எனது இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் நான் நடந்து கொள்வது எவ்வாறு?
- الباب / الفصل
- قسم الآداب الإسلامية
السؤال
س5: كيف أكون مع إخواني وأصدقائي؟
கேள்வி 5 : எனது இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் நான் நடந்து கொள்வது எவ்வாறு?
الجواب
ج:1. أحب وأصاحب الأخيار.
- أتجنب وأترك مصاحبة الأشرار.
في الحديث:
«لا تصاحب إلا مؤمنًا، ولا يأكل طعامك إلا تقي»
رواه الترمذي وأبو داود.
- أسلم على إخواني وأصافحهم.
«ما من مسلمين يلتقيان فيتصافحان، إلا غفر لهما قبل أن يفترقا»
رواه أبو داود والترمذي.
- أعودهم إذا مرضوا وأدعو لهم بالشفاء.
- وأشمت العاطس.
- أجيب دعوته إذا دعاني لزيارته.
«حق المسلم على المسلم خمس: رد السلام، وعيادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوة، وتشميت العاطس»
متفق عليه.
- أقدم له النصيحة.
«ومن أشار على أخيه بأمر يعلم أن الرشد في غيره فقد خانه»
رواه أبو داود.
- أنصره إذا ظلم، وأمنعه عن الظلم.
قال رسول الله صلى الله عليه وسلم:
«انصر أخاك ظالمًا أو مظلومًا» فقال رجل: يا رسول الله، أنصره إذا كان مظلومًا، أفرأيت إذا كان ظالمًا كيف أنصره؟ قال: «تحجزه - أو تمنعه - من الظلم؛ فإن ذلك نصره»
رواه البخاري.
- أحب لأخي المسلم ما أحب لنفسي.
في الحديث عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه»
- أساعده إذا احتاج إلى مساعدتي.
«والله في عون العبد ما كان العبد في عون أخيه»
رواه مسلم.
- لا أمسه بأذى، بقول أو فعل.
«المسلم من سلم المسلمون من لسانه ويده»
- أحفظ سره.
«إذا حدث الرجل بالحديث ثم التفت فهي أمانة»
- لا أشتمه، ولا أغتابه، ولا أحتقره، ولا أحسده، ولا أتجسس عليه، ولا أغشه.
«المسلم أخو المسلم لا يظلمه، ولا يخذله، ولا يحقره، وحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم»
البخاري ومسلم.
பதில் : 1- நான் (அவர்களில்) நல்லோர்களை நேசித்து அவர்ககளுடன் தோழமை கொள்வேன்.
- அவர்களில் தீயவர்களுடன் தோழமை கொள்வதை விட்டு விலகி நடப்பேன்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
“முஃமினைத் தவிர வேறு எவரையும் நெருங்கிய நண்பனாகக் கொள்ளாதே; இறையச்சமுள்ளவரைத் தவிர வேறு எவரும் உனது உணவை உண்ண வேண்டாம்.”
இதனை திர்மிதீ, அபு தாவுத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
- எனது சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவதுடன் அவர்களை கைலாகு கொடுத்து வரவேற்பேன்.
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன."
ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.
- அவர்கள் நோயுற்றிருந்தால் அவர்களை சுகம் விசாரித்து அவர்களின் சுகத்திற்காக பிரார்த்தனை செய்வேன்.
- தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் எனப்பதில் கூறுவேன். (அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கப்பிரார்திப்பேன்)
- ஒரு சகோதர முஸ்லிம் அவரை சந்திக்க வருமாறு என்னை அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று அதற்கு பதிலளிப்பேன்.
'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- அவருக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவேன்.
.“தன் சகோதரனுக்கு, சரியான வழி அதுவல்ல என்பதைத் தெரிந்துகொண்டிருந்தும், ஒரு விஷயத்தைப் பற்றி (தவறான) ஆலோசனை வழங்குபவன் அவனுக்கு துரோகம் செய்துவிட்டான்.”
ஆதாரம் : அபூதாவூத்
- அவர் அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு உதவி செய்வதுடன் அந்த அநீதியிலிருந்து அவரைப் பாதுகாப்பேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உனது சகோதரன், அநீதமிழைக்கும் நிலையிலும், அநீதமிழைக்கப்பட்ட நிலையிலும் அவனுக்கு நீ உதவு." அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வுடைய தூதரே! 'அவன் அநீதமிழைக்கப்பட்டிருந்தால் அவனுக்கு நான் உதவலாம். ஆனால், அவன் அநீதமிழைக்கும் ஒருவனாக இருந்தால், எவ்வாறு உதவுவது?' என்று கேட்டபோது, "அநியாயம் செய்வதை விட்டும் அவனைத் தடுத்துவிடு. அதுதான் அவனுக்கு நீ செய்யும் உதவியாகும்." என்று கூறினார்கள்.
(ஆதாரம் : புஹாரி).
- எனக்கு விரும்புவதை எனது சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவேன்.
ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
- எனது உதவி தேவைப்பட்டால் அவருக்கு உதவுவேன்.
""ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு உதவி புரிபவனாக அல்லாஹ் இருக்கிறான்.""
(ஆதாரம் : முஸ்லிம்.)
- எனது சொல்லாலோ செயலாலோ அவரை காயப்படுத்த மாட்டேன்.
“எவருடைய நாவாலும் கையாலும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே உண்மையான முஸ்லிம்.”
- அவரின் இரகசியங்களைப் பாதுகாப்பேன்.
""ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டுத் திரும்பிப் பார்த்தால், அது அமானிதமாகும்.""
- அவரை ஏசவோ அவர் பற்றி புறம் பேசவோ தரக்குறைவாக கருதவோ பொறாமைக்கொள்ளவோ மாட்டேன். அது போல் அவரின் குறைகளை துருவி ஆய்வுசெய்து அவருக்கு துரோகம் இழைக்கவும் மாட்டேன்.
"“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான்; அவனை கைவிட மாட்டான்; அவனை இழிவாகக் கருத மாட்டான். ஒரு மனிதன் தீயவனாக இருப்பதற்கு, தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே போதுமானதாகும்.”
ஆதாரம் : புஹாரி முஸ்லிம்.