صفة الوضوء والصلاة (مرئي)
PROJ-187
நான் வுழூச் செய்வது எவ்வாறு?
இல
ஆடியோ(ஓசை)
1
அதான் ஓசை
2
"முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)".
(ஸூரா அல்மாஇதா : 6).
3
வுழூவின்றி தொழுகையில்லை, (நிய்யத்) எண்ணம் இன்றி வுழூ இல்லை, உளத்தூய்மை இன்றி நிய்யத் இல்லை. நிய்யத்தின் இடம் உள்ளமே, நாவன்று.
4
"பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரால்...) என்று கூற வேண்டும்.
வுழூவின் ஆரம்பத்தில் "பிஸ்மில்லாஹ்" கூற வேண்டும், அதன் மூலமே வுழூவை ஆரம்பிக்கின்றோம். பின் வாய்ச் சுத்தம் செய்வதற்காக முடியுமாயிருந்தால் மிஸ்வாக் செய்ய (பல் துலக்குதல்) வேண்டும்.
5
இரு முன்னங்கைகளையும் விரல் நுனியில் இருந்து மணிக்கட்டு வரை நீரால் மூன்று முறை கழுவ வேண்டும்.
6
இரு முன்னங்கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று தடவை கழுவுதல்.
7
வலது முன்னங்கையிலிருந்து ஆரம்பித்து அதனை மூன்று தடவை கழுவி விட்டு, அடுத்து இடது முன்னங்கையை மூன்று தடவை கழுவ வேண்டும்.
8
அதே போன்று வலது முன்னங்கை, பின் இடது முன்னங்கை, பின் வலது முன்னங்கை, பின் இடது முன்னங்கை என்று மாறி மாறியும் கழுவலாம்.
9
விரல்களுக்கிடையில் தண்ணீர் சென்றிருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
10
பின் வாய் கொப்பளித்தல், நாசிக்குள் நீர் செலுத்துதல் என்பவற்றை செய்ய வேண்டும்.
11
வாய்கொப்பளித்தல் என்பது, வாயினுள் நீரை செலுத்தி நன்றாக அசைத்து, அலசிவிட்டு பின் உமிழ்ந்து விடுவதைக் குறிக்கும்.
12
நாசிக்குள் நீர் செலுத்துதல் என்பது, மூக்கினுள் நீரை உள்ளிழுத்து விட்டு பின்னர் இடது கையினால் சிந்திவிடுவதைக் குறிக்கும்.
13
நோன்பாளியாக இல்லாமலோ, இதனால் பாதிப்பு ஏற்படாமலிருந்தாலோ இவ்விரண்டையும் சற்று அதிகமாக (அழுத்தி) செய்வது சுன்னத்தாகும்.
14
வாய்கொப்பளித்து,நாசிக்கு நீர் செலுத்துவதில் இரு முறைகள் உள்ளன :
15
இரண்டையும் சேர்த்து செய்தல்: அதாவது ஒரே தடவையில் அள்ளப்பட்ட தண்ணீரில் பாதியால் வாய்கொப்பளித்து, மீதியை மூக்கினுள் செலுத்துதல்.
வாயிலுள்ள தண்ணீரை கடப்புச் செய்து உமிழ்ந்து விட்டு, பின்னர் மூக்கினுள் செலுத்திய நீரை எமது இடது கையினால் சீறி (சிந்தி) விடுதல்.
இவ்வாறு மூன்று அள்ளு நீரினால் மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.
16
பிரித்து செய்தல்: அதாவது வாய்கொப்பளிக்க தனியாகவும், மூக்கினுள் செலுத்த தனியாகவும் தண்ணீர் எடுத்தல். முதலில் ஓர் அள்ளு நீரெடுத்து முழுதையும் வாயினுள் செலுத்தி கடப்புச் செய்து உமிழ்ந்து விட்டு இரண்டாவதாக மற்றொரு அள்ளு நீரெடுத்து மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் சிந்தி விட வேண்டும்.
17
வாய்கொப்பளித்து, மூக்கினுள் நீர் செலுத்தியதன் பின் முகத்தை கழுவுதல் வேண்டும்.
18
முகம் கழுவக்கூடிய அளவு, உயரத்தால் நெற்றியில் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழி வரை, மற்றும் அகலத்தால் ஒரு காது முதல் மறு காது வரையுமாகும்.
19
அடர்த்தியில்லாத தாடி, மீசை, கண் புருவம், இமை, கீழுதட்டிற்குக் கீழுள்ள முடி போன்ற முகத்திலுள்ள அனைத்து முடிகளையும் கழுவுதல் அவசியமாகும்.
20
முகத்தைக் கழுவுவதற்கு இரு முறைகள் உள்ளன :
21
முதலாவது : இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து வழமையாக நெற்றியில் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழி வரையும், மற்றும் வலது காது முதல் இடது காது வரையும் முகத்தைக் கழுவ வேண்டும். தாடி அடர்த்தியாக இருந்தால் நாடிக்குக் கீழால் நீர் செலுத்தி குடைந்து கழுவுதல் வேண்டும்.
