2 : 27
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
(அந்தப் பாவிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அது உறுதியாகிவிட்ட பின்னர் முறிக்கின்றனர். இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஏவினானோ அதை (-உறவுகளை)த் துண்டிக்கின்றனர். பூமியில் விஷமம் செய்கின்றனர். அவர்கள்தான் நஷ்டவாளிகள்!