Skip to content

மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)

விசுவாசிகளின் தாயார், ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا». (பொருள் : மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْمَرِيضَ يَدْعُو لَهُ قَالَ: «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا».

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : மனிதர்களின் இரட்சகனே! (அவர்களைப் படைத்துப் போஷிப்பவனே!) நோயை (கடுமையான நோயை) நீக்கி (இல்லாமல்செய்து)விடுவாயாக! மேலும் (இந்த நோயாளியை) குணப்படுத்தி விடுவாயாக! (தூய்மையான) நீயே குணப்படுத்தக் கூடியவன். (குணப்படுத்துபவன் எனும் உனது பெயரை முன்னிறுத்திக் கேட்கின்றேன்.) நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர (நோயாளிக்கு) வேறு குணப்படுத்தல் கிடையாது. (வேறு) எந்தவொரு நோயையும் விட்டு வைக்காமல் (முழுமையாகக்) குணப்படுத்தி விடுவாயாக.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

குணப்படுத்துபவன் அல்லாஹ் மாத்திரமே! வைத்தியர், மருத்துக்கள் என்பன காரணிகளே! அல்லாஹ்வின் உத்தரவின்றி, அவற்றால் பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ முடியாது.

நோயாளியை நோய் விசாரிப்பதென்பது, முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகும். குடும்பத்திற்குள் அது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

நோயாளியைத் தரிசிக்கச் செல்பவர், நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பரக்கத் பொருந்திய துஆவை ஓத ஆர்வமூட்டல்.

அல்குர்ஆன், நல்ல துஆக்கள் போன்றவற்றின் மூலம், மார்க்க அடிப்படையிலான ஓதல்களை வைத்து மருத்துவம் செய்வது நபியவர்களின் வழிகாட்டல்களில் உள்ளதாகும். நபியவர்கள், தாம் நோய்வாய்ப்பட்டால் தமக்காகவே ஓதிக் கொள்வார்கள். மேலும், தமது குடும்பத்தினரோ, ஏனையோரோ நோய்வாய்ப்பட்டாலும் ஓதுவார்கள்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : நிறைய ஹதீஸ்களில், நோய்கள் பாவங்களுக்கு பரிகாரமாகவும், நற்கூலியாகவும் கூறப் பட்டிருப்பதும், மறுபுறம் நோயாளிக்கு ஆரோக்கியம் வேண்டிப் பிரார்த்திக்குமாறு வந்திருப்பதும் முரணாக நோக்கப்படலாம். அதற்கான பதில் பின்வருமாறு : துஆ என்பது ஒரு வணக்கமாகும். அது குற்றப்பரிகாரம் மற்றும் நற்கூலி கிடைப்பதுடன் முரண்படமாட்டாது. ஏனெனில், அவை நோயின் முதற்கட்டத்துடனேயே, பொறுமையாக இருப்பதுடன் கிடைத்து விடுகின்றன. துஆ கேட்பவர், இரு நன்மைகளுக்கு மத்தியில் இருப்பார். ஒன்றில் அவரது நோக்கம் நிறைவேறி விடும். அல்லது, அதற்குப் பதிலாக, நன்மைகள் கிடைக்கலாம், தீமைகள் தடுக்கப் படலாம். அனைத்துமே அல்லாஹ்வின் பேருபகாரத்தில் உள்ளவையே!

மேற்கோள்கள்

புஹாரி (7/ 134) (5750).

முஸ்லிம் (4/ 1721) (2191).

மேலதிகமாக (8)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (2/ 162).

شرح رياض الصالحين.

لابن عثيمين (4/ 477).

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (11/ 539).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمجموعة من الباحثين (1/ 687).