Skip to content
البَقَرَة /

வசனம் 61

2 : 61
البَقَرَة வசனங்கள் 286
ஸூரா · البَقَرَة
தமிழ் · Omar Brief
2 : 61

وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ

"மூஸாவே! ஒரே ஓர் உணவை சகிக்கவே மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக (அவன்) வெளிப்படுத்துவான்" என நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். "சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு உண்டு" எனக் கூறினார். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தாலாகும். அது, அவர்கள் பாவம் செய்து, வரம்பு மீறுபவர்களாக இருந்த காரணத்தாலாகும்.