ஒரு பெண் ரமழான் மாதத்தில் அவள் நிபாஸுடையவளாக இருந்ததினால் ஏழு நாட்கள் நோன்பு நோற்காதிருந்து அடுத்த வருடம் இரண்டாம் ரமழான் வந்தும் அதனை கழாச் செய்யவில்லை. இரண்டாம் ரமழானின் போது அவள் குழந்தைக்கு பாலுட்டுபவளாக இருந்ததினால் ஏழு நாட்கள் நோன்பு நோற்காது இருந்து அவளுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அதனையும் அவள் கழாச் செய்யவில்லை. இந்நிலையில் மூன்றாம் வருட நோன்பும் நெருங்கிவிட்டது இந்நிலையில் அவள் என்ன செய்யவேண்டும் என்பதை அறியத்தருமாறு வேண்டுகிறேன், அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி நல்குவானாக!
السؤال
கேள்வி 1 :

س19: امرأةٌ أفطرت في رمضان سبعة أيامٍ وهي نفساء، ولم تقض حتى أتاها رمضان الثاني، وطافها من رمضان الثاني سبعة أيامٍ وهي مرضعٌ، ولم تقض؛ بحجّة مرضٍ عندها، فماذا عليها وقد أوشك دخول رمضان الثالث؟ أفيدونا أثابكم الله.
الجواب
பதில் 1 :
நீங்கள் குறிப்பிட்டது போல் குறித்த பெண் நோய்வாய்ப்பட்டிருந்து அவற்றை கழாச்செய்வதற்கு முடியவில்லையென்றிருந்தால் அவளுக்கு முடியுமானபோது அதனை கழாச்செய்து கொள்ள அனுமதியுள்ளது. அதாவது இரண்டாம் ரமழான் வந்தாலும் நியாயமான காரணங்கள் இருப்பதால் அவற்றை கழாச்செய்ய முடியும்.
ஆனால் எந்தக் நியாயமான காரணமுமின்றி, சாட்டுக்கள் கூறி அலட்சியமாக நோன்பு நோற்காது இருந்திருந்தால் அதனை இரண்டாம் ரமழான் வரை கழாச்செய்யாது இருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல.
இது குறித்து ஆஇஷா (ரழி) குறிப்பிடுகையில் எனக்கு விடுபட்ட நோன்புகள் இருக்கும். அவற்றை ஷஃபான் மாதத்தில்தான் கழாச்செய்வேன் என்கிறார்கள்.
இதன்படி இந்தப்பெண் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் இவள் காரணங்கள் ஏதுமின்றி நோன்பை விட்டிருந்தால் அவள் பாவியாவாள். அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா இறைஞ்சுவதுடன் அவளின் பொறுப்பில் உள்ள நோன்புகளை நோற்பதற்கு முயற்சிக்க வேண்டும். மேலும் நியாயமான காரணங்களுக்காக நோன்பை விட்டிருந்தால் அதனை கழாச் செய்வதற்கு ஒருவருடமல்ல இரண்டு வருடங்கள் தாமதமானாலும் அவளின் மீது எவ்விதக்குற்றமுமில்லை.
ﺟ19: إذا كانت هذه المرأة كما ذكرت عن نفسها -أنها في مرضٍ، ولا تستطيع القضاء- فإنها متى استطاعت صامته؛ لأنها معذورةٌ، حتى ولو جاء رمضان الثاني.
أما إذا كان لا عذر لها، وإنما تتعلل وتتهاون، فإنه لا يجوز لها أن تؤخّر قضاء رمضان إلى رمضان الثاني، قالت عائشة رضي الله عنها:
«كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَهُ إِلَّا فِي شَعْبَانَ» [1].
[4] البخاري، كتاب الصوم، باب متى يقضي قضاء رمضان (1950)، ومسلم، كتاب الصيام، باب في جواز تأخير قضاء رمضان (151) (1147).
وعلى هذا، فعلى هذه المرأة أن تنظر في نفسها، إذا كان لا عذر لها فهي آثمةٌ، وعليها أن تتوب إلى الله، وأن تبادر بقضاء ما في ذمتها من الصّيام، وإن كانت معذورةً فلا حرج عليها، ولو تأخرت سنةً أو سنتين.