Skip to content

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார்

«الجاهِرُ بالقرآن كالجاهِرِ بالصَّدَقَةِ، والمُسِرُّ بالقرآن كالمُسِرِّ بالصَّدَقَة».

இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
சரியானது
விளக்கவுரை

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார். மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

சொற்களுக்கான பொருள் (பதவிளக்கம்)

...:

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

தர்மத்தை இரகசியமாக மறைத்து வழங்குவது மிகவும் சிறப்பானதாக இருப்பது போன்று அல் குர்ஆனை இரகசியமாக ஓதுவது மிகவும் சிறப்பானதாகும்.இவ்வாறு செய்வதில் இஹ்லாஸ் உளத்தூய்மை பேணப்படுவதோடு; முகஸ்துதி மற்றும் தற்பெருமையிலிருந்து விலகிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.அல்குர்ஆனை கற்பித்தல் போன்ற தேவைக்காக சப்பதமாக ஓதுவது அனுமதிக்கப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

ஸுனன் அபூ தாவூத் (2/ 494) (1333).

ஸுனன் திர்மிதீ (5/ 40) (2919).

ஸுனன் அந்நஸாஈ (5/ 80) (2561).

மேலதிகமாக (4)

الكاشف عن حقائق السُّنن (5/1688).

شرح أبي داود للعيني (5/238).

تحفة الأحوذي (8/ 191).

التنوير في شرح الجامع الصغير (5/286).