிப்லாத் திசையை முன்னோக்காதீர்கள்; மாறாக, கிழக்கு அல்லது மேற்கு நோக்கித் திரும்புங்கள்.»
7- மலசலம் கழித்தபின் சுத்தம் செய்வதற்கு வலக்கரத்தை பயன்படுத்தாது இடக்கரத்தைப் பயன்படுத்துவேன்.
- பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: «வலது கையால் இஸ்திஞ்சா செய்வதை... எங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்»
8- மனிதர்கள் செல்லும் பாதை ஓரங்களிலும், நிழல் தரும் இடங்களிலும் எனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற மாட்டேன்.
- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""“இரண்டு சாபத்திற்குரிய செயல்களைத் தவிருங்கள்.”அப்போது ஸஹாபாக்கள் : “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு சாபத்திற்குரிய செயல்கள் எவை?”என்று கேட்டார்கள் அதற்கு நபி ﷺ அவர்கள் :“மக்கள் செல்லும் பாதையில் அல்லது அவர்கள் நிழலாகப் பயன்படுத்தும் இடத்தில் மலஜலம் கழிப்பதாகும்.” என்று கூறினார்கள்
9. மலசலம் கழித்து சுத்தம் செய்த பின் எனது கையை கழுவிக்கொள்வேன். இதற்கு ஜரீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தேன்.அன்னார் மல கூடத்திற்கு வந்து, தமது தேவையை நிறைவேற்றினார்கள், பின்னர் கூறினார்கள்: "«ஜரீரே! சுத்தம் செய்வதற்கான தண்ணீரைக் கொண்டு வாருங்கள்» என்று கேட்க, நான் அவர்களுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்தேன். அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி (மலஜலம் கழித்த பின்) சுத்தம் செய்தார்கள்; பிறகு தம் கையால் தரையில் தேய்த்தார்கள்.” தேய்த்தார்கள்."
10- கழிவறையிலிருந்து வெளியே வரும் போது இடது காலை முன்வைத்து 'குப்ரானக' என்ற திக்ரை ஒதுவேன். பொருள் : யா அல்லாஹ் ! என்னை நீ மன்னிப்பாயாக!
மஸ்ஜிதில் -இறை இல்லத்தில்- கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்குமுறைகள்:
கேள்வி 18 : மஸ்ஜிதில் -இறை இல்லத்தில்- கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் யாவை?
பதில்: 1- பள்ளிக்குள் நுழையும் போது எனது வலது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதியவனாக உட்செல்வேன் : 'பிஸ்மில்லாஹி, அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரினால் (மஸ்ஜிதில் நுழைகிறேன்) யா அல்லாஹ்! உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்துவிடுவாயாக!.
2- பள்ளிக்குள் நுழைந்ததும் தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக்கான காணிக்கை தொழுகை) இரண்டு ரக்அத்துக்களை தொழாத வரை உட்காரமாட்டேன்.
- பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "உங்களில் ஒருவர் பள்ளியினுள் பிரவேசித்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்."
3- தொழுவோருக்கு முன் நடந்து செல்ல மாட்டேன். அல்லது காணமல் போன பொருளென்றை தேடுவதற்காக பள்ளியில் அறிவிப்புச் செய்யமாட்டேன். பள்ளியினுள் கொடுக்கல் வாங்கல் போன்ற வியாபார நடவடிககைகளில் ஈடுபட மாட்டேன். இது குறித்து நபி ஸல் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். "தொழுகையாளிக்கு முன்னால் நடந்துசெல்பவர், தனக்குள்ள தண்டனை என்னவென்பதை அறிவார் என்றால், நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) காத்திருப்பது, அவருக்கு முன்னால் நடந்துசெல்வதை விடச் சிறந்ததாக இருக்கும்."
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "«பள்ளிவாயலினுள் ஒரு மனிதர் காணாமற் போன பொருளைத் தேடி சப்தமிடுவதை எவராவது செவியுற்றால், 'அல்லாஹ் அதனை உனக்குத் திருப்பிக் கொடுக்காமலிருக்கட்டும், நிச்சயமாக பள்ளிவாசல்கள் இதற்காக கட்டப்படவில்லை' என்று அவர் கூறட்டும்.»"
- பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகும்: "பள்ளிவாசலில் யாராவது விற்பதையோ அல்லது வாங்குவதையோ நீங்கள் கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தில் லாபத்தை அளிக்காதிருப்பானாக!' என்று கூறுங்கள்."
4. பள்ளிவாசலின் சுத்தத்தைப் பேணுவேன்.
பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : "குடியிருப்புகளில் பள்ளிவாசல்களை அமைக்கவும், அவற்றைச் சுத்தப்படுத்தவும், நறுமணமூட்டவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்."
5- இடது காலை முன்வைத்து பள்ளியிலிருந்து பின்வரும் துஆவை ஓதியவனாக வெளியேறுவேன் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக', பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.
ஸலாம் கூறுவதன் ஒழுங்குகள் :
கேள்வி 19 : ஸலாம் கூறுவதன் ஒழுங்குகள் யாவை?
பதில் : 1. நான் ஒரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு) என்று கூறுவேன். பொருள் : உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் அருள்வளமும் உண்டாகட்டும்! ஸலாம் அல்லாத வேறு முகமன்களைக் கொண்டு ஆரம்பிக்க மாட்டேன். அதே போல் ஸலாத்திற்குப் பதிலாக எனது கையால் சைக்கினை செய்யவும் மாட்டேன்.
2- நான் யாருக்கு ஸலாம் கூறுகிறேனோ அவரின் முகத்தை முகமலர்ச்சியோடு பார்த்து புன்முறுவல் பூப்பேன். பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: '(அபூதர்ரே!) நன்மையான காரியங்கள் எதுவாயினும் அவற்றை அற்பமாகக் கருதாதே! அது உனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே!'.
3- சந்திப்பவருக்கு வலது கையால் கைலாகு கொடுப்பேன்.
4- எனக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தால் அவருக்கு அதைவிட மிக நல்ல முறையில் வாழ்த்துத் தெரிவிப்பேன், அல்லது அவர் வாழ்த்தியது போன்று வாழ்த்துத்துவேன்.
அல்லாஹ் கூறியுள்ளான் : உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் யாவற்றையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அந்நிஸா : 86).
5- முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்வதை தவிர்ந்து கொள்வேன். அவ்வாறு அவர் ஸலாம் கூறினால் 'வஅலைகும்' என்று பதில் கூறுவேன்.
- பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: "யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள்."
6- சிறியோர் மூத்தோருக்கும், வாகனத்தில் செல்வோர் நடந்து செல்பருக்கும், நடந்து செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வாகணத்தில் இருப்பவர், நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், கொஞ்சம் பேர் அதிகம் பேருக்கும் ஸலாம் சொல்ல வோண்டும்"
7. மஹ்ரம் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுழுக்க மாட்டேன் .
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும் .- உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : «இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை.»
அனுமதி பெறுவதின் ஒழுங்குகள் :
கேள்வி : 20 :அனுமதி பெறுவதின் ஒழுங்குகள் யாவை?
பதில் :1- ஒரு இடத்திற்குள் நுழைய முன் நான் அனுமதி கேட்டு நுழைவேன்.
2- ஒரு இடத்தினுள் நுழைவதற்கு மூன்று தடவைகள் அனுமதி கோருவேன். அதைவிட அதிகரிக்கமாட்டேன். அனுமதி கிடைக்காத பட்சத்தில் திரும்பி விடுவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ""உங்களில் ஒருவர் மூன்று தடவைகள் அனுமதி கோரி, அவருக்கு அனுமதியளிக்கப்படாவிடில் அவர் திரும்பிச் செல்லட்டும்"."
3. அனுமதி கேட்டு கதவை மெதுவாகத் தட்டுவேன். அப்போது கதவுக்கு நேராக நிற்காது கதவின் வலது பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ நின்று கொள்வேன். அவ்வேளை 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனக் கூறுவேன். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கூட்டத்தாரின் வீட்டுக்குச் சென்றால், வாசலுக்கு நேராக நிற்க மாட்டார்கள். மாறாக, அதன் வலது அல்லது இடது புறமாக நின்றுகொண்டு, அஸ்ஸலா|மு அலைக்கும் என்று கூறுவார்கள்.
4- எனது தாயும் தந்தையும் அல்லது அவர்களில் எவராவது ஒருவர் அறையினுள் இருக்கும் போது அவர்களிடம் அனுமதி பெற முன் அவர்களின் அறையினுள் நுழைய மாட்டேன். குறிப்பாக ஸுப்ஹ் தொழுகைக்கு முன், லுகருக்கு முன்னுள்ள நேரம், இஷாவிற்குப் பின் ஆகிய வேளைகளில் அவர்களிடம் அனுமதி பெற முன் அவர்களின் அறையினுள் நுழைய மாட்டேன்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் வசனம் அமைந்துள்ளது அல்லாஹ் கூறியுள்ளான் : நம்பிக்கையாளர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களில் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். அதிகாலை தொழுகைக்கு முன்; இன்னும், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்; இன்னும், இஷா தொழுகைக்கு பின் இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள் ஆகும். (இந்த நேரங்களில் அவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று உள்ளே பிரவேசிக்கவும். மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் சிலரிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள் ஆவார்கள். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான். (அந்நூர்: 58)
5- குடியமர்த்தப்படாத பொது மருத்துவ நிலையங்கள் வியாபாரஸ்தளங்கள் போன்ற இடங்களில அனுமதியுமின்றி நுழையலாம்.
அல்லாஹ் கூறுகிறான் : உங்கள் பொருள் (மட்டும் வைக்கப்பட்டு) இருக்கிற (யாரும்) வசிக்காத வீடுகளில் நீங்கள் (அனுமதி இன்றி) நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். (அந்நூர் : 29).
விலங்கினங்களுடன்; பேண வேண்டிய ஓழுக்க முறைகள் (ஜீவ காருண்யம்) :
கேள்வி 21 : விலங்கினங்களுடன் பேண வேண்டிய ஒழுக்க முறைகள் யாவை?
பதில் : 1- விலங்கினங்களுக்கு உணவு கொடுத்து நீர் புகட்டுவேன்.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளிலும் எமக்குக் கூலி உள்ளதா?" என வினவ, "ஈரமான, ஈரலுள்ள உயிரினம் ஒவ்வொன்றிலும் கூலியுள்ளது" என்றார்கள்.
மேலும் முதுகு வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்த ஒரு ஒட்டகத்தின் பக்கத்தால் ரஸூல் (ஸல்) அவர்கள் நடந்து சென்ற போது கூறினார்கள்: “இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.”
2. அன்பாகவும் பரிவோடும் நடந்து நடந்து கொள்வேன் மற்றும் சக்திக்கு அப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்த மாட்டேன்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? இந்த ஒட்டகம் யாருடையது?" (என்று நபியவர்கள் கேட்டார்கள்). அப்போது அன்சாரிகளைச் சேர்ந்த ஓர் இளைஞர் வந்து, "இறைத்தூதர் அவர்களே! அது என்னுடையது" என்றார். அதற்கவர்கள், "அல்லாஹ் உமக்கு உரிமையாக்கியுள்ள இந்த வாயில்லாப் பிராணியின் விடயத்தில் நீர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள மாட்டீரா? நிச்சயமாக நீர் இதனைப் பசியில் வாட்டுகிறீர் என்றும், (அதிக வேலை வாங்கி) இதனைச் சிரமப்படுத்துகிறீர் என்றும் இது என்னிடம் முறையிட்டது" என்று கூறினார்கள். ஹதீஸில் இடம்பெற்ற "துத்இபுஹு" என்றால் நீர் அதனை சோர்வடையச்செய்கிறாய் என்று பொருளாகும்
3- விலங்கினங்களுக்கு அடித்து தொந்தரவு செய்யவோ துன்புறுத்தவோ மாட்டேன்.
- ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பக்கமாக முகத்தில் அடையாளம் இடப்பட்ட கழுதை ஒன்று நடந்து சென்றது. அதனைக் கண்ட அவர்கள் கூறினார்கள்: ""பிராணியின் முகத்தில் குறியிடுபவனை அல்லது அதன் முகத்தில் அறைபவனை நான் சபித்துள்ளேன் என்பது உங்களுக்கு என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கவில்லையா ?" எனக் கூறிவிட்டு இந்த விடயத்தை தடைசெய்தார்கள்
விளையாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்:
கேள்வி 22 : விளையாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் யாவை?
பதில் : 1- விளையாடுவதின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலை சக்தியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்வேன்.
2- தொழுகை நேரத்தில் விளையாடமாட்டோம்.
அல்லாஹ் கூறுகிறான் : ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான், அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள். (அல்மாஊன் : 4, 5).
3- ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் கூடாது.
4- விளையாடும் போது எனது அவ்ரத்தை –கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி- மறைக்கும் விளையாட்டு சீருடைகளை அணிந்து கொள்வேன்.
5- முகத்தை தாக்குதல், வெட்கத்தளங்கள் வெளியே தெரிபடுதல் போன்ற ஹராமான –தடைசெய்யப்பட்ட –விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்வேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "உங்களில் ஒருவர் தனது சகோதரனைத் தாக்கினால், முகத்தைத் தவிர்க்கட்டும்."
நகைச்சுவையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்கு முறைகள் :
கேள்வி 23 : நகைச்சுவையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் எவை?
பதில்: 1- நகைச்சுவையில் உண்மையை கடைப்பிடித்தல், பொய்யானவற்றை தவிர்ந்து கொள்ளல்.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ""மக்களை சிரிக்கச் செய்வதற்காகப் பொய் பேசுகிறவனுக்கு நரகம் தான்,அவனுக்கு நரகம்தான்,அவனுக்கு நரகம்தான்.""
2- நகைச்சுவை என்பது கேலி செய்தல், கிண்டலடித்தல்,தொந்தரவு செய்தல், மிரட்டல் ஆகியவை அற்றதாக இருக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுறுத்துவது கூடாது."
3- எல்லை மீறி அதிகமாக நகைச்சுவையில் ஈடுபடக் கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் "அதிகமாக சிரிக்காதே; நிச்சயமாக அதிக சிரிப்பு உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்."
தும்மலின் ஒழுங்குகள் :
கேள்வி 24 : தும்மலின் ஒழுங்குகள் எவை?
பதில் : 1- தும்மும் போது கை அல்லது துணி அல்லது கைக்குட்டையை வைத்து மூகத்தை மூடிக் கொள்ளுதல்.
2- தும்மியதன் பின் (அல்ஹம்துலில்லாஹ்), (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
3- அதற்கு அதனை கேட்ட சகோதரன் அல்லது நண்பர் (யர்ஹமுகல்லாஹ்), (அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!) என்று கூற வேண்டும்.
அதற்கு தும்மியவர் (யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்), (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக! உங்கள் நிலமைகளை சீராக்குவானாக!) என்று கூற வேண்டும்.
கொட்டாவி விடும் போது பேண வேண்டிய ஒழுங்குகள் :
கேள்வி 25 :கொட்டாவி விடும் போது பேண வேண்டிய ஒழுங்குகள் எவை?
பதில் : 1- கொட்டாவி வருகின்ற வேலை முடியுமானவரை தடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் இயன்றவரை அதைத் தடுக்கட்டும்."
2. 'ஹா' 'ஹா' என்று சப்தமிடக் கூடாது.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: உங்களில் ஒருவர் கொட்டாவி விடும்போது 'ஆஹ், ஆஹ்' என்று கூற வேண்டாம். ஏனெனில், உங்களில் ஒருவர் தமது வாயைத் திறந்தால், ஷைத்தான் அவரைப் பார்த்துச் சிரிக்கின்றான்.
3- கையை வாயில் வைத்து மறைத்துக் கொள்ளல் வேண்டும்.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
துஆவின் ஒழுங்குகள்
கேள்வி 26 : துஆவின் ஒழுங்குகள் யாவை?
பதில் : 1- அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனைத் துதித்து ஆரம்பித்தல்.
2. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுதல்.
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : "நீர் தொழுது விட்டு அமர்ந்தால், அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான முறையில் புகழ்ந்து, என் மீது ஸலவாத்துச் சொல்லி, பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக."
3- துஆவின் போது இரு கைகளையும் உயர்த்துதல்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: «நிச்சயமாக உங்களின் இரட்சகன் நாணமுடையவனும், கொடை வள்ளலுமாவான். எனவே தன் அடியான் அவனின் இரண்டு கைகளையும் தன்னிடம் உயர்த்துகின்ற போது அதனை வெறுமையாக திருப்பிவிடுவதற்கு அவன் வெட்கப்படுகின்றான்»
4. தவ்பா மற்றும் பாவத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
- நபி மூஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையில் : (மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு தீங்கு இழைத்துக் கொண்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆக, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்கஸஸ் : 16).
5. பிரார்த்தனையில் மன்றாடுதல், அதாவது அதனை அதிகமாகவும் திரும்பத் திரும்பவும் கேட்டல்.
6. பதில் கிடைப்பதில் அவசரப்படாது இருத்தல்.
7. பிரார்த்தனையில் பாவகாரியங்களையோ, உறவுகளை துண்டித்து நடப்பதற்கான விடயங்களையோ கேட்கக் கூடாது.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "பாவம் செய்வதற்கோ அல்லது சொந்தபந்தத்தை துண்டித்து வாழ்வதற்கோ பிரார்த்தனை செய்யாமலும், அவசரப்படாமலும் இருக்கும் காலமெல்லாம் அடியானின் பிரார்த்தனைக்கு தொடர்ந்தும் பதிலளிக்கப்படுகிறது. 'அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் பல தடவைகள் பிரார்த்தனை செய்தேன் ஆனாலும் எனது பிரார்த்தனைக்கு பதில் கிடைத்ததாக நான் காணவில்லை என கைசேதப்பட்டு பிரார்த்திப்பதை கைவிட்டு விடுவதாகும்' எனக் கூறினார்கள்."
8- மிக அமைதியாக பிராரத்தித்தல்
அல்லாஹ் கூறுகிறான் : தாழ்மையாகவும் மறைவாகவும் உங்கள் இறைவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். (அல் அஃராப் : 54)
9. துஆவின் போது மனதை ஒருநிலைப்படுத்தல்.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: «பதிலளிக்கப்படும் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், மேலும் கவனயீனமான, பராக்கான உள்ளத்திலிருந்து வரும் பிரார்த்தனைக்கு நிச்சயமாக அல்லாஹ் பதிலளிக்க மாட்டான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்»
10. அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன், நெருக்கடியான மற்றும் செழிப்பான (துன்பமான இன்பமான) எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்டல்.
அல்லாஹ் கூறுகிறான் : இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்! ஜின்
11. அல்லாஹ்வின் திருநாமங்கள் மூலமும் அவனின் பண்புகள் மூலமும் வஸீலா தேடுதல்.
அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்விற்கே மிக அழகிய பெயர்கள். உரியன ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். (அல் அஃராப் : 54)
கிப்லாவை முன்னோக்குதல். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "கிப்லாவை முன்னோக்கி தன் கைகளை நீட்டி, தமது தோள்பட்டைகளிலிருந்து மேலாடை கீழே விழும் வரை தமது இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்."
13- உணவு மற்றும் உடையை தூய்மையானதாக அமைத்துக்கொள்ளுதல்.(ஹராமானாத இல்லாதிருத்தல்) பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும் «பின்பு நபியவர்கள் ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார்கள். அவன் நீண்ட ஒரு பயணத்தில், பரட்டைத் தலையுடன், புழுதி படிந்த நிலையில், தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, 'யா ரப்பு! யா ரப்பு!' எனப் பிரார்த்திக்கின்றான். ஆனால், அவனது உணவு ஹராமானது, அவனது குடிபானமும் ஹராமானது, அவனது ஆடையும் ஹராமானது, அவன் ஹராமினாலே உணவு ஊட்டப்பட்டுள்ளான். அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்!»
அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்குகள் :
கேள்வி 27 : அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?
பதில் : 1- அல்குர்ஆனை வுழூச்செய்த பின் சுத்தமான நிலையில் ஓதுதல்.
2- கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் உட்கார்ந்து ஓதுதல்.
3- அல்குர்ஆனை ஒதுவதற்கு ஆரம்பிக்கும் போது أعوذ بالله من الشيطان الرجيم என்று ஓதி ஷைத்தானைவிட்டும் பாதுகாப்புத் தேடிக் கொள்வேன். அல்லாஹ் கூறினான் : , (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருவீராக. (அன்நஹ்ல் : 97)
4- ஓதிய வசனங்கள் குறித்து சிந்திப்பேன். அல்லாஹ் கூறினான் : அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? அவர்களது உள்ளங்கள் மீது பூட்டுகளா போடப்பட்டுள்ளன? முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் ஆவர்.
**********
நற்குணங்கள் பண்பாடுகள் பற்றிய பகுதி :
ஒழுக்கவியல்:
பண்பாடு: என்பது நன்மை, தீமை என்பவற்றின் அர்த்தத்தை அறியத்தரும் ஒரு கலையாகும்; மேலும், இறைவனுடனும் அவனது படைப்புக்களுடனும் எமது நடவடிக்கைகள் எவ்வாறமைந்திருக்க வேண்டும் என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது.
கேள்வி 1- நற்குணத்தின் சிறப்பு என்ன?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : 'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.
கேள்வி 2 : நாம் ஏன் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?
பதில் : 1- அவை அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்துள்ளமை.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ் தஆலாவுக்கு மிகவும் விருப்பமானவர்கள், 'அவர்களில் நல்லொழுக்கம்(நற்குணம்) மிக்கவர்களே' என்று கூறினார்கள்."
2- அவை மக்களின் அன்பை பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்துள்ளமை.
3- நற்பண்புகள் மீஸானில் மிகக் கணதியானவையாக இருக்கின்றமை.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: ((மறுமை நாளில் தராசில் மிகவும் கனதியானதாக இருப்பது நற்குணமாகும்))
4- நற்பண்புகளை கடைபிடித்து ஓழுகுவதால் அதற்குக் கிடைக்கும் கூலியும் வெகுமதியும் பல மடங்காக கிடைக்கின்றமை.
- ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் இரவில் நின்று வணங்குபவர், மற்றும் பகலில் நோன்பு நோற்பவரின் பதவிகளை அடைவான்."
5- இறை நம்பிக்கையின் பரிபூரணத் தன்மைக்கான அடையளாமாக இருக்கின்றமை.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: 'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.
கேள்வி 3 : பண்பாடுகளை நாம் எவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்?