இவ்வாறு மூன்று தடவைகள் செய்ய வேண்டும். இதுவே பரிபூரணமானதாகும், அல்லது இரு தடவைகள், அல்லது ஒரு தடவை செய்வதும் கூடும். இவ்வாறு (ஒரு தடவை) செய்வது கடமையாகும்.
22
இரண்டாவது : வலது கையால் மாத்திரம் தண்ணீரை எடுத்து முகத்தில் வைத்து இருகைகளாலும் முன்னர் கூறியது போன்று தேய்த்துக் கழுவுதல். இவ்வாறு மூன்று தடவைகள் செய்தல் வேண்டும்.
23
வுழூ செய்யும் போது உறுப்புக்களில் ஒழுங்குமுறை பேணுவதும், தொடர்ச்சியாக செய்வதும் அவசியமாகும். ஓர் உறுப்பை விட மற்றோர் உறுப்பை முற்படுத்தவோ, ஒன்று முடிந்து மற்றதைக் கழுவும் போது தாமதிக்கவோ கூடாது.
24
முகத்தை கழுவியதும் இரு கைகளையும் கழுவ வேண்டும்.
25
இரு கைகளிலும் அவசியம் கழுவ வேண்டிய பகுதி : விரல் நுனியிலிருந்து முழங்கை வரையாகும்.இரு முழங்கைகளும் கழுவ வேண்டிய பகுதிக்குட்பட்டதாகும்.
26
முதலில் வலது கை விரல் நுனியிலிருந்து கழுவ ஆரம்பித்து, விரல்களையும் இருகைகளாலும் குடைந்து கழுவி, பின் முழங்கை வரை நீரை செலுத்த வேண்டும்.
27
பின் இடது கையையும் விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து, விரல்களை குடைந்து கழுவுவதுடன் முழங்கை வரை கழுவ வேண்டும்.
28
தலையை நீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்): இரு கைகளையும் நீரில் தொட்டு நெற்றியின் ஆரம்பத்திலிருந்து பிடரி வரை கொண்டு செல்ல வேண்டும்,பின் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வர வேண்டும். இதில் முடியுள்ளவர், வழுக்கையுள்ளவர் என்ற வேறுபாடு கிடையாது.
29
பின்னர் தலையை மஸ்ஹு செய்து விட்டு மீதமான நீரிலிருந்து இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு தடவையே செய்ய வேண்டும்.
30
இரு காதுகளையும் மஸ்ஹு செய்வதை பொறுத்தவரை, இரு ஆட்காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள்ளும் நுழைத்து தடவுவதுடன் வெளிப்பகுதியை பெருவிரல்களால் தடவிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காதின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் மஸ்ஹு செய்தவர்களாவோம்.
31
பின்பு இரு கால்களையும் கழுவ வேண்டும். கால்களில் அவசியம் கழுவ வேண்டிய பகுதி விரல் நுனியிலிருந்து கரண்டைக் கால் வரையிலாகும். இரு கரண்டைகளையும் சேர்த்து கழுவுவது அவசியமாகும்.
32
முதலில் வலது காலிலிருந்து ஆரம்பித்து, விரல்களுக்கிடையே குடைந்து கழுவுவதுடன் கரண்டைக்கால், பாதத்தின் மேற்பகுதி என்பவற்றை கழுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
33
பின் இடது காலையும்(வலது காலை கழுவியது போல்) விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து, விரல்களை குடைந்து கழுவுவதுடன் கரண்டைக் கால், அதன் குதிகால் பகுதி போன்றவை நீரினால் நனைந்துள்ளதா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
34
“அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாசரீகலஹு வ அஷ்ஹதுஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்).
35
வுழூச் செய்து முடிந்ததன் பின் மேற்கண்ட துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும். அத்துடன் மேலதிகமாக பின்வரும் துஆவையும் ஓதுவதும் ஸுன்னத்தாகும் :
36
“அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்” (இறைவா! என்னை பாவமீட்சி பெறுவோரிலும், தூய்மையானோரிலும் ஆக்கிவிடுவாயாக!).
37
அல்லது
"ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லா அன்த, அஸ்தஃபிருக வஅதூபு இலைக". (இறைவா! உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைத் துதிக்கிறேன். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் உன்னைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகின்றேன். உன்னிடமே பாவமன்னிப்புக் கோரி மீள்கின்றேன்).
இல
திரையில் எழுப்பட்டுள்ளது .
1
நான் வுழூச் செய்வது எவ்வாறு?
2
"முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)".
(ஸூரா அல் மாஇதா : 6).
3
இரு முன்னங்கைகளையும் கழுவுதல்.
