Skip to content

ஸூறதுத் தகாஸுரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

الباب / الفصل
قسم التفسير

السؤال

س٥: اقرأ سورة التكاثر وفسرها.

கேள்வி 5 : ஸூறதுத் தகாஸுரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

الجواب

ج:سورة التكاثر وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ 1

حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ 2

كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ 3

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ 4

كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ 5

لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ 6

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ 7

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ 8﴾

[سورة التكاثر: ١ - ٨].

التفسير:

  1. ﴿أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ1﴾:

شغلكم - أيها الناس - التفاخر بالأموال والأولاد عن طاعة الله.

  1. ﴿حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ2﴾:

حتى متُّم ودخلتم قبوركم.

  1. ﴿كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ3﴾:

ما كان لكم أن يشغلكم التفاخر بها عن طاعة الله، سوف تعلمون عاقبة ذلك الانشغال.

  1. ﴿ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ4﴾:

ثم سوف تعلمون عاقبته.

  1. ﴿كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ5﴾:

حقًّا لو أنكم تعلمون يقينًا أنكم مبعوثون إلى الله، وأنه سيجازيكم على أعمالكم، لما انشغلتم بالتفاخر بالأموال والأولاد.

  1. ﴿لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ6﴾:

والله لتشاهدنَّ النار يوم القيامة.

  1. ﴿ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ7﴾:

ثم لتشاهدنَّها مشاهدة يقين لا شك فيه.

  1. ﴿ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ﴾:

ثم ليسألنّكم الله في ذلك اليوم عما أنعم به عليكم من الصحة والغنى وغيرهما.

பதில் : ஸூறதுத் தகாஸுரும் அதன் விளக்கவுரையும் :

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது(1)

நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.(2)

அவ்வாறன்று (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 3.

பின்னர் அவ்வாறன்று, விரைவில்(இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள் .4

அவ்வாறன்று மிக நன்றாக நீங்கள் அறிவீர்களாயின் (உங்களை அது பராக்கியிருக்காது). 5

நிச்சயமாக நீங்கள் நரகத்தை காண்பீர்கள் 6

பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள் 7

பின்னர் அந்நாளில் அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்..

(ஸூறதுத் தகாஸுர் 1-8).

விளக்கவுரை (தப்ஸீர்) :

-மனிதர்களே!- செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் பராக்காக்கி விட்டது.

நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை இந்நிலை நீடிக்கும்

அவற்றைக் கொண்டு பெருமையடிப்பது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதை விட்டும் உங்களைத் திருப்பிவிடக் கூடாது. அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.

பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.

உண்மையில் , உங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி திட்டமாக உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் பெருமையடிப்பதில் ஈடுபடமாட்டீர்கள்.

நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை நேரில் காண்பீர்கள்.

பின்னர் அதனை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் காண்பீர்கள்.

அந்த நாளில் அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த ஆரோக்கியம், செல்வம், இன்னபிற அருட்கொடைகளைக் குறித்து உங்களிடம் கேள்வி கேட்பான்.