பதில் : நாம் பண்பாடுகளை –நற்குணங்களை- அல்குர்ஆனிலிருந்தும் நபி வழிமுறைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்: "நிச்சயமாக இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது" (அல் இஸ்ராஃ : ٩).
மேலும் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : "நற்குணங்களைப் பூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்".
கேள்வி: 4 : இஹ்ஸான் என்றால் என்ன? அதன் வடிவங்கள் யாது?
பதில் : இஹ்ஸான் என்பது அதி உயர்பண்பாடாகும். அது ஒரு அடியான் பெற்றிருக்க வேண்டிய அல்லாஹ்வின் தொடர் அவதானம் பற்றிய உணர்வையும், படைப்பினங்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு நன்மை செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் அனைத்து விடயங்களிலும் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விதியாக்கியுள்ளான்".
இஹ்ஸான் எனும் பண்பின் வடிவங்கள் சில பின்வருமாறு :
அல்லாஹ்வை வணங்கி வழிபடுதல் என்ற விடயத்தில் இஹ்ஸானைக் கடைப்பிடித்தல் என்பது அவனை வணங்குவதில் இக்லாஸ் எனும் உளத்தூய்மையை கடைப்பிடித்து ஓழுகுவதைக் குறிக்கும்.
சொல்லாலும் செயலாலும் பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது.
இரத்த உறவுகளுடனும் உறவினர்களுடனும் நல்ல முறையில் நடந்து உபகாரம் செய்தல்.
அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல்.
அநாதைகள் மற்றும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து உதவி உபகராரம் செய்தல்.
உம்மோடு மோசமான முறையில் நடந்து கொண்டவருடன் நல்ல முறையில் நடந்து கொள்தல்.
தர்க்கம் புரியும் போது அழகிய வழிமுறையைக் கடைப்பிடித்தல்
பேசும் போது அழகிய முறையில் பேசுதல்.
விலங்கினத்தோடு நல்ல முறையில் நடந்து கொள்தல்.
கேள்வி :5 :இஹ்ஸானின் எதிர் பதம் என்ன?
பதில்- அல் இஹ்ஸான் (நல்ல முறையில் நடந்து கொள்ளல், சிறப்பாகச் செய்தல்) என்பதன் எதிர் பதம் அல் இஸாஆ (தீங்கிழைத்தல், மோசமாக நடந்து கொள்ளல்) என்பதாகும்.
அவற்றில் பின்வரும் வடிவங்களைக்குறிப்பிட முடியும். அல்லாஹ்வை வணங்கி வழிப்படடும் போது உளத்தூய்மையின்றி வணங்குதல்.
பெற்றோரைத் துன்புறுத்தல்.
உறவைத் துண்டித்தல்.
அயளவருடன் மோசமாக நடந்து கொள்ளுதல்.
ஏழை எளியவருக்கு உபகாரம் செய்யாதிருத்தல், தீய செயல்களில் ஈடுபடுதல் மற்றும தீய வார்த்தைகள் பேசுதல் போன்றன இதில் அடங்குகின்றன.
கேள்வி : 6 : அமானிதத்தின் வகைகள் மற்றும் அதன் வடிவங்கள் யாவை?
பதில் : 1- அல்லாஹ்வின் கடமைகளில் அமானிதம் பேணுதல்.
அதன் வடிவங்கள் : அல்லாஹ் எங்கள் மீது விதித்துள்ள கடமைகளான தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்றவற்றை அதற்குரிய விதத்தில் நிறைவேற்றுதல் போன்றவை அல்லாஹ்வின் விடயத்தில் அமானிதத்தைக் கடைப்பிடித்தலுக்குரிய வடிவங்களாகும்.
2- படைப்பினங்களின் உரிமைகளில் அமானிதம் பேணுதல் என்பது பின்வரும் விடயங்களைக் குறிக்கிறது :
மனிதர்களின் மானங்கள்,
செல்வங்கள்,
உயிர்கள்,
மற்றும் அவர்களின் இரகசியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன் உன்னிடம் அடைக்களமாக மக்களால் தரப்பட்ட அனைத்தையும் இது குறிக்கிறது.
அல்லாஹ் வெற்றியாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள். விசுவாசிகள்
கேள்வி 7: அமானிதத்திற்கு எதிரானது எவை?
பதில் : கியானா' துரோகம், மோசடி என்பது அல்லாஹ்வினதும் மக்களினதும் உரிமைகளை வீணடிப்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும், தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உங்கள் (மீது சுமத்தப்பட்ட) பொறுப்புகளுக்கு துரோகம் செய்யாதீர்கள். (அல்அன்பால் 38)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "முனாபிகின் (நயவஞ்சகனின்) பண்புகள் மூன்றாகும். என்று குறிப்பிட்டுவிட்டு அவற்றில் ஒன்றாக "நம்பிக்கைவைக்கப்பட்டால் துரோகம் மோசடி செய்வான்" என்று சொன்னார்கள்.
கேள்வி 8 : உண்மை என்பது யாது?
பதில் : நடைமுறைக்கு ஒத்து போகிறவிதத்திலும் அல்லது ஒரு விடயத்தை உள்ளவாறே எடுத்துக் கூறுதலை குறிக்கிறது.
அதன் வடிவங்களில் சில :
மனிதர்களுடன் பேசும்போது உண்மை பேசுதல்.
ஒரு விடயத்தில் வாக்குக்கொடுத்தால் அதில் உண்மையாக நடந்து கொள்ளல்.
சொல் செயல் அனைத்திலும் உண்மையாக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "நிச்சயமாக உண்மை பேசுதல் நற்செயலுக்கு வழிகாட்டுகிறது. நற்செயல் சுவர்கம் செல்ல வழிகாட்டுகிறது, ஒரு மனிதன் அவன் உண்மையே பேசிக்கொண்டிருப்பான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுவான்".
கேள்வி 9 :உண்மை பேசுதலுக்கு எதிரானது என்ன?
பதில் : பொய் பேசுதல், இது யதார்த்திற்கு முரணானது. அதாவது மக்களிடம் பொய் சொல்வது, காலக்கெடுக்கு மாற்றம் செய்தல், பொய்சாட்சியம் கூறுவது போன்றன இதில் அடங்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக பொய் தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்சொல்லிக் கொண்டே இருப்பான். இறுதியில் அவன் மிகப்பெரும் பொய்யன் என்று அல்லாஹ்விடத்தில் எழுதப்படுவான்".
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "நயவஞ்சகனின் பண்பு மூன்றாகும், அவற்றில் ஒன்று அவன் பேசினால் பொய்யுரைப்பான், வாக்களித்தால் மாறு செய்வான்".
கேள்வி: 10 : பொறுமையின் வகைகள் யாவை?
பதில் : அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்.
பாவம் செய்வதைவிட்டும் மனதை அடக்கி பொறுமை கொள்தல்.
இறைவிதியின் படி நிகழும் துன்பங்களில் பொறுமையாக இருந்து அல்லாஹ்வை எல்லா நிலைகளிலும் புகழ்தல்.
அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான். (ஆல இம்ரான் : 85).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது".
கேள்வி 11: பொறுமைக்கு எதிரானது எது?
பதில்: அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் பொறுமையின்மை, மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் வேகமாக செயற்படுதல், மற்றும் சொல் செயல் மூலம் அல்லாஹ்வின் விதியை வெறுத்து கோபம் கொள்ளுதல் போன்றவற்றைக் குறிக்கிறது.
இதன் வடிவங்களில் சில :
மரணத்தை ஆசை கொள்ளுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறினார்கள் : "தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் எவரும் மரணத்தை வேண்டிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு அவன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் (அல்லாஹும் அஹ்யினி மா கானத்தில் ஹயாத்து ஹைரால்லி,வதவப்பனி இதா கானத்தில் ஹயாத்து ஹைரால்லி ,) 'யா அல்லாஹ்! நான் உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருக்கும் வரை என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் எனக்கு நன்மையாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக!' என்று அவன் கூறட்டும்."
கன்னத்தில் அரைந்து கொள்ளல்.
ஆடையைக் கிழித்தல்.
தலை விரிகோலமாக இருத்தல்.
அழிவு ஏற்பட வேண்டும் என தனக்கு எதிராகப் பிரார்த்தித்தல் போன்றவைகளாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : “சோதனையின் அளவுக்கு ஏற்பவே கூலியின் அளவும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்கு, (இறைப்) பொருத்தம் கிடைக்கும். கோபித்தவருக்கு, (இறைக்) கோபம் கிடைக்கும்.”
கேள்வி 12 : பரஸ்பரம் ஒத்துழைப்பாக நடந்து கொள்ளல் (அத்தஆவுன்) எனும் பண்பு என்றால் என்ன?
பதில் : மக்கள் தங்களுக்கு மத்தியில் சத்தியம் மற்றும் நன்மையான காரியங்களில் ஒத்துழைத்து நடந்து கொள்வதையே அத்தஆவுன் என்பது குறிக்கிறது.
ஒத்துழைப்பாக நடந்து கொள்வதின் சில வடிவங்கள் :
- உரிமைகளை திருப்பி ஒப்படைப்பதில் பரஸ்பரம் ஒத்துழைத்தல்.
- அநியாயக்காரனின் அநியாத்தைத் தடுப்பதில் பரஸ்பரம் ஒத்துழைத்தல்.
- மக்களின் மற்றும் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பாக நடந்து கொள்ளுதல்.
- நன்மையான எல்லா காரியங்களிலும் பரஸ்பரம் ஓத்துழைத்தல்.
பாவமான காரியம், தொந்தரவு செய்தல் அத்துமீறி நடத்தல் போன்றவற்றில் ஓத்துழைப்பு வழங்காது நடந்து கொள்ளுதல்.
அல்லாஹ் கூறுகின்றான் : நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன். (மாஇதா : 104)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கும் விடயத்தில் ஒரு கட்டடத்தைப் போன்றோர் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றைய பகுதிக்கு வழுச்சேர்க்கிறது".
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு அநியாயம் செய்யமாட்டார். அவர் மற்றவருக்கு உதவி செய்வதையும் கைவிடமாட்டார். யார் தமது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ, அவரின் தேவையை இறைவன் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவாரோ, அவரின் மறுமைநாளின் கஷ்டங்களை இறைவன் நீக்கிவிடுகின்றான். யார் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக்கிறாரோ, அவரின் குறைகளை இறைவன் மறுமைநாளில் மறைத்துவிடுவான்".
கேள்வி 13 : வெட்கம் எனும் ஒழுக்கப்பண்பின் வகைகள் எவை?
பதில் :1- அல்லாஹ்வின் விடயத்தில் வெட்கம் பேணல் என்பது அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது இருப்பதாகும்.
2- மனிதர்களுடன் நடந்து கொள்ளும் விடயத்தில் வெட்கம் பேணல் என்பது அசிங்கமான தரக்குறைவான பேச்சுக்களை பேசுவதை விட்டுவிடுதல் மற்றும் அவ்ரத்தை –வெட்கத்தளங்களை –வெளிக்காட்டுவதை விட்டுவிடுதல் போன்றவைகளைக் குறிக்கும்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஈமான் அறுபது அல்லது எழுபதற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். அதில் முதன்மையானது "லாஇலாஹ இல்லல்லாஹ்" எனும் ஏகத்துவக் கலிமாவாகும். அதில் தாழ்ந்தது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும்".
