Skip to content

السؤال

س١١: ما ضد الصبر؟

கேள்வி 11: பொறுமைக்கு எதிரானது எது?

الجواب

ج:- وهو عدم الصبر على الطاعة، وعدم الصبر عن المعصية، والتسخط على الأقدار بالقول أو الفعل.

من صوره:

  • تَمنِّي الموتِ.
  • قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي»

متفق عليه.

  • ضرْبُ الخُدودِ.
  • شَقُّ الثِّيابِ.
  • نَشْرُ الشُّعورِ.
  • الدُّعاءُ على النفس بالهلاك.
  • قال عليه الصلاة والسلام:

«لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ»

رواه البخاري.

  • قال النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:

«إِنَّ عِظَمَ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلَاءِ وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرضا، وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَطُ»

رواه الترمذي وابن ماجة.

பதில்: அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் பொறுமையின்மை, மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் வேகமாக செயற்படுதல், மற்றும் சொல் செயல் மூலம் அல்லாஹ்வின் விதியை வெறுத்து கோபம் கொள்ளுதல் போன்றவற்றைக் குறிக்கிறது.

இதன் வடிவங்களில் சில :

மரணத்தை ஆசை கொள்ளுதல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

"தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் எவரும் மரணத்தை வேண்டிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு அவன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் (அல்லாஹும் அஹ்யினி மா கானத்தில் ஹயாத்து ஹைரால்லி,வதவப்பனி இதா கானத்தில் ஹயாத்து ஹைரால்லி ,) 'யா அல்லாஹ்! நான் உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருக்கும் வரை என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் எனக்கு நன்மையாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக!' என்று அவன் கூறட்டும்."

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

கன்னத்தில் அரைந்து கொள்ளல்.

ஆடையைக் கிழித்தல்.

தலை விரிகோலமாக இருத்தல்.

அழிவு ஏற்பட வேண்டும் என தனக்கு எதிராகப் பிரார்த்தித்தல் போன்றவைகளாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்

கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல.

(ஆதாரம் : புஹாரி).

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

“சோதனையின் அளவுக்கு ஏற்பவே கூலியின் அளவும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்கு, (இறைப்) பொருத்தம் கிடைக்கும். கோபித்தவருக்கு, (இறைக்) கோபம் கிடைக்கும்.”

ஆதாரம் : திர்மிதி மற்றும் இப்னு மாஜா.