4
வாய் கொப்பளித்தல், நாசிக்குள் நீர் செலுத்துதல்.
5
சேர்த்தல்
6
பிரித்தல்.
7
முகம் கழுவுதல்
8
முதலாவது
9
இரண்டாவது
10
நிய்யத் வைத்தல் மற்றும் பிஸ்மில்லாஹ் கூறுதல்
11
இரு முன்னங்கைகளையும் கழுவுதல்.
12
வாய் கொப்பளித்தல்
13
நாசிக்குள்(மூக்கினுள்) நீர் செலுத்துதல்.
14
முகத்தை கழுவுதல்
15
முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்.
16
தலை மற்றும் இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.
17
கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்.
18
இரு கைகளையும் கழுவுதல்
19
தலையை மஸ்ஹு செய்தல்.
20
தலையின் ஆரம்பம் = நெற்றியின் வளைவு மற்றும் சாதாரணமாக முடி முளைக்கும் இடம்.
21
தலையின் முடிவு = பிடரி பக்கத்தில் முடி முளைக்கும் இறுதிப் பகுதி.
22
இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.
23
இரு கால்களையும் கழுவுதல்
24
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
"கணுக்கால்களுக்கு( நன்றாக கழுவ பட்டிராத) நரக வேதனைதான், நீங்கள் வுழூவைப் பரிபூரணமாகச் செய்யுங்கள்".
ஆதாரம் : அபூதாவூத் 97.
25
“அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாசரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்).
ஆதாரம் : முஸ்லிம் 234.
26
“அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்” (இறைவா! என்னை பாவமீட்சி பெறுவோரிலும், தூய்மையானோரிலும் ஆக்கிவிடுவாயாக!).
ஆதாரம் : திர்மிதி 55.
27
"ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லா அன்த, அஸ்தஃபிருக வஅதூபு இலைக". (இறைவா! உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைத் துதிக்கிறேன். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் உன்னைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகின்றேன். உன்னிடமே பாவமன்னிப்புக் கோரி மீள்கின்றேன்).
ஆதாரம் : நஸாஈயின் "அமலுல் யவ்மி வல்லைலா" 81.
நான் எவ்வாறு தொழுவது?
தொழுகை என்பது தக்பீருடன் ஆரம்பித்து ஸலாம் கொடுப்பதுடன் நிறைவடையும்.
இல
ஆடியோ(ஓசை)
1
இகாமத் சொல்வதன்(ஓசை) ஆடியோ
2
இகாமத் சொல்வதன்(ஓசை) ஆடியோ தொடர்கிறது
தொழுவதை மனதால் நினைக்க( நிய்யத் வைக்க) வேண்டும். அதுவே தொழுபவர் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். நினைக்க வேண்டிய இடம் உள்ளமாகும்.
3
கிப்லாவை முன்னோக்க வேண்டும். நீங்கள் இமாமாகவோ, அல்லது தனியாகவோ தொழுபவராக இருந்தால் உங்களுக்கு முன்னால் (மக்கள் தாண்டிச் செல்லாதவாறு) ஒரு தடுப்பை வைத்துக்கொள்ளுங்கள்.
4
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்).
ஆரம்பத் தக்பீரை கூற வேண்டும். இதை வாயால் மொழிவது அவசியமாகும். இதன் மூலமே நாம் தொழுகையினுள் நுழைகிறோம்.
5
ஆரம்பத் தக்பீரைக் கூறி, இரு கைகளையும் உயர்த்தும் போது, இரு மணிக்கட்டின் உள்புரங்களையும் கிப்லாவை முன்னோக்கியதாக அமைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தோல் புயத்தின் அளவுக்கு அவை இரண்டையும் உயர்த்த வேண்டும்.
அல்லது
இரு கைகளையும் அதே அமைப்பில் இரு காதின் ஓரங்கள் அளவுக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
6
தக்பீர் கூறி முடித்த பின் இரு கைகளையும் நெஞ்சின் மீதோ, நெஞ்சுக்கும், தொப்புளுக்கும் இடையிலோ, தொப்புளுக்குக் கீழாலோ வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்துமே சரியான முறைகளாகும்.
இவ் அமைப்பில் இரு கைகளையும் வைக்கும் போது, எமது வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைக்க வேண்டும்.
அல்லது வலது கை மணிக்கட்டின் உட்புறத்தால் இடது கை மணிக்கட்டின் மேல்பகுதியைப் பிடிக்க வேண்டும்.
அல்லது வலது கையினால் இடது முன்னங்கையை பிடிக்க வேண்டும்.
