முடிவுகளை வடிகட்டு
339 அட்டைகள்
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
பதில் : 1- நான் எனது உடம்பில் வலியை உணரும் வேளை அவ்விடத்தில் எனது வலது கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு ,((அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரி மா அஜிது வஉஹாதிரு)) என்ற துஆவை ஏழு (7) தடவைகள் ஓதுவேன். பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அவனது வல்லமையையும் முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீங்கிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) அஞ்சுகின்ற தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
- அல்லாஹ் விதித்ததை திருப்தியோடு ஏற்று அதில் பொறுமையுடன் நடந்து கொள்வேன்.
உம்முல் அலா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது இவ்வாறு கூறினார்கள் :
«உம்முல் அலாவே! உனக்கு சுபசோபனம் உண்டாவதாக,; ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயின் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை, நெருப்பு தங்கம் மற்றும் வெள்ளியின் மாசுகளை நீக்குவது போல, நீக்கி விடுகிறான்.»
ஆதாரம் : அபூதாவூத்
- எனது சகோதரன் நோயாளியாக இருந்தால் அவரை சுகம் விசாரிப்பதற்காக விரைந்து சென்று அவருக்காகப் பிரார்த்திப்பேன். (நேயாளியான எனது சகோதரருக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால்) அவரிடம் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கமாட்டேன்.
- நோயாளியின் வேண்டுதல் இன்றி அவர் சுகம் பெற ஓதி ஊதுவேன் - ஓதிப்பார்ப்பேன்.
- நோயாளிக்கு பொறுமையை கைகொள்ளுமாறும் பிரார்த்தனை செய்யுமாறும் அவரின் சக்திக்கு ஏற்ப தொழுது சுத்தமாக இருக்குமாறும் அவருக்கு உபதேசம் செய்வேன்.
- நோயாளிக்காக துஆ கேட்டல் :
அஸ்அலுல்லாஹல் அழீம் ரப்பல் அர'ஷில் அழீம் அன் யஷ்பியக«பிரமாண்டமான (அர்ஷ்) சிம்மாசனத்தின் அதிபதியான, மகத்துவமும் மாட்சிமையும் மிக்க அல்லாஹ்விடம் உனது நோயைக் குணப்படுத்துமாறு நான் வேண்டுகிறேன்» என்று ஏழு முறை ஓதவேண்டும்.
பதில் : 1- அல்லாஹ்வுக்காக கற்கிறேன் என்ற தூய எண்ணம் (மனத்தூய்மை) இருத்தல் வேண்டும்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
"யார் அறிஞர்களிடம் பெருமையடித்துக் கொள்வதற்காகவோ, அறிவீனர்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ, மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவோ கல்வியைக் கற்கின்றாரோ, அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான்."
இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
- நான் கற்ற அறிவைக்கொண்டு செயற்படுவேன்.
""மறுமை நாளில் ஒரு அடியானிடம் நான்கு விடயங்கள் குறித்து விசாரிக்கப்படாத வரையில் அவனின் இரு பாதங்களும் நகரமாட்டாது: -அவற்றில் ஒன்று- அவனின் அறிவு குறித்தும், அதனை எவ்வாறு செயலாற்றினான் என்பது பற்றியுமாகும்.""
திர்மிதி மற்றும் தாரமீ பதிவு செய்துள்ளார்கள்.
- எனக்குக் கற்றுத்தந்த ஆசானை மதித்து நடப்பதுடன் அவர் இருக்கும் போதும் இல்லாத போதும் அவரை கண்ணியப்படுத்துவேன்.
- அவருக்கு முன்னால் ஒழுக்கமாக உட்காருவேன்.
- ஆசிரியர் கற்றுத் தரும்போது காது தாழ்த்திக் கேட்பேன், அவர் பாடத்தை கற்பிக்கும் வேளை இடையில் அவருக்கு குறுக்கீடு செய்யமாட்டேன்.
- ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் போது ஒழுக்கமாக நடந்து கொள்வேன்.
- அவரின் பெயரை கூறி அழைக்க மாட்டேன்.
«நிச்சயமாக வயோதிப முஸ்லிமை கண்ணியப்படுத்துவதும், குர்ஆனை சுமந்தவனை கண்ணியப்படுத்துவதும்அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதைச் சார்ந்ததாகும் .»
ஆதாரம் : அபூதாவூத்
பதில் : 1- சபையோருக்கு (அவையில் உள்ளோருக்கு) ஸலாம் கூறுவேன்.
