Skip to content
البَقَرَة /

வசனம் 259

2 : 259

வசனம் 259 of البَقَرَة (2 : 259). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

البَقَرَة வசனங்கள் 286
ஸூரா · البَقَرَة
தமிழ் · Omar Brief
2 : 259

أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்தவரைப் போன்று. (அவரை நீர் பார்த்தீரா?) "இதை அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்றார் (அவர்). அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டு(கள்) வரை மரணத்தைக் கொடுத்து பிறகு அவரை உயிர்ப்பித்து, "நீர் எத்தனை (காலம்) தங்கினீர்?" எனக் கேட்க, "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்" எனக் கூறினார். "மாறாக! நீ நூறு ஆண்டு(கள்) தங்கினாய். உன் உணவையும், உன் பானத்தையும் பார். அவை கெட்டுப் போகவில்லை. உன் கழுதையைப் பார். (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). (கழுதையின்) எலும்புகளைப் பார்; எவ்வாறு அவற்றை அசைத்து (சிலதிற்கு மேல் சிலதை) உயர்த்துகிறோம்; பிறகு அதற்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்" என்று கூறினான். அவருக்கு (இது) தெளிவானபோது, "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) அறிகிறேன்" என்று கூறினார்.