17 : 24
وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا
இன்னும், அவர்களுக்கு முன் கருணையுடன் பணிவாக நடந்துகொள்! இன்னும், “என் இறைவா! நான் சிறியவனாக இருக்கும்போது என்னை அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு!