السؤال
س٢٢: ما أركان الصلاة؟
கேள்வி 22 : தொழுகையின் ருகூன்கள் (பர்ளுகள் ) யாவை?
الجواب
ج:هي أربعة عشر ركنًا، كما يلي:
- أحدها: القيام في الفرض على القادر.
لحديث عمران بن حصين رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم:
«صل قائمًا، فإن لم تستطع فقاعدًا، فإن لم تستطع فعلى جنب»
رواه البخاري.
- تكبيرة الإحرام، وهي: "الله أكبر".
لقوله عليه الصلاة والسلام:
«إذا قمت إلى الصلاة فكبر»
متفق عليه.
- قراءة الفاتحة.
«لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب»
- الركوع، ويمد ظهره مستويًا ويجعل رأسه حياله.
الرفع منه.
- الاعتدال قائمًا.
لقوله صلى الله عليه وسلم:
«ثم اركع حتى تطمئن راكعًا، ثم ارفع حتى تعتدل قائمًا»
- السجود، وتمكين جبهته، وأنفه، وكفيه، وركبتيه، وأطراف أصابع قدميه من محل سجوده.
- الرفع من السجود.
- الجلوس بين السجدتين.
«ثم اسجد حتى تطمئن ساجدًا، ثم ارفع حتى تطمئن جالسًا»
والسُّنَّة: أن يجلس مفترشًا على رجله اليسرى، وينصب اليمنى، ويوجهها إلى القبلة.
لحديث أم المؤمنين عائشة رضي الله عنها:
«وكان يفرش رجله اليسرى، وينصب رجله اليمنى»
رواه مسلم.
- الطمأنينة، وهي السكون في كل ركن فعلي.
- التشهد الأخير.
لحديث ابن مسعود رضي الله عنه قال:
كنا نقول في الصلاة قبل أن يفرض التشهد.
رواه النسائي وأصله في الصحيحين.
- الجلوس له.
- التسليمتان، وهو أن يقول مرتين: "السَّلام عليكم ورحمة الله".
لحديث:
«أنه كان يسلم عن يمينه وعن يساره: السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله»
رواه الترمذي وغيره.
- ترتيب الأركان -كما ذكرنا-، فلو سجد مثلًا قبل ركوعه عمدًا؛ بطلت صلاته، وسهوًا؛ لزمه الرجوع ليركع، ثم يسجد.
பதில் : தொழுகையின் (பர்ளுகள் ) 14 ஆகும். அவை பின்வருமாறு :
- பர்ளான தொழுகையில் நின்று தொழ சக்தியுள்ளவர் நின்று தொழுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : புஹாரி).
- இஹ்ராம் தக்பீர், அதாவது அல்லாஹு அக்பர் எனக் கூறல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்காக
"நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்!"
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- சூறா அல் பாத்திஹாவை ஓதுதல்.
"ஸூரத்துல் பாத்திஹாவை ஓதாத ஒருவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது".
- ருகூஊ செய்தல். (குணிதல்) அதாவது முதுகை வலைத்து நேராக தலையை முதுகு மட்டத்திற்கு சமமாக முன்னோக்கி வைத்தல்.
- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு வருதல்.
- இஃதிலாலில் நேராக நிற்றல். (ருகூவிற்குப்பின் நிலையாக நிற்றல்).
இதற்கு ஆதாரமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள் :
"பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக, பின்னர் நேர்த்தியாக நேராக நிற்கும் வரை எழுந்து வருவீராக."
- ஸுஜூத் செய்தல்: ஸுஜூதின் போது நெற்றி மற்றும் மூக்கு இரு உள்ளங்கைகள் முட்டுக்கால்கள் இரு கால் விரல்களின் உட்பகுதிகள் போன்றவை தரையில் படும் நிலையில் இருத்தல் வேண்டும்.
- ஸுஜூதிலிருந்து இருப்புக்கு வருதல்.
- இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல்.
"பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக!"
வலது காலை நட்டி இடது காலை விரித்து அதன் மீது அமர்வதோடு அதனை கிப்லாவை நோக்கி வைப்பதும் ஸுன்னாவாகும்.
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"இடது காலை விரித்து, வலது காலை நாட்டி வைப்பார்கள்."
(ஆதாரம் : முஸ்லிம்.)
- அனைத்து செயல் சார்ந்த பர்ளுகளிலும் தாமதித்திருத்தல்.
- இறுதி அத்தஹிய்யாத்து
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறினார்கள்:
அத்தஹிய்யாத்து கடமையாக்கப்பட முன் தொழுகையில் நாங்கள் கூறுவோம்.
இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார், மேலும் இதன் மூலம் இரு ஸஹீஹ்களிலும் இடம்பெற்றுள்ளது.
12-அதற்காக அமர்தல்.
- ஸலாம் கூறுதல். அதாவது இரண்டு முறை 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறுதல்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
அவர் வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார்; இடது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார்.
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
- இங்கு விபரிக்கப்பட்ட பர்ளுகளை (ருகுன்களை) சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிரமமாகச் செய்தல். உதாரணத்திற்கு ஒருவர் ருகூஉ செய்வதற்கு முன் வேண்டுமென்றே ஸுஜுத் செய்தால் அவரின் தொழுகை வீணாகி விடும். மறந்து செய்தால் மீண்டும் எழுந்து ருகூ செய்து விட்டு பின்னர் ஸுஜூத் செய்தல் வேண்டும்.