2 : 111
وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
யூதர்களாக, அல்லது கிறித்துவர்களாக இருக்கிறவர்களைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார் என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே) கூறுவீராக! "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள்."