- சபையில் அமர்வதற்கு எங்கு இடம் கிடைக்கிறதோ அந்த இடத்தில் அமர்ந்து கொள்வேன். எவரையும் அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பமாட்டேன். அல்லது இருவருக்கு மத்தியில் உட்கார நாடினால் அவர்கள் இருவரிடமும் அனுமதியில்லாது உட்கார மாட்டேன்.
- மற்றவர்களும் அமர வேண்டும் என்பதற்காக நான் உட்காரும்போது மற்றவர்களுக்கும் இடம்விட்டு உட்காருவேன்.
- சபையில் நடைபெறும் உரையின் போது குறுக்கிட்டு பேச மாட்டேன்.
- சபையிலிருந்து வெளியேற முன் அனுமதி பெற்று, சபையினருக்கு ஸலாம் கூறுவேன்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
«ஒருவரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, அவ்விடத்தில் மற்றொருவர் அமருவதை அவர்கள் (நபியவர்கள்)தடைசெய்தார்கள். மாறாக, இடம்கொடுத்து விசாலமாக அமருங்கள்.»
(ஆதாரம் : புஹாரி).
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
"உங்களில் ஒருவர் ஒரு சபையைச் சென்றடைந்தால் ஸலாம் கூறட்டும்; அவர் (அங்கிருந்து) எழுந்து செல்ல நாடினாலும் ஸலாம் சொல்லட்டும்; ஏனெனில், முதலாவது (கூறும் ஸலாம்) இரண்டாவது (கூறும் ஸலாமை) விட மிக தகுதியானதல்ல (இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸலாம் கூறுவது முக்கியமானது).”
இதனை திர்மிதீ, அபு தாவுத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
- சபையின் முடிவில் பின்வரும் கப்பாரதுல் மஜ்லிஸ் துஆவை ஓதுவேன்:
"ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த, அஸ்தஃபிருக வஅதூபு இலைக". பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீளுகிறேன்.
பதில்: 1- நேரகாலத்தோடு தூங்குவேன்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஷா தொழுகைக்கு முன் தூங்குவதையும், அதற்குப் பின் பேசுவதையும் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபர்ஸா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்."
(ஆதாரம் : புஹாரி).
- வுழுச் செய்து சுத்தமான நிலையில் உறங்குவேன்.
- நான் வயிற்றின் மீது (குப்புறப்படுத்து) உறங்க மாட்டேன்.
- எனது வலப்புறமாக சாய்ந்து உறங்குவேன், வலது கையை வலது கண்ணத்தின் மீது வைத்து உறங்குவேன்.
- எனது விரிப்பை உதறிக் கொள்வேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நீ படுக்கைக்கு வந்தால், தொழுகைக்காக வுழு செய்வது போன்று வுழு செய்து கொள், பின் உனது வலப்பக்கமாக சாய்ந்து கொள்வீராக.'
- அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குப்புறப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டுக் கூறினார்கள்:
""நிச்சயமாக இந்தப் படுக்கும் முறையை அல்லாஹ் நேசிப்பதில்லை"."
திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
"உங்களில் ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது, தனது ஆடையின் உட்புறத்தால் படுக்கையை உதறிக்கொள்ளட்டும்! ஏனெனில், அவருக்குப் பின்னால் அப்படுக்கையில் என்ன வந்திருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார்."
- தூங்கும் போது ஓதப்படும் துஆக்கள் மற்றும் திக்ருகளான ஆயதுல் குர்ஸியை ஒரு தடவையும், குல் ஸூறாக்களான ஸூறதுல் இக்லாஸையும் முஅவ்விததான் என்றழைக்கப்படும் ஸூறதுல் பலக் மற்றும் ஸூறதுன்னாஸ் ஆகிய ஸூறாக்களையும் மும்மூன்று தடவைகள் ஓதுவதுடன், பின்வரும் திக்ரையும் ஓதுவேன் :
((பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா)) பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன்.
- ஸுப்ஹ் தொழுகைக்காக துயிலெழுவேன்.
- தூக்கத்திலிருந்து எழுந்ததும் பின்வரும் திக்ரை ஓதுவேன் :
(அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஷூர்) பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்பெற்று எழச்செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். மேலும் அவனிடமே (நமது) மீளுதல் உள்ளது.
