Skip to content
البَقَرَة /

வசனம் 221

2 : 221

வசனம் 221 of البَقَرَة (2 : 221). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

البَقَرَة வசனங்கள் 286
ஸூரா · البَقَرَة
தமிழ் · Omar Brief
2 : 221

وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப் பெண் இணைவைப்பவளை விடச் சிறந்தவள், அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவர் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. அவர்கள் (இணைவைப்பவர்கள்) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ் தன் கட்டளைக் கொண்டு சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான்; மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் உபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.