நான் எனது மனைவியுடன் 'யன்புவிலிருந்து' உம்ராவுக்கு சென்றேன். நாம் ஜித்தாவை சென்றடைந்ததும் என் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக நான் மாத்திரம் உம்ராவை நிறைவேற்றினேன். எனது மனைவியின் நிலை யாது என்பதை தெளிவுபடுத்துவீர்களாக?.
السؤال
கேள்வி 1 :
நான் எனது மனைவியுடன் 'யன்புவிலிருந்து' உம்ராவுக்கு சென்றேன். நாம் ஜித்தாவை சென்றடைந்ததும் என் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக நான் மாத்திரம் உம்ராவை நிறைவேற்றினேன். எனது மனைவியின் நிலை யாது என்பதை தெளிவுபடுத்துவீர்களாக?.
س55: لقد قدمت من ينبع للعمرة أنا وأهلي، ولكن حين وصولي إلى جدة أصبحت زوجتي حائضًا، ولكنّي أكملت العمرة بمفردي دون زوجتي، فما الحكم بالنّسبة لزوجتي؟
الجواب
பதில் 1 :
உமது மனைவியைப்பொருத்தவரை அவள் தூய்மையடையும் வரை அங்கே தங்கியிருந்து பின்னர் உம்ராவை நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு ஆதாரமாக ஸபிய்யா (ரழி) அவர்களின் செய்தி காணப்படுகிறது. ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது அவர் எங்கள் பயணத்தை தடுத்துவிட்டாரா எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள் அவள் தவாபுல் இபாழாவை நிறைவேற்றி விட்டாள் என்று கூறியதும் 'அப்படியாயின் புறப்படட்டும்' என்றார்கள்.
அவர் எங்கள் பயணத்தை தடுத்துவிட்டாரா?' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றானது தவாபுல் இபாழாவிற்கு முன் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தூய்மையடைந்து தவாபுல் இபாழாவை செய்வது கடமை என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
தவாபுல் உம்ராவும் தவாபுல் இபாழாவைப் போன்று உம்ராவின் ஒரு ருக்னாக உள்ளது. எனவே உம்ரா செய்யும் ஒரு பெண் தவாப் செய்வதற்கு முன் மாதவிலக்குக்கு உள்ளானால் அவள் தூய்மையடையும் வரை தாமதித்து பின்னர் தவாபை நிறைவேற்ற வேண்டும்.
ﺟ55: الحكم بالنّسبة لزوجتك: أن تبقى حتى تطهر، ثم تقضي عمرتها؛ لأن النبي ﷺ لـما حاضت صفية رضي الله عنها قال:
«أَحَابِسَتُنَا هِيَ؟» قَالُوا: إِنَّهَا قَدْ أَفَاضَتْ. قَالَ: «فَلْتَنْفِرْ إِذًا» [1]،
فقوله ﷺ: «أحابستنا هي؟» دليلٌ على أنه يجب على المرأة أن تبقى -إذا حاضت قبل طواف الإفاضة- حتى تطهر، ثمّ تطوف.
[27] تقدم تخريجه.
وكذلك طواف العمرة مثل طواف الإفاضة؛ لأنه ركنٌ من العمرة، فإذا حاضت المعتمرة قبل الطواف انتظرت حتى تطهر، ثم تطوف.