7
"அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல்மஃரிபி. அல்லாஹும்ம நக்கினீ மின் கதாயாய கமா யுனக்கஸ் ஸெளபுல் அப்யழு மினத்தனஸ். அல்லாஹும்மஃஸில்னீ மின் கதாயாய பிஸ்ஸல்ஜி வல்மாஇ வல்பரத்". (அல்லாஹ்வே, கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப்போல் எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்து! அல்லாஹ்வே, வெண்மையான ஆடை அழுக்கை விட்டு தூய்மையாக்கப்படுவது போல் என் தவறுகளை விட்டு என்னை நீ தூய்மையாக்கு! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை நீ கழுவு!)
ஆரம்பத் தக்பீரைக் கட்டி, ஸூரதுல் ஃபாதிஹாவை ஓதுவதற்கு முன் துஆஉல் இஸ்திஃப்தாஹ் (ஆரம்ப துஆ) எனும் மேற்கூறப்பட்ட துஆவை ஓதிக் கொள்ள வேண்டும். இது போன்று வேறு ஆரம்ப துஆக்களும் இருக்கின்றன. அவை அனைத்தையும் மாறி மாறி ஓதிக்கொள்வது நபிவழியாகும்.
8
"அஊது பில்லஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்" (பொருள் : எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்).
துஆஉல் இஸ்திஃப்தாஹை ஓதி முடித்த பின் ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேட வேண்டும். அதன் பின் ஸூரதுல் ஃபாதிஹாவை ஓதிக்கொள்ள வேண்டும்.
9
இதன் ஒவ்வொரு வசனத்தையும் அமைதியாகவும், பயபக்தியுடனும் ஓத வேண்டும்.
10
ஆமீன்
இவ் வார்த்தையை இமாமும், இமாமுக்கு பின்னால் தொழக் கூடியவர்களும், தனியாகத் தொழக்கூடியவர்களும் கூறுவது ஸூன்னாவாகும். இது ஸூரதுல் ஃபாதிஹாவில் இருக்கும் ஓர் வசனம் அன்று. இது "இறைவா! ஏற்றுக்கொள்வாயாக" எனும் கருத்திலுள்ள ஒரு பிரார்த்தனையாகும்.
11
சூறதுல் ஃபாதிஹா ஓதி முடிந்த பின், அல்குர்ஆனில் இருந்து முழுமையான ஓர் ஸூரா அல்லது ஸூராவின் சில பகுதி என தன்னால் இயலுமானதை ஓதிக் கொள்ள வேண்டும். அதை ஓதி முடித்த பின் சிறிது மௌனமாக இருந்து ருகூஃவிற்கு செல்ல வேண்டும்.
12
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
பின்னர், நிலையிலிருந்து ருகூவிற்கு செல்வதற்கான தக்பீரை கூறிக்கொள்ள வேண்டும்.
இந்நிலை நபியவர்கள் தொழுகையின் போது கையை உயர்த்திய இரண்டாம் நிலையாகும். இதன் போது இரு கைகளையும் தோல் புயம் அளவிற்கோ, அல்லது இரு காதுகளின் அளவிற்கோ உயர்த்திக் கொள்ள வேண்டும்.
13
ருகூவிற்கு குனிந்த பின் இரு கைகளின் விரல்களையும் விரித்து, இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ருகூவில் சற்று தாமதிக்க வேண்டும். இதன் போது இரு கைகளையும் வயிற்றை விட்டும் அகற்றி வைத்து, முகத்தை எங்கும் திருப்பாமல் நேரே வைத்திருக்க வேண்டும்.
14
முதுகை வளைக்காமல் நேராக வைத்திருக்க வேண்டும். தலையை உயர்த்தியோ, வேறு பக்கங்களுக்கு திருப்பியோ இருக்காமல் முதுகோடு நேராக வைத்திருக்க வேண்டும்.
15
"ஸுப்ஹான ரப்பியல் அழீம்". (மகத்தான எனது இரட்சகனை தூய்மைப்படுத்துகிறேன்).
மேற்கூறப்பட்ட தஸ்பீஹை மூன்று தடவை கூற வேண்டும். இது குறைந்த பட்ச எண்ணிக்கையாகும். தஸ்பீஹை ஒரு தடவை கூறிக்கொள்வதும் போதுமானது. நாம் விரும்பினால் அதிகப்படுத்திக்கொள்ளலாம், ருகூவில் ஓதுவதற்கென ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்ட துஆக்களையும் ஓதிக் கொள்ளலாம்.
16
ருகூவில் ஓதக்கூடிய துஆக்கள் பல உள்ளன.
17
"ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா". (யார் அல்லாஹ்வைப் புகழ்ந்தாரோ அதை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்).
இதை நாம் இமாமாக இருக்கும் போது அல்லது தனியாகத் தொழும் போது ருகூவிலிருந்து எழுந்து நடுநிலைக்கு வரும் போது கூற வேண்டும்.
18
இதன் போது இரு கைகளையும் உயர்த்தி தோல் புயம் அளவுக்கோ அல்லது இரு காதுகளின் அளவுக்கோ உயர்த்த வேண்டும். இது நாம் தக்பீரின் போது கையை உயர்த்த வேண்டிய மூன்றாவது இடமாகும்.