கேள்வி 14 : கருணை காட்டுதல் எனும் நற்குணத்தின் வடிவங்கள் எவை?
பதில் : வயதில் மூத்தோருக்கு கருணை காட்டுவதுடன் அவர்களை மதித்து நடந்து கொள்ளுதல்.
சிறியோர் மற்றும் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுதல். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ""எங்களில் பெரியோரை மதிக்காதவரும், சிறார்களுக்கு இரக்கம் காட்டாதவரும் எம்மைச் சார்ந்தவரல்லர்"."
வரியவர் எளியவர் தேவையுடைவர் ஆகியோருக்கு கருணை காட்டல்.
விலங்கினங்களுக்கு துன்பம் இழைக்காது உணவளிப்பதன் மூலம் கருணை காட்டல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு கூறினார்கள் : "முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு காட்டுவதிலும் பாசத்தோடு நடந்து கொள்வதிலும் பரிவு காட்டுவதிலும் ஒரு உடலைப் போன்றவராய் காண்பீர். அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பிற்கு வலி ஏற்பட்டுவிட்டால் ஏனைய உறுப்புகளும் தூக்கமின்மையாலும் கஷ்டத்தாலும் அவதிப்படுகின்றன".
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "இரக்கம் காட்டுபவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்".
கேள்வி 15 : நேசம் வைத்தலின் வகைகள் எவை?
பதில் : 1- அல்லாஹ்வை நேசித்தல்.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். (பகரா : 153).
- இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசித்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோரையும், அவரது குழந்தையையும் விட நான் மிக்க நேசத்திற்குரியவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்".
3- முஃமின்களை நேசித்தல். அதாவது நீ உனக்கு நன்மையை விரும்புவது போல் அவர்களுக்கும் நன்மையை விரும்புதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "தான் விரும்புபவற்றை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவரும் உண்மை விசுவாசியாக மாட்டார்".
கேள்வி 16 : முகமலர்ச்சி என்றால் என்ன?
பதில் : மனிதர்களை சந்திக்கும் வேளை ஏற்படுகின்ற மகிழ்ச்சி புன்னகை, இரக்கம், சந்தோச வெளிப்பாடு ஆகியவைவைகளால் முகத்தில் தோன்றும் மலர்ந்த நிலையே முகமலர்ச்சி எனக் கூறப்படுகிறது.
அதாவது ஒரு மனிதனை சக மனிதர்களிலிருந்தும் அந்நியப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு வெறுப்பேற்படுமாறு முகம் சுளித்து கடுகடுப்பாக இருத்தல் என்ற பண்பிற்கு எதிரானது.
இதன் சிறப்புக் குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவைகளாகும். அபூதர் அல்கிபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் பின்வருமாறு கூறினார்கள் : '(அபூதர்ரே!) நன்மையான காரியங்கள் எதுவாயினும் அவற்றை அற்பமாகக் கருதாதே! அது உனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே!'.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : 'உனது சகோதரனின் முகத்தைப்பார்த்து புன்னகைப்பதும் உனக்கு தர்மமாகும்'.
கேள்வி 17 : ''ஹஸத்' பொறாமை என்றால் என்ன?
பதில் : பிறரிடம் உள்ள அருள் நீங்கிட வேண்டும் என்று ஆசைவைப்பது, அல்லது பிறரிடம் காணப்படும் அருளை வெறுப்பதே பொறாமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). (அல்பலக் : 5)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'நீங்கள் ஒருவருக்கொருவர் பகைத்துக் (கோபித்துக்) கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணித்து நடக்காதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்'.
கேள்வி 18 : ஏளனம் என்றால் என்ன?
பதில் : ஏளனம் என்பது உனது சகோதர முஸ்லிமை கேலி செய்வதும் அற்பமாக –தரக்குறைவாக கருதுவதுமாகும். இது தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகும்.
இது தடுக்கப்பட்டது என்ற விடயத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : நம்பிக்கையாளர்களே! ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை கேலி செய்ய வேண்டாம், (கேலி செய்யப்படும்) அவர்கள் (கேலி செய்கிற) இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். பெண்களும் (மற்ற) பெண்களை கேலி செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களை (-உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாக) குத்திப் பேசவேண்டாம். தீய பட்டப் பெயர்களைக் கொண்டு பட்டப்பெயர் சூட்டாதீர்கள். (நம்பிக்கையாளர்களை பாவிகள் என்றோ, இழிவான அர்த்தம் உடைய பெயர்களை கூறியோ அழைக்காதீர்கள்!) நம்பிக்கை கொண்டதன் பின்னர் பெயர்களில் மிக கெட்டது பாவிகள் (என்ற பெயர்) ஆகும். (ஆகவே, யாரையும் அப்படி அழைக்காதீர்கள்!) யார் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவர். (அல்ஹுஜுராத் : 11).
கேள்வி 19 : பணிவு என்றால் என்ன?
பதில் : ஒரு நபர் தான் பிறரை விட மேலானவர் எனக் காட்டிக் கொள்ளாத நிலையே பணிவாகும். எனவே இவ்வாறான ஒருவர் மக்களை தரக்குறைவாக பார்க்கமாட்டான், சத்தியத்தை புறக்கணித்து நடக்கவும்மாட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான் : "அர்ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள்; எத்தகையவர்களெனில் அவர்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்". (அல் ஃபுர்கான் : 63), அதாவது "ஹெளனன்" என்றால் பணிவுள்ளவர்களாக நடப்பார்கள் என்பதாகும்.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : 'யார் அல்லாஹ்வுக்காக பணிவுடன் நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் உயர்த்தி விடுவான்'.
மேலும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் 'உங்களில் ஒருவர் இன்னொருவர் மீது பெருமையடித்துக் கொள்ளாதிருப்பதற்காகவும் மற்றவர் மீது அத்துமீறி நடக்காது இருப்பதற்காகவும் நீங்கள் பணிவை கடைப்பித்து ஒழுக வேண்டும் என அல்லாஹ் எனக்கு வஹி அறிவித்துள்ளான்'.
கேள்வி 20 : தடைசெய்யப்பட்ட பெருமையின் -ஆணவத்தின் வகைகள் எவை?
பதில் : 1- சத்தியத்தியத்தின் மீது ஆணவம் கொள்ளுதல். அதாவது, சத்தியத்தை மறுத்து அதனை ஏற்காமல் இருப்பதாகும்.
2. மனிதர்களிடத்தில் பெருமையாக நடந்து கொள்ளுதல் என்பது அவர்களை அற்பமாக கருதி அவர்களை இழிபடுத்துவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவனுடைய மனதில் அனு அளவு பெருமை இருக்குமோ அவன் சுவர்க்கம் புகமாட்டான்". அப்போது அருகில் இருந்தவர், ஒருவர் தனது ஆடை அழகாக இருக்கவேண்டும்; தமது காலணி அழகாக இருக்கவேண்டும் என விரும்புவது பெருமையாகாதா? என வினவினார். அதற்கு நபியவர்கள : "அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். (இவ்வாறு விரும்புவது பெருமையாகாது) பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும், மக்களை இழிவாக நினைப்பதும் ஆகும்".
(பதருல் ஹக்) என்பது சத்தியத்தை மறுப்பதைக் குறிக்கிறது.
(கம்துன்னாஸ்) என்பது மனிதர்களை இழிவாகக் கருதுதல் என்பதாகும்.
அழகான ஆடை மற்றும் அழகான காலணி ஆகியன பெருமையில் உள்ளடங்காது.
கேள்வி 21 : மோசடியின் (ஏமாற்றின்) சில வகைகள் யாவை?
பதில் - கொடுக்கல் வாங்கலின் போது பொருட்களின் குறைகளை மறைத்து நுகர்வோருக்கு மோசடி செய்தல்.
- கல்வியை கற்பதில் மோசடி செய்தல் . மாணவர்கள் பரீட்சைகளின் போது மோசடி செய்வது இதற்கான உதாரணம்.
- பேச்சில் மோசடி செய்வது, பொய்சாட்சியம் மற்றும் பொய்யுரைத்தல் போன்றதே.
- மனிதர்களுடன் சேர்ந்து முடிவு செய்து பேசியதை நிறைவேற்றாமையும் மோசடியாகும்.
- மோசடி தடை செய்யப்பட்டுள்ளது பற்றிய ஹதீஸ் பின்வருமாறு : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. அப்போது அவர்கள் : "உணவுப் பொருட்களின் உரிமையாளரே! என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழை பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "மக்கள் பார்க்க அதனை உணவுக்கு மேலே வைத்திருக்கக் கூடாதா? யார் மோசடி செய்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
"அஸ்ஸுப்ரது" என்பது உணவுக் குவியல் என்பதைக் குறிக்கிறது.
கேள்வி 22 : புறம் பேசுதல் என்றால் என்ன?
பதில் : உனது சகோதரன் இல்லாத போது அவனைப்பற்றி அவன் விரும்பாதவற்றைக் கூறுவதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "உங்களில் சிலர், சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் - இறந்த நிலையில் உள்ள தனது சகோதரனின் மாமிசத்தை - சாப்பிட விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை (பாவம் செய்தவர் திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்புவதை) அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான். (அல்ஹுஜுராத் : 12).
கேள்வி 23 : கோள் சொல்லுதல் என்றால் என்ன?
பதில் : மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் பிறர் பற்றி இன்னொருவரிடம் கூறுதல் கோள் ஆகும். (குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும்.)
நபி (ஸல்) கூறினார்கள் : 'கோள் சொல்லுபவன் சுவனம் நுழைய மாட்டான்'.
கேள்வி 24 : சோம்பல் என்றால் என்ன?
பதில் : நல்லதைச் செய்வதிலும், ஒருவன் அவசியம் செய்யவேண்டிய விடயங்களில் ஆர்வமற்று மந்த நிலையில் இருத்தல்.
அவ்வாறான விடயங்களில் ஒன்றுதான் கட்டாயக் கடமைகளைச் செய்வதில் சோம்பரித்தனமாக இருத்தல்.
அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள். (அந்நிஸாஃ : 142).
எனவே ஒரு இறை விசுவாசி (முஃமின்) சோம்பல், மனச்சோர்வு, மந்தம் ஆகியவற்றைக் கைவிட்டு, இவ்வுலகவாழ்வில் எல்லாம் வல்ல அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் உழைப்பு, ஈடுபாடு, கடின உழைப்பு, விடா முயற்சி, போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.
கேள்வி 25 : கோபத்தின் வகைகள் யாவை?
பதில் :கோபம் இரண்டு வகைப்படும் அவைகளாவன, 1- வரவேற்கத்தக்க (புகழத்தக்க) கோபம் : இது அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதாகும். அதாவது இறைநிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் ஏனையோரும் அல்லாஹ்வினால் தடைசெய்ய்பட்டவற்றை மதிக்காது நடக்கும் போது அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதையே வரவேற்கத்தக்க கோபம் எனப்படும்.
2- கண்டிக்கத்தக்க கோபம் : அதாவது ஒரு மனிதன் தனக்கு அவசியமில்லாத விடயங்களை கூறவும் செய்யவும் தூண்டும் கோபமே கண்டிக்கத்தக்க கோபமாகும்.
கண்டிக்கத்தக்க கோபத்திற்கான சிகிச்சை முறைகள் :
1- வுழு செய்தல்.
2- நின்று கொண்டிருந்தால் உட்காருதல். உட்கார்ந்திருந்தால் சாய்ந்து கொள்ளளுதல்.