பதில் : 1- உண்ணும் போதும் பருகும்போதும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கான ஊட்ட சக்தி கிடைக்கவேண்டும் என்று (நிய்யத்) மனதால் நினைத்துக் கொள்வேன்.
- உண்ணுவதற்கு முன்பாக இரு கைகளையும் கழுவிக்கொள்வேன்
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது - அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்ததாக முஃமின்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
(நீங்கள்)உணவு உண்ணவும் பருகவும் நாடினால் தனது இரு கைகளையும் கழுவட்டும்; பின்னர் உண்ணட்டும், பருகட்டும்.
(ஆதாரம் : அஹ்மத்)
- 'பிஸ்மில்லாஹ்' என்று (அல்லாஹ்வின் திருநாமம்) கூறி எனது வலது கையால் உண்ண ஆரம்பிப்பேன். கூட்டாக சாப்பிடும் போது தட்டில் எனக்கு அருகாமையில் உள்ளதை சாப்பிடுவேன். தட்டின் நடுப்பகுதியிலிருந்தோ அல்லது எனக்கு எதிரில் உள்ளவரின் இடத்திலிருந்து எடுத்து சாப்பிட மாட்டேன்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
"சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு".
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- பிஸ்மில் கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு" என்று கூறிக்கொள்வேன். (இதன் பொருள் : ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு (உணவு உட்கொள்கிறேன்)).
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முஃமின்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் :
«உங்களில் ஒருவர் உணவு உண்ணும்போது "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி சாப்பிடுகிறேன்என்று கூறவும், ஆரம்பத்தில் இவ்வாறு சொல்ல மறந்துவிட்டால் "பிஸ்மில்லாஹி பீ(f) அவ்வலிஹி வஆகிரிஹி" என்று கூறவும்.» (( இதன் பொருள் ) ஆரம்பத்திற்கும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (நான் சாப்பிடுகிறேன்)).
திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
- இருக்கும் உணவை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வேன், உணவை குறைகூற மாட்டேன். விரும்பினால் உண்ணுவேன் விரும்பாது விட்டால் குறைகூறாது விட்டுவிடுவேன்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது- அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸில் அவர்கள் கூறினார்கள் :
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறைகூறியதில்லை, அதனை விரும்பினால் சாப்பிடுவார்கள், இல்லாவிட்டால் அதனை விட்டுவிடுவார்கள்.»
- அதிகம் சாப்பிடாது எனக்கு போதுமான உணவின் சிறு கவளங்களை மாத்திரம் சாப்பிடுவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
"மனிதன் நிரப்புவற்றில் வயிற்றை விட மோசமான எந்தப் பையையும் நிரப்புவதில்லை . மனிதனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவில் சில கவளங்களே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும், மூன்றில் ஒரு பகுதியை பானத்திற்கும், மூன்றில் ஒரு பகுதியை சுவாசிக்கவும் ஆக்கிக் கொள்ளட்டும்."
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.
- சூடான உணவு அல்லது பாணம் ஆகியவற்றில் சூட்டைத் தனிப்பதற்காக அதில் ஊதமாட்டேன். அதன் சூடு ஆறும் வரை விட்டுவிடுவேன்.
"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள்."
ஆதாரம் : அஹ்மத் மற்றும் இப்னு மாஜா.
- உணவு உட்கொள்ளும் போது எனது குடும்பத்தினர் அல்லது விருந்தாளியுடன் சேர்ந்து உண்ணுவேன்.
- ஒரு ஹதீஸில், ஒரு மனிதன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'அல்லாஹ்வுடைய தூதரே! நாங்கள் சாப்பிடுகின்றோம். ஆனால், வயிறுநிரம்புவதில்லை.' என்று கூறினான். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் பிரிந்து சாப்பிடுகின்றீர்கள் போலும், ஒன்றிணைந்து சாப்பிடுங்கள். அதில் அல்லாஹ் தஆலாவுடைய பெயரையும் கூறிக்கொள்ளுங்கள். அப்போது அதில் உங்களுக்கு பரக்கத் செய்யப்படும்."
இதனை இமாம்களான அபூதாவூத் மற்றும் இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
- என்னை விட வயதில் மூத்தோர் சாப்பிடுவதற்காக என்னுடன் அமர்ந்திருந்தால் அவர்கள் சாப்பிட முன் ஆரம்பிக்கமாட்டேன்.
