Skip to content
البَقَرَة /

வசனம் 228

2 : 228

வசனம் 228 of البَقَرَة (2 : 228). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

البَقَرَة வசனங்கள் 286
ஸூரா · البَقَرَة
தமிழ் · Omar Brief
2 : 228

وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்களை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பைகளில் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதில்லை. அவர்களின் கணவர்கள் இணக்கத்தை விரும்பினால் அதில் (தவணைக்குள்) அவர்களை மீட்டிக்கொள்வதற்கு உரிமையுடையவர்கள். (பெண்களாகிய) அவர்கள் மீது கடமை இருப்பது போன்றே நல்ல முறையில் அவர்களுக்கு உரிமையும் உண்டு. ஆண்களுக்கு அவர்கள் மீது ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.