Skip to content

ஒரு பெண் மாதவிடாயிலிருந்து பஜ்ர் தொழுகைக்கு முன் சுத்தமாகி; பின் பஜ்ருக்குப் பின் குளித்து அத்தொழுகையை நிறைவேற்றி; நோன்பையும் நோற்றால் அந்த நோன்பு நிறைவேறுமா? அதனை மீண்டும் கழாச் செய்வது அவசியமா?

السؤال

கேள்வி 1 :

ஒரு பெண் மாதவிடாயிலிருந்து பஜ்ர் தொழுகைக்கு முன் சுத்தமாகி; பின் பஜ்ருக்குப் பின் குளித்து அத்தொழுகையை நிறைவேற்றி; நோன்பையும் நோற்றால் அந்த நோன்பு நிறைவேறுமா? அதனை மீண்டும் கழாச் செய்வது அவசியமா?

س2: إذا طهرت الحائض، واغتسلت بعد صلاة الفجر، وصلت، وكملت صوم يومها، فهل يجب عليها قضاؤه؟

الجواب

பதில் 1 :

ரமழான் மாதத்தில் பஜ்ர் உதயத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னராயினும் ஒரு பெண் சுத்தமாகிவிட்டதை உறுதி கொண்டால் அன்றைய நோன்பை நோற்பது அவளின் மீது கடமையாகும். அவ்வாறு அவள் நோற்ற நோன்பு நிறைவேறும். அவள் சுத்தமாக இருக்கும் நிலையில் நோன்பு நோற்றதினால் அதனை கழாச்செய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதே போன்று பஜ்ர் உதயத்தின் பின் குளித்தாலும் அவளின் மீது எவ்விதக் குற்றமுமில்லை.

இது ஒரு ஆணுக்கு கனவில் அல்லது குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டதினால் ஜனாபத் ஏற்படுதல் போன்ற நிலையை ஒத்ததாகும். இவ்வாறனவர் பஜ்ருக்கு முன் ஸஹர் உணவு உண்டு நோன்பு நோற்று, பஜ்ருக்குப் பின் குளித்தாலும் அவனின் நோன்பு நிறைவேறிவிடும்

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை உணர்த்த விரும்புகிறேன் . அதாவது சில பெண்கள் மாலையில் நோன்பு திறந்து இஷாத் தொழுகையை தொழ முன்னர் மாதவிடாய் ஏற்பட்டால் அந்நாள் நோன்பு நிறைவேறாது என்று கருதுகின்றனர்.

இதற்கு எந்த ஆதாரமோ அடிப்படையோ கிடையாது. மாறாக சூரியன் மறைந்த பிறகு ஒரு நிமிடத்திற்குள் மாதவிடாய் ஏற்பட்டாலும் அத்தினத்தில் நோற்ற நோன்பு பரிபூரணமாக நிறைவேறிவிடும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ﺟ2: إذا طهرت الحائض قبل طلوع الفجر ولو بدقيقةٍ واحدةٍ، ولكن تيقنت الطّهر، فإنه إذا كان في رمضان فإنه يلزمها الصوم، ويكون صومها ذلك اليوم صحيحًا، ولا يلزمها قضاؤه؛ لأنها صامت وهي طاهرٌ، وإن لم تغتسل إلا بعد طلوع الفجر فلا حرج،

كما أن الرجل لو كان جنبًا من جماعٍ أو احتلامٍ، وتسحر، ولم يغتسل إلا بعد طلوع الفجر، كان صومه صحيحًا.

وبهذه المناسبة أودّ أن أنبّه إلى أمرٍ آخر عند النّساء إذا أتاها الحيض وهي قد صامت ذلك اليوم، فإن بعض النّساء تظنّ أن الحيض إذا أتاها بعد فطرها قبل أن تصلّي العشاء فسد صوم ذلك اليوم،

وهذا لا أصل له، بل إن الحيض إذا أتاها بعد الغروب ولو بلحظةٍ فإن صومها تامٌّ وصحيحٌ.