அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவார்கள் என்று சாட்சி கூறுவதன் கருத்து யாது?
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س6: ما معنى شهادة أنَّ محمدًا رسول الله؟
கேள்வி 6 : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவார்கள் என்று சாட்சி கூறுவதன் கருத்து யாது?
الجواب
ج:معناها: أن الله أرسله للعالمين بشيرًا ونذيرًا.
- ويجب:
- طاعته فيما أمر.
- تصديقه فيما أخبر.
- عدم معصيته.
- لا يعبد الله إلا بما شرع، وهو الاقتداء بالسنة وترك البدعة.
قال تَعَالَى:
﴿مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ﴾
[النساء: 80]،
وقال سُبْحَانَهُ:
﴿وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ 3
إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ 4﴾
[النجم: 3-4].
وقال جَلَّ وَعَلَا:
﴿لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا﴾
[الأحزاب: 21].
பதில் : அதன் கருத்தாவது, அல்லாஹ் அவர்களை உலகத்தாருக்கு நன்மாராயம் கூறக்கூடியவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும் அனுப்பியுள்ளான் என்பதாகும்.
பின்வருவன அதில் கடமையாகும் :
1-அவர்களின் (நபியவர்களின்) கட்டளைகளை ஏற்று நடத்தல்.
2-அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துதல்.
3-அவர்களுக்கு மறுசெய்யாது இருத்தல்.
4-அவர்கள் மார்க்கமாக குறிப்பிட்டவற்றை கொண்டு மாத்திரமே அல்லாஹ்வை தூய்மையாக வணங்குதல். அதாவது அவர்களின் ஸுன்னாவை (வழிமுறையை) பின்பற்றி (பித்ஆவை) புதிதாக மார்க்கம் என்றபெயரில் உருவாக்கப்பட்டவற்றை விட்டும் விலகி நடத்தல்.
அல்லாஹ் கூறுகிறான் :
எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார்.
(அந்நிஸா : 80)
மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்
இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன மனோ இச்சைப்படி பேச மாட்டார்.
இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. 4﴾
(அந்நஜ்ம் : 3-4)
மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
உங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உண்டு.
تقدم