உதாராணத்திற்கு , ஒரு பெண்; லுஹர் நேரத் தொழுகையை நிறைவேற்றாத நிலையில் லுஹர் நேரம் ஒரு மணியளவில் அவளுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் அவள் தூய்மையடைந்ததன் பின் அந்த லுஹர் நேரத் தொழுகையை கழாச்செய்ய வேண்டுமா?
السؤال
கேள்வி 1 :
உதாராணத்திற்கு , ஒரு பெண்; லுஹர் நேரத் தொழுகையை நிறைவேற்றாத நிலையில் லுஹர் நேரம் ஒரு மணியளவில் அவளுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் அவள் தூய்மையடைந்ததன் பின் அந்த லுஹர் நேரத் தொழுகையை கழாச்செய்ய வேண்டுமா?
س21: إذا حاضت المرأة الساعة الواحدة ظهرًا مثلًا، وهي لم تصلّ بعد صلاة الظّهر، فهل يلزمها قضاء تلك الصلاة بعد الطّهر؟
الجواب
பதில் 1 :
இது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு உண்டு. அவர்களில் சிலர்: குறித்த பெண் எல்லை மீறி நடக்காததினாலும் தொழுகையை அதன் இறுதி நேரம் வரையில் பிற்படுத்தி தொழுவதற்கான அனுமதி உண்டு என்பதினாலும் அதனை கழாச்செய்வது அவசியமில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் சில அறிஞர்கள் நபியவர்களின் பொதுவான கூற்றின் பிரகாரம் அந்தத் தொழுகையை கழாச்செய்வது கட்டாயமாகும். என்கின்றனர். அந்தக் கூற்று பின்வருமாறு :
யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை முழுமையாக அடைந்து கொண்டவராவார்'.
பேணுதலின் அடிப்படையில், கழாச் செய்ய வேண்டியது ஒரு நேரத் தொழுகையாக இருப்பதினாலும் அதனைக் கழாச்செய்வதில் சிரம் ஏற்படப்போவதில்லை என்பதினாலும் அதனை கழாச்செய்வதே பொருத்தமாகும்.
ﺟ21: في هذا خلافٌ بين العلماء، فمنهم من قال: إنه لا يلزمها أن تقضي هذه الصلاة؛ لأنها لم تفرط، ولم تأثم؛ حيث إنه يجوز لها أن تؤخّر الصلاة إلى آخر وقتها.
ومنهم من قال: إنه يلزمها القضاء، أي: قضاء تلك الصلاة؛ لعموم قوله ﷺ:
«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ» [1].
[5] تقدم تخريجه.
والاحتياط لها: أن تقضيها؛ لأنها صلاةٌ واحدةٌ، لا مشقة في قضائها.