மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்லது நிபாஸுடைய பெண் அஸர் நேரத்தில் தூய்மை அடைந்தாள், அஸருடன் லுஹரையும் தொழ வேண்டுமா? அல்லது அஸர் தொழுகையை மாத்திரம் நிறைவேற்றினால் போதுமாகுமா?
السؤال
கேள்வி 1 :
மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்லது நிபாஸுடைய பெண் அஸர் நேரத்தில் தூய்மை அடைந்தாள், அஸருடன் லுஹரையும் தொழ வேண்டுமா? அல்லது அஸர் தொழுகையை மாத்திரம் நிறைவேற்றினால் போதுமாகுமா?
س12: إذا طهرت الحائض أو النّفساء وقت العصر، فهل تلزمها صلاة الظّهر مع العصر، أو لا يلزمها سوى العصر فقط؟
الجواب
பதில் 1 :
அஸர் தொழுகையை மாத்திரம் தொழுவதுதான் இந்த சட்டப்பிரச்சினையின் வலுவான முடிவாகும். அத்துடன் லுஹர் தொழுவதை வலியுறுத்தும் எந்த ஆதரமும் இல்லாமையும், பொறுப்பிலிருந்து விடுபடுதல் அடிப்படையாகும் என்ற சட்டவாக்க விதியும் இதற்கான காரணமாக அமைவதுடன் மேலும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் :
"சூரியன் மறைய முன் யார் அஸர்தொழுகையின் ஒரு ரக்அத்தையேனும் அடைந்து கொள்கிறாரோ அவர் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார்".
இந்த ஹதீஸில் லுஹரை அடைந்து கொண்டார் என்று அவர்கள் குறிப்பிடவில்லை. அத்துடன் லுஹர் தொழுகை அப்பெண்கள் மீது கடமையென்றிருந்தால் அதனை நபியவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள். மேலும் லுஹர் தொழுகைக்கான நேரம் வந்ததன் பின் அந்தப்பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அஸர் தொழுகையைத் தவிர லுஹரைத் தொழவேண்டும் என்ற கட்டாயமில்லை. அத்துடன் லுஹர் தொழுகையானது அஸருடன் சேர்த்துத் தொழும் தொழுகையாகும். இங்கே கேட்கப்பட்ட கேள்வியைப் பொருத்தவரை அஸர்தொழுகை ப்பற்றியதாகும்.
இவ்வடிப்படையில் அஸர் தொழுகையை மாத்திரம் தொழுவதே கட்டாயமாகும் என்பதே மிகச்சரியான கருத்தாகும். இதனைதான் ஸுன்னாவின் ஆதாரமும் கியாஸ் எனும் துணை ஆதாரமும் காட்டும் விடயமாகும். இதே நிலைதான் ஒரு பெண் இஷாவின் நேரம் கழிவதற்கு முன் தூய்மையடைந்தாலும் அவள் இஷாவை மாத்திரம் தொழவேண்டுமே தவிர மஃரிபை தொழ வேண்டிய அவசியமில்லை.
ﺟ12: القول الراجح في هذه المسألة: أنه لا يلزمها إلا العصر فقط؛ لأنه لا دليل على وجوب صلاة الظّهر، والأصل براءة الذّمة، ثم إن النبي ﷺ قال:
«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ» [1]،
ولم يذكر أنه أدرك الظّهر، ولو كان الظّهر واجبًا لبينه النبيّ ﷺ، ولأن المرأة لو حاضت بعد دخول وقت الظّهر لم يلزمها إلا قضاء صلاة الظّهر دون صلاة العصر، مع أن الظّهر تجمع إلى العصر، ولا فرق بينها وبين الصّورة التي وقع السّؤال عنها.
[2] البخاري، كتاب الصوم، باب الحائض تترك الصوم والصلاة (1951).
وعلى هذا يكون القول الراجح أنه لا يلزمها إلا صلاة العصر فقط؛ لدلالة النصّ والقياس عليها، وكذلك الشأن فيما لو طهرت قبل خروج وقت العشاء، فإنه لا يلزمها إلا صلاة العشاء، ولا تلزمها صلاة المغرب.