முடிவுகளை வடிகட்டு
339 அட்டைகள்
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
பதில் : தொழுகையின் வாஜிப்கள் எட்டாகும். அவையாவன:
- இஹ்ராம் தக்பீர் தவிர்ந்த ஏனைய தக்பீர்கள்.
- இமாமும் தனித்து தொழுபவரும் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஃ' என்று கூறுதல்.
- 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுதல்.
- ருகூவில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' என்று கூறுதல்.
- ஸுஜுதில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல்.
- இரு ஸஜ்தாக்களுக்குமிடையில் ' ரப்பிஃபிர்லி ' என்று கூறுதல்.
- முதலாவது அத்தஹிய்யாத்.
- முதலாவது அத்தஹிய்யாத்திற்காக அமர்தல்.
பதில் : அவை 11 ஆகும். அவைகள் பின்வருமாறு :
1-இஹ்ராம் தக்பீருக்குப்பின் ' ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா இலாஹ கய்ருக' எனக் கூறுவது. இது துஆ அல் இஸ்திப்தாஹ் என்றழைக்கப்படுகிறது. பொருள் ( யா அல்லாஹ் உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேர் மிக்கது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.).
- இஸ்திஆதா கூறுதல் (அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்) என்று கூறுதல்.
- பிஸ்மில்லாஹ் கூறுதல் ( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்).
- ஆமின் கூறுதல்.
- ஸூறா பாத்திஹாவை ஒதி முடிந்ததும் ஏதாவது ஒரு ஸூறாவை ஓதுதல்.
- சப்தமாக ஒதித் தொழும் தொழுகையில் இமாம் சப்தமாக ஓதுதல்.
- "ரப்பனா வலகல் ஹம்து" என்ற வார்த்தைக்குப்பின் "மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின ஷைஇன் பஃது" என்று கூறுதல்.
- ருகூவில் ஒதும் தஸ்பீஹை ஒரு தடவைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
- ஸுஜூதின் தஸ்பீஹை ஒரு முறைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்திருக்கும் போது கூறும் 'ரப்பிஃபிர்லி' என்ற துஆவை ஒரு தடவைக்கும் மேல் அதிகமாக கூறுதல்.
- இறுதி அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வதும் அதனைத் தொடர்ந்து துஆ இறைஞ்சுவதும்.
செயல்ரீதியான ஸுன்னத்துக்கள் :
- இஹ்ராம் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துதல்.
- ருகூவிற்கு செல்லும் போதும்.
- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு செல்லும் போதும் இரு கைகளையும் உயர்த்துதல்.
- அதன் பின் இரு கைகளையும் கீழே விட்டுவிடுதல்.
- வலது கையை இடது கையின் மீது வைத்தல்.
- ஸுஜூத் செய்யும் இடத்தைப் பார்த்தல்
- நின்ற நிலையில் இருக்கும் போது இரு கால்களுக்கு மிடையில் இடைவெளிவிடுதல்.
- ருகூவில் இருக்கும் போது இரு முழங்கால்களையும் இரண்டு கைகளினால் விரல்களை விரித்த நிலையில் பிடித்தல். முதுகை நேராக வைத்து தலையை அதற்கு நேராக வைத்தல்.
- ஸுஜூதின் போது தரையில் கட்டாயம் பட வேண்டிய உறுப்புகளை தரையில் படுமாறு வைத்தல்.
- ஸுஜூத் செய்யும் போது (மேற் கைகளை (மேற்கை (Arm) என்பது தோள் பட்டைக்கும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்) விலாவை விட்டும் தூரமாக வைத்தல், வயிற்றை இரு தொடைகளை விட்டும் தூரப்படுத்துதல், தொடையை இரு கெண்டை கால்களை விட்டும் தூரப்படுத்தல், முட்டுக்கால்களை அகற்றி வைத்தல், பாதங்களை நிமிர்த்தி நட்டிவைத்தல், இரு கால் விரல்களின் உட்புறத்தை தரையில் பிரித்து வைத்தல், இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக விரிக்கப்படட்டதாகவும் விரல்களை சேர்த்தும் வைத்தல்.
- இரு ஸஜ்தாக்கிடையிலான இருப்பிலும் முதல் அத்தஹிய்யாத் இருப்பிலும் இப்திராஷ் இருப்பு இருத்தல். இரண்டாவது அத்தஹிய்யாத்தில் தவர்ருக் இருப்பு இருத்தல். (குறிப்பு) இப்திராஷ் இருப்பு என்பது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைத்தல். தவர்ருக் இருப்பு என்பது தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைத்தல்). (மொழிபெயர்ப்பாளர்).
