Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 14 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் (ரழி அவர்களின் தாயார் இறந்துவிட்டார். எனவே (அவளுக்காக) வழங்குவதற்கு மிகச் சிறந்த தர்மம் எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தண்ணீர்.' என்றார்கள் எனவே ஸஃத் ஒரு கிணற்றைத் தோண்டி, 'இது ஸஃத்தின் தாய்க்கு' என்றார்.
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக நம்பகமாக மாறியது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்).
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்." நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக நீ செலவழித்த ஒரு தீனார், ஒரு ஏழைக்கு நீ தர்மமாக வழங்கிய ஒரு தீனார், உனது குடும்பத்திற்கு நீ செலவழித்த ஒரு தீனார். இவற்றில் அதிக நன்மை கொண்டது, உனது குடும்பத்திற்காக நீ செலவழிக்கும் தீனாரே.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும். உறுதியான இரண்டு விடயங்களைப் பொருத்த வரை அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்தவர் சொர்க்கத்தில் நுழைவார், அல்லாஹ்வுக்கு எதையாவது இணைவைத்து இறந்தவர் நரகத்தில் நுழைவார். ஒரு செயலுக்கு நிகரான வெகுமதி என்பது ஒரு நன்மையான காரியத்தை செய்ய உறுதி கொண்ட விடயத்தை, அவனது மனம் உணர்ந்திருந்திருந்ததை, அல்லாஹ் அறிகிறான் எனில் அது அவனுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படும். ஒருவன் தீய செயலைச் செய்தால், அது அவனுக்கு எதிரான தீய செயலாகப் பதிவு செய்யப்படும். யார் ஒரு நற் செயலைப் புரிகிறாரோ அந்த நற்செயலுக்கு அதைப் போன்ற பத்து மடங்கு கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவரின் ஒரு நற்செயலுக்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். மனிதர்களைப் பொறுத்தவரை, இவ்வுலக வாழ்வில் செல்வச் செழிப்பில் இருப்போர்; மறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள். மறுமையில் செழுமையுடன் இருப்போர் உலக வாழ்வில் நெருக்கடியில் இருப்பர். சிலர் உலக வாழ்விலும் மறுமையிலும் நெருக்கடியில் உள்ளனர்; மேலும் சிலர் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் செல்வச் செழிப்பில் உள்ளனர்.'
நம்பகமானது (ஹஸன்) இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஉ உணவு அல்லது ஒரு ஸாஉ பாலாடைக் கட்டி அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம், அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமை, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை ஆகியவற்றில் ஒன்றை (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாக முஆவியா ரழியல்லாஹு எம்மிடம் வரும்வரையில் இவ்வாறு கொடுத்து வந்தோம். முஆவியா இப்னு அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யும் நோக்கத்துடன் எங்களிடம் வந்து மிம்பரில் அமர்ந்து மக்களிடம் பேசியபோது 'ஷாம் (சிரியா) நாட்டு உயர்ரகக் கோதுமை இரண்டு 'முத்துகள்' ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் கருதுவதாகக் கூறினார். எனவே மக்கள் அதைச் செய்யத் தொடங்கினர். அபூ ஸஈத்; (ரழி) அவர்கள், 'நான் உயிருடன் இருக்கும் வரை, நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்த அதே அளவு ஸகாத் அல்-ஃபித்ரை தொடர்ந்து கொடுப்பேன்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.