Skip to content
البَقَرَة /

வசனம் 143

2 : 143

வசனம் 143 of البَقَرَة (2 : 143). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

البَقَرَة வசனங்கள் 286
ஸூரா · البَقَرَة
தமிழ் · Omar Brief
2 : 143

وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சிகளாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாக இருப்பதற்காகவும் நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தம் குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் இருந்த (பைத்துல் முகத்தஸ்) கிப்லாவை நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் நேர்வழி நடத்தியவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே இருந்தது. உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கி விடுபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்தான்.