- ஏதாவது ஒரு பானத்தை அருந்தும்போது பிஸ்மில் கூறி அமர்ந்த நிலையில், ஒரே மூச்சில் பருகாது மூன்று முறை மூச்சை நிறுத்தி நிறுத்தி அருந்துவேன். மேலும், பாத்திரத்தில் மூச்சு விடமாட்டேன்.
((உங்களில் ஒருவர் குடிக்கும் போது, பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம்.))
- மேலும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸின்படி,
"நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு பருகுவதைத் தடுத்தார்கள்."
(ஆதாரம் : முஸ்லிம்.)
- பின்வரும் ஹதீஸும் அதற்கு ஆதாரமாகும்:
"நபியவர்கள் பருகும் போது மூன்று தடவை மூச்சு விடுவார்கள்"
- சாப்பிட்டு அல்லது குடித்து முடிந்ததும் அல்லாஹ்வைப் புகழ்வேன். அதாவது அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவேன்.
"உணவு சாப்பிட்டதுவும்,அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்".
பதில்: 1- எனது ஆடையை அணியும் போது அல்லாஹ்வை புகழ்ந்து வலப்பக்கத்திலிருந்து அணிவேன்.
- அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் ஆடை அணியும்போதும், வுழூ செய்யும்போதும் உங்கள் வலப்பக்கங்களிலிருந்தே ஆரம்பியுங்கள்."
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கரண்டைக்குகீழால் நீழும் வகையில் எனது ஆடையை அணிய மாட்டேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
''கரண்டைக்காலுக்கு கீழ் செல்லும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும்''.
(ஆதாரம் : புஹாரி).
கரண்டைக் கால் என்பது: பாதத்தின் இரு புறங்களிலும் தள்ளிக்காணப்படும் இரண்டு எலும்புகளுமாகும்.
- பெண் குழந்தைகளின் ஆடைகளை ஆண்குழந்தைகளுக்கோ ஆண்குழந்தைகளின் ஆடைகளை பெண்குழந்தைகளுக்கோ அணிவிக்கலாகாது.
பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்
- எனது ஆடைகள் பிறமதத்தினருக்குரிய குறிப்பான ஆடைகள் அல்லது நாகரீம் என்ற பெயரில் புதுப்புது ஆடைகளை அணியும் நாகரீமற்றவர்களின் ஆடைகள் போன்றவைகளுக்கு ஒப்பாக ஆடைகள் அணியலாகாது.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்
ஆதாரம் : அபூதாவூத்
- ஆடைகளை களையும் போது "பிஸ்மில்லாஹ்" கூறி களைவேன்.
«ஆதமுடைய மக்களின் அவ்ரத்துகளுக்கும் ஜின்களுக்கும் இடையிலான திரை, உங்களில் ஒருவர் தனது ஆடையைக் கழற்றும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறுவதாகும்.»
இமாம் அல்-தபரானி மற்றும் இமாம் இப்னு அபீ ஷைபா ஆகியோரால் அறிவிக்கப்பட்டது
- காலணியை அணியும் போது முதலில் வலதையும் களையும் போது இடது காலணியையும் முற்படுத்துவேன்.
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்களுக்கு பாதணி அணிதல், தலைவாருதல், வுழூச் செய்தல் மற்றும் அனைத்து விடயங்களிலும் வலதை முற்படுத்துவது மிகவும் விருப்பத்திற்குரியதாகும்".
பதில்: 1. பிஸ்மில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்று வாகனத்தில் ஏறும் போது கூறி அதில் அமர்ந்ததும் பின்வருமாறு கூறுவேன்,
(ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்) பொருள் : இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன்.
இன்னும், நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்
(அஸ்ஸுஃக்ருப் : 13-14).
- நான் ஓரு முஸ்லிமை கடந்து சென்றால் அவருக்கு ஸலாம் கூறுவேன்.
பதில் : 1- பாதையில் நடக்கும் போது அதிவேகமாக நடக்காது பணிவோடு, நடையில் நடு நிலைபேணுவேன்.
அல்லாஹ் கூறுகிறான் :
இன்னும், பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக உன்னால் பூமியை பிழந்து செல்ல முடியாது உயரத்தால் மலையை அடையவும் முடியாது
(இஸ்ராஃ : 57).
- பாதையில் செல்லும் போது சந்திக்கின்ற சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவேன்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்:
"(தேவையுடையோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், மேலும் நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் சொல்வதுமாகும்"
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- பாதையில் செல்லும் போது எனது பார்வையை தாழ்த்திக் கொள்வேன், எவருக்கும் தொந்தரவாக இடைஞ்சலாக நடந்து கொள்ள மாட்டேன்.
