Skip to content

ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் காலம் எட்டு நாட்கள் அல்லது ஏழு நாட்களாக இருந்து, பின்னர் ஓரிரு தடவைகள் அல்லது பல தடவைகளுக்கு அதிகமாக இரத்தப்போக்கு நீடித்தால் அதன் சட்ட நிலை யாது?

السؤال

கேள்வி 1 :

ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் காலம் எட்டு நாட்கள் அல்லது ஏழு நாட்களாக இருந்து, பின்னர் ஓரிரு தடவைகள் அல்லது பல தடவைகளுக்கு அதிகமாக இரத்தப்போக்கு நீடித்தால் அதன் சட்ட நிலை யாது?

س4: إذا كانت المرأة عادتها الشهرية ثمانية أيامٍ أو سبعة أيامٍ، ثم استمرت معها مرةً أو مرتين أكثر من ذلك، فما الحكم؟

الجواب

பதில் 1 :

ஒரு பெண்ணின் மாதவிடாய் கால அளவு ஆறு நாட்கள் அல்லது ஏழு நாட்களாக இருந்து, பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதி நீண்டு சென்று எட்டு நாட்கள் அல்லது ஓன்பது நாட்கள் அல்லது பத்து நாட்கள் அல்லது பதினொரு நாட்கள் என்று நீண்டுவிட்டால் அவள் தூய்மையாகும் வரை அவள் தொழாது இருப்பாள்.

இதற்கான காரணம் மாதவிடாய்க்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கால எல்லையொன்றை விதிக்கவில்லை என்பதினாலாகும்.

அல்லாஹ் இது குறித்து குறிப்பிடுகையில் "அவர்கள் மாதவிடாய் குறித்து உம்மிடம் கேட்கின்றனர் அதற்கு நபியே அது உபாதை எனக் கூறுவீராக". (அல் பகரா : 222)

இந்த உதிரப்போக்கு இருக்கும் போதெல்லாம் ஒரு பெண் அதிலிருந்து தூய்மையாகும் வரையில் மாதவிடாய் நிலையிலேயே இருக்கிறாள். பின் அவள் தூய்மையடைந்ததும் குளித்து தொழுகையை நிறைவேற்றுவாள். அத்துடன் இரண்டாவது மாதத்தில் முன்னைய மாதத்தை விடக் குறைவான காலப்பகுதியில் தூய்மையாகிவிட்டால் அப்பொழுது அவள் குளித்து கடமைகளை நிறைவேற்றுவாள். முந்தைய மாதத்தின் அளவிற்கு இல்லாவிட்டாலும் சரியே.

முக்கிய விடயம் என்னவென்றால் ஒரு பெண் மாதவிடாயில் இருக்கும் காலமெல்லாம் அவள் தொழமுடியாது. அவளின் மாதவிடாய் காலப்பகுதி முன்னைய மாதத்துடன் ஒத்துப்போனாலும் அல்லது அதிகமாகவோ அல்லது குறைவானதாகவோ இருந்தாலும் சரியே. அதாவது அவள் தூய்மையடைந்து விட்டால் அவளுக்கு தொழ வேண்டும்.

ﺟ4: إذا كانت عادة هذه المرأة ستة أيامٍ أو سبعةً، ثم طالت هذه المدة، وصارت ثمانيةً أو تسعةً أو عشرةً أو أحد عشر يومًا فإنها تبقى لا تصلّي حتى تطهر،

وذلك لأن النبي ﷺ لم يحد حدًّا معيّنًا في الحيض، وقد قال الله تعالى:

﴿وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى...﴾

[البقرة:222]،

فمتى كان هذا الدم باقيًا فإن المرأة على حالها حتى تطهر، وتغتسل، ثم تصلّي، فإذا جاءها في الشهر الثاني ناقصًا عن ذلك فإنها تغتسل إذا طهرت وإن لم يكن على المدة السابقة.

والمهمّ أن المرأة متى كان الحيض معها موجودًا فإنها لا تصلّي، سواءٌ كان الحيض موافقًا للعادة السابقة، أو زائدًا عنها، أو ناقصًا، وإذا طهرت تصلّي.