- இரு ஸஜ்தாக்கிடையிலான இருப்பில் இரு தொடைகளின் மேல் இருகைகளையும் விரித்து கைவிரல்களை சேர்த்தும் வைத்தல். அவ்வாறே அத்தஹிய்யாத்திலும் வைக்க வேண்டும். என்றாலும் வலது கையின் சின்ன விரலையும் மோதிர விரலையும் மடித்து நடுவிரலை பெரும் விரலோடு சேர்த்து வட்டமாக்கி அல்லாஹ்வின் பெயர் கூறும்போது ஆள்காட்டி விரலால் சைக்கினை செய்தல் வேண்டும்.
- (தொழுகையை முடிப்பதற்கு ஸலாம் கூறும் போது) முதலாவது ஸலாமில் தலையை வலப்பக்கமாகவும் இரண்டாவது ஸலாமில் இடப்பக்கமாகவும் திருப்புதல்.
பதில் : தொழும் முறை (ஒரு முஸ்லிம் பின்வரும் ஒழுங்கில் தொழுகையை நிறைவோற்றுவான்) :
- கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை தனது முழு உடலினாலும் நேராக நின்று முன்னோக்க வேண்டும்.
- பின்னர் தொழவிரும்பும் தொழுகையை நாவினால் மொழியாமல் மனதில் நினைக்க வேண்டும்.
- பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி தக்பீர் கூறும்போது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்த வேண்டும்.
- வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.
- பிறகு பின்வரும் பிராத்தனைகளில் (துஆக்களில்) ஒன்றை ஆரம்பமாக ஓதவேண்டும்.
'அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும்மக்ஸில்னீ மின் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத்' பொருள் : யாஅல்லாஹ்! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!.
அல்லது பின்வரும் துஆவை ஓத வேண்டும் :
(ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக) என்பதாகும். பொருள் (உனக்கு தகுதியற்ற எல்லாக் குறைகளிலிருந்தும்) உன்னை நான் துதிக்கிறேன். உனது புகழைக்கொண்டு உன்னை போற்றியவனாகவே உள்ளேன். உனது பெயர் அருட்பேறு நிறைந்தாக உள்ளது. உன்னுடைய கண்ணியமும் மகத்துவமும் மேலோங்கிவிட்டது. உன்னையன்றி உண்மையாக வணங்கப்படுபவன் (வேறு எவறும், எதுவும்) இல்லை.
- பின்னர் இஸ்திஆதா ஓதுவார் அதாவது :
'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்)
- பிறகு பிஸ்மிலுடன் ஃபாத்திஹா ஸூராவை ஓதவேண்டும். அது பின்வருமாறு :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; 3
கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! 4
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்துவாயாக !
(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. (அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று.
(அல்பாதிஹா : 2).
பிறகு (ஆமீன்) என கூறுவார். ஆமீன் என்பதன் கருத்து (யாஅல்லாஹ் எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக) என்பதாகும்.
- பிறகு அல் குர்ஆனில் அவருக்கு முடியுமான சில வசனங்களை ஓத வேண்டும். மேலும் ஸுப்ஹ் தொழுகையில் (சற்று) அதிகமாக ஓதுவார்.
- பிறகு அவர் ருகூஃ செய்வார். அதாவது அல்லாஹ்வை மகிமைப்படுத்தும் முகமாக அவர் முதுகை வளைத்து குனிவார். இவ்வாறு ருகூ செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி தனது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்துவார். முதுகை வளைத்து தலையை நேராக முதுகின் மட்டத்திற்கு சமமாக வைப்பார். இரண்டு கைகளையும்- விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களின் மீது வைப்பார்.
- ருகூவில் 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' (பொருள்: மகத்தான எனது இரட்சகனை நான் தூய்மைப்படுத்துகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறுவார். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ'. (பொருள் : யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னைப் புகழ்வதுடன் நீ தூய்மையானவன் என்றும் போற்றுகிறேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!.
- 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' (பொருள் : தன்னைப் புகழ்பவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்து அங்கீகரித்தான்) என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழும்புவார். அந் நேரம் இரு கைகளையும் புயத்திற்கு நேராக உயர்த்தி 'ரப்பனா வலகல்ஹம்து' என்று கூறுவார். ஜமாஅத்தாக தொழும் மஃமூம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' என்று கூறாது அதற்குப் பதிலாக 'ரப்பனா வலகல் ஹம்து' (பொருள்: எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்று கூறுவார். குறிப்பு : தனித்துத் தொழுபவர் ருகூவிலிருந்து எழும்பும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' கூறுவதுடன் அதனைத் தொடர்ந்து 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூற வேண்டும்.