19
பின்னர் நடுநிலைக்கு வந்து, பின்வருமாறு கூற வேண்டும்
"ரப்பனா வலகல் ஹம்து". (நம் இரட்சகனே! புகழ் யாவும் உனக்கே சொந்தம்).
20
ருகூவிலிருந்து எழுந்து கையை உயர்த்திய பின் அதை கீழே தொங்க விடவும் முடியும் அல்லது கட்டிக்கொள்ளவும் முடியும்.
21
ருகூவிலிருந்து எழுந்த பின் நடுநலையில் சற்று தாமதித்திருப்பது ஸுன்னத்தாகும்.
22
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
மேற்கூறப்பட்ட ஸுஜூதிற்குச் செல்லும் தக்பீரைக் கூறி தரையை நோக்கி சிரம் தாழ்த்த வேண்டும்.
அவ்வாறு செல்லும் போது இரு கைகளாலும் முதலில் நிலத்தைத் தொடவும் முடியும், அல்லது இரு முழங்கால்களாலும் முதலில் நிலத்தைத் தொடவும் முடியும். இரு முறைகளிலும் இலகுவானதை செய்துகொள்ள வேண்டும்.
23
சிரம் தாழ்த்தி ஸுஜூது செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது போன்று ஏழு உறுப்புக்கள் தரையில் பட வேண்டும்.
அவை நெற்றியுடன் மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் விரல்கள் ஆகும்.
24
பாதங்கள் இரண்டையும் நட்டியவாறு, விரல்களின் அனைத்து ஓரங்களையும் கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும்.
தொடைகள் இரண்டையும் அகற்றிவைத்து, வயிற்றை தொடையை விடவும் உயர்த்தியிருக்க வேண்டும்.
இரு முழங்கைகளையும் நிலத்திலிருந்து உயர்த்தியும், தனியாக தொழும் போது அவற்றை விலாப் பகுதியை விட்டும் சற்று அகற்றியும் வைக்க வேண்டும்.கூட்டாகத் தொழும் போது பக்கத்திலிருப்பவருக்கு கஷ்டம் ஏற்படாதவாறு அகற்றிக் கொள்ள வேண்டும்.
இரு மணிக்கட்டையும் தோல் புயத்திற்கோ, இரு காதுகளுக்கோ நேராக தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
25
"ஸுப்ஹான ரப்பியல் அஃலா". (உயர்ந்தோனாகிய எனது இரட்சகனை நான் தூய்மைப் படுத்துகிறேன்).
மேற்கூறப்பட்ட தஸ்பீஹை மூன்று தடவை கூற வேண்டும். இது குறைந்த பட்ச எண்ணிக்கையாகும். தஸ்பீஹை ஒரு தடவை கூறிக்கொள்வதும் போதுமானது. இதில் இந்த உலகத்தின், மருமையின் நாம் விரும்பும் நலவுகளை இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.
26
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போதாகும். எனவே அதில் அதிகமாக துஆ செய்யுங்கள்".
27
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
தக்பீரை கூறியவராறு தலையை ஸுஜூதிலிருந்து உயர்த்தி நடு இருப்பிற்கு வர வேண்டும்.
இதன் போது வலது கால் பாதத்தை நட்டி, இடது கால் பாதத்தின் மீது அமர்ந்துகொண்டு நட்டிய பாதத்தின் விரல்களை கிப்லாவை முனனோக்கி வைத்திருக்க வேண்டும்.( இதற்கு "இப்திராஷ்" இருப்பு எனப்படும்).
அல்லது
இரு பாதங்களையும் நட்டியவாறு வைத்து, இரு குதிகால்களின் மீதும் அமர்ந்துகொள்ள வேண்டும்.
வலது கையை வலது கால் தொடையின் மீதும், இடது கையை இடது கால் தொடையின் மீது அல்லது முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
28
"றப்பிஃபிர்லீ"என் இரட்சகனே! என்னை மன்னித்திடுவாயாக.
நடு இருப்பில் சற்று தாமதித்திருக்கும் நிலையில் இந்த துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.
29
அல்லாஹு அக்பர். "அல்லாஹ் மிகப் பெரியவன்".
இரண்டாம் ஸுஜூதிற்காக தக்பீர் கூறியவாறு சிரம் தாழ்த்த வேண்டும். இதன் போது முதல் ஸஜ்தாவில் செய்தது போன்று செய்ய வேண்டும்.
30
அல்லாஹு அக்பர். "அல்லாஹ் மிகப் பெரியவன்".
இரண்டாம் ரக்அத்திற்காக எழுந்திட வேண்டும். முதல் ரக்அத்தில் செய்தது போன்று இதிலும் செய்திட வேண்டும்.
