உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுமைத் அல்லது அபூ உஸைத் அறிவிக்கிறார்:
உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').
«إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ».
மஸ்ஜிதிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓத வேண்டிய துஆவை தனது சமூகத்திற்கு கற்றுக்கொடுத்து வழிப்படுத்தினார்கள். பள்ளியினுள் நுழையும் போது அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் கருணையை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை தயார்படுத்தித் தருமாறு அல்லாஹ்விடம் அடியான் வேண்டுகிறான். மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்ற துஆவை ஓத வேண்டும். இதன் கருத்து அடியான் ஹலாலான வாழ்வாதாரத்தை அல்லாஹ்வின் அருட்கொடையிலிருந்து தருமாறு வேண்டுகிறான்.
மஸ்ஜிதினுள் நுழையும் போதும், வெளியேறும் போதும் இந்த பிராத்தனையை கூறுவது முஸ்தஹப்பாகும்(வரவேற்கத்தக்கதாகும்).
இந்த ஹதீஸில் மஸ்ஜிதில் நுழையும் போது அல்லாஹ்வின் அருளையும் வெளியேறும் போது அவனது அருட்கொடையையும் விஷேடமாக குறிப்பிட்டிருப்தற்கான காரணம் பள்ளியினுள் நுழைபவர் அல்லாஹ்வை நெருங்குவதினூடாக சுவர்க்கத்தின் பால் தன்னை நெருக்கிவைக்கக் கூடிய விடயங்களில் ஈடுபடுவதினால் அருளைக் கேட்பது பொருத்தமானது, அதே போன்று பள்ளியிலிருந்து வெளியேறுபவர் அல்லாஹ்வின் அருளில் வாழ்வாதாரத்தைத் தேடி பூமியில் அலைந்து திரிந்து பாடுபடுகிறார். ஆகையால் வெளியேறும் போது அருளைக் கோரியிருப்பது பொருத்தமானது.
இந்த திக்ருகளை மஸ்ஜிதில் நுழையும் போதும் வெளியேறும் போதும் கூறுதல்.
முஸ்லிம் (1/ 494) (713).
மேலதிகமாக (3)
الكاشف عن حقائق السُّنن (3/935).
فيض القدير (1/ 336).
ذخيرة العقبى (9/153).
நூல்களில் மேற்கோள்
10 நூல்கள்- அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்حصن المسلمஅல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபத்லிக்
- மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகளும் ஒழுங்குகளும், நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது தொடர்பான சட்டங்களும்.فضائل وآداب المسجد النبوي، وأحكام زيارة قبر النبي عليه الصلاة والسلام وقبري صاحبيهஅல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன். [19]
- முஸ்லிம் சிறார்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக', பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.
- முஸ்லிம் சிறார்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்பதில் : 'அல்லாஹும்மப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக' (யா அல்லாஹ்! உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்துவிடுவாயாக!).
- முஸ்லிம் சிறார்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்பதில் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக'. பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.
மேலதிகமாக (5)
- الذكر والدعاء والعلاج بالرقي من الكتاب والسنة"إذا دخل أحدكم المسجد فليقل: اللهم افتح لي أبواب رحمتك. وإذا خرج فليقل: اللهم إني أسألك من فضلك".
- المختصر في آداب السفر وصفة الحج والعمرة وآداب الزيارة والأدعية الجامعة مع ملحق بالفتاوى والمخالفات2- المختصر في صفة الحج وأحكامه (للحرمين)«اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ»[2]،
- المختصر في صفة الحج وأحكامهالمختصر في صفة الحج والعمرة«اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ»[2]،
- رسالة في الأذكار1«إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ».
- مجموعة زاد التربية الإسلامية (3)، والسيرة النبوية (3)التربية الإٍسلامية -3- «اللهم إني أسألك من فضلك»