- 'கோபம் கொள்ளாதே' என்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை கடைப்பித்து ஒழுகுதல்.
4- கோபம் ஏற்படும் போது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்.
5- அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்.
6- மௌனமாக இருத்தல்.
கேள்வி 26 : உளவு பார்த்தல் என்றால் என்ன?
பதில் : மனிதர்களது தவறுகளையும் அவர்கள் அவசியம் மறைக்க வேண்டியவற்றையும் தேடிக் கண்டறிதல். (துருவித்துருவி ஆராய்தல்)
அதில் தடைசெய்யப்பட்ட சில வடிவங்கள் :
- வீட்டினுள் நடைபெறும் மனிதர்களின் அந்தரங்கங்களை நோட்டமிடுதல்.
- ஒருவர் ஒரு கூட்டத்தினரின் உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் செவிசாய்ப்பது.
அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் (பிறர் குறைகளை) துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்". (அல்ஹுஜுராத் : 12).
கேள்வி 27 : ஊதாரித்தனம் (வீண்விரயம்) என்றால் என்ன?; கஞ்சத்தனம் என்றால் என்ன? மற்றும் தயாளகுணம் என்றால் என்ன?
பதில் : ஊதாரித்தனம் (வீண்விரயம்) என்பது செல்வத்தை முறை கேடாக செலவு செய்தல். அதன் எதிர் பதம் கஞ்சத்தனம் ஆகும், அதாவது செல்வத்தை உரியவற்றிற்கு செலவு செய்யாது இருத்தலே கஞ்சத்தனமாகும்.
இதில் சரியான நிலைப்பாடு யாதெனில் இவ்விரண்டுக்கும் மத்தியில் நடு நிலைமை பேணி நடந்து கொள்வதாகும். ஒரு முஸ்லிம் பெருந்தன்மையோடு தயாள குணத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும், அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அவர்கள் செலவழிப்பது அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும். (அல் ஃபுர்கான் : 67).
கேள்வி : கோழைத்தனம் என்றால் என்ன? தைரியம் (வீரம்) என்றால் என்ன?
பதில் : கோளைத்தனம் என்பது பயப்பட தேவையில்லாத விடயங்களுக்கு பயப்படுதல்.
உதாரணம் : உண்மையை சொல்வதற்கு பயப்படுதல், ஒரு தீமையைத் தடுப்பதற்கு பயப்படுதல்.
தைரியம் (வீரம்) என்பது சத்தியத்தியத்தை நிலைநாட்டுவதற்கு துணிவு கொள்ளுதல் , உதாரணம் : போரட்டக்களத்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக முன்வருதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிரார்தனையில் பின்வருமாறு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் : "யா அல்லாஹ் ! கோழைத் தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்".
நபி (ஸல்) கூறுகிறார்கள் : 'பலசாலியான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவனும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவனுமாவான். மேலும் இருவரிலும் நன்மை உண்டு'.
கேள்வி 29 : தடுக்கப்பட்ட வார்த்தைகள் சில எவை?
பதில் : - திட்டுதல், ஏசுதல் போன்றன.
- ஒருவரைப் பார்த்து மிருகம் என்றோ அது போன்ற வார்த்தைகளைக் கூறுதல்.
- மனிதர்களின் மானங்களுடன் சம்பந்தப்பட்ட மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளைக் குறிப்பிடுதல்.
இவைகள் அனைத்தையும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : 'ஒரு உண்மை முஃமின் மற்றவர்களை குறை கூறுபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்கமாட்டான்'.
கேள்வி 30 : ஒரு முஸ்லிம் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகிட துணைசெய்யும் காரணிகள் யாவை?
பதில் 1 : அல்லாஹ் உனக்கு நற்பண்புளை தந்து அவற்றை கடைப்பிடித்து ஒழுகிட துணைசெய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தல்.
2- எப்போதும் அல்லாஹ் தன்னை காண்காணித்து, உன்னை பற்றி அறிந்து உனது எல்லா விவகாரகங்களையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இருத்தல்.
3- நற்பண்புகளினால் கிடைக்கும் வெகுமதி குறித்து சிந்தித்தல். ஏனெனில் அவை சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
4- துர்குணங்களால் கிடைக்கும் தீய முடிவு குறித்து சிந்தித்தல். ஏனெனில் அவை நரகத்திற்கு செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
5- நற்குணங்கள் அல்லாஹ்வினதும் மனிதர்களினதும் நேசத்தைப் பெற்றுத்தரவல்லது. தீய குணங்களோ அல்லாஹ்வின் கோபத்தையும் மனிதர்களின் வெறுப்பையும் பெற்றுத்தரவல்லது.
6- நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து அதனை முன்மாதிரியாகக் கொள்ளல்.
7- நல்லோர்களுடன் தோழமை கொண்டு, தீயவர்களுடன் தோழமை கொள்வதை விட்டும் தவிர்ந்திருத்தல்.
**********
துஆக்கள் மற்றும் திக்ர்கள் பற்றிய பகுதி :
திக்ரு (இறை தியானம்) பற்றிய அறிவு:
திக்ரின் வரையறை: அது தஹ்லீல், தக்பீர், தஸ்பீஹ், தஹ்மீத், இஸ்திக்பார் மற்றும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவைப் புகழ்ந்து பேசுதல், காலை மற்றும் மாலை நேர திக்ருகள், தொழுகைகளின் திக்ருகள், தூங்கும் போது மற்றும் விழித்தெழும் போது, மேலும் நபியவர்கள் (صلى الله عليه وسلم) அவர்களிடமிருந்து வந்துள்ள ஏனைய சந்தர்ப்பங்கள் மற்றும் வார்த்தைகளின் ஊடாக நாவினால் அல்லாஹ்வை திக்ர் செய்வதாகும்.
- திக்ரில் சிறந்தது உள்ளமும் நாவும் ஒன்றுபட்டுச் செய்வதாகும்.
கேள்வி 1: திக்ரின் சிறப்பு என்ன?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : 'தன் இறைவனை நினைவு கூறுகிற மனிதனுக்கும் மற்றும் தன் இறைவனை நினைவு கூறாத மனிதனுக்கும் உதாரணம் உயிருள்ளவனையும் உயிரற்றவனையும் போன்றதாகும்'.
இவ்வாறு நபியவர்கள் வரணித்தமைக்கு காரணம் மனித வாழ்வின் பெறுமானம் அல்லாஹ்வை திக்ர் செய்யும் அளவில்தான் தங்கியுள்ளது என்பதினாலாகும்.
கேள்வி 2 : திக்ர் (இறைவனை நினைத்து வாழ்வதால்) செய்வதால் கிடைக்கும் பயன்கள் சிலதைக் குறிப்பிடுக?
பதில் :1 – திக்ர் செய்வது அல்லாஹ்வை திருப்திப்படுத்தும்.
2- ஷைத்தானை துரத்தும்.
3- தீங்குகளிலிருந்து ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
4- திக்ர் செய்வதனால் (மகத்தான) கூலியும் வெகுமதியும் கிடைக்கும்.
கேள்வி 3 : மிகச்சிறந்த திக்ர் எது ?
கேள்வி 4 : தூக்கத்தை விட்டு எழும்பும்போது என்ன கூறுவாய்?
'அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஷூர்'. பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்பெற்று எழச்செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். மேலும் அவனிடமே (நமது) மீளுதல் உள்ளது.
கேள்வி 5 : நீ உனது ஆடையை அணியும் போது என்ன கூறுவீர்?
'அல்ஹம்து லில்லாஹில்லதி கஸானீ ஹாதஸ்ஸவ்ப வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வா'. பொருள் : இந்த ஆடையை அணியச் செய்து இதனை எனது எவ்வித ஆற்றலோ சக்தியோ இன்றி வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.
கேள்வி : ஆடையை களையும் போது என்ன கூறுவீர் ?
பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்).
கேள்வி 7 : புத்தாடை அணியும் போது ஓதும் துஆ எது?
பதில் : 'அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக கைரஹு வகைர மா ஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸுனிஅ லஹு' யா அல்லாஹ்! உனக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். நீதான் எனக்கு இதனை அணியத்தந்தாய். இதன் நன்மையையும் இது எந்த நன்மைக்காக தயாரிக்கபட்டதோ அதனையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் தீங்கை விட்டும், இது எத்தீங்குக்காக தயாரிக்கப்பட்டதோ அதன் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
கேள்வி 8 : புத்தாடை அணிந்தவருக்கு ஓதும் துஆ என்ன?
பதில் : புத்தாடை அணிந்த ஒருவரைக் கண்டால் அவருக்காக பின்வருமாறு பிரார்த்திக்கவும் : "துப்லீ வயுஹ்லிபுல்லாஹு தஆலா", (நீ இதனை பழுதாகும் வரை அணிந்திடுவாய். மேலும் இதற்கு பகரமாக அல்லாஹ் ஆடைகளை உமக்கு வழங்கிடுவானாக.).
கேள்வி 9 : கழிவறைக்குள் நுழையும் போது ஓதும் துஆ யாது?
கேள்வி 10 : கழிவறையிலிருந்து வெளியேறும்போது ஓதும் துஆவைக் குறிப்பிடுக?
'குஃப்ரானக' என்பதாகும். (யா அல்லாஹ் ! என்னை நீ மன்னிப்பாயாக).
கேள்வி 11 : வுழு செய்ய முன் என்ன கூறுவீர்?
பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்).
கேள்வி 12 : வுழு செய்து முடிந்ததும் ஓதும் திக்ர் என்ன?
கேள்வி 13 : வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் திக்ர் என்ன?
பதில் : "பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், லாஹவ்ல வல குவ்வத இல்லா பில்லாஹ்". (அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்) என் காரியங்களை அல்லாஹ்விடம் முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ (எனக்குக்குக்) கிடையாது).
கேள்வி 14 : வீட்டினுள் நுழையும் போது ஓதும் திக்ர் யாது?
பதில் : 'பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா' (அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு நுழைந்தோம் . அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம். மேலும் எங்கள் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனின் மீது நம்பிக்கை வைத்தோம்) எனக் கூறிவிட்டு தனது குடும்பத்தினருக்கு ஸலாம் கூறவேண்டும்.
கேள்வி 15 : பள்ளிவாயிலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ யாது?
கேள்வி 16 : பள்ளிவாயிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ யாது?
கேள்வி 17 : அதானை -பாங்கு- செவிமடுக்கும் வேளை என்ன கூறுவீர்?
பதில் : முஅஸ்ஸின் கூறுவது போல் நானும் கூறுவேன். அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ் - ஹய்ய அலல்பலாஹ் - என்று கூறினால் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று கூறுவேன்.
கேள்வி : 18 : அதான் கூறி முடிந்ததும் என்ன கூறுவீர்?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவாய்.
பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் பிரார்தனையில் ஈடுபடு, ஏனெனில் அவ்வேளை கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படாது. அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கேள்வி 19 : காலை மாலையில் ஓதும் திக்ருகளை எவை?
