وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
இப்ராஹீம், "என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக் கூடிய ஒரு பட்டணமாக ஆக்கு! அதனுடையவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனிகளிலிருந்து உணவளி!" எனக் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அல்லாஹ்) கூறினான்: "எவர் நிராகரிப்பாரோ அவரைக் கொஞ்சம் சுகமனுபவிக்க (விட்டு) வைப்பேன். பிறகு நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். செல்லுமிடத்தால் அது மிகக் கெட்டது."