மாதவிலக்குள்ள ஒரு பெண் மஸ்ஜிதுல் ஹராமினுள் -பள்ளியினுள் -உரைகளையும்,பிரசங்கங்களையும் செவிமடுப்பதற்காக தங்கியிருப்பதன் சட்டம் என்ன?
السؤال
கேள்வி 1 :
மாதவிலக்குள்ள ஒரு பெண் மஸ்ஜிதுல் ஹராமினுள் -பள்ளியினுள் -உரைகளையும்,பிரசங்கங்களையும் செவிமடுப்பதற்காக தங்கியிருப்பதன் சட்டம் என்ன?
س34: ما حكم وجود المرأة في المسجد الحرام وهي حائضٌ؛ لاستماع الأحاديث والخطب؟
الجواب
பதில் 1 :
மாதவிலக்குள்ள ஒரு பெண் மஸ்ஜிதுல் ஹராமிலோ வேறு பள்ளிகளிளோ தங்கியிருப்பது கூடாது. ஆனால் பள்ளியினூடாக கடந்து செல்வதற்கும் அங்கே ஏதும் தேவைகள் இருந்தால் அதற்காக செல்லவுமே அனுமதியுள்ளது.
இதற்கு பின்வரும் ஆஇஷா (ரழி) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஆஇஷா (ரழி) அவர்களிடம் தொழும் விரிப்பை(1) எடுத்து வருமாறு பணித்தார்கள். அதற்கு ஆஇஷா (ரழி) அவர்கள் 'அது பள்ளியினுள் உள்ளது நானோ மாதவிலக்குள்ளவளாக இருக்கிறேனே எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் 'மாதவிடாய் உமது கரங்களில் கிடையாதே' எனக் கூறினார்கள்.
மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் பள்ளியினுள் மாதவிடாய் இரத்தம் படாதவாறு பாதுகாப்பாக கடந்து செல்வதில் தவறு கிடையாது.
(1) தொழுகை விரிப்பிற்கு இங்கு கிம்ரத் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸுஜூது செய்யும் போது முகம் மறைவதால் அதன் அர்த்தத்தைக் கொண்ட இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளியினுள் அமர்ந்திருப்பதிருப்பதற்காக செல்வது கூடாது.
இதற்கான ஆதாரம் பின்வருமாறு: நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காக பெண்களை தொழும் திடலுக்கு (திருமணம் முடித்த பெண்களையும், கன்னிப் பெண்களையும், மாதவிடாய்ப் பெண்களையும்) செல்லுமாறு பணித்ததோடு, மாதவிடாய்ப் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஓதுங்கி இருக்குமாறும் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸின் அடிப்படையில் பிரசங்கம், பாடங்கள் மற்றும் உரைகளை கேட்பதற்காக பள்ளியினுள் தங்கியிருக்க கூடாது அனுமதிக்கப்படவும் கூடாது.
ﺟ34: لا يجوز للمرأة الحائض أن تمكث في المسجد الحرام ولا غيره من المساجد، ولكن يجوز لها أن تمر بالمسجد، وتأخذ الحاجة منه وما أشبه ذلك؛ كما قال النبيّ ﷺ لعائشة حين أمرها أن تأتي بالخمرة[1]، فقالت: إنها في الـمسجد، وإنّي حائضٌ، فقال:
«إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ» [2]،
فإذا مرت الحائض في المسجد، وهي آمنةٌ من أن ينزل دمٌ على المسجد، فلا حرج عليها.
[14] الخمرة: هي السجادة يسجد عليها المصلي، وسميت خمرة؛ لأنها تخمر الوجه، أي: تغطيه.
[15] مسلم، كتاب الحيض، باب جواز غسل الحائض رأس زوجها وترجيله (11) (298).
أما إن كانت تريد أن تدخل وتجلس فهذا لا يجوز.
والدليل على ذلك: أن النبي ﷺ أمر النّساء في صلاة العيد أن يخرجن إلى مصلى العيد -العواتق، وذوات الخدور، والحيض- إلا أنه أمر أن يعتزل الحيض المصلى [3]،
فدل ذلك على أنّ الحائض لا يجوز لها أن تمكث في المسجد لاستماع الخطبة، أو استماع الدرس والأحاديث.
[16] البخاري، كتاب العيدين، باب خروج النساء والحيض (974)، ومسلم، كتاب العيدين، باب ذكر إباحة خروج النساء في العيدين إلى المصلى (10) (890).
من أحكام الطهارة في الصلاة