ஒரு பெண்ணுக்கு தொழுகைக்கான நேரம் நுழைந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அதன் சட்டம் என்ன? அந்தத் தொழுகையை கழாச்செய்ய வேண்டுமா? அதே போல் தொழுகையின் நேரம் முடிவதற்கு முன் சுத்தமடைந்தால் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
السؤال
கேள்வி 1 :
ஒரு பெண்ணுக்கு தொழுகைக்கான நேரம் நுழைந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அதன் சட்டம் என்ன? அந்தத் தொழுகையை கழாச்செய்ய வேண்டுமா? அதே போல் தொழுகையின் நேரம் முடிவதற்கு முன் சுத்தமடைந்தால் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
س31: ما الحكم إذا حاضت المرأة بعد دخول وقت الصلاة؟ وهل يجب عليها أن تقضيها إذا طهرت؟ وكذلك إذا طهرت قبل خروج وقت الصلاة؟
الجواب
பதில் 1 :
இந்தக் கேள்விக்கான பதில் பின்வருமாறு : முதலாவது : தொழுகையின் நேரம் வந்த பின் நிறைவேற்ற வேண்டிய தொழுகையை நிறைவேற்றாமல் இருக்கும் போது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமாகியதும் அந்தத் தொழுகையை கழாச்செய்வது கடமையாகும்.
இதற்கான ஆதாரமாக நபியவர்களின் கூற்று அமைகிறது:
யார் தொழுகையில் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை முழுமையாக அடைந்து கொண்டவராவார்'.
அதாவது ஒரு பெண் ஒரு ரக்அத் தொழும் அளவிற்கான நேரத்தை அடைந்து அதற்கு முன் மாதவிடாய் ஏற்பட்டு அந்தத் தொழுகையை நிறைவேற்றாது இருந்தால் அவள் சுத்தமாகியதும் அதனை கழாச்செய்வது கட்டாயமாகும்.
இரண்டாவது :தொழுகையின் நேரம் முடிவடைவதற்கு முன் சுத்தமாகிவிட்டால் அந்தத் தொழுகையை நிறைவேற்றுவது அவசியம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் ஒரு ரக்அத் தொழுமளவிற்குரிய நேரம் இருக்கையில்; ஒருவர் சுத்தமாகிவிட்டால் அவள் சுபஹ் தொழுகையை கழாவாக நிறைவேற்றுவது அவசியமாகும்.
அதே போல் சூரியன் மறைவதற்கு முன் ஒரு ரக்கஅத் நிறைவேற்றுமளவிற்கு நேரம் இருக்கும் போது சுத்தமாகிவிட்டால் அவள் அஸர் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும்.
நள்ளிரவிற்கு முன் ஒரு ரக்அத் நிறைவேற்றுமளவிற்கு நேரம் இருக்கும் போது சுத்தமாகிவிட்டால் அவள் இஷாத் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும்.
அதே போல் நள்ளிரவிற்குப் பின் சுத்தமாகிவிட்டால் அவள் இஷாத் தொழுவது கடமையல்ல. மாறாக அவள் சுபஹ் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும்.
இது குறித்து அல்லாஹ் "நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் தொழுகையை முறைப்படி நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது". (அந்நிஸா:103)
அதாவது தொழுகை என்ற கட்டாயக் கடமை வரையறுக்கப்பட்ட நேரத்துடன் தொடர்பானதாகும். எனவே ஒருவர் தொழுகையை அதற்குரிய நேரத்திலல்லாது நிறைவேற்றுவதோ, தொழுகையின் நேரத்திற்கு முன் நிறைவேற்றுவதோ கூடாது
ﺟ31: أولًا: المرأة إذا حاضت بعد دخول الوقت -أي: بعد دخول وقت الصلاة- فإنه يجب عليها إذا طهرت أن تقضي تلك الصلاة الّتي حاضت في وقتها، إذا لم تصلّها قبل أن يأتيها الحيض،
وذلك لقول الرسول ﷺ:
«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ» [1]،
فإذا أدركت المرأة من وقت الصلاة مقدار ركعةٍ، ثم حاضت قبل أن تصلّي، فإنها إذا طهرت يلزمها القضاء.
[11] تقدم تخريجه.
ثانيًا: إذا طهرت من الحيض قبل خروج وقت الصلاة فإنه يجب عليها قضاء تلك الصلاة، فلو طهرت قبل أن تطلع الشمس بمقدار ركعةٍ وجب عليها قضاء صلاة الفجر،
ولو طهرت قبل غروب الشمس بمقدار ركعةٍ وجبت عليها صلاة العصر،
ولو طهرت قبل منتصف الليل بمقدار ركعةٍ وجب عليها قضاء صلاة العشاء،
فإن طهرت بعد منتصف الليل لم يجب عليها صلاة العشاء، وعليها أن تصلّي الفجر إذا جاء وقتها، قال الله سبحانه وتعالى:
﴿...فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾
[النساء:103]،
أي: فرضًا مؤقتًا بوقتٍ محدودٍ، لا يجوز للإنسان أن يخرج الصلاة عن وقتها، ولا أن يبدأ بها قبل وقتها.