ஸஃயு செய்யும் பகுதி ஹரத்திற்குட்பட்ட (மஸ்ஜித்துக்குட்பட்ட) தா? மாதவிலக்குக்குள்ளான பெண் அதனை நெருங்க முடியுமா? ஸஃயு செய்யும் பகுதியினூடாக ஹரத்தினுள் (மஸ்ஜிதினுள்) நுழைந்தவர் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழவேண்டுமா?
السؤال
கேள்வி 1 :
ஸஃயு செய்யும் பகுதி ஹரத்திற்குட்பட்ட (மஸ்ஜித்துக்குட்பட்ட) தா? மாதவிலக்குக்குள்ளான பெண் அதனை நெருங்க முடியுமா? ஸஃயு செய்யும் பகுதியினூடாக ஹரத்தினுள் (மஸ்ஜிதினுள்) நுழைந்தவர் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழவேண்டுமா?
س56: هل المسعى من الحرم؟ وهل تقربه الحائض؟ وهل يجب على من دخل الحرم من المسعى أن يصلّي تحية المسجد؟
الجواب
பதில் 1 :
ஸஈ செய்யும் இடமானது பள்ளிக்குட்பட்ட பகுதியல்ல என்பதே சரியான நிலைப்பாடாகும். இதனால்தான் அவற்றை பிரிக்குமாறு ஒரு சுவரை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றாலும் அது சிறிய –குறகிய- சுவர். இது மக்களுக்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஸஈ செய்யும் பகுதியானது பள்ளிக்குட்பட்டதாக இருந்து, ஒரு பெண் தவாபுக்கும் ஸஈ செய்வதற்கும் இடையில் மாதவிலக்குக்கு உட்பட்டால் அவள் ஸஈ செய்வதை தவிர்க்க வேண்டி ஏற்படும்.
ஸஈ செய்யும் இடமானது பள்ளிக்குட்பட்ட பகுதியல்ல என்பதினால் ஒரு பெண் தவாப் செய்து ஸஈ செய்வதற்கு முன் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஸஈ செய்ய வேண்டும் என்பது எனது மார்க்கத்தீர்ப்பாகும்.
தஹிய்யதுல் மஸ்ஜிதைப் பொருத்தவரை ஒருவர் தவாபை முடித்து ஸஈயை செய்து விட்டு மீண்டும் பள்ளிக்குள் வந்தால் அவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவார். அதே வேளை அவர் தஹிய்யதுல் மஸ்ஜிதை தொழாதிருந்தாலும் அவரின் மீது எவ்விதக் குற்றமுமில்லை.
இந்த இடத்தில் தொழுவது சிறப்பிற்குரியது என்ற காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரண்டு ரக்அத்துக்களை தொழுவது மிகவும் சிறப்புக்குரியதே!
ﺟ56: الّذي يظهر أن المسعى ليس من المسجد، ولذلك جعلوا جدارًا فاصلًا بينهما، لكنه جدارٌ قصيرٌ، ولا شك أن هذا خيرٌ للناس؛ لأنه لو أدخل في المسجد وجعل منه، لكانت المرأة إذا حاضت بين الطواف والسعي امتنع عليها أن تسعى.
والّذي أفتي به: أنها إذا حاضت بعد الطواف وقبل السعي فإنها تسعى؛ لأن المسعى لا يعتبر من المسجد.
وأما تحية المسجد فقد يقال: إن الإنسان إذا سعى بعد الطواف، ثم عاد إلى المسجد، فإنه يصلّيها، ولو ترك تحية المسجد فلا شيء عليه،
والأفضل أن ينتهز الفرصة، ويصلّي ركعتين؛ لـما في الصلاة في هذا المكان من الفضل.