கையைக் கட்டிக்கொள்வது, ஸூரதுல் ஃபாதிஹாவை ஓதிக்கொள்வது, அல்குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்கொள்வது.
பின் ருகூஃ செய்வது,
இதன் போது, அல்லாஹு அக்பர். "அல்லாஹ் மிகப் பெரியவன்" எனக் கூறுவது,
நடுநிலைக்கு வருவது,
அதில், "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா". (யார் அல்லாஹ்வைப் புகழ்ந்தாரோ அதை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்) எனக் கூறுவது,
பின் ஸுஜூதிற்குச் செல்வது,
இதன் போது, அல்லாஹு அக்பர். "அல்லாஹ் மிகப் பெரியவன்" எனக் கூறுவது,
இரண்டு ஸுஜூதுகள் செய்து விட்டு, இறுதியாக அத்தஹிய்யாத்திற்காக அமருவது,
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்).
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
31
இரண்டாம் ரக்அத் முடிந்த பிறகு அத்தஹிய்யாத்திற்காக அமர வேண்டும். இதன் போது "இப்திராஷ்" இருப்பில் அமர வேண்டும். (வலது கால் பாதத்தை நட்டி, இடது கால் பாதத்தின் மீது அமர்ந்துகொண்டு நட்டிய பாதத்தின் விரல்களை கிப்லாவை முனனோக்கி வைத்திருப்பதே இப்திராஷ் எனப்படும்.)
32
ஃபஜ்ர், ஜும்ஆ, இரு பெருநாள் தொழுகைகள் போன்ற இரண்டு ரக்அத் தொழுகையில் இடம் பெறும் அத்தஹிய்யாத் இருப்பு, மூன்று ரக்அத், நான்கு ரக்அத் தொழுகைகளில் இடம்பெறும் முதல் அத்தஹிய்யாத் இருப்பு, இரு ஸுஜூதுகளுக்கிடையிலான இருப்பு என்பவற்றில் "இப்திராஷ்" முறையில் அமர வேண்டும்.
33
உடல் பருமன், பாதங்களில் வலி போன்ற காரணங்களுக்காக முஃப்தரிஷ் இருப்பில் அமர முடியாதவர்கள் தம்மால் முடியுமான முறைகளில் அமர்ந்துகொள்ளலாம்.
34
அத்தஹிய்யாத்தின் போது வலது கையை வலது தொடையின் மீது வைத்து வலது கையின் ஆள்காட்டி விரலை நீட்டியும், மற்றைய விரல்களை மடக்கியும் வைக்க வேண்டும்.
35
அல்லது பெருவிரலையும், நடு விரலையும் வலையம் போன்று வைத்து, ஆள்காட்டி விரலை நீட்ட வேண்டும்.
36
இடது கையை இடது தொடையின் மீது வைத்துக்கொண்டோ, அல்லது இடது முழங்காலை பிடித்துக்கொண்டோ இருக்க வேண்டும்.
அத்தஹிய்யாத்தின் போது எமது பார்வையை வலதுகை ஆள்காட்டி விரலின் மீது செலுத்த வேண்டும்.
37
"அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு". (பொருள் : சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்).
தொழுகை மூன்று ரக்அத்துக்களாகவோ, அல்லது நான்கு ரக்அத்துக்களாகவோ இருந்தால் முதல் அத்தஹிய்யாத்தை மற்றும் ஓத வேண்டும்.
தொழுகை, ஃபஜ்ர், ஜும்ஆ, இரு பெருநாள் தொழுகைகள் போன்று இரண்டு ரக்அத்துக்களாக இருந்தால் ஸலாதுல் இப்றாஹீமிய்யாவையும் சேர்த்து ஓதி அத்தஹிய்யாத்தை பூரணப்படுத்த வேண்டும்.
"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்". (பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ அபிவிருத்தி(பரகத்து) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி(பரகத்து) செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்).
38
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". (உங்கள் மீது சாந்தி உண்டவதாக மேலும் அல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக).
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". (உங்கள் மீது சாந்தி உண்டவதாக மேலும் அல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக).
அத்தஹிய்யாத்தையும், அதில் ஓதுமாறு நபியவர்கள் கற்றுத் தந்த வேறு துஆக்களையும் ஓதிய பின், ஸலாம் கொடுக்க வேண்டும். இது இரண்டு ரக்அத் தொழுகையில் இடம்பெற வேண்டிய முறையாகும்.
39
அல்லாஹு அக்பர் எனும் தக்பீரை சற்று இலேசாக நாம் செவிமடுப்போம்.
