Skip to content

தூங்குவதின் ஒழுங்குகள் யாவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س11: ما آداب النوم؟

கேள்வி 11 : தூங்குவதின் ஒழுங்குகள் யாவை?

الجواب

ج:1. أنام مبكرًا.

لحديث:

«عن أبي برزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء، والحديث بعدها»

رواه البخاري.

  1. أنام على طهارة.
  2. لا أنام على بطني.
  3. أنام على جنبي الأيمن، وأضع يدي اليمنى تحت خدي الأيمن.
  4. أنفض فراشي.
  • في الحديث:

عن البراء بن عازب رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم:

«إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك الأيمن»

  • وعن أبي هريرة رضي الله عنه قال: رأى رسول الله صلى الله عليه وسلم رجلا مضطجعا على بطنه فقال:

«إن هذه ضجعة لا يحبها الله»

رواه الترمذي وأحمد.

  • وقال النبي صلى الله عليه وسلم:

«إذا أوى أحدكم إلى فراشه، فلينفض فراشه بداخلة إزاره؛ فإنه لا يدري ما خلفه عليه»

  1. أتلو أذكار النوم، من آية الكرسي، وسورة الإخلاص، والمعوذتين ثلاث مرات. وأقول:

«باسمك اللهم أموت وأحيا».

  1. أستيقظ لصلاة الفجر.
  2. وأقول بعد الاستيقاظ من النوم:

«الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور».

பதில்: 1- நேரகாலத்தோடு தூங்குவேன்.

பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஷா தொழுகைக்கு முன் தூங்குவதையும், அதற்குப் பின் பேசுவதையும் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபர்ஸா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்."

(ஆதாரம் : புஹாரி).

  1. வுழுச் செய்து சுத்தமான நிலையில் உறங்குவேன்.
  2. நான் வயிற்றின் மீது (குப்புறப்படுத்து) உறங்க மாட்டேன்.
  3. எனது வலப்புறமாக சாய்ந்து உறங்குவேன், வலது கையை வலது கண்ணத்தின் மீது வைத்து உறங்குவேன்.
  4. எனது விரிப்பை உதறிக் கொள்வேன்.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'நீ படுக்கைக்கு வந்தால், தொழுகைக்காக வுழு செய்வது போன்று வுழு செய்து கொள், பின் உனது வலப்பக்கமாக சாய்ந்து கொள்வீராக.'

  • அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குப்புறப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டுக் கூறினார்கள்:

""நிச்சயமாக இந்தப் படுக்கும் முறையை அல்லாஹ் நேசிப்பதில்லை"."

திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

"உங்களில் ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது, தனது ஆடையின் உட்புறத்தால் படுக்கையை உதறிக்கொள்ளட்டும்! ஏனெனில், அவருக்குப் பின்னால் அப்படுக்கையில் என்ன வந்திருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார்."

  1. தூங்கும் போது ஓதப்படும் துஆக்கள் மற்றும் திக்ருகளான ஆயதுல் குர்ஸியை ஒரு தடவையும், குல் ஸூறாக்களான ஸூறதுல் இக்லாஸையும் முஅவ்விததான் என்றழைக்கப்படும் ஸூறதுல் பலக் மற்றும் ஸூறதுன்னாஸ் ஆகிய ஸூறாக்களையும் மும்மூன்று தடவைகள் ஓதுவதுடன், பின்வரும் திக்ரையும் ஓதுவேன் :

((பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா)) பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன்.

  1. ஸுப்ஹ் தொழுகைக்காக துயிலெழுவேன்.
  2. தூக்கத்திலிருந்து எழுந்ததும் பின்வரும் திக்ரை ஓதுவேன் :

(அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஷூர்) பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்பெற்று எழச்செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். மேலும் அவனிடமே (நமது) மீளுதல் உள்ளது.