- ருகூவிலிருந்து எழுந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின் ஷைஇன் பஃத்' என்று கூறுவார். (பொருள் : எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும் நிரம்புமளவிற்கும் மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு (உனக்கே புகழனைத்தும்)).
- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலாவது ஸஜ்தா செய்வார். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜூது செய்வார். கைகளை விலாவோடு சேர்த்து வைக்கவோ முழங்கைகளை தரையில் படுமாறு வைக்கவோ கூடாது. அவரின் கைவிரல்கள் கிப்லா திசையை நோக்கியதாக வைக்க வேண்டும்.
- 'ஸுஜூதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா' (பொருள்: மிக உயர்ந்தவனாகிய என் இரட்சகனை துதிசெய்கிறேன்) என்று மூன்று முறை கூறவேண்டும். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பன வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ' (பொருள் :யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னை புகழ்வதுடன் நீ தூய்மையானவன் எனவும் துதிக்கின்றேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!
- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்துவார்
- பின்னர் இரண்டு ஸஜ்தாவுக்கும் நடுவில் வலது காலை நட்டி இடது காலை மடித்து அதன் மீது அமர்வார். இரு கைகளையும் தொடைகள் மற்றும் முழங்கால்களின் மீது வைப்பார்.
- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்து பின்வரும் துஆவை ஓதுவார் :
'ரப்பிஃபிர்லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ, வஜ்புர்னீ, வஆபினீ' (பொருள் : யா அல்லாஹ் ! என்னை மன்னித்து எனக்கு அருள்புரிந்து நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை தருவாயாக! என்குறைகளை மறைத்து எனக்கு ஆறுதலைத் தந்திடுவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக!).
- பிறகு முதல் ஸஜ்தா செய்தது போன்று இரண்டாவது ஸஜ்தாவை அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் சொன்னது, செய்ததைப்போன்று மீண்டும் செய்வார். (இத்துனுடன் முதல் ரக்அத் முடிந்துவிடும்)
- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எழுந்து, மீண்டும் நிலைக்கு வருவார். இரண்டாவது ரக்அத்தை முதல் ரக்அத்தைப் போன்றே தொழுவார். எனினும் இதில் ஃபாத்திஹா ஸூராவுக்கு முன்னுள்ள துஆஉல் இஸ்திப்தாஹ் பிராத்தனையை மீண்டும் ஓதமாட்டார்.
- இரண்டாவது ரக்அத் முடிந்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்தது போன்று அமர்வார்.
- இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின்வரும் பிரார்த்தனையை ஓதுவார் :
'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹந் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'. (அதனைத் தொடர்ந்து பின்வரும் ஸலவாத்தை ஓதுவார்) 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத் - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். (இதன் பிறகு பின்வரும் துஆவை ஓதுவார்). அஊது பில்லாஹி மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி வமின் பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்' . (பொருள் : காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சான்று பகர்கிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் சான்று பகர்கிறேன். யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள் மீதும் அருள் புரிந்தது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்; மீதும் அருள்புரிவாயாக. யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும்,செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும செழிப்பையும் பொழிவாயாக !நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையில் இருந்தும் நரகத்தின் வேதனையில் இருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்).
இதன் பிறகு இம்மை மறுமைக்குரிய நலன்களில் தான் விரும்பியதை தனது இரட்சகனிடம் வேண்டிப் பிரார்த்திப்பார்.
- பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறுவார்;. பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே கூறுவார் (இத்துடன் இரண்டு ரக்அத் தொழுகை முடிவடைகிறது.)
- மூன்று அல்லது நான்கு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகைகளைத் தொழும்போது முதலாவது அத்தஹியாத்தில் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ' என்ற வார்த்தை வரை ஒதி நிறுத்திக்கொள்வார்;
- பிறகு அல்லாஹு அக்பர் எனக் கூறி நிலைக்கு வர வேண்டும். அப்போது இரு கைகளையும் தோள் புயத்திற்கு நேராக உயர்த்த வேண்டும்.
- எஞ்சிய ரக்அத்துக்களை இரண்டாம் ரக்அத்தை தொழுத முறையில் தொழ வேண்டும். அதில் ஸூறதுல் பாத்திஹாவை மாத்திரம் ஓதிக் கொள்வார்.
- பிறகு 'தவர்ருக்' முறையில் அமர்வார். அதாவது வலது காலை நட்டி வைத்து, இடது காலை வலது காலுக்கு கீழ் வெளிப்படுத்தி தமது இருப்பிடத்தை (பித்தட்டை) தரையில் வைத்து அமர்ந்து கொள்வதே 'தவர்ருக்' முறையாகும். பின்னர் தனது இரு கைகளையும் முதலாவது அத்தஹிய்யாத்தில் தொடையின் மீது வைத்த முறையில் வைக்க வேண்டும்.
