وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ
திட்டவட்டமாக மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக(ப் பல) தூதர்களை அனுப்பினோம். மர்யமுடைய மகன் ஈஸாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவரை (ஜிப்ரயீல் எனும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம்; உங்கள் மனங்கள் விரும்பாததை (நம்) தூதர் எவரும் உங்களுக்குக் கொண்டு வந்த போதெல்லாம் நீங்கள் பெருமையடித்(து மறுத்)தீர்களல்லவா? (அத்தூதர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள், ஒரு பிரிவினரைக் கொலை செய்கிறீர்கள்.