ஆனால் மஃரிப் தொழுகை போன்று மூன்று ரக்அத்துக்களாகவோ, லுஹர், அஸர், இஷா தொழுகைகள் போன்று நான்கு ரக்அத்துக்களாகவோ தொழுகை இருந்தால்
40
முதலாவது அத்தஹிய்யாத்து முடிந்த பின் மஃரிப் தொழுகையாக இருந்தால் ஒரு ரக்அத்தை தொழுவதற்காக எழ வேண்டும். அதுவே லுஹர், அஸர், இஷா முதலிய தொழுகைகளாக இருந்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்காக எழ வேண்டும். இதன் போது ஸூரதுல் ஃபாதிஹாவுடன் ஆரம்பித்து முன்னர் கூறியது போல் ருகூஃ, ஸுஜூது, நிலை, அமர்வு போன்றவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
41
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
42
இரு அத்தஹிய்யாத்துக்கள் இடம்பெறும் தொழுகைகளின் இறுதி அத்தஹிய்யாத்தில் நபியவர்கள் "தவர்ருக்" முறையில் அமர்வார்கள்.
43
"தவர்ருக்" அமர்வு முறையானது மூன்று ரக்அத்கள், நான்கு ரக்அத்கள் இடம்பெறும் தொழுகைகளின் இறுதி அத்தஹிய்யாத்தில் மாத்திரமே இடம்பெறும். இதற்கென பல முறைகள் உள்ளன :
44
வலது காலை நட்டு, இடது காலை விரித்து வலது புறமாக வெளிப்படுத்தி, தரையில் இருப்பிடம் படுமாறு அமர வேண்டும்.
அல்லது
இரு கால்களையுமே விரித்து வலது புறமாகத் தெரியும் படி வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது
வலது காலை விரித்து, இடது காலை வலது முன்னங்காலுக்கும், தொடைக்குமிடையில் நுழைத்து வைக்க வேண்டும்.
45
இறுதி அமர்வில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு, அதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.
46
அத்தஹிய்யாத் ஓதி முடிந்ததும் ஸலாம் கூற முன்னர் நான்கு விடயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும்: நரக வேதனை, மண்ணறை வேதனை, வாழ்வு மரணம் ஆகியவற்றின் சோதனை, தஜ்ஜாலின் சோதனை ஆகியனவே அவை.
மேலும் ஈருலக நலவுகளில் விரும்பியதைக் கேட்கலாம்.
47
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". (உங்கள் மீது சாந்தி உண்டவதாக மேலும் அல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக).
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்". (உங்கள் மீது சாந்தி உண்டவதாக மேலும் அல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக).
ஸலாம் கூறாமல் தொழுகையை நிறைவுக்குக் கொண்டு வர முடியாது.
48
ஸலாம் கூறியதன் மூலம் தொழுகையை நாம் நிறைவுக்குக் கொண்டு வந்து விட்டோம்.
அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ் (இறைவா! உன்னிடம் பாவமன்னிபுக் கேட்கின்றேன்.)
49
தொழுபவர் ஸலாம் கூறியதன் பின் அஸ்தஃபிருல்லாஹ் என மூன்று தடவை கூறிவிட்டு, நபியவர்கள் ஓதிய திக்ருகளையும் ஓதுவது ஸுன்னத்தாகும்.
இல
திரையில் எழுப்பட்டது
1
இமாமாக (தொழுகை நடத்துபவர்) இருந்தாலும், தனித்து தொழுபவராக இருந்தாலும்
2
ஆரம்பத் தக்பீர்
3
இரு கைகளையும் தோள்புயத்தளவிற்கு உயர்த்த வேண்டும்.
4
இரு கைகளையும் அதே அமைப்பில் இரு காதின் ஓரங்கள் அளவுக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
5
இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும்
6
அல்லது தொப்புளுக்கு மேலால்
7
அல்லது தொப்புளுக்கு கீழால்
8
இவ் அமைப்பில் கையை வைக்கும் போது, எமது வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மேலால் வைக்க வேண்டும்.
9
அல்லது வலது கையினால் இடது முன்னங்கையை பிடிக்க வேண்டும்.
10
துஆஉல் இஸ்திஃப்தாஹ்(தக்பீர் கட்டியவுடன் தொழுகையை ஆரம்பிக்கும் பிரார்த்தனை)
11
"அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல்மஃரிபி. அல்லாஹும்ம நக்கினீ மின் கதாயாய கமா யுனக்கஸ் ஸெளபுல் அப்யழு மினத்தனஸ். அல்லாஹும்மஃஸில்னீ மின் கதாயாய பிஸ்ஸல்ஜி வல்மாஇ வல்பரத்". (பொருநாள் : அல்லாஹ்வே, கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப்போல் எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்து! அல்லாஹ்வே, வெண்மையான ஆடை அழுக்கை விட்டு தூய்மையாக்கப்படுவது போல் என் தவறுகளை விட்டு என்னை நீ தூய்மையாக்கு! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை நீ கழுவு!).
12
ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொன்று என மாறி மாறி ஓதுவது ஸுன்னத்தாகும்
13
பாதுகாவல் தேடுதல்
14
அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம் (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்).