- பாதையில் செல்லும் போது நன்மையை ஏவி தீமையை தடுத்தல் எனும் பணியை மேற்கொள்வேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
' பாதைக்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்'. என்று கூறிய போது அவர்கள்: 'பாதைக்குரிய உரிமை என்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு: 'பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல், தொல்லை தராமலிருத்தல், ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல்' என்று பதில் கூறினார்கள்.
- தொந்தரவும் இடைஞ்சலும் தரக்ககூடியவற்றை பாதையிலிருந்து அப்புறப்படுத்துவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
'தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்.'
பதில்: 1- வீட்டிலிருந்து வெளியேறும் போது இடது காலை முன்வைத்து வெளியேறுவேன், அப்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்வேன் :
(பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய). இதன் பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்), என் காரியங்களை அல்லாஹ்வின் மீது முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ எனக்குக் கிடையாது, யா அல்லாஹ்! நான் வழி தவறிச் செல்வதில் இருந்தும், அல்லது (பிறரால்) நான் வழிகெடுக்கப்படுவதிலிருந்தும், நான் தவறுசெய்வதை விட்டும் அல்லது (பிறரால்) நான் தவறுக்கு உட்படுத்தப்படுவதைவிட்டும், நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும்; அல்லது (பிறரால்) நான் அநீதி இழைக்கப்படுவதை விட்டும், நான் அறிவீனமாக நடந்துகொள்வதைவிட்டும் அல்லது (பிறர்) என்மீது அறிவீனமாக நடந்துகொள்வதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
- வீட்டினுள் நுழையும் வலது காலை வைத்து நுழைவேன் அவ்வேளை பின்வரும் திக்ரை ஓதுவேன் :
(பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலா ரப்பினா தவக்கல்னா). பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம்.மேலும் எங்கள் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம்.
- வீட்டினுள் நுழைய முன் மிஸ்வாக் செய்துகொள்வேன், பின் குடும்பத்தாருக்கு ஸலாம் கூறுவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
"«வீட்டுக்குள் நுழைந்தால் மிஸ்வாக்கைக் கொண்டு ஆரம்பிப்பார்கள்»"
இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
பதில் : 1- கழிவறையினுள் நுழையும் போது இடது காலை முன்வைத்து நுழைவேன்.
கழிவறையினுள் நுழைய முன் பின்வரும் துஆவை ஓதுவேன் :
(பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்) பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (நான் நுழைகிறேன்) யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
- அல்லாஹ்வின் திருநாமம் உள்ள பொருட்களை கழிவறையின் உள்ளே எடுத்துச் செல்ல மாட்டேன்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது தமது மோதிரத்தைக் கழற்றி வைப்பவர்களாக இருந்தார்கள்.
இதனை இமாம்களான அபூதாவூத் மற்றும் இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
- (மலசலம் கழிக்கும் போது) இயற்கைத் தேவையை நிறைவேற்றும் போது என்னை மறைத்துக் கொள்வேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
"“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றும்போது மறைவிடமாக ஆக்கிக்கொள்வதற்கு ஒரு மேடான பகுதி அல்லது பேரீச்ச மரத் தோப்பு ஆகியவையே மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்தன.”"
(ஆதாரம் : முஸ்லிம்.)
- கழிவறையில் யாருடனும் கதைக்க மாட்டேன்.
- கழிவறையில் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ உட்காரமாட்டேன்.
இதற்கு ஆதாரமாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள்
«மலசலம் கழிக்கும் போது கிப்லாத் திசையை முன்னோக்காதீர்கள்; மாறாக, கிழக்கு அல்லது மேற்கு நோக்கித் திரும்புங்கள்.»
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- மலசலம் கழித்தபின் சுத்தம் செய்வதற்கு வலக்கரத்தை பயன்படுத்தாது இடக்கரத்தைப் பயன்படுத்துவேன்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
«வலது கையால் இஸ்திஞ்சா செய்வதை... எங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்»
- மனிதர்கள் செல்லும் பாதை ஓரங்களிலும், நிழல் தரும் இடங்களிலும் எனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற மாட்டேன்.
- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
""“இரண்டு சாபத்திற்குரிய செயல்களைத் தவிருங்கள்.”அப்போது ஸஹாபாக்கள் : “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு சாபத்திற்குரிய செயல்கள் எவை?”என்று கேட்டார்கள் அதற்கு நபி ﷺ அவர்கள் :“மக்கள் செல்லும் பாதையில் அல்லது அவர்கள் நிழலாகப் பயன்படுத்தும் இடத்தில் மலஜலம் கழிப்பதாகும்.” என்று கூறினார்கள்
- மலசலம் கழித்து சுத்தம் செய்த பின் எனது கையை கழுவிக்கொள்வேன்.
இதற்கு ஜரீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தேன்.அன்னார் மல கூடத்திற்கு வந்து, தமது தேவையை நிறைவேற்றினார்கள், பின்னர் கூறினார்கள்:
"«ஜரீரே! சுத்தம் செய்வதற்கான தண்ணீரைக் கொண்டு வாருங்கள்» என்று கேட்க, நான் அவர்களுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்தேன். அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி (மலஜலம் கழித்த பின்) சுத்தம் செய்தார்கள்; பிறகு தம் கையால் தரையில் தேய்த்தார்கள்.” தேய்த்தார்கள்."
இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்
- கழிவறையிலிருந்து வெளியே வரும் போது இடது காலை முன்வைத்து 'குப்ரானக' என்ற திக்ரை ஒதுவேன். பொருள் : யா அல்லாஹ் ! என்னை நீ மன்னிப்பாயாக!
பதில்: 1- பள்ளிக்குள் நுழையும் போது எனது வலது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதியவனாக உட்செல்வேன் :
'பிஸ்மில்லாஹி, அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரினால் (மஸ்ஜிதில் நுழைகிறேன்) யா அல்லாஹ்! உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்துவிடுவாயாக!.
- பள்ளிக்குள் நுழைந்ததும் தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக்கான காணிக்கை தொழுகை) இரண்டு ரக்அத்துக்களை தொழாத வரை உட்காரமாட்டேன்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
"உங்களில் ஒருவர் பள்ளியினுள் பிரவேசித்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்."
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- தொழுவோருக்கு முன் நடந்து செல்ல மாட்டேன். அல்லது காணமல் போன பொருளென்றை தேடுவதற்காக பள்ளியில் அறிவிப்புச் செய்யமாட்டேன். பள்ளியினுள் கொடுக்கல் வாங்கல் போன்ற வியாபார நடவடிககைகளில் ஈடுபட மாட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
"தொழுகையாளிக்கு முன்னால் நடந்துசெல்பவர், தனக்குள்ள தண்டனை என்னவென்பதை அறிவார் என்றால், நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) காத்திருப்பது, அவருக்கு முன்னால் நடந்துசெல்வதை விடச் சிறந்ததாக இருக்கும்."
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
"«பள்ளிவாயலினுள் ஒரு மனிதர் காணாமற் போன பொருளைத் தேடி சப்தமிடுவதை எவராவது செவியுற்றால், 'அல்லாஹ் அதனை உனக்குத் திருப்பிக் கொடுக்காமலிருக்கட்டும், நிச்சயமாக பள்ளிவாசல்கள் இதற்காக கட்டப்படவில்லை' என்று அவர் கூறட்டும்.»"
(ஆதாரம் : முஸ்லிம்.)
- பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகும்:
"பள்ளிவாசலில் யாராவது விற்பதையோ அல்லது வாங்குவதையோ நீங்கள் கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தில் லாபத்தை அளிக்காதிருப்பானாக!' என்று கூறுங்கள்."
திர்மிதி மற்றும் தாரமீ பதிவு செய்துள்ளார்கள்.
- பள்ளிவாசலின் சுத்தத்தைப் பேணுவேன்.
பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :
"குடியிருப்புகளில் பள்ளிவாசல்களை அமைக்கவும், அவற்றைச் சுத்தப்படுத்தவும், நறுமணமூட்டவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்."
இதனை திர்மிதீ,அபு தாவுத் அஹ்மத் ஆகியோர் அறிவித்துள்ளனர்
- இடது காலை முன்வைத்து பள்ளியிலிருந்து பின்வரும் துஆவை ஓதியவனாக வெளியேறுவேன் :
'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக', பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.
பதில் : 1. நான் ஒரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு) என்று கூறுவேன். பொருள் : உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் அருள்வளமும் உண்டாகட்டும்! ஸலாம் அல்லாத வேறு முகமன்களைக் கொண்டு ஆரம்பிக்க மாட்டேன். அதே போல் ஸலாத்திற்குப் பதிலாக எனது கையால் சைக்கினை செய்யவும் மாட்டேன்.