2. மேலும நான் பின்வரும் ஸுறாக்களை ஓதுவேன் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் குல் ஹுவல்லாஹு அஹத் அல்லாஹுஸ் ஸமத் லம் யலித் வலம் யூலத் வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத் (ஸூறத்துல் இஹ்லாஸ்: 1-4) மூன்று முறை.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம; குல் அஊது பி ரப்பில் ஃபலக் 1 மின் ஷர்ரி மா கலக்2 வமின் ஷர்ரி காஸிகின் இதா வகப்3 வமின் ஷர்ரின்னஃப்பாஸாத்தி ஃபில் உகத் 4 வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத் 5 ஸுறத்துல் பலக் 1-5(மூன்று முறை )
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் குல் அஊது பி ரப்பின்னாஸ் 1 மலிகின்னாஸ் 2 இலாஹின்னாஸ் மின் ஷர்ரில் வச்வாஸில் கன்னாஸ் 4 அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின்னாஸ் 5 மினல் ஜின்னத்தி வன்னாஸ் 6 ஸுறத்துன்னாஸ் :(1-6) மூன்று முறை.
கேள்வி 20 : தூங்கும் போது என்ன கூறுவாய் ?
'பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா'. பொருள் : யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன்.
கேள்வி 20 : சாப்பிட முன் என்ன கூறுவாய் ?
பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்). ஆரம்பத்தில் பிஸ்மில் கூற மறந்து விட்டால் பின்வருமாறு கூறவும் : 'பிஸ்மில்லாஹி பீ அவ்வலிஹீ வஆகிரிஹீ' . (ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி உண்ணுகிறேன்).
கேள்வி 22 – சாப்பிட்டு முடிந்ததும் என்ன கூறுவாய்?
பதில் : 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வஃ'. (எனது எவ்வித சக்தியோ ஆற்றலோ இன்றி எனக்கு இந்த உணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.)
கேள்வி 23 : விருந்தாளி விருந்தளித்தவருக்கு ஓதும் துஆ என்ன?
பதில் : 'அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும், வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும்'. பொருள் : (யா அல்லாஹ்! நீ அவர்களுக்கு அளித்தவற்றில் பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! மேலும் அவர்களின் குற்றங்களை மன்னித்து, அவர்களுக்கு கிருபை செய்வாயாக!).
கேள்வி 24: ஒருவர் தும்மினால் கூற வேண்டியவை?
பதில் - தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவார். (நிச்சயமாக புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம்) அதற்கு அவரின் சகோதரர் அல்லது தோழர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கருனைபொழிவானாக) என்று கூறட்டும். அதற்கு தும்மியவர் 'யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக! உங்கள் நிலமைகளை சீராக்குவானாக!) என்று கூற வேண்டும்.
கேள்வி 25 : சபை முடிந்து எழும்போது ஓதும் (கப்பாரதுல் மஜ்லிஸ்) துஆ என்ன?
பதில் : 'ஸுப்ஹானகல்லாஹம்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தக்பிருக வஅதூபு இலைக'. இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் கோரி உன்னிடமே மீள்கிறேன்.
கேள்வி 26 : வாகனத்தில் ஏறும் போது ஓதும் துஆ எது?
பதில் : பிஸ்மில்லாஹ் வல்ஹம்துலில்லாஹ் "ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹூ முக்ரினீன், வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்" [அஸ்ஸுக்ருஃப்: 13-14], அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், ஸுப்ஹானகல்லாஹும்ம இன்னி ழலம்து நப்ஸீ பஃபிர்லீ பஇன்னஹு லா யஃபிருத்துனூப இல்லா அன்த. பொருள் : 'பிஸ்மில்லாஹ'; - அல்லாஹ்வின் திருப்பெயர்கூறி இப்பயணத்தை ஆரம்பிக்கிறேன் 'அல்ஹம்து லில்லாஹ்' எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இதன் மீது ஏற எவ்விதச் சக்தியுமற்றவர்களாக இருந்த எமக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக உள்ளோம் [அஸ்ஸுக்ருஃப்: 13-14]. (அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), (3 தடவை) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) ( 3 தடவை). யா அல்லாஹ்! நீ தூயவன்! எனக்கே நான் அநீதி இழைத்து கொண்டேன்! நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவர்; உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
கேள்வி 27 : பயணத்தின் போது ஓதும் துஆ என்ன?
பதில்: அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ«பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடம் திரும்பிச்செல்வோராக உள்ளோம் [அஸ்ஸுக்ருஃப்: 13-14]. யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்!! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு இலகுபடுத்திடுவாயாக! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடுவாயாக! (இதன் தூரத்தை இலகுவாக கடக்கக்கூடியதாக ஆக்கிடுவாயாக!) யா அல்லாஹ்!! நீயே பயணத்தில் தோழனாகவும் எமது குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான காட்சிகளிலிருந்தும், மேலும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.»
கேள்வி 28 : பயணம் செய்பவர் வழியனுப்புவருக்கு ஓதும் துஆ என்ன?
பதில் : 'அஸ்தவ்திஉகுமுல்லாஹல்லதி லா தழீஉ வதாஇஉஹு'. பொருள் : அல்லாஹ்விடம் நான் உங்களை ஒப்படைக்கிறேன். அவனிடம் ஒப்படைக்கப்பட்டவைகள் எதுவும் வீணாகிவிடுவதில்லை.
கேள்வி 29 : பயணம் செல்பவருக்கு வழியனுப்புபவர் ஓதும் துஆ என்ன?
பதில் : 'அஸ்தவ்திஉல்லாஹ தீனக வஅமானதக வகாவதீம அமலிக'. பொருள் : உமது மார்க்த்தையும் உமது அமானிதத்தையும் (பொறுப்பு மற்றும் கடமை) உமது செயலின் முடிவுகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.
கேள்வி 30 : கடைத்தெருவில் (சந்தைக்குள்); நுழையும் போது ஓதும் துஆ என்ன?
பதில் : 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹூல் ஹம்து, யுஹ்யீ வயுமீது, வஹுவ ஹய்யுன் லா யமூது, பியதிஹில் கைர், வஹுவ அலா குல்லி ஷைய்இன் கதீர்'. பொருள் : உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவன் தனித்தவன்; அவனுக்கு எந்த இணையாளருமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவனே உயிரளித்து மரணிக்கவும் செய்கிறான், அவன் மரணிக்காத நித்திய ஜீவன், அவன் கைவசமே எல்லா பாக்கியமும் நிறைந்திருக்கிறது, மேலும் அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றல் உடையவன்.
கேள்வி 31 : கோபத்தின் போது ஓதும் துஆ என்ன?
பதில் : 'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். பொருள் : சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
கேள்வி 32 : உனக்கு உதவி உபகாரம் புரிந்தவருக்கு என்ன கூறுவாய்?
பதில் : 'ஜஸாகல்லாஹு கைரா' என்று கூறுவேன். பொருள் : அல்லாஹ் உங்களுக்கு கூலி தருவானாக.
கேள்வி : பயணம் செய்யும் வாகனம் ஆபத்தில் சிக்கிவிட்டால் ஓதும் துஆ (வாகனம் பழுதடைந்து விட்டால் ஓதும் துஆ) என்ன?
பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்).
கேள்வி 34 : உமக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி கிடைத்துவிட்டால் நீ என்ன கூறுவாய்?
பதில் : 'அல்ஹம்துலில்லாஹில்லதீ பிநிஃமதிஹீ ததிம்முஸ் ஸாலிஹாத்'. பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது !அவனது அருளினாலேயே நற்செயல்கள் யாவும் முழுமை பெறுகின்றன!'.
கேள்வி 35 : மகிழ்சியற்ற செய்தி கிடைக்கும் போது என்ன கூறுவாய்?
பதில் : 'அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்'. பொருள் : எல்லா நிலையிலும் அல்லாஹ்வைப் போற்றுகிறேன்!.
கேள்வி : 36 : ஸலாம் கூறும் முறையும் அதற்கு பதில் கூறும் முறையும் யாது?
பதில் : ஒரு முஸ்லிம் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு' என்று கூறுவார். (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் அருள்வளமும் உண்டாகட்டும்). அதற்கு பதிலாக தனது சகோதரன் "வஅலைக்குமு ஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு" என்று கூறுவார். (உங்கள் மீதும் சாந்தியும் அவனது அருளும் அவனது அருள்வளமும் உண்டாகட்டும்).
கேள்வி 37 :மழை பொழியும் போது ஓதும் துஆ என்ன?
பதில் : 'அல்லாஹும்ம ஸய்யிபன் நாபிஆ'. (யா அல்லாஹ்! பயனளிக்கும் மழையைப் பொழியச் செய்வாயாக!).
கேள்வி : மழை பெய்த பின் ஓதும் துஆ என்ன?
பதில் : 'முதிர்னா பிபழ்லில்லாஹி வரஹ்மதிஹி'. (அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் எமக்கு மழை கிடைத்தது).
கேள்வி 39 : (வேகமாக) காற்றடிக்கும் போது ஓதும் துஆ என்ன?
பதில் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வஅஊதுபிக மின் ஷர்ரிஹா'. பொருள் : யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையை நான் உன்னிடம் கோருகிறேன். மேலும் இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
கேள்வி 40 : இடி முழக்கத்தைக் கேட்கும் போது ஓதும் துஆ என்ன?
பதில் : 'ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ரஃது பிஹம்திஹீ வல்மலாஇகது மின் கீபதிஹீ'. பொருள்: எவனது புகழைக்கொண்டு இடி துதிக்கின்றதோ, எவனைப் பயந்து வானவர்கள் துதி செய்து புகழ்கின்றார்களோ அத்தகைய அல்லாஹ்வை நான் துதிக்கிறேன்.
கேள்வி :41 :(நோய் மற்றும் அங்கவீனம் போன்றவற்றால்) சோதனைக்குள்ளாக்கப்ட்டவரை கண்டால் ஓத வேண்டிய துஆ என்ன?
பதில் : 'அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆபானி மிம்மப்தலாக பிஹி வபழ்ழனீ அலா கஸீரின் மிம்மன் கலக தப்ழீலா'. (எதனைக் கொண்டு உன்னைச் சோதித்தானோ அதிலிருந்து எனக்கு ஆரோக்கியமளித்து, அவன் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட என்னை சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்).
கேள்வி 42 : தனது பார்வையால் ஏதும் நிகழ்ந்து விடும் என்று பயந்தவர் ஓத வேண்டிய துஆ என்ன?
பதில் : ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: «உங்களில் ஒருவர் தன் சகோதரரிடத்தில் அல்லது தன்னிடமுள்ளவற்றில் அல்லது தனது செல்வத்தில் வியப்பை ஆழ்த்தக்கூடிய எதையேனும் கண்டால் அதற்கு 'பரகத்' வேண்டி துஆ கேட்கவும், ஏனெனில், நிச்சயமாக 'கண்னேறு' உண்மையானதாகும்»
கேள்வி 43 : நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வது எப்படி?
**********
பல்வகை அம்சங்களை உள்ளடக்கிய பகுதி :
பல்வகை அம்சங்கள்: இது பல்வேறு துறைகள் சார்ந்த முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களின் தொகுப்பாகும்.
கேள்வி : அல்லாஹ்வினால் அடியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளில் காணப்படும் ஐந்து சட்ட நிலைகள் யாவை ?
பதில் : 1- வாஜிப் (கட்டாயக் கடமை).
2- முஸ்தஹப் (விரும்பத்தக்கவை).
3- (முஹர்ரம்) கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டியவை.
4- (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கவை.
5- முபாஹ் (ஆகுமானவை).
கேள்வி : மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து சட்ட நிலைகளையும் விவரிக்குக?
