பஜ்ர்ருக்குப் பின் ஒரு பெண் தூய்மையாகி விட்டால், அவள் அந்த நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருந்து அந்நாளில் நோன்பு நோற்க வேண்டுமா? அவ்வாறு நோன்பிருந்த அந்நாளை நோன்பு நோற்ற நாளாக கருதுவதா? அல்லது அந்த நாளை அவள் கழாச் செய்ய வேண்டுமா?
السؤال
கேள்வி 1 :
பஜ்ர்ருக்குப் பின் ஒரு பெண் தூய்மையாகி விட்டால், அவள் அந்த நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருந்து அந்நாளில் நோன்பு நோற்க வேண்டுமா? அவ்வாறு நோன்பிருந்த அந்நாளை நோன்பு நோற்ற நாளாக கருதுவதா? அல்லது அந்த நாளை அவள் கழாச் செய்ய வேண்டுமா?
س1: إذا طهرت الـمرأة بعد الفجر مباشرةً فهل تمسك وتصوم هذا اليوم، ويكون يومها لها، أو عليها قضاء ذلك اليوم؟
الجواب
பதில் 1 :
பதில் : பஜ்ர்உதயத்துக்குப் பின் ஒரு பெண் தூய்மையாகிவிட்டால் அந்நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது குறித்து அறிஞர்களிடத்தில் இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன :
முதலாவது நிலைப்பாடு : அந்நாளில் எஞ்சிய பகுதியில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருக்க வேண்டும். ஆனால் அது நோன்பாகக் கருதப்பட மாட்டாது. அந்நாளை கழாச்செய்வது கட்டாயமாகும். இதுவே இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களது மத்ஹபின் பிரபல்யமான கருத்தாகும்.
இரண்டாவது நிலைப்பாடு: அந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது கடைமையல்ல. அதாவது அந்நாளின் ஆரம்பத்தில் அவள் மாதவிடாய் நிலையில் இருந்தமை மற்றும் நோன்பு நோற்பதற்கு தகுதிபெற்றவர்களில் அவள் இல்லாதிருந்தமை இதற்காண காரணங்களாகும். மேலும் அந்த நாளில் நோன்பு நோற்பது நிறைவேறாது என்றிருப்பதால்; அதில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. அவள் இருக்கும் அக்காலப்பகுதியானது அவளுக்கு கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய உகந்த காலப்பகுதியுமல்ல. மாறாக மாதவிடாய் காலப்பகுதியில் அவள் பகலில் நோன்பு நோற்காது இருக்க வேண்டும் என்ற கட்டளையிருக்கும் வேளை அதில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது தடைசெய்யப்பட்ட விடயமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் நோன்பு என்பது பஜ்ர் உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களை தவிர்த்து இருப்பதன் மூலம் அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதைக் குறிக்கும்.
இதனடிப்படையில் நீங்கள் அவதானித்தது போன்று அந்நாளில் நோன்பாளி போல் உண்ணாது பருகாது இருப்பது அவசியமென்ற கூற்றை விட இந்த இரண்டாவது கருத்தே மிகப்பொருத்தமான கருத்தாகும். அதே வேளை மேற்குறிப்பிடப்பட்ட இரு நிலைப்பாட்டிலும் அந்த நாளை மீண்டும் கழாச் செய்யவேண்டும் என்று குறிபபிடப்பட்டிருப்பது அவதானாத்திற்குரியது.
ﺟ1: إذا طهرت المرأة بعد طلوع الفجر فللعلماء في إمساكها ذلك اليوم قولان:
القول الأول: أنه يلزمها الإمساك بقية ذلك اليوم، ولكنه لا يحسب لها، بل يجب عليها القضاء، وهذا هو المشهور من مذهب الإمام أحمد رحمه الله.
والقول الثاني: أنه لا يلزمها أن تمسك بقية ذلك اليوم؛ لأنه يومٌ لا يصحّ صومها فيه؛ لكونها في أوله حائضًا ليست من أهل الصّيام، وإذا لم يصح لم يبق للإمساك فائدةٌ، وهذا الزمن زمنٌ غير محترمٍ بالنّسبة لها؛ لأنها مأمورةٌ بفطره في أول النهار، بل محرمٌ عليها صومه في أول النهار،
والصوم الشرعيّ: هو الإمساك عن المفطّرات تعبّدًا لله عز وجل من طلوع الفجر إلى غروب الشمس.
وهذا القول -كما تراه- أرجح من القول بلزوم الإمساك، وعلى كلا القولين يلزمها قضاء هذا اليوم.