Skip to content

நோயின் போதும் நோயாளர்களை சுகம் விசாரிக்கச் செல்லும் போதும் நடந்து கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள் யாவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س8: ما آداب المرض وزيارة المرضى؟

கேள்வி 8 : நோயின் போதும் நோயாளர்களை சுகம் விசாரிக்கச் செல்லும் போதும் நடந்து கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள் யாவை?

الجواب

ج:1. عندما أحس بألم؛ أضع يدي اليمنى على موضعه، وأقول: «بسم الله» ثلاث مرات، وأقول: «أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر» سبع مرات.

  1. أرضى بما قدره الله وأصبر.

في الحديث عن أم العلاء رضي الله عنها قالت: عادني رسول الله صلى الله عليه وسلم وأنا مريضة، فقال:

«أبشري يا أم العلاء؛ فإن مرض المسلم يذهب الله به خطاياه كما تذهب النار خبث الذهب والفضة»

رواه أبو داود.

  1. أسارع إلى زيارة أخي المريض، وأدعو له، ولا أطيل عنده الجلوس.
  2. أرقيه من دون أن يطلب مني.
  3. أوصيه بالصبر والدعاء، والصلاة والطهارة على ما يستطيع.
  4. الدعاء للمريض:

«أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك» سبع مرات.

பதில் : 1- நான் எனது உடம்பில் வலியை உணரும் வேளை அவ்விடத்தில் எனது வலது கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு ,((அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரி மா அஜிது வஉஹாதிரு)) என்ற துஆவை ஏழு (7) தடவைகள் ஓதுவேன். பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அவனது வல்லமையையும் முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீங்கிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) அஞ்சுகின்ற தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.

  1. அல்லாஹ் விதித்ததை திருப்தியோடு ஏற்று அதில் பொறுமையுடன் நடந்து கொள்வேன்.

உம்முல் அலா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது இவ்வாறு கூறினார்கள் :

«உம்முல் அலாவே! உனக்கு சுபசோபனம் உண்டாவதாக,; ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயின் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை, நெருப்பு தங்கம் மற்றும் வெள்ளியின் மாசுகளை நீக்குவது போல, நீக்கி விடுகிறான்.»

ஆதாரம் : அபூதாவூத்

  1. எனது சகோதரன் நோயாளியாக இருந்தால் அவரை சுகம் விசாரிப்பதற்காக விரைந்து சென்று அவருக்காகப் பிரார்த்திப்பேன். (நேயாளியான எனது சகோதரருக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால்) அவரிடம் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கமாட்டேன்.
  2. நோயாளியின் வேண்டுதல் இன்றி அவர் சுகம் பெற ஓதி ஊதுவேன் - ஓதிப்பார்ப்பேன்.
  3. நோயாளிக்கு பொறுமையை கைகொள்ளுமாறும் பிரார்த்தனை செய்யுமாறும் அவரின் சக்திக்கு ஏற்ப தொழுது சுத்தமாக இருக்குமாறும் அவருக்கு உபதேசம் செய்வேன்.
  4. நோயாளிக்காக துஆ கேட்டல் :

அஸ்அலுல்லாஹல் அழீம் ரப்பல் அர'ஷில் அழீம் அன் யஷ்பியக«பிரமாண்டமான (அர்ஷ்) சிம்மாசனத்தின் அதிபதியான, மகத்துவமும் மாட்சிமையும் மிக்க அல்லாஹ்விடம் உனது நோயைக் குணப்படுத்துமாறு நான் வேண்டுகிறேன்» என்று ஏழு முறை ஓதவேண்டும்.