- நான் யாருக்கு ஸலாம் கூறுகிறேனோ அவரின் முகத்தை முகமலர்ச்சியோடு பார்த்து புன்முறுவல் பூப்பேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
'(அபூதர்ரே!) நன்மையான காரியங்கள் எதுவாயினும் அவற்றை அற்பமாகக் கருதாதே! அது உனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே!'.
(ஆதாரம் : முஸ்லிம்.)
- சந்திப்பவருக்கு வலது கையால் கைலாகு கொடுப்பேன்.
- எனக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தால் அவருக்கு அதைவிட மிக நல்ல முறையில் வாழ்த்துத் தெரிவிப்பேன், அல்லது அவர் வாழ்த்தியது போன்று வாழ்த்துத்துவேன்.
அல்லாஹ் கூறியுள்ளான் :
உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் யாவற்றையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
(அந்நிஸா : 80)
- முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்வதை தவிர்ந்து கொள்வேன். அவ்வாறு அவர் ஸலாம் கூறினால் 'வஅலைகும்' என்று பதில் கூறுவேன்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
"யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள்."
- சிறியோர் மூத்தோருக்கும், வாகனத்தில் செல்வோர் நடந்து செல்பருக்கும், நடந்து செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வாகணத்தில் இருப்பவர், நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், கொஞ்சம் பேர் அதிகம் பேருக்கும் ஸலாம் சொல்ல வோண்டும்"
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- மஹ்ரம் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுழுக்க மாட்டேன் .
பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :
«இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை.»
பதில் :1- ஒரு இடத்திற்குள் நுழைய முன் நான் அனுமதி கேட்டு நுழைவேன்.
- ஒரு இடத்தினுள் நுழைவதற்கு மூன்று தடவைகள் அனுமதி கோருவேன். அதைவிட அதிகரிக்கமாட்டேன். அனுமதி கிடைக்காத பட்சத்தில் திரும்பி விடுவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
""உங்களில் ஒருவர் மூன்று தடவைகள் அனுமதி கோரி, அவருக்கு அனுமதியளிக்கப்படாவிடில் அவர் திரும்பிச் செல்லட்டும்"."
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- அனுமதி கேட்டு கதவை மெதுவாகத் தட்டுவேன். அப்போது கதவுக்கு நேராக நிற்காது கதவின் வலது பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ நின்று கொள்வேன். அவ்வேளை 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனக் கூறுவேன்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கூட்டத்தாரின் வீட்டுக்குச் சென்றால், வாசலுக்கு நேராக நிற்க மாட்டார்கள். மாறாக, அதன் வலது அல்லது இடது புறமாக நின்றுகொண்டு, அஸ்ஸலா|மு அலைக்கும் என்று கூறுவார்கள்.
ஆதாரம் : அபூதாவூத்
- எனது தாயும் தந்தையும் அல்லது அவர்களில் எவராவது ஒருவர் அறையினுள் இருக்கும் போது அவர்களிடம் அனுமதி பெற முன் அவர்களின் அறையினுள் நுழைய மாட்டேன். குறிப்பாக ஸுப்ஹ் தொழுகைக்கு முன், லுகருக்கு முன்னுள்ள நேரம், இஷாவிற்குப் பின் ஆகிய வேளைகளில் அவர்களிடம் அனுமதி பெற முன் அவர்களின் அறையினுள் நுழைய மாட்டேன்.
அல்லாஹ் கூறியுள்ளான் :
நம்பிக்கையாளர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களில் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். அதிகாலை தொழுகைக்கு முன்; இன்னும், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்; இன்னும், இஷா தொழுகைக்கு பின் இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள் ஆகும். (இந்த நேரங்களில் அவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று உள்ளே பிரவேசிக்கவும். மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் சிலரிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள் ஆவார்கள். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
(அந்நூர் : 27).
- குடியமர்த்தப்படாத பொது மருத்துவ நிலையங்கள் வியாபாரஸ்தளங்கள் போன்ற இடங்களில அனுமதியுமின்றி நுழையலாம்.
