وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, "உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்" என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்றை (வணங்கும் மோகம்) ஊட்டப்பட்டார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது என்று (நபியே!) கூறுவீராக!