பதில் :1- வாஜிப்: அதாவது கட்டாயம் செய்யவேண்டியவை என்பதற்கு உதாரணங்கள் ஐவேளைத் தொழுகை, ரமழானில் நோன்பு நோற்றல், பெற்றோருக்கு உபகாரம் செய்தல் போன்றவைகளாகும்.
வாஜிப் என்பது செய்தவருக்கு நற்கூலியும் செய்யாதவருக்கு தண்டனையும் வழங்கப்படுகின்ற இறை கட்டளையை குறிக்கும்.
2- முஸ்தஹப் (விரும்பத்தக்கவை): இது கட்டாயமான ஒன்றல்ல, இதற்கான உதாரணம் பர்ழான தொழுகையின் முன் பின் ஸுன்னத்துக்கள், கியாமுல்லைல் தொழுகை, உணவளித்தல், ஸலாம் கூறுதல் போன்றனவாகும். முஸ்தஹப் என்பது ஸுன்னத் அல்லது மன்தூப் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என்பது செய்தவருக்கு நற்கூலி வழங்கப்படுவதுடன் செய்யாதிருந்தவருக்கு தண்டனையேதும் வழங்கப்படாத இறை கட்டளைகளாகும்.
முக்கிய குறிப்பு :
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை ஓரு விடயம் ஸுன்னா அல்லது முஸ்தஹப்பான செயல் என்று கேள்விப்பட்டால் அதனை நபியவர்களை பின்பற்றிச் செய்யவதற்கு விரைய வேண்டும். (இது சுன்னாதானே என பொடுபோக்காக இருத்தலாகாது. அவ்வாறு இருந்தால் காலப்போக்கில் அவர் கட்டாயக்கடமைகளையும் படிப்படியாக விட்டுவிடுகின்ற நிலை ஏற்படலாம்.)
3- 'அல் முஹர்ரம்'; அதாவது கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டியவை என்பதற்கான உதாரணம் : மது அருந்துதல், பெற்றோரை துன்புறுத்தல் , உறவுகளை துண்டித்து நடத்தல் போன்றவைகள்.
'அல் முஹர்ரம்' குறிப்பிட்ட தடுக்கப்பட்ட விடயத்தை செய்யாதிருந்தால் மறுமையில் அதற்கான நற்கூலியும் அதனைச் செய்தால் தண்டனையும் கிடைக்கும்.
4- 'அல் மக்ரூஹ்' (வெறுக்கத்தக்கவை): அதனைத் தவிர்ந்து கொள்வது கட்டாயமானதல்ல, உதாரணம் : இடது கையால் ஒரு பொருளை எடுப்பதும் கொடுப்பதும் , தொழுகையில் ஆடையை மடித்துக் கொள்வது போன்றவைகளாகும்.
(அல் மக்ரூஹ்) என்பது குறிப்பிட்ட செயலை செய்யாதிருந்தால் மறுமையில் நற்கூலி கிடைப்பதுடன் அதனை செய்வதால் தண்டனை வழங்கப்படமாட்டாது.
5- 'அல்முபாஹ்' ஆகுமானவை: இது அதனைச் செய்வதற்கோ அல்லது விட்டுவிடுவதற்கோ உரிமை வழங்கப்பட்டுள்ளதாகும். இதற்கான உதாரணம் அப்பிள் பழம் சாப்பிடுதல், தேநீர் அருந்துதல் போன்றவைகளாகும். இது 'ஜாஇஸ்'; 'ஹலால்'; என்ற பெயர்களாலும் அழைக்கப்படும்.
குறிப்பிட்ட ஆகுமான (முபாஹ்) விடயத்தை விட்டுவிடுவதால் மறுமையில் நற்கூலியோ அதனை செய்வதால் தண்டணையோ கிடைக்கமாட்டாது என்பதைக் குறிக்கும்.
கேள்வி 3: மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதன் பயனும், மார்க்க ஃபிக்ஹின் சிறப்பும் என்ன?”
பதில் : இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியைப் பெற்றுத்தரும் வகையில் சொல், செயல் மற்றும் நம்பிக்கை ஆகியன சரியானதாக அமைவதாகும்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முஆவியா பின் அபீ சுப்யான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹதீஸில் கூறுகின்றார்கள்: அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான்.
யுபக்கிஹ்ஹு என்பதன் கருத்து :அவருக்குத் தெளிவைக் கொடுக்கின்றான்; அதாவது, அவரை மார்க்க சட்டத்தில் அறிவுள்ளவராக ஆக்குகின்றான்.
கேள்வி 4: வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்; நடவடிக்கைகள் போன்றவற்றின் மார்க்க சட்ட நிலை யாது?
பதில் : வியாபாரம், இதர கொடுக்கல் வாங்கல்களில் அல்லாஹ் தடை செய்துள்ள சிலவற்றைத் தவிர ஏனையவற்றின் அடிப்படைச் சட்டம் ஹலாலாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். (பகரா : 153).
கேள்வி 5 : தடைசெய்யப்பட்ட சில வகைகொடுக்கல் வாங்கல் மற்றும் விற்பனை முறைகள் யாவை?
பதில்: 1- மோசடி செய்தல் . வியாபார பொருளின் குறையை மறைத்து விற்றல் வியாபாரத்தில் மோசடி செய்வதில் உள்ளதாகும்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள்: "அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல" என்றார்கள்.
2- வட்டி: அதாவது ஒருவரிடம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கும் போது அதனை திருப்பி செலுத்தும் சமயம்இரண்டாயிரம் ரூபா கொடுப்பதாக் கூறி கடன் பெறுவது வட்டிசார்ந்த பரிவர்ந்தனை முறையாகும்.
அதாவது கடன் பெறும் போது பெற்றதை விட மேலதிகமாக தருவதாக நிபந்தனையிடுவது வட்டியாகும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். (பகரா : 153).
3- ஏமாற்றுதல் மற்றும் காணாத அல்லது அறியாத ஒன்றை விற்றல் வாங்குதல் : உதாரணமாக ஆட்டின் பால் மடியில் உள்ள பாலை உனக்கு விற்கிறேன். அல்லது நீர்நிலையொன்றைக் காட்டி இதில் உள்ள மீன்களை விற்கிறேன் என்று கூறி வியாபாரம் செய்தலைக் குறிக்கும்.
- பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏமாற்று வியாபாரத்தை தடைசெய்தார்கள்'
கேள்வி 6 : உனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் சில அருட்கொடைகளைக் குறிப்பிடுக.
பதில் : 1- இஸ்லாம் எனும் அருளாகும். ஏனெனில் நீ ஒரு முஸ்லிமாய் இருக்கிறாய், நீ காபிர்களின் ஒருவன் அல்ல.
2- ஸுன்னா எனும் அருள், ஏனெனில் நீ நபிவழியைப் பின்பற்றும் ஒருவனாக உள்ளாய், நீ பித்அத் வாதிகளில் உள்ளவனல்ல.
3. கேட்டல், பார்த்தல், நடத்தல் போன்ற ஆரோக்கியம் சார்ந்த அருள்கள்.
4- உணவு, குடிபானம், உடை சார்ந்த அருள்கள்.
எம் மீதான அல்லாஹ்வின் அருள்கள் அதிகமானவை. அவற்றை எண்ணி கணக்கிட முடியாது.
அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். (அன்நஹ்ல் : 97)
கேள்வி 7 : அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கான எமது கடமை என்ன? அவற்றிற்கு நன்றி செலுத்துவது எப்படி ?
பதில் - எமது நாவால் அவனை போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்துவதே அவ்வருள்களுக்கு நாம் செய்யும் கடமையாகும், ஏனென்றால் அவனுக்கு மாத்திரமே அதன் சிறப்பு இருக்கிறது, மேலும் அவனால் தரப்பட்டுள்ள அருள்களினால் அவனுக்கு மாறு செய்யாது அவற்றை அவன் திருப்தியுரும் செயற்பாடுகளில் பயன்படுத்துதல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : ஆகவே, என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். இன்னும் எனக்கு நன்றி செலுத்துங்கள்!; எனக்கு மாறு செய்யாதீர்கள்! (பகரா : 153).
கேள்வி 7 : முஸ்லிம்களின் பெருநாட் தினங்கள் எவை?
பதில் : முஸ்லிம்களுக்கு இருபெருநாட்கள் உள்ளன.1-நோன்புப் பெருநாள், 2- ஹஜ்ஜுப் பெருநாள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளபடி, அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனா வாசிகளுக்கு விளையாடி மகிழ்வதற்கான விஷேடமான இரு தினங்கள் இருந்தன, அப்போது நபியவர்கள் இந்த இரு தினங்கள் குறித்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் நாங்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் இவ்விரு தினங்களிலும் விளையாடுபவர்களாக இருந்தோம், என்று கூறவே அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் இந்த இரண்டு நாட்களுக்கும் பதிலாக ஈதுல் அழ்ஹா மற்றும் ஈதுல் பித்ர் எனும் பெருநாட்களை அளித்துள்ளான்' என்று கூறினார்கள்.
இவ்விரு பெருநாட்கள் தவிர்ந்த ஏனைய பெருநாட்கள் பித்அத்ஆவாகும். அதாவது நபிவழிக்கு முரணாண பெருநாட்களாகும்.
கேள்வி 08: மாதங்களில் மிகச் சிறந்த மாதம் எது?
பதில் : ரமழான் மாதம்.
கேள்வி 09 : நாட்களில் மிகச் சிறந்த நாள் எது?
பதில் : ஜும்ஆ நாளாகும் (வெள்ளிக்கிழமையாகும்).
கேள்வி 10 : வருடத்தில் மிகச் சிறந்த நாள் எது?
பதில் : நஹ்ருடைய தினமாகும், அறபா நாள் எனவும் கூறப்படுகிறது.
கேள்வி 11 : வருடத்தில் மிகச் சிறந்த இரவு எது ?
பதில் : லைலதுல் கத்ர் இரவாகும்.
கேள்வி 12 : ஒரு அன்னியப்பெண்ணைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் ?
பதில் : பார்வைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : "முஃமினான ஆண்களுக்கு அவர்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளுமாறு நபியே நீர் கூறுவீராக". (அந்நூர் : 30).
கேள்வி 14 : முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபின் தன்மைகள் எவை?
பதில் : - உடல் முழுவதையும் மறைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
– அதில் அலங்காரம் இருத்தல் கூடாது.
- மெல்லியதாக இருத்தல் கூடாது.
– இறுக்கமானதாக அல்லாமல் விசாலமானதாக இருத்தல் வேண்டும்.
– நறுமணம் புகையூட்டப்பட்டதாகவோ வாசனைத்திரவியம் பூசப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
– ஆணின் ஆடையை ஒத்ததாக இருக்கக் கூடாது.
– காபிரான மற்றும் பாவியான பெண்களின் ஆடைகளுக்கு ஒப்பாக அமையாதிருத்தல்.
அல்லாஹ் கூறுகிறான் : நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும் கூறுவீராக, அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்வார்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான். (அல் அஹ்ஸாப்: 59).
வசனத்தின் பொருள் : நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் முகங்களையும், மார்புகளையும், தலைகளையும் மறைப்பதற்காக, தங்கள் தலைகள் மற்றும் முகங்கள் மீது தங்களது மேலாடைகளையும் போர்வைகளையும் இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் (தங்களை) மறைத்து நடக்கும் பேணுதலானவர்கள் என அறியப்பட்டு, எந்தவொரு தீங்கிற்கும் அல்லது துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்; ஏனெனில், முந்திக் கழிந்தவற்றை அவன் உங்களுக்கு மன்னித்து விட்டான். மேலும், ஆகுமானவை (ஹலால்) மற்றும் ஆகாதவை (ஹராம்) எவை என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்தியதன் மூலம் உங்கள் மீது கருணை புரிந்துள்ளான்.
