Skip to content
البَقَرَة /

வசனம் 249

2 : 249
البَقَرَة வசனங்கள் 286
ஸூரா · البَقَرَة
தமிழ் · Omar Brief
2 : 249

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ

தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளியவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.) அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதிலிருந்து குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர்புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (விலகி)னார்கள். நிச்சயமாக தாங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தவர்கள், "அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்" என்று கூறினார்கள்.