Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الانشِقَاق

الانشِقَاق is chapter 84 of the Quran and has 25 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

25 வசனங்கள் ஸூரா எண் 84
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ

(உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ

மேலும், பூமி விரிக்கப்படும்போது,

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ

மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.