அல்லாஹ் கூறுகிறான் :
உங்கள் பொருள் (மட்டும் வைக்கப்பட்டு) இருக்கிற (யாரும்) வசிக்காத வீடுகளில் நீங்கள் (அனுமதி இன்றி) நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
பதில் : 1- விலங்கினங்களுக்கு உணவு கொடுத்து நீர் புகட்டுவேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளிலும் எமக்குக் கூலி உள்ளதா?" என வினவ, "ஈரமான, ஈரலுள்ள உயிரினம் ஒவ்வொன்றிலும் கூலியுள்ளது" என்றார்கள்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
மேலும் முதுகு வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்த ஒரு ஒட்டகத்தின் பக்கத்தால் ரஸூல் (ஸல்) அவர்கள் நடந்து சென்ற போது கூறினார்கள்:
“இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.”
ஆதாரம் : அபூதாவூத்
- அன்பாகவும் பரிவோடும் நடந்து நடந்து கொள்வேன் மற்றும் சக்திக்கு அப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்த மாட்டேன்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? இந்த ஒட்டகம் யாருடையது?" (என்று நபியவர்கள் கேட்டார்கள்). அப்போது அன்சாரிகளைச் சேர்ந்த ஓர் இளைஞர் வந்து, "இறைத்தூதர் அவர்களே! அது என்னுடையது" என்றார். அதற்கவர்கள், "அல்லாஹ் உமக்கு உரிமையாக்கியுள்ள இந்த வாயில்லாப் பிராணியின் விடயத்தில் நீர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள மாட்டீரா? நிச்சயமாக நீர் இதனைப் பசியில் வாட்டுகிறீர் என்றும், (அதிக வேலை வாங்கி) இதனைச் சிரமப்படுத்துகிறீர் என்றும் இது என்னிடம் முறையிட்டது" என்று கூறினார்கள்.
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸில் இடம்பெற்ற "துத்இபுஹு" என்றால் நீர் அதனை சோர்வடையச்செய்கிறாய் என்று பொருளாகும்
- விலங்கினங்களுக்கு அடித்து தொந்தரவு செய்யவோ துன்புறுத்தவோ மாட்டேன்.
- ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பக்கமாக முகத்தில் அடையாளம் இடப்பட்ட கழுதை ஒன்று நடந்து சென்றது. அதனைக் கண்ட அவர்கள் கூறினார்கள்:
""பிராணியின் முகத்தில் குறியிடுபவனை அல்லது அதன் முகத்தில் அறைபவனை நான் சபித்துள்ளேன் என்பது உங்களுக்கு என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கவில்லையா ?" எனக் கூறிவிட்டு இந்த விடயத்தை தடைசெய்தார்கள்
இமாம்களான முஸ்லிம், அபு தாவூத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு அபூ தாவூத் உடையதாகும்.
பதில் : 1- விளையாடுவதின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலை சக்தியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்வேன்.
- தொழுகை நேரத்தில் விளையாடமாட்டோம்.
அல்லாஹ் கூறுகிறான் :
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான் 4
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.5
(அல்மாஊன் : 4, 5).
- ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் கூடாது.
- விளையாடும் போது எனது அவ்ரத்தை –கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி- மறைக்கும் விளையாட்டு சீருடைகளை அணிந்து கொள்வேன்.
- முகத்தை தாக்குதல், வெட்கத்தளங்கள் வெளியே தெரிபடுதல் போன்ற ஹராமான –தடைசெய்யப்பட்ட –விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்வேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
"உங்களில் ஒருவர் தனது சகோதரனைத் தாக்கினால், முகத்தைத் தவிர்க்கட்டும்."
(ஆதாரம் : முஸ்லிம்.)
பதில்: 1- நகைச்சுவையில் உண்மையை கடைப்பிடித்தல், பொய்யானவற்றை தவிர்ந்து கொள்ளல்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
""மக்களை சிரிக்கச் செய்வதற்காகப் பொய் பேசுகிறவனுக்கு நரகம் தான்,அவனுக்கு நரகம்தான்,அவனுக்கு நரகம்தான்.""
இமாம்களான அபு தாவூத், அஹ்மத், அத் திர்மிதி ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது.
- நகைச்சுவை என்பது கேலி செய்தல், கிண்டலடித்தல்,தொந்தரவு செய்தல், மிரட்டல் ஆகியவை அற்றதாக இருக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுறுத்துவது கூடாது."
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- எல்லை மீறி அதிகமாக நகைச்சுவையில் ஈடுபடக் கூடாது.
"அதிகமாக சிரிக்காதே; நிச்சயமாக அதிக சிரிப்பு உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்."
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.