நான் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டால் இந்நிலையில் நான் என்ன செய்யவேண்டும்? நான் மாதவிடாய் கால தொழுகைகளை கழாச் செய்ய வேண்டுமா?
السؤال
கேள்வி 1 :
நான் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டால் இந்நிலையில் நான் என்ன செய்யவேண்டும்? நான் மாதவிடாய் கால தொழுகைகளை கழாச் செய்ய வேண்டுமா?
س32: دخلت عليّ العادة الشهرية أثناء الصلاة، ماذا أفعل؟ وهل أقضي الصلاة عن مدة الحيض؟
الجواب
பதில் 1 :
தொழுகை நேரம் நுழைந்ததன் பிறகு மாதவிடாய் ஏற்பட்டால் - அதாவது சூரியன் நடு உச்சியைவிட்டு விலகி அரை மணி நேரத்திற்குப் பிறகு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் மாதவிடாய் இருந்து தூய்மையடைந்த பிறகு, மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் அவள் தூய்மையான நிலையில் நிறைவேற்றிக்கொண்டிருந்த அந்தத் தொழுகையை கழாச்செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்கான ஆதாரமாக பின்வரும் அல்லாஹ்வின் கூற்று அமையப் பெற்றுள்ளது :
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நிசயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரங்குறிப்பிடப்பட்ட கடமையாக உள்ளது" (அந்நிஸா :103).
மாதவிடாய் நேரத்தில் விடுபட்ட தொழுகையை நிறைவேற்றத் தேவையில்லை என்பதற்கு பின்வரும் நபி (ஸல்) அவர்களின் கூற்று ஆதாரமாக அமைகிறது :
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதும் நோன்பு நோற்பதும் கூடாதல்லவா?'.
மாதவிடாய் காலப்பகுதியில் தவறிப்போன தொழுகையை கழாச்செய்யத்தேவையில்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
ஆனால் ஒரு பெண்; தூய்மையாகி குறிப்பிட்ட தொழுகைக்குரிய நேரம் ஒரு ரக்அத் அதைவிட அதிகமான ரக்அத்துக்களை நிறைவேற்றுமளவிற்கு இருந்தால் அவள் தூய்மைடைந்த நேரத்திற்குரிய தொழுகையை நிறைவேற்றவேண்டும். இதற்கு ஆதாரமாக பின்வரும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது :
"சூரியன் மறைய முன் யார் அஸர்தொழுகையின் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார்".
ஒரு பெண் அஸர் நேரத்தில் அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் தூய்மையடைந்து விட்டால் அதாவது சூரியன் மறைவதற்கும் அல்லது உதிப்பதற்கும் ஒரு ரக்அத் தொழுமளவிற்கான காலப்பகுதியில் அவள் தூய்மையடைந்து விட்டால் இவ்வாறான நிலையில் அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் அவள் தொழ வேண்டும்.
ﺟ32: إذا حدث الحيض بعد دخول وقت الصلاة -كأن حاضت بعد الزوال بنصف ساعةٍ مثلًا- فإنها بعد أن تطهر من الحيض تقضي هذه الصلاة التي دخل وقتها وهي طاهرٌ؛ لقوله تعالى:
﴿...إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾
[النساء:103].
ولا تقضي الصلاة عن وقت الحيض؛ لقوله ﷺ في الحديث الطويل:
«أَلَيْسَتْ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ، وَلَمْ تَصُمْ؟» [1]،
وأجمع أهل العلم أنها لا تقضي الصلاة التي فاتتها أثناء مدة الحيض.
[12] تقدم تخريجه.
أما إذا طهرت، وكان باقيًا من الوقت مقدار ركعةٍ فأكثر، فإنها تصلّي ذلك الوقت الذي طهرت فيه؛ لقوله ﷺ:
«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ» [2]،
فإذا طهرت وقت العصر، أو قبل طلوع الشمس، وكان باقيًا على غروب الشمس أو طلوعها مقدار ركعةٍ، فإنها تصلّي العصر في المسألة الأولى، والفجر في المسألة الثانية.
[13] تقدم تخريجه.