- இந்த இருப்பில் அத்தஹிய்யாத் முழுவதையும் (துஆக்களுடன்) ஓதுவார்.
பதில்- 'அஸ்தஃபிருல்லாஹ்' என்று மூன்று முறை கூறுவார்.
'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல்இக்ராம்'. (பொருள்: இறைவா! நீயே சாந்தியுடைவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ மகத்துவமிக்கவனாய் உள்ளாய்.)
'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹெளல வலாகுவ்வத இல்லாபில்லாஹ், அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத வலா முஃதிய லிமா மனஃத வலாயன்பஉ தல்ஜத்தி மின்கல் ஜத்து' (பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை, அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. எங்கள் இரட்சகனே! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவரும் இல்லை, நீ தடுப்பதைக் கொடுப்பவர் எவரும் இல்லை, மதிப்புடைய எவரும் எந்தப் பலனும் அளிக்க மாட்டார், மதிப்பு உன்னிடமே உள்ளது.)
'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ்ஸனாஉல் ஹஸன் லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'. (பொருள் :உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது. உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத்தவிர வேறு எவரையும் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் யாவும் அவனுக்கே உரியன. சிறப்பும் அவனுக்கே உரியது. அழகிய புகழும் பாராட்டும் அவனுக்கே உரியது. உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. காபிர்கள் வெறுத்த போதிலும் கீழ்படிதலை அவனுக்கே உரித்தாக்குகிறோம்.)
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத்தூயவன்) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும்,
அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியன) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும்,
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு
(100) நூறாவதை பூரணப்படுத்துவதற்கு பின்வரும் திக்ரை ஓதுவார்:
'லாஇலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவன் தனித்தவன்; அவனுக்கு எந்த இணையாளருமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்).
மேலும், ஸுறதுல் இக்லாஸ் முஅவ்விதாத் (ஸூறதுல் பலக் ஸூறதுன் நாஸ்) ஆகிய ஸூறாக்களை ஸுப்ஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளின் பின் மூன்று தடவைகளும், ஏனைய தொழுகைகளின் பின் ஒரு தடவையும் ஓதுவார்.
மேலும், ஆயதுல் குர்ஸியை ஒரு தடவை ஓதுவார். 'அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம், லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம், லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி, மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல, வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' (பகரா 2:255). (பொருள் :(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்?(படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன்)
பதில் - ஸுப்ஹுக்கு முன்னர் (2) இரண்டு ரக்அத்துக்கள்
ழுஹருக்கு முன்னர் (4) நான்கு ரக்அத்துக்கள்.
ழுஹருக்குப் பின்னர் (2) நான்கு ரக்அத்துக்கள்.
மஃரிபுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்
இஷாவுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்
இதன் சிறப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
'யார் தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் (12) பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் அமைப்பான்'.
இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதில் - ஜும்ஆத் தினமாகும் ( வெள்ளிக்கிழமையாகும்) நபி (ஸல்) கூறினார்கள் :
'உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதப்படும். அந்நாளில் மக்கள் அதிர்ச்சிக்குள்ளவாகுவர்,.எனவே அந்நாளில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் உங்களது ஸலவாத்கள் எனக்கு காண்பிக்கப்படுகிறது'.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மரணித்து உங்களின் எலும்பெல்லாம் மண்ணில் உக்கிப்போன நிலையில் எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி காண்பிக்கப்படுகிறது?! என்று நபித்தோழர்கள் கேட்ட போது,
'நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்'.
இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதில் - பருவ வயதை அடைந்த புத்திசாலியான ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம் ஆண்களுக்கும் கட்டாயக் கடமையாகும் (பர்ளு அய்ன்)
அல்லாஹ் கூறுகிறான் :
நம்பிக்கைக் கொண்டோரே! வெள்ளிக் கிழமை தின்த்தில் தொழுகைக்காக அழைப்புவிடுக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள் .இன்னும் வியாபாரத்தையும் விட்டுவிடுங்கள்.நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
ஜும்ஆ
பதில் - ஷரீஆ ரீதியான நியாயமான காரணங்களுக்காகவேயன்றி எவ்விதத்திலும் ஜுமுஆத் தொழுகைக்கு சமூகம் தராது இருப்பது கூடாது. இது பற்றி நபி (ஸல்) பின்வருமாறு எச்சரிக்கை செய்துள்ளார்கள் :
"யார் ஒருவர் அலட்சியமாக மூன்று ஜுமுஆக்களை விட்டு விடுகிறாறோ அல்லாஹ் அவரின் உள்ளத்திற்கு திரையிட்டு விடுவான்".
இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதில் - 1- குளித்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்காக
'பருவவயதை அடைந்த ஒவ்வொருவரும் ஜும்ஆ தினத்தில் குளிப்பது கடமையாகும்.'
(ஆதாரம் : புஹாரி).
- வாசனை பூசுதல்.
பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:
'ஜும்ஆ தினத்தில் குளிப்பதும், தமது குடும்பத்தாரிடம் உள்ள வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொள்வதும் முஸ்லிம்கள் மீதான கடமையாகும்.'
(ஆதாரம் : அஹ்மத், திர்மிதி.).
- இருப்பதில் மிக நல்ல ஆடைகளை அணிதல்.
«உங்களில் ஒருவருக்கு வசதி இருந்தால், தனது வேலைக்கான இரண்டு ஆடைகளைத் தவிர, ஜும்ஆவிற்காக வேறு இரண்டு ஆடைகளை எடுத்துக் கொள்வதில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை»
ஆதாரம் : இப்னு மாஜா மற்றும் மாலிக் (முஅத்தாவில்).
- பள்ளிக்கு ஆரம்ப நேரத்தில் செல்லுதல்.
- பள்ளிக்கு நடந்து செல்லுதல்.
"யார் வெள்ளிக்கிழமை அன்று தானும் குளித்து (தன் மனைவியையும்) குளிக்கச் செய்து, முன்கூட்டியே (பள்ளிவாசலுக்கு) விரைந்து சென்று, (இமாமுக்கு) நெருக்கமாக அமர்ந்து, (இமாமின் உரையை) குத்பாவை செவிதாழ்த்தி மௌனமாக கேட்கிறாரோ, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்று, (இரவில்) நின்று வணங்கியதற்கான நற்கூலி அவருக்குக் கிடைக்கும்."
இமாம்களான திர்மிதி மற்றும் அந்நஸாஈ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூறுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
"'வெள்ளிக்கிழமையில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் அது வானவர்கள் சாட்சியாக இருக்கும் நாளாகும். மேலும், எவரேனும் என் மீது ஸலவாத் சொன்னால், அவர் அதனைச் சொல்லி முடிக்கும் வரை அவரது ஸலவாத் எனக்குக் காண்பிக்கப்படுகிறது'."
இந்த ஹதீஸை இப்னு மாஜஹ் பதிவு செய்துள்ளார்
- ஸுறதுல் கஹ்பை ஓதுதல்.
"வெள்ளிக்கிழமை அன்று ஸுறதுல் கஹ்பை ஓதுபவருக்கு, இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கு இடையில் ஓர் ஒளி பிரகாசிக்கும்."
(ஹாகிமும் ஏனையோரும் இதனை அறிவித்துள்ளனர்.)
- துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்தை தேடுவதில் ஈடுபாடு காட்டல்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றிக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அதில் ஒரு நேரம் இருக்கிறது. எந்தவொரு முஸ்லிமான அடியானும் அந்த நேரத்தில் நின்று தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் ஏதேனுமொன்றைக் கேட்டால் அதனை அவனுக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
பதில்: தொழுகையில் உள்ளத்தின் ஈடுபாட்டையும் உடலுறுப்புக்கள் அதில் அடக்கமாக இருப்பதையும் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்.
அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.
(முஃமினூன் : 1, 2).
பதில் : ஸகாத் என்பது குறிப்பிட்ட செல்வத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்ட நேரத்தில்-காலத்தில்- நிறைவேற்றும் ஒரு கட்டாயக் கடமையாகும்.
இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் வசதியுள்ளோரிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கப்படும் கட்டாய தர்மமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
ஸகாத்தை கொடுங்கள்
(பகரா : 153).
பதில் : நோன்பு நோற்றல் என்ற நிய்யத்துடன் பஜ்ர் உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகும். அது இரு வகைப்படும் :
- கடமையான நோன்பு : ரமழான் மாத நோன்பு இதற்கான உதாரணமாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
நம்பிகை கொண்டோரோ நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்கள் முன்பிருந்தோ மீது விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.
(பகரா : 153).
- ஸுன்னத்தான நோன்பு : வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு நோற்றல், அடுத்ததாக மாதாந்தம் மூன்று தினங்கள் நோன்பு நோற்பதாகும். அதில் மிகச்சிறப்புக்குரியது ஒவ்வொரு அரபு மாதத்திலும்; அய்யாமுல் பீழ் நாட்களான (13,14,15) ஆகிய தினங்களில் நோன்பு நோற்றல் போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.