கேள்வி 13 : மனிதனின் மிகப் பெரும் எதிரிகள் யார்?
பதில் :1- பாவத்தைத் தூண்டும் உள்ளம். அதாவது மனிதன் தனது உள்ளம் கூறுவதற்கு கட்டுப்பட்டு மனோ இச்சையைப்பின்பற்றி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுதல் அல்லாஹ் குறிப்பிடுகிறான் நிச்சயமாக ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன, என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (யூஸுஃப்: 53).
2. ஷைத்தான் : அவன் மனிதர்களின் எதிரியாவான், அவனின் இலக்கு அவர்களை வழிதவறச் செய்து தீய ஊசாலாட்டங்களை அவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி நரகத்தினுள் நுழைவிப்பதாகும். அல்லாஹ் கூறியுள்ளான் : இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (பகரா : 153).
3. தீய நண்பர்கள்: நன்மையான காரியங்களைவிட்டும் தடுத்து, தீய காரியங்களில் ஈடுபடத் தூண்டுபவர்கள். அல்லாஹ் கூறுகிறான் : இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். (அஸ்ஸுஹ்ருப் : 67)
கேள்வி 16 - இறையச்சம் என்றால் என்ன?
பதில் : வணக்கங்களைச் செய்வதும், பாவங்களைத் தவிர்ந்து கொள்வதுமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (பகரா : 153).
கேள்வி 14 - தவ்பா என்றால் என்ன?
பதில் : தவ்பா என்றால் பாவங்களை விட்டும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல். அல்லாஹ் கூறுகிறான் : இன்னும், (பாவங்களிலிருந்து) யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மை செய்து பிறகு, நேர்வழி பெற்றாரோ அவரை நிச்சயமாக நான் மிகவும் மன்னிக்கக் கூடியவன் ஆவேன். (தாஹா : 132).
கேள்வி: தூய்மையான தவ்பாவின் நிபந்தனைகள் என்ன?
பதில் - 1-பாவத்தை விடுதல்: உடனே பாவத்தைக் கைவிட வேண்டும்.
2- செய்த பாவத்தைக் குறித்து வருந்துதல்.
3- இனியும் அப்பாவத்தை எக்காலத்திலும் செய்வதில்லை என்று உறுதி கொள்ளுதல்.
4- அடியார்களின் உரிமைகளில் அநியாயம் நிகழ்ந்திருந்தால் அவ்வுரிமைகளை அவர்களுக்கு மீளளித்தல்.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள். (ஆல இம்ரான் : 85).
கேள்வி 19 : முஸ்லிம்கள் கண்ணியத்தையும் வெற்றியையும் பெறுவதற்கான வழி என்ன ?
பதில் : இஸ்லாத்தின்படி செயல்படுதல், மேலும் பாவங்கள் மற்றும் குற்றங்களை விட்டுவிடுதல் ஆகியவற்றைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். இன்னும், உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் ஆவர்.
மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;. (அர்ரஃது : 11).
கேள்வி 20 : துஆவின் முக்கியத்துவம் என்ன?
பதில் : பிரார்த்தனை என்பது உண்ணத வணக்கங்களில் ஒன்றாகவும், அல்லாஹ்வை நெருங்கும் மிக உயர்ந்த நற்செயல்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் : உங்களுடைய இரட்சகன் கூறுகிறான். “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்; நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன்; நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்_ அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”. (ஃகாபிர் : 60).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : துஆ என்பது வணக்கமாகும்
கேள்வி 16 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்லுதல் என்பதன் கருத்து யாது?
பதில் : அல்லாஹ் தனது நபியை மிகச்சிறந்த கூட்டத்தில் பாராட்டுமாறு அவனிடம் பிரார்த்திப்பதே இதன் கருத்தாகும்.
கேள்வி :17 : 'ஸுப்ஹானல்லாஹ்' என்பதன் கருத்து யாது?
பதில் : தஸ்பீஹ் என்பது அல்லாஹ் எல்லாவகையான தீங்குகள், குறைகளைவிட்டும் தூய்மையானவன் என அவனைத் துதிப்பதாகும்.
கேள்வி 18 : 'அல்ஹம்துலில்லாஹ்' என்பதன் கருத்து யாது?
பதில் - அல்லாஹ்வை புகழ்ந்து பாராட்டி நிறைவான அனைத்து பண்புகளினாலும் அவனை வர்ணித்தல்.
கேள்வி : 19 : 'அல்லாஹு அக்பர்' என்பதன் கருத்து யாது?
பதில் - அந்த பரிசுத்தமான இரட்சகன் எல்லாவற்றைவிடவும் மிகப் பெரியவன், எல்லாவற்றைவிடவும் மிக உயர்வானவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் உன்னதமானவனாவும் உள்ளான் என்பதாகும்.
கேள்வி 20 : 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்பதன் கருத்து யாது?
பதில் : ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு ஒரு அடியான் மாறுவதற்கான எந்த சக்தியும் அல்லாஹ்வின் உதவியினாலேயன்றி வேறு யாராலும் முடியாது எந்பதாகும்.
கேள்வி 21 : 'அஸ்தஃபிருல்லாஹ்' என்பதன் அர்த்தம் யாது?
பதில் : பாவத்தை நீக்கி குறைகளை மறைத்து விட வேண்டும் என்று அடியான் தனது இரட்சகனிடத்தில் வேண்டுவதாகும்.
**********
முடிவுரை :
இறுதியாக :
இந்த கேள்விகள் அனைத்தையும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு விளக்கி திரும்ப திரும்ப கேட்க வேண்டிய கேள்விகளாகும். சரியான வார்த்தை செயல் மற்றும் நம்பிக்கை போன்ற விடயங்களில் பிள்ளை வளரவும் இது வழிவகுக்கும். இதில் பயிற்சியளிப்பது பிள்ளைகளுக்கு உணவூட்டி அவர்களுக்கு புத்தாடை அணிவிப்பதை விட முக்கியமானதாகும். அல்லாஹ் குறிப்பிடுகிறான் நம்பிக்கையாளர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மக்களும் கற்களும் ஆவார்கள். கடுமையானவர்களான மிகவும் வலிமைமிக்கவர்களான வானவர்கள் அவற்றின் மீது இருப்பார்கள். அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்களுக்கு கட்டளைப்பிரப்பித்தவற்றையே அதையே செய்வார்கள். (ஸூறதுத் தஹ்ரீம்: 6)
நபி (ஸல்) கூறுகிறார்கள் : 'ஒரு ஆண் தனது குடும்பத்தினருக்கு பொறுப்பாளராவார், அவரின் பொறுப்பு பற்றி மறுமையில் அவர் விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்'.
எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவானாக.
Related books
All books
ஒவ்வொரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள்78 மொழிகள்ஒவ்வொரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள்
“முஸ்லிம் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்" என்ற இந்நூல், அறிவு மற்றும் தெளிவின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மாபெரும் நூலாகும். இது முஸ்லிம் அறிய வேண்டிய அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகள், இஸ்லாத்தின் சட்டங்கள், சிறந்த ஒழுக்கங்கள் ஆகியவற்றை சிறப்பாக தொகுத்து வழங்குகிறது. இதன் நுட்பமான நடைமுறை, உள்ளங்களை ஒளிரச் செய்து, இதயங்களை அமைதியடையச் செய்கிறது. புரிதலை மேம்படுத்தி, செயல்பாட்டை சீர்படுத்தி, உண்மையில் வெற்றியின் திறவுகோலாகவும், அறிவு மற்றும் வணக்கங்கள் பாதையில் பயணிப்பவருக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்85 மொழிகள்மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்
‘மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்’ என்ற ஷெய்க் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ்-ஸஅதி அவர்களின் நூல், உண்மையான மகிழ்ச்சியின் காரணங்களை ஆழமான ஈமான் பார்வையில் விளக்கி, ஈமான் மற்றும் நற்செயல்கள், அல்லாஹ்வை நினைவு கூருதல், திருப்தி, அல்லாஹ்வின் அருள்களைப் பற்றி சிந்தித்தல், நன்மை புரிதல், அல்லாஹ்வில் நம்பிக்கையிட்டு ஒப்படைத்தல், பொறுமை, விடயங்களை உரிய முறையில் மதிப்பிடல் ஆகியவற்றின் மூலம் வாசகரை நிம்மதிக்கு வழிகாட்டுகிறது. அழகிய நடையில் இயற்றப்பட்ட இது, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், நிம்மதியான, சமநிலையான, மகிழ்ச்சியான வாழ்வுக்கான ஒரு வழிக்கோளை உங்கள் முன்னிலைப்படுத்துகிறது.
அனைத்து முஸ்லிம் சமூகத்திற்குமான முக்கிய பாடங்கள்78 மொழிகள்அனைத்து முஸ்லிம் சமூகத்திற்குமான முக்கிய பாடங்கள்
அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் ‘அனைத்து முஸ்லிம் சமூகத்திற்குமான முக்கிய பாடங்கள்’ என்ற இந்நூல், பெரும் பயனளிக்கக் கூடிய ஒரு சுருக்கமான தொகுப்பாகும். இதனை இமாம் அவர்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு கல்வி வழிகாட்டியாகத் தொகுத்துள்ளார்கள். இதில் தவ்ஹீத், ஈமான், இஸ்லாம் போன்ற மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் கடமைகள், சுத்தம் மற்றும் தொழுகையின் சட்டங்கள், இஸ்லாமிய ஒழுக்கங்கள், அத்துடன் இணைவைப்பு மற்றும் பாவங்களின் அபாயங்கள் பற்றிய தெளிவுரையும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சரியான அகீதாவையும் வணக்க வழிபாடுகளையும் கொண்டு சேர்க்கும் விதமாக,…
அதானுடைய (பாங்கு) சொற்களின் விளக்கம் :55 மொழிகள்அதானுடைய (பாங்கு) சொற்களின் விளக்கம் :
அதான் சொற்கள் விளக்க நூல், அதானின் வார்த்தைகளை அலசி, அவற்றை ஈமானிய விளக்கத்தோடு எடுத்துரைக்கிறது; நம்பிக்கை மற்றும் கல்வி ஒழுக்கவியல் சார் அம்சங்களையும் தெளிவுபடுத்துகிறது. அதான் என்பது வெறும் தொழுகைக்கான அழைப்பு மட்டும் அல்ல; மாறாக அது நாள்தோறும் ஏகத்துவ நம்பிக்கை (தவ்ஹீத்) மற்றும் வெற்றிக்கான அழைப்பாகும். அதான் வார்த்தைகளை ஒவ்வொன்றாக முன்வைத்து, அவற்றின் கருத்துக்களை விரிவாக விளக்கி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துதல், தவ்ஹீத், தூதுச்செய்தி முதலியவற்றிலிருந்து தொடங்கி, தொழுகைக்கும் வெற்றிக்குமான அழைப்பு மற்றும் முடிவில் தக்பீர் மற்றும் தவ்ஹீத் வரை விளக்குகிறது . உள்ளங்களை உருக்கும் பாணியில்,…