15
ஸூராஅல் பாதிஹா
16
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலழ் ழால்லீன். (பொருள் : அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.)
17
ஆமீன் (ஏற்றுக் கொள்வாயாக).
18
இது இறைவா நீ ஏற்றுக் கொள்வயாக எனும் அர்த்தத்தில் உள்ள ஒரு பிரார்த்தனையாகும்.
19
அல்குர்ஆனிலிருந்து முடியுமானதை ஓத வேண்டும்.
20
ருகூஃ(குனிதல்)
21
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
22
முதுகை வளைக்காமல் நேராக வைத்திருக்க வேண்டும்.
23
(ஸுப்ஹான ரப்பியல் அழீம்) மகத்தான அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறேன்
24
நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள ருகூஃவில் ஓதும் திக்ருகள்.
25
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாஇகதி வர்ரூஹ். (பொருள்: இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.)
26
ஸுப்ஹானக ரப்பனா வபிஹம்திக அல்லஹும்மஃபிர்லீ.(பொருள் : இறைவா நீ தூயவன், எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன் என்னை மன்னித்துவிடுவாயாக).
27
"ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா". (யார் அல்லாஹ்வைப் புகழ்ந்தாரோ அதை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்).
28
ரப்பனா வலகல்ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி. (பொருள் : இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே உரியது).
29
எமது இரு கைகளையும் தொங்க விட வேண்டும்.
30
அல்லது கட்டிக் கொள்ள வேண்டும்.
31
ஸஜூத்
32
மூக்குடன் சேர்த்து நெற்றி
33
இரு உள்ளங்கைகள்
34
இரு முழங்கால்கள்
35
இரு பாதங்கள்
36
ஸுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்ந்தோனாகிய எனது இரட்கனை நான் தூய்மைப் படுத்துகிறேன்).
37
"ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போதாகும். எனவே அதில் அதிகமாக துஆ செய்யுங்கள்". (முஸ்லிம் 482).
38
"முப்தரிஷ்" இருப்பு
39
"இக்ஆஃ இருப்பு" (இரு பாதங்களையும் நட்டியவாறு வைத்து, இரு குதிகால்களின் மீதும் அமர்ந்துகொள்ள வேண்டும்.)
40
ரப்பிஃபிர் லீ (மூன்று தடவைகள்) (என் இரட்சகனே! என்னை மன்னித்திடுவாயாக).
41
அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வஹ்தினீ வர்ஸுக்னீ. (யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடு, எனக்குக் கிருபை செய், எனக்கு ஆறுதல் அளித்திடு, எனக்கு நேர்வழி காட்டிடு, எனக்கு வாழ்வாதாரம் அளித்து விடு.)
42
ஸுபஹ் தொழுகை
43
ஜும்ஆத் தொழுகை
44
இரு பெருநாள் தொழுகை
45
ளுஹர் தொழுகை
46
அஸர் தொழுகை
47
மஃரிப் தொழுகை
48
இஷாத் தொழுகை
49
"அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு". (பொருள் : சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்).
50
"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்". (பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ அபிவிருத்தி(பரகத்து) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி(பரகத்து) செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்).
51
ளுஹர் - அஸர் - மஃரிப் - இஷா
52
ஸுபஹ் - ஜும்ஆ - இரு பெருநாள் தொழுகை
53
"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்". (பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ அபிவிருத்தி(பரகத்து) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி(பரகத்து) செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்).
54
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். "உங்கள் மீது சாந்தி உண்டவதாக மேலுமஅல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக".
55
"கடைசி ரக்அத்தில் உட்காரும்போது இடது காலை (வலப் புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்". ஆதாரம் : புஹாரி (828)
56
தவர்ருக் இருப்பு(தம் இருப்பிடம் தரையில் படுமாறு உட்காருவது)
57
"அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம, வமின் அதாபில் கப்ரி, வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி, வமின்ஷர்ரி பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்". (பொருள் : எங்கள் இரட்சகனே! நரக வேதனையிலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும், வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்). (முஸ்லிம் 588)
58
‘அல்லாஹும்ம இன்னீ ளலம்த்து நப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்பிருத் துனூப இல்லா அன்த, பக்பிர்லீ மஃக்பிரதன் மின் இன்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் கபூருர் ரஹீம்’. (பொருள் : இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்). (புஹாரி 834).
59
"அஸ்தஃபிருல்லாஹ்" மூன்று தடவைகள்.
60
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : "மறுமை நாளில் ஓர் அடியானிடம் முதலில் விசாரணை செய்யப்படும் விடயம் தொழுகையே, அது சீரானால் அவன் வெற்றி பெற்று விட்டான். அது சீர்கெட்டால் அவன் நஷ்டமடைந்து விட்டான்". ஆதாரம் அபு தாவூத், திரிமிதி,நஸாஈ.