Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

البَقَرَة

البَقَرَة is chapter 2 of the Quran and has 286 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

286 வசனங்கள் ஸூரா எண் 2
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar Brief
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

الٓمٓ

அலிஃப், லாம், மீம்.

Explanation & meanings · 1
  1. சில ஸூராக்களின் ஆரம்பத்தில் வரும் துண்டுத்துண்டான எழுத்துகள் (முகத்தஆத்) குர்ஆனின் அற்புதத் தன்மையை (இஃஜாஸ்) காட்டும் அடையாளங்களாகும். குர்ஆன் மூலம் இணை வைப்பவர்கள் சவால் செய்யப்பட்டார்கள்: “இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்” என்று. ஆனால் அவர்கள் அதற்கு சமமான ஒன்றை உருவாக்க முடியாமல் தோல்வியடைந்தார்கள். ஏனெனில், குர்ஆன் அரபு மொழியில் உள்ள சாதாரண எழுத்துகளால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மொழியில் அரபர்கள் மிக மிக திறமையானவர்கள். அப்படியிருக்க, அந்த எழுத்துகளால் உருவான குர்ஆனைப் போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. இதனால் தெளிவாகிறது: குர்ஆன் மனிதரால் உருவாக்கப்பட்டது அல்ல. இது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீ என்பதே உண்மை.

ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ

இந்த வேதம்: இதில் அறவே சந்தேகம் இல்லை, (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நேர்வழி காட்டியாகும்.

ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

அவர்கள்: மறைவானதை நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரிவார்கள்;

وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ

அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள்; மறுமையையும் அவர்கள் உறுதி கொள்வார்கள்.

أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

அவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் வெற்றியாளர்கள்.