Skip to content

கேள்வி: ஸூறா ஸல்ஸலாவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?

الباب / الفصل
قسم التفسير

السؤال

س2: اقرأ سورة الزلزلة وفسرها.

கேள்வி: ஸூறா ஸல்ஸலாவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?

الجواب

ج:سورة الزلزلة وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا 1

وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا 2

وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا 3

يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا 4

بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا 5

يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ 6

فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ 7

وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ 8﴾

[الزلزلة: 1-8].

التفسير:

  1. ﴿إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا1﴾:

إذا حُرِّكت الأرض التحريك الشديد الَّذي يحدث لها يوم القيامة.

  1. ﴿وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا2﴾:

وأخرجت الأرض ما في بطنها من الموتى وغيرهم.

  1. ﴿وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا3﴾:

وقال الإنسان متحيِّرًا: ما شأن الأرض تتحرك وتضطرب؟!

  1. ﴿يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا4﴾:

في ذلك اليوم العظيم تخبر الأرض بما عمل عليها من خير وشرّ.

  1. ﴿بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا5﴾:

لأن الله أعلمها وأمرها بذلك.

  1. ﴿يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ6﴾:

في ذلك اليوم العظيم، الَّذي تتزلزل فيه الأرض، يخرج الناس من موقف الحساب فِرَقًا؛ ليشاهدوا أعمالهم التي عملوها في الدنيا.

  1. ﴿فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ7﴾:

فمن يعمل وزن نملةٍ صغيرة من أعمال الخير والبرّ؛ يره أمامه.

  1. ﴿وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ8﴾:

ومن يعمل وزنها من الأعمال الشرّيرة؛ يره أمامه.

பதில் : ஸூறா ஸல்ஸலாவும் அதன் விளக்கவுரையும் :

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

பூமி மிகப்பலமாக அதிர்வுக்குள்ளாக்கப்படும்போது

இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை வெளிப்படுத்தும் போது,

மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறும்போது 3

அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.

உம் இறைவனே அதற்கு (இவ்வாறு) கூறுமாறு கட்டளையிட்டுள்ளான்

அந்நாளில் மனிதர்கள் தம் செயல்களைப் பார்ப்பதற்காக கூட்டங் கூட்டங்களாகப் சிதறுண்டு புறப்பட்டுச் செல்வர்.

யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.

இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.

(அஸ்ஸல்ஸலாஹ் : 1-8).

விளக்கவுரை (தப்ஸீர்) :

மறுமை நாள் நிகழும் சந்தர்ப்பத்தில் பூமி பலமாக உலுக்கப்படும் போது

இதன் கருத்து :அது தன்னுள் இருக்கும் இறந்தவர்களையும் ஏனையவற்றையும் வெளியேற்றிவிடும்.

மனிதன் தடுமாற்றமடைந்தவனாகக் கேட்பான்: “ஏன் இந்த பூமி ஆட்டம் காணுகிறது?”

அந்த மாபெரும் நாளில் பூமியானது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும்.

ஏனெனில் அல்லாஹ் அதற்கு அவற்றை அறிவித்துக்கொடுத்து அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.

பூமி உலுக்கப்படும் அந்த மாபெரும் நாளில் மக்கள் விசாரணை நிலையத்திலிருந்து உலகில் தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக குழு குழுவாக வெளியேறி வருவார்கள்.

அதாவது :யார் சிறிய எறும்பு அளவு நற்செயல் புரிந்திருப்பாரோ அதனை அவர் தனக்கு முன்னால் காண்பார்.

யார் ஒருவர் அணுவளவேனும் தீய காரியத்தை செய்திருப்பினும் அதனை தன் முன்னால் கண்டுகொள்வார்.