Skip to content

ஒரு பெண் கேட்கின்றாள் : தனக்கு நோன்பு கடமையான காலத்திலிருந்து ரமழானில் நோன்பு நோற்கிறாள் இருப்பினும் மாதவிடாய் காலத்தில் விடுபட்ட நோன்புகளை கழாச் செய்யவில்லை. இவ்வாறு விட்ட நோன்புகளின் எண்ணிக்கையை சரியாக அறியாததினால் தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டலை எதிர்பார்க்கின்றாள்.

السؤال

கேள்வி 1 :

ஒரு பெண் கேட்கின்றாள் : தனக்கு நோன்பு கடமையான காலத்திலிருந்து ரமழானில் நோன்பு நோற்கிறாள் இருப்பினும் மாதவிடாய் காலத்தில் விடுபட்ட நோன்புகளை கழாச் செய்யவில்லை. இவ்வாறு விட்ட நோன்புகளின் எண்ணிக்கையை சரியாக அறியாததினால் தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டலை எதிர்பார்க்கின்றாள்.

س30: سائلةٌ تقول: إنها منذ وجب عليها الصّيام وهي تصوم رمضان، ولكنها لا تقضي صيام الأيام التي تفطرها بسبب الدورة الشهرية، ولجهلها بعدد الأيام التي أفطرتها، فهي تطلب إرشادها إلى ما يجب عليها فعله الآن.

الجواب

பதில் 1 :

முஃமினான பெண்கள்; கடமையான நோன்புகளை அறியாமையினால் அல்லது அலட்சியம் காரணமாக கழாச்செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இது ஒரு சோதனையாகும். ஒரு விடயம் பற்றி அறியாது இருப்பவர்; அது குறித்து கேட்டு தெளிவு பெறுவதே அதற்குரிய தீர்வாகும்.

அல்லாஹ்வை பயப்படுவதும், அவன் தன்னை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இருப்பதும், அவனின் தண்டனைக்கு பயந்து வாழ்வதும் அல்லாஹ்வின் திருப்தியை பெருவதற்குரிய விடயங்களில் விரைந்து செயற்படுவதும்தான் அலட்சியத்திற்கான அருமருந்தாக காணப்படுகிறது.

ஆகவே இந்தப் பெண்ணைப் பொருத்தவரை அவள் செய்த குற்றத்திற்காக அல்லாஹ்விடம் மீண்டு பவாமீட்சி கோருவதுடன், அதிகம் இஸ்திஃபார் செய்தல் வேண்டும். அத்துடன் விட்ட நோன்புகளின் எண்ணிக்கையை முடியுமான அளவு கணக்கிட்டு அதனைக் கழாச்செய்வதால் அவளின் மீதுள்ள கடமை நீங்கிவிடுகிறது. மேலும் அவளின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நாம் அவளுக்காக பிராரத்திக்கிறோம்.

ﺟ30: يؤسفنا أن يقع مثل هذا بين نساء المؤمنين، فإن هذا الترك -أعني: ترك قضاء ما يجب عليها من الصّيام- إما أن يكون جهلًا، وإما أن يكون تهاونًا، وكلاهما مصيبةٌ؛ لأن الجهل دواؤه العلم والسّؤال،

وأما التهاون فإن دواءه تقوى الله عز وجل، ومراقبته، والخوف من عقابه، والمبادرة إلى ما فيه رضاه.

فعلى هذه المرأة أن تتوب إلى الله مما صنعت، وأن تستغفر، وأن تتحرى الأيام التي تركتها بقدر استطاعتها فتقضيها، وبهذا تبرأ ذمتها، ونرجو أن يقبل الله توبتها.