فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ
ஆகவே அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவர்களைத் தோற்கடித்தார்கள். ஜாலூத்தை தாவூது கொன்றார். அவருக்கு அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். தான் நாடியதிலிருந்து அவருக்கு அவன் கற்பித்தான். மக்களை அவர்களில் சிலரைக் கொண்டு சிலரைவிட்டு அல்லாஹ் (தனது தண்டனையை) தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்துவிடும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது அருளுடையவன்.